July 4, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டவை

வவுனியாவில் நில நடுக்க அதிர்வு

வவனியா தாண்டிக்குளம், பத்தினியார்மகிழங்குளம் பகுதியில் இன்று காலை நில நடுக்க அதிர்வுகளை அப்பகுதி மக்கள் உணர்ந்துள்ளதாகத் தெரிவிக்கின்றனர். தாண்டிக்குளம், பத்தினியார்மகிழங்குளம் பகுதியைச் சுற்றிய சில வீடுகளில் நில நடுக்க அதிர்வுகள் உணரப்பட்டுள்ளதாகவும் காலை 9.52மணியளவில் இது உணரப்பட்டுள்ள போதிலும் நான்கு, ஐந்து செக்கன் ...

மேலும்..

வருடத்திற்கு மேலாகியும் அக்கரப்பத்தனை பொல்மோரல் தோட்டத்திற்கு வீடுகள் வழங்கப்படாதது ஏன்

கடந்த வருடம் ஜுன் மாதம் 13 ம் திகதி அக்கரபத்தனை பெல்மோரல் தோட்டத்தின் தொழிலாளர்களின் குடியிருப்பு தொகுதி தீ விபத்தினால் பாதிக்கப்பட்டது. இவ்வாறு தீ விபத்தினால் வீடுகள் பாதிக்கபட்டு ஒரு வருடம் கடந்துள்ள நிலையில் இன்று வரை பாதிகப்பட்டவர்களுக்கான வீடுகளை ஏன் ...

மேலும்..

வவுனியா பட்டகாடு பகுதியில் பாரிய தீ விபத்து: இரு மாடுகள் உயிரிழப்பு

வவுனியா, பட்டக்காடு பகுதியில் உள்ள மாட்டு கொட்டகை ஓன்றில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து காரணமாக இரண்டு மாடுகள் உயிரிழந்துள்ளன. இன்று (05.07.2019) அதிகாலை 1.30 மணியளவில் இடம்பெற்ற இச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, வவுனியா, பட்டக்காடு பகுதியில் உள்ள மாட்டு கொட்டகை ஓன்றில் ...

மேலும்..

இன நல்லுறவை உறுதிப்படுத்தும் இராணுவத்தினரின் இசை நிகழ்ச்சி

கடந்த ஏப்ரல் 21 தாக்குதலின் பின்னர் நாட்டில் சமாதானத்தை ஏற்படுத்தும் வகையிலும், இனங்களுக்கிடையே ஒற்றுமையை ஏற்படுத்தல் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்தல் எனும் தொனிப்பொருளில், இராணுவத் தளபதி லெப்டினல் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்கவின் எண்ணக்கருவின் அடிப்படையில் மாபெரும் இசை நிகழ்ச்சி அம்பாறை ...

மேலும்..

நேற்று இரவு இடம்பெற்ற விபத்தொன்றில் கடும் காயமடைந்த இருவர் நாவலபிட்டி வைத்தியசாலையில் அனுமதி.

நாவலபிட்டி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹட்டன் கண்டி பிரதான வீதியில் நாவலபிட்டி கினிதேனைக்கிடையில் பலந்தோட்டை பகுதியில் நேற்று (04) மாலை சுமார் 6.30 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் கடும் காயங்களுக்கு உள்ள இரண்டு ஆண்கள் நாவலபிட்டி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நாவலபிட்டி பகுதியிலிருந்து ...

மேலும்..

திருகோணமலை மாணவர்கள் படுகொலைத் தீர்ப்பானது இலங்கையின் நீதித்துறையை கேள்விக்குட்படுத்துகின்றது-கி.துரைராசசிங்கம்

திருகோணமலை மாணவர்கள் படுகொலைத் தீர்ப்பானது இலங்கையின் நீதித்துறையை கேள்விக்குட்படுத்துகின்றது... (இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் - கி.துரைராசசிங்கம்) இராணுவத்தினரால் ஐந்து மாணவர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள் தொடர்பான வழக்கிலே திருகோணமலை நீதிவான் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு அனைவரையும் ஆச்சரியத்துக்குள்ளாக்கியுள்ளது. இது இலங்கையின் நீதித்துறையை ...

மேலும்..

நீராவியடி பிள்ளையார் கோவிலை பௌத்த மயமாக்குவது நிலைமாறுகால நீதியா? தவிசாளர் நிரோஷ் கேள்வி

இராணுவ மயமாக்கத்தின் மூலம் அபகரிக்கப்பட்ட நிலங்களில் பௌத்த சிங்கள மயமாக்கம் இடம்பெறுவதையா நிலைமாறுகாலம் என்கின்றனர் என்றனர். பயன்படுத்தப்படும் அரசியல் கலைச்சொற்களுக்கும் செயற்பாட்டுக்கும் இடையில் எல்லாம் சுத்த சூனியமாகக் காணப்படுவதாக வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார். நேற்று வியாழக்கிழமை ...

மேலும்..

மணிவிழா கண்ட என்.வித்தியாதரன் – ரணில், மஹிந்த உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் நேரில் வாழ்த்து

'உதயன்' - 'சுடர் ஒளி' பத்திரிகைகளின் முன்னாள் ஆசிரியரும் 'காலைக்கதிர்' பத்திரிகையின் இந்நாள் ஆசிரியரும் சிரேஷ்ட ஊடகவியலாளருமான நடேசபிள்ளை வித்தியாதரனின் 60ஆவது பிறந்தநாள் நிகழ்வு இன்று வியாழக்கிழமை மாலை கொழும்பில் நடைபெற்றது. ஊடக நண்பர்கள் வட்டம் ஏற்பாடு செய்திருந்த இந்த நிகழ்வில் முக்கிய ...

மேலும்..

இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகராலய அரசியல் ஆலோசர்கள் அப்துல்லா மஃறூப் எம்.பி யை சந்தித்துப் பேச்சு

ஹஸ்பர் ஏ ஹலீம் இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகராலயத்தின் அரசியல் ஆலோசர்களுக்கும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஃறூப் ஆகியோர்களுக்குமிடையிலான சந்திப்பு இடம் பெற்றது. குறித்த சந்திப்பானது இன்று (04) வியாழக் கிழமை மாலை நாடாளுமன்ற உறுப்பினரின் கிண்ணியா அலுவலகத்தில் இடம் பெற்றது. இதில் இலங்கைக்கான ...

மேலும்..

ஜனாதிபதித் தேர்தல்: ஐ.தே.க. வேட்பாளர் யார்? 8ஆம் திகதி இறுதி முடிவு

ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பது தொடர்பில் எதிர்வரும் 8ஆம் திகதி இறுதி முடிவு எடுக்கப்படலாம் என அரசியல் வட்டாரங்களிலிருந்து அறியமுடிகின்றது. ஆளுங்கட்சியின் நாடாளுமன்றக்குழுக் கூட்டம் எதிர்வரும் 8ஆம் திகதி திங்கட்கிழமை மாலை பிரதமர் ...

மேலும்..

பலாலி சர்வதேச விமான நிலையம் தந்தையின் பெயரில் அமையட்டும்!

வடக்குத் தமிழர்கள் மத்தியில் நீண்டகால எதிர்பார்ப்பாக இருந்து வந்த பலாலி விமான தளத்தைத் தரம் உயர்த்தும் விடயம் கடைசியாக ஒப்பேறத்தொடங்கப்போகின்றது. சுமார் இரண்டாயிரம் கோடி ரூபா செலவில் நாட்டின் மூன்றாவது சர்வதேச விமான நிலையமாக பலாலி விமானத்தளத்தை மேம்படுத்தும் பணி நாளை போக்குவரத்து, சிவில் ...

மேலும்..

ஞானாசார தேரர் விடுதலை செய்யப்பட்டமை கடிநாயை அவிழ்த்து விட்டமை போன்றாகும்! சுமந்திரன் எம்.பி. காட்டத்துடன் கருத்து

பொதுபலசேனாவின் பொதுச் செயலாளர் ஞானசார தேரரின் விடுதலைகடிநாயை அவிழ்த்துவிட்ட செயலுக்கு ஒப்பானது. இந்த நெருக்கடியான நேரத்தில் அவர் விடுதலை செய்யப்பட்டதன் பின்னால் பல காரணங்கள் உள்ளன. ஒருவகையில் அரசும் இந்த விடயத்தை நடக்கட்டும் என்றே விட்டிருக்கிறதுபோல் தெரிகிறது. - இவ்வாறு நேற்றுக் காட்டமாகக் ...

மேலும்..

விக்கி தேர்தலில் நிற்பாராகில் கட்டுக்காசை இழப்பது உறுதி! சுமந்திரன் தெரிவிப்பு

தேர்தல் ஒன்று விரைவில் வரவேண்டும். அதில் வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனும் போட்டியிட வேண்டும். அதில் அவர் கட்டுக்காசையும் இழக்கும் நிலைதான் ஏற்படும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். நேற்றிரவு தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றில் பங்கேற்றபோதே ...

மேலும்..

புலிகள் போதைப்பொருள் தொடர்பான கருத்து: ஜனாதிபதி தனக்குத்தானே கரி பூசியுள்ளார்!

ஜனாதிபதி போதைப் பொருளோடு தொடர்புபடுத்தி விடுதலைப் புலிகளைக் குற்றம் சாட்டியமை வெறும் இட்டுக்கட்டலே தவிர எவ்வித அடிப்படையும் கொண்டதல்ல. நாட்டின் தலைவராக இவ்வாறு பொறுப்பற்ற வகையிலே பேசுவது அவரை அவரே கலங்கப்படுத்திக் கொள்ளுகின்ற ஒரு செயலே ஆகும் என இலங்கைத் தமிழ் ...

மேலும்..

உயரிடத்தில் வைத்து மதிக்கப்பட்ட ஒரு இயக்கத்திற்கு கறைபூச நினைப்பது தனது முகத்தில் தானே கரியைப் பூசிக் கொள்வதற்கு ஒப்பானது

தமிழ் மக்களால் உயரிடத்தில் வைத்து மதிக்கப்பட்ட ஒரு இயக்கத்திற்கு கறைபூச நினைப்பது தனது முகத்தில் தானே கரியைப் பூசிக் கொள்வதற்கு ஒப்பானது... கி.துரைராசசிங்கம் ஜனாதிபதி போதைப் பொருளோடு தொடர்புபடுத்தி விடுதலைப் புலிகளைக் குற்றம் சாட்டியமை வெறும் இட்டுக்கட்டலே தவிர எவ்வித அடிப்படையும் கொண்டதல்ல. நாட்டின் ...

மேலும்..

தமிழர் திருவிழா: பத்திரிகை மற்றும் இணையம் ஆகியவற்றுக்கான ஊடக அறிக்கை

தமிழர் பிரதேசங்களை சிங்கள மயமாக்கும் இரகசியத்திட்ட நோக்கத்துடன் பௌத்த தேரர்களினால் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும் முல்லைத்தீவு - பழைய செம்மலை, நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தின் இருப்பையும், தமிழர்களின் நிலவுரிமையையும் உறுதிப்படுத்தி ஆலயத்திற்கான தமிழ் மக்களின் ஆதரவுப் பலத்தினை ஆக்கிரமிப்பாளர்களுக்கு காண்பிக்கும் முகமாக "தமிழர் திருவிழா" ...

மேலும்..

தேர்தலில் களமிறங்கும் விக்கி கட்டுக்காசை இழப்பது உறுதி! – அடித்துக் கூறுகின்றார் சுமந்திரன்

தேர்தல் ஒன்று விரைவில் வரவேண்டும். அதில் வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனும் போட்டியிட வேண்டும். அதில் அவர் கட்டுக்காசையும் இழக்கும் நிலைதான் ஏற்படும்." - இவ்வாறு அதிரடிக் கருத்தொன்றை வெளியிட்டுள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன். நேற்றிரவு ...

மேலும்..

நிந்தவூர் கமு/இமாம் றூமி வித்தியலயத்தின் ஆரம்ப கற்றல் வள நிலைய திறப்பு விழா

திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான பைசல் காசிமின் முயற்சியின் பயனாக கல்வி அமைச்சினால் அண்மையிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் நிந்தவூர் கமு/இமாம் றூமி வித்தியலயத்தில் இரண்டு மாடியில் நிர்மாணிக்கப்பட்ட ஆரம்ப கற்றல் வள ...

மேலும்..

25 இலட்சம் ரூபா செலவில் புதிய கட்டிடம்

மூதூர் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட ஆசாத் நகர் தாருஸ் ஸலாம் அறபிக் கல்லூரிக்கான  புதிய கட்டிடத்துக்கான அடிக்கல் நடும் நிகழ்வு இடம் பெற்றது கல்லூரியின் அதிபர் எம்.ஜரீஸ் முப்தி தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஃறூப் ...

மேலும்..

மரணதண்டனையை நிறுத்துமாறு கோரி மன்றில் முன்னிலையாகினார் சுமந்திரன்

மரணதண்டனையை நிறுத்துமாறு கோரி மன்றில் முன்னிலையாகினார் சுமந்திரன் நாளை வரை வழக்கு ஒத்திவைப்பு மரணதண்டனையை நிறுத்துமாறு கோரி மரணதண்டனைக் கைதியொருவர் உயர்நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கில் நேற்று சுமந்திரன் முன்னிலையானார். வழக்கு நாளை வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டது. இலங்கையில் மீண்டும் மரணதண்டனையை நிறைவேற்றுவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால ...

மேலும்..

மாணவ குழு மோதல் எதிரொலி சிகிச்சை பெற்ற மாணவர்கள் வைத்தியசாலையை விட்டு வெளியேறினர்

பாறுக் ஷிஹான் தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவ குழுக்களிடையே  ஏற்பட்ட கைகலப்பில் காயமடைந்த ஏழு பேர் அக்கரைப்பற்று ஆதார  வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற பின்னர் வெளியேறியுள்ளனர். இவ்வாறு  சிகிச்சை பெற்று வெளியேறிய  மாணவர்கள் அனைவரும்  இஸ்லாமிய கற்கைகள் மற்றும் அரபுமொழி பீட  மாணவர்கள் எனவும் கடந்த ...

மேலும்..

மட்டக்களப்பு புதூர் பகுதியில் பதற்றம் – இராணுவத்தினர் விசேட சுற்றிவளைப்பு

மட்டக்களப்பு புதூர் பகுதியில் இராணுவத்தினர் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகவும், இதன்காரணமாக அங்கு பதற்றமான நிலை ஏற்பட்டுள்ளதாகவும் எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, இன்று(வியாழக்கிழமை) காலை 11 மணியளவில் மட்டக்களப்பு புதூர் சிமில தீவுப்பகுதியில் தலைக்கவசம் அணியாமல் மோட்டார் ...

மேலும்..

சிறுபோக அறுவடைநெல் கொள்வனவு நடவடிக்கைகள் முன்னெடுப்பு

சிறுபோக அறுவடைநெல்லை அரசாங்கத்தால் கொள்வனவு செய்வதற்கான முன் ஆயத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இந்த நடவடிக்கை மட்டக்களப்பு மாவட்டத்தில் நேற்று (புதன்கிழமை) நடைபெற்றது. அந்தவகையில் எதிர்வரும் சிறுபோகத்து நெற்செய்கையில் அறுவடை செய்யப்படவுள்ள நெல்லை அரசாங்கத்தால் கொள்வனவு செய்வதற்கான முன் ஆயத்தங்களை மேற்கொள்ளும் விசேட கூட்டம் மாவட்ட ...

மேலும்..

மலையகத்திலும் ரயில்வே ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு

ரயில்வே ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக நள்ளிரவு முதல் மலையகத்திற்கான சகல ரயில் சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் ரயிலில் பயணம் செய்யும் மாணவர்கள், அரச ஊழியர்கள் உட்பட பொதுமக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர். இந்த பணிப்பகிஷ்கரிப்பு போராட்டம் காரணமாக, மலையக பகுதியில் உள்ள ரயில் நிலைய ...

மேலும்..

ஹேமசிறி, பூஜிதவுக்கு பிணை கிடைக்குமா? 9ஆம் திகதிதான் தெரியவரும் என்கின்றனர் சட்டத்தரணிகள்

குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளினால் கைதுசெய்யப்பட்ட முன்னாள் பாதுகாப்புச் செயலர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் ஜனாதிபதியால் கட்டாய விடுமுறை வழங்கப்பட்ட பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தர ஆகிய இருவருக்கும் எதிர்வரும் 9 ஆம் திகதி வரை விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. எனவே, இவர்களுக்குப் பிணை ...

மேலும்..

வவுனியாவில் மிதமான நிலநடுக்கம்!

வவுனியாவின் சில பகுதிகளில் மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். தாண்டிக்குளம், பத்தினியார் மகிழங்குளம் பகுதிகளிலேயே இன்று (வியாழக்கிழமை) காலை காலை 9.52மணியளவில் இவ்வாறு நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. எனினும் இதன் காரணமாக  வீடுகளுக்கு எவ்வித சேதங்களும் ஏற்பட்டவில்லையென தெரிவிக்கும் மக்கள், சில வினாடிகளே ...

மேலும்..

ஆசிரியர் விடுதிக்கான புதிய கட்டிடம் திறந்து வைப்பு

கல்வி அமைச்சினால் நடை முறைப்படுத்தப்பட்டு வரும் "அண்மையில் உள்ள பாடசாலை சிறந்த பாடசாலை" வேலைத் திட்டத்தின் கீழ் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட தோப்பூர் அல் பலாஹ் வித்தியாலயத்திற்கான ஆசிரியர் விடுதி திறந்து வைக்கப்பட்டது. குறித்த விடுதியானது இன்று (04) திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ...

மேலும்..

வவுனியாவில் வீதியை வழிமறித்து ஆர்ப்பாட்டம்

வவுனியா பூவரசங்குளம் சந்தியில் இருந்து செட்டிகுளம் செல்லும் பிரதான வீதியை புனரமைத்துத் தரும்படி கோரி வவுனியாவில் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. ஏழு கிராமங்களைச் சேர்ந்த மக்கள் வீதியை வழிமறித்து இன்று (வியாழக்கிழமை) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதன்காரணமாக குறித்த பகுதியில் போக்குவரத்து தடைப்பட்டிருந்ததாக எமது பிராந்திய ...

மேலும்..

அவிசாவெல்லை புவக்பிடிய தமிழ் வித்தியாலயத்திற்கு 17 புதிய பட்டதாரி ஆசிரியர்கள் இரண்டு வாரங்களில் நியமனம்

அவிசாவெல்லை புவக்பிடிய தமிழ் வித்தியாலயம் மற்றும் ஆரம்ப தமிழ் வித்தியாலயம் ஆகியவற்றிற்கு இன்னும் இரண்டு வாரங்களில் உயிர்த்த ஞாயிறு தின சம்பவத்தை தொடர்ந்து இடமாற்றம் பெற்றுச் சென்ற 17 ஆசிரியர்களுக்கு பதிலாக புதிய ஆசிரியர்கள் உள்வாங்கப்படுவார்கள். இதனை மாகாண ஆளுநர் மற்றும் ...

மேலும்..

சொத்து சேகரிப்பு – FCIDஇல் ஹிஸ்புல்லா வாக்குமூலம்

கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவில் முன்னிலையாகியுள்ளார். வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக இன்று (வியாழக்கிழமை) முற்பகல் 10.15 மணியளவில் அவர் அங்கு முன்னிலையாகியுள்ளார். இந்நிலையில், தொடர்ந்தும் அவரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டு வருவதாக பொலிஸ் நிதி மோசடி ...

மேலும்..

வித்தியா கொலை வழக்கு – தலைமறைவாகியுள்ள சந்தேகநபர் குறித்து விசாரிக்குமாறு CIDக்கு உத்தரவு

புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கில், முன்னாள் உதவிப் பொலிஸ் பரிசோதகர் சிறிகஜன் தலைமறைவாகியுள்ளமை குறித்து உரிய விசாரணைகளை முன்னெடுக்குமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர் முன்னிலையில் ...

மேலும்..

சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

நாட்டிற்கு வருகைதந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை கடந்த மார்ச் மாதம் முதல் ஜூன் வரையான காலப்பகுதிக்குள் 66 வீதமாக அதிகரித்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி சபை தெரிவித்துள்ளது. கடந்த ஜூன் மாதத்தில் 2200 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக சபையின் தலைவர் ...

மேலும்..

நெளுக்குளம் முருகனுக்கு சாந்தி எம்.பி. நிதி ஒதுக்கீடு!

 கடந்த 2018 ஆம் ஆண்டு உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வழங்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றலின் மற்றுமொரு கட்டமாக  நெளுக்|குளம் முருகன் ஆலயஆலய பரிபாலனசபையின் கோரிக்கையின் பிரகாரம் வன்னி மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான சாந்தி ஸ்ரீஸ்கந்தராசாவால் 2 லட்சம் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. ...

மேலும்..

சமஷ்டி அடிப்படையிலான தீர்வையும் இலங்கை அரசு புறந்தள்ளுகின்றது – சிறிதரன்

தமிழர்கள் தனி நாடு கோரிக்கையை கைவிட்டு சமஷ்டி அடிப்படையிலான தீர்வை பெற முயற்சிக்கின்றபோது, அதனையும் இலங்கை அரசு புறந்தள்ள முயற்சிப்பதாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் தெரிவித்துள்ளார். அத்தோடு புதிய அரசியல் யாப்பு ஒன்றினை பெற்றுக்கொள்வதற்கான முயற்சியில் தமிழ் தேசிய ...

மேலும்..

தேசிய குத்துச் சண்டையில் மிகக்குறைந்த வயதில் வவுனியா மாணவன் சாதனை!

தேசிய ரீதியில் நடைபெற்ற 'கிக் பொக்சிங்' குத்துச்சண்டை போட்டியில் மிகக்குறைந்த வயதில் பங்குபற்றி வவுனியா மாணவன் சாதனை படைத்துள்ளார். வவுனியா கோவில்குளம் இந்துக் கல்லூரியில் இரண்டாம் வகுப்பில் கல்வி பயின்றுவரும் ஆர்.கே. மைக்கல் நிம்றொத் என்ற மாணவன் தேசிய ரீதியில் நடைபெற்ற குத்துச்சண்டை ...

மேலும்..

கல்முனை மாநகர சபை உறுப்பினர்களால் கட்சிக்கு ஏற்பட்ட களங்கம் அவர்களாலேயே துடைக்கப்பட்டுவிட்டது

கல்முனை மாநகரசபையின் பிரதி முதல்வர் கௌரவ காத்தமுத்து கணேசன் மற்றும் கௌரவ உறுப்பினர் திருமதி சுமித்திரா ஜெகதீசன் ஆகியோர்  கட்சியின் செயலாளர் நாயகம் திரு வீ. ஆனந்தசங்கரிரூபவ் சிரேஸ்ட உப தலைவர் திரு. ஞா. கிருஸ்ணபிள்ளை (வெள்ளிமலை) மற்றும் நிர்வாகச் செயலாளர் இரா. சங்கையா ...

மேலும்..

அண்மையில் ஜனாதிபதி கூறியுள்ள கூற்று தமிழ் மக்களின் மனங்களை காயப்படுத்தியுள்ளது. -எம்.இராஜேஸ்வரன்

தமிழ் மக்களுக்கான அரசியல் உரிமைப் போராட்டத்தினை ஆயுதவழியில் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் மேற்கொண்ட வேளையில் அவரது போராட்டத்திற்கு புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்களும் உள்நாட்டில் வாழ்ந்த தமிழ் மக்களும் தம்மால் இயன்ற பங்களிப்பை பல கோணங்களில் வழங்கினர். இதுவே வரலாறாகும். ஆனால் ...

மேலும்..

வட்டுக்கோட்டையிலிருந்து வீரசிங்கம் மண்டப மாநாடு வரை மறுபடியும் முதலில் இருந்தா?

வட்டுக்கோட்டையிலிருந்து வீரசிங்கம் மண்டப மாநாடு வரை மறுபடியும் முதலில் இருந்தா? -அகரன் 'தமிழின விடுதலை வேட்கையை பயன்படுத்தும் தமிழ் தலைமைகள்'; இலங்கை தமிழரசுக் கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணியை சேர்ந்தவர்கள் தம்மைதாமே மிதவாத தலைவர்கள் என்று கூறிக்கொள்கின்றார்கள். ஆனால் இவர்களின் பச்சோந்தித் தன்மையை இவர்களுக்கு மிகமிக நெருக்கமானவர்களால் ...

மேலும்..

சென்.பிலிப்விளையாட்டுக்கழகத்தினரால் சிறப்பாக ‌ இடம்பெற்ற விளையாட்டு நிகழ்வுகள்

அல்லைப்பிட்டி சென்‌.பிலிப் விளையாட்டு கழகத்தினரின் ஏற்பாட்டில் விளையாட்டு நிகழ்வுகள் அண்மையில் சிறப்பாக இடம்பெற்றது. குறித்த நிகழ்வின் முதன்மை விருந்தினராக பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் கலந்து சிறப்பித்ததோடு போட்டிகளை ஆரம்பித்து வைத்ததுடன் பரிசில்களை மும் வழங்கி வைத்தார். குறித்த நிகழ்வில் கலந்து கொண்ட ...

மேலும்..

புகையிரத சேவையாளர்கள் ஆரம்பித்துள்ள தொழிற்சங்க வேலை நிறுத்தப் போராட்டத்தால் மலையக புகையிரத சேவை பாதிப்பு.

புகையிரத சேவையாளர்கள் நேற்று (03) திகதி முதல்  ஆரம்பித்த வேலை நிறுத்தப்பபோராட்டம் காரணமாக, நேற்று. நல்லிரவு முதல் மலையகத்திற்கான சகல புகையிரத சேவைகளும் முடக்கப்பட்டுள்ளன. இதனால் புகையிரதத்தில் பயணஞ் செய்யும் மாணவர்கள் அரச ஊழியர்கள் உட்பட பொது மக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கினர். இந்த ...

மேலும்..

என்மீது குற்றங்கள் இல்லை என்பது நிரூபனமாகியுள்ளது – ஹிஸ்புல்லா

தன்மீது சுமத்தப்பட்ட எந்தவொரு குற்றச்சாட்டும் உண்மையானவை அல்ல என்பது அனைத்து வகையான விசாரணைகள் ஊடாகவும் தற்போது நிரூபனமாகியுள்ளதாக கிழக்கின் முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லா தெரிவித்தார். முன்னாள் போராளியொருவர் செய்திருந்த முறைப்பாடு குறித்து, திட்டமிடப்பட்ட குற்றங்களைத் தடுக்கும் பிரிவில், நேற்று (புதன்கிழமை) வாக்குமூலம் வழங்கியதையடுத்து ...

மேலும்..

மரணதண்டனைக்கு எதிரான மனு மீதான விசாரணைகள் ஆரம்பம்

மரண தண்டனையை நடைறைப்படுத்துவதற்கு ஜனாதிபதி மேற்கொண்ட தீர்மானத்திற்கு தடைவிதித்து, இடைக்கால தடை உத்தரவைப் பிறப்பிக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு மீதான விசாரணைகள் இடம்பெறவுள்ளன. மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் யசந்த கோதாகொட உள்ளிட்ட ஐவர் அடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இன்று ...

மேலும்..

வவுனியாவிலும் ரயில்வே ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு – பயணிகள் பாதிப்பு

வவுனியாவிலும் ரயில்வே ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர். இதன் காரணமாக பயணிகள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். ஊழியர் ஒருவர் குறித்து ரயில்வே பொது முகாமையாளர் மேற்கொண்ட ஒழுக்காற்று நடவடிக்கையைத் தடுப்பதற்கு, போக்குவரத்து அமைச்சின் செயலாளர் அழுத்தம் பிரயோகிப்பதாகத் தெரிவித்தே ...

மேலும்..

முதலாவது தொழிநுட்ப நூதனசாலை: மக்களிடம் கையளித்தார் ஜனாதிபதி

நாட்டின் முதலாவது பண்டைய தொழிநுட்ப நூதனசாலையும் நூலகமும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இன்று முற்பகல் பொலன்னறுவையில் திறந்துவைக்கப்பட்டது. நவீன யுகத்திற்குப் பொருத்தமான நவீன தொழிநுட்பத்தைப் பயன்படுத்தி மனித இனத்திடமிருந்த பண்டைய தொழிநுட்பத்தைப் பற்றி இன்றுள்ள மக்களுக்கு விளக்கும் வகையில் இந்த நூதனசாலை அமையப் ...

மேலும்..

‘வடமாகாண வட்ட மேசை’ கலந்துரையாடல்

வடக்கு மாகாணத்தை அபிவிருத்தி பாதையில் முன்னெடுத்து செல்வதற்கான ‘வடமாகாண வட்ட மேசை’ கலந்துரையாடலின்  முதலாவது அமர்வு இடம்பெறவுள்ளது. இந்த கலந்துரையாடல் யாழ். பொது நூலகத்தில் ஆளுநர் தலைமையில் இன்று (வியாழக்கிழமை) மாலை 4.00 மணிக்கு இடம்பெறவுள்ளதாக ஏற்பாட்டு குழு தெரிவித்துள்ளது. இந்த அமர்வில், விரிவுரையாளர் ...

மேலும்..

அவுஸ்ரேலியாவில் ஈழத்துப்பெண் கொலை – கணவர் கைது!

அவுஸ்ரேலியாவில் இலங்கைப் பெண்ணொருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குயின்ஸ்லாந்தில் வசித்து வந்த 52 வயதான தேவகி என்ற இலங்கைப் பெண்ணே கொலை செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. வெளிநாட்டுக்கு விடுமுறையில் சென்றுவிட்டு வீடு திரும்பிய பெண்ணே இவ்வாறு கத்திக்குத்துக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். குறித்த பெண்ணுக்கும் அவரது கணவருக்கும் இடையில் ...

மேலும்..

ரயில்வே ஊழியர்கள் மீண்டும் பணிப்பகிஷ்கரிப்பு – மக்கள் அவதி

ரயில்வே ஊழியர்கள் மீண்டும் தொடர் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர். இந்த பணிப்பகிஷ்கரிப்பு போராட்டம் நேற்று நள்ளிரவு ஆரம்பிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று (வியாழக்கிழமை) தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டுள்ளது. ஊழியர் ஒருவர் குறித்து ரயில்வே பொது முகாமையாளர் மேற்கொண்ட ஒழுக்காற்று நடவடிக்கையைத் தடுப்பதற்கு, போக்குவரத்து அமைச்சின் செயலாளர் அழுத்தம் ...

மேலும்..

கிளிநொச்சியில் கோர விபத்து – இருவர் உயிரிழப்பு

கிளிநொச்சி பச்சிளைப்பள்ளிக்கு உட்பட்ட இத்தாவில் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். மரக்கறிகளுடன், இன்று (வியாழக்கிழமை) அதிகாலை 2 மணியளவில் யாழ். நோக்கி பயணித்த லொறி ஒன்றும்  டிப்பர் வாகனமும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இவ்விபத்தில் சம்பவ இடத்திலேயே லொறியின் ...

மேலும்..

பிரதான வீதியை புனரமைத்து தருமாறுகோரி ஆர்ப்பாட்டம்

கம்பளை, மரியாவத்தை சந்தியில் 03.07.2019 அன்று நான்காவது தடவையாகவும் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. கம்பளையிலிருந்து மரியாவத்த ஊடாக உடகமவுக்கு செல்லும் பிரதான வீதியை புனரமைத்து தருமாறுகோரியே குறித்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. பிரதேச மக்கள், சர்வமதத் தலைவர்கள் என பெருமளவானோர் இதில் கலந்துகொண்டனர். இதற்கு முன்னரும் ...

மேலும்..

நிந்தவூர் அல்-மஸ்ஹர் பெண்கள் உயர்தரப் பாடசாலையில் விஞ்ஞான ஆய்வுகூட திறப்பு விழா

திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான பைசல் காசிமின் முயற்சியின் பயனாக கல்வி அமைச்சினால் அண்மையிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் நிந்தவூர் அல்-மஸ்ஹர் பெண்கள் உயர்தரப் பாடசாலையில் இரண்டு மாடியில் நிர்மாணிக்கப்பட்ட விஞ்ஞான ஆய்வுகூட ...

மேலும்..

விசாரணை அறிக்கையின் அடிப்படையில் சம்மந்தப்பட்டோருக்கு எதிராக விரைவில் நடவடிக்கை – ஆளுநர்

கடந்த மாதம் 27 ஆம் திகதி இடம்பெற்ற வடமாகாண விவசாய திணைக்கள கணக்காய்வு கூட்டத்தின்போது ஏற்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்குமாறு வடமாகாண விவசாய அமைச்சின் செயலாளரை ஆளுநர் பணித்திருந்ததுடன் அந்த அறிக்கை தற்போது ஆளுநருக்கு கிடைக்கப்பெற்றுள்ளதுடன் அந்த ...

மேலும்..

பதவிக்காக சண்டை செய்யும் தெ.கி.ப.கழக மாணவர்கள், யாழ். மாணவர்களிடமிருந்து சமூக அரசியலை கற்றுக்கொள்ள வேண்டும்

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் இஸ்லாமிய கற்கைகள் மற்றும் அரபுமொழி பீட இவ்வாண்டுக்கான மாணவ யூனியனை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு  (02.07.2019) நடைபெற்றது. தேர்தல் முடிவுகள் வெளிவந்ததன் பின்பு நேற்று இரவு சுமார் ஒன்பது மணியளவில் இரண்டு மாணவ குழுக்களுக்கிடையில் கைகலப்பு ஏற்பட்டது. இதில் குறைந்த பட்சம் ...

மேலும்..

“வடமாகாண வட்ட மேசை” கலந்துரையாடல்

வடமாகாணத்தை அபிவிருத்தி பாதையில் முன்கொண்டு செல்வதற்கு கல்வியலாளர்கள் மற்றும் துறைசார் அனுபவஸ்தர்களின் திட்டங்களையும், ஆலோசனைகளையும் பெற்றுக்கொள்ளும் முகமாக கௌரவ ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களின் எண்ணக்கருவிற்கமைய "வடமாகாண வட்ட மேசை" கலந்துரையாடலின் ("Northern Province Round Table") முதலாவது கலந்துரையாடல் ...

மேலும்..

ஷஹ்ரான் குழு பயன்படுத்திய டொல்பின் ரக வான் வண்டி கடும் நிபந்தனையுடன் பிணையில் விடுவிப்பு.

பயங்கரவாதி  ஷஹ்ரான் ஹஷிம்  குழுவினரால் பயன்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு பொலிஸாரினால் கைப்பற்றப்பட்ட டொல்பின் ரக  வான் வண்டி கடும் நிபந்தனையுடன்   பிணையில் விடுவிக்கப்பட்டது. நேற்று புதன்கிழமை (03) திகதி  நீதிமன்ற நீதவான் ஐ.என்.றிஸ்வான் முன்னிலையில்   சாய்ந்தமருது பகுதியில் தாக்குதல்  இடம்பெற முன்னர் ...

மேலும்..