July 9, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டவை

தேசிய மட்டத்திற்கு போட்டியிடும் மாணவர்களுக்காக ஒரு மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு

வடமாகாணத்திலிருந்து இம்முறை தேசிய மட்டத்திற்கு போட்டியிடும் மாணவர்களுக்காக ரூபா ஒரு மில்லியன் (ரூபா. 1,000,000) நிதியினை ஒதுக்குவதற்கு தீர்மானித்துள்ளேன் என்று வடமாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் தெரிவித்தார். யாழ் துரையப்பா விளையாட்டு மைதானத்தில் நேற்று (08) இடம்பெற்ற வடமாகாண பாடசாலைகளுக்கிடையிலான ...

மேலும்..

கொட்டகலை பிரதேச சபையின் மாதாந்த அமர்வு 09.07.2019 அன்று சபை தலைவர் ராஜமணி பிரசாத் தலைமையில் இடம்பெற்றது.

கொட்டகலை பிரதேச சபையின் மாதாந்த அமர்வு 09.07.2019 அன்று சபை தலைவர் ராஜமணி பிரசாத் தலைமையில் இடம்பெற்றது. இதன் போது மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு தமிழ் முற்போக்கு கூட்டணியால், மானிய அடிப்படையில் நாள் ஒன்றுக்கு 50 ரூபா பெற்று கொடுக்கப்படுவதாக கூறப்பட்ட 50 ...

மேலும்..

கதிர்காம பள்ளிவாசலில் சேவல் கொடி ஏற்றவில்லை என்பதனை வைத்து கொண்டு எவரும் இன முறுகலையோ சமய முறுகலை ஏற்படுத்த முற்படக்கூடாது

கதிர்காமத்தில் வருடம் தோறும் பள்ளிவாசலில் ஏற்றப்பட்டு வந்த சேவல் கொடி இந்த வருடம் ஏற்றப்படவில்லை என இந்து மக்கள் மத்தியில் பேசப்பட்டு சமூக வலைத்தளங்களில் இனமுறுகல் ஏற்படும் வகையில் செய்திகள் பரப்பிக்கொண்டு இருப்பதாகவும், சிலர் பள்ளிவாசல் அருகில் சென்று இடையூறு ஏற்படும், ...

மேலும்..

பிணைக்கு எதிராக மீள்பரிசீலனை மனு

பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் ஜனாதிபதியால் கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டிருந்த பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தர ஆகியோருக்கு பிணை வழங்கப்பட்டமையை எதிர்த்து சட்டமா அதிபரால் மீள்பரிசீலனை மனு ஒன்று தாக்கல் செய்யப்படவுள்ளது. ஹேமசிறி பெர்னாண்டோ, பூஜித ஜயசுந்தர ஆகிய ...

மேலும்..

தெரிவுக்குழுவில் சாட்சியமளிக்குமாறு தயாசிறிக்கு சபாநாயகர் ஆலோசனை!

உயிர்த்த ஞாயிறு தினமன்று மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவங்கள் தொடர்பில் விசாரணை நடத்திவரும் விசேட நாடாளுமன்றத் தெரிவுக்குழு முன்னிலையில் நாளை புதன்கிழமை ஆஜராகி சாட்சியமளிக்குமாறு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தயாசிறி ஜயசேகர, கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா ...

மேலும்..

நவாலியில் உறவுகள் சாகடிக்கப்பட்டதை தமிழினம் ஒருபோதும் மறக்கவேமாட்டாது

சந்திரிகாவின் ஆட்சிக்காலத்தில் யாழ். நவாலி சென்.பீற்றர்ஸ் தேவாலயத்தில் மேற்கொள்ளப்பட்ட விமானக் குண்டுத் தாக்குதல் படுகொலையை இன்று நாடாளுமன்றத்தில் நினைவுகூர்ந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், இழப்புக்களையும் உயிரிழப்புக்களையும் தமிழினம் என்றுமே மறக்காது என்றும் கூறினார். நெடுஞ்சாலைகள் அமைச்சின் விவாதத்தில் ...

மேலும்..

வடக்கு – கிழக்கு தன்னாட்சி அமையுமாயின் ஏனைய பகுதிகள் சிங்கள தேசமாக மாறலாம்!

ஆட்சேபனை இல்லையென்கிறார் சி.வி.கே வடக்குக் கிழக்கு தமிழர் தாயகப் பகுதிகளில் ஒரு தனியான தன்னாட்சி நிர்வாக அலகு அமையுமாயின் அவை தவிர்ந்த ஏனைய பகுதிகளை சிங்கள தேசமாக மாற்றுவதில் தமக்கு ஆட்சேபனை இல்லையென வடக்கு மாகாண அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தெரிவித்தார். அத்தோடு, தமிழர்கள் தன்னாட்சி ...

மேலும்..

இந்தோனேசிய வீதிகளில் வாழ்ந்துவரும் அகதிகள்

சூடான் மற்றும் ஆப்கானிஸ்தான் நாட்டு அகதிகள், தங்களது தஞ்சக்கோரிக்கை                மனுவை ஐ.நா. அகதிகள் ஆணையம் பரிசீலிக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் இந்தோனே சியதலைநகர் ஜகார்த்தாவில் ஆணையம் அமைந்திருக்கும் வீதியில் வாழ்ந்து வருகின்றனர் . சுமார் 30 பேர் அகதிகள் ஆணையம் உள்ள கட்டிடத்துக்கு எதிரே வசித்து வருகிறார்கள். அவர்களில் ஒருவரான ஆப்கான் அகதி லிசாவுக்கு 15 வயது. தாய் மற்றும் சகோதரருடன்  தற்காலிக          ...

மேலும்..

ஓமந்தை வண்ணான்குளம் பொற்கோயில் செல்லும் இந்துக்களுக்கான எச்சரிக்கை.

ஓமந்தை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வண்ணான்குளம் அரசர்பதி பொற்கோயிலுக்கான வருடாந்ந திருவிழா உற்சவங்கள் தொடங்கப்பெற்றுள்ளது. இது இந்துக்களின் வழிபாட்டு முறையில் தாய்த்தெய்வத்தைப் போற்றும் கண்ணகிக்கான கோயிலாக உருவாக்கப்பெற்றுள்ளது. இந்நிலையில் கோயிலுக்குள் கடை வைப்பதற்கு ஒரு நபருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், அந்த ...

மேலும்..

யாழ்ப்பாணத்தில் ஐந்து சந்தி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள SMART POLL எதிர்ப்பு

பாறுக் ஷிஹான் யாழ்ப்பாணம் ஐந்து சந்திப்பகுதியில்  முஸ்லிம் மக்களால் கவனயீர்ப்பு போராட்டமொன்று மேற்கொள்ளப்பட்டது. குறித்த போராட்டம் செவ்வாய்க்கிழமை(9)  காலை   யாழ். மாநகரசபையினால் ஐந்து சந்திப்பகுதியில் அமைக்கப்படும் கம்பங்களை அகற்றுமாறு கோாி கவனயீர்ப்பு போராட்டமொன்று நடத்தப்பட்டுள்ளது. இதன்போது கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறுகையில் யாழ். மாநகரசபை மின்கம்பங்களை ...

மேலும்..

ஹேமசிறி, பூஜிதவுக்குப் பிணை!

பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் ஜனாதிபதியால் கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டிருந்த பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தர ஆகிய இருவரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். தலா 5 இலட்ச ரூபா சரீரரப் பிணையில் இவர்களைப் பிணையில் விடுவிக்குமாறு கொழும்பு பிரதான நீதிவான் ...

மேலும்..

பொலிஸாரின் வேட்டையில் 1500 சாரதிகள் சிக்கினார்கள்

மதுபோதையில் வாகனம் செலுத்திய 1500 சாரதிகள் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார். கடந்த 5ஆம் திகதியிலிருந்து இன்று 9ஆம் திகதி காலை வரையான காலப்பகுதிக்குள்ளே 1500 சாரதிகள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். மதுபோதையில் வாகனம் செலுத்தும் சாரதிகளைக் கைதுசெய்யும் பொலிஸாரின் விசேட ...

மேலும்..

தமிழ் தேசிய பசுமை இயக்கத்தின் முதலாவது தேசிய மாநாட்டில் (06.07.19) அரசியல் ஆய்வாளர் நிலாந்தன் ஆற்றிய உரை

https://www.facebook.com/yarltheepan/videos/2265493730205651/

மேலும்..

வனிதாவின் முகத்திரையை கிழித்த பிரபல நடிகை! செய்த மோசமான வேலை யை போட்டுடைத்த பிரபலம்

பிக்பாஸ் வீட்டில் தற்போது வில்லியாக ரசிகர்களுக்கு தெரிபவர் வனிதா. சக போட்டியாளர்கள் மீதான திமிர்த்தனமான அவரின் அடக்குமுறை ரசிகர்களும் கடுமையாக எதிர்த்து வருகின்றனர். அவர் மீது மீம்ஸ்களும், கடும் விமர்சனங்களும் எழுந்து வருகிறது. வீட்டிற்குள் வயதில் மூத்தவர் என்றும் கூட பாராமல் திமிர்த்தனமாக ...

மேலும்..

‘உயிர்கொல்லி கம்பங்கள் தேவையில்லை’ – யாழில் முஸ்லிம்கள் போராட்டம்!

யாழ்.மாநகர சபையினால் அமைக்கப்படும் 5G தொழில்நுட்ப கம்பங்களை அகற்றுமாறு கோரி போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது. யாழ்ப்பாணம் ஐந்துசந்தி பகுதியில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை ஒன்றுகூடிய முஸ்லிம் மக்கள் இந்த போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர். மின் விளக்குகளை பொருத்துவதற்காகவே கம்பங்களை நாட்டுவதாக பொய்கூறிய யாழ்.மாநகரசபை, கதிா்வீச்சு கூடிய 5G ...

மேலும்..

விஜய் ரசிகர்கள் தொடங்கிய புதிய விஷயம்- வரவேற்கும் மக்கள்

விஜய் எப்போதுமே மற்றவர்களுக்கு உதவுவதில் முன்னோடியாக இருக்கிறார். பல விஷயங்கள் வெளியே வரும் சில உதவிகள் வெளியே தெரியாது. அவரை போலவே விஜய் ரசிகர்கள் பல நல்ல விஷயங்களில் தங்களது ஈடுபாட்டை காட்டி வருகிறார்கள். இப்போது கேரளாவில் உள்ள விஜய் ரசிகர்கள் புதிய விஷயத்தை ...

மேலும்..

ஹேமசிறி, பூஜித் பிணையில் விடுதலை!

பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். குறித்த வழக்கு தொடர்பான விசாரணைகள் இன்று (செவ்வாய்க்கிழமை) கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் இடம்பெற்றபோதே அவர்களை பிணையில் விடுவிப்பதாக நீதிமன்றம் அறிவித்துள்ளது.

மேலும்..

ஏறாவூரில் குண்டுகள் மீட்பு

மட்டக்களப்பு ஏறாவூரில் கைக்குண்டு மற்றும் துப்பாக்கி தோட்டாக்கள் மீட்கப்பட்டது. ஏறாவூர் முகாந்திரம் வீதியில் உள்ள வீடொன்றின் கூரையின் நீர்தாங்கிஒன்றினுள் இருந்து இவை மீட்கப்பட்டுள்ளன. கிடைத்ததகவலுக்கமைய இவை சேதனைசெய்யப்பட்டு மீட்கப்பட்டுள்ளன விசேட அதிரடிப்படையினர், இரானுவத்தினர் மற்றும் பொலிசார் சேதனைசெய்து இவற்றை கைப்பற்றியுள்ளனர். கூரையின் நீர்த்தாங்கியில் இருந்து 2கைக்குண்டு, ...

மேலும்..

மைத்திரிக்கு தமிழ் மக்கள் ஒருபோதும் ஆதரவு வழங்கமாட்டார்கள்: சுமந்திரன்

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வேட்பாளராக போட்டியிடுவாராயின் தமிழ் மக்கள் அவருக்கு ஒருபோதும் ஆதரவு வழங்கமாட்டார்களென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். தனியார் தொலைக்காட்சியொன்றுக்கு வழங்கியுள்ள நேர்காணலிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். மேலும் சுமந்திரன் ...

மேலும்..

வாக்குறுதிகளைப் பெற்றதன் பின்னர் அரசுக்கு ஆதரவளிக்குமாறு கூட்டமைப்பிடம் சுரேஸ் கோரிக்கை!

அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் அரசிற்கு ஆதரவாக வாக்களிக்கும் முன்னர், வடக்கு- கிழக்கிலுள்ள தமிழர்களின் பிரச்சினைகளுக்கான தீர்வை அரசாங்கத்திடமிருந்து பெற்றுக்கொள்ள வேண்டும் என்று ஈ.பி.ஆர்.எல்.எப். கட்சியின் தலைவர் சுரேஸ் பிரேமசந்திரன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை வலியுறுத்தினார். யாழில் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் ...

மேலும்..

தமிழ்-முஸ்லிம் தலைமைகள் கைகோர்க்க வேண்டும் – ஹரீஸ் வலியுறுத்து!

தமிழர்களோ அல்லது முஸ்லிம்களோ தனித்து நின்று எதனையும் சாதிக்கமுடியாது. எனவே, தமிழ்-முஸ்லிம் தலைமைகள் மனம் திறந்து பேச வேண்டும் என முன்னாள் இராஜாங்க அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்தார். கல்முனையில் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் ...

மேலும்..

கடும்போக்காளர்களின் வலையில் சிக்காத ஓர் அரசாங்கமே தேவை: அநுர

கடும்போக்காளர்களின் வலையில் சிக்காத ஓர் அரசாங்கமே தற்போது நாட்டுக்கு தேவையென மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். நுகேகொடயில் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். மேலும் ...

மேலும்..

அடுத்த ஜனாதிபதியாக சஜித்தையே மக்கள் விரும்புகின்றனர்: கயந்த

நாட்டின் அடுத்த ஜனாதிபதியாக அமைச்சர் சஜித் பிரேமதாஸவே வர வேண்டுமென மக்கள் விரும்புவதாக காணி மற்றும் நாடாளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சரான கயந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார். சீதாவகப்புர பகுதியில் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். மேலும் ...

மேலும்..

ஹேமசிறி, பூஜித்திற்கு பிணை வழங்கப்படுமா?

பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணாண்டோ மற்றும் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோருக்கு பிணை வழங்குவதா? இல்லையா? என்பது குறித்து அறிவிக்கப்படவுள்ளது. குறித்த வழக்கு தொடர்பான விசாரணைகள் இன்று (செவ்வாய்க்கிழமை) கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் இடம்பெறவுள்ளது. இதன்போதே இந்த விடயம் ...

மேலும்..

இந்திய பிரஜைகள் 14 பேர் கைது!

சட்டவிரோதமான முறையில் நாட்டில் தங்கியிருந்த இந்திய பிரஜைகள் 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் குழுவொன்றினால் நடத்தப்பட்ட சுற்றிவளைப்பில் அவர்கள் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் சட்டவிரோதமாக நாட்டில் தங்கியிருந்து வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்துள்ள நிலையிலேயே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் ...

மேலும்..

150க்கும் மேற்பட்டோரை காவுகொண்ட நவாலி தேவாலயத் தாக்குதலின் நினைவு நாள்!

150க்கும் மேற்பட்டோரின் உயிர்களை காவுகொண்ட நவாலி தேவாலயத் தாக்குதலின் 24ஆம் ஆண்டு நினைவுநாள் இன்றாகும். 1995ம் ஆண்டு ஜூலை 9ஆம் திகதி யாழ்ப்பாணம் நவாலி பேதுருவானவர் தேவாலயம் (சென். பீற்றர்ஸ்) மீது இலங்கை விமானப் படையினரால் தாக்குதல் நடத்தப்பட்டது. இத்தாக்குதலில் 150இற்கும் மேற்பட்ட பொதுமக்கள் ...

மேலும்..

நாட்டிலிருந்து வெளியேறியது நிலத்தடியைக் கண்காணிக்கும் விமானம்!

கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்ட நிலத்தடியைக் கண்காணிப்பது உள்ளிட்ட விசேட செயற்பாடுகளுக்காக பயன்படுத்தப்படும் விமானம் நாட்டிலிருந்து புறப்பட்டு செல்லவுள்ளது. குறித்த விமானம் இன்று (செவ்வாய்க்கிழமை) மும்பை நோக்கி புறப்படவுள்ளதாக சிவில் விமான சேவைகள் மற்றும் போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது. Basler BT-67  என்ற விமானம் ...

மேலும்..

களுத்துறை உள்ளிட்ட பல பகுதிகளில் நீர்வெட்டு

களுத்துறை உள்ளிட்ட பல பகுதிகளில் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது. அதற்கமைய இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணி முதல் 10 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக அந்த சபை தெரிவித்துள்ளது. இதற்கிணங்க இன்று காலை 10 மணி முதல் இரவு ...

மேலும்..

அரசாங்கத்திற்கு எதிரான பிரேரணை – கூட்டமைப்பு உறுப்பினர்கள் கலந்துரையாடல்

அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து கலந்துரையாடவுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெறவுள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக்குழு கூட்டத்தில் இந்த விடயங்கள் குறித்து ஆராயப்படவுள்ளன. மக்கள் விடுதலை முன்னணியினால் (ஜே.வி.பி.) ...

மேலும்..

பூஜித் மற்றும் ஹேமசிறிக்கு எதிரான மனுக்களை விசாரிக்க குழு நியமனம்

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் குறித்து பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மீறல் மனுக்களை விசாரணை செய்ய ஏழு பேர் அடங்கிய உயர்நீதிமன்ற நீதிபதிகள் ...

மேலும்..

சோபா உடன்பாட்டில் அரசாங்கம் கையெழுத்திடாது – ஐ.தே.க. உறுதி

அமெரிக்க அரசாங்கத்துடனான சோபா உடன்பாட்டில் அரசாங்கம் கையெழுத்திடாது என ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது. அலரிமாளிகையில் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஐ.தே.க.வின் நாடாளுமன்ற உறுப்பினர், ஹேஷ விதானகே இதனை கூறியுள்ளார். அத்தோடு, பிரதமர் செயலகம் நேற்று முன்தினம் வெளியிட்ட அறிக்கை ஒன்றில், ...

மேலும்..

மட்டக்களப்பில் எட்டு வேட்பாளர்களின் கூட்டு முயற்சியால தான் மூன்றுபேர் வெற்றிபெற்றனர் இதற்கு விஞ்ஞான விளக்கம் தேவையில்லை

பட்டிருப்பு தொகுதியில் இலங்கை தமிழரசு கட்சி செயலகம் எந்த இடத்திலும் திறக்கப்படவில்லை களுவாஞ்சிகுடியில் கடந்த 07/07/2019, திறக்கப்பட்ட அலுவலகம் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர ஞா.ஶ்ரீநேசனின் அலுவலகமே இதை கட்சிகாரியாலயம் என சித்தரிப்பது தவறு என மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற ...

மேலும்..

தெரிவுக்குழுவை நிராகரித்தால் ஜனாதிபதி மீதும் சட்டம் பாயும்!

தெரிவுக்குழுவை நிராகரித்தால் ஜனாதிபதி மீதும் சட்டம் பாயும்! ரணில், கோட்டாவும் விசாரணைக்கு அழைப்பு என சுமந்திரன் தெரிவிப்பு  "உயிர்த்த ஞாயிறு தினமன்று மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவங்கள் தொடர்பில் விசாரணை நடத்திவரும் விசேட நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் அழைப்பை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நிராகரிக்கும் பட்சத்தில் அவருக்கு எதிராகவும் சட்ட ...

மேலும்..

இலங்கை தமிழரசு கட்சியின் தேசிய வாலிபர் முன்னணி துணைச்செயலாளர் பயங்கரவாத தடுப்பு பிரிவு விசாரணைக்கு அழைப்பு!

அம்பாறை மாவட்ட இலங்கைதமிழரசுகட்சி வாலிபர் முன்னணியினை சேர்ந்த கல்முனை இளைஞர் சட்டக்கல்லூரி மாணவன் அ.நிதான்ஷன் என்பவரை குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு விசாரணை ஒன்றுக்காக வாக்குமூலம் தெரிவிக்க எதிர்வரும் 12/07/2019 கொழும்பு குற்றப்புலனாய்வுக்கு சமூகம்தருமாறு இன்று 08/07/2019, அழைப்பானை பொலிசார் ஊடாக வழங்கப்பட்டுள்ளது.   இலங்கை தமிழரசுகட்சியின் ...

மேலும்..

சுட்ட மண்ணும் பச்சை மண்ணும் ஒட்டாது விக்கி தமிழரசில் இணைவதுவும் அவ்வாறே!

சுட்ட மண்ணும் பச்சை மண்ணும் ஒட்டாது என்பது இயற்பியல். “ஆகக் கூட்டமைப்பில் சேரக்கூடியவர்கள் எங்களோடு இணைந்து பயணிப்பது தான் பொருத்தமான விடயம். அதனடிப்படையில் விக்கினேஸ்வரன் ஏற்கனவே சம்பந்தனால் தான் இங்கே கொண்டு வரப்பட்டவர். ஆகவே அவர் சம்பந்தனோடு பேசி எங்களோடு இணைந்து கொள்வதனால் ...

மேலும்..

ஆடு நனைகிறது என்று அழுகிறதாம் ஓணாய்!

கீழே காணப்படுகிற பந்தி காலைக்கதிர் ஆசிரியர் வித்தியாதரன் ஒவ்வொரு நாளும் எழுதுகிற ''இனி இது ஒரு இரகசியம் அல்ல ''என்ற கிசு கிசு பகுதியில் இன்று வெளிவந்துள்ளது. ஆடு நனைகிறது என்று ஓணாய் அழுத கணக்காக திருகோணமலை தமிழ்  அரசுக் கட்சி பற்றியும், குறிப்பாக ...

மேலும்..

யாழ் மாவட்ட பாதுகாப்பு படைகளின் கட்டளை தளபதி – ஆளுநர் சந்திப்பு

யாழ் மாவட்ட பாதுகாப்பு படைகளின் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி அவர்கள் கௌரவ ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களை இன்று (08) முற்பகல் ஆளுநர் செயலகத்தில் சந்தித்தார். பதவியிலிருந்து ஓய்வு பெற்றுச்செல்லும் மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி அவர்கள் ...

மேலும்..

 நம்பிக்கையில்லா பிரேரணைக்கு எமது அரசியல்வாதிகள் எதிர்த்து வாழ்களித்து அரசுக்கு எதிர்ப்பினை தெரிவிக்க வேண்டும்

எதிர்வரும் நம்பிக்கையில்லா பிரேரணைக்கு எமது அரசியல்வாதிகள் எதிர்த்து வாழ்களித்து அரசுக்கு எதிர்ப்பினை தெரிவிக்க வேண்டும் என விலிந்துகாணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் தெரிவிக்கின்றனர். இன்று கிளிநொச்சியில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே இவ்வாறு தெரிவிக்கப்பட்டது. வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் இன்று கிளிநாச்சியில் ஊடக சந்திப்பொன்றை ...

மேலும்..

மலையக மக்கள் முன்னணியிலிருந்து விலகவுள்ளேன் என்பதில் எவ்வித உண்மையுமில்லை.-அனுசா சந்திரசேகரன்

மலையக மக்கள் முன்னணியிலிருந்து நான் விலகப்போவதாகவும்,தனி கட்சி அமைக்கப்போவதாகவும்,அல்லது வேறு ஒரு கட்சியில் இணைந்து செயப்படப்போவதாகவும், பல்வேறு செய்திகள் சமூக வளைத்தளங்களில் வெளியாகின.ஆனால் நான் ஒரு போதும் மலையக மக்கள் முன்னணியிலிருந்து விலகவோ அல்லது பதியகட்சி ஒன்றை உருவாக்கவோ,அல்லது வேறு கட்சியில் ...

மேலும்..

சாய்ந்தமருது வொலிவேரியன் கிராமத்தில் குண்டுத்தாக்குதலில் சேதமடைந்த வீட்டை இராணுவம் திருத்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை-இராணுவம்

பாறுக் ஷிஹான் சாய்ந்தமருது வொலிவேரியன் கிராமத்தில் கடந்த ஏப்ரல் 26 திகதி மேற்கொள்ளப்பட்ட தற்கொலை குண்டுத்தாக்குதலில் சேதமடைந்த வீட்டை திருத்தியமைப்பதற்கான நடவடிக்கைகளை இராணுவ தரப்பு ஈடுபட்டுள்ளது என்பது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. கடந்த சனிக்கிழமை (6) காலை குறித்த பகுதிக்கு சென்ற இராணுவத்தினர் சேதமடைந்த வீட்டின் ...

மேலும்..

சிறைக் கைதிகளும் கைத்தொழில் பயிற்சிகள் வழங்க நைற்றா நிறுவனம் திட்டம். தலைவர் நஸிர்அஹமட் துரித நடவடிக்கை

கைதிகளுக்குப் புணர்வாழ்வளிப்பது தொடர்பில் அவர்களுக்கு கைத்தொழில் பயிற்சி திட்டங்களை வழங்குவது குறித்து தேசிய பயிலுநர் கைத்தொழில் பயிற்சி அதிகார சபை (நைற்றா)மூலம் நடவடிக்கை எடுக்கத் திட்டமிடுகின்றது. இதுகுறித்த முக்கிய கலந்துரையாடல் ஒன்று இன்று(8) நைற்றா நிறுவனத் தலைவர் நஸிர் அஹமட்டுக்கும் சிறைத் துறைசார் ...

மேலும்..

மண் அகழ்வை உடன் தடுத்து நிறுத்துங்கள்; மணற்காட்டைப் பாதுகாக்க முன்வாருங்கள்

யாழ். மாவட்ட அரச அதிபருக்கு அக்கிராம மக்கள் அவசர கடிதம் "வடமராட்சி கிழக்கு, மணற்காடு கிராமத்தைப் பாரிய அனர்த்தங்களில் இருந்து பாதுகாக்கும் பொருட்டும் எதிர்கால சந்ததியின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கிலும் இங்கு இடம்பெறும் மண் அகழ்வு நடவடிக்கைகளை உடன் தடைசெய்யுங்கள்." - இவ்வாறு ...

மேலும்..

கல்முனை வடக்கு பிரதேச செயலகம் ஹரீஷ் எம்.பியின் வாப்பா வீட்டு சொத்தல்ல.!

கல்முனையை வடக்கு பிரதேச செயலகத்தை தரம் உயர்த்தாமல் தடுப்பதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் ஐனாப் ஹரீசிஷ் கூறுவது போன்று போன்று கல்முனை அவருடைய வாப்பா வீட்டு சொத்தல்ல. இவ்வாறு தெரிவித்தார் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் ஊடகங்களுக்கு விடுக்கப்பட்ட விஷேட அறிக்கையிலேயே ...

மேலும்..