July 10, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டவை

கழிவுப்பொருட்களை பிரித்தானியாவிற்கு திருப்பி அனுப்ப தீர்மானம்!

பிரித்தானியாவிலிருந்து இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ள கழிவுப்பொருட்களை திருப்பி அனுப்பி வைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. பிரித்தானியாவில் இருந்து இலங்கைக்கு அனுப்பப்பட்ட கழிவுப்பொருட்கள் அடங்கிய கொள்கலன்களில் 5 கொள்கலன்கள் நேற்று(புதன்கிழமை) சுங்கத்திணைக்களத்தினரால் திறக்கப்பட்டது. பயன்படுத்தப்பட்ட மெத்தைகள் என கூறி கொண்டுவரப்பட்ட இந்த கொள்கலன்களில் இருந்து தரை விரிப்பு, பிளாஸ்டிக் மற்றும் ...

மேலும்..

உணவு ஒவ்வாமை – பாடசாலை மாணவர்கள் பலர் வைத்தியசாலையில் அனுமதி!

கல்முனை கல்வி வலயத்தின் சாய்ந்தமருது கோட்டத்தின் கீழ் உள்ள பாடசாலையொன்றின்  மாணவர்கள் உணவு ஒவ்வாமை காரணமாக பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 44க்கும் மேற்பட்ட மாணவர்கள் வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சைப்பெற்று வீடு திரும்பியுள்ள நிலையில், மேலும் 23 மாணவ, மாணவிகள் தொடர்ந்தும் வைத்தியசாலையில் சிகிச்சைப் ...

மேலும்..

சஹ்ரான் மற்றும் முஸ்லிம் மௌலவிகள் குறித்து கபில ஜயசேகர சாட்சியம்!

இலங்கையில் பயங்கரவாத தாக்குதல் நடத்திய சஹ்ரான் ஹசீமின் கடும்போக்கு நடவடிக்கைகள் தொடர்பாக, முஸ்லிம் மௌலவிகள் யாரும் முறைப்பாடுகளை மேற்கொண்டதாக தாம் அறியவில்லை என சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் கபில ஜயசேகர தெரிவித்துள்ளார். ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளும் நாடாளுமன்ற ...

மேலும்..

கிழக்கிலுள்ள காணிகளை வெளிநாடுகளுக்கு விற்பனை செய்யவே காணி தொடர்பான திருத்தச் சட்டம் – துரைரெட்னம்

கிழக்கு மாகாணத்தில் உள்ள காணிகளை வெளிநாடுகளுக்கு விற்பனை செய்வதற்கான முயற்சியாகத்தான் காணி தொடர்பான திருத்தச் சட்டம் நாடாளுமன்றத்திற்கு கொண்டுவரப்படவுள்ளதாக முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெட்னம் குற்றம் சுமத்தியுள்ளார். மட்டக்களப்பு வாவிக்கரை வீதியில் உள்ள அவரது அலுவலகத்தில் நேற்று (புதன்கிழமை) மாலை இடம்பெற்ற ...

மேலும்..

பெரும்பான்மை இல்லாத அரசு கவிழுமா அல்லது காப்பாற்றப்படுமா? – வாக்கெடுப்பு இன்று!

அரசுக்கு எதிராக மக்கள் விடுதலை முன்னணியால் கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான வாக்கெடுப்பு இடம்பெறவுள்ளது. நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதம் இரண்டாவது நாளாக இன்றும் (வியாழக்கிழமை) நாடாளுமன்றத்தில் இடம்பெறவுள்ளது. அதற்கமைய நாடாளுமன்றம் இன்று காலை 10.00 மணிக்கு கூடவுள்ளது. அதனையடுத்து, இன்று மாலை 6.30 ...

மேலும்..

கல்முனை வடக்கு பிரதேசசெயலகம் தரமுயர்த்தாவிடில் அரசுக்கு எதிராகக் கூட்டமைப்பு வாக்களிக்கவேண்டும்!

பாறுக் ஷிஹான் கல்முனை வடக்கு உப  பிரதேச செயலகம் தரமுயர்த்தப்படாவிட்டால்   நம்பிக்கையில்லா பிரேரணைக்கு எதிராக கூட்டமைப்பு வாக்களிக்க வேண்டும் என கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தரமுயர்த்த கோரி உண்ணாவிரதமிருந்தோர் கூட்டாக தெரிவித்தனர். வடக்கு பிரதேச உப பிரதேச  செயலகத்தை உரிய முறையில் ...

மேலும்..

சஹ்ரானின் குண்டுத் தாக்குதலை விட நூறுமடங்கு பயங்கரமானது மட்டு பல்கலைக்கழகம் – அதுரலிய

சஹ்ரானின் குண்டுத் தாக்குதலை விட நூறுமடங்கு பயங்கரமானது மட்டக்களப்பு ஷரிஆ பல்கலைக்கழகம் என நாடாளுமன்ற உறுப்பினர் அதுரலிய ரத்னதேரர் தெரிவித்துள்ளார். அத்துடன், மட்டக்களப்பு ஷரீஆ பல்கலைக்கழகம் மனிதப் படுகொலைகளை உருவாக்கும் தொழிற்சாலை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். நாடாளுமன்றத்தில் மக்கள் விடுதலை முன்னணியினால் அரசாங்கத்துக்கு எதிராக ...

மேலும்..

ஈஸ்டர் தாக்குதலுக்கு பொறுப்புக் கூறவேண்டியவர் ஜனாதிபதியே – கோடீஸ்வரன்

குண்டுத் தாக்குதலுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே பிரதானமாக பொறுப்புக் கூற வேண்டியவர் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கோடீஸ்வரன் தெரிவித்துள்ளார். அத்துடன், சஹ்ரானின் பயங்கரவாதத்துடன் தொடர்புடையவர்கள் ஆயிரக்கணக்கில் உள்ளார்கள் எனவும் அவர் குறிப்பிட்டார். மக்கள் விடுதலை முன்னணியினால் அரசாங்கத்துக்கு எதிராக கொண்டுவந்துள்ள ...

மேலும்..

சரணடைந்தது இந்தியா ; இறுதிப் போட்டியில் நியூஸிலாந்து

இந்திய அணியை 18 ஓட்டத்தினால் வீழ்த்தி நியூஸிலாந்து அணி இரண்டாவது தடவையாகவும் இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ளது. ஐ.சி.சி. 12 ஆவது உலகக் கிண்ணத் தொடரின் முதலாவது அரையிறுதி ஆட்டம் இந்தியா - நியூஸிலாந்து அணிகளுக்கிடையே நேற்று மாலை 3.00 மணிக்கு மான்செஸ்டரில் ஆரம்பமானது. நேற்றைய ...

மேலும்..

சஹ்ரானுடன் தொடர்புடையோரை தடுத்துவைத்து விசாரிக்க நடவடிக்கை!

சஹ்ரானுடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணிய குற்றச்சாட்டில் பொலிஸ் பயங்கரவாத விசாரணைப் பிரிவினால் கைது செய்யப்பட்ட 3 சந்தேகநபர்களையும் தடுத்துவைத்து விசாரணை செய்வதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். குருணாகல் – ரஸ்நாயக்கப்புர, வெலிமடை மற்றும் பேராதனை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மூவரே சந்தேகத்தின் பேரில் ...

மேலும்..

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்: 500 மில்லியன் இழப்பீடு கோரி அடிப்படை உரிமை மீறல் மனுத்தாக்கல்!

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலில் காயமடைந்ததாகவும் அதற்கு 500 மில்லியன் இழப்பீடு கோரி வழங்கறிஞர் ஒருவர் அடிப்படை உரிமை மீறல் மனுவை தாக்கல் செய்துள்ளார். பயங்கவாதிகளினால் இலக்குவைக்கப்பட்ட ஏழு இடங்களில் ஒன்றான ஷாங்ரி-லா ஹோட்டலில் குண்டுவெடிப்பின் போது வழக்கறிஞர் மோதித ஏகநாயக்க காயமடைந்தார். அந்தவகையில் உயர் ...

மேலும்..

சட்டவிரோதமாக ஆயர்வேத வைத்தியசாலையினை நடாத்தி சென்ற வைத்தியர் ஒருவர் கைது

ஆயர்வேத திணைக்களத்தின் அனுமதியினை பெறாது அட்டன் நகரில் உள்ள பேருந்து தரிப்பிடத்திற்கு அருகாமையில் உள்ள கட்டிடம் ஒன்றில் ஆயர்வேத வைத்தியசாலையினை நடாத்தி சென்ற வைத்தியர் ஒருவர் அட்டன் பகுதிக்கு பொறுப்பான பொது சுகாதார பரிசோதகர்களினால் 10.07.2019 அன்று கைது செய்யபட்டுள்ளார். அட்டன் பொது ...

மேலும்..

நாட்டு மக்களுக்கு முக்கிய அறிவித்தல்!

நாட்டின் சில பகுதிகளில் இன்று மாலை அல்லது இரவு வேளைகளில் இடியுடன் கூடிய மழை பெய்யுமென காலநிலை அவதான நிலையம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக மக்களை அவதானத்துடன் செயற்படுமாறு அத்திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது. காலநிலை அவதான நிலையம் இன்று (புதன்கிழமை) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இந்த ...

மேலும்..

தாக்குதல்கள் குறித்து பிரதமர் மீது குற்றஞ்சாட்டுவதை ஏற்க முடியாது – லக்ஷ்மன்

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் விவகாரம் தொடர்பாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க மீது குற்றங்களைக் கூறுவது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகும் என்று சபை முதல்வர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார். அத்தோடு, இனியும் இந்த விடயத்தை முன்னிருத்தி எவரும் இனவாதம் மேற்கொள்ளக்கூடாது என்றும் அவர் கேட்டுக்கொண்டார். நாடாளுமன்றத்தில் இன்று ...

மேலும்..

நவாலிப் படுகொலையை சபையில் நினைவுகூர்ந்தார் சிறிதரன் எம்.பி.!

நவாலி சென்.பீற்றர்ஸ் தேவாலயத்தில் சந்திரிகா அரசு நடத்திய குண்டுத்தாக்குதலை நேற்று நாடாளுமன் றத்தில் நினைவு கூர்ந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், இழப்புக்களையும் உயிரிழப்புக்களையும் தமிழினம் என்றுமே மறக்காது என்றும் கூறினார். நெடுஞ்சாலைகள் அமைச்சின் விவாதத்தில் கலந்து கொண்டு ...

மேலும்..

கிளிநொச்சியில் வீட்டுத்திட்டப் பயனாளிகளுக்கு கொடுப்பனவு வழங்கப்படவில்லை

கிளிநொச்சி மாவட்டத்தில்  வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினரால் புதிதாக தெரிவு செய்யப்பட்ட வீட்டுத்திட்டப் பயனாளிகளுக்கு முதல் கொடுப்பனவை தவிர வேறு எந்தக்கொடுப்பனவும் வழங்கப்படாததன் காரணமாக வீடுகளை  கட்டி முடிக்க முடியாது   மக்கள் கடும் நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளனர். மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் காரணமாக ...

மேலும்..

அரசைப் பாதுகாக்கவேகூடாது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு!! – சபையில் ஜே.வி.பி. வலியுறுத்து

நாட்டைப் பாதுகாக்கத் தவறிய அரசு பதவி விலக வேண்டும். இந்த அரசை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாதுகாக்கக்கூடாது." - இவ்வாறு வலியுறுத்தினார் மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி.) தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அநுரகுமார திஸாநாயக்க. அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை இன்று சபையில் முன்வைத்து ...

மேலும்..

அரசாங்கத்துக்கு எதிரான பிரேரணைக்கு ஆதரவளிக்குமாறு கூட்டமைப்பிற்கு ஜே.வி.பி. அழைப்பு!

அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் மற்றும் மஹிந்த தரப்பினர் ஆதரவு வழங்க வேண்டும் என்று ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க அழைப்பு விடுத்தார். அத்தோடு, மக்களின் பாதுகாப்பை சவாலுக்குட்படுத்தியுள்ள இந்த அரசாங்கம் தேர்தலுக்கு முன்னர் நிச்சயமாக வெளியேற்றப்பட வேண்டும் ...

மேலும்..

தெரிவுக்குழுவில் முன்னிலையானார் தயாசிறி

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளும் நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் தயாசிறி ஜயசேகர முன்னிலையாகி சாட்சியம் வழங்கி வருகின்றார். இன்று (புதன்கிழமை) இடம்பெறும் அமர்வில் சாட்சியங்கள் வழங்குவதற்காக கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் கபில ஜெயசேகர மற்றும் கல்வி ...

மேலும்..

தமிழ்க் கூட்டமைப்பின் ஆதரவுடன் பிரேரணையைத் தோற்கடிப்போம் – பிரதமர் ரணில் திட்டவட்டம்

அரசுக்கு எதிராக மக்கள் விடுதலை முன்னணியால் முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன் தோற்கடித்தே தீருவோம்." - இவ்வாறு திட்டவட்டமாகத் தெரிவித்தார் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க. அரசுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே ...

மேலும்..

நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தில் புனரமைப்புப் பணிகளுக்கு தடை!

முல்லைத்தீவு செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தில் மேலதிக கட்டடப் புனரமைப்புப் பணிகளை மேற்கொள்ள வவுனியா மேல் நீதிமன்றம் தடைவிதித்துள்ளதாக சட்டத்தரணி அன்ரன் புனிதநாயகம் தெரிவித்தார். அத்தோடு இந்த வழக்கு தொடர்பான விசாரணைகள் ஓகஸ்ட் மாதம் 26ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். முல்லைத்தீவு ...

மேலும்..

ஐரோப்பிய ஒன்றியத்தின் பயங்கரவாத எதிர்ப்பு ஒருங்கிணைப்பாளர் இலங்கை விஜயம்

ஐரோப்பிய ஒன்றியத்தின் பயங்கரவாத எதிர்ப்பு ஒருங்கிணைப்பாளர் கில் டி கெர்ச்சோவ், மாலைதீவு மற்றும் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். இரு நாடுகளினதும் பாதுகாப்பை அதிகரிப்பதற்கான முயற்சியின் ஓர் அங்கமாக எதிர்வரும் ஜீலை 11 ஆம் திகதி அவரது விஜயம் அமையவுள்ளது. அவரது விஜயத்தின்போது இலங்கை அரசாங்க ...

மேலும்..

சாய்ந்தமருது பாடசாலை மாணவர்கள் வைத்தியசாலையில் : உணவு ஒவ்வாமையினால் பாதிப்பு !!

கல்முனை கல்விவலயத்தின் சாய்ந்தமருது கோட்டத்தின் கீழ் உள்ள சாய்ந்தமருது லீடர் எம்.எச்.எம். அஸ்ரப் வித்தியாலய மாணவர்களின் உணவு ஒவ்வாமை காரணமாக சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலையில் மாணவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். 150 க்கும் மேற்பட்ட மாணவர்கள் குறித்த பாடசாலையில் கல்வி பயில்வதுடன் சகல ...

மேலும்..

சட்டவிரோதமாக கடற்தொழிலில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும் – டக்ளஸ்!

யாழ்ப்பாணம் வடமராட்சி கடல் பகுதிகளில் மேற்கொள்ளப்படும் சட்டவிரோத கடற்தொழிலால் அப்பகுதி மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா குறிப்பிட்டுள்ளார். எனவே, இந்த விடயம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். நாடாளுமன்றில் நேற்று (செவ்வாய்க்கிழமை) உரையாற்றும்போதே அவர் ...

மேலும்..

அரசை ஆதரிப்பதா? இல்லையா? நாளைதான் கூட்டமைப்பு முடிவு – சுமந்திரன் எம்.பி. தெரிவிப்பு

"அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை ஆதரிப்பதா? எதிர்ப்பதா? அல்லது நடுநிலை வகிப்பதா? என்பது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்னமும் முடிவெடுக்கவில்லை. நாளை வியாழக்கிழமை காலை 10 மணிக்கு நடைபெறும் கூட்டமைப்பின் நாடாளுமன்றக்குழுக் குழுக் கூட்டத்திலேயே இது தொடர்பில் முடிவெடுக்கப்படும்." - இவ்வாறு ...

மேலும்..

ஈசி கேஷ் மூலம் பணத்தை பெற்று போதைப்பொருளை விற்பனை செய்து வந்த நபர் கைது

ஈசி கேஷ் மூலம் பணத்தை பெற்று பதுளை பிரதேசத்தில் போதைப்பொருள் பைக்கற்றுகளை வீதி ஓர கால்வாய், மின்சார கம்பங்களுக்கு அருகில் வீசி சென்ற ஒருவரை பதுளை மாவட்ட போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினர் 10.07.2019 அன்று கைது செய்துள்ளனர். குறித்த நபர் ஈசி கேஷ் மூலம் ...

மேலும்..

ருஹுண பல்கலைக்கழகம் மூடப்பட்டது!

மாணவர்களுக்கும் கல்விசாரா ஊழியர்களுக்கும் இடையில் ஏற்பட்ட மோதலையடுத்து ருஹுண பல்கலைக்கழகம் கால வரையறையின்றி மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து பல்கலைக்கழக வளாகத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள பொலிஸார், மாணவர்களின் செயற்பாட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்கலைக்கழகத்தின் கல்விசாரா ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்திலும் ஈடுப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். ருஹுண ...

மேலும்..

எமது பிள்ளைகளை வைத்து இன்று பணம் திரட்டும் செயற்பாடுகள் இடம்பெற்று வருகின்றது

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் இன்று கிளிநொச்சியில் ஊடக சந்திப்பொன்றை ஏற்பாடு செய்திருந்தனர். குறித்த ஊடக சந்திப்பு வடக்க கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் தலைவியின் இல்லத்தில் இன்று காலை 10.30 மணியளவில் இடம்பெற்றது. இதன்போது வடக்கு கிழக்கு ...

மேலும்..

முஸ்லிம் சமூகத்துக்கு ஆறுதல் அளிக்கின்றது சுமந்திரனின் கருத்து!! – மு.காவின் யஹ்யாகான் பாராட்டு

முஸ்லிம் தனியார் சட்டத்தை நீக்க அனுமதிக்க முடியாது. திருத்தங்கள்  மேற்கொள்ள வேண்டுமாயின் அவை முஸ்லிம் சமூகத்தினரின் முழுமையான இணக்காப்பாட்டுடனே இடம்பெற வேண்டும் எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்திருப்பது மகிழ்ச்சியைத் தருகின்றது என ஸ்ரீலங்கா ...

மேலும்..

திருமலை மாணவர் படுகொலை விசாரணைகளை மீண்டும் ஆரம்பிக்க அறிவுறுத்தல்!

திருகோணமலையில் 5 மாணவர்கள் படுகொலை தொடர்பான விசாரணைகளை மீள ஆரம்பிக்குமாறு சட்டமா அதிபரினால் பதில் பொலிஸ் மா அதிபருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறித்த வழக்கு விசாரணைகளின் முக்கிய சாட்சிகளாக பெயரிடப்பட்ட மூவர் தொடர்பான விபரங்களை பெற்றுக்கொள்ள முடியவில்லை குற்றப் புலனாய்வு பிரிவினரால் நீதிமன்றத்தில் அறிவிக்கப்பட்ட ...

மேலும்..

திருமலை மாணவர் படுகொலை: விசாரணையை மீள ஆரம்பிக்க சட்டமா அதிபர் அவசர பணிப்பு

2006ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 2ஆம் திகதி திருகோணமலையில் 5 தமிழ் மாணவர்கள் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டமை குறித்த விசாரணைகளை மீள ஆரம்பிக்குமாறு பதில் பொலிஸ்மா அதிபரை சட்டமா அதிபர் அறிவுறுத்தியுள்ளார். இந்தப் படுகொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருந்த 12 விசேட அதிரடிப் படையினரும், ...

மேலும்..

நீராவியடிப் பிள்ளையார் ஆலய விவகாரம்: விசாரணைகள் ஆரம்பம்!

முல்லைத்தீவு செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலய விவகாரத்தில் நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக பௌத்த மதகுருவினால் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. அதற்கமைய இரு தரப்பினரும் வவுனியா மேல் நீதிமன்றில் முன்னிலையாகி தமது தரப்பு வாதங்களை முன்வைத்து வருகின்றனர். செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ...

மேலும்..

சம்மாந்துறைப் பொலிஸ் பொறுப்பதிகாரி எம். கே. இப்னு அஸார் விடுக்கும் முக்கிய அறிவிப்பு.

சம்மாந்துறைப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சகல பொதுமக்களுக்கும்  சம்மாந்துறைப் பொலிஸ் பொறுப்பதிகாரி  எம். கே. இப்னு அஸார் விடுக்கும் முக்கிய அறிவிப்பு. தற்போது கதிர்காமம் , உகந்தை ஆலயங்களில் சமய வழிபாடுகள் நடைபெறுவதோடு தங்களது பிரதேசங்களிலும் ஆலய சமய வழிபாடுகள்  நடைபெற்று வருகின்றன. இந்தக் ...

மேலும்..

பேசாலை கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்ட படகு கொட்டிலுடன் எரிப்பு

மன்னார்-பேசாலை கடற்கரையில் தற்காலிக கொட்டிலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கண்ணாடி இலைப் படகு கொட்டிலுடன் தீ வைத்து ஏரியூட்டப்பட்டுள்ளது. கடந்த மூன்று மாதங்களாக பேசாலை 7ஆம் வட்டார பகுதியைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் பேசாலை கடற்கரையில் படகை நிறுத்தி கடற்தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்த நிலையில் ...

மேலும்..

உலக சந்தையில் கச்சா எண்ணெயின் விலை அதிகரிப்பு: எரிபொருள் விலையில் திருத்தம்

எரிபொருள் விலை சூத்திரத்தின் அடிப்படையில் எரிபொருள் விலைகளில் திருத்தங்களை கொண்டுவரவுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. அந்தவகையில் எரிபொருள் விலையை மறு ஆய்வு செய்ய நிதியமைச்சினால் நியமிக்கப்பட்ட குழு இன்று (புதன்கிழமை) கூடுகின்றது. ஜூன் மாதம் மேற்கொள்ளப்பட்ட திருத்தத்தின் படி, ஒரு லிட்டர் 92 ஒக்டைன் ...

மேலும்..

விட்டுக்கொடுத்து விட்டுக்கொடுத்து சாதிக்கமுடியாமல் முட்டுச்சந்தியில் தமிழ்மக்களை நிறுத்தினார் சம்பந்தர்!

தமிழரசுக் கட்சியின் தேசிய பேராளர் மாநாட்டில் சம்பந்தர் பேசியது துலக்கமற்றது என்றாலும் அது ஒரு தேர்தல் உத்திதான். அதை கூட்டமைப்பின் ஊடகங்கள் உருப்பெருக்குவதும் ஒரு தேர்தல் உத்திதான். அதேசமயம் மனோ கணேசன் அது தொடர்பாக பின்வருமாறு கூறியிருக்கிறார்… “சம்பந்தருக்கு வயதாகிவிட்டது. எதிர்பார்ப்புகள் சுக்கு ...

மேலும்..

லொறி மோதி சிறுவன் பலத்த காயம்

நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சாமிமலை மானெலி தோட்டபகுதியில் இருந்து மரக்கன்றுகளை ஏற்றி வந்த லொறி ஒன்றில் 14 வயதுடைய சிறுவன் மோதுண்டு பலத்த காயங்களுக்குள்ளாகி கண்டி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து 09.07.2019 செவ்வாய்கிழமை மாலை 05 ...

மேலும்..

மட்டக்களப்பு KFC மின்னொழுக்கு காரணமாக தீப்பற்றியுள்ளது.

மட்டக்களப்பு KFC மின்னொழுக்கு காரணமாக தீப்பற்றியுள்ளது. சம்பவ இடத்தில் மட்டக்களப்பு மாநகர சபைக்கு சொந்தமான தீயணைப்பு படையினர்  தீயை அணைத்துக்கொண்டிருக்கின்றனர்.  அவ்விடத்துக்கு மட்டக்களப்பு பொலிஸ் வருகை தந்துள்ளார்கள்.

மேலும்..

ரத்துபஸ்வல துப்பாக்கிச் சூட்டு சம்பவம்: மூன்று நீதியரசர்கள் குழாமை நியமிக்க கோரிக்கை

ரத்துபஸ்வல துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பான வழக்கை விசாரிக்க மூன்று நீதியரசர்கள் அடங்கிய நீதிபதிகள் குழாமை நியமிக்குமாறு சட்டமா அதிபர் தலைமை நீதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார். கம்பஹா உயர்நீதிமன்றத்தில் இந்த நீதியரசர்கள் அடங்கிய நீதிபதிகள் குழாமை நியமிக்குமாறு இன்று (புதன்கிழமை) சட்டமா அதிபர் ...

மேலும்..

யாழ் வசாவிளான் மத்திய மகா வித்தியாலயத்திற்கு ஆளுநர் விஜயம்

யாழ் வசாவிளான் மத்திய மகா வித்தியாலயத்திற்கு இன்று (10) முற்பகல் விஜயம் மேற்கொண்ட கௌரவ ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் பாடசாலையின் தற்போதைய நிலைமைகள் குறித்து ஆராய்ந்ததுடன் மாணவர்களுடனும் சுமூகமாக கலந்துரையாடினார்.  

மேலும்..

கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தரமுயர்த்தக் கோரி கோட்டை ரயில்நிலையம் முன்னால் தற்போது ஆட்பாட்டம்.

கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தரமுயர்த்தக் கோரி கோட்டை ரயில்நிலையம் முன்னால் தற்போது ஆட்பாட்டம் நடை பெற்றுக் கொண்டிருக்கின்றது.

மேலும்..

அபிவிருத்தித் திட்டங்களுக்கு தமிழில் பெயர் சூட்டவேண்டும் – ஸ்ரீதரன்

வடக்கில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தித் திட்டங்களுக்கு, தமிழ் மொழியில் பெயர் சூட்டவேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் வலியுறுத்தினார். நாடாளுமன்றில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். இங்கு தொடர்ந்தும் கருத்து ...

மேலும்..

சர்ச்சைகளை அடுத்து தெரிவுக்குழுவில் முன்னிலையாகின்றார் தயாசிறி

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களை விசாரிக்கும் நாடாளுமன்றத் தெரிவுக் குழுவில் சாட்சியம் வழங்க முன்னிலையாகவுள்ளதாக சுதந்திர கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். கடந்த சில நாட்களாக நாடாளுமன்ற தெரிவுக் குழுவில் சாட்சியம் வழங்க மாட்டேன் என தெரிவித்துவந்த தயாசிறி ஜயசேகர நேற்றும் இந்த ...

மேலும்..

கடும் வறட்சியின் பின்னர் அம்பாறையில் பலத்த மழை!

அம்பாறை மாவட்டத்தில் அண்மைக் காலமாக நிலவிய கடும் வறட்சியின் பின்னர், தற்போது இடி மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்துள்ளது. வறட்சியாலும் வெப்பத்தாலும் பாதிக்கப்பட்டிருந்த விவசாயிகளும் மக்களும் மழையை மகிழ்சியாக வரவேற்றதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். எனினும் சில மணிநேரங்கள் மட்டுமே ...

மேலும்..

மத்தள விமான நிலையத்தை நெல் களஞ்சியசாலையாக பயன்படுத்தியமை குறித்து விசாரணை

இலஞ்ச ஊழல் குறித்து விசாரணை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு ஶ்ரீலங்கன் விமான நிறுவனத்தின் முன்னாள் தலைவர் அஜித் டயஸ்க்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 2015 இல் மத்தள விமான நிலையத்தில் நெல் களஞ்சியப்படுத்துவதற்கு எடுத்த முடிவு குறித்து வாக்குமூலம் வழங்குவதற்காகவே எதிர்வரும் 9 ...

மேலும்..

அமலா பால், விஜே ரம்யா உதட்டோடு உதடு முத்தம், புகைப்படத்தை பார்த்த ஷாக் ஆன ரசிகர்கள்

அமலா பால் ஆடை படத்தின் ரிலிஸிற்காக காத்திருக்கின்றார். இப்படத்தில் விஜே ரம்யா ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் டீசர், ட்ரைலர் வெளிவந்து செம்ம சென்சேஷன் ஆனது, இந்நிலையில் இப்படத்தின் ட்ரைலரில் வேகவேகமாக சில ஷாட்ஸ் வரும். அதில் ஒரு காட்சியில் அமலா பால், ...

மேலும்..

முன்னணி நடிகர்களில் விஜய்க்கு கிடைத்த வாய்ப்பு- எப்படி இருக்கப்போகிறது?

விஜய்யின் பிகில் படத்திற்கு பெரிய எதிர்ப்பார்ப்பு உள்ளது. அண்மையில் இப்படம் குறித்து தயாரிப்பாளர் ஒரு அப்டேட் வெளியிட்டார். அதில் ஏ.ஆர். ரகுமான் இசையில் விஜய் பாடுகிறார் என்ற தகவல் வந்தது. முன்னணி நடிகர்களில் விஜய்க்கு தான் இந்த வாய்ப்பு கிடைத்துள்ளதாம். இவரை தாண்டி சிம்பு ...

மேலும்..

புத்தளத்தில் கடலரிப்பு – மக்கள் பாதிப்பு!

புத்தளம் மாவட்டத்தின் ஆராச்சிக்கட்டுவ பிரதேச செயலகத்திற்குட்பட்ட முத்துப்பந்தி கிராமம் நாளுக்கு நாள் கடலரிப்புக்குள்ளாகி வருவதாக மக்கள் கவலை தெரிவிக்கின்றனர். இக்கிராம மக்கள் கடற்றொழிலை ஜீவோபாயத் தொழிலாக மேற்கொண்டு வருகின்ற நிலையில், கடற்கரையோரத்தில் தமது இயந்திரப் படகுகளை பாதுகாப்பாக வைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக ...

மேலும்..

நீராவியடிப் பிள்ளையார் ஆலய விவகாரம் – நீதிமன்றில் விசாரணை!

முல்லைத்தீவு செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலய விவகாரத்தில் நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக பௌத்த மதகுருவினால் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. இந்த மனு மீதான விசாரணைகள் இன்று (புதன்கிழமை) வவுனியா மேல் நீதிமன்றத்தில் இடம்பெறவுள்ளன. முல்லைத்தீவு செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலய ...

மேலும்..

இலண்டன் பறந்தார் மைத்திரி! – பதில் பாதுகாப்பு அமைச்சராக ருவன்

மூன்று நாட்கள் தனிப்பட்ட பயணமாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று இலண்டனுக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளார். நேற்று மதியம் அவர், கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து இலண்டனுக்குப் புறப்பட்டார். தனது மகன் தஹம் சிறிசேனவின் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கவே ஜனாதிபதி இந்தப் பயணத்தை மேற்கொண்டுள்ளார். மூன்று ...

மேலும்..

பெருந்தெருக்கள் மற்றும் வீதி அபிவிருத்தி அமைச்சினால் குறைநிரப்பு பிரேரணை சமர்ப்பிப்பு!

பெருந்தெருக்கள் மற்றும் வீதி அபிவிருத்தி அமைச்சினால் 65,000 மில்லியன் ரூபாயிற்கான குறைநிரப்பு பிரேரணையொன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்த பிரேரணை நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வின்போது சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. சபை முதல்வர் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல சமர்ப்பித்த குறைநிரப்பு பிரேரணையில் அதிவேக வீதி அபிவிருத்திப் பணிகளுக்காக 51,131 ...

மேலும்..

மரண தண்டனை: ஜனாதிபதிக்கு நீதித்துறை அதிகாரம் இல்லை என்கின்றது பொதுஜன பெரமுன

ஆயுள் தண்டனை வழங்கப்பட்ட பலர் சிறையில் இருக்கின்றபோதும் நான்கு குற்றவாளிகளை தூக்கிலிடுவதற்கான நீதித்துறை அதிகாரம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு இல்லை என பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது. போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் ஆயுள் தண்டனை அனுபவித்து வருவதாகவும், அதில் மரண தண்டனைக்காக ...

மேலும்..

கொழும்பை அண்மித்த பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு அவசர எச்சரிக்கை!

கொழும்பின் சில பகுதிகளுக்கு  24 மணித்தியாலங்களுக்கு குறைந்த அழுத்தத்துடன் நீர் விநியோகிக்கப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. அதற்கமைய இன்று (புதன்கிழமை) காலை 9 மணி முதல் நாளை காலை 9 மணிவரை இந்த நடவடிக்கை அமுல்படுத்தப்படவுள்ளது. இலங்கை காணி மீட்பு மற்றும் ...

மேலும்..

யாழ். தீவக பகுதியில் சஞ்சரிக்கும் அழகிய வெளிநாட்டு பறவைகள்!

யாழ். தீவக பகுதியில் தற்போது ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றத்தின் காரணமாக வெளிநாட்டு பறவை இனங்கள் சஞ்சரிப்பதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். ஊர்காவற்துறை, அல்லைப்பிட்டி, சாட்டி, வேலணை, மண்டைதீவு ஆகிய பிரதேசங்களில் உள்ள நீர் நிலைகளை நாடி இந்த வெளிநாட்டு பறவை இனங்கள் ...

மேலும்..

தேசிய பாதுகாப்பு ஆலோசனை சபையை நிறுவினார் மைத்திரி

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தேசிய பாதுகாப்பு ஆலோசனை சபை ஒன்றை நியமித்துள்ளார். முன்னாள் அமைச்சரான கலாநிதி சரத் அமுனுகமவின் தலைமையில் இந்தக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆலோசனைக் குழுவில், ஜனாதிபதி சட்டவாளர்களான காலிங்க இந்திரதிஸ்ஸ, நைஜெல் ஹட்ச், சட்டவாளர் ஜாவிட் யூசுப், கலாநிதி ...

மேலும்..

மஹிந்தவை பதவி விலக வேண்டாம் என்கின்றார் பிரதமர் ரணில்

அடுத்து நடைபெறவுள்ள தேர்தல்களுக்கு அவரது சேவைகள் தேவைப்படுவதால் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரியவை பதவி விலக வேண்டாம் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க கோரிக்கை விடுத்துள்ளார். நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வுக்கு முன்னர் ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்ற வளாகத்தில், தேர்தல் ...

மேலும்..

ருஹுணு பல்கலையின் கல்விசாரா ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு!

ருஹுணு பல்கலைக்கழகத்தின் கல்விசாரா ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பை முன்னெடுத்துள்ளனர். பல்கலைக்கழக நிர்வாகக் கட்டடத்தை மறித்து நின்ற மாணவர்கள் சிலர் கல்விசாரா ஊழியர்கள் மீது மேற்கொண்ட தாக்குதலுக்கு எதிர்ப்புத் தெரிவித்தே இந்தப் பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த விடயம் தொடர்பாக இன்று (புதன்கிழமை) பீடாதிபதிகளுடன் கலந்துரையாடி பல்கலைக்கழகத்தைத் ...

மேலும்..

தொடரும் ராஜபக்ஷ மீதான குற்றச்சாட்டுக்கள் – கீத் மீதான தாக்குதலுடனும் தொடர்பு!

ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தப்பட்டு தாக்கப்பட்ட வழக்கில் முன்னாள் இராணுவப் புலனாய்வு அதிகாரி லலித் ராஜபக்ஷவையும் சந்தேக நபராக இணைத்துக்கொள்ளுமாறு குற்றப்புலனாய்வு விசாரணை பிரிவுக்கு சட்டமா அதிபர் அறிவுறுத்தியுள்ளார். ஊடகவியலாளர் உபாலி தென்னக்கோன் தாக்கப்பட்ட வழக்கை விசாரித்து வந்த குற்றப்புலனாய்வு விசாரணைப் பிரிவினர், ...

மேலும்..

அரசாங்கத்திற்கு எதிரான பிரேரணை குறித்து விவாதங்கள் ஆரம்பம்!

மக்கள் விடுதலை முன்னணியினால் கொண்டுவரப்பட்டுள்ள அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. அதற்கமைய குறித்த விவாதங்கள் இன்றும் (புதன்கிழமை) நாளையும் இடம்பெறவுள்ளதோடு,  அதனைத் தொடர்ந்து நாளை மாலை வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது. நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவளிப்பதற்கு தமது உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளதாக, ஒன்றிணைந்த எதிர்க்கட்சி தெரிவித்துள்ளது. நம்பிக்கையில்லாப் ...

மேலும்..

சாமிமலை நகரத்திலிருந்து மின்னா தோட்டம் வரை செல்லும் பாதையை “கொங்கிரீட்” போட நிதி ஒதுக்கீடு

சாமிமலை நகரத்திலிருந்து மின்னா தோட்டம் வரை செல்லும் பாதையை “கொங்கிரீட்” போட்டு செப்பனிடுவதற்கு மலைநாட்டு புதிய கிராமங்கள், உடகட்டமைப்பு வசதிகள் மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சின் ஊடாக 1 கோடியே 45 இலட்ச ரூபா நிதியும், பாராளுமன்ற உறுப்பினர் எம். திலகராஜின் நிதியிலிருந்து 80 இலட்ச ரூபாவுமாக மொத்தம் 2 கோடியே 25 இலட்ச ரூபா  ...

மேலும்..

மீண்டும் கூடுகிறது தெரிவுக்குழு – முன்னிலையாவாரா தயாசிறி?

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளும் நாடாளுமன்ற தெரிவுக்குழு மீண்டும் கூடுகின்றது. அதற்கமைய இன்று (புதன்கிழமை) பிற்பகல் 2 மணியளவில் தெரிவுக்குழுவில் சாட்சியங்களைப் பதிவுசெய்யும் நடவடிக்கைகள் ஆரம்பமாகவுள்ளன. இன்றைய அமர்வில் சாட்சியங்கள் வழங்குவதற்காக சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர, கிழக்கு ...

மேலும்..

வீதியை மறித்து போடப்பட்ட கற்களால் பொதுமக்களுக்கு அசௌகரியம்

பாறுக் ஷிஹான் வீதியை மறித்து போடப்பட்ட கற்களால் பொதுமக்களுக்கு அசௌகரியம் ஏற்பட்டுள்ளதுடன் இன்னும் எதுவித  நடவடிக்கை மேற்கொள்ளவில்லை. செவ்வாய்க்கிழமை(9) காலை 10.30 மணி முதல் புதன் கிழமை (10) வரை கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நற்பிட்டிமுனை மதிரிஸா வீதியில் கம்பெரலிய அபிவிருத்தி திட்டம் என்ற ...

மேலும்..

சுயநலத்திற்காக எந்த முடிவும் எடுத்தது இல்லை! தாயகத்தில் செய்தியாளர்களிடம் வைகோ

என் உயிரினும்மேலான இரத்த அணுக்களான, இலட்சோபலட்சம் கழகக் கண்மணிகள், மாநிலங்கள் அவைத் தேர்தலுக்கு என்னுடைய வேட்புமனு ஏற்றுக்கொள்ளப்பட்டது என்ற செய்தியால் மகிழ்ச்சி அடைந்து இருக்கின்றார்கள். கழகத்தின் அவைத்தலைவர் ஆருயிர் அண்ணன் திருப்பூர் துரைசாமி முதல், கன்னியாகுமரியின் கடைகோடியில் இருக்கின்ற கழகக் கண்மணி வரை, தாங்களே நாடாளுமன்ற உறுப்பினர் ...

மேலும்..