July 11, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டவை

இந்த அரசைக் கவிழ்த்துவிட்டு அடுத்து நாம் என்ன செய்வது? – சிந்திக்க வேண்டும் என்கிறார் சம்பந்தன்

சிந்திக்க வேண்டும் என்கிறார் சம்பந்தன்  "இந்த அரசுக்கு நாங்கள் ஆதரவு வழங்குவதை எமது மக்கள் விரும்பவில்லை. அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிக்குமாறு கோரி திருகோணமலையில் எனது வீட்டின் முன்னாள் இன்று மக்கள் ஆர்ப்பாட்டம் செய்துள்ளனர். ஆனால், இந்த அரசைக் கவிழ்த்துவிட்டு ...

மேலும்..

அட்டாளைச்சேனை அஸ்ரப் நகரில் குப்பைகளை உண்ண வரும் யானைகளை கட்டுப்படுத்த துரித நடவடிக்கை

பாறுக் ஷிஹான் அட்டாளைச்சேனை அஸ்ரப் நகரில்  குப்பைகளை உண்ண வரும் யானைகளை கட்டுப்படுத்த துரித  நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பிரதேச சபை தவிசாளர்  ஏ.எல். அமானுல்லா தெரிவித்தார். அஸ்ரப் நகர் பள்ளக்காட்டுப் பிரதேசத்தில்  கொட்டப்படும்  குப்பைகளை தினந்தோறும் 50க்கும் மேற்பட்ட யானைகள் வருகை தருவதுடன் அருகில் ...

மேலும்..

ஐ.தே.கவினருக்கு ரணிலின் உத்தரவு

ஐக்கிய தேசியக் கட்சியின் சகல நாடாளுமன்ற உறுப்பினர்களும், இன்று மாலை நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொள்ள வேண்டும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உத்தரவிட்டுள்ளார். அரசாங்கத்துக்கு எதிராக, மக்கள் விடுதலை முன்னணியால் கொண்டுவரப்பட்டுள்ள, நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான வாக்கெடுப்பு இன்று மாலை நாடாளுமன்றத்தில் இடம்பெறவுள்ள ...

மேலும்..

சட்டவிரோதமான முறையில் மாணிக்கல் அகழ்வில் ஈடுபட்ட 07 பேர் பொகவந்தலாவை பொலிஸாரினால் கைது

பொகவந்தலாவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொகவந்தலா டின்சின் மேல் பிரிவு பகுதியில் சட்டவிரோதமான முறையில் மாணிக்கல் அகழ்வில் ஈடுபட்ட 07 பேர் இன்று (12) அதிகாலை மூன்று மணியளவில் கைது செய்யப்பட்டதாக பொகவந்தலாவை பொலிஸார் தெரிவித்தனர். நீண்ட காலமாக சுற்றுப்புற சூழலுக்கு தீங்கேட்படும்; வகையில் ...

மேலும்..

புளியங்குளம் பொலிசாரின் திடீர் சுற்றிவளைப்பு: 3வாகனங்களுடன் 9பேர் கைது!

வவுனியா, புளியங்குளம் பகுதியில் கடந்த மூன்று தினங்களாக மரக்கடத்தலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு எதிராக பொலிசார் மேற்கொண்ட விஷேட நடவடிக்கையின் போது 3வாகனங்களுடன் 9பேரை பொலிசார் கைது செய்துள்ளதாகவும் அவர்களிடமிருந்து 20 இலட்சம் ரூபா பெறுமதியான மரக்குற்றிகளையும் கைப்பற்றப்பட்டுள்ளதாக புளியங்குளம் பொலிசார் தெரிவித்துள்ளனர். வன்னிப்பிராந்திய பிரதிப் ...

மேலும்..

தேற்றாத்தீவு பள்ளியங் கட்டு கண்ணகி அம்மன் மஹா கும்பாபிஷேகம்

தேற்றாத்தீவு பள்ளியங்கட்டு கண்ணகி அம்மன் மஹா கும்பாபிஷேகத்திற்கான கர்மாரம்பம் கடந்த செவ்வாய்கிழமை 09.07.2019 அன்று ஆரம்பமாகியது அதனை தொடர்ந்து பால்காப்பு சார்த்தும் நிகழ்வு 10.07.2019 புதன் கிழமை இடம் பெற்றது. அந்த வகையில் தேற்றாத்தீவு பள்ளியங்கட்டு கண்ணகி அம்மனனுக்கு புனராவர்தன உலோகபந்தன மஹா ...

மேலும்..

கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்திற்கு கணக்காளர் நியமனம்- பட்டாசுகளால் அதிர்ந்தது கல்முனை

பாறுக் ஷிஹான் கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்துக்கு அதிகார பூர்வமாக கணக்காளர் நியமிக்கப்பட்டுள்ளதாக வெளிவந்த செய்தியை அறிந்த   இளைஞர்கள் வீதியில் வெடி கொழுத்தி  ஆராவாரம் செய்தனர்.வியாழக்கிழமை(11) இரவு 9 மணியளவில் கல்முனை மாநகர சபை உறுப்பினர் சந்திரசேகரம் ராஜன் தலைமையில் ...

மேலும்..

கூட்டமைப்புக்கு அரசு இலஞ்சம்; அதனால் தோற்றது பிரேரணை! – இப்படிக் கூறுகின்றார் அநுரகுமார

"எம்மால் அரசுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு இறுதி நேரத்தில் அரசு வழங்கிய இலஞ்சத்தால்  தோல்வியடைந்தது." - இவ்வாறு மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், "எம்முடன் எதிரணி வரிசையில் அமர்ந்திருக்கும் ...

மேலும்..

த.தே.கூட்டமைப்பு அற்ப சலுகைக்காக அரசாங்கத்துடன் நிற்கிறார்கள்: சிவசக்தி ஆனந்தன்

சமஷ்டித் தீர்வைப் பெற்றுக்கொடுப்பதாகக் கூறி மக்களின் ஆணையைப் பெற்றுக்கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கம்பெரெலிய, பனை அபிவிருத்தி போன்ற அற்பசொற்ப சலுகைகளைப் பெற்று இந்த அரசாங்கத்திற்கு முண்டுகொடுத்து வருகின்றது என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் நேற்று ...

மேலும்..

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கு கணக்காளர் நியமனம் ! பட்டாசுகளால் முழங்குகின்றது கல்முனை !

நம்பிக்கையில்லா பிரேரணைக்கு எதிர்த்து வாக்களித்த தமிழ்தேசிய கூட்டமைப்பின் கோரிக்கைகளில் ஒன்றான கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கு நிரந்தர கணக்காளர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். இத் தகவலை தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் க.கோடீஸ்வரன் உறுதிப்படுத்தியுள்ளார். இந்தகவலை அறிந்த கல்முனை வாழ் தமிழர்கள் நகரமெங்கும் பட்டாசுகளை கொழுத்தி ...

மேலும்..

அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தோல்வி!

அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தோல்வியடைந்தது. அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக 92 வாக்குகளும் எதிராக 119 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன. மக்கள் விடுதலை முன்னணியினால் இந்த நம்பிக்கையில்லா பிரேரணை பாராளுமன்றத்திற்கு சமர்பிக்கப்பட்டிருந்தது. இந்த பிரேரணை தொடர்பில் நேற்றும் இன்றும் சபையில் விவாதங்கள் இடம்பெற்றன. ஏப்ரல் 21 ...

மேலும்..

கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தரமுயர்த்தப்படும் – ரணில்

கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தரமுயர்த்தப்படும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சம்பந்தனுக்கு வாக்குறுதி அணித்தார் என அனுர குமார திஸாநாயக்க குறிப்பிட்டார். இன்று மாலை நம்பிக்கையில்லா பிரேரணை தோல்வியடைந்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டபோதே அவர் இதனை குறிப்பிட்டார். இன்று மாலை பிரதமர் ...

மேலும்..

புதிய கூட்டணியில் இணையுமாறு மனோ தரப்பிற்கு ஆறுமுகன் அழைப்பு!

தமிழ் முற்போக்கு கூட்டணி மட்டுமல்லாது தமிழ் மக்களின் நலனைக்கருதி செயற்படும் கட்சிகளுடன் இணைந்து செயற்படுவதற்கு தயாராகவே உள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்தார். எனவே விரும்பினால் தமிழ் முற்போக்கு கூட்டணி தம்மோடு இணையலாம் என அவர் அழைப்பு விடுத்துள்ளார். மலையகம், ...

மேலும்..

அரசாங்கத்துடனான உறவை ஜே.வி.பி. முறித்துக்கொள்ள வேண்டும் – பெரமுன கோரிக்கை

ஐக்கிய தேசிய முன்னணியுடன் இருக்கும் உறவை மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) முறையாக முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என பொதுஜன பெரமுன கோரிக்கை விடுத்துள்ளது. மக்கள் விடுதலை முன்ணனி கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் அரசாங்கத்திற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றது. இந்நிலையில் ...

மேலும்..

ஈஸ்டர் தாக்குதல்கள் – அதிகரிக்கும் உயிரிழப்புகள்!

மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் ஈஸ்டர் தினத்தன்று மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் காயமடைந்த பெண்ணொருவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார். மட்டக்களப்பு கூழாவடியைச் சேர்ந்த கருணாகரன் உமாசங்கரி என்ற பெண்ணே இன்று (வியாழக்கிழமை) இவ்வாறு உயிரிழந்துள்ளார். இவர் மட்டக்களப்பு வைத்தியசாலையிலிருந்து மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு ...

மேலும்..

‘அம்மா என்றழைக்க என் மகனை திருப்பிக்கொடு’ – மன்னாரில் உறவுகள் போராட்டம்!

காணாமலாக்கப்பட்ட உறவுகளுக்கு நீதி கோரி வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சர்வதேசத்திற்கு அலுத்தத்தை கொடுக்கும் வகையில் கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்திருந்தனர். இந்த போராட்டம் இன்று (வியாழக்கிழமை) காலை 10.30 மணியளவில் மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக முன்னெடுக்கப்பட்டது. வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் மற்றும் மன்னார் பிரஜைகள் ...

மேலும்..

போராட்டம் காரணமாக இரா. சம்பந்தனின் வீட்டுக்கு பொலிஸ் பாதுகாப்பு

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனின் வீட்டை முற்றுகையிட்டு ஈ.பி.ஆர்.எல்.எப். உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்கள் சிலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அரசாங்கத்திற்கு எதிராகக் கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரரணைக்கு தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் ஆதரவு வழங்குமாறு வலியுறுத்தியே திருகோணமலையில் உள்ள அவரது வீட்டின் முன்பாக குறித்த போராட்டம் ...

மேலும்..

கொழும்பில் உள்ள மக்களுக்கு முக்கிய அறிவித்தல்

கொழும்பு உள்ளிட்ட சில பிரதேசங்களுக்கு இன்று இரவு 8 மணிவரை குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம் இடம்பெறுவதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது. அதன்படி கொழும்பு, தெஹிவளை, கல்கிஸ்ஸ, கோட்டே, கடுவல, மாநகர சபை எல்லை பகுதிகளுக்கும் மகரகம, பொரலஸ்கமுவ, ...

மேலும்..

புதிய தேசிய கூட்டணி ஆறுமுகன் தொண்டமான் தலைமையில் உதயம்!

மலையகம், வடக்கு மற்றும் மேல் மாகாணம் அடங்களாக புதிய தேசிய கூட்டணி அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. இதன்போது இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் ஆறுமுகன் தொண்டமான் தலைமையில் இந்த கூட்டணி அமைப்பதற்கான ஒப்பந்தங்களும் கைச்சாத்திடப்பட்டன. இந்த நிகழ்வு இன்று (வியாழக்கிழமை) கொட்டகலை தொண்டமான் தொழிற்பயிற்சி ...

மேலும்..

நம்பிக்கையில்லாத் தீர்மானத்திற்கு சுதந்திரக் கட்சி ஆதரவு

அரசாங்கத்துக்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானத்திற்கு சுதந்திரக் கட்சி ஆதரவு வழங்கவுள்ளது. சுதந்திர கட்சியின் தலைமையகத்தில் தற்போது நடைபெற்றுவரும் ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீர இதனைத் தெரிவித்துள்ளார். அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லாத் ...

மேலும்..

வைத்தியர் ஷாபிக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு!

குருநாகல் போதனா வைத்தியசாலையின் வைத்தியர் ஷாபிக்கு எதிரான வழக்கு இன்று பகல் 1 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. முறையற்ற விதத்தில் சொத்து சேகரிப்பு, சிங்களப் பெண்களுக்கு கருத்தடை சத்திர சிகிச்சை செய்தமை உள்ளிட்ட அவர் மீது முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பான வழக்கு விசாரணைகளுக்காக ...

மேலும்..

யாழில் ‘ஸ்மார்ட் ஸ்ரீலங்கா’ அலுவலகத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு!

இளைஞர் யுவதிகளுக்கு வேலை வாய்ப்பை வழங்கும் ‘ஸ்மார்ட் ஸ்ரீலங்கா’ அலுவலகத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு  யாழில் இடம்பெற்றது. யாழ்ப்பாணம் பழைய பூங்காவில் புதிதாக அமைக்கப்படவுள்ள இந்த அலுவலகத்திற்கான அடிக்கல்லை வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் இன்று (வியாழக்கிழமை) காலை நாட்டி வைத்தார். இந்து, ...

மேலும்..

ஐரோப்பிய ஒன்றியத்தின் பயங்கரவாத எதிர்ப்பு இணைப்பாளர் இலங்கைக்கு விஜயம்!

ஐரோப்பிய ஒன்றியத்தின் பயங்கரவாத எதிர்ப்பு இணைப்பாளர் கில்ஸ் டி கெர்சோவ் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். அதன்படி அவர் இன்று (வியாழக்கிழமை) இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் கொழும்பு பணியகம் தெரிவித்துள்ளது. அத்தோடு, இந்த விஜயத்தினையடுத்து அவர் மாலைதீவிற்கும் பயணம் செய்யவுள்ளார். இன்று தொடக்கம் ...

மேலும்..

தாஜ் சமுத்ராவில் ஏன் தாக்குதல் நடத்தப்படவில்லை? – ஆராயும் தெரிவுக்குழு

கொழும்பு – தாஜ் சமுத்ரா ஹோட்டலில் குண்டை வெடிக்க வைக்கும் திட்டத்தை பயங்கரவாதிகள் ஏன் கைவிட்டனர் என்பது தொடர்பாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக நாடாளுமன்றத் தெரிவுக்குழு தெரிவித்துள்ளது. அதற்கமைய குண்டுத் தாக்குதல்கள் இடம்பெற்ற தினத்தில், தாஜ் சமுத்ரா ஹோட்டலில் தங்கியிருந்தவர்களின் பெயர்கள் அடங்கிய ...

மேலும்..

ஜனாதிபதி தேர்தலில் நிபந்தனையற்ற ஆதரவை தமிழ் பிரதிநிதிகள் வழங்கக்கூடாது – சுரேஸ்

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் எந்தவொரு கட்சிக்கும் நிபந்தனையற்ற ஆதரவை தமிழ் பிரதிநிதிகள் வழங்குவது, தமிழ் மக்களுக்கு எந்தவிதமான அனுகூலங்களையும் வழங்காதென ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். யாழில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் ...

மேலும்..

விசாரணைக்கு வருகிறது வைத்தியர் ஷாபிக்கு எதிரான வழக்கு!

வைத்தியர் ஷாபிக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பான வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. குறித்த வழக்கு இன்று (வியாழக்கிழமை) குருநாகல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. இதன்போது தாய்மார்களின் முறைப்பாடுகள் குறித்து விஷேட வைத்தியர்களின் ஆலோசனைகளுடன் கூடிய அறிக்கை ஒன்று நீதிமன்றத்தில் சமர்பிக்கப்படவுள்ளது. இதேவேளை நேற்று பல்வேறு அமைப்புக்கள் ...

மேலும்..

10 வருடங்களுக்கு பின்னர் மீன்பிடியில் ஈடுபடும் தமிழ் மீனவர்கள்!

மன்னார் – மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட ஈச்சளவாக்கை மற்றும் சன்னார் பகுதிகளில் பல வருடங்களின் பின்னர் தமிழ் மீனவர்கள் நன்னீர் மீன்பிடியில் ஈடுபட்டுள்ளனர். குறித்த மீனவர்கள் நேற்று (புதன்கிழமை) முதல் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். குறித்த பகுதிகளில் நன்னீர் மீன்பிடியில் ...

மேலும்..

கைவிடாதீர் கல்முனை செயலகத்தை கூட்டமைப்புக்கு பறக்கும் குறுந்தகவல்!

அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான வாக்கெடுப்பு இன்று இடம்பெறவுள்ள நிலையில், தமிழ் தேசிய கூட்டமைப்பின் எம்.பிக்களிற்கு கிழக்கிலிருந்து குறுந்தகவல்கள் கணிசமாக அனுப்பப்பட்டு வருகிறது. கல்முனை பிரதேச செயலகத்தை தரமுயர்த்தாவிட்டால் நம்பிக்கையில்லா பிரேரணைக்கு எதிராக வாக்களித்து, ரணில் அரசாங்கத்தை பாதுகாக்க வேண்டாம் என வலியுறுத்தி ...

மேலும்..