July 13, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டவை

தெரிவுக்குழுவின் சாட்சியங்களை இரகசியமாக பெற தீர்மானம்!

எதிர்வரும் 24ஆம் திகதி புலனாய்வுத்துறை அதிகாரிகளின் சாட்சிப் பதிவுகளை இரகசியமான முறையில் மேற்கொள்வதற்கு தாக்குதல் குறித்து ஆராயும் நாடாளுமன்றத் தெரிவுக்குழு தீர்மானித்துள்ளது. இந்த விடயம் குறித்து விசேட வேலைத்திட்டமொன்று தற்போது தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் அது குறித்த அமர்வை அறிக்கையிடுவதற்கு ஊடகங்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்படமாட்டாது என ...

மேலும்..

முல்லைத்தீவில் விபத்து – ஒருவர் உயிரிழப்பு இராணுவ வீரர்கள் 8 பேர் காயம்

முல்லைத்தீவு – கேப்பாப்புலவில் சற்றுமுன்னர் இடம்பெற்ற விபத்தில் இராணுவ சிப்பாய் ஒருவர் உயிரிழந்துள்ளார். அத்தோடு இராணுவ வீரர்கள் 8 பேர் காயமடைந்துள்ளனர். இராணுவ முகாம் அமைந்துள்ள பகுதியின் வீதியின் வளைவு ஒன்றில் வேகக்கட்டுப்பாட்டை இழந்து கெப் ரக வாகனம் விபத்துக்குள்ளானதில் இந்த அனர்த்தம் ...

மேலும்..

மழையுடனான காலநிலை நீடிக்கும் – வளிமண்டலவியல் திணைக்களம்

நாடு முழுவதும் தற்போது காணப்படும் மழையுடனான காலநிலை அடுத்த சில நாட்களுக்கும் தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. குறிப்பாக சப்ரகமுவ, மத்திய, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம் அதிகளவில் ...

மேலும்..

ஜனாதிபதித் தேர்தலில் சிறுபான்மையினர் கோட்டை விட்டுவிடக்கூடாது – அமீர் அலி

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் எனும் குதிரைப் பந்தயத்தில் சிறுபான்மையினராகிய நாம் கோட்டை விட்டுவிடக்கூடாது என முன்னாள் கால்நடை அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ். அமீர் அலி தெரிவித்தார். ஏறாவூர் ஓட்டுப்பள்ளி பிரதேசத்தில் வாழ்வாதாரத் தொழிலை மேற்கொள்ளும் முகமாக யுவதிகளுக்கான தையல் இயந்திரம் வழங்கும் ...

மேலும்..

ஜனாதிபதி ஆணைக்குழுவின் கால எல்லை நீடிப்பு!

அரச நிறுவனங்களில் இடம்பெறும் மோசடிகள் குறித்து ஆராய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி ஆணைக்குழுவின் கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக ஆணைக்குழுவின் கால எல்லை செப்டெம்பர் மாதம் 30ஆம் திகதி வரையில் நீடிக்கப்பட்டிருப்பதாக ஜனாதிபதியின் செயலாளர் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஆணைக்குழுவின் கால எல்லை இம்மாதம் 18ஆம் திகதியுடன் ...

மேலும்..

காணாமல் ஆக்கப்பட்ட மகனை 30 வருடங்களாக தேடியலைந்த தாய் மரணம்

காணாமல் ஆக்கப்பட்ட தனது மகனைத் தேடியலைந்த தாயார் ஒருவர், மகனைக் காணாமலேயே மரணமடைந்துள்ளார். 1989ஆம் ஆண்டு எருக்கலம்பிட்டி பகுதியில் வைத்து காணாமல் ஆக்கப்பட்ட வேலுப்பிள்ளை தியாகராஜா (ரஞ்சன்) என்ற இளைஞரின் தாயாரான வேலுப்பிள்ளை வியாழம்மா என்பவரே உயிரிழந்தார். முதுமை காரணமாக இவர் உயிரிழந்தார். இவர் ...

மேலும்..

இலங்கையின் வரலாற்றை மாற்றியமைக்கப் போகும் முஸ்லிம்கள்! கூட்டாக களமிறக்க தயார்

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலின் போது முஸ்லிம் வேட்பாளர் ஒருவரை களமிறக்குவது குறித்து தீவிரமாக ஆராயப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. பிரதான அரசியல் கட்சிகளை பிரதிநிதித்துவம் செய்யாத, முஸ்லிம் மக்களை பிரதிநிதித்துவம் செய்யும் வகையிலான வேட்பாளர் ஒருவர் தேர்தலில் களமிறக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அனைத்து முஸ்லிம் அரசியல் ...

மேலும்..

நம்பிக்கையில்லா பிரேரணைக்கு எதிராக த.தே.கூட்டமைப்பு ஏன் வாக்களித்தது? நாமலின் பதிவு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனின் கருத்து வேடிக்கையானது என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பான வாக்கெடுப்பு கடந்த வியாழக்கிழமை இடம்பெற்றிருந்தது. இதன்போது குறித்த நம்பிக்கையில்லா பிரேரணை தோற்கடிக்கப்பட்டிருந்தது. இது தொடர்பில் தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் ...

மேலும்..

எதிர்காலத்தில் எழக்கூடிய காணி பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது – பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவிப்பு

நாவலப்பிட்டிய மக்களுக்கு இன்று காணி உறுதி பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த காணியில் வாழ்வதற்கு தொழில் செய்வதற்கான உரிமை உள்ளது என்பது இந்த உறுதி பத்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது. இதனூடாக எதிர்காலத்தில் எழக்கூடிய காணி பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ...

மேலும்..

அரசாங்கத்தை விமர்சித்தவர்களே அரசாங்கத்தால் வழங்கப்படும் சலுகைகளை பெற்றுக் கொள்கின்றனர் – கயந்த கருணாதிலக்க

(க.கிஷாந்தன்) முன்னைய அரசாங்கம் பச்சை, நீலம் ஆகிய நிற கட்சிகளை முன்னிலைப்படுத்தியே சலுகைகளை வழங்கியது. ஆனால் இன்று அந்த நிலைமை முற்றிலுமாக மாறியுள்ளது. இன்று நாட்டின் பிரஜை ஒருவருக்கு தேவையான அனைத்து சேவைகளையும் அரசாங்கம் செய்து வருகின்றது என காணி மற்றும் பாராளுமன்ற ...

மேலும்..

மகிந்த அணியினர் பிரபாகரனின் செயற்பாடுகளின் மூலம் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் – அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவிப்பு

(க.கிஷாந்தன்) ஆட்சி செய்ய முடியாது என கூறியவர்கள் இன்று மீண்டும் ஆட்சியை கைப்பற்ற முயற்சிக்கின்றனர். 2015ல் இருந்த அரசாங்கத்திற்கு ஆட்சி செய்ய மேலும் கால அவகாசம் இருந்தது. ஏன் அவர்கள் அதனை செய்யவில்லை. அவர்கள் அவ்வாறு செய்தாலும், நாம் அவ்வாறு செய்யப்போவதில்லை என ...

மேலும்..

750 மில்லியன் ரூபா செலவில் குறிஞ்சாக்கேணி பாலத்துக்கான அங்குரார்ப்பணம் வைபவம்- பிரதமர் ரணில் பங்கேற்பு

கிண்ணியா பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட குறிஞ்சாக்கேணி கடல் மேல் பாலத்தின் நிர்மாண நடவடிக்கைகளின் ஆரம்ப அடிக்கல் நடும் வைபவம் நாளை (14) ஞாயிற்றுக் கிழமை இடம் பெறவுள்ளது. திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தேசிய அமைப்பாளருமான ...

மேலும்..

வட்டக்கச்சியின் மாயவனூர் சிவன் வீதியின் புனரமைப்பு பணியினை ஆரம்பித்து வைத்தார் சிறீதரன் எம்.பி

வட்டக்கச்சியின் மாயவனூர் சிவன் வீதியின் புனரமைப்பு பணியினை தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் இன்று ஆரம்பித்து வைத்தார். நாடாளுமன்ற உறுப்பினரின் விசேடநிதி ஒதுக்கீட்டின் மூலம் இவ்வீதி புனரமைப்பு செய்யப்படவுள்ளது. குறித்த வீதிக்கு நாடாளுமன்ற உறுப்பினரால் 1கோடியே 5இலட்சம் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. குறித்த ...

மேலும்..

கந்தளாய் பொது வைத்தியசாலைக்கு திருகோணமலை மனித உரிமை ஆணைக்குழுவினர் விஜயம்

கந்தளாய் பொது வைத்தியசாலையில் முஸ்லிம் பெண்களுக்கு ஏற்பட்டு வருகின்ற அசௌகரியம் தொடர்பாக கந்தளாய் பகுதியிலுள்ள பொது மக்கள் மனித உரிமை ஆணைக்குழுவில் மேற்கொண்ட முறைப்பாட்டுக்கமைய இன்றைய தினம் (13) சென்று குறித்த விடயம் தொடர்பாக ஆராய்ந்துள்ளார்கள். பொது மக்கள் மேற்கொண்ட முறைப்பாடுகள் தொடர்பாக ...

மேலும்..

ஆட்சியாளரைத் தீர்மானிக்கும் சக்தியாக தமிழ்க் கூட்டமைப்பு!

மீண்டும் நம்பிக்கையில்லாப் பிரேரணையை முறியடித்து தனது அரசின் ஆட்சியைத் தக்க வைத்துக்கொண்டுள்ளார் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க. தற்போதுள்ள அரசியல் சூழ்நிலையில் உடனடியாக வரக்கூடியது ஜனாதிபதித் தேர்தலே. பெரும்பாலும் அது இந்த வருட இறுதியில் நடக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இன்னும் நான்கு, ஐந்து மாதங்களுக்குள் ...

மேலும்..

வவுனியாவில் கடும் காற்று: 10 வீடுகள் சேதம்

வவுனியாவில் வீசிய கடும்காற்று காரணமாக 10 வீடுகள் சேதமடைந்துள்ளதாக மாவட்ட அனர்த்த நிவாரண சேவைகள் நிலையம் தெரிவித்துள்ளது. வவுனியாவின் பல பகுதிகளிலும் நேற்று மாலை கடும் காற்று வீசியிருந்தது. இதன்காரணமாக வவுனியா பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பம்பைமடு பகுதியில் 5 வீடுகளும், மாளிகை பகுதியில் ...

மேலும்..

வவுனியாவில் பல கிராமங்களிற்கு அமைச்சர் மனோ விஜயம்

அமைச்சர் மனோகணேசன் இன்றையதினம் வவுனியாவில் பல கிராமங்களுக்குச் சென்று மக்கள் சந்திப்புகளை மேற்கொண்டார். இதன்போது தமது அமைச்சின் ஊடாக ஒதுக்கப்பட்ட நிதியினை மக்களின் தேவைகளை அறிந்து பகிர்ந்தளிக்கும் முகமாகவே இந்த விஜயம் மேற்கொள்ளப்பட்டது. குறித்த விஜயத்தின் போது வவுனியா சிவபுரம் , கற்பகபுரம், புதிய ...

மேலும்..

மருதமுனை ஹியூமன் லிங்க் மாற்று திறனாளிகளுக்கான வளப்படுத்தல் நிலைய கலாச்சார விழா

மருதமுனை ஹியூமன் லிங்க் மாற்று திறனாளிகளுக்கான வளப்படுத்தல் நிலைய 12ஆம் ஆண்டு நிறைவை முன்னிட்டு ஒன்றிணைந்த கலாச்சார மற்றும் விளையாட்டு விழா ஹியூமன் லிங்க் தவிசாளர் எஸ்.எல்.அஜ்மல் கானின் தலைமையில் சனிக்கிழமை(13) முற்பகல் ஹியூமன் லிங்க் வளாகத்தில் நடைபெற்றது. இவ்விழாவின் பிரதம அதிதியாக ...

மேலும்..

ரணில் நாளை யாழ். விஜயம்!

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, நாளை ஞாயிற்றுக்கிழமை மாலை யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்கின்றார். நாளை இரவு ஐக்கிய தேசியக் கட்சியினரை யாழ்ப்பாணத்திலுள்ள நட்சத்திர விடுதி ஒன்றில் அவர் சந்திக்கின்றார். அத்துடன் மறுநாள் திங்கட்கிழமை சுன்னாகம் - கந்தரோடை ஸ்கந்தவரோதயாக் கல்லூரியின் 125ஆவது ஆண்டு விழாவில் பிரதம ...

மேலும்..

போதைப்பொருள் கடத்தல் – ஈரானியர்கள் 9 பேருக்கு விளக்கமறியல்!

போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட ஈரானியர்கள் 09 பேரையும் எதிர்வரும் 19ஆம் திகதி வரை தடுத்து வைத்து விசாரணை செய்வதற்கு போதைப்பொருள் தடுப்பு பிரிவுக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. குறித்த வழக்கு விசாரணைகள் இன்று (சனிக்கிழமை) கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் இடம்பெற்றபோதே இந்த ...

மேலும்..

ஹேமசிறி, பூஜிதவுக்கு எதிரான மனு விசாரணை ஒத்திவைப்பு!!

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்களைத் தடுக்கத் தவறினார்கள் எனக் கூறி முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் கட்டாய விடுமுறையில் ஜனாதிபதியால் அனுப்பப்பட்ட பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தர ஆகியோருக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுக்கள் மீதான விசாரணை ...

மேலும்..

ரிஷாத்துக்கு மீள அமைச்சுப் பதவியா? நம்பிக்கையில்லாப் பிரேரணை வரும் – எச்சரிக்கின்றார் ரத்தன தேரர்

"அமைச்சுப் பதவியை ரிஷாத் பதியுதீன் மீண்டும் பொறுப்பேற்கும் பட்சத்தில் அவருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்படும்." - இவ்வாறு நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்தன தேரர் எச்சரிக்கை விடுத்துள்ளார். கூட்டாகப் பதவி துறந்த முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாடு திரும்பியதும் ...

மேலும்..

சிங்கள பௌத்த நலன்களுக்குள் எமக்கான நீதி புதைக்கப்பட்டுவிட்டதா?’ – உறவுகள் ஆர்ப்பாட்டம்

வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களுக்கு நீதியைப்பெற்றுத்தர சர்வதேச சமூகத்தின் தலையீட்டை கோரி காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மட்டக்களப்பில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை மேற்கொண்டனர். மட்டக்களப்பு காந்திபூங்காவில் இன்று (சனிக்கிழமை) ஒன்றுகூடிய வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் அனைத்து மாவட்டங்களின் சங்க பிரதிநிதிகளும் இந்த போராட்டத்தில் கலந்துகொண்டனர். இதன்போது காணாமலாக்கப்பட்ட ...

மேலும்..

வீட்டுத்திட்டம் வழங்கப்படவில்லை – மக்கள் குற்றச்சாட்டு

கிளிநொச்சி பாரதிபுரம் பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீட்டுத்திட்டம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டபோதிலும் இதுவரை வழங்கப்படவில்லை என மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பாரதிபுரம் கிராம சேவையாளர் பிரிவில் இடம்பெற்ற வெள்ள அனர்த்தத்தின்போது 157இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிக்கப்பட்டிருந்தனர். இவர்களில் ...

மேலும்..

நாடு திரும்பினார் மைத்திரி!

பிரித்தானியாவிற்கு விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாடு  திரும்பியுள்ளார். அவர் இன்று (சனிக்கிழமை) காலை 10 மணியளவில் கட்டார் நாட்டிற்கு உரித்தான விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தினை வந்தடைந்துள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால தனிப்பட்ட விஜயமாக பிரித்தானியாவிற்கு சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும்..

30ஆவது வீரமக்கள் தினம் வவுனியாவில் அனுஷ்டிப்பு!

தேசிய விடுதலை போராட்டத்தில் தமது இன்னுயிரை இழந்த கழக போராளிகள் மற்றும் பொதுமக்களை நினைவு கூர்ந்து தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தால் வீரமக்கள் தினம் அனுஷ்டிக்கப்பட்டது. வவுனியா கோவில்குளத்தில் அமைந்துள்ள உமாமகேஸ்வரன் நினைவு இல்லத்தில் இன்று (சனிக்கிழமை) காலை 9 மணிக்கு இந்த ...

மேலும்..

தொண்டா முற்போக்கு கூட்டணியிடம் பாடம் கற்க வேண்டும் – வேலுகுமார்

கூட்டணி அரசியல் என்றால் என்னவென்பதை ஆறுமுகன் தொண்டமானும் அவரின் பங்காளிகளும் தமிழ் முற்போக்கு கூட்டணியிடமிருந்து கற்றுக்கொள்ளவேண்டும் என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவரும், இந்து சமய விவகார அமைச்சின் கண்காணிப்பு நாடாளுமன்ற உறுப்பினருமான வேலுகுமார் தெரிவித்தார். வவுனியா சிவபுரம் பகுதியில் நேற்று ...

மேலும்..

கிளிநொச்சியில் விபத்து – ஒருவர் உயிரிழப்பு!

கிளிநொச்சி – பூநகரி பரந்தன் வீதியில்  இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து இன்று (சனிக்கிழமை) அதிகாலை இடம்பெற்றுள்ளது. கிளிநொச்சியிலிருந்து யாழ். நோக்கி பயணித்த கப் ரக வாகனமும் யாழிலிருந்து கிளிநொச்சி நோக்கி பயணித்த ரிப்பர் வாகனமும் நேருக்கு நேர் ...

மேலும்..

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இடியுடன் கூடிய மழை!

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. குறிப்பாக மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யுமென அந்த திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (சனிக்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தொடர்பாக ...

மேலும்..

கூட்டமைப்பின் உதவியின்றி அரசாங்கத்தால் செயற்பட முடியாது – சுதந்திரக் கட்சி!

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் உதவியின்றி தற்போதைய அரசாங்கத்தால் செயற்பட முடியாதென ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர குற்றம்சாட்டியுள்ளார். ஜே.வி.பி.யினால் கொண்டுவரப்பட்ட அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு எதிராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வாக்களித்திருந்தது. இந்த விடயம் தொடர்பாக ஊடகவியலாளர்களிடம் நேற்று (வெள்ளிக்கிழமை) ...

மேலும்..

இலங்கை அமெரிக்க உறவு – உன்னிப்பாக கவனிக்கும் இந்தியா!

அமெரிக்கப் படைத்தளத்தை அமைப்பதற்கு அனுமதியளிக்கக் கூடிய, சோபா உடன்பாட்டில் கையெழுத்திடுவதற்கு, இலங்கையில் அதிகரித்து வரும் எதிர்ப்புகளை இந்தியா உன்னிப்பாக கவனித்து வருவதாக இந்திய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. இந்திய மத்திய அரசாங்கத்தின் முக்கிய அதிகாரி ஒருவரை மேற்கோள்காட்டியே அந்த ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. இந்தியாவின் ...

மேலும்..

சஹ்ரானுடன் ஆயுதப் பயிற்சி பெற்ற சந்தேகநபர் CIDயிடம் ஒப்படைப்பு!

தாக்குதலின் பிரதான சூத்திரதாரி சஹ்ரான் ஹாசிமுடன் ஆயுதப் பயிற்சி பெற்றவர் எனும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் குற்றப் புலனாய்வுப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். குறித்த சந்தேகநபர் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் தடுத்து வைக்கப்பட்டு மேலதிக விசாரணைக்கு உட்படுத்தப்படுகிறார் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ...

மேலும்..

ஆறு இலட்சம் மக்கள் வாழும் கிழக்கில் அரச ஒசுசல நிறுவனங்களே இல்லை – வியாழேந்திரன் சாடல்!

கிழக்கிலங்கையில் ஒரு அரச ஒசுசல நிறுவனங்கள்கூட அமைக்கப்படவில்லை என, நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் குற்றம் சுமத்தியுள்ளார். அத்துடன் கிழக்கில் ஒரு போதனா வைத்தியசாலை மட்டுமே உள்ளதாகவும் அவர் சாடியுள்ளார். நாடாளுமன்றில் நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இங்கு ...

மேலும்..

யுத்தத்திற்கு பின்னர் வடக்கில் அமைக்கப்படும் பிரமாண்ட விகாரை யாழில் திறப்பு!

யாழ்ப்பாணம் – நாவற்குழியில் முதல் சிங்கள குடியேற்றத்தில் அமைக்கப்பட்டுள்ள பிரமாண்டமான பௌத்த விகாரை திறந்துவைக்கப்படவுள்ளது. யுத்தத்திற்கு பின்னர் வடக்கில் அமைக்கப்படும் பிரமாண்டமான பௌத்த விகாரை இதுவாகும். இந்த விகாரையின் திறப்பு விழா இன்று (சனிக்கிழமை) இடம்பெறவுள்ளது. சம்புத்தி சுமன என பெயரிடப்பட்டுள்ள இந்த விகாரை ...

மேலும்..

வலி வடக்கில் பாதுகாப்பு படைகள் வசமிருந்த மேலுமொரு தொகுதி பொதுமக்களின் காணிகள் விடுவிப்பு

யாழ் வலிகாகம் வடக்கு பிரதேசத்தில் பாதுகாப்பு படைகளின் வசமுள்ள பொதுமக்களின் காணிகளில் 27.5 ஏக்கர் காணிகள் பொதுமக்களுக்கு மீண்டும் கையளிக்கும் நிகழ்வு கௌரவ ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களின் தலைமையில் நேற்று தெல்லிப்பளை பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது. யுத்தகாலத்தில் பாதுகாப்பு படையினரால் ...

மேலும்..

இரு நாட்களில் அசுரவேகத்தில் இடம்பெற்ற அரசியல் அதிகாரம்!

கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்திற்கு அதிகாரபூர்வமான நிரந்தரக்கணக்காளரை நியமிப்பதற்கான வேலைத்திட்டம் இருநாட்களில் அசுரவேகத்தில் நடந்தேறியிருக்கிறது. நாட்டின் பிரதமரின் நேரடிஉத்தரவின்பேரில் உள்நாட்டலுவல்கள் மாகாணசபைகள் அமைச்சும் திறைசேரியும் இணைந்து இருதினங்களுள் நிரந்தரக்கணக்காளரை நியமிப்பதற்கான அனுமதியை வழங்கியுள்ளது. உள்நாட்டலுவலகள் மாகாணசபைகள் அமைச்சின் செயலாளர் காமினி செனவிரத்ன 10ஆம் ...

மேலும்..

திருக்கேதீஸ்வரம் தொடர்பான பேச்சுவார்த்தை மன்னார் ஆயர் நாடு திரும்பும் வரை ஒத்திவைப்பு அமைச்சர் மனோ கணேசன்

திருக்கேதீஸ்வரம் ஆலய வீதி வளைவு அமைப்பது தொடர்பான சர்ச்சைக்கு தீர்வு காண்பதற்காக சனிக்கிழமை 13ம் திகதி, மன்னார் மாவட்ட செயலகத்தில், அனைத்து தரப்பினரும் கலந்துக்கொள்ளும் கலந்துரையாடல், அமைச்சர் மனோ கணேசனின் பணிப்புரையின் பேரில் மன்னார் மாவட்ட செயலாளரினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்கு இரு தரப்பு மத தலைவர்கள், ஆலய ...

மேலும்..

கிளிநொச்சி மாவட்ட விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகளுக்கும் ஆளுநருக்குமிடையில் சந்திப்பு

கிளிநொச்சி மாவட்ட விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகளுக்கும் கௌரவ ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களுக்குமிடையிலான சந்திப்பு நேற்று (11) மாலை கிளிநொச்சிமாவட்ட விவசாய பயிற்சி நிலையத்தில் இடம்பெற்றது. சிறுபோகத்தின் அறுவடை நெருங்கிவரும் காலப்பகுதியில் கிளிநொச்சி மாவட்ட விவசாயிகள் எதிர்நோக்கும் சவால்கள் மற்றும் தேவைகள் குறித்து அறிந்துகொள்ளும் பொருட்டுஆளுநர் அவர்கள் இந்த கலந்துரையாடலை ஏற்பாடு செய்திருந்தார். இதன்போது இரணைமடு குளத்தின் நீரை சரியான முறையில் விவசாயிகளால் முகாமைத்துவம் செய்ய முடிந்தமையால் வழமையாக மேற்கொள்ளும் ஏக்கர் அளவைவிட 4 மடங்குஅதிகமாக நெல் பயிரப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட விவசாயிகள், அறுவடையின் பின் அவற்றை சேமித்து வைப்பதற்கான களஞ்சிய வசதிகளை ஏற்படுத்தி தருமாறும், நெல்லினைசந்தப்படுத்துவதற்கு ஏற்ற சரியான வழிமுறைகளை மேற்கொண்டு வழங்குமாறும் கோரிக்கை விடுத்தனர். அத்துடன் முன்பு நடைமுறையிலிருந்த உழவர் சந்தைமுறைமையினை மீண்டும் உருவாக்கி வழங்குமாறும் இதன்போது கோரிக்கை விடுத்தனர். இதேவேளை அறுவடைக்காலத்தில், அறுவடைக்காக பயன்படுத்தும் இயந்திரங்கள் மற்றும் அறுவடை வேலையாளர்களுக்கு ஊதியம் வழங்கவேண்டியுள்ளதால்அக்காலப்பகுயியில் விவசாயிகள் பொருளாதார சிக்கல்களுக்கு முகம்கொடுத்து வருவதனை குறிப்பிட்டுக் காட்டியதுடன், அக்காலப்பகுதியில் விவசாயிகளுக்கு கடனுதவிகளைவழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் ஆளுநர் அவர்களைக் கேட்டுக்கொண்டனர். வடமாகாண விவசாயத் திணைக்களத்தின் ஊடாக விவசாயிகளுடன் கலந்துரையாடி பொருத்தமான இடங்களில் நெல் களஞ்சியசாலைகளை உருவாக்குவதற்கு நடவடிக்கைமேற்கொள்ளுமாறும் ஏற்கனவே உள்ள களஞ்சியசாலைகளை புனரமைக்குமாறும் வடமாகாண விவசாய திணைக்க்களத்தின் செயலாளர் திரு கே.தெய்வேந்திரம் அவர்களுக்குபணிப்புரை வழங்கிய கௌரவ ஆளுநர் அவர்கள், விவசாயிகள் பொருளாதார ரீதியில் பாதிப்படையாத வகையில் நெல் விற்பனையை மேற்கொள்ளுவதற்கு இதுதொடர்பில்செயற்படும் அதிகாரிகளுடன் கலந்துரையாடி நடவடிக்கை மேற்கொள்வதாகவும் குறிப்பிட்டார். இதேவேளை அறுவடை காலத்தில் விவசாயிகளின் பொருளாதார சிக்கலை தீர்ப்பதற்கு வடமாகாண கூட்டுறவு வங்கிகளினூடாக கடன் வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்குஎதிர்பார்பதாக குறிப்பிட்ட கௌரவ ஆளுநர் அவர்கள், வடமாகாண விவசாய அமைச்சு இதுதொடர்பில் ஆராய்ந்து கூடியவிரைவில் நடவடிக்கை எடுக்குமாறும் வடமாகாணவிவசாய அமைச்சின் செயலாளருக்கு ஆலோசனை வழஙகினார். அத்துடன் உழவர் சந்தையினை தான் வரவேற்பதாக குறிப்பிட்ட கௌரவ ஆளுநர், விவசாயிகள் தமது விளைச்சல்களை இடைதரகர்கள் இல்லாது நேரடியாகவே நுகர்வோருக்குவழஙகுவதற்கு இம்முறைமை வழிவகுக்கும் என்பதை குறிப்பிட்டதுடன் அபிவிருத்தியடைந்த நாடுகளில் உழவர் சந்தைகள் மிகுந்த பிரபல்யம் பெற்றுள்ளமையைசுட்டிக்காட்டியதுடன், விவசாயிகளுடன் கலந்துரையாடி வடமாகாணத்தில் உழவர் சந்தைகளை மேற்கொள்ளக்கூடிய பொருத்தமான இடங்களை இனங்காணுமாறும் வடமாகாணவிவசாய அமைச்சின் செயலாளரை ஆளுநர் அவர்கள் கேட்டுக்கொண்டார். இந்த சந்திப்பில் வடமாகாண விவசாய அமைச்சின் செயலாளர் கே.தெய்வேந்திரம், கிளிநொச்சி மாவட்ட விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டிருந்தனர்.

மேலும்..

நாடாளுமன்றில் ரணில் – மஹிந்த இரகசியமாகப் பேசியது என்ன? – ஜே.வி.பி. கேள்விக்கணை

"அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான வாக்கெடுப்புக்கு முன்னர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்சவுக்கும் இடையில் நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியின் இரண்டாம் மாடியில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இதன்போது கலந்துரையாடப்பட்ட விடயங்கள் என்ன? இரு தலைவர்களும் நாட்டுக்குத் தெளிவுபடுத்த ...

மேலும்..

இருக்கின்ற கெட்டவர்களில் யாரைத் தெரிந்தெடுப்பது? சபையில் சரா எம்.பி. கேள்வி

"அரசியலில் தமிழர்களின் நிலை இன்று பரிதாபகரமானது. அவர்களுக்கு முன்னால் உள்ள தெரிவு யார் நல்லவர்? யார் கெட்டவர்? என்பதல்ல. இருக்கின்ற கெட்டவர்களில் யாரைத் தெரிந்தெடுப்பது என்பதுதான். இன்றைய ஆட்சிக்கு ஆதரவு வழங்கவேண்டுமா என்பதல்ல எம்முன் உள்ள கேள்வி, தமிழர்களுக்கு இதைவிட நரகத்தைத் ...

மேலும்..

குண்டுத்தாக்குதலை நினைத்திருந்தால் சஹ்ரானின் மனைவி தடுத்திருக்க முடியும் பஹத் ஏ. மஜீத்

குண்டுத்தாக்குதலை நினைத்திருந்தால் சஹ்ரானின் மனைவி தடுத்திருக்க முடியும் என   நீதி மற்றும் மனித உரிமைகளை பாதுகாக்கும் சமாதான நீதிவான்கள் பேரவையின் இலங்கைக்கான பணிப்பாளர் கலாநிதி பஹத் ஏ. மஜீத் தெரிவித்தார். வெள்ளிக்கிழமை(12) மாலை இடம்பெற்ற மாதர்களுக்கான  மனித உரிமை தொடர்பான விழிப்பூட்டல் ...

மேலும்..

வடக்கின் சுகாதாரக் கட்டமைப்புகளை மேம்படுத்த 9பில்லியன் செலவில் விசேட திட்டம்

இலங்கை அரசாங்கத்தினால் வடமாகாண சுகாதார சேவைக் கட்டமைப்புகளை அபிவிருத்தி செய்யும் நோக்குடன் முன்னெடுக்கப்படும் விசேட திட்டத்திற்கென 45 மில்லியன் யூரோ (9 பில்லியன் இலங்கை ரூபாக்கள்) கடன் வழங்கும் உடன்படிக்கையானது கடந்த புதன்கிழமை (10/07) கொழும்பில் கைச்சாத்திடப்பட்டுள்ளது. இலங்கை அரசாங்கத்திற்கும் நெதர்லாந்தின் ஐ.என்.ஜி வங்கிக்கும் இடையில் மேற்கொள்ளப்பட்ட இந்த கடன் உடன்படிக்கையில் இலங்கை ...

மேலும்..