August 7, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டவை

மக்கள் நலன் காப்பகத்தின் ஏற்பாட்டில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்க்கான வீடு வழங்கி வைப்பு

முன்னாள் போராளிகள், யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் கணவனை இழந்த பெண் தலைமைத்துவம் தாங்குகின்ற குடும்பங்கள் மற்றும் மாவீரர் குடும்பத்தாரின் வாழ்வாதாரம் போன்ற செயற்பாடுகளுக்காக கடந்த ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட மக்கள் நலன் காப்பகம் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்க்கான வீடு வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று 07 ...

மேலும்..

சுஷ்மா சுவராஜ் – கண்ணீர் அஞ்சலி

பாரதிய சனதா கட்சியின் மூத்த தலைவர் திருமதி சுஷ்மா சுவராஜ் 6.8.19 செவ்வாய்க்கிழமை காலமானார். பாரதிய சனதா கட்சிக்கு இலங்கையில் ஏதாவது அக்கறை இருக்குமானால் அங்குள்ள தமிழர்களே என என்னிடம் கூறியவர் திருமதி சுஷ்மா சுவராஜ். 1997ஆம் ஆண்டு ஆனி மாதத்தில் திருமதி சுஷ்மா ...

மேலும்..

ஈழத்தமிழரே ஏமாறவேண்டாம்.!.

இலங்கையில் 74% சிங்கள மக்கள், பூர்வீக மற்றும் மலையகத் தமிழர் மொத்தம் 17%, முஸ்லீம் மக்கள் 9%. ஏறக்குறைய வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் மக்கள் தொகையளவு வடகிழக்குக்கு வெளியேயும்   வாழ்கிறார்கள். அதுபோல் வடகிழக்கில் வாழும் முஸ்லிம்களைவிட வடகிழக்குக்கு வெளியே வாழும் ...

மேலும்..

களுவாஞ்சிகுடியில் தமிழ்தேசிய அரசியல் விழிப்புணர்வு கருத்தரங்கு!

தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின்விசேடவிழிப்புணர்வுகருத்தரங்குகிழக்கில் மக்களின்நீண்டகாலகேள்விகளாகவும்ஆதங்கங்களாகவும்உள்ளவிடயங்கள்அரசியலில்கூட்டமைப்புமேற்கொண்டநடவடிக்கைகள்தொடர்பில்தலைமைகளிடம்நேரடியானகேள்விபதில்நிகழ்வும்12.08.2019 அன்றுகாலை9.00மணிக்குகளுவாஞ்சிக்குடிஇராசமாணிக்கம்மண்டபத்தில்தமிழரசுகட்சியின்பட்டிருப்புத்தொகுதிதலைவரும்முன்னாள்நாடாளுமன்றஉறுப்பினருமானகௌரவ  திரு.பா.அரியநேத்திரன்தலைமையில்  நடைபெறவுள்ளது. இதில்அனைத்துவிதமானகேள்விகளுக்கும்விளக்கம்,தெளிவுரைவழங்குகின்றார்ஜனாதிபதிசட்டத்தரணியும், தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின்ஊடகப்பேச்சாளரும்நாடாளுமன்றஉறுப்பினருமானகௌரவ.திரு.எம்.ஏ.சுமந்திரன்அவர்கள்வழங்கவுள்ளார். அனைவரும்கலந்துகொண்டுஉங்களுக்கு  தேவையானவிளக்கவுரைகளையும்,விடயங்களையும்நேரடியாக அறிந்து கொள்ள அனைவரையையும்அன்புடன்அழைக்கின்றது. தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு தமிழ்தேசியகூட்டமைப்பு  விழிப்புணர்வுகருத்தரங்கு! காலம்:12/08/2019, திங்கள்கிழமை நேரம்: மு.ப9,மணி இடம்: களுவாஞ்சிகுடிஇராசமாணிக்கம்ஞாபகார்த்தமண்டபம். நிகழ்வன: மங்கலவிளக்கேற்றல். அகவணக்கம். வரவேற்புரை:                                               ஞா.யோகநாதன்தவிசாளர்ம.தெ.எ.பிரதேசசபை, தலைமையுரை: பா.அரியநேத்திரன்மு.பா.உ (தலைவர்பட்டிருப்புதொகுதிஇ.த.அ.க) தொடக்கவுரை:              திரு.கி.துரைராசசிங்கம்அவர்கள்மு.மாஅ (பொதுச்செயலாளர்இ.த.அ.க) பிரதமகருத்துரை:   ...

மேலும்..

யாழ் போதனா வைத்தியசாலைக்கு அதி நவீன CT Scanner இயந்திரம்

யாழ் போதனா வைத்தியசாலைக்கு அதி நவீன CT Scanner இயந்திரம் ஒன்றினை மக்களின் சொந்த நிதியில் கொள்வனவு செய்யவென புலம்பெயர் மற்றும் உள்ளூர் மக்களிடம் இருந்து நிதிசேகரிக்கும் நிகழ்ச்சித்திட்டத்திற்கு சுவிட்சர்லாந்தைச்சேர்ந்த "நாதன் கடை" உரிமையாளரான, திருவாளர் நாதன் அவர்கள் இரண்டுகோடி (20 மில்லியன்) ...

மேலும்..

முறை தவறியது வடக்கு மாகாண சபை! சிவமோகன் காட்டம்

ஜனாதிபதியிடம் பேசி நிதியை எடுத்து இருக்கலாம். ஆனால் வடமாகாண சபை அதனை சரியான முறையில் செயற்படுத்த தவறிவிட்டது என வன்னிப் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் தெரிவித்துள்ளார். அவரது வவுனியா அலுவலகத்தில் இடம்பெற்ற கம்பரலிய உதவித் திட்டம் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் ...

மேலும்..

வடக்கில் இன விகிதாசாரத்தை மாற்றியமைக்க இடமளிக்க மாட்டேன் – ரணில்

வடக்கில் சிங்களக் குடியேற்றங்களை உருவாக்கி இன ரீதியிலான விகிதாசாரத்தை மாற்றியமைக்க ஒருபோதும் இடமளிக்க மாட்டேன் என  பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அத்துடன் வடக்கில் தமிழ் மக்களின் பெரும்பான்மை தொடர்ந்தும் பாதுகாக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்தார். நாடாளுமன்றத்தில் இன்று (புதன்கிழமை) தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ...

மேலும்..

அரசியல் கைதிகளின் விடுதலைக்காக அனைவரும் குரல் கொடுக்க வேண்டும் – அருட்தந்தை ஞானப்பிரகாசம்

அரசியல் கைதிகளின் விடுதலைக்காக அனைவரும் குரல் கொடுக்க வேண்டுமென மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை எஸ்.ஞானப்பிரகாசம் அடிகளார் வலியுறுத்தியுள்ளார். அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை எஸ்.ஞானப்பிரகாசம் அடிகளார் தலைமையிலான குழுவினர் நேற்று ...

மேலும்..

தமிழரின் வரலாற்றுச் சான்றாக மற்றுமொரு பிள்ளையார் ஆலயம் கண்டுபிடிப்பு

மட்டக்களப்பு – அம்பாறை எல்லையில் தமிழரின் வரலாற்றுச் சான்றாக பிள்ளையார் ஆலயம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீ வெள்ளிமலைப் பிள்ளையார் ஆலயம் என அழைக்கப்படும் இவ்வாலயம் மட்டக்களப்பு வெலிக்கந்தையிருந்து வடமுனைக்கு செல்லும்போது கிழக்கே 8 கிலோ மீற்றர் தொலைவில் அமைந்துள்ளது. மட்டக்களப்பிலிருந்து இயங்கிவரும் ஸ்ரீ ரமண ...

மேலும்..

சுஷ்மா சுவராஜின் மறைவுச் செய்தி மிகுந்த வருத்தமளிக்கின்றது – மஹிந்த

இந்தியாவின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜின் மறைவு என்ற செய்தி மிகுந்த வருத்தமளிக்கின்றது என எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். முன்னாள் மத்திய அமைச்சரும், பா.ஜ.க. மூத்த தலைவருமான சுஷ்மா சுவராஜ் உடல்நலக்குறைவு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவந்த ...

மேலும்..

மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தை அரசாங்கம் கைப்பற்ற வேண்டும் – நலிந்த

சர்ச்சைக்குரிய மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தை அரசாங்கம் கைப்பற்றி, கிழக்குப் பல்கலைக்கழகத்திற்கு உரித்தாக்கிக்கொள்ள வேண்டும் என்று ஜே.வி.பி.யின் நாடாளுமன்ற உறுப்பினர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். நாடாளுமன்றில் இன்று (புதன்கிழமை) உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இங்கு மேலும் தெரிவித்த அவர், “சர்ச்சைக்குரிய மட்டக்களப்பு பல்கலைக்கழகம் தொடர்பாக பல்வேறு ...

மேலும்..

இலங்கை -இந்திய நாடுகளுக்கிடையில் உறவுப்பாலமாக திகழ்ந்தவர் சுஷ்மா: ஹக்கீம்

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் உறவுப்பாலமாக திகழ்ந்த இந்திய முன்னாள் வெளிநாட்டு அமைச்சர் சுஷ்மா சுவராஜின் இழப்பு ஈடுசெய்ய முடியாதது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். முன்னாள் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் திடீர் உடல்நலக் ...

மேலும்..

HNDA மாணவர்கள் மீது கண்ணீர்ப்புகை நீர்த்தாரை பிரயோகம்

கொழும்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள உயர் கணக்கியல் டிப்ளோமா மாணவர்களை கலைப்பதற்காக பொலிஸார் நீர்த்தாரைப் பிரயோகம் மற்றும் கண்ணீர் புகைத் தாக்குதலை நடத்தியுள்ளனர். இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டம் காரணமாக லோட்டஸ் வீதி மூடப்பட்டுள்ளதுடன், கடும் வாகன நெரிசலும் ஏற்பட்டுள்ளது. பதவி வழங்குவதில் தாம் ...

மேலும்..

பயங்கரவாதி சஹரானுடன் தொடர்புடைய மேலும் மூவர் அம்பாறையில் கைது

தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பின் தலைவர் சஹரான் ஹாசிமுடன் நுவரெலியா மற்றும் ஹம்பாந்தோட்டை முகாம்களில் பயிற்சிபெற்ற மேலும் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த மூவரும் இன்று (புதன்கிழமை) அம்பாறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். இவர்கள், இலங்கையில் தடைசெய்யப்பட்டுள்ள தேசிய தௌஹீத் ஜமாத் ...

மேலும்..

பயங்கரவாதம் மற்றும் புலனாய்வு உள்ளிட்ட துறைசார் பொலிஸ் மா அதிபர்களுக்கு இடமாற்றம்

பயங்கரவாதம் மற்றும் அரச புலனாய்வு உள்ளிட்ட துறைசார் பொலிஸ் மா அதிபர்களுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. தேசிய பொலிஸ் ஆணைக்கழுவின் அனுமதியுடன் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது. அந்தவகையில், பயங்கரவாத விசாரணைப் பிரிவின் பிரதிப் பொலிஸ் மா அதிபர் வருண ஜயசுந்தர, பொலிஸ்மா அதிபர் ...

மேலும்..

தேர்தலை நடத்துவதற்கான சட்டமூலத்தை நாடாளுமன்றுக்கு கொண்டுவரவேண்டும் – மஹிந்த

மாகாணசபை தேர்தலை நடத்துவதற்கான சட்டமூலத்தை நாடாளுமன்றுக்குக் கொண்டுவரவேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய அரசியல் கட்சிகளிடம் வேண்டுகோள் விடுத்தார். அநுராதபுரத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டபோதே அவர் இந்த வேண்டுகோளை முன்வைத்தார். இங்கு மேலும் தெரிவித்த அவர், “ஜனாதிபதி தேர்தலுக்கு ...

மேலும்..

இந்திய வீட்டுத் திட்டத்தில் கண்டி மாவட்டத்துக்கு 2,500 வீடுகள் அவசியம் – வேலுகுமார்

இந்திய அரசாங்கத்தின் நிதி பங்களிப்புடன் மலையகத்தில் நிர்மாணிக்கப்படவுள்ள 10 ஆயிரம் வீட்டுத் திட்டத்தில் கண்டி மாவட்டத்துக்கு குறைந்தபட்சம் 2 ஆயிரத்து 500 வீடுகளாவது பகிர்ந்தளிக்கப்படவேண்டும் என ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற ...

மேலும்..

வடக்கில் கிராம வீதிகளை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை

வடக்கு மாகாணத்தில் 317.09 கிலோமீற்றர் கொண்ட கிராம வீதிகளை அபிவிருத்தி செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கைகளை எடுத்துள்ளது. யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் மன்னார் ஆகிய மாவட்டங்களில் உள்ள கிராம வீதிகளை அபிவிருத்தி செய்வதற்காக ஆசிய அபிவிருத்தி வங்கி வழங்கிய நிதி பயன்படுத்தப்படவுள்ளது. இது தொடர்பாக நேற்று ...

மேலும்..

வேட்பாளர்களுக்கு அரசாங்கத்தின் செலவில் விளம்பரங்கள் செய்யக்கூடாது – மஹிந்த

தேர்தல்களில் களமிறங்கும் வேட்பாளர்களுக்கு அரசாங்கத்தின் செலவில் விளம்பரங்கள் செய்வது நிறுத்தப்பட வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ வலியுறுத்தினார். கொழும்பில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், “நாட்டில் இடம்பெற்ற பல்வேறு தேர்தல்களின்போது, கள்ள ...

மேலும்..

சுற்றாடல் தொழிற்துறை நிறுவனம் தொடர்பான சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க அமைச்சரவை அங்கீகாரம்

இலங்கை சுற்றாடல் தொழிற்துறையினரின் நிறுவனத்தை அமைப்பதற்கான திருத்த சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் முன்மொழிவுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இலங்கை சுற்றாடல் தொழிற்துறையினரின் நிறுவனத்தை ஒருங்கிணைப்பதற்காக நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ ராஜகருணாவினால் தனிப்பட்ட திருத்த சட்டமூலமொன்று 2016ஆம் ஆண்டு பெப்ரவரி ...

மேலும்..

ஜனாதிபதிக்கு கம்போடியாவில் மகத்தான வரவேற்பு!

கம்போடியாவிற்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு அந்நாட்டின் விமான நிலையத்தில் மகத்தான வரவேற்பளிக்கப்பட்டுள்ளது. நான்கு நாட்கள் அரச முறை பயணம் மேற்கொண்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் தூதுக்குழுவும் இன்று காலை கம்போடியாவிற்கு புறப்பட்டுச் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும்..

எமக்கான தீர்வு கிட்டாமைக்கு கூட்டமைப்பே காரணம் – உறவுகள் சாடல்

வவுனியாவில் தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டுவரும் காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களால் ஆர்ப்பாட்டப் பேரணி முன்னெடுக்கப்பட்டது. வவுனியா, வீதி அபிவிருத்தித் திணைக்களத்திற்கு முன்பாக சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்பில் ஈடுபட்டுவரும் காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டம் இன்றுடன் (புதன்கிழமை) 900 நாட்களை எட்டியுள்ளது. இதனை முன்னிட்டே குறித்த ஆர்ப்பாட்டப் ...

மேலும்..

அருவக்காடு குப்பை விவகாரம் குறித்து முக்கிய கலந்துரையாடல்

கொழும்பு மாநாகர சபைக்கு உட்பட்ட பகுதியிலுள்ள குப்பைகளை அருவக்காட்டில் கொட்டுவதற்கான இணக்கப்பாடு, இன்று எட்டப்படலாம் என கொழும்பு மாநகர ஆணையாளர் பாலித நாணயக்கார தெரிவித்துள்ளார். இந்த விடயம் குறித்து இன்று (புதன்கிழமை) கலந்துரையாடலொன்று இடம்பெறவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். கொழும்பு மாநகர சபைக்கு உட்பட்ட பகுதிகளிலுள்ள ...

மேலும்..

வசீம் தாஜூதீன் கொலை வழக்கு – முன்னாள் பிரதான சட்ட வைத்திய அதிகாரிக்கு எதிராக குற்றப்பத்திரிகை

வசீம் தாஜூதீன் கொலை வழக்கின் முக்கிய சாட்சியங்களை மறைத்ததாக கொழும்பு முன்னாள் பிரதம சட்ட வைத்திய அதிகாரி, பேராசிரியர் ஆனந்த சமரசேகரவுக்கு எதிராக குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இன்று (புதன்கிழமை) கொழும்பு மேல் நீதிமன்றில் சட்டமா அதிபரினால் குறித்த குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. பேராசிரியர் ...

மேலும்..

ஜனாதிபதி தேர்தல் – கூட்டமைப்பின் நிலைப்பாடு குறித்து சிவமோகன் கருத்து

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு யாரை ஆதரிக்க போகின்றது என்பது தொடர்பாக இன்னும் தீர்மானிக்கவில்லை என அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவமோகன் தெரிவித்துள்ளார். வவுனியாவில் நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள ...

மேலும்..

சிறைச்சாலை உத்தியோகத்தர் கஞ்சாவுடன் கைது – நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை!

மட்டக்களப்பு சிறைச்சாலை உத்தியோகத்தர் ஒருவர் கைதிகளுக்கு கஞ்சா கட்டுக்களை வழங்க முற்பட்டவேளை கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட அவரை இன்று (புதன்கிழமை) மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சிறைச்சாலை உத்தியோகத்தர், நேற்று மாலை வழமைபோன்று கைதிகளுக்கு சலவை செய்த ஆடைகளை ...

மேலும்..

நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து சாந்த பண்டார இராஜினாமா

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து சாந்த பண்டார இராஜினாமா செய்துள்ளார். குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சலிந்த திஸாநாயக்கவின் மறைவால் ஏற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வெற்றிடத்தை நிரப்புவதற்காக அவர் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து ...

மேலும்..

வசந்த கரன்னகொட, ரோஷன் குணதிலகவுக்கு கௌரவ பட்டங்களை வழங்கினார் ஜனாதிபதி

கடற்படையின் முன்னாள் தளபதி அட்மிரல் வசந்த கரன்னகொட மற்றும் முன்னாள் விமானப்படை தளபதி ரோஷன் குணதிலக ஆகியோருக்கு ஜனாதிபதியினால் அதியுயர் கௌரவ பட்டம் வழங்கப்பட்டது. குறித்த கௌரவமளிக்கும் நிகழ்வு இன்று (புதன்கிழமை) இடம்பெற்றது. இதற்கான வர்த்தமானி அறிவித்தலையும் ஜனாதிபதி வெளியிட்டுள்ளார். அதன்படி, 2005 ...

மேலும்..

சுஷ்மாவின் மறைவு இலங்கைக்கும் ஈடு செய்யமுடியாத இழப்பு – இராதாகிருஷ்ணன்

இந்தியாவின் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜின் மறைவு இந்தியாவிற்கு மட்டுமல்ல இலங்கைக்கும் ஈடு செய்யமுடியாத இழப்பாகும் என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் விசேட பிரதேசங்களுக்கான அபிவிருத்தி அமைச்சருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இந்தியாவின் முன்னாள் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ...

மேலும்..

வெல்லம்பட பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி சேவையிலிருந்து இடைநிறுத்தம்!

வெல்லம்பட பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி சேவையிலிருந்து இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளார். வெல்லம்பட பொலிஸாரினால் கைப்பற்றப்பட்ட 76  கத்திகள் மற்றும் 13 கோடரிகளை திருப்பி வழங்க முற்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டு அவர் இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளார். இலங்கையில் ஈஸ்டர் தினத்தன்று இடம்பெற்ற தாக்குதல்களைத் தொடர்ந்து வெல்லம்பட பொலிஸாரால் ...

மேலும்..

சட்டவிரோதமாக மணல் ஏற்றியவர்களை நோக்கி இராணுவத்தினர் 15 தடவைகள் துப்பாக்கிச்சூடு!

முல்லைத்தீவு – ஒட்டுச்சுட்டான் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட அம்பகாமம் பகுதியில் சட்டவிரோதமாக மணல் ஏற்றிய நால்வர் மீது இராணுவப் படையினர் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். அத்தோடு, குறித்த நால்வரில் மூவர் தப்பிச் சென்றுள்ள நிலையில் ஒருவரை  15 தடவைகள் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாக எமது ...

மேலும்..

யாழில் கத்திக்குத்து – ஒருவர் உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் – வெற்றிலைக்கேணி முள்ளியான் பகுதியில் சகோதரர்கள் இடையே இடம்பெற்ற கைகலப்பைத் தடுக்கச் சென்ற அம்மம்மா கத்திக்குத்துக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாக பளை பொலிஸார்  தெரிவித்துள்ளனர். நேற்று (செவ்வாய்க்கிழமை) இரவு இடம்பெற்ற இந்த சம்பவத்தில் சுப்ரமணியம் தங்கேஸ்வரி (வயது -72) என்பவரே உயிரிழந்துள்ளார். மூத்த சகோதரனுக்கும் இளைய ...

மேலும்..

சஹரானின் தீவிரவாத நடவடிக்கைகள் குறித்து உளவுத்துறை தகவல்கள் கிடைத்தன – மத்தும பண்டார

ஹரானின் தீவிரவாத நடவடிக்கைகள் குறித்து தனக்கு இரண்டு உளவுத்துறை தகவல்கள் கிடைத்ததாக முன்னாள் சட்டம் ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார். ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பக விசாரணை செய்வதற்காக நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் நேற்று (செவ்வாய்க்கிழமை) முன்னிலையாகி சாட்சியம் வாங்கும்போதே ...

மேலும்..

சுஷ்மாவின் மறைவுக்கு மங்கள இரங்கல்!

இந்தியாவின் முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜின் மறைவுக்கு பல தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். அதற்கமைய இந்தியா ஒரு தலைவரை இழந்துவிட்டது, இலங்கை ஒரு நண்பரை இழந்துவிட்டதென அமைச்சர் மங்கள சமரவீர இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் அவரின் மறைவு செய்து அதிர்ச்சியையும் கவலையையும் ...

மேலும்..

அமைச்சரிடம் ஆதாரத்தை கோரும் ஜனாதிபதி மைத்திரி

மின்சாரத்தை விநியோகிக்கும் இரண்டு மின் விநியோக கோபுரத்தில் இருந்து மின்சாரத்தை பெற்றுக்கொள்வதற்கு சட்டமா அதிபர் மற்றும் பொது பயன்பாட்டு அணைக்குழுவும் ஒப்புதல் வழங்கியது என்பதற்கான ஆதாரத்தை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கோரிக்கை விடுத்துள்ளார். மின்சக்தி மற்றும் எரிசக்தி மற்றும் வர்த்தக அபிவிருத்தி ...

மேலும்..

காற்றுடன் கூடிய காலநிலை நிலவும் – வளிமண்டலவியல் திணைக்களம்

டக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் மணித்தியாலத்துக்கு 50 – 60 கிலோ மீற்றர் வரையும் காற்றுடன் கூடிய நிலையில் மேலும் அதிகரிப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகின்றதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் திருகோணமலை ...

மேலும்..

ரணிலுக்கும் சஜித்திற்கும் இடையில் இரகசிய சந்திப்பு!

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் கட்சியின் பிரதி தலைவர் அமைச்சர் சஜித் பிரேமதாசவுக்கு இடையில் இரகசிய கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்த கலந்துரையாடல் நேற்று (செவ்வாய்க்கிழமை) இரவு 09 மணியளவில் அலரிமாளிகையில் இடம்பெற்றுள்ளது. இருவருக்கும் இடையில் இரு மணித்தியாலங்கள் கலந்துரையாடல் ...

மேலும்..

தெரிவுக்குழு விசாரணை- உயர்நீதிமன்ற நீதியரசர் தலைமையிலான குழுவினருக்கு அழைப்பு!

ஈஸ்டர் தாக்குதல்கள் குறித்து ஆராயும் நாடாளுமன்ற தெரிவுக்குழு மீண்டும் ஒன்று கூடவுள்ளதாக அந்த குழுவின் தலைவரும் பிரதி சபாநாயகருமான ஆனந்த குமாரசிறி தெரிவித்துள்ளார். அதற்கமைய தெரிவுக்குழு எதிர்வரும் 20 மற்றும் 21ஆம் திகதிகளில் மீண்டும் கூடவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். எவ்வாறாயினும் அது தொடர்பான உரிய ...

மேலும்..

சஹ்ரானால் இந்தியாவுக்கும் ஆபத்து – பிரதமர்!

ஈஸ்டர் தாக்குல்களின் சூத்திரதாரி சஹ்ரான் தமிழில் பிரசாரம் செய்ததால், இந்த விவகாரத்தில் இந்தியாவுக்கும் ஆபத்துள்ளது என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். ஈஸ்டர் தாக்குதல்கள் குறித்து ஆராயும் தெரிவுக்குழுவில் நேற்று (செவ்வாய்க்கிழமை) முன்னிலையாகி சாட்சியம் வழங்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் ஈஸ்டர் தாக்குதல் ...

மேலும்..

சிறந்த சமூகத்தை கட்டியெழுப்ப அரசமைப்பில் உள்ள குறைகளே தடை- ஜனாதிபதி

அரசியலமைப்பு மற்றும் தேர்தல் சட்டத்தில் உள்ள சில குறைபாடுகள் காரணமாக சிறந்ததோர் சமூகத்தை கட்டியெழுப்புவதற்கு தடைகள் ஏற்படுவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். சிறந்த அரசியல் கலாசாரமொன்றிற்காக முன்மொழியப்பட்டுள்ள பரிந்துரைகள் நாட்டில் உள்ள அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களுக்கும் கையளிக்கும் தேசிய நிகழ்வு ...

மேலும்..

ஜனாதிபதி மைத்திரி கம்போடியாவுக்கு விஜயம்!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நான்கு நாட்கள் பயணமாக கம்போடியாவுக்கு விஜயம் செய்யவுள்ளார். அதற்கமைய அவர் இன்று (புதன்கிழமை) நொம்பென்னை வந்தடைவார் என கம்போடிய வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது. கம்போடிய மன்னர் நொரொடோம் சிகாமணியின் அழைப்பின் பேரில் நொம்பென்னுக்கு விஜயம் செய்யவுள்ள ஜனாதிபதிக்கு மன்னரின் அரச ...

மேலும்..