August 8, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டவை

வவுனியா நகரசபையின் வாகனம் மூழுவதும் விளம்பர பாதாதைகள் : கோவிற்குளத்தில் நடந்தது என்ன?

வவுனியா கோவிற்குளம் பகுதியில் வீதிகளில் காணப்பட்ட பாதாதைகளை அகற்றும் பணியில் நகரசபையினர் இன்று (08.08.2019) காலை 10.30மணி தொடக்கம் 12.30 மணி வரை மேற்கொண்டனர். கோவிற்குளம் சிதம்பரபுரம் பிரதான வீதியில் காணப்படும் பெரும்பாலான மின்கம்பங்களில் விளம்பர பாதாதைகள் காணப்பட்டது. இதன் காரணமாக அப்பகுதியின் சுற்றுப்புறச்சூழல் ...

மேலும்..

ஆட்சியமைக்க கூட்டமைப்பின் ஆதரவுகள் தேவையேயில்லை! – பஸில்

கடந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெரும்பான்மையான மக்கள் ஆதரவைப் பெற்றுக் கொள்ளவில்லை. வடக்கு கிழக்கில் அவர்களைத் தவிர்ந்த பல கட்சிகள் எங்களுடன் உள்ளன. அவர்களுடன் இணைந்து பேசி ஆட்சி அமைப்போம்." – இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தேசிய ...

மேலும்..

பண்புப் பயிற்சி முகாம்-2019

இந்துஸ்வயம்சேவகசங்கம், அம்பாறை. இந்துமக்களை ஒன்றிணைத்து ஒருங்கிணைத்த இந்து சக்தியின் மூலம் சுயகௌரவம் மிக்க சமுதாயத்தை கட்டி எழுப்பும் அரும்பணியினையாற்றி வருகின்றது. அத்துடன் பலதரப்பட்ட சேவைப்பணிகளையும் செய்கின்றது. அந்தவகையில் 7 நாள் பண்புப்பயிற்சி முகாம் எதிர்வரும் 2019/08/12 - 2019/08/18 வரை இடம் பெறவிருக்கிறது இம்முகாமானது ...

மேலும்..

நல்லூர் பாதுகாப்பு சோதனைகள் உடன் கைவிடப்படுதல் அவசியம் – வலியுறுத்துகின்றார் சிறிதரன் எம்.பி

யாழ். நல்லூர் கந்தசுவாமி ஆலைய திருவிழாக் காலங்களில் இராணுவம் சப்பாத்துக்களுடனும் துப்பாகிகளுடனும் ஆலய வளாகத்துக்குள் நுழைந்து தமிழர்களை சோதிக்கும் செயற்பாடுகள் உடனடியாக கைவிடப்படல் வேண்டும். ஜனாதிபதியும் பிரதமரும் உடனடியாக இவற்றைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்." - இவ்வாறு தெரிவித்தார் தமிழ்த் தேசியக் ...

மேலும்..

நவீன முறையில் நிர்மானிக்கப்பட்ட பஞ்சகர்ம வைத்தியசாலையின் புதிய கட்டடம் திறப்பு

10 மில்லியன் ரூபா நிதியின் கீழ் நவீன முறையில் நிர்மானிக்கப்பட்ட திருகோணமலை கப்பல்துறை பஞ்சகர்ம வைத்தியசாலையின் புதிய கட்டடம் திறந்து வைத்து பொதுமக்கள் பாவனைக்கும் கையளித்து வைக்கப்பட்டது. கிழக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்கள ஆணையாளர் வைத்திய கலாநிதி  திருமதி ஆர்.ஸ்ரீதர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு ...

மேலும்..

நல்லூர்ச் சோதனைகளுக்கு இயந்திரவழி உபகரணங்கள்

நல்லூர் ஆலயத்துக்கு வருகைதரும் பக்தர்களின் உடற்சோதனை நடவடிக்கைகளை இலகுபடுத்துவதற்காக 4 இயந்திர வழி உபகரணங்கள் பாவனைக்கு விடப்படவுள்ளன என்று தெரிவித்தார் வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன். அவர் மேலும் கூறுகையில், "நல்லூர் கந்தன் ஆலயத்தின் வருடாந்தத் திருவிழா தற்போது ஆரம்பமாகியுள்ளது. அடியவர்கள் ...

மேலும்..

நல்லூர் ஆலய வளாகத்துக்குள் திடீர் புதிய தடை? அதிர்ச்சியில் பக்தர்கள்

நல்லூர் முருகன் ஆலயத்திருவிழா இடம்பெற்று வரும் நிலையில் ஆலய வளாகத்துக்குள் தூக்குக் காவடிகள் எவையும் பிரவேசிக்க முடியாது என ஆலய நிர்வாகம் அறிவித்துள்ளது. அத்துடன் தூக்கு காவடியுடன் வரும் பக்தர்கள் நுழைவதற்கான எல்லைகளும் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் ஆலய நிர்வாகம் தெரிவித்துள்ளது. தூக்கு காவடியுடன் வரும் பக்தர்கள் ...

மேலும்..

காலையில் நடந்த கோர சம்பவம்; யாழ் மக்களை சோகத்தில் ஆழ்த்திய இளைஞனின் மரணம்!

உரும்பிராய் - கோப்பாய் வீதியில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள், டிப்பர் வாகனம் மோதி இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவம் இன்று காலை உரும்பிராய் கிருஸ்ணன் கோவிலடியில் இடம்பெற்றது. மோட்டார் சைக்கிள் (எம்டி90) ஒன்று சடுதியாக வீதியைக் ...

மேலும்..

இலங்கை மக்களின் உயிரை பலியெடுக்கும் எமனாக மாறும் பேருந்துகள்! வருகிறது புதிய நடைமுறை

இலங்கையில் அதிக வேகத்தில் பயணிக்கும் பேருந்துகள் தொடர்பில் முறைப்பாடு செய்யுமாறு பொது மக்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. அதற்காக 1955 என்ற தொலைபேசி இலக்கம் ஒன்று அறிமுகப்படுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவுக்கு தெரிவித்துள்ளது. விபத்தை ஏற்படுத்தும் பேருந்துகளின் சாரதிகளை 3 மாதங்களுக்கு பணி நீக்கம் செய்ய ...

மேலும்..

மன்னார் மாவட்ட இளைஞர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்திய அமைச்சர் சஜித்

மன்னாருக்கு இன்றையதினம் விஜயம் செய்துள்ள அமைச்சர் சஜித் பிரேமதாஸ மன்னார் ஜோசப்வாஸ் நகர் இளைஞர்களுடன் சிறிது நேரம் உதைப்பந்தாட்ட விளையாட்டில் ஈடுபட்டுள்ளார். மன்னார் பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட ஜோசப்வாஸ் நகரில் நிர்மாணிக்கப்பட்ட 239ஆவது மாதிரி கிராமமான ஜோசப்வாஸ் நகர் கிராமத்தில் அமைக்கப்பட்ட 68 ...

மேலும்..

சஜித்தைக் களமிறக்குமாறு கோரி 12இல் பதுளையில் பெரும் கூட்டம்

ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாஸவை களமிறக்குமாறு வலியுறுத்தும் பொதுக்கூட்டத்தைப் பதுளையில் பிரமாண்டமாக நடத்துவதற்கு அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ தயாராகி வருகின்றார். ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் முதலாவது மாநாடு எதிர்வரும் 11ஆம் திகதி கொழும்பில் நடைபெறவுள்ளது. தமது தரப்பின் ஜனாதிபதி ...

மேலும்..

பிரதி அமைச்சர் கருணாரத்ன பரணவிதான இன்று கிளிநொச்சிக்கு விஜயம்

திறண் விருத்தி அமைச்சின் பிரதி அமைச்சர் கருணாரத்ன பரணவிதான இன்று கிளிநொச்சிக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார். கிளிநொச்சியில் அமைந்துள்ள நைற்றா நிறுவனத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்த அவர் அங்கு தொழில்பயிற்சி பெறும் மாணவ மாணவிகளுடன் கலந்துரையாடியதும், குறை நிறைகளையும் கேட்டறிந்தார். இன்று காலை 11 மணியளவில் ...

மேலும்..

நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியனுக்கு எதிராக மேன் முறையீட்டு வழக்கு-தீர்ப்பை வாசித்து காட்ட அழைப்பானை

திருகோணமலை-வெள்ளை மணல் பகுதியில் கொலை செய்த குற்றச்சாட்டின் பேரில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள குற்றவாளியை எதிர்வரும்  செப்டம்பர் மாதம் 03ம் திகதி திருகோணமலை மேல் நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் கட்டளை பிறப்பித்துள்ளார். இக்கட்டளையினை சிறைச்சாலை அத்தியட்சகருக்கு  இன்று ...

மேலும்..

இலங்கையில் நீதித் துறை சுயாதீனமாக செயற்படுகின்றது என்கிறார் சம்பந்தன்!!

இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக்கூட்டம் அண்மையில் திருகோணமலை நகராட்சி மன்ற கேட்போர் கூடத்தில் நடைபெற்றது இதில் கலந்து கொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் அவர்கள் தமிழ் மக்களின் ஒற்றுமைகாரணமாகவே இலங்கையில் இன்று ஜனநாயகம் ...

மேலும்..

கல்முனை மாநகர சபையில் ஒன்லைன் ஊடாக முறைப்பாடுகளைப் பெற்று, தீர்வு வழங்கத் திட்டம்

பொது மக்களுக்களின் முறைப்பாடுகளை ஒன்லைன் மூலம் பெற்று, அவற்றுக்கு விரைவாக தீர்வு வழங்குகின்ற ஒரு பொறிமுறையை கல்முனை மாநகர சபையில் நடைமுறைப்படுத்துவதற்கு எதிர்பார்த்துள்ளோம் என்று கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் தெரிவித்தார். உள்ளூராட்சி மன்றங்களின் சேவைகளை விரைவுபடுத்துவதற்கான 'மங்கிவ்வா' எனும் புதிய மென்பொருள் தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது தொடர்பில் கல்முனை மாநகர சபை உத்தியோகத்தர்களுக்கு அறிவூட்டும் ...

மேலும்..

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட எனக்கு அதிர்ஷ்டம் இல்லை

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட எனக்கு அதிர்ஷ்டம் இல்லை என்று நினைக்கின்றேன். ஆனாலும் திறமையான நிர்வாகத் திறன் கொண்ட, பாதுகாப்பை உறுதிப்படுத்தக்கூடிய ஒருவர் வேட்பாளராக நியமிக்கப்படுவார். கோட்டாபய ராஜபக்ச தனது அமெரிக்க குடியுரிமையை நீக்கிக் கொண்டுள்ளார். அவர் ஜனாதிபதி வேட்பாளராகக் களமிறங்கினால் அவரைக் ...

மேலும்..

காரைதீவில் சாய்ந்தமருத்துக்காக பிரேரணை : தமிழ் கூட்டமைப்பின் ஆதரவுடன் அமோக வெற்றி.!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவரும், அமைச்சருமான ரவூப் ஹக்கீம் அவர்களின் வாக்குறுதியின் படி இன்னும் சில நாட்களில் சாய்ந்தமருத்துக்கான தனியான சபை மலர இருக்கும் தருவாயில் சாய்ந்தமருதுக்கு தனியான உள்ளுராட்சி சபை வழங்க வேண்டும் என்ற பிரேரணை காரைதீவு பிரதேச சபையால் ...

மேலும்..

சட்டத்தரணியாக முஷாரப் சத்தியப்பிரமாணம்

பொத்துவிலைச் சேர்ந்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கிழக்கு மாகாண இளைஞர் அமைப்பாளரும் ஊடகவியலாளருமான முஷ்ஷரப் முதுபின் இன்று காலை (08) உச்சநீதிமன்றத்தில் சட்டத்தரணியாக உத்தியோகபூர்வமாக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார். இன்றைய சத்தியப்பிரமாணம் நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான  ...

மேலும்..

லிந்துலையில் தீ விபத்து

லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்டபட்ட லிந்துலை ஹென்போல்ட் தோட்டத்தில் 08.08.2019 அன்று காலை 8 மணியளவில் ஏற்பட்ட திடீர் தீயினால் ஒரு வீடு சேதமடைந்துள்ளதாக லிந்துலை பொலிஸார் தெரிவித்தனர். இத்திடீர் தீ காரணமாக வீட்டின் மூன்று அறை முற்றாக சேதமடைந்துள்ளதுடன்,  தளபாடங்கள் உடைகள் உட்பட ...

மேலும்..

கடந்த மாதம் வவுனியாவில் 2649 சாரதிகளுக்கு எதிராக நடவடிக்கை!

ஜனாதிபதியின் திட்டத்திற்கு அமைவாக கடந்த மாதம் 5 ஆம் திகதி முதல் 31 ஆம் திகதி வரை வவுனியா போக்குவரத்து பொலிசாரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கை மூலம் 2649 சாரதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்தனர். இது தொடர்பில் ...

மேலும்..

சஜித் ஏற்கக்கூடியவர் என்கிறார் சிவமோகன்!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் இதுவரை எந்தத் தீர்மானத்தையும் எடுக்கவில்லை . இருப்பினும் ' என்னைப் பொறுத்தவரை அமைச்சர் சஜித் பிரேமதாஸ, மற்ற வேட்பாளர்களை விட ஏற்கக் கூடியவர் என நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் தெரிவித்துள்ளார். வவுனியாவில் அமைந்துள்ள அவரது அலுவலகத்தில் நேற்று ...

மேலும்..

புத்தளத்தில் மினி சூறாவளி – 80க்கும் மேற்பட்ட வீடுகள் சேதம்!

புத்தளத்தில் வீசிய மினி சூறாவளி காரணமாக பல வீடுகள் சேதமடைந்துள்ளதாக புத்தளம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. ரத்மல்யாய பிரதேசத்தில் இன்று (வியாழக்கிழமை) அதிகாலை 1.30 மணியளவில் இவ்வாறு மினி சூறாவளி வீசியுள்ளது. இதன் காரணமாக சுமார் 80க்கும் மேற்பட்ட வீடுகளும் ...

மேலும்..

நீதியும் சமத்துவமும் பேணப்படவேண்டும் என்பதில் மிக உறுதியாக நின்றவர் சுஷ்மா

கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் இரங்கல் "இந்தியாவின் மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரும் இந்தியாவின் முன்னாள் வெளிவிவகார அமைச்சருமான சுஷ்மா சுவராஜின் மறைவுச் செய்தி கேட்டு அதிர்ச்சியும் கவலையும் அடைகின்றோம்" என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இன்று வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். அதில் ...

மேலும்..

பட்டதாரி மாணவர்கள் அரச தொழிலை மட்டும் நம்பியிராது தொழில் முயற்சியாளர்களாக மாற வேண்டும்

பட்டதாரி மாணவர்கள் எதிர்காலத்தில் பட்டப் படிப்பின் பின்னர் அரச தொழிலை மட்டும் நம்பியிராது  சுயதொழில் முயற்சியாளர்களாக மாற வேண்டுமென தேசிய தொழில் முயற்சிகள் அபிவிருத்தி அதிகார சடையின் தவிசாளரும் முன்னாள் கல்முனை மாநகர முதல்வருமான கலாநிதி சிராஸ் மீராசாஹிப் தெரிவித்தார். சாய்ந்தமருது பிரதேச ...

மேலும்..

அரச நிதி மோசடி: முன்னாள் ஜனாதிபதி செயலணியின் தலைமை அதிகாரி உட்பட மூவர் விடுதலை

அரச நிதி மோசடி தொடர்பாக குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் ஜனாதிபதி செயலணியின் தலைமை அதிகாரி காமினி செனரத் உட்பட மூவரை நிரந்தர நீதாய மேல் நீதிமன்றம் விடுவித்துள்ளது. சம்பத் அபேகோன், சம்பத் விஜேரத்ன மற்றும் சம்பா ஜானகி ராஜரத்ன உள்ளிட்ட மூவரடங்கிய நீதிபதிகள் ...

மேலும்..

குமரி குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற நபர் மர்மமான முறையில் உயிரிழப்பு!

முல்லைத்தீவு – மாந்தை கிழக்கு பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட செல்வபுரம் பகுதியில் உள்ள குமரி குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற நபர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். குறித்த நபர் வழமைபோன்று நேற்று மீன்பிடிக்கச் சென்ற நிலையில், இரவு வீடு திரும்பாத காரணத்தால் அவரை ...

மேலும்..

அலிஸ் வெல்ஸ் அம்மையார் இலங்கை வருகை

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு மத்திய, ஆசிய விவகாரங்களுக்கான முதன்மை பிரதி உதவிச் செயலர் அலிஸ் வெல்ஸ் தெற்காசியாவுக்கு உத்தியோகப்பூர்வ பயணம் மேற்கொண்டு செல்லவுள்ளார். குறித்த விஜயத்தின் ஓர் அங்கமாக அவர் இலங்கைக்கும் விஜயம் மேற்கொள்ளவர் என அமெரிக்க இராஜாங்க திணைக்களம் இன்று ...

மேலும்..

நல்லூர் ஆலய வளாகத்துக்குள் தூக்குக் காவடிகள் பிரவேசிக்க தடை?

நல்லூர் முருகன் ஆலயத்திருவிழா இடம்பெற்று வரும் நிலையில் ஆலய வளாகத்துக்குள் தூக்குக் காவடிகள் எவையும் பிரவேசிக்க முடியாது என ஆலய நிர்வாகம் அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தூக்கு காவடியுடன் வரும் பக்தர்கள் நுழைவதற்கான எல்லைகளும் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. தூக்கு காவடியுடன் வரும் பக்தர்கள் பருத்தித்துறை ...

மேலும்..

சீரற்ற வானிலையால் நாட்டின் பல பகுதிகள் இருளில் மூழ்கின, வீடுகளும் சேதம்!

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக பல பகுதிகளில் மின் துண்டிக்கப்பட்டுள்ளதாக மின் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. நாட்டின் பல இடங்களில் காற்றுடன் கூடிய வானிலை நிலவுவதனால், மின் கம்பங்கள் மீது மரங்கள் முறிந்து வீழ்ந்துள்ளது. இதனால் பல பகுதிகளில் ...

மேலும்..

அரசியல் கைதிகளின் விடுதலை குறித்த பத்திரம் விரைவில் சமர்ப்பிக்கப்படும் – மனோ

அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக தம்மால் முன்வைக்கப்படவுள்ள அமைச்சரவை பத்திரத்தின் மொழிப்பெயர்ப்பு பணிகள் தற்போது இடம்பெற்று வருவதாக அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். அவரது உத்தியோகப்பூர்வ முகப்புத்தக பதிவிலேயே அவர் இந்த விடயம் தொடர்பாக தெரிவித்துள்ளார். இதன்படி குறித்த அமைச்சரவை பத்திரம் எதிர்வரும் நாட்களில் ...

மேலும்..

ப.உ. சி.சிறீதரன் அவர்களின் முயற்சியால் 14 மில்லியன் ரூபா பெறுமதியான வெல்ல உற்பத்தி நிலையம் பளையில் திறந்து வைப்பு.

பனை, தென்னை வள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கங்களை பலப்படுத்தும் நோக்கோடு பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் அவர்கள் பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறார்.அந்த வகையில்  பளை பனை தென்னை வள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கத்தினரின் வளர்ச்சிக்காகவும்,  அங்கத்தவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் ...

மேலும்..

ஐ.தே.க. வுக்கு ஆதரவு கொடுத்தும் கூட்டமைப்பால் அரசியல் கைதிகளை விடுவிக்க முடியவில்லை – கோட்டா

ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவு கொடுத்தும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரால் அரசியல் கைதிகளை விடுவிக்க முடியவில்லையென முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தனைச் சந்தித்தபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். 2009 ஆம் ...

மேலும்..

யாழில் வர்த்தக நிலையத்தில் தீ – 5 இலட்சம் ரூபாய் பெறுமதியுடைய பொருட்கள் சாம்பல்

யாழ். சாவகச்சேரி – மடத்தடி சந்தியில் அமைந்துள்ள வர்த்தக நிலையமொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில், குறித்த விற்பனை நிலையம் முற்றாக எரிந்து சாம்பலாகியுள்ளது. குறித்த வர்த்தக நிலையத்தின் உரிமையார் நேற்று (புதன்கிழமை) இரவு வெளியில் சென்றிருந்த நேரம் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து ...

மேலும்..

சுஷ்மா சுவராஜின் மறைவுக்கு ஜனாதிபதி மைத்திரி அனுதாபம்!

இந்திய முன்னாள் வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜின் மறைவுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அனுதாபம் தெரிவித்துள்ளார். திடீரென மாரடைப்பு ஏற்பட்டு, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் நேற்று முன்தினம் காலமானார். இந்நிலையில் அவரது இழப்பு குறித்து டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள ஜனாதிபதி மைத்திரி, ...

மேலும்..

கட்டுநாயக்காவில் சீரற்ற வானிலை: இரு விமானங்கள் திருப்பி அனுப்பப்பட்டன

சீரற்ற வானிலைக் காரணமாக கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்க வேண்டிய 2 விமானங்கள், மத்தள விமான நிலையத்துக்கு அனுப்பப்பட்டுள்ளன. கட்டுநாயக்க விமான நிலையத்தை அண்மித்த பகுதிகளில் இன்று (வியாழக்கிழமை) அதிகாலை கடும் காற்றுடன் கூடிய வானிலை நிலவி வருகின்றது. இதன்காரணமாக கட்டார் விமான நிறுவனத்துக்குச் ...

மேலும்..

யாழில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் – உரும்பிராய், கோப்பாய் வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உரும்பிராய் கிருஸ்ணன் கோவிலடியில் இன்று (வியாழக்கிழமை) காலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. மோட்டார் சைக்கிளொன்று வீதியைக் கடக்க முற்பட்ட வேளை, பிரதான வீதியில் பயணித்த மற்றொரு மோட்டார் சைக்கிளில் ...

மேலும்..

சரத் பொன்சேகாவே ஜனாதிபதி வேட்பாளர்?

அடுத்த ஜனாதிபதி தேர்தலில் கோட்டபாய ராஜபக்ஷ போட்டியிட்டால் அவருக்கு போட்டியாக ஐ.தே.க. சார்பாக சரத் பொன்சேகாவை நிறுத்துமாறு அக்கட்சியினர் கோரிக்கை விடுத்துள்ளனர். ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையில் அண்மையில் அலரிமாளிகையில் இடம்பெற்ற விசேட சந்திப்பின்போதே குறித்த ...

மேலும்..

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் விளையாட்டுப் போட்டி -2019

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் விளையாட்டுத் துறை அமைச்சினால் கனடா- ரொறன்ரோவில் பேர்ச்மவுண் (Birchmount stadium) விளையாட்டு மைதானத்தில் ஆகஸ்ட் மாதம் 3 ம் திகதி 4வது வருட தட கள விளையாட்டுப் போட்டி காலை 9 30 மணிக்கு தேசியக் ...

மேலும்..

சவால்களை எதிர்கொண்டு வடக்கை மீள கட்டியெழுப்புவேன் – ஆளுநர்!

சவால்கள் அனைத்தையும் எதிர்கொண்டு வடக்கு மாகாணத்தை மீள கட்டியெழுப்புவேன் என வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் தெரிவித்தார். அருள் கல்வி வட்டம் நடாத்தும் 2019ஆம் ஆண்டு க.பொ.த சாதாரண தரப்பரீட்சை மாணவர்களுக்கான இலவச கருத்தரங்கு ஆளுநர் தலைமையில் யாழ். வீரசிங்கம் ...

மேலும்..

பிரதமர் ரணிலுக்கு தனது நோக்கங்களை வெளிப்படுத்த உரிமை உண்டு – மயந்த

ஜனாதிபதி வேட்பாளர் குறித்த தனது நோக்கங்களை கூற ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் என்ற ரீதியில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு உரிமை உள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் மயந்த திசாநாயக்க தெரிவித்துள்ளார். சமீபத்தில் இடம்பெற்ற ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற குழு கூட்டத்தின் ...

மேலும்..

அதிகாரப் பகிர்விற்கு அனைவரும் ஒன்றிணைவோம்

வடக்கு மாகாண முன்னாள் அமைச்சர் ப.டெனீஸ்வரன் அவர்களை அவர் புரிந்த ஊழல் குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில்ரூபவ் முதலமைச்சர் அவரை ராஜிநாமா செய்யக்கோரியபோதும் அவர் தனது பதவியைத் துறக்காததன் காரணமாக அவர் அவரது அமைச்சுப் பதவியில் இருந்து நீக்கப்பட்டு அவரது இடத்திற்குப் புதியதோர் அமைச்சர் நியமிக்கப்பட்டார். புதிய அமைச்சர் ...

மேலும்..

உண்மையைக் கண்டறிய நீதியான விசாரனைக்கு ஒத்துழையுங்கள்

உண்மையைக் கண்டறிய நீதியான விசாரனைக்கு ஒத்துழைத்து உயர்ந்த சபைக்கு அறிக்கை மூலம் சமர்ப்பியுங்கள் . என துறை முகங்கள் மற்றும் கப்பற் துறை பிரதியமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தேசிய அமைப்பாளருமான அப்துல்லா மஃறூப் உறுதிப்படத் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் நேற்று (07) ...

மேலும்..

பெண்ணின் கையை அகற்றியதாகக் கூறப்படும் சம்பவம் – உடனடி விசாரணைக்கு உத்தரவு!

கர்ப்பப்பையை அகற்றுவதற்காக பெண் ஒருவரின் கையொன்றை அகற்றியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பாக உடனடியாக விசாரணை நடத்துவதற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சுகாதார மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சர் ராஜித சேனாரட்ன சுகாதார அமைச்சின் விசாரணைப் பிரிவுக்கு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். மாறவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பெண் ...

மேலும்..

கனேடிய தமிழ் வானொலியின் நட்சத்திர விழா 2019

னடிய தமிழ் வானொலி (CTR )  நடாத்தும் நட்சத்திர விழா 2019 இந்த ஆண்டு Aug 31 மற்றும் Sep 01ம் சனி ஞாயிறு தினங்கள்  Middlefield &14th Avenue   வன்னிவீதியில் அமைந்திருக்கும் Markham Aaniin Community Centre Park   ...

மேலும்..

மத்தள விமான நிலையத்தை நேரில் ஆய்வு செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு!

மோசடிகள் குறித்து ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பொலிஸ் பிரிவு அதிகாரிகளும் அரச மதிப்பீட்டு திணைக்களத்தின் அதிகாரிகளும் மத்தள விமான நிலையத்திற்கு நேரடியாக சென்று ஆய்வுகளை மேற்கொள்ளவுள்ளனர். அதற்கமைய அவர்கள் இன்று (வியாழக்கிழமை) அங்கு சென்று ஆய்வு செய்யவுள்ளனர். குறித்த விமான நிலையத்தில் நெல் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளது. ...

மேலும்..

வவுனியாவில் தொடர்ந்தும் கடும் காற்று – மக்கள் இடம்பெயர்வு!

வவுனியாவில் ஏற்பட்டுள்ள அனர்த்தத்தில் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் தொடர்ந்தும் வேறு இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். வவுனியாவில் கடந்த சில நாட்களாக நிலவி வரும் கடும் காற்று மற்றும் மழையுடன் கூடிய காலநிலையினால் வவுனியா செட்டிகுளம், வவுனியா வடக்கு, நெடுங்கேணி ...

மேலும்..

கண்டி – கொழும்பு பிரதான வீதியில் விபத்து: பெண்கள் உட்பட மூவர் உயிரிழப்பு!

கண்டி – கொழும்பு பிரதான வீதியில்  இடம்பெற்ற வாகன விபத்தில் இரு பெண்கள் உட்பட மூவர் உயிரிழந்துள்ளனர். அத்துடன் இருவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கண்டி – கொழும்பு பிரதான வீதியின் நிட்டம்புவப் பகுதியிலேயே இந்த விபத்து நேற்று (புதன்கிழமை) மாலை இடம்பெற்றுள்ளது. கண்டி ...

மேலும்..

மின் கம்பிகள் பிரதான வீதியில் அறுந்து விழுந்ததன் காரணமாக போக்குவரத்து பாதிப்பு

அட்டன் மற்றும் கினிகத்தேனை பகுதிகளில் பெய்து வந்த கன மழை காரணமாக அட்டன் – கொழும்பு பிரதான வீதியில் கினிகத்தேனை பிட்டவல பகுதியில் 08.08.2019 அன்று அதிகாலை 3 மணியளவில் பாரிய மரம் ஒன்று சரிந்து விழுந்ததன் காரணமாக அவ்வீதியினூடான போக்குவரத்து ...

மேலும்..

நாடாளுமன்ற நிகழ்ச்சி நிரலில் மாற்றம்!

சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் இன்று கூடவுள்ள நாடாளுமன்ற அமர்வின் நிகழ்ச்சிநிரலில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதற்கமைய நாளைய தினம் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவிருந்த காரணிகள் குறித்து இன்றைய (வியாழக்கிழமை) அமர்வில் விவாதங்கள் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சாலிந்த திசாநாயக்கவின் இறுதிக் கிரியைககள் ...

மேலும்..

எதிர்ப்புகளுக்கு மத்தியில் அருவக்காட்டில் குப்பை கொட்டும் பணிகள் ஆரம்பம்?

கொழும்பில் தேங்கியுள்ள குப்பைகளை புத்தளம் அருவக்காட்டிற்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கொழும்பு மாநகரசபை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அதற்கமைய, இன்று (வியாழக்கிழமை) முதல் கொழும்பில் குப்பை சேகரிக்கும் பணிகள் சுமூகமடையும் என்றும் தெரிவிக்கப்படுகிறது. கொழும்பு மாநகர சபைக்கு உட்பட்ட பகுதிகளிலுள்ள குப்பைகளை கெரவலப்பிட்டிய குப்பைமேட்டில் கொட்டுவதற்கு ...

மேலும்..

மட்டக்களப்பு என்ன சவுதி அரேபியாவா? – ஹிஸ்புல்லாவின் பல்கலைக்கழகம் குறித்து யோகேஸ்வரன் எம்.பி.

மட்டக்களப்பு பல்கலைக்கழகம் நன்கு திட்டமிட்ட வகையில் ஒரு மதம் சார்ந்து அமைக்கப்பட்டுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகஸ்வரன் கடுமையாக சாடியுள்ளார். அத்துடன், மட்டக்களப்பு சவுதி அரேபியாவா எனக் கேள்வியெழுப்பியுள்ள அவர், உடனடியாக அந்தப் பல்கலைக்கழகத்தை அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டும் எனக் ...

மேலும்..

தமிழர்களின் ஆதரவின்றியே தேர்தலில் நான் வெல்லுவேன்! – கோட்டா

தமிழர்களின் ஆதரவின்றியே தேர்தலில் நான் வெல்லுவேன் - கோட்டா உறுதியான நம்பிக்கை * தமிழ்க் கூட்டமைப்பை சந்திக்க விருப்பம் * புதிய அரசமைப்பு வராது * 13ஆவது திருத்தமே தீர்வு * பொலிஸ் அதிகாரம் வழங்கினாலும் காணி அதிகாரம் இல்லை * அரசியல் விடயங்களை மஹிந்த பார்த்துக் கொள்ளுவார் "தமிழ் மக்களின் ஆதரவு ...

மேலும்..

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை எள்ளி நகையாடிய கோட்டாபய

போர் முடிந்த பின்னர் 12 ஆயிரம் முன்னாள் போராளிகளை விடுவித்தோம். ஆனால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சிக்கு ஆதரவு கொடுத்தும் அரசியல் கைதிகளை விடுவிக்க முடியவில்லை." - இவ்வாறு முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபாய ராஜபக்ச கூறியுள்ளார். தமிழ்த் தேசியக் ...

மேலும்..

சமகால அரசியற் கருத்துக் களம் கிழக்கில் தெளிவூட்டுகிறார் சுமன்!

கிழக்கு மாகாணத்திலும் சமகால அரசியல் விடயங்கள் தொடர்பாக மக்களுக்கு தெளிவூட்டுகின்ற நிகழ்வு எதிர்வரும் 12 ஆம் திகதி திங்கட்கிழமை காலை 9 மணிக்கு களுவாஞ்சிக்குடி இராசமாணிக்கம் ஞாபகார்த்த மண்டபத்தில் இடம்பெற உள்ளது. இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பட்டிருப்புத் தொகுதித் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற ...

மேலும்..

தமிழரின் பிரச்சினைக்காக குரல் கொடுத்தவர் சுஷ்மா! – சுமந்திரன் இரங்கல்

இந்தியாவின் முன்னாள் வெளியுறவு அமைச்சரும் பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான சுஷ்மா சுவராஜின் இழப்பு ஈடுசெய்ய முடியாதது. தமிழ் மக்களின் பிரச்சினைக்காக உணர்வுபூர்வமாக குரல் கொடுத்த ஒரு தலைவர் அவர்." - இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற ...

மேலும்..

நீதிபதிக்கு நீதி படிப்பித்த நீதிபதிகள்!

தான் பிடித்த முயலுக்கு மூன்று கால்கள் என்பதால் முயல்களுக்கே மூன்றுகால்கள்தான் என்ற கொள்கை உடைய முட்டாள் ஒருவரை முதலமைச்சர் ஆக்கியமைக்காய் வேதனைப்படுகின்றோம். வடக்கு மாகாண அமைச்சரவையில் இருந்து அமைச்சர் டெனீஸ்வரனை முதலமைச்சர் தன்னிச்சையாக பதவி நீக்கியமை தொடர்பில் முதலமைச்சர் விக்கினேஸ்வரனுக்கு எதிராக மேன்முறையீட்டு ...

மேலும்..

தங்கும் இடம் இல்லாமல் தவிர்க்கும் வைத்தியசாலை பணிப்பாளர்

திருகோணமலை பொது வைத்தியசாலை பணிப்பாளருக்கு தங்குமிட வசதி இல்லாமையினால் மிகவும் சிரமப்பட்டு வருவதாக தெரியவந்துள்ளது. பல நோயாளர்களின் நோய்களை குணப்படுத்தும் வைத்தியர்களின் பிரதானியாக செயற்பட்டு வருபவரும், வைத்தியசாலையின் அபிவிருத்திகளை முன்னெடுத்து வரும் பணிப்பாளருமான இவருக்கு இப்படியான அவல நிலை ஏற்படுகின்றமை மிகவும் வேதனை ...

மேலும்..

வவுனியாவில் திடீரென வீசிய கடும் காற்று: 6 வீடுகள் சேதம்

வவுனியாவில் இன்று மதியம் திடீரென வீசிய கடும் காற்று காரணமாக 6 வீடுகள்  சேதமடைந்துள்ளதுடன் 18 பேர் பாதிப்படைந்துள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. வவுனியாவின் பல பகுதிகளிலும் மதியம்  திடீரென  கடும்காற்று வீசியது. இதனால் வெண்கல செட்டிகுளம் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட ஆண்டியாபுளியங்குளம் ...

மேலும்..