August 10, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டவை

பண்புப் பயிற்சி முகாம்-2019

இந்துஸ்வயம்சேவகசங்கம், அம்பாறை. ( காரைதீவு ) இந்துமக்களை ஒன்றிணைத்து ஒருங்கிணைத்த இந்து சக்தியின் மூலம் சுயகௌரவம் மிக்க சமுதாயத்தை கட்டி எழுப்பும் அரும்பணியினையாற்றி வருகின்றது. அத்துடன் பலதரப்பட்ட சேவைப்பணிகளையும் செய்கின்றது. அந்தவகையில் 7 நாள் பண்புப்பயிற்சி முகாம் 2019/08/07 - 2019/08/14 வரை இடம் ...

மேலும்..

யாழ் தென்மராட்சி மந்துவில் பகுதியில் மாதிரிக் கிராம வீட்டுதிட்ட கையளிப்பு நிகழ்வு

யாழ் தென்மராட்சி மந்துவில் பகுதியில் மாதிரிக் கிராம வீட்டுதிட்ட கையளிப்பு நிகழ்வு  நேற்றைய தினம் (10) சிறப்பாக இடம்பெற்றது. தென்மராட்சி பிரதேச செயலர் பிரிவில் மந்துவிலில் நிர்மாணிக்கப்பட்ட “திருவேரபுரம்” செமட்ட செவண மாதிரிக் கிராமம், வீடமைப்பு நிர்மாணத்துறை மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் ...

மேலும்..

இலங்கை மக்களுக்கு நாளைய தினம் வரலாற்று சிறப்புமிக்கது..!

(க.கிஷாந்தன்) ஐக்கிய தேசிய கட்சியின் இறுதி காலம் முடிவடைந்த நிலையில் நாட்டை வீணடித்த ஐக்கிய தேசிய கட்சிக்கு மக்கள் மீண்டும் வாக்களிக்க தயாராக இல்லை என கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தாநந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். நாவலபிட்டியில் உள்ள கட்சி காரியாலயத்தில் 10.08.2019 அன்று ...

மேலும்..

வரித்துக்கொண்ட இலட்சியத்துக்காக ஒழுக்கம், கட்டுப்பாட்டுடன் போரிட்டவர்தான் பிரபாகரன் – மஹிந்த புகழாரம்

"தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் ஓர் இலட்சியத்தை அடிப்படையாகக் கொண்டு போரிட்டார். அவரிடம் ஒழுக்கமும் கட்டுப்பாடும் இருந்தது. அடிக்க வேண்டும் என்றால் அடிப்பார் இல்லையென்றால் அடிக்காமல் விடுவார்." - இவ்வாறு முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய எதிர்க்கட்சித் தலைவருமான மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார். "ஆளும் ...

மேலும்..

இலங்கையில் ஜனாதிபதி தேர்தல்! இந்தியாவில் வெளியான கருத்து கணிப்பு! வெற்றியாளர் யார்?

இலங்கையில் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தொடர்பில் இந்தியாவில் கருத்து கணிப்பு ஒன்று நடத்தப்பட்டுள்ளது. தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களின் பெயர்களில் அதிக விருப்பம் கொண்ட நபர்களை அறிந்து கொள்வதற்காக இந்த கருத்து கணிப்பு நடத்தப்பட்டுள்ளது. ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில் அமைச்சர் சஜித் ...

மேலும்..

சமூக ஊடகங்களின் தாக்கம் தொடர்பான கருத்தமர்வு

வவுனியா மாவட்ட ஊடகவியலாளர்கள் மற்றும் சமூக ஊடகங்களை பயன்படுத்துவோருக்கான கருத்தமர்வு ஒன்று இன்று (10) காலை வவுனியா மில்வீதியில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியில் இடம்பெற்றது. வவுனியா மாவட்டத்திலுள்ள ஊடகவியலாளர்கள் மற்றும் சமூக ஊடகங்களை பயன்படுத்துவோருக்கான சமூக ஊடகங்கள் பற்றிய தெழிவூட்டல், அதன் ...

மேலும்..

சிலர் முன்வைத்த 30 கோரிக்கைகளில் அரைவாசி பகுதி நிறைவேற்றப்பட்டள்ளதாக அமைச்சர் திகாம்பரம் தெரிவிப்பு

(க.கிஷாந்தன்) எதிர்வரும் ஐனாதிபதி தேர்தலின் போது தமிழ் முற்போக்கு கூட்டணி யாருக்கு ஆதரவு வழங்குவது என்பது தொடர்பில் வெகுவிரைவில் தமிழ் முற்போக்கு கூட்டணி அறிவிக்கும் என மலைநாட்டு புதிய கிராமங்கள் தோட்ட உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் தெரித்துள்ளார். 10.08.2019 ...

மேலும்..

பஸில் குழு இயக்கிய ‘மாற்றத்தின் பேரழிவு’ – நாளை முதல் காட்சிப்படுத்தப்படும்

2015ஆம் ஆண்டு ஆட்சி அரச மாற்றத்தால் வந்த விளைவுகளைக் காட்டும் 30 நிமிட விவரணக் குறும்படம் ஒன்றை ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தேசிய அமைப்பாளர் பஸில் ராஜபக்ச தலைமையிலான குழு உருவாக்கியுள்ளது. அதன் பெயர் 'மாற்றத்தின் பேரழிவு.' இந்த விவரணக் குறும்படத்தில் உயிர்த்த ...

மேலும்..

கோட்டாவை சித்தார்த்தன் இரகசியமாகவே சந்தித்தார்! – கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன் தெரிவிப்பு

"தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன், முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்சவை இரகசியமாகவே சந்தித்தார். அது தொடர்பான தகவல்கள் வெளிவந்ததும் அதனை அவர் ஒப்புக்கொண்டார்." - இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். வல்வெட்டித்துறையில் ஆழிக்குமரன் ...

மேலும்..

கம்போடியாவுடன் இணைந்து பௌத்த மதத்தை உலகம் முழுவதும் பரப்ப வேண்டும் – மைத்திரி

தேரவாத பௌத்த மதத்தை உலகம் முழுவதும் பரப்புவதற்கான ஆன்மீக பிரசார நடவடிக்கைகளில் இலங்கையும் கம்போடியாவும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். கம்போடியாவின் தலைநகராகிய நொம் பென்னில் அமைந்துள்ள விகாரையில் இடம்பெற்ற மத வழிபாடுகளில் இன்று (சனிக்கிழமை) கலந்துகொண்டபோதே ஜனாதிபதி ...

மேலும்..

நிந்தவூரில் பெட்மின்டன் உள்ளக அரங்கு உடைக்கப்பட்டு சேதம்

நிந்தவூரில் பெட்மின்டன் உள்ளக அரங்கு ஒரு சில கால்புணர்சி கொண்டவர்களினால்  உடைக்கப்பட்டு சேதப்படுத்தப்படுவதாக பிரதேச இளைஞர்கள்  கவலையடைகின்றனர். நிந்தவூர் பிரதேச இளைஞர்கள் கடந்த காலங்களில் சம்மாந்துறை மற்றும் ஏனைய பிரதேசங்களுக்கு நீண்ட தூரங்கள் சென்று பெட்மின்டன் விளையாட வேண்டிய நிலை காணப்பட்டது. இதனை கவனத்தில் கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.சீ.பைசல் காசிம் மேற்கொண்ட முயற்சியினால் சுமார் ஒரு ...

மேலும்..

பிரபாகரன் வந்த மார்க்கம் தவறானாலும் அவரிடம் இலக்கும் ஒழுக்கமும் இருந்தது – மஹிந்த

பிரபாகரன் வந்த மார்க்கம் தவறானாலும் அவரிடம் இலக்கும் ஒழுக்கமும் இருந்ததாக  எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவரிடம் ஏப்ரல்-21 தாக்குதலுக்குப் பின்னர் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் தொடர்பாக பரவலாகப் பேசப்பட்டமை குறித்து ...

மேலும்..

யாழில் பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை ஆரம்பித்தார் சஜித்! முதல்வரும் பங்கேற்பு!

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ள வீடமைப்பு நிர்மாணத்துறை மற்றும் கலாச்சார அமைச்சர் சஜித் பிரேமதாச குடாநாட்டின் பல இடங்களுக்கும் சென்று பல்வேறு அபிவிருத்திப் பணிகளை ஆரம்பித்து வைத்தார். இதற்கமைய முதலாவது நிகழ்வாக இன்று (சனிக்கிழமை) காலை யாழ். சென் மார்டின் தேவாலயத்திற்குச் சென்று அந்த ...

மேலும்..

தேர்தல்களில் தமிழ் பிரதிநிதிகளின் அங்கத்துவம் அதிகரிக்கப்பட வேண்டும் – இராதாகிருஷ்ணன்

தேர்தல்களில் தமிழ் பிரதிநிதிகளின் அங்கத்துவம் அதிகரிக்கப்பட வேண்டும் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவரும் விசேட பிரதேசங்களுக்கான அபிவிருத்தி அமைச்சருமான வே.இராதாகிருஷ்ணன் தெரிவித்தார். நுவரெலியாவில் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், ...

மேலும்..

யாழில் பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை ஆரம்பித்து வைத்தார் சஜித்

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ள வீடமைப்பு நிர்மாணத்துறை மற்றும் கலாச்சார அமைச்சர் சஜித் பிரேமதாச குடாநாட்டின் பல இடங்களுக்கும் சென்று பல்வேறு அபிவிருத்திப் பணிகளை ஆரம்பித்து வைத்தார். இதற்கமைய முதலாவது நிகழ்வாக இன்று (சனிக்கிழமை) காலை யாழ். சென் மார்டின் தேவாலயத்திற்குச் சென்று அந்த ...

மேலும்..

வவுணதீவில் ஆர்.பி.ஜி. ரக குண்டு கண்டெடுப்பு

மட்டக்களப்பு, வவுணதீவு பகுதியில் ஆர்.பி.ஜி. ரக மோட்டார் குண்டு ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு வவுணதீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அரசடிச்சேனை பகுதியில் உள்ள வயல் வெளியில் இருந்தே நேற்று (வெள்ளிக்கிழமை) குறித்த குண்டு கண்டெடுக்கப்பட்டது. இந்த வயல் வெளியில் நேற்று முன்தினம் தீப்பற்றியுள்ள போதும் மோட்டர் ...

மேலும்..

‘பல்டி’ அடித்தார் கோட்டா

தமிழ் மக்களின் ஆதரவு இல்லாமலேயே தான் வெற்றி பெறுவேன் என்று புளொட் அமைப்பின் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான த.சித்தார்த்தனுடனான சந்திப்பில் கருத்துத் தெரிவித்திருந்த முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச தற்போது அந்த நிலைப்பாட்டிலிருந்து ...

மேலும்..

ஜனாதிபதி வேட்பாளர் குறித்து ஐ.தே.க.வின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 26 பேர் முக்கிய தீர்மானம்

ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பாக ஐக்கிய தேசியக் கட்சியின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள் 26 பேர் ஒன்றிணைந்து தீர்மானமொன்றை எடுத்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் அஜித் பி பெரேரா தெரிவித்துள்ளார். அத்தோடு, இந்த தீர்மானம் விரைவில் தெரியவரும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி வேட்பாளரை தெரிவு செய்வதில் ...

மேலும்..

5 மாணவர்கள் படுகொலை விவகாரம் – சட்டமா அதிபரின் தீர்மானத்திற்கு மன்னிப்புச் சபை வரவேற்பு

திருகோணமலையில் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டதாகக் கூறப்படும் தமிழ் மாணவர்களின் கொலை தொடர்பாக மீண்டும் விசாரணைகளை ஆரம்பிப்பதற்கு சட்டமா அதிபர் எடுத்திருக்கும் தீர்மானத்தை சர்வதேச மன்னிப்புச் சபை வரவேற்றுள்ளது. அத்தோடு அந்த விசாரணைகள் பயனுள்ளதாக இருக்க வேண்டுமானால் சில சீர்த்திருத்தங்கள் அவசியம் என்றும் அந்த சபை ...

மேலும்..

சஜித்தின் நிகழ்வை புறக்கணித்த கூட்டமைப்பு?

ஐக்கிய தேசியக் கட்சிக்குள் ஜனாதிபதி வேட்பாளர் விவகாரம் சூடுபிடித்துள்ள நிலையில், அமைச்சர் சஜித் பிரேமதாசவின் நிகழ்வை தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் புறக்கணித்துள்ளதாக அரசியல் அவதானிகள் தெரிவித்துள்ளனர். வவுனியா பாவற்குளம் பகுதியில் அமைக்கப்பட்ட கலைமகள் நகர் வீட்டுத் திட்டத்தை கையளிக்கும் நிகழ்வு அமைச்சர் சஜித் ...

மேலும்..

அமைச்சர் நவீன் திஸாநாயக்க யாழ். நாகவிகாரைக்கு விஜயம்!

கைத்தொழில் பெருந்தோட்ட அமைச்சர் நவீன் திஸாநாயக்க உள்ளிட்ட குழுவினர் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ளனர். பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொள்வதற்காக அங்கு விஜயம் செய்துள்ள அவர்கள், இன்று (சனிக்கிழமை) காலை யாழ். நாகவிகாரைக்கு சென்று வழிபாடுகளில் ஈடுபட்டனர். அத்துடன் அமைச்சரின் விஜயத்தினை ஞாபகப்படுத்தும் முகமாக நாகவிகாரை வளாகத்தில் ...

மேலும்..

உள்வாரி வெளிவாரி என்ற பாகுபாடு இல்லாமல் உடனடியாக நியமனத்தில் உள்வாங்க வேண்டும் – HND தொழிற் சங்கம்

பாறுக் ஷிஹான் இலங்கை உயர்தேசிய கணக்கியல் டிப்ளோமா பாடநெறியை முடித்தவர்கள் வேறு வேலைகள் செய்து கொண்டு படிக்கும் வெளிவாரியன பட்டதாரிகள் போன்றவர்கள் அல்ல. நாங்கள் நான்கு வருடங்கள் கற்பதுடன், உரிய முறையில் பயிற்சியையும் பெற்றவர்கள்.உள்வாரி வெளிவாரி என்ற பாகுபாடு இல்லாமல் உடனடியாக நியமானத்தில் ...

மேலும்..

எதிர்வரும் தேர்தல் காலங்களில் அனைத்து சிறுபான்மை மக்களும் ஒன்று சேர்ந்து ஒற்றுமையான ஒரு தீர்மானத்தை எடுக்க வேண்டும்

இலங்கையில் சிறுபான்மை மக்கள் அனைத்து உரிமைகளையும் பெற்று ஏனையவர்கள் போல நாங்களும் வாழ வேண்டுமாக இருந்தால் சிறுபான்மை மக்களின் உள்ளுராட்சி மன்றம், மாகாண சபை மற்றும் பாராளுமன்றம் ஆகிய தேர்தல்களின் தமிழ் பிரதிநிதிகளின் அங்கத்துவம் அதிகரிக்கப்பட வேண்டும். அதனால் அதனை பாதுகாக்க ...

மேலும்..

கட்சியின் விதிமுறைகளை மீறினால் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் – ஐ.தே.க. பொதுச் செயலாளர் எச்சரிக்கை

பதுளையில் இடம்பெறும் நிகழ்வில் எந்த உறுப்பினராவது கட்சியின் விதிமுறைகளை மீறினால் அவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். நாளை மறுதினம் (திங்கட்கிழமை) பிரேமதாசவை வரவேற்கும் நிகழ்வு ஒன்று பதுளையில் ...

மேலும்..

சுதந்திரக் கட்சியினருக்கு எந்தவொரு அநீதியும் ஏற்பட இடமளிக்க மாட்டேன்-மஹிந்த

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைந்து செயற்படும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சார்ந்தவர்களுக்கு எந்தவொரு அநீதியும் ஏற்பட இடமளிக்கப்படமாட்டாது என எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உள்ளூராட்சி மன்றத் தலைவர்கள் உள்ளிட்ட உறுப்பினர்களுக்கும் எதிர்க்கட்சித் தலைவருக்கும் இடையில் கொழும்பு ...

மேலும்..

இலங்கை அபிவிருத்தியடைய தேசிய ஒற்றுமை அவசியம் – ஸ்ரீநேசன்

இலங்கை அபிவிருத்தி அடைந்த நாடு எனும் அங்கீகாரத்தை பெற்றுக்கொள்ள வேண்டுமெனில் தேசிய ஒற்றுமை மற்றும் தேசிய ஐக்கியம் என்பன கட்டியெழுப்பப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீநேசன் தெரிவித்தார். நாடாளுமன்றில் நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு ...

மேலும்..

நாட்டின் பல பகுதிகளில் காற்றின் வேகம் அதிகரிக்கும் – வளிமண்டலவியல் திணைக்களம்

நாட்டின் பல பகுதிகளில் நிலவிவரும் காற்றுடன் கூடிய காலநிலை தொடர்ந்தும் நீடிக்குமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (சனிக்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தொடர்பாக தெரிவித்துள்ளது. வடக்கு, வடமத்திய, மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் மணித்தியாலத்துக்கு ...

மேலும்..

சுற்றுலா பயணிகளின் வானில் ஆயுதமா? -பொலிஸாரின் சோதனையால் மட்டு.வில் பதற்றம்!

பிரித்தானியாவிலிருந்து இலங்கைக்கு வந்துள்ள சுற்றுலாப் பயணிகளின் வாகனம், மட்டக்களப்பில் கடும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. குறித்த வாகனத்தில் ஆயுதங்கள் இருப்பதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்தே இன்று (சனிக்கிழமை) காலை இந்த தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. இந்த சம்பவம் காரணமாக குறித்த பகுதியில் பதற்ற நிலைமை ...

மேலும்..

யாழில் இனந்தெரியாத கும்பல் அட்டகாசம்

யாழ்ப்பாணம் – கொக்குவில் பொற்பதி வீதியில் வீடொன்றுக்குள் புகுந்த இனந்தெரியாத கும்பல் அடாவடியில் ஈடுபட்டுத் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொற்பதி வீதியில் முதலாம் ஒழுங்கையில் உள்ள அரச உத்தியோகத்தரின் வீட்டிலேயே இந்த சம்பவம் நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு 9.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. 2 ...

மேலும்..

ஆளுநரின் வேண்டுகோளுக்கு இணங்க ஏ9 வீதியில் பயணிகள் பேரூந்துகள் மீது திடீர் சோதனை நடவடிக்கை

வடக்கு கௌரவ ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க ஏ9 வீதியில் பயணிக்கும் யாழ் - கொழும்பு மற்றும் கொழும்பு – யாழ் பேருந்துகள் மீது தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவினரால் தீடீர் சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. மக்களின் நலன்கருதி நேற்று இரவு மற்றும் இன்று அதிகாலை ...

மேலும்..

ஐ.தே.க.வின் ஜனாதிபதி வேட்பாளர்- நாடாளுமன்றக் குழுவை கூட்டுமாறு பிரதமரிடம் கோரிக்கை?

ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரை தீர்மானிப்பதற்கு கட்சியின் நாடாளுமன்றக் குழுவையும், செயற்குழுவையும் கூட்டுமாறு கோரிக்கை விடப்பட்டுள்ளது. கட்சியின் தலைவர் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் இந்த கோரிக்கையை முன்வைத்து கடிதம் ஒன்று அனுப்பப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதற்கமைய 50இற்கும் மேற்பட்ட ஐ.தே.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் ...

மேலும்..

தமிழர்களின் ஆதரவு தேவையில்லை என கூறவில்லை – கோட்டா

தமிழர்களின் ஆதரவு தமக்குத் தேவையில்லை என தான் கூறியதாக வெளியான செய்திகள் உண்மைக்கு புறம்பானவையென முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அண்மையில் புளொட் தலைவர் சித்தார்த்தனுக்கும் கோட்டாபய ராஜபக்ஷவிற்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றிருந்தது. இதன்போது, தமிழ் மக்களின் ஆதரவு இன்றியே சிங்கள ...

மேலும்..

தோட்டப் பகுதியில் சுகாதார சேவையினை முன்னெடுக்க சுகாதார உத்தியோகஸத்தர்களுக்கு தமிழ் மொழி பயிற்சி.

கண்டி மாவட்டத்தில் உள்ள தோட்டப்பகுதியில் சுகாதார சேவையினை சிறந்த முறையில் முன்னெடுப்பதற்கும் மக்களுக்கு தமிழ் மொழியிலேயே சுகாதார சேவையினை பெற்றுக்கொடுப்பதற்கும் குடும்ப நல உத்தியோகஸ்த்தர்களுக்கு தமிழ் மக்களிடம் தமிழ் மொழியிலேயே பேசி சேவை பெற்றுக்கொடுப்ப தற்காக தமிழ் மொழி பயிற்சி நெறி ஒன்று ...

மேலும்..

திருக்கேதீஸ்வர வளைவை மீண்டும் அமைக்க நடவடிக்கை – சுமந்திரன் உறுதி

சமூகங்களுக்கிடையிலே பிளவு ஏற்படாத வகையில் மீண்டும் திருக்கேதீஸ்வர வளைவை அமைப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் உறுதியளித்துள்ளார். அத்துடன், இந்து மக்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் அத்துமீறல்கள் தொடர்பாகவும் நடவடிக்கை எடுத்துவருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். நேற்றுமுன்தினம் யாழில் இந்து அமைப்புக்களின் தலைவர்கள் மற்றும் மதகுருமார்களை ...

மேலும்..

கிழக்கு மாகாண ஆளுநரின் வாழ்த்து செய்தி

வருடாந்தம் முஸ்லிம் சமயத்தினர் மக்காவிற்கு புனித யாத்திரை மேற்கொள்வதை ஹஜ் என்று அழைக்கப்படுகின்றது. இவ்வாறான ஒரு புனித யாத்திரையை வசதிபடைத்த, வயது வந்த சுகதேகியான முஸ்லிம் ஒவ்வொருவரும் தனது நாளில் ஒரு தடவையேனும் மேற்கொள்ள வேண்டியது சமய விதிப்படி கட்டாயாமாக்கப்பட்டுள்ளது. எனவே இந்தப்புனித ...

மேலும்..

நவீன முறையில் நிர்மானிக்கப்பட்ட பஞ்சகர்ம வைத்தியசாலையின் புதிய கட்டடம் திறப்பு

0 மில்லியன் ரூபா நிதியின் கீழ் நவீன முறையில் நிர்மானிக்கப்பட்ட திருகோணமலை கப்பல்துறை பஞ்சகர்ம வைத்தியசாலையின் புதிய கட்டடம் திறந்து வைத்து பொதுமக்கள் பாவனைக்கும் கையளித்து வைக்கப்பட்டது. கிழக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்கள ஆணையாளர் வைத்திய கலாநிதி  திருமதி ஆர்.ஸ்ரீதர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு ...

மேலும்..

கன்னியா இடைக்காலத் தடை: பாராட்டினார் ஆறு.திருமுருகன்!

  கன்னியா வென்னீர் ஊற்று விவகாரத்தில் தலையிட்டு, நீதிமன்றத்தின் ஊடாக இடைக்காலத் தடையை பெற்றிருப்பது எமக்கு ஆறுதலைத் தருகின்றது. இந்த விவகாரத்துக்கு நிரந்தரத் தீர்வைப்பெற்றுத் தந்து விநாயகர் ஆலயம் மீண்டும் அமைக்கப்பட ஏற்பாடுகளை மேற்கொள்ளவேண்டும். அத்துடன், எங்களுக்குரிய பிரதிநிதிகள் நீங்கள். நாம் அரசியல் ...

மேலும்..

மகேந்திரனுக்குப் பிடியாணை

மத்திய வங்கி பிணைமுறி மோசடி வழக்கின் பிரதான சந்தேகநபராகப் பெயர் குறிப்பிடப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலையாகாமல் இருக்கும் முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன் மகேந்திரனைக் கைதுசெய்து நீதிமன்றத்தில் நிறுத்துமாறு நிரந்தர நீதாய நீதிமன்றத்தால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. சம்பத் அபயக்கோன், சம்பத் விஜயரத்ன மற்றம் ...

மேலும்..

இந்துமதம் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குருமார்களுடன் ஆராய்ந்தார் சுமந்திரன்!

இலங்கையில் இந்துமதம் அண்மைக்காலமாக பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகின்றது. கன்னியாவில் இந்துக்களின் பூர்வீக பிரதேசத்தில் வலவந்தமாக விகாரை அமைத்து, பௌத்தமயமாக்கும் முயற்சிகள் நடைபெற்றன. அதனைத் தடுக்கமுற்பட்ட தென்கயிலை ஆதீனம் தாக்கப்பட்டு அசிங்கப்படுத்தப்பட்டார். மன்னார் திருக்கேதீஸ்வரர் ஆலய வளைவு கிறித்தவர்களால் தகர்க்கப்பட்டது. இவ்வாறான பல்வேறு சவால்களை இந்துமதம் ...

மேலும்..

ரணிலுக்கு அழுத்தம் கொடுக்கும் சஜித் அணி!

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் ஐ.தே.க வுக்குள் எழுந்துள்ள சிக்கல்நிலையை அடுத்து கட்சியின் பின்னாசன உறுப்பினர்கள் குழு பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் முக்கிய கோரிக்கை ஒன்றை விடுக்கவுள்ளனர். ஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய செயற்குழு மற்றும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு என்பன இணைந்து ...

மேலும்..

எதிர்க்கட்சிக்கு சவால் விடுக்கும் வகையில் விரைவில் அறிவிக்கப்படவுள்ள ஜனாதிபதி டே்பாளர்!

ரணில்- சஜித் இடையே எந்தவித விரிசலும் இல்லை எனவும் கூடிய விரைவில் ஜனாதிபதி வேட்பாளர் அறிவிக்கப்படுவார் எனவும் ராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சியால் களமிறக்கப்படும் வேட்பாளர் சவாலாக காணப்பட்டாலும் கட்சி என்ற வகையில் அதற்கு முகம்கொடுக்க தயார். எதிர்க்கட்சி வேட்பாளருக்கு சவால் ...

மேலும்..

யாழிலிருந்து சென்று புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்களுக்கான அவசர கோரிக்கை!

காங்கேசன்துறை தேர்தல் தொகுதியின் வாக்காளர் பதிவேட்டில் இருந்து 25 ஆயிரம் வாக்காளர்கள் நீக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் யாழ். மாவட்டத்துக்கான நாடாளுமன்ற ஆசனங்கள் 5 ஆக, குறைக்கப்படும் நிலை ஏற்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால், காங்கேசன்துறை தேர்தல் தொகுதியில் உள்ள 21 ...

மேலும்..

ஊடக அமைச்சும் – இலங்கை பத்திரிகை பேரவையும் இணைந்து ஏற்பாடு செய்துள்ள ஊடகவியலாளர்களுக்கான பயிற்சிப் பட்டறை

ஊடக அமைச்சும் - இலங்கை பத்திரிகை பேரவையும் இணைந்து ஏற்பாடு செய்துள்ள ஊடகவியலாளர்களுக்கான பயிற்சிப் பட்டறை இன்று (10) திருகோணமலையில் ஆரம்பமானது. பிரச்சினைகளை அறிக்கையிடலும் ஊடகவியலாளர்களில் பொறுப்புக்களும் எனும் தலைப்பிலான  இச் செயலமர்வில் திருகோணமலை மாவட்ட ஊடகவியலாளர்களும், கிழக்கு பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாக ...

மேலும்..

வல்வையில் இருந்து இன்னொரு பிரபாகரன் தீர்மானிப்பது தெற்கு சிங்கள தலைமைகளே!

வீரம்செறிந்த மண்ணில் நின்று சுமன் முழக்கம் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனைப் போல மற்றுமொரு தலைவர், தமிழர்கள் மத்தியில் இருந்து உருவாகுவாரா இல்லையா என்பதை தென்னிலங்கை அரசியல் தலைவர்களே தீர்மானிக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்துள்ளார். நாட்டில் பல ...

மேலும்..

இலங்கையிலிருந்து சென்ற தற்கொலை குண்டுதாரிகள்

இலங்கையில் இருந்து 2 பயங்கரவாதிகள் பிலிப்பைன்ஸ் நாட்டுக்குள் பிரவேசித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 'ஸ்ரெயிட்ஸ் ரைம்ஸ்' (Straits Times) ஊடகத்தை மேற்கோள் காட்டி தமிழ் ஊடகம் ஒன்று இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, உயிர்த்த ஞாயிறு தாக்குதலை மேற்கொண்ட பயங்கரவாத குழுவான தேசிய தௌஹீட் ஜமாத் ...

மேலும்..

ஈழத்தமிழர்களுக்காக விஜய் சேதுபதி எடுத்த திடீர் முடிவு!

இலங்கை அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளரான முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்று படத்திலிருந்து விஜய் சேதுபதி விலகியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த திரைப்படத்தில் முரளியாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிக்க இருந்த நிலையில், இதற்கு விஜய் சேதுபதி சம்மதிக்க ...

மேலும்..

யாழில் இரவில் நடந்த அசம்பாவிதம்; வீட்டுக்குள் நுழைந்து மர்ம கும்பல் அடாவடி!

யாழ்ப்பாணம் - கொக்குவில், பொற்பதி வீதியில் வீடு ஒன்றின் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நேற்று இரவு இந்த சம்பவம் இடம்பெற்று்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்போது மிகவும் அடாவடித்தனமாக உள் நுழைந்த மர்ம கும்பல் வீட்டிலுள்ளவர்களை கடுமையாக எச்சரித்துள்ளனர். மேலும், அவ்வீட்டிலுள்ள தளபாடங்கள் மற்றும் மோட்டார் சைக்கிள் என்பவற்றை ...

மேலும்..

மட்டக்களப்பு கொத்துக்குளம் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் வரலட்சுமி பூஜை

மட்டக்களப்பு கொத்துக்குளம் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் இன்று (09.08.2019) வரலட்சுமி பூஜை நிகழ்வுகள் குரு சிவஸ்ரீ நாராயண சன்முகநாத தலைமையில் வெகு சிறப்பாக இடம்பெற்றது. தலைமையில் விநாயர் வழிபாடுகளுடன் விசேட அபிசேகம் பூஜைகளுடன் பிரதான கும்பங்கள் ஊர்வலமாக கொண்டுசெல்லப்பட்டு அம்மனுக்கு அபிசேகம் செய்யப்பட்டது. ...

மேலும்..