August 17, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டவை

மூதூரில் ஒன்பது வயதுடைய சிறுமியொருவரை துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய ஒரு பிள்ளையின் தந்தை விளக்கமறியலில்

திருகோணமலை மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் ஒன்பது வயதுடைய சிறுமியொருவரை துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய ஒரு பிள்ளையின் தந்தையை இம்மாதம் 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மூதூர் நீதிமன்ற நீதிவான் எம்.எஸ்.எம்.சம்சுதீன் இன்று(17) உத்தரவிட்டார். ஆணைச்சேனை,மூதூர் பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய ஒருவரே ...

மேலும்..

20 இலட்சம் ரூபா செலவில் ஹமீதியா பொது விளையாட்டு மைதானத்துக்கான பார்வையாளர் அரங்கு

திருகோணமலை மாவட்டம் தம்பலகாம பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட முள்ளிப்பொத்தானை ஹமீதியா விளையாட்டு மைதானத்தின் பார்வையாளர் அரங்குக்கான கட்டிட  நிர்மாணத்திற்கான  அடிக்கல் நடும் அங்குரார்ப்பண வைபவம் இடம் பெற்றது குறித்த நிகழ்வானது இன்று(17) துறை முகங்கள் மற்றும் கப்பற் துறை பிரதியமைச்சர் அப்துல்லா மஃறூப் ...

மேலும்..

பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீநேசனின் நிதி ஒதுக்கீட்டில் குமாரபுரம் குறுக்கு வீதி புனரமைப்பு

பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீநேசனின் நிதி ஒதுக்கீட்டில் குமாரபுரம் குறுக்கு வீதி புனரமைப்பு… மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட மாமாங்கம் குமாரபுரம் முதலாம் குறுக்கு வீதியானது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் அவர்களினால் மேற்கொள்ளப்பட்ட கம்பெரலிய நிகழ்ச்சித் திட்ட நிதி ஒதுக்கீட்டின் மூலம் கொங்கிறீட் ...

மேலும்..

முல்லை சிலாவத்தை கிராம மைதானம், வயல் பாதை, ஆலயம் என் 2.3 மில்லியன் ஒதுக்கீடு!

முல்லைத்தீவு மாவட்டம் கரைதுறைப்பற்று பிரதேச செயலக/பிரதேச சபைக்கு உட்பட்ட சிலாவத்தை கிராமதில் அமைந்துள்ள   இளம்பறவை விளையாட்டு கழகதினர்,  சிலாவத்தை கிராம அபிவிருத்தி சங்கத்தினர், அன்னம்மாள் ஆலயம் பங்கு மக்களின் மற்றும்  அவ் கிராம மக்களினாலும் தமது அமைப்புகளின் தேவைகளை முன்வைத்திருந்தனர். அதற்கு அமைவாக  ...

மேலும்..

கந்தளாயில் வேகக் கட்டுப்பாட்டை இழந்த டிப்பர் வாகனம்

திருகோணமலை கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வேகக் கட்டுப்பாட்டை இழந்த டிப்பர் வாகனமொன்று வயல் வெளியில் விழுந்ததில் டிப்பர் வாகனத்தின் சாரதி பலத்த காயங்களுக்குள்ளான நிலையில் கந்தளாய் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கந்தளாய் பொலிஸார் தெரிவிக்கின்றனர். கந்தளாய் கெமுனு மாவத்தை பகுதியைச் சேர்ந்த ...

மேலும்..

தமிழர்களை கொன்று குவித்த கோட்டாபய ராஜபக்சவிற்கு ஒரு போதும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி ஆதரவு வழங்காது

தமிழர்களை கொன்று குவித்த கோட்டாபய ராஜபக்ச அவர்களுக்கு ஒரு போதும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி ஆதரவு வழங்காது என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் நுவரெலியா மாவட்ட அமைப்பாளர் பெரியசாமி பிரதீபன் தெரிவித்தார். அட்டனில் 18.08.2019 அன்று காலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து ...

மேலும்..

மதுபோதையில் வாகனம் செலுத்திய 129 சாரதிகள் கைது!

மதுபோதையில் வாகனம் செலுத்தும் சாரதிகளை கைது செய்யும் விசேட நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அந்தவகையில் மதுபோதையில் வாகனம் செலுத்திய மேலும் 129 சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. நேற்று காலை 6 மணி முதல் இன்று காலை 6 மணி வரையான ...

மேலும்..

முச்சக்கரவண்டி விபத்து – இருவர் பலி – மூவர் பலத்த காயம்

கந்தப்பளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நுவரெலியா உடபுஸ்ஸலாவ பிரதான வீதியில் எஸ்கடேல் தோட்டம் "ஐஸ் பீலி" என்றழைக்கப்படும் இடத்தில், சுமார் நூறு அடி பள்ளத்தில் முச்சக்கரவண்டி ஒன்று வீழ்ந்து விபத்துக்குள்ளானதில், இருவர் உயிரிழந்துள்ளதுடன், 3 சிறுவர்கள் படுகாயமடைந்துள்ளனர். 17.08.2019 அன்று  இடம்பெற்ற இந்த ...

மேலும்..

யாழ் நாவாந்துறை இறைச்சிக்கடை தொகுதிகளை திறந்துவைத்தார் முதல்வர் ஆனல்ட்

யாழ் மாநகரசபையின் முத்திரை தீர்வையின் கீழ் 4.68 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் புனரமைக்கப்பட்ட யாழ் நாவாந்துறை இறைச்சிக்கடை தொகுதி இன்றய தினம் (17) உரிய கடைப் பொறுப்பாளர்களிடம் கையளிக்கப்பட்டது. இந் நிகழ்வில் யாழ் மாநகர முதல்வர் கௌரவ இம்மானுவல் ஆனல்ட் அவர்கள் ...

மேலும்..

வெளியாள்கள் இங்கு நியமனம் ரணிலிடம் சி.வீ.கே. ஆட்சேபம்!

 வடக்கு மாகாணத்துக்கும் யாழ். மாவட்டத்துக்கும் வெளியே இருக்கும் பலர் இங்குள்ள அரச அலுவலகங்களின் சிற்றூழியர்வெற்றிடங்களுக்கு பெரும் எண்ணிக்கையில் வலிந்து வேண்டுமென்றே நியமிக்கப்படுகின்றார்கள். இந்த அத்துமீறல் நிறுத்தப்படவேண்டும். இது தொடர்பில் ஒரு கொள்கை நிலைப்பாட்டை இங்கு பிரதமர் எடுத்து அதனை வழிகாட்டல் ஏற்பாடாக அறிவிக்கவேண்டும். - ...

மேலும்..

காணிவிடுவிப்புக்கு எழுத்துமூல உடன்பாடு வழங்கியபின்னர் ஏமாற்றினார் ஜனாதிபதி!

ரணில், ஆளுநர்முன் சீற்றத்துடன் சுமந்திரன் இராணுவம் ஆக்கிரமித்துள்ள தனியாரின் காணிகள் அனைத்தையும் விடுவிப்பேன் என எழுத்து மூலம் தமிழ் மக்களுக்குத் தான் வழங்கிய உறுதிமொழியை ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேன தானே தூக்கிக் கடாசிவிட்டார் என்று நேற்றுப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, வடக்கு ...

மேலும்..

விமான நிலைய அமைவுக்கு மக்கள் காணிகளை விடோம்! ரணில்முன் மாவை வலியுறுத்து

பலாலி விமான நிலையத்தின் ஓடுதள விஸ்தரிப்பின் போது  மேலதிக காணிகளை சுவீகரிக்க அனுமதிக்க முடியாது.மாறாக தேவைப்படின் கடற்கரை பக்கமாக அதனை நிரவி ஓடுதளத்தை அமையுங்கள் அதற்கான வழிவகையை சம்பந்தப்படட அதிகாரிகள ஆராயுங்கள் என பாராளுமன்ற  உறுப்பினர் மாவை சேனாதிராஜா தலைமை அமைச்சர் ...

மேலும்..

ஐ.தே.க.யின் ஜனாதிபதி வேட்பாளரை தெரிவு செய்யும் கூட்டம் ஆரம்பம்

ஐக்கிய தேசிய முன்னணியின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் கூட்டம் தற்போது ஆரம்பமாகியுள்ளது. இன்று (சனிக்கிழமை) நடைபெறுகின்ற இந்த கூட்டத்தில் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி வேட்பாளராக யாரை நிறுத்துவது மற்றும் புதிய கூட்டணி உள்ளிட்ட விடயங்கள் குறித்து விரிவாக கலந்துரையாடப்படவுள்ளதாக அக்கட்சி தகவல்கள் ...

மேலும்..

கூட்டமைப்பின் ஒற்றுமையின்மைக்குக் காரணம் …..?

ஒற்றுமை குறைந்தால் பலத்தை இழப்போம். என்று எச்சரித்திருக்கின்றார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் கூட்டமைப்பின் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன். "தமிழ்த் தேசியக்கூட்டமைப்பில் இருந்து நாங்கள் யாரையும் விலகிப் போகுமாறு கூறவில்லை, விலகிப் போகின்றவர்களை நாங்கள் பிடித்து எம்முடன் கட்டி வைக்கவும் ...

மேலும்..

நுண் கடனால் சமூகத்தில் ஏற்படும் பிரச்சினைகளைச் சொல்லும் ‘றணம்’ குறும்பட வெளியீடு

சம காலத்தில் சமூகத்தின் மத்தியில் பாரியதொரு பிரச்சினையாக உருவெடுத்திருக்கும், நுண் கடனால் சமூகத்தின் மத்தியில் ஏற்டும் பிரச்சினைகளை கூறும் 'றணம்' குறும்படம் வெளியிடப்பட்டது. இந் நிகழ்வின் முதன்மை விருந்தினராக முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் மதிப்புறு துரைராசா ரவிகரன் அவர்கள் கலந்துகொண்டார். கடந்த 14.08.2019 அன்று, ...

மேலும்..

முள்ளியவளை பெருந்தெருவேலைகளை ரவிகரன் பாா்வையிட்டாா்

கடந்த முப்பது ஆண்டு காலத்துக்கும் மேலாக சேதமான, பாவிக்கமுடியாதநிலையில் இருந்த இந்தவீதி தொடர்பில் வடமாகாணசபை முன்னாள்உறுப்பினர் மதிப்புறு துரைராசா ரவிகரன் அவர்கள் கருத்துத்தெரிவிக்கையில், முள்ளியவளை பெருந்தெரு என அழைக்கப்படும் காட்டாவிநாயகர் ஆலய அருகிலிருந்து சந்தியம்மன் வரையான இவ்வீதி, பலவருடங்களாக சீரற்றநிலையில் காணப்படுகின்றது. இதனால் ...

மேலும்..

அரசமைப்புப் பேரவை ஏற்ற அதிகாரப் பகிர்வே ஐதே.கவின் நிலைப்பாடு! – யாழில் ரணில்

"அதிகாரப் பகிர்வு தொடர்பாக அரசமைப்பு பேரவை தனது அறிக்கையில் வெளிப்படுத்தியுள்ள கொள்கைக் கோட்பாடே தமிழர்களின் எதிர்பார்ப்புத் தொடர்பான ஐக்கிய தேசியக் கட்சியின் ஒரே நிலைப்பாடாகும். இந்த நாட்டின் தமிழினம் இலங்கை ஜனநாயகக் குடியரசு என்ற கட்டமைப்புக்குள் சமத்துவமாக, கெளரவமாக, சுயமரியாதையுடன், தங்களின் ...

மேலும்..

ஆண் சிசுவின் சடலம் மீட்பு

க.கிஷாந்தன் அட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வனராஜா தோட்டம் ஓர்லி பிரிவு பகுதியில் அமைந்துள்ள காசல்ரீ நீர்தேக்கத்திலிருந்து 17.08.2019 அன்று காலை 10 மணியளவில் உடல் உருகுழைந்த நிலையில் ஆண் சிசுவின் சடலம் ஒன்று அட்டன் பொலிஸாரால் மீட்டகப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, மீனவர்கள் சிலர் மீன் ...

மேலும்..

தமிழர்க்கு ஒரு தமிழ் வேட்பாளர் தேவை காணாமற்போனோர் உறவுகள் கோரிக்கை!

பலத்த சர்ச்சையையும், பரபரப்பையும், அச்சுறுத்தலையும் ஏற்படுத்தியுள்ள இலங்கை அதிபர் தேர்தலில் வழமைபோலவே இம்முறையும் தமிழ் இனப்படுகொலை குற்றவாளிகள் பங்கேற்கும் சூழலில், கடந்த காலங்களைப் போல அல்லாது இம்முறை தமிழ் மக்கள் தமக்கென ஒரு தமிழ் வேட்பாளரை நிறுத்திப் போட்டியிட வேண்டும் என்றும், ...

மேலும்..

என்ன குற்றம் செய்தனர் ராஜபக்ச குடும்பத்தினர்?

- எம்மை விமர்சிப்பதை உடன் நிறுத்துங்கள் என்று கோருகின்றார் கோட்டா  "தமிழ்ப் பயங்கரவாதிகளின் ஆயுதப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவந்து நாட்டை மீட்டெடுத்தது ராஜபக்ச குடும்பம். அப்படிப்பட்ட ராஜபக்ச குடும்பத்தினரை குற்றவாளிகள் என்று அரசியல்வாதிகள் சிலர் கண்டபடி விமர்சிக்கின்றார்கள். நாம் உண்மையில் என்ன குற்றம் ...

மேலும்..

எத்தனை விகாரைகளுக்கு சென்றாலும் கோட்டாவுக்கு மன்னிப்புக் கிடைக்காது – போட்டுத் தாக்குகின்றார் ராஜித

"ஸ்ரீலங்கா பொதுமக்கள் முன்னணியின் வேட்பாளராக ராஜபக்ச அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து அவர் பௌத்த விகாரைகள் மற்றும் இந்து ஆலயங்களுக்குச் சென்று வழிபாடுகளில் ஈடுபட்டு வருகின்றார். எத்தனை விகாரைகள், ஆலயங்கள் ஏறி இறங்கினாலும் அவர் செய்த பாவங்களுக்கு ஒருபோதும் மன்னிப்புக் கிடையாது. ஏதோவொரு விதத்தில் ...

மேலும்..

வாழ்வோம் வளம்பெறுவோம் – கட்டம் 26இல் 21 குடும்பங்கள் உள்ளீர்ப்பு

முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா - ரவிகரனால் முன்னெடுக்கப்படும் வாழ்வோம் வளம்பெறுவோம் செயற்றிட்டத்தின் இருபத்தாறாம் கட்டமானது கடந்த 14.08.2019 அன்று, முல்லைத்தீவு - கள்ளப்பாடு வடக்குப் பகுதியில் அமைந்துள்ள அவரின் மக்கள் தொடர்பகத்தில் இடம்பெற்றது.புலம்பெயர் அன்பர்களின் பங்களிப்பில் முன்னெடுக்கப்படும் இச்செயற்றிட்டத்தின் இருபத்தாறாம் ...

மேலும்..

சம்மாந்துறையில் கைக்குண்டு மீட்பு!

அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பிரதேசத்தில் கைவிடப்பட்ட நிலையில்  கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளது. நேற்று வெள்ளிக்கிழமை மாலை புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றினை அடிப்படையாக கொண்டு   சம்மாந்துறை பழைய தியேட்டருக்கு அருகாமையில் காணியொன்றிலிருந்து இனந்தெரியாதவர்களால் கைவிடப்பட்டிருந்த  குறித்த கைக்குண்டே சம்மாந்துறை பொலிஸாரினால் ...

மேலும்..

தமிழர் பிரச்சினையில் ஐ.தே.கவின் நிலைப்பாடு என்ன? குருநகர் கூட்டத்தில் ரணிலிடம் சுமந்திரன் கேள்வி! (வீ{டியோ)

https://youtu.be/2-ZMD_ncMhw

மேலும்..

வடமாகாணம் முழுவதுமாக நடாத்தப்பட்ட இலவச கல்வி கருத்தரங்கு

வடமாகாணம் முழுவதுமாக பத்து இடங்களில் நடை பெற்ற இலவச கல்வி கருத்தரங்கில் பதினெட்டாயிரத்துக்கும அதிகமான மாணவர்கள் பங்கு பற்றி பயன் பெற்றனர். யாழ் வீரசிங்க மண்டபத்தில் மூன்று நாட்களும் ஊர்காத்துறை ஒரு நாள் வட்டுக்கோட்டை தொழில் நுட்ப்ப கல்லூரியில் ஒரு நாள், சிளிநொச்சி ...

மேலும்..