September 12, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டவை

சொல்ல வேண்டியதை சஜித்திடம் தெளிவாக எடுத்துரைத்துவிட்டேன்

ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் எனது நிலைப்பாட்டை கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாஸவிடம் நேரில் எடுத்துரைத்துவிட்டேன். இது தொடர்பில் சொல்ல வேண்டிய அனைத்து விடயங்களையும் தெளிவாகக் கூறிவிட்டேன். வேட்பாளரை கட்சியின் மத்திய செயற்குழுவே தேர்ந்தெடுக்கும் என்றும் அவரிடம் ...

மேலும்..

சு.கவில் வேட்பாளர் களமிறங்கவேண்டும்

ஜனாதிபதி வேட்பாளராக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வேட்பாளர் ஒருவரை நியமிப்பதாக இருந்தால் அது கட்சியின் எதிர்காலத்துக்கு ஆரோக்கியமானதாகும்." - இவ்வாறு முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்தார். அத்தனகல்ல பிரதேசத்தில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட பின்னர் ஊடகங்களுக்குக்  கருத்துத் தெரிவிக்கையிலேயே ...

மேலும்..

அனைத்து மக்களுக்கும் சம உரிமை; இதுதான் ஜே.வி.பியின் நிலைப்பாடு

வடக்கு, கிழக்கு, மலையகம், தெற்கு என நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் வாழும் மக்களுக்கு சம உரிமை வழங்கப்பட வேண்டும். இதுவே ஜே.வி.பியின் நிலைப்பாடு." - இவ்வாறு தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளரும் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவருமான அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார். கொழும்பு ...

மேலும்..

வறட்சியின் காரணமாக முதலை அட்டகாசம்-கிட்டங்கி வாவி மீனவர்கள் சிரமம்

அம்பாறை மாவட்டத்தில்  கடந்த சில தினங்களாக நிலவுகின்ற  சீரற்ற காலநிலை   காரணமாக கடும் வெப்பநிலையை அடுத்து கிட்டங்கி ஆறு பகுதியில்    மீன்களின் பிடிபாடு குறைவடைந்து காணப்படுவதால் மீன் வகைகளின் விலைகள் சடுதியாக உயர்வடைந்துள்ளதுடன் மீன் வகைகளுக்குக் கடும் தட்டுப்பாடு ...

மேலும்..

இனிமேலும் இழுத்தடிப்புக்கு இடமில்லை முன்வைத்த காலை பின்வைக்கமாட்டேன்

"ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் அறிவிப்பில் இனியும் இழுத்தடிப்புக்கு இடமில்லை, அதேபோல் நான் முன்வைத்த காலை பின்வைக்கப் போவதும் இல்லை." - இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரான அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது:- "ஜனாதிபதி வேட்பாளர் ...

மேலும்..

அம்பாறை மாவட்டத்தில் திடிரென வீசிய பலத்த காற்று- வீதியோர கடைகள் சில சேதம்

அம்பாறை மாவட்டத்தில் உள்ள  சில பகுதிகளில்  திடிரென வீசிய     பலத்த காற்று காரணமாக வீதியோர கடைகள் சேதமடைந்தததுடன் போக்குவரத்தும்  சிறிது தடைப்பட்டது. வியாழக்கிழமை(12) மதியம் முதல்  மாவட்டத்தில் மணித்தியாலத்திற்கு  ஏறத்தாழ  60 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசியதுடன் மழையும் தொடர்ந்து ...

மேலும்..

இலவச கல்வியின் தந்தை கன்னங்கராவின் நோக்கத்தை தற்போதைய அரசு சரிவர நிறைவேற்ற பாடுபடுகின்றது.

கடந்தகால யுத்தத்தினால் கல்விக்கான  நிதி ஒதுக்கீடுகள் குறைந்ததாக  தெரிவித்துள்ள பிரதமர்                                                            ...

மேலும்..

நல்லூரிலிருந்து ஆரம்பமானது பாதயாத்திரை!

நல்லுாா் கந்தசுவாமி ஆலயத்தில் இருந்து கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரா் ஆலயம் நோக்கிய பாதயாத்திரை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. நல்லுாா் கந்தசுவாமி ஆலயத்திலிருந்து இன்று (வியாழக்கிழமை) காலை 8 மணிக்கு சிவலிங்கம் தாங்கிய ஊா்தியுடன் இந்த பாதயாத்திரை ஆரம்பமாகியுள்ளது. இந்த பாத்திரை யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியாவிற்குச் சென்று அங்கிருந்து திருகோணமலைக்குச் சென்று, ...

மேலும்..

சங்கரத்தை வளர்மதி முன்பள்ளிக்கு சரவணபவனால் குடிதண்ணீர் வசதி!

சங்கரத்தை வளர்மதி முன்பள்ளிக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட  நாடாளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவனால் 5 லட்சம் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிதி ஒதுக்கீடு முன்பள்ளியினரின் வேண்டுகோளுக்கிணங்க மாணவர்களின் குடிதண்ணீர் தேவையை நிறைவுசெய்வதற்காகவே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. குடிதண்ணீர் வசதிகளை ஏற்டுத்தும் ஆரம்பப் ...

மேலும்..

மாணவியை துஷ்பிரயோகம் செய்த ஆசிரியர்! உறுதி செய்யப்பட்ட நீதிபதி இளஞ்செழியனின் தீர்ப்பு

திருகோணமலை, நிலாவெளி தமிழ் வித்தியாலயத்தில் கல்வி கற்ற மாணவியொருவரை துஷ்பிரயோகம் செய்த ஆசிரியருக்கு கடந்த 2010ஆம் ஆண்டு நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் 7 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்திருந்தார். நீதிபதி இளஞ்செழியன் வழங்கிய தீர்ப்பினை எதிர்த்து குற்றவாளி கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றில் ...

மேலும்..

யாழ். பல்கலையில் தொடரும் உண்ணாவிரதப் போராட்டம் – சி.வி. களத்திற்கு விஜயம்

யாழ். பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர் ஆட்சேர்ப்பில் மோசடிகள் இடம்பெற்றுள்ளதாக தெரிவித்து முன்னெடுக்கப்பட்ட சுழற்சிமுறையிலான உணவுதவிர்ப்பு போராட்டம் 2ஆவது நாளாகவும் தொடர்கிறது. இந்த போராட்டம் யாழ் பல்கலைக்கழக முன்றலில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் குறித்த போராட்டக்களத்திற்கு இன்று (வியாழக்கிழமை) வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ...

மேலும்..

திருமண பந்தத்தில் இணைந்தார் நாமல் ராஜபக்ஷ!

எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவின் மகனும் அம்பாந்தோட்டை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ இன்று திருமண பந்தத்தில் இணைந்துள்ளார். பிரபல வர்த்தகர் திலக் வீரசிங்க தம்பதியினரின் மகளான 22 வயதுடைய லிமினி வீரசிங்கவையே அவர் இன்றைய தினம் கரம்பிடித்துள்ளார். இவர்களின் திருமண வரவேற்பு ...

மேலும்..

மட்டக்களப்பு நகரிலில் ஆறரை கோடி ரூபா செலவில் தனியார் பேரூந்து நிலைய புதிய கட்டிட திறப்பு

மட்டக்களப்பு நகரிலில் ஆறரை கோடி ரூபா செலவில்  தனியார் பேரூந்து நிலைய புதிய கட்டிடதொகுதி இன்று(12)காலை 10.00 மணியளவில் மேல்மாகாண  அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவினால் சுபவேளையில் திறந்து வைக்கப்பட்டது. மட்டக்களப்பு மாநகரை  அழகுபடுத்தும் பிரதமர் ரணில்விக்ரமசிங்கவின் விசேட திட்டத்திற்கமைய  மாநகர ...

மேலும்..

வெளிநாடொன்றில் அதிகாலையில் 5 மாத குழந்தைக்கு இலங்கை அகதி ஒருவர் செய்த கீழ்த்தரமான செயல்!

வேலூர் மாவட்டம், அரக்கோணத்தை அடுத்த சோளிங்கர் ரயில் நிலைய வளாகத்தில் இலங்கை அகதி ஒருவர் 5 மாத குழந்தையை கடத்த முயற்சித்துள்ளார். இந்த சம்பவம் புதன்கிழமை அதிகாலை 3 மணியளவில் நடந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இது தொடர்பில் தெரியவருவதாவது, துா்காபிரசாத் என்பவரின் 5 ...

மேலும்..

மன்னாரில் கடற்படையினரால் அதிரடியாக கைதுசெய்யப்பட்ட எழுவர்!

மன்னார் – எழுத்தூர் பகுதியில் கேரளகஞ்சாவுடன் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்களிடமிருந்து 100 கிலோகிராம் கேரளக்கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்தனர். மன்னாரை சேர்ந்த 20 தொடக்கம் 29 வயதிற்கு இடைப்பட்ட 7 சந்தேகநபர்களே கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களையும் அவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட ...

மேலும்..

காணி விடுவிப்பு குறித்து ஆளுநர் தலைமையில் கலந்துரையாடல்!

முல்லைத்தீவு மாவட்டத்தில் பாதுகாப்பு தரப்பினரிடம் உள்ள காணிகளை விடுவிப்பது  தொடர்பான கலந்துரையாடல் தற்போது இடம்பெற்று வருகிறது. வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் தலைமையில் இந்த கலந்துரையாடல் இன்று (வியாழக்கிழமை) கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இடம்பெற்று வருகிறது. காலை 10 மணியளவில் ஆரம்பமான இந்த ...

மேலும்..

தேர்தலை இலக்கு வைத்து போலி பேஸ்புக் மற்றும் டுவிட்டர் கணக்குகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தகவல்!

நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலினை இலக்காக கொண்டு அதிகளவான போலி பேஸ்புக் மற்றும் டுவிட்டர் கணக்குகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இலங்கை தொலைத்தொடர்புகள் ஆணைக்குழுவின் தலைவர் ரஜீவ் யசிரு இதனைத் தெரிவித்துள்ளார். இதன்காரணமாக பல தரப்பினருக்கும் எதிராக அவதூறை ஏற்படுத்தும் மற்றும் குரோதத்தை தூண்டும் வகையிலான கருத்துக்கள் வெளியிடப்படுவதற்கான ...

மேலும்..

P.S.M. சார்ள்ஸினை ஜனாதிபதி ஆணைக்குழுவின் பொலிஸ் பிரிவில் ஆஜராகுமாறு அழைப்பாணை

சுங்கப் பணிப்பாளர் நாயகம் P.S.M. சார்ள்ஸினை ஜனாதிபதி ஆணைக்குழுவின் பொலிஸ் பிரிவில் ஆஜராகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது. இன்றைய தினம் முன்னிலையாகுமாறு இவ்வாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஆணைக்குழுவின் முக்கிய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். சுங்கப் பணிப்பாளர் நாயகம் P.S.M. சார்ள்ஸினால் முன்னிலையாக முடியாத பட்சத்தில் ...

மேலும்..

12 நாடுகளை கேந்திரமாகக் கொண்டு மிக முக்கிய வேலைத்திட்டம்

12 நாடுகளை கேந்திரமாகக் கொண்டு மிக முக்கிய வேலைத்திட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது. சரிவை எதிர்நோக்கியுள்ள சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் நோக்கில் இந்தத் திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக இலங்கை சுற்றுலா ஊக்குவிப்புப் பணியகம் தெரிவித்துள்ளது. சீனா, ஜப்பான், பிரித்தானியா, இத்தாலி, ஜேர்மனி, இந்தியா உள்ளிட்ட 12 நாடுகளில் இந்த ...

மேலும்..

கோதுமை மாவை அதிக விலைக்கு விற்பனை செய்த வர்த்தகர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல்

கோதுமை மாவை அதிக விலைக்கு விற்பனை செய்த வர்த்தகர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 200 இற்கும் மேற்பட்ட வர்த்தகர்களுக்கு எதிராக இவ்வாறு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபையின் உதவிப்பணிப்பாளர் பிரியந்த விஜேசிங்க தெரிவித்துள்ளார். கடந்த சில தினங்களாக முன்னெடுக்கப்பட்ட ...

மேலும்..

அபிவிருத்திக்குக் காரணம் அரசுக்கான எமது ஆதரவே!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்திற்கு வழங்கிய ஒத்துழைப்புக்கு அமைய மக்களுக்கான சில அபிவிருத்திகளைச் செய்யும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் தெரிவித்தார். மட்டக்களப்பில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இங்கு ...

மேலும்..

காரைதீவு மகா விஷ்ணு ஆலய ஆவணி ஓண தீர்த்தோற்சவம்…

காரைதீவு ஸ்ரீ மகா விஷ்ணு ஆலய வருடாந்த ஆவணி ஓண மகோற்சவம் நேற்று - (11.09.2016) புதன்கிழமை காலை காரைதீவு சமுத்திரத்தில் தீர்த்தோற்சவம் இடம்பெற்றது. கடந்த 30-08-2019 அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிய வருடாந்த உற்சவமானது 12 நாட்கள் தொடந்து திருவிழாக்கள் இடம் ...

மேலும்..

பிரதமரின் மட்டு. விஜயம் இரத்து – புதிய கட்டடத்தை திறந்து வைத்தார் சம்பிக்க!

மட்டக்களப்பில் புதிதாக அமைக்கப்பட்ட தனியார் பேருந்து தரிப்பிடத்திற்கான கட்டடம் திறந்து வைக்கப்பட்டது. இந்த நிகழ்வு இன்று (வியாழக்கிழமை) காலை மாநகர மேயர் சரவணபவன் தலைமையில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் அமைச்சர் பாட்டாலி சம்பிக்க ரணவக்க கலந்துகொண்டு புதிய பேருந்து நிலையத்திற்கான கட்டடத்தை திறந்து வைத்தார். இந்த ...

மேலும்..

உள்நாட்டு முடிவுகளில் வெளிச் சக்திகள் தலையிட வேண்டாம் -ஐ.நா.வில் இலங்கை திட்டவட்டம்!

இலங்கையின் உள்நாட்டு முடிவுகள் தொடர்பாக வெளிச் சக்திகளின் தலையீடுகளை ஏற்றுக்கொள்ள முடியாது என இலங்கை அரசாங்கம் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் தெரிவித்துள்ளது. ஜெனிவாவில் இடம்பெற்று வரும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 42ஆவது கூட்டத்தொடரில், நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற அமர்விலேயே ஜெனிவாவுக்கான ...

மேலும்..

ஐ.தே.கவின் ஜனாதிபதி வேட்பாளர்: தெரிவு கூட்டமைப்பின் கைகளில்!

அவர்களிடம் பேசுங்கள் சஜித்துக்கு ரணில் செக்! பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் அமைச்சர் சஜித் பிரேமதாஸவுக்கும் இடையே நேற்று முன்தினம் நடந்த பேச்சு எந்தவித இணக்கப்பாடுமின்றி முடிவுற்றுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவின்றி ஒன்றும் செய்யமுடியாது. அவர்களைப் பகைத்து தமிழர்களின் ஆதரவைப் பெறமுடியாது. ஆகவே அவர்களுடன் கட்டாயம்பேச்சு நடத்துங்கள் ...

மேலும்..

அமெரிக்காவில் ஐ.நா சபையின் முன்னே எழுகதமிழ் : அணிதிரள நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அழைப்பு

அமெரிக்காவில் ஐ.நா சபையின் முன்னே எழுகதமிழ் : அணிதிரள  நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அழைப்பு ! ஈழத்தமிழ் மக்களின் நீதிக்கும் அரசியல் இறைமைக்குமான எழுச்சி நிகழ்வாக தமிழர் தாயகத்தில் இடம்பெறும் 'எழுகதமிழ்' எழுச்சி நிகழ்வுக்கு சமாந்திரமாக அமெரிக்காவிலும் 'எழுகதமிழ்' எழுச்சி நிகழ்வு இடம்பெற ...

மேலும்..

வீதிப்பால பணிகளை துரிதப்படுத்துக! ஆளுநருக்கு சிறிதரன் எம்.பி. கடிதம்

முறிகண்டி - அக்கராயன் வீதிப்பாலம் அமைக்கும் பணிகளை துரிதப்படுத்தக் கோரி நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் வடமாகாண ஆளுநருக்கு கடிதமொன்றினை நேற்று அனுப்பி வைத்துள்ளார். மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சின் விசேட நிதி ஒதுக்கீட்டில் நாடு பூராகவும் செயற்படுத்தப்படும் ஆயிரம் பாலம் ...

மேலும்..

எழுக தமிழ் எழுச்சிப் பேரணிக்கு ஆதரவு – யாழ்ப்பாண பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம்

யாழ்ப்பாணத்தில் வரும் 16ஆம் திகதி இடம்பெறவுள்ள எழுக தமிழ் எழுச்சிப் பேரணிக்கு ஆதரவு வழங்குவதாக, யாழ்ப்பாண பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது. தமிழ் மக்கள் பேரவையின் தலைமையில் செப்டெம்பர்  16ஆம் திகதி, யாழ். முற்றவெளியில் நடைபெறவிருக்கின்ற எழுக தமிழ் பேரெழுச்சிக்கு ஆதரவினை ...

மேலும்..

செப்-16 எழுக தமிழை முன்னிட்டு; தமிழர் தாயகம் தழுவியதான பூரண கதவடைப்பிற்கு தமிழ் மக்கள் பேரவை அழைப்பு

தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் எதிர்வரும் செப்டம்பர் 16 ஆம் திகதி திங்கட்கிழமை வடக்கு கிழக்கு உள்ளிட்ட தமிழர் தாயகம் தழுவியதாக எழுக தமிழ்-2019 மாபெரும் எழுச்சிப் பேரணி யாழ்.மண்ணில் நடைபெற உள்ளது. எனவே, எழுக தமிழ் எழுச்சிப் பேரணிக்கு அனைவரது பங்கேற்பை ...

மேலும்..

மட்டு-அம்பாறையில் எழுக தமிழ் பரப்புரைகள் முன்னெடுப்பு

கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் எழுக தமிழ்-2019 பரப்புரைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. தமிழ் மக்கள் பேரவையின் இணைத்தலைவர்களில் ஒருவரான த.வசந்தராஜா தலைமையிலான எழுக தமிழ் ஏற்பாட்டுக் குழுவினரால் இப்பரப்புரை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. எழுக தமிழ்-2019 எழுச்சிப் பேரணிக்கான துண்டுப்பிரசுரங்களை வழங்கியும் குறித்த பகுதிகளில் உள்ள சமூக மட்ட அமைப்புகள், தொழிற்சங்கங்கள் உள்ளிட்ட பொது அமைப்புகளின் பிரதிநிதிகளை நேரில் சந்தித்தும் எழுக தமிழ் குறித்த கலந்துரையாடல்களும் நடாத்தப்பட்டுள்ளது. அந்த வகையில், வாளைச்சேனை, வாகரை, ஓட்டமாவடி-வாகனேரி, கிராண், செங்கலடி, ஏறாவூர், மட்டக்களப்பு நகரம், வவுணதீவு, ஆரையம்பதி, பட்டிப்பளை, வெல்லாவெளி, களுவாஞ்சிக்குடி, கல்முனை, காரைதீவு ஆகிய பிரதேச செயலர் பிரிவுகளுக்குட்பட்ட பகுதிகளில் எழுக தமிழ் பரப்புரை மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.  

மேலும்..

பிரதமரின் மட்டக்களப்பிற்கான விஜயம் இறுதி நேரத்தில் இரத்து!

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் மட்டக்களப்பிற்கான விஜயம் இறுதி நேரத்தில் இரத்து செய்யப்பட்டுள்ளது. பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்றைய தினம் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயம் செய்ய திட்டமிட்டிருந்தார். இதன்போது மட்டக்களப்பு நகரில் 65 மில்லியன் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள தனியார் பேருந்து நிலையத்தின் புதிய கட்டட ...

மேலும்..

களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையின் பிரச்சினைகளை தீர்க்க நடவடிக்கை – சாணக்கியன்

களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் நிலவும் பிரச்சினைகளை தீர்க்கும் வகையில் எதிர்வரும் சில தினங்களில் சுகாதார அமைச்சரை சந்தித்து கலந்துரையாடவுள்ளதாக இராசமாணிக்கம் மக்கள் அமைப்பின் தலைவர் இரா.சாணக்கியன் தெரிவித்தார். இந்த விடயம் தொடர்பாக நேற்று (புதன்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் ...

மேலும்..

தூக்குத் தண்டனைக்கு வடக்கு மக்கள் ஆதரவு

போதைப்பொருள் குற்றச்சாட்டுக்களில் மரணதண்டனை விதிக்கப்பட்டுச் சிறைத்தண்டனை அனுபவித்து வருவோருக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட வேண்டும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வலியுறுத்தி வரும் நிலையில், மரணதண்டனையை நிறைவேற்றுவதற்கு வடக்கு மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். யாழ்ப்பாணம் - முற்றவெளியில் நடைபெற்றுவரும் என்டர்பிறைஸ் ஸ்ரீலங்கா கண்காட்சியில் இது ...

மேலும்..

பல்கலைக்கழகத் தொழிற்சங்கங்களின் பணிப்பகிஷ்கரிப்பு தொடர்கிறது

அனைத்துப் பல்கலைக்கழகத் தொழிற்சங்க ஒன்றியத்தால் ஆரம்பிக்கப்பட்ட பணிப்பகிஷ்கரிப்பு இன்று மூன்றாவது நாளாகவும் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. சம்பள உயர்வு உள்ளிட்ட சில முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து கடந்த 10ஆம் திகதி முதல் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. தங்களின் பிரச்சினைக்கான உரிய தீர்வு கிடைக்கும் ...

மேலும்..

அச்செழு தேவாலயத்துக்கு சுற்று மதில் – யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் நிதி ஒதுக்கீடு

வலிகாமம் கிழக்கு (கோப்பாய்) பிரதேச செயலகத்துக்குட்பட்ட அச்செழு புனித ஹென்றியரசர் தேவலயத்துக்கு ஊரெழுச்சி (கம்பரெலிய) திட்டத்தின் கீழ் சுற்று மதில் அமைக்கப்படவுள்ளது. ரூ. 07 லட்சம் செலவில் அமைக்கப்படவுள்ள இச்சுற்றுமதிலுக்கான நிதியினை யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், கோப்பாய்த்தொகுதிக்கான அபிவிருத்திக்குழுவின் இணைத்தலைவருமான நாடாளுமன்ற ...

மேலும்..