September 25, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டவை

சகல பாடசாலைகளும் இன்று பூட்டு; யா\யூனியன் கல்லூரி மட்டும் திறப்பு!

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இலங்கை ஆசிரியர் சேவைகள் சங்கம் சுகவீன விடுமுறை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது. இன்று(வியாழக்கிழமை) முதல் நாளை வரை 6 கோரிக்கைகளை முன்வைத்து ஆசிரியர்கள், அதிபர்கள் சுகவீன விடுமுறை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அத்துடன், கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டம் ஒன்று ...

மேலும்..

ஆடுமேய்க்கச் சென்ற தமிழ்மகனுக்கு நேர்ந்த கொடுமை! பதறும் மனைவி!

அம்பாறை திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நேருபுரம் தாண்டியடி மயானப் பிரதேசத்தில் ஆடுகள் மேய்க்க சென்ற 65வயது முதியவர் தலையின்றி சடலமாக இன்று மாலை மீட்கப்பட்டுள்ளதாக திருக்கோவில் பொலிசார் தெரிவித்துள்ளனர். இவ்வாறு சடலமாக காணப்பட்ட முதியவர் தாண்டியடி நேருபுரம் கிராமத்தைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் ...

மேலும்..

தேர்தலுக்கு தடை கோரும் மனு தள்ளுபடி!

எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலுக்கு இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்டிருந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. உயர் நீதிமன்றத்தினால் நேற்று(புதன்கிழமை) வழக்குக் கட்டணங்களின்றி குறித்த மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. உயர் நீதிமன்ற நீதியரசர்களான விஜித் மலல்கொட, பீ.பத்மன் சூரசேன மற்றும் காமினி ...

மேலும்..

கமு/திகோ/ஸ்ரீ இராமகிருஸ்ணா கல்லூரி தேசிய பாடசாலையில் உடற்கல்வி பிரிவு நிலையம் திறந்துவைப்பு…

காந்தன். கமு/திகோ/ஸ்ரீ இராமகிருஸ்ணா கல்லூரி தேசிய பாடசாலையில் 2019/09/25 இன்று காலை 10.00 மணியளவில் உடற்கல்வி பிரிவு நிலையம் பாடசாலை அதிபர் தலைமையில் திறந்து வைக்கப்பட்டது.அதிதிகள் மலர் மாலை அணிவித்து கடட் பிரிவினரின் மரியாதை அணிவகுப்புடன் வரவேற்கப்பட்டது. இன் நிகழ்வில் திருக்கோவில் கல்வி வலய ...

மேலும்..

ஞானசாரருக்கு எதிரான வழக்கில் இடை மனுதாரராக இணைய தமிழ் சட்டத்தரணிகள் தீர்மானம்!

நீதிமன்ற அவமதிப்பு குற்றத்துக்கு சிறைத் தண்டனை அனுபவித்து வந்த ஞானசார தேரருக்கு வழங்கப்பட்ட பொது மன்னிப்புக்கு எதிராக உயர் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில் இடைபுகு மனுதாரராக இணைவதற்கு தமிழ் சட்டத் தரணிகள் தீர்மானித்துள்ளனர். முல்லைத்தீவு நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் ஞானசார தேரர் ...

மேலும்..

இலங்கையில் பௌத்த தேரர்களே ஆட்சி நடத்துகிறார்கள் – சாந்தி காட்டம்

இலங்கையில் தற்போது பௌத்த தேரர்களின் ஆட்சியே நடப்பதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா குற்றம் சுமத்தியுள்ளார். இதற்கு நீராவியடிப் பிள்ளையார் கோயிலில் இடம்பெற்ற சம்பவமே சாட்சியென்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். வவுனியாவில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் ...

மேலும்..

பயங்கரவாதியின் உடலை பொறுப்பேற்க இஸ்லாமியர்கள் மறுப்பதில் நியாயம் இல்லை – வசந்தராஜா

தற்கொலைப் பயங்கரவாதியின் உடல் எச்சங்களை காத்தான்குடியில் அடக்கம் செய்ய அனுமதிக்க முடியாது என இஸ்லாமிய மக்கள் மறுப்பது எந்தவகையிலும் நியாயம் இல்லை என மட்டக்களப்பு சிவில் சமூக அமைப்பின் செயலாளர் த.வசந்தராஜா தெரிவித்துள்ளார். அத்துடன், குறித்த பயங்கரவாதி ஒரு இஸ்லாமியர் அல்ல என ...

மேலும்..

தீர்வு கிடைக்காமைக்கு காரணம் என்ன – மக்கள் சிந்திக்க வேண்டும் என்கிறார் வீ. ஆனந்தசங்கரி

யுத்தம் நிறைவடைந்து 10 வருடங்கள் ஆகியும் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்காமல் இருப்பதற்கு காரணம் என்ன என்பது குறித்து தமிழ் மக்கள் சிந்திக்கவேண்டும் என தமிழர் விடுதலைக்கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ. ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார். இன்று(புதன்கிழமை) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே அவர் ...

மேலும்..

சமூக வலைத்தளங்களில் தவறான பிரசாரங்கள் குறித்து சட்ட நடவடிக்கை எடுக்க அதிகாரம் இல்லை!

சமூக வலைத்தளங்களில் பதிவிடப்படும் தேர்தல் தொடர்பான தவறான கருத்துக்கள், தகவல்கள் , இனவாத பிரசாரங்கள் ஆகியனவற்றுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணைக்குழுவுக்கு அதிகாரம் எதுவும் இல்லை. அச்சு ஊடகங்கள் இவ்வாறான நடவடிக்கையில் ஈடுப்படும் பட்சத்தில் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை ...

மேலும்..

இந்து தலங்களுக்கு பாதுகாப்பு வேண்டும் – மாவை

நீதி மன்றக் கட்டளையை மீறி நீராவியடிப் பிள்ளையார் ஆலய வளாகத்தில் பௌத்த மத குருவின் உடலை எரித்தமை அதற்கு உடந்தையாகவும் இன மத முரண்பாடுகளை ஏற்படுத்துவதற்கு பொலிஸாரும் துணை நின்றுள்ளார்கள் இது கண்டிக்கத்தக்கது. என இலங்கைதமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா ...

மேலும்..

மன்னாரில் மாபெரும் சைவ எழுச்சி மாநாடு!

மன்னாரில் மாபெரும் சைவ எழுச்சி மாநாடு இடம்பெறவுள்ளதாக மன்னார் மாவட்ட இந்து குருமார் பேரவையின் தலைவர் சிவசிறி மஹாதர்ம குமார குருக்கள் தெரிவித்தார். மன்னார் மாவட்ட இந்து குருமார் பேரவையின் ஏற்பாட்டில் இந்த மாநாடு எதிர்வரும் 28 ஆம் திகதி சனிக்கிழமை காலை ...

மேலும்..

கடற்படையில் மீண்டும் இணைந்தார் யோஷித ராஜபக்ஷ!

யோஷித ராஜபக்ஷ மீண்டும் கடற்படை சேவையில் இணைந்துள்ளார். ஜனாதிபதியின் பணிப்புரைக்கு அமைய அவருக்கு நியமனம் வழங்கப்பட்டுள்ளது. அதற்கமைய கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் பியல் டி சில்வா, அவரை இணைத்துக்கொள்ளும் அனுமதி கடிதத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) கையொப்பமிட்டுள்ளார். கால்டன் ஸ்போர்ட்ஸ் நெட்வேர்க் தொலைக்காட்சி தொடர்பாக ...

மேலும்..

நீதிமன்ற உத்தரவை மீறி பிக்குவின் பூதவுடலை தகனம் செய்த ஞானசார தேரரை உடன் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தி தண்டிக்க வேண்டும்-எம்.இராஜேஸ்வரன்

முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள செம்மலை நீராவியடிப்பிள்ளையார் ஆலய தீர்த்தக்கேணிக்கு அருகில் நீதிமன்ற உத்தரவை மீறி பிக்குவின் பூதவுடலை தகனம் செய்த ஞானசார தேரரை உடன் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தி தண்டிக்க வேண்டும் என்று முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ...

மேலும்..

பாகுபாடின்றி பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுமாறு மஹிந்த கோரிக்கை

நாடு முழுவதும் நிலவும் மோசமான காலநிலை காரணமாக பாதிக்கப்பட்ட அனைவருக்கும் அவசர நிவாரணம் வழங்க விரைவாக செயல்படுமாறு எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ அறிவுறுத்தியுள்ளார். இந்த மோசமான காலநிலை காரணமாக சுமார் 11 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் குறித்த அறிவுறுத்தலை பொதுஜன ...

மேலும்..

மகளை துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்க முயற்சித்ததாக தந்தை வெளியிட்ட காணொளி – பாடசாலைக்கு அபகீர்த்தி என மக்கள் போராட்டம்

வவுனியா, நெடுங்கேணி மகா வித்தியாலத்தில் தரம் 3இல் கல்வி பயிலும் தனது மகளை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்க முயற்சித்ததாக தெரிவித்து குறித்த மாணவியின் தந்தையால் சமூக வலைதளங்களில் காணொளி ஒன்று கடந்தவாரம் வெளியிடப்பட்டிருந்தது. அத்துடன் மாணவியின் தந்தையால் இருவர் தாக்கப்பட்டதுடன், நெடுங்கேணி பொலிஸ் ...

மேலும்..

வவுனியா அகிலாண்டேஸ்வரி நுண்கலைக்கல்லூரி மாணவர்கள் ஆக்கத்திறன் போட்டியில் முதலிடம்

வடக்கு மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தினால் பதிவு செய்யப்பட்ட கலைமன்றங்களுக்கிடையிலான ஆக்கத் திறன் போட்டிகளை வருடாவருடம் நடத்திவருகிறது. கலை மன்றங்களின் அங்கத்துவம்  வகிக்கும் கலைஞர்களின் திறமைகளை வெளிக்கொண்டு வருவதற்கும் அவர்களின் திறமைகளை ஊக்குவிப்பதற்கும் ...

மேலும்..

போதைப்பொருள் வர்த்தகத்தின் பின்னணியில் அரசியல்வாதிகளே உள்ளனர் – அநுர

இலங்கையில் இடம்பெறும் போதைப்பொருள் வர்த்தகத்தின் பின்னணியில் அரசியல்வாதிகளே உள்ளனரென தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார். தம்புள்ளையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், “இன்று எமது சமூகத்தில் போதைப்பொருள் பாவனை அதிகரித்துள்ளது. ...

மேலும்..

யாழ்., கொழும்பு, கண்டி மேல் நீதிமன்றங்களுக்கு மேலதிக அதிகாரம்

கொழும்பு, கண்டி மற்றும் யாழ்ப்பாணத்தில் உள்ள மேல் நீதிமன்றங்களுக்கு நியாய சபைகளினுடைய வழக்குகளை விசாரிக்கும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. குறித்த அதிகாரங்கள் நேற்று (செவ்வாய்க்கிழமை) முதல் வழங்கப்பட்டுள்ளதாக நீதி அமைச்சு தெரிவித்துள்ளது. அத்தோடு இதற்கான வர்த்தமானி அறிவித்தலை நீதி அமைச்சராக தலதா அத்துகோரல வெளியிட்டுள்ளார்.

மேலும்..

சஜித்திற்கு ஆதரவு வழங்கவுள்ளதாக திஸ்ஸ அத்தநாயக்க அறிவிப்பு!

ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித் தலைவர், அமைச்சர் சஜித் பிரேமதாஸவிற்கு ஆதரவு வழங்க தீர்மானித்துள்ளதாக திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார். இன்று(புதன்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, கடந்த 2015ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் ...

மேலும்..

உயர்தர மாணவர்களுக்கு டெப் வழங்கும் நடவடிக்கை

தேசிய பாடசாலைகளில் உயர்தரத்தில் கல்வி கற்றும் சகல மாணவர்களுக்கும் டெப் வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். கல்வி அமைச்சில் நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே கல்வி அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அதேநேரம் தேசிய பாடசாலைகளில் உயர்தரத்தில் கல்வி கற்பிக்கும் ...

மேலும்..

சட்டத்தரணிகளின் பணிப்புறக்கணிப்பிற்கு ஆதரவளிக்க யாழ். சட்டத்தரணிகள் சங்கம் தீர்மானம்!

வடக்கு மாகாண சட்டத்தரணிகளின் பணிப்புறக்கணிப்பு எதிர்வரும் 27ஆம் திகதி வரை தொடரும் என்ற நிலைப்பாட்டை ஏற்று, அதற்கு ஆதரவளிப்பது என யாழ்ப்பாணம் சட்டத்தரணிகள் சங்கம் தீர்மானித்துள்ளது. யாழ்ப்பாணம் சட்டத்தரணிகள் சங்கத்தின் சிறப்புக் கூட்டம் தலைவி ஜனாதிபதி சட்டத்தரணி சாந்தா அபிமன்யுசிங்கம் தலைமையில் இன்று ...

மேலும்..

நுரைச்சோலை நிலக்கரி மின் நிலையத்தை விரிவாக்க புதிய திட்டம்

நுரைச்சோலை நிலக்கரி மின் நிலையத்தின் விரிவாக்க திட்டங்களின் ஒரு பகுதியாக 300 மெகாவோல்ட் மின்வலுவை கொண்ட புதிய நிலக்கரி மின் நிலையங்களை நிர்மாணிக்க அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அந்தவகையில் 04 மின்சார அலகுகளை புதிய நிலக்கரி மின் நிலையங்களை அந்த சுற்றாடல் பகுதியில் ...

மேலும்..

ஞானசாரரை விடுதலை செய்தமை மீண்டும் நீதிமன்றத்தை அவமதிக்கவா? – சரவணபவன் கேள்வி!

நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில் சிறையில் அடைக்கப்பட்ட ஞானசார தேரரை ஜனாதிபதி தனது அதிகாரத்தை பயன்படுத்தி விடுவித்தமை மீண்டும் நீதித்துறையினை அவமதிப்பதற்கா என மட்டக்களப்பு மாநகரசபை மேயர் தியாகராஜா சரவணபவன் கேள்வி எழுப்பியுள்ளார். மட்டக்களப்பில் நேற்று (செவ்வாய்க்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு ...

மேலும்..

முப்படையினரை பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்துவதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியானது!

நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் முப்படையினரை பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்துவதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இதுகுறித்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. கடந்த 22ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. பொது மக்கள் பாதுகாப்பு கட்டளை சட்டத்திற்கமையவே ...

மேலும்..

சஜித்தின் அழைப்பையேற்று மீண்டும் ஐதேகவுடன் இணைந்து கொண்டார் திஸ்ஸ அத்தநாயக்க.

ஐக்கிய தேசியக் கட்சியில் மீண்டும் இணையுமாறு கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாசவால் விடுக்கப்பட்ட அழைப்பு தொடர்பில் தனது நிலைப்பாட்டை இன்று (25) சற்றுமுன் ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க அறிவித்தார்.   இதன்படி, சஜித் பிரேமதாசவின் அழைப்பை ஏற்று ...

மேலும்..

தோட்ட அதிகாரிக்கு எதிராக தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

அரச பெருந்தோட்ட யாக்கத்தின் கீழ் (ஜனவசம) இயங்கும் நாவலப்பிட்டி கொலப்பத்தனை தோட்டத்தின் தோட்ட அதிகாரிக்கு எதிராக கொலப்பத்தனை, தலப்பத்தனை, கொங்காலை ஆகிய தோட்ட மக்கள் தலவாக்கலை – நாவலப்பிட்டி பிரதான வீதியில் கொலப்பத்தனை சந்தியில் ஆர்ப்பாட்டத்தில் 25.09.2019 அன்று காலை ஈடுப்பட்டுள்ளனர். குறித்த ...

மேலும்..

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஞானாசாரருக்கு மீண்டும் வேண்டும்! சி.வி.கே

நீராவியடிப் பிள்ளையார் ஆலய வளாகத்தில் தேரரின் உடல் தகனம் செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் ஞானசார தேரரருக்கு எதிராக மீண்டும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட வேண்டுமென வடக்கு மாகாண அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் வலியுறுத்தியுள்ளார். நீராவியடிப்பிள்ளையார் ஆலய வளாகத்துக்குட்பட்ட பகுதியில் ...

மேலும்..

இலட்சிய முன்னணியின் ஊடக சந்திப்பு

தமிழ் இலட்சிய முன்னணியின் ஊடக சந்திப்பு இன்று மட்டக்களப்பு வொய்ஸ் ஒப் மீடியா (பற்றி எப்எம் ) ஊடக மையத்தில் இடம்பெற்றது. தமிழ்த் தலைமைகள் எனக் கூறிக்கொள்ளும் மூத்த அரசியல் வாதிகள் மக்கள் சார்ந்து செயற்படவில்லை என தமிழ் இலட்சிய முன்னணியின தலைவர் ...

மேலும்..

வவுனியாவில் சட்டத்தரணிகள் பணிப்புறக்கணிப்பு

நீதிமன்றின் தீர்ப்பை அவமதித்தது பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலய தீர்த்தக்கேணியில் உயிரிழந்த பௌத்த பிக்குவின் உடலத்தை எரித்தமையை கண்டித்தும் , சட்டதரணிகள் மீது தாக்குதல் நடாத்தப்பட்டமையை கண்டித்ததும் வவுனியா நீதிமன்றம் முன்பாக இன்று (25.09.2019) காலை தமது வாயினை கறுப்பு ...

மேலும்..

சாய்ந்தமருது தனது உட்கட்டமைப்பு அபிவிருத்தியில் கவனம் செலுத்த வேண்டும்

ஏனைய பிரதேசங்களில் இடம்பெற்று வரும் அபிவிருத்திகளுடன் சாய்ந்தமருதை ஒப்பிடும்போது வருந்தும் அளவுக்கு அபிவிருத்தியில் பின்னிலையில் இருப்பதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினரும் சமூக சிந்தனையாளருமான அல் ஹஜ் ஏ.சி. யஹ்யாகான் தெரிவித்தார். தேவையுடைய சிலருக்கு விட்டைத் திருத்துவதற்காகவும் மின் இணைப்பைப் பெறுவதற்காகவும் ...

மேலும்..

தமிழ் மொழி மூல அதிபர் நியமனங்களை வழங்குமாறு கல்வி அமைச்சர் அகிலவிடம் பிரதியமைச்சர் அப்துல்லா மஃறூப் எடுத்துரைப்பு

அண்மையில் நடாத்தப்பட்ட அதிபர் சேவை தரம் iii க்கான போட்டிப்பரீட்சையில் சித்தியடைந்து நேர்முகத் தேர்விலும் சித்தியடைந்த அனைத்து தமிழ் மொழி மூல தகுதியுடையவர்களுக்கு அதிபர் நியமனங்களை வழங்குமாறு  துறை முகங்கள் மற்றும் கப்பற் துறை பிரதியமைச்சர் அப்துல்லா மஃறூப் கல்வி அமைச்சர் ...

மேலும்..

வவுனியாவில் கரடியின் தாக்குதலுக்கு இலக்காகி இருவர் வைத்தியசாலையில் அனுமதி

வவுனியாவில் விறகு வெட்ட சென்ற இருவர் கரடியின் தாக்குதலுக்கு இலக்காகி காயமடைந்துள்ளனர். குறித்த சம்பவம் ஓமந்தை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட நவ்வி பாலமோட்டை பகுதியில் நேற்று (24.09.2019) மாலை இடம்பெற்றுள்ளது. பற்றை ஒன்றுக்குள் மறைந்திருந்த கரடியே இருவரையும் தாக்கியுள்ளதாக விசாரணைகளில் தெரியவருகிறது. இதனையடுத்து குறித்த நபர்களும் ...

மேலும்..

மருத்துவச் சான்றிதழுக்கு தினம்தினம் மக்கள் அவதி!

சாரதி அனுமதிப் பத்திரம் பெறுவதற்கான மருத்துவச் சான்றிதழ் பெறுவதற்கு வடபகுதி மக்கள் தினம்தினம் அவதியுறுகின்ற நிலைமையை அவதானிக்க முடிகின்றது. வடபகுதியில் சனத்தொகையில் கூடிய பிரதேசமாகிய யாழ்ப்பாணத்தில் தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவகத்தில் மருத்துவச் சான்றிதழ் பெறுவதற்காக விடியற்காலை 2 மணிக்கே மக்கள் கூடிநின்று ...

மேலும்..

நிறைவேற்று அதிகாரம் ஒழிக்கப்படுமாயின் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடமாட்டேன் – ரணில் உறுதி

நிறைவேற்று அதிகாரம் ஒழிக்கப்படுமாயின் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடமாட்டேன் - ரணில் உறுதி; சஜித்தை வேட்பாளராக நியமிக்கவும் கொள்கையளவில் இணக்கம் "இலங்கையில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை முற்றாக ஒழிக்கப்படும் என்றால், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் அவசியம் எனக்கு இல்லை." - இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சியின் ...

மேலும்..

ரணில், கரு, சஜித்துக்கு நான் முடிவு கட்டுவேன்! – நவம்பர் 16இல் மக்கள் ஆணை கிடைக்கும் என மஹிந்த நம்பிக்கை

"எதிர்வரும் நவம்பர் 16ஆம் திகதி நடைபெறும் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ச வெல்வது உறுதி. அந்தத் தேர்தலில் எமது கட்சிக்குக் கிடைக்கப் பெறும்  மக்கள் ஆணை அதிகாரத்துடன் ரணில் விக்கிரமசிங்க, கரு ஜயசூரிய, சஜித் பிரமதாஸ ...

மேலும்..

வவுனியா நெடுங்கேணியில் 8 வயது மாணவி துஸ்பிரயோக முயற்சி: இருவர் கைது

வவுனியா, நெடுங்கேணி மகாவித்தியாலயத்தில் கல்வி பயிலும் 8 வயது மாணவி ஒருவரை பாலியல் துஸ்பிரயோகம் செய்ய முயற்சித்த குற்றச்சாட்டின் கீழ் இருவர் நெடுங்கேணி பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். வவுனியா, நெடுங்கேணி மகாவித்தியாலயத்தில் தரம் 3 இல் கல்வி பயிலும் 8 வயது மாணவி ...

மேலும்..

செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலய வளாகத்தினுள் பௌத்த பிக்குகளின் அடாவடியினை கண்டித்து வவுனியாவில் போராட்டம்

நீதிமன்ற உத்தரவையும் மீறி நீராவியடி பிள்ளையார் ஆலய புனிதத் தன்மையை கேள்விக்குட்படுத்தி சைவத் தமிழர்களின் மனங்களை புண்படுத்தும் வகையில் பெளத்த துறவியின் உடல் தகனம் செய்யப்பட்டமை மற்றும் நீதி கேட்ட சட்டத்தரணி ,பொதுமக்கள் தாக்கப்பட்டமையை கண்டித்து வவுனியாவில் இன்று (24.09.2019) கவனயீர்ப்பு ...

மேலும்..

வவுனியா மாவட்ட செயலகத்தில் சிறுவர் திறன் விருத்தி செயலமர்வு

சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு சிறுவர் திறன் விருத்தி செயலமர்வு வவுனியா மாவட்ட செயலகத்தில்  இடம்பெற்றது. வவுனியா மாவட்ட செயலக மற்றும் செட்டிகுளம் பிரதேச செயலக சிறுவர், பெண்கள் பிரிவின் ஏற்பாட்டில் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இச் செயலமர்வு இடம்பெற்றது. சர்வதேச சிறுவர் ...

மேலும்..

மட்டக்களப்பில் கொள்ளைக்கோஷ்டி குழு கைது கைத்துப்பாக்கி மற்றும் வீடு உடைக்கும் ஆயுதங்கள் மீட்பு

மட்டக்களப்பு நகர் பகுதியில் பல கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடைய கொள்ளைக்கோஷ்டியினைச் சேர்ந்த 5 பேரை மைக்கிரே ரக கைத்துப்பாக்கி ஒன்றுடன்  நேற்று செவ்வாய்க்கிழமை (24) நள்ளிரவு  கைது செய்ததுள்ளதுடன் முச்சக்கரவண்டி ஒன்று  மற்றும்  கையடக்க தொலைபேசிகள்  வீடு உடைக்கும் பொருட்களை மீட்டுள்ளதாக ...

மேலும்..

நவம்பர் 16இல் ஆட்சி மாற்றம் – அடித்துக் கூறுகின்றார் கோட்டா

எதிர்வரும் நவம்பர் 16ஆம் திகதி ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சி கவிழும்; ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஆட்சி மலரும். நான் ஜனாதிபதியாகப் பதவியேற்பேன். மஹிந்த ராஜபக்ச பிரதமராகப் பதவியேற்பார்." - இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ச தெரிவித்தார். "நாம் ...

மேலும்..