September 28, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டவை

மட்டக்களப்பில்; துப்பாக்கி தவறுதலாக வெடித்ததில் 14 வயது சிறுவன் உயிரிழப்பு 

மட்டக்களப்பு கித்துள் காட்டுக்கு உள்ளுர் தயாரிப்கு துப்பாக்கியுடன் 4 பேர் வேட்டைக்கு சென்ற நிலையில் குறித்த துப்பாக்கி தவறுதலாக வெடித்ததில் 14 வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்த சம்பவம் இன்று சனிக்கிழமை (28) மாலையில் இடம்பெற்றுள்ளதாக கரடியனாறு பொலிசார் தெரிவித்தனர் கித்துள் பிரதேசத்தைச் ...

மேலும்..

மொட்டு’ச் சின்னத்தைக் கைவிட மஹிந்த, கோட்டா, பஸில் மறுப்பு

'மொட்டு'ச் சின்னத்தைக் கைவிட மஹிந்த, கோட்டா, பஸில் மறுப்பு மைத்திரியுடனான இன்றைய பேச்சும் தோல்வி; சு.க. திங்கள் தீர்க்கமான முடிவு ஜனாதிபதித் தேர்தலை தாமரை மொட்டுச் சின்னத்திலும், நாடாளுமன்றத் தேர்தலைப் பொதுச் சின்னத்திலும் எதிர்கொள்வதற்கான யோசனையை  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் மஹிந்த ராஜபக்ச தலைமையிலான  பொதுஜன முன்னணி ...

மேலும்..

தொடர்கின்றது ரயில்வே ஊழியர்களின் வேலைநிறுத்தம்! – பயணிகள் பெரும் அவதி

ரயில்வே ஊழியர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் மூன்றாவது  நாளாகவும் இன்று தொடர்ந்ததால் பயணிகள் பெரும் போக்குவரத்து சிரமங்களை எதிர்நோக்கினார்கள். ரயில்வே திணைக்களத்தைச் சேர்ந்த 30 இற்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்களின் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் கடந்த வியாழக்கிழமை முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றார்கள். ரயில் ...

மேலும்..

வல்லிபுர ஆழ்வாருக்கு ஒக்டோபர் 12இல் தேர்! 

சரித்திரப் பிரசித்திபெற்ற வடமராட்சி அருள்மிகு ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் ஆலய வருடாந்தப் பெருந்திருவிழா இன்று சனிக்கிழமை காலை 9 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது. தொடர்ந்து 17 தினங்கள் இடம்பெறும். 7ஆம் திருவிழாவான எதிர்வரும் 4ஆம் திகதி வெள்ளிக்கிழமை முதல் 13ஆம் திருவிழாவான 10ஆம் ...

மேலும்..

கல்முனை பிராந்திய இளைஞர் சேனையின் வருடாந்த பொதுக்கூட்டமும் புதிய நிருவாக தெரிவும்

கல்முனை பிராந்திய இளைஞர் சேனையின் வருடாந்த பொதுக்கூட்டமும் புதிய நிருவாக தெரிவும் எதிர்வரும் 29.09.2019 திகதி மாலை 3 மணிக்கு பாண்டிருப்பு கலாசார மண்டபத்தில் இடம்பெறும் என்பதை அறியத்தருவதோடு அனைத்து உறுப்பினர்களையும் , புதியதாய் இணைய விரும்பும் அனைவரையும் அன்போடு அழைக்கப்படுகிறார்கள்.

மேலும்..

இலங்கை சிங்கள பௌத்த நாடு: ஏற்றுக்கொள்ளாதவர்கள் வேறு நாடுகளுக்கு செல்லலாம்; ஞானசார தேரரின் கூச்சலுக்கு பதிலடி!

இலங்கை சிங்கள பௌத்த நாடு. இதனை ஏற்றுக் கொண்டவர்கள் மட்டும் இந்த நாட்டில் இருக்கலாம். இல்லையெனில், தங்களது உடமைகளுடன் வேறு நாடுகளுக்குச் செல்லலாம் என பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்திருந்தார். ஞானசார தேரரின் இந்த ...

மேலும்..

அரச நிர்வாக சேவை உத்தியோகத்தர்களும் வேலை நிறுத்த போராட்டத்துக்கு தயார்

அரச நிர்வாக சேவை அதிகாரிகள் சங்கமும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளது. சம்பளப் பிரச்சினை உள்ளிட்ட பிரச்சினைகளை முன்னிறுத்தி நாளை மறுதினம் முதல் பணிப் பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளதாக அரச நிர்வாக சேவை அதிகார சங்கத்தின் தலைவர் ரோஹன டீ சில்வா தெரிவித்துள்ளார். கடந்த ...

மேலும்..

மைத்திரி – மஹிந்த சற்றுமுன் சந்திப்பு! – முடிவு எதுவும் வெளியாகவில்லை

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும்,  பொதுஜன முன்னணியின் தலைவர் மஹிந்த ராஜபக்சவுக்கும் இடையிலான முக்கியத்துவமிக்க சந்திப்பு சற்றுமுன்னர் நடைபெற்றது. ஜனாதிபதியின் இல்லத்தில் நடைபெற்ற இந்தச் சந்திப்பில் பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ச, தேசிய அமைப்பாளர் பஸில் ...

மேலும்..

வேட்பாளர்களுடன் மட்டுமன்றி கட்சிகளுடனும் பேசத் தயார் – தமிழ் தேசியக் கூட்டமைப்பு

ஜனாதிபதி வேட்பாளர்களுடன் மட்டுமல்லாது அவர்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளுடன் முக்கியமாக பேச்சுவார்த்தை நடத்த ஆயத்தமாக உள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா இதனைத் தெரிவித்துள்ளார். மேலும், நாட்டின் எதிர்கால அரசியல், சமூக, பொருளாதார நிலைமைகள் ...

மேலும்..

மட்டக்களப்பில் 15 வயது சகோதரியை பாலியல் துஷ;பிரயோகம் செய்த 20 சகோதரனுக்கு 14 நாள் விளக்கமறியல் —

மட்டக்களப்பில் 15 வயது சகோதரியை பாலியல் துஷ;பிரயோகம் செய்த 20 சகோதரனுக்கு 14 நாள் விளக்கமறியல் -- மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள திராய்மடு பிரதேசத்தில் 15 வயது சிறுமியான சகோதரியை பாலியல் துஸ்பிரயோகம் மேற்கொண்ட  20 வயதுடைய சகோதரனை மட்டக்களப்பு நீதவான் ...

மேலும்..

சஜித் எல்லாம் கோட்டாவுக்குத் தூசி! – எள்ளிநகையாடுகின்றார் மஹிந்த

சஜித் எல்லாம் கோட்டாவுக்குத் தூசி! - எள்ளிநகையாடுகின்றார் மஹிந்த "ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாஸ நியமிக்கப்பட்டாலும், அவர் எமது வேட்பாளர் கோட்டாபய ராஜபக்சவுக்கு தூசிதான். நவம்பர் 17ஆம் திகதி நாட்டின் தலைவராக கோட்டாபய பொறுப்பேற்பார். நாடாளுமன்ற ஆட்சியிலும் உடனடியாக மாற்றம் வரும்." -  இவ்வாறு ஸ்ரீலங்கா ...

மேலும்..

இந்து மக்களே எழுச்சி கொள்’ – மன்னாரில் மாபெரும் சைவ எழுச்சி மாநாடு

மன்னார் மாவட்ட இந்து குருமார் பேரவையின் ஏற்பாட்டில் ‘இந்து மக்களே எழுச்சி கொள்’ எனும் தொனிப்பொருளில் மாபெரும் ‘சைவ எழுச்சி மாநாடு’ மன்னாரில் இடம்பெற்றது. மன்னார் பிரதான பாலத்தடியில் நடராஜப் பெருமானின் திருவுருவச் சிலையை ஏந்தியவாறு இன்று (சனிக்கிழமை) காலை ஆரம்பிக்கப்பட்ட எழுச்சிப் ...

மேலும்..

நல்லூர் திருவிழாவில் இறைபணியாற்றிய தொண்டர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் பிரதம விருந்தினராக முதல்வர்

நல்லூர் திருவிழாவில் இறைபணியாற்றிய தொண்டர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் பிரதம விருந்தினராக முதல்வர் ஆனல்ட். இம்முறை இடம்பெற்ற நல்லூர் கந்தசுவாமி ஆலய பெருந்திருவிழாவில் இறைபணியாற்றிய தொண்டர்களை கௌரவித்து சான்றிதழ் வழங்கும் நிகழ்வு நேற்று (27) மாநகர யாழ் பொது நூலக கேட்போர் கூடத்தில் ...

மேலும்..

கட்சி தாவும் படலம் ஆரம்பம்! – பிள்ளையார் சுழிபோட்டார் நாவின்ன

ஜனாதிபதித் தேர்தல் நவம்பர் 16ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில் கட்சி தாவும் படலம் ஆரம்பமாகியுள்ளது. இதற்கு ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. நாவின்ன இன்று பிள்ளையார் சுழி போட்டார். ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் உறுப்பினராகச் செயற்பட்ட எஸ்.பி. ...

மேலும்..

காலநிலை மாற்றத்திற்கெதிராக ரொறன்ரோவில் அணிதிரண்ட பத்தாயிரம் மக்கள்!

காலநிலை மாற்றம் குறித்து விரைவான நடவடிக்கை எடுக்கக் கோரி ரொறன்ரோவில் பத்தாயிரம் மக்கள் அணி திரண்டனர். நேற்று (வெள்ளிக்கிழமை) கனடா முழுவதும் டசன் கணக்கான நகரங்களில் போராட்டங்கள் நடத்தப்பட்ட போதும், நாட்டின் மிகப்பெரிய போராட்டமாக குயின்ஸ் பூங்காவில் பல்லாயிரக் கணக்கான மக்கள் அணி ...

மேலும்..

கெனோராவில் பெண்னொருவரை தாக்கிய கரடி!

தண்டர் பே- கெனோராவில் இந்த வாரம் பெண்னொருவர் கரடியின் தாக்குதலுக்கு உள்ளானதாக ஒன்ராறியோ பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று முன் தினம் (வியாழக்கிழமை) காலை 11:15 மணியளவில் இந்த சம்பவம் நடந்துள்ளது. ரைஸ் லேக் வீதியில் நடந்து கொண்டிருந்தபோது, கருப்பு கரடியால் தான் தாக்கப்பட்டதாக பாதிக்கப்பட்ட ...

மேலும்..

10 ஆயிரம் வீடுகளுக்கான மின்சாரம் துண்டிப்பு!

இரத்தினபுரி மாவட்டத்தில் வீசிய கடும் காற்று காரணமாக சுமார் 10 ஆயிரம் வீடுகளுக்கான மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. இலங்கை மின்சக்தி அமைச்சு இதனைத் தெரிவித்துள்ளது. மின் விநியோகத்தை வழமைக்கு கொண்டு வருவதற்கு தேவையான நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிடப்படுகின்றது. எவ்வாறாயினும், மின் விநியோகத்தினை வழமைக்கு கொண்டுவரும் ...

மேலும்..

கோட்டாவிற்கு எதிராக களமிறங்குகின்றார் மகேஸ் சேனநாயக்க

ஜனாதிபதி தேர்தலில் தேசிய மக்கள் இயக்கத்தின் சார்பில் போட்டியிடவுள்ள வேட்பாளர் குறித்த அறிவிப்பு வெளியிடப்படவுள்ளது. பல்வேறு சிவில் சமூக அமைப்புகள் அங்கம் வகிக்கும் தேசிய மக்கள் இயக்கத்தின் மாநாடு இலங்கை நேரப்படி நாளை பிற்பகல் 1.30 மணியளவில் கொழும்பு சுகததாச உள்ளரங்கில் இடம்பெறவுள்ளது. இதன்போது ...

மேலும்..

முல்லைத்தீவுவில் இடம்பெற்ற சம்பவத்தை கண்டித்து கிளிநொச்சியில் கவன ஈர்ப்பு

முல்லைத்தீவுவில் இடம்பெற்ற சம்பவத்தை கண்டித்து கிளிநொச்சியில் கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.குறித்த போராட்டம் இன்று காலை 10.30 மணியளவில் கிளிநொச்சி ஏ9 வீதியில் அமைந்துள்ள பழைய மாவட்ட செயலகம் முன்பாக இடம்பெற்றது. இதன்போது குறித்த சம்பவத்தை கண்டிக்கும் வகையில் சுலோகங்கள் ...

மேலும்..

புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கு; யாழ் மேல் நீதிமன்றம் விடுத்த முக்கிய உத்தரவு!

புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கின் முக்கிய சூத்திரதாரியான சுவிஸ்குமாரை விடுவித்து உதவிய குற்றச்சாட்டு வழக்கில் இரண்டாவது சந்தேகநபரான முன்னாள் உதவிப் பொலிஸ் பரிசோதகர் சிறிகஜன் தலைமறைவாகியுள்ளமை தொடர்பில் உரிய விசாரணைகளை முன்னெடுத்து, வரும் ஒக்டோபர் 10 ஆம் திகதிக்கு முன்னர் ...

மேலும்..

தமிழ் தரப்புடன் பேச்சுக்களுக்கு தயாராகும் பிரதான அரசியல் கட்சிகள்

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான பிரதான கட்சிகளின் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அடுத்து ஆதரவு திரட்டும் நடவடிக்கைகளை கட்சிகள் முன்னெடுத்துள்ளன. இந்நிலையில் வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் முழுமையான ஆதரவை பெற்றுக்கொள்ளும் வகையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஏனைய தமிழ் கட்சிகள், அமைப்புகளுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி ...

மேலும்..

இலங்கையின் மெகா – உள்கட்டமைப்பு முயற்சிகளில் முதலீடு செய்ய இந்திய தொழில்துறை முதலீட்டாளர்கள் தயாராகி வருகின்றனர்!

இலங்கையின் மெகா - உள்கட்டமைப்பு முயற்சிகளில் முதலீடு செய்ய இந்திய தொழில்துறை முதலீட்டாளர்கள் தயாராகி வருகின்றனர்! 'இந்தியாவின் சக்திவாய்ந்த இந்திய தொழில்துறை கூட்டமைப்பு (Confederation of Indian Industry) முதன்முறையாக இலங்கையில் உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு தனது புதிய முதலீடுகள் மற்றும் நிதி உந்துதலைகளினை ...

மேலும்..

வவுனியாவில் இரு முச்சக்கரவண்டிகள் மோதி  விபத்து

> > வவுனியா புகையிர நிலைய வீதியில் இன்று மாலை இரு முச்சக்கரவண்டிகள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் சாரதிகள் தெய்வாதீனமாக உயிர் தப்பினார். > > வவுனியா புகையிரத நிலைய வீதியில்  ஒரமாக நிறுத்தியிருந்த முச்சக்கர வண்டி  நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இடத்திலிருந்து புகையிரத நிலைய ...

மேலும்..

மட்டக்களப்பு, புனித மிக்கேல் கல்லூரி தேசிய பாடசாலையின் சமூக விழிப்புணர்வு நடை பவனி’

மட்டக்களப்பு, புனித மிக்கேல் கல்லூரி தேசிய பாடசாலையின் பழைய மாணவர் சங்கம், மாணவர்கள், ஆசிரியர், பெற்றோர், சமூகத்துடன் இணைந்து ஏற்பாடு செய்த 'சமூக விழிப்புணர்வு நடை பவனி' இன்று சனிக்கிழமை காலை இடம்பெற்றது. பாடசாலையில் இருந்த ஆரம்பமான இவ் நடை பவனியில் ஆசிரியர்கள், ...

மேலும்..