October 4, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டவை

தேசிய அரசியலில் இணைந்து எமது பயணத்தை கோட்டாவுடன் ஆரம்பிப்போம் -முன்னாள் உயர்கல்வி பிரதி யமைச்சர் மயோன் முஸ்தபா

தேசிய அரசியலில் இணைந்து எமது பயணத்தை ஆரம்பிக்க வேண்டும். கோட்டாவை ஆதரிப்பதனால் தான் இனநல்லுறவை கட்டியெழுப்பி செழிப்பான பொருளாதார வளம் மிக்க நாட்டை உருவாக்க முடியும் என முன்னாள் உயர்கல்வி பிரதி யமைச்சர் மயோன் முஸ்தபா தெரிவித்தார். எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பாகவும் ...

மேலும்..

கொழும்பின் புறநகர் பகுதியில் வெடிகுண்டு மீட்கப்பட்டு வெடிக்க வைப்பு!

கொழும்பின் புறநகர் பகுதியான மொரட்வையில் வெடிகுண்டுகள் மீட்கப்பட்டுள்ளன. இந்நிலையில், வெடிகுண்டுகள் செயலிழக்க செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம் தெரிவிக்கின்றது. வெடிகுண்டுகளை வெடிக்க வைத்து செயலிழக்க செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. இதில் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை எனவும் பொலிஸார் கூறியுள்ளனர். https://www.facebook.com/100037806703721/videos/142045217065701/?id=100037806703721 மொரட்டுவையில் குண்டுகள் செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளன மொரட்டுவ பகுதியில் ...

மேலும்..

அருவி பெண்கள் வலையமைப்பின் ஏற்பாட்டில் உளவள பயிற்சி பட்டறையின் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

மட்டக்களப்பு மாவட்ட அருவி பெண்கள் வலையமைப்பின் ஏழு நாள் உளவள பயிற்சி பட்டறையின் இறுதி நாள் நிகழ்வின் பரிசளிப்பு நிகழ்வு இன்று (04) மட்டக்களப்பு தாழங்குடா மியாமி மண்டபத்தில் இடம்பெற்றது. மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மாணிக்கம் உதயகுமார் பிரதம அதிதியாக கலந்து ...

மேலும்..

தமிழ் மக்களின் விடியலை வென்றுகொள்வதற்காகத்தான் ;விடுதலைப்புலிகள் பலமாக இருந்த வேளையில் இறங்கி வந்து பேச்சுவார்த்தைக்கு சென்றார்கள்

பேரினவாத சக்திகள் தேசிய ரீதியிலும் சர்வதேச ரீதியிலும் தமிழ் தேசிய கூட்டமைப்பை பிளவுபடுத்தி சிதைக்க எத்தனிப்பதை நாங்கள் கண்கூடாக காண்கின்றோம் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடிஸ்வரன் தெரிவித்தார். அம்பாறை மாவட்டத்தின் பெரிய நீலாவணை பகுதியில் ...

மேலும்..

ஹரீஸ் எம்.பிக்கு எதிராக சாய்ந்தமருது பள்ளிவாசல் தலைவர் போர்க்கொடி

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் கல்முனையை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர் ஆதரிக்கும் வேட்பாளருக்கு எதிராக சாய்ந்தமருது மக்கள் வாக்களித்து கல்முனை தொகுதியை மண் கெளவச் செய்து தமது எதிரிப்பை வெளிப்படுத்த வேண்டும் சாய்ந்தமருது மாளிகைக்காடு ஜும்ஆப் பள்ளிவாசல் தலைவர் அல்ஹாஜ் வை.எம்.ஹனீபா தெரிவித்தார். இவ்வாறு ...

மேலும்..

தீர்ப்பின் பின்னர் மஹிந்தவை நேரில் சந்தித்தார் கோட்டாபய

பிரஜாவுரிமை தொடர்பான தமக்கு எதிரான வழக்கு மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டதையடுத்து சற்றுமுன்னர் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தலைவர் மஹிந்த ராஜபக்சவையும், அந்தக் கட்சியின் முக்கியஸ்தர்களையும் நேரில் சந்தித்தார் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ச. இதன்போது கோட்டாவை வாழ்த்திய பொதுஜன ...

மேலும்..

கோட்டாபயவின் இலங்கை பிரஜாவுரிமையை ஆட்சேபனைக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட மனு நிராகரிப்பு

கோட்டாபய ராஜபக்ஸவின் இலங்கை பிரஜாவுரிமையை ஆட்சேபனைக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நீதிபதி யசந்த கோதாகொட, அர்ஜூன ஒபேசேகர, மற்றும் மஹிந்த சமயவர்தன ஆகிய மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் குறித்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இன்று காலை ...

மேலும்..

இன்று நள்ளிரவு முதல் லிட்ரோ கேஸ் சமையல் எரிவாயுவின் விலை குறைப்பு

இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் லிட்ரோ கேஸ் சமையல் எரிவாயுவின் விலை குறைக்கப்படவுள்ளது. அதற்கமைய, கொழும்பு மாவட்டத்தில் 240 ரூபா குறைக்கப்பட்டு புதிய விலையாக 1,493 ரூபா அறிவிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது. 5 கிலோகிராம் நிறையுடைய லிட்ரோ கேஸ் ...

மேலும்..

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் பெயர்களில் திடீர் மாற்றம்! களத்தில் ஹிஸ்புல்லா

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்சவின் இலங்கைக் குடியுரிமை தொடர்பான சர்ச்சையின் மீது மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவு தொடர்பான கட்டளை இன்று வெளியாகவுள்ள நிலையில், அந்தக் கட்டளை எப்படி அமைந்தாலும், மாற்று வேட்பாளர் ஒருவரைக் கட்டாயம் களம் ...

மேலும்..

அரசியலில் பரபரப்பு ! சமல் ராஜபக்ஷ கட்டுப்பணம் செலுத்தினார்

ஸ்ரீலங்கா சுதந்திர பொதுஜன கூட்டமைப்பு சார்பில் முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ஷ கட்டுப்பணம் செலுத்தியுள்ளார். எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட ஸ்ரீலங்கா சுதந்திர பொதுஜன கூட்டமைப்பு என்ற பெயரில் கட்டுப்பணத்தை சமல் ராஜபக்ஷ செலுத்தியுள்ளார். ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் ...

மேலும்..

கல்முனை இளைஞர் சேனையின் புதிய நிர்வாகம்

கல்முனை இளைஞர் சேனையின் பொதுக்கூட்டமும் புதிய நிர்வாக தெரிவும் முன்னாள் தலைவர் திரு அ. டிலான்சன் தலைமையில் 29.09.2019 அன்று பாண்டிருப்பு கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது. இதில் சேனையில் கடந்தகால செயற்பாடுகள் விபரிக்கப்ப்ட்டது. அதனை தொடர்ந்து புதிய நிருவாகம் தெரிவு செய்யப்பட்டது. புதிய தலைவராக ...

மேலும்..

கோட்டாவின் தலைவிதி இன்று மாலை நிர்ணயம்

கோட்டாவின் தலைவிதி இன்று மாலை நிர்ணயம் - மேன்முறையீட்டு நீதிமன்ற வளாகத்தில் கடும் பாதுகாப்பு ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்சவின் இலங்கைப் பிரஜாவுரிமை தொடர்பாக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் நேற்றுமுன்தினம் தொடக்கம் விசாரிக்கப்பட்டுவரும் வழக்கின் தீர்ப்பு இன்று மாலை 6 மணிக்கு வழங்கப்படவுள்ளது. இந்த வழக்கையொட்டி ...

மேலும்..

ஊடகவியலாளர் பணியினை சிறந்த முறையில் முன்னெடுக்க வட்டியில்லா கடன் வழங்க ஊடக அமைச்சு நடவடிக்கை

வெகுசன ஊடகங்களில் பணிபுரியும் ஊடகவியலாளர்களின் பணியினை சிறந்த முறையில் முன்னெடுப்பதற்காக அவர்களுக்கு நவீன தொழிநுட்ப கருவிகளை கொள்வனவு செய்து கொள்வற்கு வட்டடியில்லா கடன் வழங்கும் திட்டம் இன்று ஊடகதுறை மற்றும் பாதுகாப்பு அமைச்சர் ருவன் விஜேவர்தன தலைமையில் இன்று ( 04) ...

மேலும்..

ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு விதிக்கப்பட்ட தடை!

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் நபர்கள் அல்லது கட்சி உறுப்பினர்களுக்கு வீதியின் இரண்டு பக்கங்களும் டிஜிட்டல் பெயர் பலகைகளை பயன்படுத்தி பிரச்சார நடவடிக்கை மேற்கொள்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க இதனை அறிவித்துள்ளார். அத்துடன் சினிமா மண்டபங்களுக்குள் தேர்தல் ...

மேலும்..

யாழ்ப்பாணம் சென் பற்றிக்ஸ் கல்லூரி புதிய (Gardiner Block) கட்டடத்தொகுதி திறப்பு விழா

யாழ்ப்பாணம் சென் பற்றிக்ஸ் கல்லூரி புதிய (Gardiner Block) கட்டடத்தொகுதி திறப்பு விழா. முதல்வர் ஆனல்ட் விசேட விருந்தினராக பங்கேற்பு யாழ்ப்பாணம் சென் பற்றிக்ஸ் கல்லூரியில் Mr. E. Sanjeev Gardiner அவர்களின் நிதி அனுசரணையில் அமைக்கப்பட்டுள்ள புதிய (Gardiner Block) கட்டடத்தொகுதி ...

மேலும்..

மாற்று வேட்பாளரை இறக்கும் கட்டாயத்தில் மொட்டுக் கட்சி

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்சவின் இலங்கைக் குடியுரிமை தொடர்பான சர்ச்சையின் மீது மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவு தொடர்பான கட்டளை இன்று வெளியாகவுள்ள நிலையில், அந்தக் கட்டளை எப்படி அமைந்தாலும், மாற்று வேட்பாளர் ஒருவரைக் கட்டாயம் களம் ...

மேலும்..

ஏறாவூர் சமூக சேவைகள் அபிவிருத்தி ஒன்றியத்தின் ஏற்பாட்டில் சிறுவர்தின நிகழ்வு

சர்வதேச சிறுவர் தினத்தை சிறப்பிக்கும் முகமாக ஏறாவூர் சமூக சேவைகள் அபிவிருத்தி ஒன்றியம் ஏறாவூர் லகூன் பூங்காவில் இன்றைய தினம் சிறுவர்தின நிகழ்வினை சிறப்பாகக் கொண்டாடியது. சமூக சேவைகள் அபிவிருத்தி ஒன்றியத்தின் தலைவர் முகம்மட் பாறூக் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மட்டக்கப்பு மாவட்ட ...

மேலும்..

கௌதம புத்தரைக் கூட கண்ணீர் சிந்த வைக்கும் நிலையில் பிக்குகளின் செயற்பாடுகள் உள்ளன

இன்று இலங்கையில் சிறுபான்மையோருக்கு எதிராக பௌத்த பிக்குகள் செயற்படும் விதத்தினை நினைத்து கௌதம புத்தர் கூட கண்ணீர் சிந்திக்கொண்டிருப்பார். என மட்டக்களப்பு மாநகர சபை உறுப்பினர் துரைசிங்கம் மதன் விசனம் தெரிவித்தார். மட்டக்களப்பு மாநகர சபையின் 24 ஆவது அமர்வானது நேற்றைய தினம் ...

மேலும்..

கமு/திகோ/ஸ்ரீ இராம கிருஸ்ணா கல்லுரி (தே.பா) அக்கறைப்பற்று மாணவர் பாராளுமன்ற தேர்தல்2019/10/03

கமு/திகோ/ஸ்ரீ இராமகிருஸ்ணா கல்லூரி (தே.பா) மாணவர் பாராளுமன்ற தேர்தல் முடிவுகள்.   மொத்த வாக்குகள் – 1179 அளிக்கப் பட்ட வாக்குகள் – 908     77% அளிக்கப் படாத வாக்குகள் 271      23% 145 போட்டியாளர்கள் பங்கு பற்றினர்.95 உறுப்பினர்கள் தெரிவுசெய்யப் பட்டனர்.   146 ஓட்டினைப் பெற்று தரம் 12 ...

மேலும்..

தமிழ் மக்களின் கோரிக்கைகளின் அடிப்படையிலே தான் எமது ஆதரவும் இருக்கும். -கி.துரைராசசிங்கம்

தமிழ் மக்களின் கோரிக்கைகளின் அடிப்படையிலே தான் எமது ஆதரவும் இருக்கும்… (இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி பொதுச் செயலாளர் கி.துரைராசசிங்கம்) வடக்கு கிழக்கைப் பொறுத்த வரையில் குறிப்பாக தமிழ் பேசும் மக்களைப் பொருத்தவரையில் இந்த ஜனாதிபதித் தேர்தலில் ஏதோவொரு விதத்தில் விரும்பியோ விரும்பாமலே ஈடுபட்டே ...

மேலும்..

தமிழர் தாயகத்தை பாதுகாக்க முன்வாருங்கள்-ப.கார்த்தீபன்

தமிழ் தேசிய கூட்டமைப்பு தொடர்ந்தும் ஐக்கிய தேசிய கட்சிக்கு ஆதரவு வழங்குவதன் மூலம் தமிழர் தாயக பூமியில் தமிழர்களின் இருப்பு பரிபோகிறது என சிறிலோ இளைஞரணி தலைவர் பரமேஸ்வரன் கார்த்தீபன் குற்றம் சுமத்தியுள்ளார் தொடர்ந்தும் அவரது ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது கடந்த ஜந்து வருடங்களாக ...

மேலும்..

கடற்கரைப் பள்ளிவீதியுடன் கல்முனையை தமிழர்களிடம் பிரித்துக் கொடுக்க முயன்றால் இனக்கலவரம் வெடிக்கும் : எச்சரிக்கை விடுத்தார் ஹரீஸ்

கல்முனை கடற்கரை பள்ளி வீதியால் தமிழ் பிரதேச செயலகம் பிரித்து கொடுக்க முஸ்லிம் காங்கிரஸ் ஒருதலைப்பட்சமாக முடிவெடுக்குமானால் கல்முனையில் பாரிய கலவரம் உண்டாகும் கடந்த நம்பிக்கையில்லா பிரேரணை காலத்தில் தொகுதி பாராளுமன்ற உறுப்பினராகிய என்னிடமே பேசாமல் குறித்த அமைச்சரால் கல்முனை உப பிரதேச ...

மேலும்..

சஜித்துக்கே வாய்ப்பு அதிகம்! – விக்டர் ஐவன் ஆரூடம்

தாழ்த்தப்பட்ட மற்றும் ஏழைகளின் நாயகனாக சஜித் பிரேமதாஸவை மக்கள் நினைக்கிறார்கள். அந்த மக்களின் தொகை அதிகமானது. இது மஹிந்த மற்றும் கோட்டாபய தரப்புக்கும் பெரும் பாதிப்பை உண்டாக்கும். அதனால் ஜனாதிபதித் தேர்தலில் சஜித் இலகுவான வெற்றியொன்றை பெறப் போகின்றார்." - இவ்வாறு 'ராவய' ...

மேலும்..

யாழ் பொது நூலகத்தின் ஏற்பாட்டில் சிறுவர் தினக் கொண்டாட்டம் முதல்வர் ஆனல்ட் பிரதம விருந்தினராக பங்கேற்பு

யாழ் பொது நூலகத்தின் ஏற்பாட்டில் சிறுவர் தினக் கொண்டாட்டம் முதல்வர் ஆனல்ட் பிரதம விருந்தினராக பங்கேற்பு உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு யாழ் மாநகர பொது நூலகத்தின் ஏற்பாட்டில் அண்மையில் சிறுவர் தினக் கொண்டாட்டம் இடம்பெற்றது. இந் நிகழ்வில் யாழ் மாநகர முதல்வர் கௌரவ ...

மேலும்..

நான் தலைவராக இருக்கும்வரை ஐ.தே.க. ஒருபோதும் பிளவுபடாது! – அடித்துக் கூறுகின்றார் ரணில்

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராக நான் இருக்கும்வரை கட்சி பிளவுபட ஒருபோதும் இடமளிக்கமாட்டேன்." - இவ்வாறு திட்டவட்டமாகத் தெரிவித்தார் பிரதமரும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க. "ஜனாதிபதித் தேர்தல் வெற்றியுடன் நாடாளுமன்றத் தேர்தலில் பெருபான்மை உறுப்பினர்களுடன் வெற்றிகொள்வதே எமது நாேக்கமாகும்" எனவும் ...

மேலும்..