October 11, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டவை

கோத்தபாய வெற்றியைக் கண்டு நடுங்கும் ஹிருணிகா

எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலினை அடிப்படையாகக் கொண்டு எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் யார் வெற்றிபெறுவார்கள் என்பதை தீர்மானிக்க முடியாது என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர தெரிவித்தார். எல்பிட்டி தொகுதி என்பது மிகச்சரியாகக் கூறுவதென்றால் மத்திய கொழும்பு ஆசனத்தைப் ...

மேலும்..

நாட்டுக்கு உதவாத வௌிநாட்டு உடன்படிக்கைகள் தேவையில்லை – சஜித்

வௌிநாட்டு வர்த்தக, பாதுகாப்பு மற்றும் அரசியல் உடன்படிக்கைகள் முக்கியமானவை என்றாலும் அவற்றால் நாட்டிற்கு சாதகத்தன்மை காணப்பட வேண்டும் என புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். ‘புதிய தலைமைத்துவம் புதிய இலங்கை’ எனும் தொனிப்பொருளில் கொழும்பு மன்றக் ...

மேலும்..

பச்சிலைப்பள்ளியில் வறுமை நிலையில் உள்ள மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கல்

பளை பிரதேசத்தில் வறுமையில் கல்வியை தொடர கஷ்டப்படும்   மாணவர்களுக்கு அரியாலையை வதிவிடமாக கொண்ட அமரர் தாருஷாவின் ஓராம் ஆண்டு நினைவாக அவரது உறவினரான சுவிஸ் வாழ் தனபாலசிங்கம்-நித்தியகரன்(வவி) அவர்கள்   கற்றல் உபகரணங்களை வழங்கி வைத்தார். பச்சிலைப்பள்ளி பிரதேசத்தின் தெரிவுசெய்யப்பட்ட மாணவர்களுக்கு குறித்த உதவி ...

மேலும்..

அறுதிப்பெரும்பான்மையுடன் ராஜபக்ச அணி வசமானது எல்பிட்டிய பிரதேச சபை

எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலில் 17 வட்டாரங்களிலும் வெற்றிபெற்று ஆட்சி அதிகாரத்தை ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணி கைப்பற்றியுள்ளது. இதன்படி 23 ஆயிரத்து 372 வாக்குகளைப் பெற்று 17 ஆசனங்களை ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியும், 10 ஆயிரத்து 113 வாக்குகளைப் பெற்று 10 ஆசனங்களை ...

மேலும்..

சஜித் பிரேமதாசவிற்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஆதரவு தெரிவிக்குமேயானால்அதனை நாங்கள் வரவேற்கின்றோம்

ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவிற்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஆதரவு தெரிவிக்குமேயானால் அதனை நாங்கள் வரவேற்கின்றோம். எங்களுக்கு எந்தவிதமான ஆட்சேபினையும் இல்லை என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவரும், விசேட ...

மேலும்..

என விளிப்பதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமாட்டேன்!! – தமிழ்ப் பத்திரிகை ஆசிரியர்கள் முன்னிலையில் சஜித்

இலங்கை வாழ் அனைத்து மக்களுக்கும் சமமான உரிமையை ஏற்படுத்துவதே எனது இலக்கு." - இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். சிறுபான்மை இனம் என விளிப்பதைக் கூடத் தான் விரும்பவில்லை எனவும் அவர் ...

மேலும்..

பாண்டிருப்பு திரௌபதை அம்மன் ஆலயத்தில் . இன்று 2019-10-11வெள்ளிக்கிழமை மாலை தீ மிதிப்பு நடைபெற்றது .

பாண்டிருப்பு ஸ்ரீ திரௌபதை அம்மன் ஆலயத்தில் விண்முட்ட மூட்டப்படும் தீயின் வேள்வியினால் இக் கிராமத்தின் கீர்த்தி அகில உலகளவில் பரவி நிற்கின்றது. எந்தவொரு இந்து ஆலயங்களிலும் இல்லாத பெருமை இங்குள்ள தீக்குழிக்குள்ளது. 21 அடி நீளமும் 3 அடி ஆழமும் 4 ...

மேலும்..

தமிழ் தேசியக் கூட்டமைப்பும் கோத்தபாய ராஜபக்ஷவுடன் உடன்பாட்டுக்கு வர முயற்சிக்கின்றது – என முன்னாள் முதலமைச்சர். வரதராஜபெருமாள்.

கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்களின் நிலமை இவ்வளவு மோசமாக போவதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்புதான் என்பதனை கிழக்கு மாகாண தமிழர்களுக்கு மட்டுமல்ல இலங்கையிலுள்ள அனைத்து தமிழர்களுக்கும் தெரியும். எனவே தமிழ் மக்களை ஏமாற்றுகின்றதை கைவிட்ட மாகாண சபையைப் பலப்படுத்த இன்று இப்பொழுதும் ...

மேலும்..

வாய்மை விரித்தி செயலமர்வை முன்னிட்டு வவுனியா புதுக்குளம் பாடசாலைக்கு விஜியம் செய்த தீவகபகுதி அதிபர்கள்

கல்வி அமைச்சின் ஏற்பாட்டில் அதிபர்களின் வாய்மை விரித்தி செயலமர்வை முன்னிட்டு தீவக வலயபகுதி அதிபர்கள் வவுனியா புதுக்குளம் கனிஸ்ட வித்தியாலயத்திற்கு இன்று (11) விஜியம் ஒன்றை மேற்கொண்டிருந்தனர். வவுனியா மாவட்டத்தில் குறைந்த வளங்களுடன் மிகவும் முன்னுதாரணமாக செயற்பட்டு வரும் புதுக்குளம் பாடசாலை தரிசிப்பை ...

மேலும்..

வவுனியாவில் குளத்தில் இருந்து பெண்ணின் சடலம் மீட்பு

வவுனியா, பேயாடிகூழாங்குளம் குளத்தில் இருந்து பெண் ஒருவரின் சடலம் இன்று மீட்கப்பட்டது. வவுனியா, பேயாடி கூழாங்குளம் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் கடந்த நான்கு தினங்களுக்கு முன்னர் வீட்டில் இருந்து வெளியில் சென்ற நிலையில் காணாமல் போயிருந்தார். இது தொடர்பில் மடுகந்தை பொலிசில் ...

மேலும்..

தமிழர்களை கொன்றவர்களே தற்போது அவர்களின் நலன் குறித்து பேசுகின்றனர் – வேலுகுமார்

தமிழ் மக்களை கொத்துக்கொத்தாக கொன்றுகுவித்தவர்களே தற்போது தமிழர்களின் நலன் குறித்து கருத்துரைப்பதாக ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவர் வேலுகுமார் தெரிவித்தார். வாக்குவேட்டைக்காக பேரினவாதத்தையும் சிங்கள, பௌத்த மேலாதிக்கத்தையும் மட்டுமே முன்னிலைப்படுத்தி அரசியல் நடத்தும் கூட்டு எதிரணியின் பக்கம், அரசியல் கைக்கூலிகளாக ...

மேலும்..

தமிழரசுக் கட்சியின் வாலிபர் முன்னணியினால் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு

திருக்கோணமலை  மாவட்டத்திலுள்ள  உப்புவெளி  நாமகள் வித்தியாலயத்தில் கல்வி கற்கின்ற அனைத்து மாணவர்களுக்கும்  இலங்கை தமிழ் அரசுக் கட்சி வாலிப முன்னணியின்   ஏற்பாட்டில்  கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது புங்குடுதீவினை சேர்ந்த  சமூக ஆர்வலர்     சபாரத்தினம் கேதீஸ்வரன் அவர்களின் நிதியுதவியின் ஊடாக  இச் ...

மேலும்..

தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யும் துணிச்சல் கோட்டாவுக்கு இல்லை: சிறிதரன்

தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வுகள் தொடர்பாக எந்த வேட்பாளர் வெளிப்படையான, தெளிவான திட்டங்களை முன்வைக்கின்றாரோ அவருக்கு ஆதரவளிப்பது பற்றி சிந்திக்கலாம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் தெரிவித்துள்ளார். அல்லாது விடின் எதுவுமில்லாத திறந்த வெளிக்கு தாங்கள் தள்ளப்படுவோம் எனவும் ...

மேலும்..

மாளிகைக்காடு பிரதான வீதியில் அமைந்துள்ள சிகை அலங்கார நிலையத்தில் வியாழக்கிழமை(10) மாலை குறித்த பொதி ஒன்றுடன் இருவரும் கைதாகினர்.

கடற்படையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்து அம்பாறை  மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினர் அவ்விடத்திற்கு சென்று கைது செய்துள்ளதுடன் இவ்வாறு கைதானவர்கள் அதே இடத்தை சேர்ந்த  ஆதம்பாவா (வயது-52)  கந்தவனம் ஜீவரத்னம் (வயது-43)ஆகியோரிடம் இருந்து போலி நாணயத்தாள்களை கண்டறியும் கருவி மற்றும் 625 கிராம் ...

மேலும்..

கோட்டாபய நாடு திரும்பியதும் கூட்டமைப்பினருடன் பேச்சுவார்த்தை

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஸ தமிழ் தேசியக் கூட்டமைப்பை பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளார். மருத்துவ சிகிச்சைக்காக சிங்கப்பூர் சென்றுள்ள கோட்டாபய ராஜபக்ஸ நாடு திரும்பியதும் எதிர்வரும் 18 ஆம் திகதியின் பின்னர் இந்த சந்திப்பு இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கோட்டாபய ராஜபக்ஸ ...

மேலும்..

மட்டக்களப்பிலும் மாவீரர் மாலதியின் நினைவேந்தல் நிகழ்வு

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முதல் பெண் மாவீரர் மாலதியின் நினைவேந்தல் நிகழ்வு  மட்டக்களப்பிலும் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் பெண் போராளியாகவிருந்து முதலாவது வீரமரணத்தை தழுவிக்கொண்ட மாலதியின் 32 ஆண்டு நினைவுத்தினம் நேற்று (வியாழக்கிழமை ) மட்டக்களப்பு- வெல்லாவெளியில் இடம்பெற்றது. ஜனநாயகப் ...

மேலும்..

தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யும் துணிச்சல் கோட்டாவுக்கு இல்லை: சிறிதரன்

தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வுகள் தொடர்பாக எந்த வேட்பாளர் வெளிப்படையான, தெளிவான திட்டங்களை முன்வைக்கின்றாரோ அவருக்கு ஆதரவளிப்பது பற்றி சிந்திக்கலாம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் தெரிவித்துள்ளார். அல்லாது விடின் எதுவுமில்லாத திறந்த வெளிக்கு தாங்கள் தள்ளப்படுவோம் எனவும் ...

மேலும்..

வவுனியாவில் முச்சக்கர வண்டி சாரதி எரியூட்டபட்ட நிலையில் சடலமாக மீட்பு

வவுனியாவில் இளம் குடும்பத்தலைவர் ஒருவர் நேற்றையதினம் காணாமற்போன நிலையில் அவரது சடலம் எரியூட்டப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர். அவர் கடத்திச் செல்லப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார் என்று தடயங்களை வைத்து பொலிஸார் தெரிவித்தனர். வவுனியா கள்ளிக்குளம் பகுதியிலுள்ள பற்றைக்குள்ளிலிருந்து அவர் இன்று முற்பகல் ...

மேலும்..

அரசியல்வாதிகளில் பெரும்பாலானோர் சிறைக்கு செல்லும் நிலைமையிலேயே உள்ளனர்: அநுர

நாட்டில் முக்கிய பிரச்சினைகளுக்கு காரணமான அரசியல்வாதிகளை சட்டத்தின் முன் நிறுத்தினால் அவர்களில்  பெரும்பாலானோர் வெலிகடை சிறைசாலைக்கு  செல்ல வேண்டிய நிலைமை ஏற்படுமென தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். குருநாகலில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து ...

மேலும்..

சஜித்தின் தேர்தல் பிரசாரக் கூட்டத்துக்கு சென்ற ஆதரவாளர் உயிரிழப்பு

புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் தேர்தல் பிரச்சாரக்கூட்டத்துக்கு சென்ற குழுவினரில் ஒருவர், தான் பயணித்து கொண்டிருந்த பேருந்திலிருந்து விழுந்ததில் உயிரிழந்துள்ளார். நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற இந்த சம்பவத்தில் திருகோணமலை- தெவனிபியவர பகுதியைச் சேர்ந்த ஐக்கிய தேசிய கட்சியின் ஆதரவாளரே ...

மேலும்..

லெப்.மாலதியின் நினைவேந்தல் அறிவகத்தில்!

முதல் பெண் மாவீரர் லெப்.மாலதியின் நினைவேந்தல் நிகழ்வு, கிளிநொச்சியில் அமைந்ததுள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பின் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் தலைமையில் நடைபெற்ற குறித்த நிகழ்வில், வடமாகாண முன்னாள் கல்வி அமைச்சர் த.குருகுலராஜா, பசுபதிப்பின்னை, பச்சிலைப்பள்ளி பிரதேச சபை தவிசாளர் ...

மேலும்..

வவுனியா வைத்தியசாலையில் 7 வயது சிறுவன் மரணம்; உறவினர்கள் குழப்பம்

வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த 7 வயது சிறுவன் ஓருவர் மரணமடைந்துள்ளார். வைத்தியசாலையின் அசமந்த போக்கே மரணத்திற்கு காரணம் என உறவினர்கள் வைத்தியசாலையில் கூடியமையால் பதற்ற நிலை ஏற்பட்டது. இன்று இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியா, கற்குழி பகுதியைச் சேர்ந்த 7 ...

மேலும்..

தேர்தல் குறித்து திறந்த மனதுடன் பேச்சுவார்த்தை நடத்த கூட்டமைப்பு தயார் – சிறிநேசன்

ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக திறந்த மனதுடன் பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு தயாராகவுள்ளதாக அக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் தெரிவித்தார். மட்டக்களப்பு மாமாங்கத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் நேற்று (வியாழக்கிழமை) மாலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு ...

மேலும்..

ஜனாதிபதி நடுநிலை வகிக்க எடுத்த முடிவு நல்லது-மஹிந்த

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் நடுநிலை வகிக்கப்போவதாக ஜனாதிபதி எடுத்த முடிவு நல்லதொரு விடயமென பொதுஜன பெரமுனவின் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மாவத்தகம பிரதேசத்தில் பொதுஜன பெரமுன கட்சியின் காரியாலத்தை திறந்து வைத்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் அவர் இவ்வாறு குறிப்பிட்டார். மஹிந்த ...

மேலும்..

ஜனாதிபதி தேர்தல் – யாழ்.பல்கலை மாணவர்களின் முயற்சியில் முன்னேற்றம்

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழர் தரப்பின் நிலைப்பாட்டை ஒரே குரலில் வெளிப்படுத்த யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் மேற்கொண்ட முயற்சியில் முன்னேற்றம் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. அதற்கமைய யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் மேற்கொண்டு வரும் இந்த முயற்சியின் மூன்றாவது சந்திப்பு யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய ...

மேலும்..

இரத்தம் சிந்தி வளர்த்த கட்சியை மஹிந்தவிடம் பறி கொடுத்தாச்சு: விஜேமுனி

இரத்தம் சிந்தி, சிறை சென்று, பலருடன் சண்டையிட்டு, கெட்ட பெயர் சம்பாதித்து வளர்த்தெடுத்த கட்சியை ராஜபக்சவிடம் பறி கொடுத்து விட்டார்கள் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினர் என தெரிவித்துள்ளார் விஜேமுனி சொய்சா. சு.க உறுப்பினராக இருந்த காலத்தில் தாம் செய்த தியாகங்கள் எதுவும் பலனற்றுப் ...

மேலும்..

சரத் பொன்சேகாவிடம் பாரிய பொறுப்பை ஒப்படைக்கவுள்ள சஜித்!

தான் ஜனாதிபதியாக பதவியேற்கும் பட்சத்தில், 365 நாட்களும், 24 மணித்தியாலங்களும் சேவையாற்றுவதாக புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். கொழும்பு – காலி முகத்திடலில் இன்று நடைபெற்ற முதலாவது தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் ...

மேலும்..

சம்பாந்துறையில் மண் அகழ்வு இடம்பெறும் இடங்கள் முற்றுகை

அம்பாறை- சம்பாந்துறை பகுதியில் சட்டவிரோதமான முறையில் மண் அகழ்வு இடம்பெறும் இடங்கள் முற்றுகையிடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும், 2 கனரக வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் சம்மாந்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட  பல இடங்களில்  சட்டவிரோதமான முறையில் மண் அகழ்வில் ஈடுபடுவோரை கைது செய்யும் ...

மேலும்..

கடலுக்குச்சென்றுகாணாமற்போன மூவரில் காரைதீவுமீனவர் மரணம்

காரைதீவிலிருந்து ஆழ்கடலுக்குச்சென்று காணாமல்போன சாய்ந்தமருது மற்றும் காரைதீவைச்சேர்ந்த மூன்று மீனவர்களில் காரைதீவு மீனவர் மரணமடைந்துள்ளார். காரைதீவைச்சேர்ந்த சண்முகம் சிறிகிருஸ்ணன்(வயது47) என்பவரே ஆழ்கடலில் வைத்து மரணமானதாக கூறப்பட்டுள்ளது. இவர் பிள்ளைகளான சாதனா(வயது22) உயர்தரம் தோற்றி 2சி1எஸ் பெற்றவர். ஜீவிதா(வயது19) இம்முறை உயர்தரம் தோற்றியவர். காயத்ரீ(வயது17) தற்போது ...

மேலும்..

எந்த அச்சுறுத்தலையும் எதிர்கொள்ள தயார் – இராணுவத் தளபதி

எதிர்பாராமல் இடம்பெறக்கூடிய எந்தவொரு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு அச்சுறுத்தல்களுக்கும் முகம்கொடுக்க இராணுவம் தயாராக உள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இலங்கை இராணுவத்தின் 70ஆவது ஆண்டு பூர்த்தி விழா நேற்று (வியாழக்கிழமை) கொழும்பு – காலிமுகத்திடலில் நடைபெற்றது. இந்த விழாவில் ...

மேலும்..

மட்டக்களப்பு நோக்கி பயணித்த ரயில் தடம்புரள்வு

கொழும்பிலிருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த ரயிலொன்று தடம்புரண்டுள்ளது. இதன் காரணமாக மட்டக்களப்புக்கான சேவைகள் பொலன்னறுவை வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. வெலிகந்த பகுதியில் காட்டுயானைகளின் மோதல் காரணமாகவே இவ்வாறு ரயில் தடம்புரண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் தொடர்பான மேலதிக செய்திகளுக்கு ஆதவனுடன் இணைந்திருங்கள்..

மேலும்..

மட்டக்களப்பில் இடம்பெற்ற விபத்தில் இருவர் காயம்

மட்டக்களப்பு – களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாங்காட்டில் இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர். மட்டக்களப்பு – கல்முனை பிரதான வீதியில் மாங்காடு சமுர்த்தி வங்கிக்கு முன்பாக இந்த விபத்து நேற்று (வியாழக்கிழமை) மாலை இடம்பெற்றது. மோட்டார் சைக்கிளும் முச்சக்கர வண்டியும் நேருக்கு நேர் மோதி ...

மேலும்..

சஜித்திற்காக கொழும்பில் ஒன்று திரண்ட பல இலட்சம் பேர்! கலக்கத்தில் கோத்தாபய

ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவின் முதலாவது பிரச்சார கூட்டம் இன்று கொழும்பு காலிமுகத்திடலில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் சுமார் 3 இலட்சம் ஆதரவாளர்கள் கலந்து கொண்டதாக புலனாய்வு பிரிவினர் தெரிவித்துள்ளனர். கொழும்பு காலி முகத்திடல் மற்றும் அருகில் உள்ள வீதிகள் ...

மேலும்..