October 15, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டவை

காரைதீவில் இடம்பெற்ற சர்வதேச வெள்ளைப்பிரம்பு தின நிகழ்வு…

உலகெங்கும் இன்று அக்டோபர் 15 ம் திகதி சர்வதேச வெள்ளைப்பிரம்பு தினம் கொண்டாடப்பட்டு வருகின்றது. அந்தவகையில் இன்று (15) காரைதீவு பிரதேச சபையின் ஏற்பாட்டில் இடம்பெற்ற சர்வதேச வெள்ளைப்பிரம்பு தின நிகழ்வு காரைதீவு விபுலானந்தா கலாச்சார மண்டபத்தில் தவிசாளர் கி.ஜெயசிறில் தலமையில் இடம்பெற்றது. அரம்ப ...

மேலும்..

தமிழ் கட்சிகள் பொது இணக்கப்பாட்டுக்கு வரமுடியாமை கவலையளிக்கிறது – சுகாஸ்

தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்து ஒரு பொது இணக்கப்பாட்டுக்கு வரமுடியாமையானது மிகவும் கவலையளிப்பதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினரும் சட்டத்தரணியுமான சுகாஸ் தெரிவித்துள்ளார். தமிழரின் உரிமைகளை வலியுறுத்தும் பொது ஆவணத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி தவிர்ந்த 5 கட்சிகளும் (தமிழீழ மக்கள் ...

மேலும்..

தன்னையும் கட்சியையும் தூரப்படுத்தும் வகையில் போலியான பிரசாரங்கள்-அப்துல் மஜீத் குற்றச்சாட்டு

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் வளர்ச்சியில் காழ்ப்புணர்வு கொண்ட சக்திகளால் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு போலியான பிரசாரங்களின் தொடர்ச்சியாகவே தன்னையும் கட்சியையும் தூரப்படுத்தும் வகையில் இன்னொரு பொய்யான செய்தி பரப்பப்பட்டு வருவதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் ...

மேலும்..

மன்னார் மாவட்டத்திற்குட்பட்ட பாடசாலைகள் வடமேல் மாகாணத்துடன் இணைப்பு – செல்வம் எம்.பி.

வடக்கு மாகாண சபையின் மன்னார் மாவட்டத்திற்குட்பட்ட பல பாடசாலைகள் வடமேல் மாகாணத்துடன், இணைக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பாக வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவனிடம் முன்வைத்த கோரிக்கைகளை ஏற்று அவர் இவ்வாறு நடவடிக்கை எடுத்துள்ளதாக நாடாளுமன்ற ...

மேலும்..

மாகாண மட்ட விஞ்ஞான வினாடிப் போட்டியில் மருதமுனை வலீத் ஜஸ்னா முதலிடம்

மாகாண மட்ட தமிழ் மொழிமூல விஞ்ஞான வினாடிப் போட்டியில் தரம்-07 பிரிவில் மருதமுனை அல்-ஹம்றா வித்தியாலய மாணவி பாத்திமா ஜஸ்னா கிழக்கு மாகாணத்தில் முதலிடம் பெற்றுள்ளார். இதற்கான சான்றிதழ் மற்றும் பதக்கத்தினை நேற்று பாடசாலை மண்டபத்தில் நடைபெற்ற பரிசளிப்பு நிகழ்வில் கல்முனைப் பிராந்திய ...

மேலும்..

கல்முனை தமிழ்ப் பிரதேச செயலகத்தினை மறந்த தமிழ்த் தலைமைகளும் பல்கலை மாணவரும்!

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் யாரை ஆதரிப்பது தொடர்பில் - தமிழ்த் தேசத்தின் ஒற்றுமையை – தமிழ் மக்களின் அபிலாஷைகளை எழுத்துமூலம் பிரதிபலித்து, அதனை நிறைவேற்ற உத்தரவாதம் அளிப்பவருக்கே ஆதரவளிப்பதென 5 தமிழ்க் கட்சிகள் ஒப்பமிட்டுள்ளன. இது வரவேற்கத்தக்க விடயம். வடக்கு, ...

மேலும்..

ராஜபக்ஷர்களுடன் நடைபெற்ற பேச்சுக்கள் தோல்வி

சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்சவுக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரனுக்கும் இடையில் கொழும்பில் இடம்பெற்ற பேச்சுக்கள் தோல்வியில் முடிந்துள்ளதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இந்தச் சந்திப்பின் போது, வடக்கு, கிழக்கு மக்களின் பிரச்சினைகளுக்கான ...

மேலும்..

பொது இணக்கப்பாடு ஆவணத்தில் உள்ளவை

ஜனாதிபதித் தேர்தலில் ஓரணியில் செயற்படுவதற்கு 5 தமிழ்க் கட்சிகள் கையெழுத்திட்ட பொது இணக்கப்பாடு ஆவணத்தில் உள்ளக்கப்பட்டுள்ள விடயங்கள் வருமாறு:- * புதிதாக உருவாக்கப்படும் அரசமைப்பு ஒற்றையாட்சி முறைமையை நிராகரித்து தமிழ்த் தேசத்தை அங்கீகரித்து அதற்கு தனித்துவமான இறைமை உண்டு என்பதையும், தமிழ் மக்கள் ...

மேலும்..

தமிழ்க் கட்சிகளோடு பேச்சு நடத்தத் தயார்! – சஜித், கோட்டா தெரிவிப்பு

"ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்களின் வாக்குகள் எமக்கு இன்றியமையாதவையாக அமைகின்றன. அவர்களை வழிநடத்தும் தமிழ்க் கட்சிகளுடன் பேசுவதற்கு நாம் எந்த நேரமும் தயாராக இருக்கின்றோம்." - இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவும், ...

மேலும்..

பலாலி சர்வதேச விமான நிலையத்தில் வெற்றிகரமாகத் தரையிறங்கிய முதலாவது இந்திய விமானம்..!!

இந்தியவின் தொழில்நுட்ப அதிகாரிகளுடன் வெற்றிகரமாக யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் (பலாலி) தரையிறங்கியது Airindia Alliance விமானம். அதிகாரிகள் ஓடுபாதை பரிசோதனை மற்றும் கட்டுப்பாட்டு கோபுரம் மற்றும் விமான நிலையத்தின் செயற்பாடுகள் குறித்து அறிந்து வருகின்றனர். இதேவேளை 17 ஆம் திகதி திறப்பு விழாவுக்கான ...

மேலும்..

இலங்கை பயங்கரவாதியுடன் தொடர்புடைய 127 பேர் அதிரடியாக கைது!

ஐ.எஸ். அமைப்புடன் தொடர்பு வைத்திருந்த குற்றச்சாட்டில் இந்தியாவில் 127 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர் என இந்திய தேசிய புலனாய்வு அமைப்பின் தலைவர் அலோக் மிக்தல் தெரிவித்துள்ளார். அதன்படி தமிழகத்தில் இருந்து 33 பேரும், உத்தரப்பிரதேசத்தில் இருந்து 19 பேரும், கேரளாவில் 17 ...

மேலும்..

குருநாகல் மாவட்டத்தில் 145 இற்கும் அதிக வீடுகள் சேதம்

குருநாகல் மற்றும் அதனை அண்டிய பகுதிகளை ஊடறுத்து வீசிய பலத்த காற்றினால் 145 இற்கும் மேற்பட்ட வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன. சேதமடைந்த வீடுகளுக்கான இழப்பீடுகளை வழங்குவதற்கு உடனடி நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக அனர்த்த நிவாரண சேவை நிலையம் தெரிவித்துள்ளது. இதேவேளை, குருநாகல் மாவட்டத்தின் பல பகுதிகளில் ...

மேலும்..

யானைகளின் உயிரிழப்பு தொடர்பிலான அறிக்கை இந்த வாரம்

ஹபரணை – திகம்பத்தஹ, தும்பிக்குளம் வனப்பகுதியில் 7 யானைகள் உயிரிழந்தமைக்கான காரணம் என்னவென்பது தொடர்பிலான அறிக்கை இந்த வாரத்திற்குள் சமர்ப்பிக்கப்படும் என அரச இரசாயன பகுப்பாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது. உயிரிழந்த யானைகளின் உடல்களில் எடுக்கப்பட்ட மாதிரிகளைப் பயன்படுத்தி முன்னெடுக்கப்படும் விசாரணைகளின் பின்னர் குறித்த ...

மேலும்..

கல்முனை ஆதார வைத்தியசாலையில், மாணவ கட்டுரையாளர்கள் தெரிவுசெய்து கௌரவிக்கப்பட்டனர்.

இளம் தலைமுறையினரே நாளைய தலைவர்கள் என்ற உண்மையை அறிந்த, கல்முனை ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் வைத்தியகலாநிதி இரா முரளீஸ்வரன் அவர்களின், பல்துறை வளர்ச்சி பரிமாணங்களில் ஒன்றாக மாணவ செல்வங்களை சுகாதார ரீதியாகவும், திடமான ஆரோக்கியம் கொண்ட, நற்பிரஜைகளாக  உருவாக்கும் திட்டமாக,  ...

மேலும்..

கோட்டாபாய இன்னும் அமெரிக்க பிரஜைதான்- சம்பிக்க

பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ தற்போதும்கூட அமெரிக்க பிரஜைதான் என அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். பிலியந்தலையில்  ஐக்கிய தேசியக் கட்சியின் தொகுதி உறுப்பினர்களுக்கு நடத்தப்பட்ட கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும் கூறியுள்ளதாவது, “அமெரிக்க பிரஜாவுரிமையை ...

மேலும்..

வவுனியாவில் இளைஞர்கள் நால்வர் கைது: பொலிஸார் தாக்கியதாக உறவினர்கள் குற்றச்சாட்டு!!

வவுனியா புளியங்குளம் பொலிஸாரினால் இளைஞர்கள் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். புளியங்குளம் புரட்சி விளையாட்டரங்கிற்கு அருகில் நேற்று (திங்கட்கிழமை) இரவு இளைஞர்கள் தங்களுக்குள் முரண்பட்டுக்கொண்ட நிலையில், போத்தல் ஒன்றினால் ஒருவர் தனது கையை தாக்கி காயப்படுத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனால் காயமடைந்தவரை புளியங்குளம் பிரதேச வைத்தியசாலையில் ...

மேலும்..

கோட்டாவின் தேர்தல் பரப்புரை விளம்பரத்துடன் இராணுவத் தளபதிக்கு தொடர்பில்லை – இராணுவப் பேச்சாளர்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் தேர்தல் பரப்புரை விளம்பரத்துக்கு இலங்கை இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் சவேந்திர சில்வாவின் ஒளிப்படம் மற்றும் கருத்து பயன்படுத்தப்பட்டுள்ள விடயத்துடன், இராணுவத் தளபதி எந்த விதத்திலும் தொடர்புபடவில்லை என இராணுவப் பேச்சாளர் மேஜர் ...

மேலும்..

யாழில் தரையிறங்கவுள்ள முதல் விமானத்தில் முக்கிய விருந்தினர்கள் வருகை

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கவுள்ள முதலாவது விமானத்தில், இந்தியாவில் இருந்து விருந்தினர்கள் அழைத்து வரப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் இணைந்து நாளை மறுதினம் வியாழக்கிழமை திறந்து வைக்கவுள்ளனர். இதன்போது, சென்னையில் இருந்து ...

மேலும்..

விசா அனுமதிபத்திரம் பெற்றுத்தருவதாக கூறி நிதிமோசடியில் ஈடுபட்டவருக்கு விளக்கமறியல்!

மேற்கத்தைய நாடுகளுக்கான விசா அனுமதிபத்திரம் பெற்றுத்தருவதாக கூறி, பல்வேறு நபர்களிடம் நிதிமோசடியில் ஈடுபட்டவரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த சம்பவத்தில் யாழ்ப்பாணம்- சாவகச்சேரி நுணாவில் கிழக்கைச் சேர்ந்த சதாசிவம் தியாகராஜா என்பரையே விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் ...

மேலும்..

கொழும்பு துறைமுக நுழைவாயிலில் சடலம் கண்டெடுப்பு

கொழும்பு துறைமுக நுழைவாயிலில் அடையாளம் தெரியாத சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. மேற்கு கடற்படை கட்டளை, கொழும்பு துறைமுக நுழைவாயிலில் மேற்கொண்ட ரோந்து நடவடிக்கையின்போது, நீரில் மிதந்தவாறு காணப்பட்ட சிதைந்த நிலையில் குறித்த சடலத்தை கண்டெடுத்துள்ளனர். சடலத்தை உடனடியாக கரைக்கு கொண்டுவந்த கடற்படை, மேலதிக நடவடிக்கைகளுக்காக ...

மேலும்..

ஹேமசிறிக்கு ஜனாதிபதி ஆணைக்குழு அழைப்பு?

அரச நிறுவனங்களில் இடம்பெற்ற மோசடிகள் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணாண்டோவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அரச வங்கி கணினி கட்டமைப்பை உருவாக்கும்போது இடம்பெற்ற பாரிய நிதி மோசடி தொடர்பாக வாக்குமூலம் பெறுவதற்காகவே ...

மேலும்..

இதுவரை இல்லாத அளவிற்கு தேசிய கைத்தொழில் திட்டம் உருவாக்கப்படும் – சஜித்

நாட்டில் இதுவரை இல்லாத அளவிற்கு தேசிய கைத்தொழில் திட்டம் ஒன்று உருவாக்கப்படும் என்று புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். பண்டாரவளை வர்த்தக சமூகத்தினருடன் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற கலந்துரையாடலினபோதே அவர் இந்த உறுதிமொழியை வழங்கினார். அவர் அங்கு மேலும் ...

மேலும்..

கிளிநொச்சி துப்பாக்கிச்சூடு – அறிக்கை சமர்ப்பிக்குமாறு கோரிக்கை

கிளிநொச்சி – அறிவியல் நகரில் பொலிஸார் நடத்திய துப்பாக்கிச்சூட்டு சம்பவம் குறித்த முதற்கட்ட அறிக்கையை மதுவரி திணைக்களம் கோரியுள்ளது. இது தொடர்பாக வடமத்திய மாகாண உதவி மதுவரி ஆணையாளர் மற்றும் மேலதிக மதுவரி ஆணையாளர் தலைமையிலான விசாரணைக்குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, தங்களது அதிகாரிகள் ...

மேலும்..

விடுதலைப் புலிகள் மீளுருவாக்கம் – விசாரணைகளில் வெளிவரும் உண்மைகள்

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை மலேசியாவில் இருந்து மீளுருவாக்குவதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டதாக கூறப்படுவது குறித்து தீவிர விசாரணைகள் தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அந்த நாட்டின் பொலிஸார் அறிவித்துள்ளனர். அதற்கமைய விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் தொடர்புடைய பல பொருட்கள் மீட்கப்பட்டிருப்பதுடன், சர்வதேச ரீதியான பணப்பறிமாற்றங்கள் ...

மேலும்..

தமிழ் சமூகத்தின் வன்முறை – சிங்களவர்கள் புரிந்துகொள்ள ஆரம்பித்துள்ளதாக சி.வி. தெரிவிப்பு

தமிழ் மக்களுக்கான தீர்வினை வழங்கிவிட்டால், தமிழ் சமூகத்தில் இருந்து வன்முறைகள் எழுவதை தடுக்க முடியும் என சிங்களத் தலைவர்கள் புரிந்துகொள்ள ஆரம்பித்துள்ளதாக வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் கூட்டணியின் பொதுசெயலாளருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். எனவே தமிழ் மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படும் ...

மேலும்..