January 4, 2020 அன்று பிரசுரிக்கப்பட்டவை

கோட்டாக்கு அரசியல் தீர்வில் அக்கறையில்லை! – சுமந்திரன்

புதிதாக வந்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அரசியல் தீர்வு தொடர்பாக ஒரு முழுமையான - சரியான பார்வை உள்ளவராகத் தெரியவில்லை. - இவ்வாறு தெரிவித்துள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்..ஏ.சுமந்திரன். இன்று சனிக்கிழமை காலை 8 மணிக்கு சூரியன் ...

மேலும்..

மத்திய வங்கி பிணைமுறி குற்றவாளிகள் விரைவில் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள்- விமல்

மத்திய வங்கி பிணைமுறி குற்றவாளிகள் அனைவரையும் சட்டத்தின் முன் நிறுத்துவதற்கான துரித நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுக்குமென அமைச்சர் விமல் வீரவன்ச  தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில்  நேற்று (வெள்ளிக்கிழமை)  ஐ.தே.க  நாடாளுமன்ற  உறுப்பினர் ஹர்ச டி சில்வா பிணைமுறி உள்ளிட்ட பல சம்பவங்கள் தொடர்பான விடயங்களை ...

மேலும்..

இந்தியாவுக்கு பயணமாகிறார் தினேஷ் குணவர்தன

வெளியுறவு அமைச்சர் தினேஷ் குணவர்தன தனது முதல் உத்தியோகபூர்வ வெளிநாட்டு பயணமாக இந்தியாவுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். எதிர்வரும் ஜனவரி 9 ஆம் திகதி இந்தியாவுக்கு உத்தியோகப்பூர்வ பயணத்தை மேற்கொண்டு,  இரண்டு நாட்கள் அங்கு தங்கி இருப்பார் என கூறப்படுகின்றது. இலங்கை வெளியுறவு அமைச்சர்கள், தங்கள் ...

மேலும்..

அதிகாரிகளுக்கு முக்கிய பணிப்புரை விடுத்தார் ஜனாதிபதி!

தேசிய சுதந்திர தின நிகழ்வுகளை பொதுமக்களுக்கு எந்தவித இடையூறும் ஏற்படாதவாறு முன்னெடுக்குமாறு உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் இந்த பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கொழும்பில் அமைந்துள்ள சுதந்திர சதுர்க்ககத்தில் இம்முறை தேசிய சுதந்திர தின நிகழ்வுகள் இடம்பெறவுள்ளதாக கூறப்படுகின்றது. தேசிய ...

மேலும்..

பிரதி பொலிஸ்மா அதிபர் நால்வர் உள்ளிட்ட 43 பேருக்கு இடமாற்றம்!

பிரதி பொலிஸ்மா அதிபர் நால்வர் உள்ளிட்ட 43 பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. பொலிஸ் ஊடகப்பிரிவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் ஆலோசனைக்கு அமையவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும்..

இரண்டாயிரம் பேருந்துகளை இறக்குமதி செய்யத் தீர்மானம்!

போக்குவரத்து சேவையினை வலுப்படுத்தும் நோக்கில் இரண்டாயிரம் பேருந்துகள் இறக்குமதி செய்யப்படவுள்ளன. பயணிகள் போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சு இந்த தகவலினை வெளியிட்டுள்ளது. இதற்காக ஆயிரத்து 750 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. நாட்டில் தற்போது சேவையில் ஈடுபடும் பேரூந்துகள் பயணிகளின் வசதி மற்றும் பாதுகாப்பு தொடர்பாக ...

மேலும்..

சுதந்திர தினத்தன்று மக்களுக்கென முக்கிய பணியை வழங்கினார் மஹிந்த

சுதந்திர தினத்தன்று நாடளாவிய ரீதியில் அனைத்து வீடுகளிலும் ஒரே நேரத்தில் பயனுள்ள மரக்கன்று ஒன்றை நாட்டுவதற்கு தேவையான நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மேலும் ஒவ்வொருவரும் தங்களது வீடுகளில் தேசிய கொடியை ஏற்ற வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ‘பாதுகாப்பான தேசம் – ...

மேலும்..

வவுனியாவில் விவசாயக்குளம் உடைப்பெடுத்ததால் 120 ஏக்கர் நெற்செய்கை பாதிப்பு!

வவுனியாவில் விவசாயக்குளம் உடைப்பெடுத்ததால் 120 ஏக்கர் நெற்செய்கை பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வவுனியா ஈச்சங்குளம் கிராமசேவையாளர் பிரிவுக்குற்பட்ட கள்ளிக்குளம் விவசாயக்குளம் நேற்று(வெள்ளிக்கிழமை) இரவு உடைப்பெடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக குளத்தின் கீழ் விதைக்கப்பட்டு அறுவடைக்காலம் நெருங்கிய நெற்பயிர்கள் நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளதால் விவசாயிகள் பாரியளவில் நஷ்டமடைந்துள்ளனர். 2011ஆம் ...

மேலும்..

யாழில் பாவனையற்ற கிணற்றிலிருந்து ஆண் சிசுவின் சடலம் கண்டெடுப்பு

புங்குடுதீவு 11ம் வட்டாரம் பகுதியில் உள்ள பாழடைந்த கிணற்றிலிருந்து அழுகிய நிலையில் ஆண் சிசுவின் சடலமொன்று   கண்டெடுக்கப்பட்டுள்ளதாக ஊர்காவற்றுறை பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலிஸ்  நிலைய தொலைபேசி இலக்கத்திற்கு கிடைத்த தகவலுக்கு அமைய குறித்த சிசுவின் சடலம் இன்று (சனிக்கிழமை)  காலை  கண்டெடுக்கப்பட்டுள்ளதாக  ஊர்காவற்துறை ...

மேலும்..

பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானியாக ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுமேத பெரேரா?

பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானியாக ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுமேத பெரேரா விரைவில் நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானியாக இருந்த அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன கடந்த 31ஆம் திகதியுடன் ஓய்வு பெற்றுள்ளார். இதனையடுத்து இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் சவேந்திர சில்வாவை, பதில் பாதுகாப்பு ...

மேலும்..

அரசியல் ரீதியான நியமனங்களைப் பெற்ற தூதுவர்களுக்கு இறுதி எச்சரிக்கை!

வெளிநாடுகளிலுள்ள இலங்கை தூதரகங்களில் அரசியல் ரீதியான நியமனங்களைப் பெற்ற தூதுவர்கள் நாடு திரும்புவதற்கு வழங்கப்பட்டிருந்த காலஅவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது. முன்னைய அரசாங்கத்தின் காலத்தில் வெளிநாடுகளில் அரசியல் ரீதியாக நியமனங்களைப் பெற்றிருந்த தூதுவர்கள், அதிகாரிகளை டிசெம்பர் 31ஆம் திகதிக்கு முன்னதாக நாடு திரும்புமாறு வெளிவிவகார அமைச்சு ...

மேலும்..

ஜனாதிபதியின் கொள்கைப் பிரகடன உரை மீது விவாதம்!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கொள்கைப் பிரகடன உரை மீது விவாதத்தை நடத்துவதற்கு கட்சித் தலைவர்கள் தீர்மானித்துள்ளனர். நேற்றைய தினம்(வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தின் போதே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் கொள்கை பிரகடன உரை தொடர்பாக விவாதம் கோரவுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணி ...

மேலும்..

கொழும்பு மக்களுக்கான முக்கிய அறிவிப்பு!

ஒருகொடவத்தை – வெல்லம்பிட்டிய – கொட்டிகாவத்தை வீதி தற்காலிகமாக மூடப்படவுள்ளது. இன்று(சனிக்கிழமை) இரவு முதல் குறித்த வீதி இவ்வாறு தற்காலிகமாக மூடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, ஒருகொடவத்தை – வெல்லம்பிட்டிய – கொட்டிகாவத்தை வீதி இன்று இரவு 10 மணிக்கு மூடப்பட்டு, நாளை அதிகாலை 5 ...

மேலும்..

அரசியல் பழிவாங்கலுக்கு உள்ளான அரச ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!

கடந்த காலப்பகுதியில் அரசியல் ரீதியில் பழிவாங்கும் நோக்கத்தில் அரசாங்கம் மற்றும் அரச சார்பு நிறுவனங்களின் அதிகாரிகளை இலக்காக கொண்டு குற்றச்சாட்டுக்களை முன்வைத்து குறிப்பிட்ட உடனடி நடைமுறைகளுக்கு அப்பால் விசாரணைகளை ஆரம்பித்திருப்பதாக தெரியவந்துள்ளது. இவ்வாறான நிலைமையை விசாரணை செய்து அறிக்கையொன்றை சமர்ப்பிப்பதற்காக ஓய்வு பெற்ற ...

மேலும்..

பட்டப்படிப்பு கற்கை நெறியை தொடர நினைக்கும் மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!

அரசாங்கம் அல்லாத உயர் கல்வி நிறுவனங்களில் பட்டப்படிப்பு கற்கை நெறியை தொடர்வதற்காக மாணவர்களுக்கு வட்டி இன்றி வழங்கப்படும் மாணவர் கடன் பரிந்துரை முறையில் பிரவேசிப்பதற்கு உள்ள சந்தர்ப்பத்தை விரிவுபடுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. அரசாங்கம் அல்லாத உயர் கல்வி நிறுவனங்களில் அரசாங்கத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ...

மேலும்..

இலஞ்சம் பெற்றுக்கொள்ளும் அரச ஊழியர்களுக்கு ஓர் எச்சரிக்கை தகவல்!

அரசாங்க ஊழியர்கள் தொடர்பாக ஆராய புலனாய்வு பிரிவினர் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம இதனைத் தெரிவித்துள்ளார். பல்வேறு சேவை பெற்றுக்கொள்வதற்கு அரசாங்க நிறுவனத்திற்கு வரும் பொது மக்களிடம் இலஞ்சம் பெறும் நபர்களை கண்டுபிடிக்க புலனாய்வு பிரிவு அதிகாரிகள் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக அவர் ...

மேலும்..

அரச வேலைவாய்ப்புக்கு பணம் அறவிடும் மோசடிக்காரர்கள் குறித்து விழிப்பாயிருங்கள்

அரச வேலைவாய்ப்புக்கு பணம் அறவிடும் மோசடிக்காரர்கள் குறித்து விழிப்பாயிருக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் வலியுறுத்தியுள்ளார். அறிக்கை ஒன்றினை வெளியிட்டு அவர் இவ்வாறு வலியுறுத்தியுள்ளார். அறிக்கையில், ‘ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ச தலைமையிலான புதிய அரசாங்கம் வேலையற்ற இளைஞர்கள் யுவதிகளுகளுக்கு அரச தொழில் வாய்ப்புக்களை வழங்க ...

மேலும்..

சம்மாந்துறையில் பெண் ஊழியர் தாக்கப்பட்டமைக்கு விசாரணைகளை முன்னெடுக்குமாறு கோரிக்கை

அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை கமநல சேவைகள் திணைக்களத்தில் பணிபுரியும் பெண் உத்தியோகத்தர் தாக்கப்பட்டமை தொடர்பாக முறையான விசாரணைகளை முன்னெடுக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சம்மாந்துறை கமநல சேவை திணைக்களத்தில் பணிபுரியும் பெண் அரச உத்தியோகத்தரை அதே திணைக்களத்தில் விவசாய அபிவிருத்தி உத்தியோகத்தராக பணியாற்றும் நபர் ...

மேலும்..

பொதுத்தேர்தலுக்கு பின்னர் ஐ.தே.க.தலைவர் பதவியில் மாற்றம் ஏற்படும்- பிரசன்ன

நாட்டில் நடைபெறவுள்ள பொதுத்தேர்தலின் படுதோல்வியை தழுவியப் பின்னர் ஐக்கிய தேசியக் கட்சிக்கு புதிய தலைவர் ஒருவரை நியமிக்க நேரிடுமென  அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். எட்டாவது  நாடாளுமன்றத்தின்  4ஆவது கூட்டத் தொடரில் நேற்று (வெள்ளிக்கிழமை) அமைச்சர் பிரசன்ன ரணதுங்க பங்கேற்றிருந்தார். அதனைத் தொடர்ந்து ...

மேலும்..

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் நோக்கம் இல்லை – சம்பந்தன்!

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் நோக்கம் இல்லை என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற வாளகத்தில் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே இரா.சம்பந்தன் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், தான் போட்டியிடுவது குறித்து கட்சியே இறுதி தீர்மானம் எடுக்கும் எனவும் அவர் ...

மேலும்..

புதிய ஆட்சியில் ஜனாதிபதி, பிரதமருடன் சம்பந்தனின் சந்திப்பு

நாடாளுமன்றில் இடம்பெற்ற விருந்துபசாரத்தில் கலந்துகொண்ட ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோருடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் சுவாரஷ்யமாக கலந்துரையாடியுள்ளார். ஜனாதிபதியின் கொள்கைப் பிரகடன உரையைத் தொடர்ந்து சபை ஒரு மணிவரை ஜனாதிபதியால் ஒத்திவைக்கப்பட்டதன் பின்னர் சபாநாயகரால் ஏற்பாடு ...

மேலும்..