February 11, 2020 அன்று பிரசுரிக்கப்பட்டவை

இதயம் சின்னத்திற்கு அனுமதி கிடைக்காது – சுசில்

எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவின் இதய சின்னத்திற்கு ஒருபோதும் அனுமதி கிடைக்காதென இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த ஊடக சந்திப்பில் மேலும் கூறியுள்ளதாவது, “யானை சின்னத்திற்கும் ...

மேலும்..

விடுவிக்கப்பட்ட காணிகளை விரைவில் பயன்படுத்துங்கள் – வடக்கு ஆளுநர் பணிப்பு!

விடுவிக்கப்பட்ட காணிகளை இன்னும் ஒரு மாத காலத்துக்குள் மக்கள் பாவனைக்கு உட்படுத்த வேண்டுமென வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் பணிப்புரை விடுத்துள்ளார். மேலும் இதுகுறித்த அறிவிப்பை பிரதேச செயலாளர்கள் காணி உரிமையாளர்களுக்கு அறிவுறுத்துமாறும் அவர் கூறியுள்ளார். ஆளுநர் செயலகத்தில், இன்று (செவ்வாய்க்கிழமை) பிரதேச செயலாளர்களுடனான ...

மேலும்..

கட்சித் தலைவர்களின் கூட்டம் நாளை – ரஞ்சனின் குரல் பதிவுகள் குறித்து ஆராய்வு

நாடாளுமன்ற நடவடிக்கைகளுக்கான தெரிவுக்குழு மற்றும் கட்சித் தலைவர்களின் கூட்டம் நாளை இடம்பெறவுள்ளது. சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் நாளை (புதன்கிழமை) பிற்பகல் 3 மணிக்கு இந்த கூட்டம் இடம்பெறவுள்ளது. இதன்போது, ரஞ்சன் ராமநாயக்கவினால் சமர்ப்பிக்கப்பட்ட குரல் பதிவுகளை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பெற்றுக்கொடுப்பது தொடர்பாக கட்சித் ...

மேலும்..

நான் நிதியை திருப்பி அனுப்பினேனா? மஹிந்தவின் கருத்தால் பொங்கி எழுந்த விக்கி!

மத்திய அரசாங்கத்தின் கையாட்களாக இருந்தவர்களே வடமாகாணத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியை திருப்பி அனுப்பியிருப்பார்கள் என வடக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வடமாகாணத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியை விக்னேஸ்வரன் சரியாகப் பயன்படுத்தவில்லை என்றும் திருப்பி அனுப்பிவிட்டார் என்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இந்தியாவில் ...

மேலும்..

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான சீனப் பெண்ணை வைத்தியசாலையிலிருந்து வெளியேற்ற நடவடிக்கை

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சீனப் பெண்ணை, எதிர்வரும் இரண்டு நாட்களில் வைத்தியசாலையிலிருந்து வெளியேற்ற முடியும் என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குறித்த சீனப் பெண் தொடர்பான பல வைத்திய சோதனை முடிவுகள் இன்று வெளியிடப்படும் என்று ...

மேலும்..

மன்னார் மனித புதைகுழி விவகாரம்: நீதிமன்றத்தில் தகாத வார்தை பிரயோகத்தால் சட்டத்தரணிகள் வெளிநடப்பு

மன்னார் மாவட்டத்தில் கடந்த வருடம் கண்டு பிடிக்கப்பட்ட மனித புதைகுழி தொடர்பான வழக்கு இன்று (செவ்வாய்க்கிழமை) மன்னார் மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் விசாரனைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டது. குறித்த வழக்கின்போது அரச சட்ட வைத்திய அதிகாரி மற்றும் அவர்கள் குழு சார்பாக ஆஜராகிய அரச ...

மேலும்..

பதில் பொலிஸ் மா அதிபரின் பதில் தொடர்பாக சட்டமா அதிபர் அதிருப்தி!

பணி இடை நிறுத்தம் செய்யப்பட்டுள்ள, மேல் நீதிமன்ற நீதிபதி கிஹான் பிலபிட்டியவை கைதுசெய்ய நீதிமன்ற உத்தரவைப் பெற்றுக்கொள்ளுமாறு விடுத்த ஆலோசனைக்கு பதில் பொலிஸ் மா அதிபர் வழங்கிய பதில் தொடர்பாக சட்டமா அதிபர் அதிருப்தி தெரிவித்துள்ளார். கிஹான் பிலபிட்டிய வழக்கில் நீதித்துறை நடவடிக்கைகளை ...

மேலும்..

வடக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகளுக்கு ஆளுநர் விசேட ஆலோசனை!

வடக்கு மாகாணத்திலுள்ள வேலையற்ற பட்டதாரிகள் தமக்கான தொழிவாய்ப்பை பெற்றுக்கொள்ள அரசு தரும் வாய்ப்பை உரிய நேரத்தில் சரியான ஒழுங்கு முறையை பின்பற்றி பெற்றுக்கொள்வதற்கான முயற்சியை தாமதமின்றி மேற்கொள்ளுமாறு வடக்கு மாகாண ஆளுநர் பி.எம்.எஸ்.சார்ள்ஸ் ஆலோசனை வழங்கியுள்ளார் தொழில் வாய்ப்பின்றி இருக்கும் பட்டதாரிகளுக்கு தொழில் ...

மேலும்..

பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு – 65 பேருக்கு மீண்டும் விளக்கமறியல்!

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பாக சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட காத்தான்குடி பிரதேசத்தைச் சேர்ந்த 65 பேரையும் மீண்டும் விளக்கமறியலில் வைக்க மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏ.சி. றிஸ்வான் உத்தரவிட்டார். தடை செய்யப்பட்ட தௌஹீத் ஜமாத் அமைப்பின் தலைவர் சஹரான் தலைமையிலான பயங்கரவாதிகள் ...

மேலும்..

பொதுத்தேர்தல் குறித்து ஐ.தே.க.அச்சம்- விமல்

பொதுத்தேர்தலை எதிர்வரும் ஏப்ரல் 21 ஆம் திகதிக்கு பின்னர் நடத்துவதற்கு ஐக்கிய தேசிய கட்சியினர் அச்சம் கொள்வதாக அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார் கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த ஊடக சந்திப்பில் அவர் மேலும் ...

மேலும்..

மத்தள விமான நிலையம் – புதிய வேலைத்திட்டங்கள் முன்னெடுப்பு

மத்தள விமான நிலையத்தை சர்வதேச விமானங்கள் வருகை தரும் விமான நிலையமாக மேம்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் நிறுவனத்தின் தலைவர் மேஜர் ஜெனரல் ஜீ.ஏ.சந்திரஸ்ரீ  தெரிவித்துள்ளார். இதற்காக குறுகிய மற்றும் நீண்டகால திட்டங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன என்றும் அவர் ...

மேலும்..

பாலியல் ரீதியான பகிடிவதைக்கு எதிராக யாழில் போராட்டம்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் பகிடிவதை மற்றும் பாலியல் துன்புறுத்தல் ரீதியான வன்முறைகளுக்கு எதிராக பெண்கள் அமைப்பினால் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. இந்த போராட்டம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கு முன்பாக இன்று (செவ்வாய்க்கிழமை) காலை முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாணத்தில் உள்ள மகளிர் அமைப்புக்களினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த ...

மேலும்..

யாழ்ப்பாண பொலிஸ் பிரிவின் புதிய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பதவியேற்றார்

யாழ்ப்பாண பிராந்திய பொலிஸ் பிரிவின் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகராக மனோஜ் ரணகல பதவியேற்றார் மும் மத தலைவர்களிள் ஆசீர்வாதத்துடன் பதவியேற்பு நிகழ்வு இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 7.36 மணியளவில் இடம்பெற்றது. கொழும்பு மத்தி பிரிவின் பொறுப்பதிகாரியாக கடமையாற்றிய மனோஜ் ரணகல, இடமாற்றலாகி யாழ்ப்பாண பிராந்திய ...

மேலும்..

ஜனாதிபதி ஆணைக்குழுவில் இதுவரை 103 முறைப்பாடுகள் பதிவு

ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு இதுவரை 103 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. இந்நிலையில், முறைப்பாடுகள் தொடர்பான விசாரணைகள் நேற்று (திங்கட்கிழமை) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னாகொட, அட்மிரல் D.K.P. தசநாயக்க உள்ளிட்ட கடற்படை அதிகாரிகள் குழுவால் 4 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. குற்றப்புலனாய்வுத் ...

மேலும்..

அதிகாரங்கள் பறிக்கப்பட்ட நிலையில் பெயரளவில் மாகாண சபைகள்! – பிரி.உயர் ஸ்தானிகரிடம் சரவணபவன் குற்றச்சாட்டு

இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் இன்று (11.02.2020) மட்டக்களப்பு மாநகர சபைக்கான விஜயமொன்றினை மேற்கொண்டார். உயர்ஸ்தானிகர் சாரா ஹல்டனுடன், உயர்ஸ்தானிகர் அலுவலக அரசியல் பிரிவுக்கான அதிகாரி ஜோவிதா அருளானந்தம் மற்றும் மனித உரிமைகளுக்கு பொறுப்பான அலுவலர் சுமுது ஜெயசிங்க ஆகியோரும் இணைந்து கொண்டிருந்தனர். மட்டக்களப்பு மாநகர ...

மேலும்..

ஞானலிங்கேச்சரர் பெருமானுடைய கும்பாபிசேகமும் பூம்புகார் அறநெறி பாடசாலை கட்டட திறப்பு விழாவும்

கிழக்கு தமிழர் ஒன்றியம் மூன்றாக பிரிந்துள்ள நிலையில் தமிழ்தேசிய கூட்டமைப்பு பொதுச்சின்னத்தில்கிழக்கில் தேர்தலில் போட்டியிடவேண்டும் என கேட்பது வேடிக்கையான விடயம் எனக்கூறினார் மட்டக்களப்புமாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் பட்டிருப்பு தொகுதி இலங்கை தமிழரசு கட்சி தலைவருமானபா.அரியநேத்திரன். தமிழ்தேசிய கூட்டமைப்பு கிழக்கு மாகாணத்தில் ஒரு பொதுச்சின்னத்தில் தேர்தலில் போட்டியிடமுன்வரவேண்டும் என கிழக்கு தமிழர் ஒன்றியத்தலைவர் சட்டத்தரணி சிவநாதன் ஊடகங்களில் கூறிய கருத்து  தொடர்பாக அரியநேத்திரனிடம் கேட்டபோது  மேலும் கூறியதாவது. ஒற்றுமையாக தமிழ்தேசிய கூட்டமைப்பில் அனைவரும் இணைந்து தேர்தலில் போட்டியிட வேண்டும் என்பதில்மாற்றுக்கருத்துக்கள் இல்லை. ஒற்றுமை என்றும் கிழக்கு தமிழர் என்றும் வடக்கு தமிழர் என்றும் இரண்டாக கூறுபோட்டு பிரதேசவாதஅரசியலை கைவிட்டு வடக்குகிழக்கு என்ற பரந்துபட்ட ஒரு ஒற்றுமையாக அனைத்துக்கட்சிகளும்ஒன்றினைவதே தமிழர்களின் அரசியல் பலத்துக்கான சாத்தியமாக அமையும். கிழக்கு தமிழர் ஒன்றியம் ஆரம்பிக்கும் போது அந்த அமைப்பில் முக்கிய பதவிகளில் இருந்த பேராசிரியர்செல்வராசா தற்போது ஜக்கிய தேசிய கட்சியின் பட்டிருப்பு தொகுதி அமைப்பாளராக செயல்பட்டு தற்போதுபுதிய கட்சியான தமிழர் ஐக்கிய முன்னணி என்ற கட்சியை ஆரம்பித்துள்ளார் அதன் தேசிய அமைப்பாளராகபேராசிரியர் செல்வராசா இணைந்துள்ளார். அடுத்தவர் கோபாலகிருஷ்ணன் என்ற தமிழர் மகாசபை கட்சி செயலாளராக இருந்து கிழக்கு தமிழர்ஒன்றியத்தை ஆரம்பித்தவர் அவர் தற்போது பிரிந்து கிழக்கு தமிழர் கூட்டமைப்பு எனும் புதிய கட்சியைஆரம்பித்துள்ளார். கிழக்கு தமிழர் ஒன்றியம் இவ்வாறு மூன்று கூறாக பிரிந்து தனித்தனியாக புதிய பெயர்களில் கட்சிகளைஆரம்பித்துள்ள நிலையில் அவர்களில் இருந்து பிரிந்து சென்ற மூன்றுகட்சிகளை முதலில் ஒன்றாக ஒருபொதுச்சின்னத்தில் போட்டியிட முடியாத நிலையில் தமிழ்தேசியகூட்டமைப்புக்கு கிழக்கு தமிழர் ஒன்றியம்எப்படி அழைப்புக்கொடுக்கமுடியும். இதைவிட மழைக்கு காளான் முளைப்பதைபொல் இன்னும் பல கட்சிகள் மட்டக்களப்பில் முளைத்துள்ளன அந்தகட்சிகள் அனைத்தையும் ஒரு குடையின் கீழ் முதலில் கொண்டுவருவதற்கான முயற்சியை செய்துவிட்டு அதில்வெற்றிகண்டுவிட்டு அதன் பின் தமிழ்தேசிய கூட்டமைப்புக்கு அழைப்பு கொடுப்பது ஒரளவு பொருத்தமாகஇருக்கும் அழைப்பு கொடுப்பவர்கள் தமிழ்தேசிய கூட்டமைப்பின் கொள்கை கோட்பாடுகளை பற்றி ஏளனமாகஏற்கனவே ஊடகங்களில் விமசனம் செய்துவிட்டு உள்ளத்தால் தமிழ்தேசிய கூட்டமைப்பை குற்றம் சுமத்திபேசிவிட்டு உதட்டால் ஒற்றுமை பொதுச்சின்னம் என்ற வார்த்தைகளை கூறுவது எந்தவகையில் பொருந்தும். தமிழ்தேசியகூட்டமைப்பு வடக்கில் ஒருசின்னத்திலும் கிழக்கில் வேறொரு சின்னத்திலும் எந்த தேர்தலிலும்இதுவரை போட்டியிடவும் இல்லை இனியும் அப்படி போட்டியிடவேண்டிய தேவையும் எழாது. முடிந்தால் கிழக்குதமிழர் வடக்குதமிழர் என்று தமிழர்களை பிரித்து பிரதேசவாத அரசியலை விட்டுவடக்குகிழக்கு தமிழ்மக்கள் என்ற எண்ணப்பாட்டுடன் ஒற்றுமையாக தமிழ்தேசிய கூட்டமைப்புடன் இணைந்துபொதுச்சின்னத்தை விட்டு வீட்டுச்சின்னத்தில் இணைந்து தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக சிந்திப்பதேநல்லது. தமிழ்தேசிய கூட்டமைப்பு ஆரம்பித்து  2001, ம் ஆண்டு தொடக்கம் இன்றுவரை 19, வருடங்களாக 4, பொதுத்தேர்தல்கள்,2, மாகாணசபைதேர்தல்கள், வடக்கு கிழக்கில் இடம்பெற்ற  அனைத்து உள்ளுராட்சிநகரசபை மாநகரசபை தேர்தல்கள் அனைத்திலும் தமிழ்தேசிய கூட்டமைப்பு வடக்கில் ஒரு சின்னம் கிழக்கில்வேறு சின்னம் என பிரித்து கேட்கவில்லை இலங்கை தமிழரசு கட்சியான வீட்டு சின்னத்திலேயே தேர்தல்களைஎதிர்கொண்டோம் அவ்வாறான நிலைப்பாடுதான் எதிர்வரும் பொதுத்தேர்தல் மாகாணசபை தேர்தல்கள்எல்லாம் தமிழ்தேசிய கூட்டமைப்பு போட்டியிடும். தேர்தல்காலத்து ஒற்றுமையை என்பதைவிட தமிழ் மக்களுக்கான திரந்தர ஒற்றுமை பற்றி சிந்திக்கவேண்டியநிலை எமக்கு உண்டு, தேர்தல் விளம்பரத்துக்காக ஒற்றுமை என்ற சொல், ஒருகுடை என்றசொல்,கிழக்குதமிழர் என்றசொல், மாற்றுத்தலைமை என்ற சொல் பலராலும் உச்சரிக்கப்படுவது வழமையான அரசியல் தமிழ்தேசிய கூட்டமைப்புஎந்த நோக்கத்துக்காக ஆரம்பிக்கப்பட்டதோ அந்த நோக்கம் அடையும் வரை அதன்பயணம் தொடரும்பயணங்கள் செல்லும் பாதைகளில் தடைகள் தாமதங்கள் வரலாம் அதற்காக நோக்கத்தை கைவிட்டுசந்தர்பவாத அரசியல் செய்ய முடியாது, அபிவிருத்தி அன்றாடதேவை என்பதை பெற்றுக்கொள்வதற்கானஅரசியலுடன் தமிழ்மக்களின் அபிலாஷைகளையும் பெற றுக்கொள்ளவேண்டிய தேவை உண்டு எனவேதமிழ்தேசிய கூட்டமைப்பு அபிவிருத்தி வேலைவாய்ப்பு பொருளாதாரமேம்பாடு இவைகளுடன் அரசியல் தீர்வைபெறும் விடயங்களையும் இணைத்துத்தான் அரசியல்பணிகளை செய்யமுடியும் அரசியல் தீர்வை கைவிட்டுதனியாக அபிவிருத்தியை மட்டும் கொள்கையாக கொண்டு நாம் அரசியல் பணி செய்யப்போவதில்லை என்பதைஅனைவரும் புரிதல் நல்லது. தமிழ்தேசிய கூட்டமைப்பு பொதுச்சின்னத்தில் ஒன்றுணையுமாறு வேண்டுகோள் கொடுப்பவர்கள் தமிழ்தேசியகூட்டமைப்பை பலப்படுத்த ஒன்றிணைவதே இன்றயதேவை. தற்போது வடமகாணத்தில் விக்கினேஷ்வரன் ஐயா தமிழ்மக்கள் தேசிய கூட்டணி என்ற பெயரில் புதிய கட்சியைஇன்று 09/02/2020, ஆரம்பித்துள்ளார் இந்த கட்சி இப்பதான் ஒருநாள் குழந்தை இந்த குழந்தை தவண்டுவளர்ந்து தடந்து சிறுவராகி மாணவராகி இளைஞராகி பெரியவராக இன்னும் எத்தனை வருடங்கள் எடுக்கும், ஏற்கனவே வளர்ச்சிபெற்று பல தேர்தல்களில் ஜனநாயக அங்கீகாரம் பெற்றுள்ள தமிழ்தேசிய கூட்டமைப்பின்இடத்தை பிடிக்கவோ அல்லது மாற்றீடான கட்சியாக பரினாம வளர்ச்சிபெறவோ பல காலம் எடுக்கும் என்பதேஜதார்தம். இதுபோன்றுதான் கிழக்கில் பல கட்சிகள் திருவிழா காலத்து முட்டய் கடைகளை போன்று இன்னும் புதிய புதியபெயர்களில் கட்சி கடைகள் திறக்கப்படால் அவை அனைத்தும் மக்கள் மத்தியில் இடம்பிடிக்காது. கோயில் வீதியில் அல்லது பஷ்தரிப்பு நிலையங்களில் பொதுச்சந்தைகளில் துண்டுப்பிரசுரங்கள்வினியோகிப்பதால் மட்டும் ஒற்றுமை  ஏற்படும் என கருதமுடியாது  எனவும் மேலும் கூறினார்.

மேலும்..