March 16, 2020 அன்று பிரசுரிக்கப்பட்டவை

மதகு கட்டுவதற்காக வெட்டப்பட்டிருந்த குழியில் விழுந்து இளைஞன் உயிரிழப்பு- யாழில் சம்பவம்

யாழ்ப்பாணம்- அராலி வீதியில் மதகு கட்டுவதற்காக வெட்டப்பட்டிருந்த குழியில் விழுந்து 25 வயதான இளைஞன் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு இடம்பெற்ற இந்த சம்பவத்தில், அராலியை சேர்த்த சூரியகுமார் கீர்த்தனன் (வயது-25) என்ற இளைஞனே உயிரிழந்துள்ளார். யாழ்.நகரில் உள்ள உணவகம் ஒன்றில் வேலை ...

மேலும்..

சீன பிரஜைகளுக்கு தற்காலிக பயணத்தடை விதிக்க வேண்டும்- ஹர்ஷன

நாட்டில் கொரோனா வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்த வேண்டுமாயின் சீன பிரஜைகளுக்கு தற்காலிக பயணத்தடை விதிக்கப்பட வேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருண தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் தாக்கம் நாட்டில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளமை தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் ...

மேலும்..

கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரிப்பு : சுகாதார அமைச்சு விசேட அறிவிப்பு

நாட்டில் கொரோனா வைரஸ் தாக்கம் பெரும்  அச்சத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், மார்ச் மாதம் 10 ஆம் திகதக்கு முன்பாக நாட்டிற்கு வருகை தந்த நபர்களை தடுப்பு நிலையங்களுக்கு அனுப்பிவைக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அரச தகவல் திணைக்களத்தில்  இடம்பெற்ற ஊடகவியலாளர் ...

மேலும்..

கூட்டமைப்பின் தோல்வி தமிழினத்தின் தோல்வி- மயூரன்

தமிழ் தேசிய கூட்டமைப்பு வடக்கு கிழக்கில் தோல்வி அடையுமாக இருந்தால் ஒட்டுமொத்த தமிழினத்திற்குமான படுதோல்வி என்பதை ஒவ்வொரு தமிழ் மகனும் புரிந்துகொள்ள வேண்டுமென முன்னாள் வட.மாகாண சபை உறுப்பினர் செந்தில்நாதன் மயூரன் தெரிவித்தார். வவுனியாவில் இடம்பெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து ...

மேலும்..

வெந்நீரூற்று கிணறு பகுதியை தற்காலிகமாக மூடுவதற்கு நடவடிக்கை

திருகோணமலை மாவட்டத்தில் அமைந்துள்ள வெந்நீரூற்று கிணறு பகுதியை தற்காலிகமாக மூடுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்தும் நோக்கிலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக திருகோணமலை மாவட்ட தொல்பொருள் அதிகாரி மொஹான் ஆரியதிலக தெரிவித்துள்ளார். அதற்கமைய குறித்த கிணறு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் ...

மேலும்..

கொரோனா காரணமாக உயர்தரப் பரீட்சைகள் ஒத்திவைக்கப்படுமா? – பரீட்சைகள் ஆணையாளர் விளக்கம்

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைகள் ஒத்திவைக்கப்படுவதாக சமூக ஊடகங்களில் வெளியான செய்திகள் உண்மைக்கு புறம்பானவையென பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பி.பூஜித தெரிவித்தார். மேலும் உயர் தரப் பரீட்சையை நவம்பர் மாதம் ஒத்திவைக்க எந்தவித தீர்மானமும் எடுக்கப்படவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார். அத்துடன் சமூக ...

மேலும்..

தேர்தலைவிட மக்களின் பாதுகாப்பே முக்கியம்- அருண் தம்பிமுத்து

தேர்தலைவிட மக்களின் பாதுகாப்பு முக்கியம். எனவே கொரோனா வைரஸை தடுக்க அரசு அதிக கவனம் செலுத்த வேண்டுமென  மக்கள் முன்னேற்ற கட்சியின் செயலாளர் நாயகம் அருண் தம்பிமுத்து தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு மாவட்டத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே ...

மேலும்..

வேகமாகப் பரவும் கொரோனா – கர்ப்பிணித் தாய்மார்களுக்கு முக்கிய அறிவிப்பு

நாட்டில் வேகமாகப் பரவிவரும் கொரோனா வைரஸ் தொற்றை கருத்திற்கொண்டு, நாட்டிலுள்ள கர்ப்பிணித் தாய்மாருக்கான மாதாந்த பரிசோதனை நடவடிக்கைகளுக்கு வரையரை விதிக்க சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. அதற்கமைய 8 மாதங்கள் பூர்த்தியான கர்ப்பிணித் தாய்மார்கள் மாத்திரம் பரிசோதனைகளுக்காக வருகை தருமாறும் ஏனையோர் தேவை ...

மேலும்..

நாடு முழுவதும் 12 மத்திய நிலையங்கள்-1723 பேர் கண்காணிப்பில்

கொரோனா தொற்று அச்சுறுத்தல் காரணமாக வெளிநாடுகளில் இருந்து வருபவர்களை தனிமைப்படுத்தி வைப்பதற்காக நாடு முழுவதும் 12 மத்திய நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த நிலையங்களில் இதுவரை 1723 பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என இராணுவ ஊடக பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இலங்கையில் கொரோனா தொற்றினால் ...

மேலும்..

கொரோனாவைப் பயன்படுத்தி எம்மீது மீண்டும் இன அழிப்பா?- குகவரதன்

கொரோனா வைரஸ் மருத்துவ கண்காணிப்பு நிலையங்களை தமிழர் தாயகத்தினை மையப்படுத்தி ஸ்தாபிப்பதன் ஊடாக மற்றுமொரு இன அழிப்பினை செய்வதற்கு அரசாங்கம் விளைகின்றதா என முன்னாள் மேல் மாகாண சபை உறுப்பினர பொறியியலாளர் சண்.குகவரதன் கேள்வி எழுப்பியுள்ளார். இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, ...

மேலும்..

கொரோனா பீதி: நாட்டு மக்களுக்கு தமிழில் ருவிட்டர் பதிவிட்டுள்ள ஜனாதிபதி

இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து செல்கிறது. இதன் காரணமாக இன்றைய தினம் அரசவிடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இன்று (திங்கட்கிழமை) ருவிட்டரில் தமிழில் பதிவிட்டுள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, வீட்டை விட்டு வெளியில் செல்ல வேண்டாம் என பொது மக்களிடம் ...

மேலும்..

பொது விடுமுறை இன்று – அத்தியாவசிய சேவைகள் இடையூர் இன்றி இடம்பெறும்

அரச, வங்கி, வர்த்தக விடுமுறை தினமாக இன்றைய தினம் (திங்கட்கிழமை) அறிவிக்கப்பட்டதில் எந்த மாற்றமும் இல்லை எனினும் அத்தியாவசிய சேவைகள் இடையூறின்றி இடம்பெறும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது. இன்று விடுமுறை தினமாக இருந்த போதிலும் சுகாதார சேவைகள் அத்தியாவசிய சேவையின் கீழ் உரிய முறையில் ...

மேலும்..

யாழில் தேர்தல் சுவரொட்டிகளுடன் மூவர் கைது

தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தேர்தல் சுவரொட்டிகளுடன் முச்சக்கர வண்டியில் பயணித்த மூவர் கோப்பாய் பொலிஸாரால்  கைது செய்யப்பட்டுள்ளனர் கோண்டாவில் உப்புமடம் சந்திப் பகுதியில் குறித்த நபர்கள் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு தேர்தல் சுவரொட்டிகளை ஒட்டிக்கொண்டிருந்தபோது, அவ்வழியே சென்ற பொலிஸார், அவர்களை கைது ...

மேலும்..

வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் சிறுமி படுகாயம்

வவுனியாவில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் சிறுமியொருவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வவுனியா செட்டிக்குளம் பிரதான வீதியின் சூடுவெந்தபுலவு பகுதியில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை 5.30 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றது. இந்த விபத்தில் சூடுவெந்தபுலவைச் சேர்ந்த 6 வயதுடைய அஸ்வர் ...

மேலும்..

தேர்தல்கள் ஆணைக்குழுவின் விசேட கலந்துரையாடல் இன்று

கொரோனோ வைரஸ் தொற்றின் பாதிப்பு குறித்து விசேட கலந்துரையாடலொன்றை நடத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. அதற்கமைய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மற்றும் ஏனைய அதிகாரிகள் இணைந்து தேர்தல்கள் காரியாலயத்தில் இன்று (திங்கட்கிழமை) இந்த கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளனரென தெரிவிக்கப்படுகிறது. கொரோனா வைரஸ் தொடர்பான அச்சம் நாட்டில் ...

மேலும்..

யாழில் தும்புத் தொழிற்சாலையில் தீ விபத்து

யாழ்ப்பாணம் எழுதுமட்டுவாழ் ஏ9 வீதிக்கருகாமையில் அமைந்துள்ள தும்புத் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் பல இலட்சம் பெறுமதியான தென்னம் பொச்சுக்கள் தீக்கிரையாகியுள்ளன. தும்புத் தொழிற்சாலைக்கு அருகாமையில் காணப்படும் காட்டிற்கு இனந்தெரியாத நபர்களால் தீ வைக்கப்பட்டுள்ளது காட்டிற்கு வைக்கப்பட்ட தீ பரவலானது தும்புத் தொழிற்சாலையின் ...

மேலும்..

கொரோனா வைரஸ் ஒழிப்பு – வடக்கு ஆளுநரின் அதிரடி நடவடிக்கைகள்

கொரோனா வைரஸ் ஒழிப்பு தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் வடக்கு மாகாணத்தில் சேவையாற்றும் பொது மற்றும் தனியார் போக்குவரத்து வாகனங்கள் கிருமி நீக்கல் செயற்திட்டத்துக்கு ஆதரவு வழங்க வேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ல்ஸ் பணிப்புரை விடுத்துள்ளார். பொது மற்றும் தனியார் போக்குவரத்து ...

மேலும்..

கொரோனா வைரஸ் – திருமண நிகழ்வுகளுக்கு தடை இல்லை

கொரோனா வைரஸ் நாட்டினுள் பரவியுள்ள நிலையில் மக்கள் ஒன்று கூடும் நிகழ்வுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள போதிலும் திருமண நிகழ்வுகளுக்கு தடை விதிக்கப்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியாலாள் சந்திப்பில் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன, இதனைக் ...

மேலும்..

ஆலயங்களில் பெருமளவு ஒன்றுகூடாதீர்கள்: சைவ மக்களிடம் ஆதீன குரு முதல்வர்கள் கோரிக்கை!

ஆலயங்களில் பெருமளவில் திரண்டு வழிபடுவதை தவிர்த்து வீடுகளில் ஆத்மார்த்தமாக வழிபாடு செய்வதன் மூலம் கொரோனாவின் பிடியில் இருந்து பாதுகாப்புப் பெறுவதுடன் அது பரவுவதையும் கட்டுப்படுத்த உதவுங்கள் என சைவ மக்களிடம் ஆதீன குரு முதல்வர்கள் கூட்டாக வேண்டுகோள் விடுத்துள்ளனர். உலகளாவிய ரீதியில் பெரும் ...

மேலும்..