April 21, 2020 அன்று பிரசுரிக்கப்பட்டவை

சம்மாந்துறையில் மதுபோதையில் துப்பாக்கிச் சூடு – சந்தேக நபர் கைது!

இரண்டு குழுக்களுக்கிடையில் மதுபோதையில் இடம்பெற்ற ஒரு பிரச்சினையின் போது துப்பாக்கி சூடு நடாத்திய சந்தேக நபர் ரீ-56 ரக துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்டுள்ளார். சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட செந்நெல் கிராமத்தில் நேற்று(திங்கட்கிழமை) இரவு 9.30 மணியளவில் துப்பாக்கி சூடு ஒன்று இடம்பெற்றதாக பொலிஸாருக்கு ...

மேலும்..

நாட்டை வந்தடைந்தது பாகிஸ்தானில் இருந்து இலங்கை மாணவர்களை ஏற்றிய விசேட விமானம்!

பாகிஸ்தானில் உயர் கல்விக்காக சென்றிருந்த இலங்கை மாணவர்களை நாட்டுக்கு அழைத்து வருவதற்காக அனுப்பப்பட்ட விசேட விமானம் நாட்டை வந்தடைந்துள்ளது. பாகிஸ்தானின் லாஹுரில் இருந்த 93 மாணவர்களும், கராச்சியில் இருந்த 20 மாணவர்களுமே இன்று(செவ்வாய்கிழமை) மாலை இவ்வாறு நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, ...

மேலும்..

பாடசாலைகள் பல்கலைக்கழகங்களை மீண்டும் திறப்பது எப்போது? முடிவை மறுபரிசீலனை செய்ய அரசு தீர்மானம்

கொழும்பில் COVID-19 நோயாளிகளின் எண்ணிக்கை திடீரென அதிகரித்ததன் காரணமாக மே 11 அன்று பல்கலைக்கழகங்களையும் பாடசாலைகளையும் மீண்டும் ஆரம்பிக்கும் முடிவை அரசாங்கம் மறுபரிசீலனை செய்யவுள்ளது. இது குருத்து ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய பிரத்தியேக பேட்டியில் கருத்து தெரிவித்த அமைச்சர் பந்துல குணவர்தன, ...

மேலும்..

இடர்காலக் கொடுப்பனவு வழங்க நடவடிக்கை எடுங்கள் – சிறிதரன் கோரிக்கை

கிராம அலுவலர்களுக்கு இடர்காலக் கொடுப்பனவு வழங்க நடவடிக்கை எடுக்குமாறு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக ஆளுநருக்கு எழுதிய கடிதத்தில், “கிராம அலுவலர்களுக்கான இடர்காலக் கொடுப்பனவு வழங்கல் தற்போது ...

மேலும்..

அலுவலகங்களில் பின்பற்ற வேண்டிய பிரதான நடைமுறைகள் குறித்த அறிவிப்பு

கொரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்கு அலுவலகங்களில் பின்பற்ற வேண்டிய பிரதான நடைமுறைகள் தொடர்பாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரனால் அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் உலகளாவிய ரீதியிலும் எமது நாட்டிலும் பரவி பாரிய பாதிப்புகளை ஏற்படுத்தி வருவவதாகத் தெரிவித்துள்ள ...

மேலும்..

கொரோனாவிலிருந்து மீண்டவர்கள் எண்ணிக்கையில் அதிகரிப்பு

நாட்டில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டோரில் இதுவரை 102 பேர் குணமடைந்துள்ளனர். இன்று மாாலை மேலும் இருவர் குணமாகியதையடுத்தே, இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவிக்கின்றது. அத்துடன், இதுவரை 310 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இதுவரை ஏழு பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும்..

வெளிநாடுகளில் வெளிநாடுகளில்சிக்கிய 433 மாணவர்கள் இலங்கை திரும்ப ஏற்பாடு

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக விதிக்கப்பட்டுள்ள பயணக் கட்டுப்பாடுகளைத் தொடர்ந்து, வெளிநாடுகளில் சிக்கியுள்ள மாணவர்களை அழைத்து வருவதற்காக விசேட விமானம் சேவை ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸினால் முன்னெடுக்கப்படவுள்ளது. இந்தியாவின் அமிருதசரசு மற்றும் கோயம்புத்தூரிலும், பாகிஸ்தானின் கராச்சி மற்றும் லாகூரிலும் நேபாளத்தின் காத்மண்டுவிலும் சுமார் 433 ...

மேலும்..

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 310 ஆக அதிகரிப்பு

நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட மேலும் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார். இதன்காரணமாக மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 310 ஆக அதிகரித்துள்ளது. இன்றைய தினத்தில் மாத்திரம் இதுவரையில் ஆறு கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதேபோன்று இதுவரையில் 100 பேர் கொரோனா தொற்றிலிருந்து முழுமையாக குணமடைந்துள்ளனர் எனவும் ...

மேலும்..

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல்: உண்மையான குற்றவாளியை கண்டுபிடிக்க வேண்டும் அரசு! – ரிஷாத் வலியுறுத்து

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலின் உண்மையான குற்றவாளியைக் கண்டுபிடிக்க இலங்கை அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்துள்ளார். அரசியல்வாசிக்காக அப்பாவி நபர்களைக் குற்றவாளியாக்கும் நடவடிக்கையை முன்னெடுக்க வேண்டாம் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். தனது ...

மேலும்..

எனது வளர்ச்சியை கண்டு பொறுக்கமுடியாதவர்கள் போலி செய்திகளை பரப்புகின்றனர் –சாணக்கியன்

கடந்த சில காலங்களாக நான் மேற்கொண்டுவரும் சமூக பணியை பார்த்து அரசியல் ரீதியாக எனது வளர்ச்சியை பார்த்தும் மக்கள் மத்தியில் எனக்குள்ள வளர்ச்சியை பார்த்தும் பொறுக்கமுடியாதவர்கள் அந்த செல்வாக்கினை இல்லாமல்செய்யவேண்டும் என்பதற்காக போலி செய்திகளை வெளியிட்டுவருவதாக இராசமாணிக்கம் மக்கள் அமைப்பின் தலைவரும்,தமிழ் ...

மேலும்..

முன்னாள் மூதூர் பிரதேச சபையின் எதிர்க்கட்சித் தலைவர் எம்.சௌந்தரராஜன் தாம் பிரதேச சபையினால் பெற்றுக்கொண்ட சம்பளத்தை மீள வழங்கியுள்ளார்…

திருகோணமலை – மூதூர் பிரதேசத்தில் வறுமையில் வாழும் மக்களுக்கு உதவும் நோக்கில் முன்னாள் மூதூர் பிரதேச சபையின் எதிர்க்கட்சித் தலைவர் எம்.சௌந்தரராஜன் தாம் பிரதேச சபையினால் பெற்றுக்கொண்ட சம்பளத்தை மீள வழங்கியுள்ளார். மூதூர் பிரதேச சபையின் தவிசாளர் எம். எம். ஏ. அறூஸிடம் ...

மேலும்..

உருத்திரபுரம் சிவன் ஆலயத்தால் மாவீரர் குடியிருப்புக்கு உதவி…

கிளிநொச்சி உருத்திரபுரம் சிவன் ஆலயத்தினால் விடுதலைப் புலிகளால் மாவீரர்களின் பெற்றோர்கள் இந்த மண்ணில் வாழ்வதற்காக உருவாக்கப்பட்ட பொன்நகர் வேதாகுடியிருப்பில் உள்ள மாவீரர்களின் பெற்றோர்கள் உறவினர்களுக்கான உலருணவுப் பொதிகள் வழங்கப்பட்டன. உருத்திரபுரம் சிவன் ஆலய பரிபாலன சபையின் தலைவரும் முன்னாள் வடக்கு மாகாண சபையின் ...

மேலும்..

விசேட யாக பூஜை…

க.கிஷாந்தன்) கடந்த வருடம் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தின சம்பவத்தில் இறந்தவர்களின் ஆத்மா சாந்தியடைவதற்காகவும் அதே போல தற்பொழுது உலகையே ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக உயிரிழந்தவர்களின் ஆத்மா சாந்தியடைய வேண்டும் எனவும் இன்றைய நிலைமை மிக விரைவில் வழமைக்கு ...

மேலும்..

நோய் அறிகுறிகளுடன் இருந்த யாசகர் ஒருவரை வைத்தியசாலையில் அனுமதிப்பதற்கு நடவடிக்கை…

(க.கிஷாந்தன்) நோய் அறிகுறிகளுடன் தலவாக்கலை பேருந்து தரிப்பிடத்தில் இருந்த யாசகர் ஒருவரை இன்று (21) வைத்தியசாலையில் அனுமதிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர் லக்மாந்த சில்வா தெரிவித்தார். குறித்த யாசகர் பொகவந்தலாவ பகுதியிலிருந்தே நேற்றிரவு (20) தலவாக்கலைக்கு வந்துள்ளார். இவ்வாறு வருகை தந்து பஸ் ...

மேலும்..

மதுபானசாலைகள் பொலிஸாரின் தலையீட்டுடன் இழுத்து மூடப்பட்டன!!!

க.கிஷாந்தன் மலையக நகரங்களிலுள்ள மதுபானசாலைகள் பொலிஸாரின் தலையீட்டுடன் இன்று இழுத்து மூடப்பட்டன. கடந்த 20 ஆம் திகதி முதல் ஊரடங்கு சட்டம் இலகுபடுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் இக்காலப்பகுதியில் மதுபானசாலைகளை திறப்பதற்கும் அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இதனால் நேற்றைய தினம் மதுபான விற்பனை நிலையங்களுக்கு முன்னால் பெருமளவானவர்கள் அணிதிரண்டு நின்றனர். ...

மேலும்..

களவாடப்பட்ட பசுமாட்டை இறைச்சிக்காக விற்பனை செய்வதற்கு எடுத்துச்சென்ற இருவர் கைது

(க.கிஷாந்தன்) களவாடப்பட்ட பசுமாட்டை இறைச்சிக்காக விற்பனை செய்வதற்கு எடுத்துச்சென்ற இருவர் இன்று (21) கைது செய்யப்பட்டுள்ளனர் என்று தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர். தலவாக்கலை நகரத்தின் ஊடாக பயணித்த வேளையிலேயே சந்தேகத்தின் அடிப்படையில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அதன்பின்னர் மேற்கொள்ளப்பட்ட விசாரணையிலேயே விடயம் அம்பலமாகியுள்ளது. இருவரும் தலவாக்கலை ...

மேலும்..

உணவு தட்டுப்பாடு இரட்டிப்பாகும் – உலக உணவு திட்ட அமைப்பு!

கொரோனா வைரஸ் தாக்கத்தை அடுத்து ஏற்பட்டுள்ள பொருளாதார வீழ்ச்சி காரணமாக உணவு தட்டுப்பாடு இரட்டிப்பாகும் என ஐக்கிய நாடுகள் சபையின் உலக உணவு திட்ட அமைப்பு தெரிவித்துள்ளது. உணவுத் தட்டுப்பாட்டினை எதிர்கொள்ளும் மக்களின் எண்ணிக்கை இந்த ஆண்டு கிட்டத்தட்ட இரு மடங்காக அதிகரித்து ...

மேலும்..

இங்கிலாந்தில் சுகாதார பாதுகாப்பு உடைகளுக்கு தட்டுப்பாடு!

இங்கிலாந்தில் சிகிச்சையின்போது வைத்தியர்கள் அணியும் சுகாதார பாதுகாப்பு உடைகளுக்கு தற்போது கடும் தட்டுப்பாடு நிலவுவதாக தெரிவிக்கப்படுகிறது. கொரோனா வைரஸ் பரவல் இங்கிலாந்திலும் தீவிரமாகவே உள்ள நிலையில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன்காரணமாக வைத்தியர்கள், தாதியர்கள் உள்ளிட்ட ...

மேலும்..

காய்ச்சலுக்கு பிறகு வாய்க்கசப்பை போக்க இதை சாப்பிடுங்க!

ஆல்பக்கோடா பழத்தை வாயில் போட்டால் எப்பேற்பட்ட வாந்தி உணர்வும் தலை தூக்காது என்று சொல்வார்கள் வீட்டு பெரியவர்கள். இதன் பெயர் ஆல்புக்காரா என்பதாகும். இவை பழக்கடைகளில் கிடைக்காது. நாட்டுமருந்து கடைகளில் மட்டுமே கிடைக்கும். உண்மையிலேயே இவை காய்ச்சல் வந்தவர்களின் பிணியை தீர்க்கும் ...

மேலும்..

சீனாவுக்குப் புலனாய்வு அதிகாரிகளை அனுப்பும் நோக்கம்- ட்ரம்ப் அறிப்பு

கொரோனா வைரஸ் பரவல் குறித்த உண்மைகளை அறிவதற்காக சீனாவுக்குப் புலனாய்வு அதிகாரிகளை அனுப்பிவைக்க விரும்புவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் பரவிய முறை, அதனால் பாதிக்கப்பட்டோர் தொகை, உயிரிழந்தோர் எண்ணிக்கை ஆகிய உண்மைத் தகவல்களைக் கூறாமல் சீனா மூடிமறைப்பதாக ...

மேலும்..

ஆதரவற்ற குழந்தைகளுக்காக துடுப்பு மட்டையை ஏலம் விடவுள்ள ராகுல்

ஆதரவற்ற குழந்தைகளுக்கு உதவுவதற்காக ‘உலகக் கிண்ணம் 2019’ தொடரில் பயன்படுத்திய துடுப்பு மட்டையை ஏலத்துக்கு விட இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர் கே.எல். ராகுல் முடிவு செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக உயர்ந்துள்ள கே.எல்.ராகுல் துடுப்பாட்டம், விக்கெட் காப்பு ...

மேலும்..

ஈஸ்டர் தாக்குதலில் பலியானோர்களுக்கு யாழ் முஸ்லிம் இளைஞர் கழகம் அஞ்சலி செலுத்தினர். 

கடந்த வருடம் 2019.04.21 ஆம் திகதி இலங்கைத் திருநாட்டில் இடம்பெற்ற பயங்கரவாத குண்டுத் தாக்குதலில் பலியான அப்பாவி மக்கள், குழந்தைகளை நினைவுபடுத்தி மரியாதையுடன் கூடிய அஞ்சலி செலுத்தும் நிகழ்வு  இன்று (21) யாழ் முஸ்லிம் இளைஞர் கழக அங்கத்தவர்களால் முன்னெடுக்கப்பட்டது. குறித்த பயங்கரவாத ...

மேலும்..

முல்லைத்தீவில் நீர்த் தொட்டியில் தவறிவீழ்ந்த சிறுமி உயிரிழப்பு!

முல்லைத்தீவு, துணுக்காய் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட மல்லாவிப் பகுதியில் நீர்த்தொட்டியில் வீழ்ந்த சிறுமி உயிரிழந்துள்ளார். மல்லாவி, வளநகர் மேற்கு 5ஆம் யுனிட் பகுதியில் நேற்று முன்தினம் (ஞாயிற்றுக்கிழமை) இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதன்போது, இராகுலன் துசானி என்ற 3 வயது சிறுமியே வீட்டில் உள்ள நீர்த் ...

மேலும்..

கொழும்பில் 1,010 பேரை தனிமைப்படுத்த நடவடிக்கை

கொழும்பு 12 பண்டாரநாயக்க மாவத்தையில் உள்ள 242 குடும்பங்களைச் சேர்ந்த 1,010 பேர் இராணுவ தனிமைப்படுத்தல் மையங்களுக்கு அனுப்பப்படுவார்கள் என இராணுவ தளபதி தெரிவித்துள்ளார். நேற்று (திங்கட்கிழமை) பதிவாகிய 34 புதிய கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் கொழும்பு 12 இல் உள்ள பண்டாரநாயக்க ...

மேலும்..

க.பொ.த உயர்தரப் பரீட்சை – ஆணையாளரிடம் முக்கிய கோரிக்கை!

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையை ஓகஸ்ட் மாதம் நடத்துவதாயின், அதற்காக முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்கள் குறித்து அறிவிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் பரீட்சைகள் ஆணையாளருக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே இவ்வாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இம்முறை உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களின் ...

மேலும்..

மேலும் 05 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று…!

மேலும் 05 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார். குறித்த 05 பேரும் கொழும்பு 12 பண்டாரநாயக்க மாவத்தை பகுதியைச் சேர்ந்தவர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட மொத்த நோயாளிகளின் ...

மேலும்..

குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 100 ஆக உயர்வு!

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 02 பேர் உட்பட குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 100 ஆக உயர்வடைந்துள்ளது என சுகாதார மேம்பாட்டு பணியகம் அறிவித்துள்ளது. இன்று (செவ்வாய்க்கிழமை) நிலவரப்படி கொழும்பு 12 பண்டாரநாயக்க மாவத்தை பகுதியைச் சேர்ந்த மேலும் 05 பேருக்கு கொரோனா ...

மேலும்..

ஊரடங்கு தளர்வானது பலரது தியாகங்களை பயனற்றதாக்கியுள்ளது. முதல்வர் ஆனல்ட் ஆதங்கம்

உலகையே அச்சுறுத்திவரும் கொரோனா தாக்கத்திலிருந்து நாட்டையும், நாட்டு மக்களையும் பாதுகாக்கும் வகையில் இடைவிடாது தொடரப்பட்ட ஊரடங்கானது இன்று யாழிலும்  விலக்கப்பட்டது. இக்கொடிய வைரஸ் தாக்கத்திலிருந்து நாட்டு மக்களை பாதுகாப்பதற்கு சுகாதாரத் துறையினர், வைத்தியர்கள் மற்றும் பாதுகாப்பு தரப்பினர் வழங்கிக்கொண்டிருக்கும் தியாகங்களும், சேவைகளும் ஊரடங்கு ...

மேலும்..

தீவகத்துக்கு உதவிய நல்லுள்ளங்களுக்கு நன்றி! – க.நாவலன்

காலத்தினால் செய்த நன்றி சிறிது எனினும் ஞலத்தின் மாணப் பெரிது! அதாவது தக்க காலத்தில் ஒருவன் செய்த உதவி சிறியதாக இருந்தாலும், அதன் தன்மையை ஆராய்ந்தால் உலகத்தைவிட மிகப்பெரியதாகும். அசாதாரண சூழ்நிலையை உணர்ந்து எம் மக்களின் அன்றாட வாழ்க்கையை கொண்டு செல்ல பலவழிகளிலும் இருந்து ...

மேலும்..

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் மரணித்தவர்கள் நினைவாக வவுனியா மாவட்ட செயலகத்தில் அஞ்சலி…

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் மரணித்தவர்களின் ஓராண்டு பூர்த்தியை முன்னிட்டு நினைவு அஞ்சலி நிகழ்வு வவுனியா மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. மேலதிக அரசாங்க அதிபர் தி.திரேஸ்குமார் தலைமையில் நடைபெற்ற அஞ்சலி நிகழ்வில் மாவட்ட செயலக அதிகாரிகள், உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் எனப் பலரும் கலந்து கொண்டு ...

மேலும்..

தற்கொலை குண்டுதாக்குதல்களில் கொல்லப்பட்ட மக்களை நினைவுகூரும் வகையில் மலையகத்திலும் ஆன்மீக வழிபாடுகள்!!!

(க.கிஷாந்தன்) இலங்கையில்  கடந்த வருடம் இடம்பெற்ற தற்கொலை குண்டுதாக்குதல்களில் கொல்லப்பட்ட மக்களை  நினைவுகூரும் வகையில் மலையகத்திலும் இன்று (21.04.2020)  ஆன்மீக வழிபாடுகள் நடைபெற்றன. காலை 8.45 மணிக்கு தேவாலயங்களில் மணியோசை எழுப்பி வழிபாடுகளில் ஈடுபடுமாறும், வீடுகளில் விளக்கேற்றி இருநிமிடங்கள் மௌன அஞ்சலி செலுத்துமாறும் பேராயர் ...

மேலும்..

இதை பார்த்தாவது தேவர்மகன் 2 படத்துக்கு ஓகே சொல்வாரா தல.. வைரலாகும் அஜித்தின் கொல மாஸ் கெட்டப்

தமிழ் சினிமாவில் அதிக தோல்வியை கொடுத்த நடிகருக்கு எப்படி இவ்வளவு ரசிகர் பட்டாளம் உருவானது என மற்ற மொழி நடிகர்களும் யோசித்து மண்டையை பிய்த்துக் கொள்ளும் அளவுக்கு மாஸ் காட்டி வருபவர் தல அஜித். இவரது ஒவ்வொரு படங்களும் வெளியாகும் போதும் தமிழ்நாடு ...

மேலும்..

சினிமாவில் அடுத்த விவாகரத்து.. சுப்பிரமணியபுரம் ஸ்வாதி செய்த செயலால் அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள்

தமிழ் சினிமாவில் சுப்ரமணியபுரம் படத்தின் மூலம் ரசிகர்களை கொள்ளை கொண்டவர் சுவாதி. அதன்பிறகு போராளி, யாக்கை போன்ற படங்களில் நடித்தாலும் முன்னணி நாயகியாக வலம் வர முடியவில்லை. தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் கைவசம் சில படங்களை வைத்துக்கொண்டு தனக்கென ஒரு ...

மேலும்..

ஊரடங்கில் பறித்த வாகனங்களுக்கு நட்ட ஈடு: பொலீஸ் திணைக்களத்தை விற்க நேரிடலாம்! ராமநாயக்கவின் வழக்கில் எச்சரித்தார் சுமன்

நுகேகொடை நீதிவான் நீதி மன்றத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் சிங்கள நடி கருமான ரஞ்சன் ராமநாயக்கா நேற்று முன்னிலைப்படுத்தப் பட்டார். புதுவருடப் பிறப்பன்று ஊரடங்கு வேளையில் ரஞ்சன் ராமநாயக்காவை தேடி வந்த ஒருவரைப் பொலிஸார் மறித்தனர். அவரை ஏன் மறித்தீர்கள் என்று அந்தப் பொலிஸாரு ...

மேலும்..

இதை செஞ்சாதான் மாஸ்டர் ட்ரெய்லர் வருமாம்.. செய்தி கேட்டு கவலையில் ரசிகர்கள்

தளபதி விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள மாஸ்டர் படத்தின் டிரைலர் ஏப்ரல் 14ம் தேதி வெளியாகும் என அரசல் புரசலாக செய்திகள் வெளிவந்தன. ஏப்ரல் 9ஆம் தேதி விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் மாஸ்டர் படம் வெளியாக இருந்தது. ஆனால் ...

மேலும்..