May 1, 2020 அன்று பிரசுரிக்கப்பட்டவை

முழங்காவில் தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த மற்றுமொருவருக்கு கொரோனா!

முழங்காவில் தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த ஒருவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இன்று(வெள்ளிக்கிழமை) அனுமதிக்கப்பட்ட நிலையில் அவருக்கு கோரோனா தொற்றுள்ளமை பரிசோதனையின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த தகவலை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் மருத்துவர் த.சத்தியமூர்த்தி வெளியிட்டுள்ளார். தென்னிலங்கையைச் சேர்ந்த 40 வயதுடைய ஒருவருக்கே ...

மேலும்..

ஊரடங்கு குறித்த புதிய அறிவிப்பினை வெளியிட்டது ஜனாதிபதி ஊடகப்பிரிவு!

கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களில் ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் நிலையில், மக்களின் வாழ்க்கையை இயல்பு நிலைக்கு கொண்டுவருவதற்கும், நிறுவனங்களின் செயற்பாடுகளை ஆரம்பிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் ஊடகப்பிரிவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய எதிர்வரும் மே ...

மேலும்..

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 690 ஆக அதிகரிப்பு!

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார். இதன்காரணமாக மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 690 ஆக அதிகரித்துள்ளது.

மேலும்..

ஜேர்மன் நம்மவர் உணவகத்தினால் தெல்லிப்பழையில் உதவித் திட்டம்!

ஜேர்மன் நம்மவர் உணவகத்தின் அனுசரணையில் ஆகீசன், கௌரீசன் ஆகியோரின் ஒழுங்கமைப்பில் தெல்லிப்பழையில் துர்க்காபுரம், தந்தை செல்வா புரம் பகுதிகளில் உள்ள 23 குடும்பங்களுக்கு தலா சுமார் 2 ஆயிரத்து 500 ரூபா பெறுமதியான உலர் உணவுப் பொதிகள் வழங்கிவைக்கப்பட்டன. இந்தப் பொருள்களை வலி.வடக்கு ...

மேலும்..

விடுமுறையில் சென்ற கடற்படை தீவகத்தில் தனிமைப்படுத்தலில்! வெளியே செல்லாதமையை டக்ளஸ், அங்கஜன் உறுதிப்படுத்தவேண்டும்

தென்னிலங்கைக்கு விமுறையில் சென்ற கடற்படையினரை தீவகத்திலுள்ள கடற்படை முகாம்களில் தனிமைப்படுத்தியுள்ளார்கள். அவர்கள் முகாம்களைவிட்டு வெளியேறாமையை அரசில் அங்கம் வகிக்கின்ற எமது தமிழ் அரசியல்வாதிகளான டக்ளஸ், அங்கஜன் போன்றோர் உத்தரவாதமளிக்கவேண்டும். இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் இளைஞர் அணி மத்தியகுழு உறுப்பினர் கருணாகரன் குணாளன் ...

மேலும்..

ஒன்ராறியோ மானிலத்தை மீளியங்கு நிலைக்குக் கொண்டுவருவதற்கான ஆயத்தங்கள் மேற்க்கெடுப்பு ஒன்ராறியோ அரசு! ஊழியர்களின் சுகாதார பாதுகாப்பை உறுதிப்படுத்தாவும் முயற்சிகள்.

ஒன்ராறியோ மானிலத்தை மீளியங்கு நிலைக்குக் கொண்டுவருவதற்கான ஆயத்தங்களை ஒன்ராறியோ அரசு மேற்கொண்டு வருகின்றது. தொழிலகங்கள் மீள இயங்க ஆரம்பிக்கும்போது, கொவிட்-19 நோய்த்தொற்றிலிருந்து தமது ஊழியர்களைப் பாதுகாப்பதற்குத் தேவையான வழிகாட்டல் விதிமுறைகளைத் தொழிலக முதலாளிகள் அறிந்திருப்பதுடன் அவற்றைக் இற்றைவரைக்கும் சில்லறை விற்பனை வணிகங்கள், உணவு ...

மேலும்..

தொழிலாளர் தினத்தில் பாரிய பட்டத்தை தயாரித்த இளைஞர்கள்

பாறுக் ஷிஹான் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக வீட்டுக்குள்ளேயே முடங்கியுள்ள இளைஞர்களும், சிறுவர்களும்,  முதியவர்களும் தங்களது வீட்டு மேல்மாடியில் இருந்து கொண்டு பட்டம் ஏற்றுவது கிழக்கு மாகாணத்தின் அதிகமான பிரதேசங்களில் பிரதான பொழுதுபோக்காக காணப்படுகிறது.குறிப்பாக  ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள நிலையிலும் அச்சட்டம் ...

மேலும்..

தொழிலாளர் வயிற்றில் அடித்து கல்முனை மாநகரசபை ஆணையாளர் சர்வாதிகார போக்குடன் செயல்படுகிறார்: எஸ்.லோகநாதன்

பாறுக் ஷிஹான் தொழிலாளர் வயிற்றில் அடித்து  கல்முனை மாநகரசபை ஆணையாளர் சர்வாதிகார போக்குடன் செயல்படுவதாக என அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கத்தின் தலைவர் எஸ்.லோகநாதன் தெரிவித்தார். அம்பாறை மாவட்டம்   காரைதீவு பகுதியில் வெள்ளிக்கிழமை(1)  மதியம் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்து ...

மேலும்..

மேலும் மூன்று கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்!

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் மூவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதன்காரணமாக மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 674 ஆக அதிகரித்துள்ளது.

மேலும்..

தொழிலாளர் தினத்தில் தொழிலாளரின் வாழ்வை பாதுகாக்க வேண்டிய கடமைப்பாடு எமக்கு இருக்கின்றது: கல்முனை சுபத்திராம விகாரையின் விகாராதிபதி

பாறுக் ஷிஹான் கொரோனா  வைரஸ் தாக்கத்தின் காரணமாக எமது நாட்டில் தொழிலாளர்கள் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒரு விடயம் தொழிலாளர் தினத்தில் இந்த தொழிலாளர் தின நிகழ்வை சந்தோசமாக கொண்டாட முடியாத சூழ்நிலையிலும் அவர்களது வாழ்வே பாதுகாக்க வேண்டிய ...

மேலும்..

யாழில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டவர்களில் மேலும் மூவர் குணமடைந்தனர்!

யாழ்ப்பாணத்தில் கொரோனா பரிசோதனைகளின்போது தொற்று கண்டறியப்பட்டிருந்த 22 பேரில் 9 பேர் இதுவரை குணமடைந்துள்ளனர். இறுதியாக வெலிகந்த வைத்தியசாலையில் இருந்து குணமடைந்த மூவர் யாழ்ப்பாணத்தில் அவர்களது வீடுகளுக்குத் திரும்புகின்றனர் என யாழ்.போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி இன்று (வெள்ளிக்கிழமை) குறிப்பிட்டார். இந்நிலையில் ஏற்கனவே 6 ...

மேலும்..

வவுனியா குடியிருப்பு கலாசார மண்டபத்தை தமது தங்குமிடமாக்கிய பொலிஸார்

வவுனியாவில் கடமையில் ஈடுபட்டுவரும் பொலிஸாரின் தங்குமிடமாக வவுனியா குடியிருப்பு கலாசார மண்டபம் நேற்றிலிருந்து செயற்பட்டு வருகின்றது. கொரோனோ வைரஸ் தாக்கத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில் வவுனியாவில் பல்வேறு நடவடிக்கைகள் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், குறித்த கடமையில் ஈடுபட்டுவரும் பொலிஸார், பொதுமக்கள் மற்றும் பல்வேறு தரப்புக்களுடனும் ...

மேலும்..

மட்டக்களப்பில் இளம் குடும்பஸ்தர் சடலமாக மீட்பு!

மட்டக்களப்பு, கல்குடா பொலிஸ் பிரிவின் பேத்தாழை பகுதியில் எரிந்த நிலையில் இளம் குடும்பஸ்தரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பேத்தாழை மயானத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) இளம் குடும்பஸ்த்தர் தனக்குத்தானே தீ மூட்டியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த பகுதியைச் ச.புஸ்பகுமார் வயது (22) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக ...

மேலும்..

மேலும் இரண்டு கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்!

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் இருவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதன்காரணமாக மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 668 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 157 ஆக அதிகரித்துள்ளதுடன், இதுவரையில் 7 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும்..

ஒலுவில் தனிமைப்படுத்தல் முகாமில் நால்வருக்கு கொரோனா தொற்று-வைத்தியர் சுகுணன்

அம்பாறை, ஒலுவில் தனிமைப்படுத்தல் முகாமில் மேலும் நால்வருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்  வைத்தியர் ஜீ.சுகுணன் தெரிவித்தார். இந்நிலையில் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நால்வரும் சிகிச்சைககாக காத்தான்குடி வைத்தியசாலைக்கு நேற்று (வியாழக்கிழமை) இரவு அனுப்பிவைக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார். மேலும், “கடற்படையினரால் ...

மேலும்..

கொரோனாவிலிருந்து மேலும் மூவர் மீண்டனர்!

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்த மேலும் மூவர் குணமடைந்துள்ளனர். இதன்காரணமாக நாட்டில் இதுவரையில் 157 முழுமையாக கொரோனாவிலிருந்து மீண்டுள்ளனர். இதேவேளை, நாட்டில் இதுவரையில் 666 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், 7 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும்..

வடமராட்சிக் கிழக்கில் பொலிஸாரின் தாக்குதலில் மூவர் காயம்- அங்கு சிறிது பதற்ற நிலை!

யாழ்ப்பாணம், வடமராட்சிக் கிழக்கு குடத்தனை மாளிகைத் திடல் கிராமத்தில் பொலிஸாரின் தாக்குதலில் மூவர் காயம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு அம்பியூலன்ஸ் மூலம் அவர்கள் அனுப்பப்பட்டிருப்பதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். இந்தச் சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது, குறித்த மாளிகைத் திடல் ...

மேலும்..

மீனவர்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கக்கூடிய பொறுப்பு கடற்றொழில் அமைச்சுக்கு இருக்கின்றது: எஸ்.லோகநாதன்

பாறுக் ஷிஹான் ஊரடங்கு சட்டம் காரணமாக கடலை நம்பி வாழ்க்கை நடத்தும் மக்களது வாழ்வாதாரம் முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது அவர்களது வாழ்க்கையும் பாதுகாக்கக்கூடிய பொறுப்பு கடற்றொழில் அமைச்சுக்கு இருக்கின்றது என அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கத்தின் தலைவர் எஸ்.லோகநாதன் தெரிவித்தார். அம்பாறை மாவட்டம் ...

மேலும்..

கேப்பாப்பிலவு தனிமைப்படுத்தல் நிலையத்திலிருந்தவர் திடீர் சாவு!

முல்லைத்தீவு,  கேப்பாப்பிலவு விமானப்படை தளத்தில் அமைக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் நிலையத்தில் கண்காணிக்கப்பட்டு வந்த வயோதிபர் ஒருவர்  இன்று காலை உயிரிழந்துள்ளார். திடீரென அவருக்கு ஏற்பட்ட சுகயீனம் காரணமாக அவர் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு எடுத்துவரப்பட்டபோது உயிரிழந்துள்ளார் குறித்த வயோதிபர் உயிரிழந்தமைக்காண காரணங்கள் இதுவரை வெளியிடப்படாத நிலையில் ...

மேலும்..

சீன வென்டிலேட்டர்களை பயன்படுத்தினால் மரணம் நிச்சயம்: பிரித்தானிய மருத்துவர்கள் எச்சரிக்கை!

சீனாவிடமிருந்து கொள்வனவு செய்யப்பட்ட செயற்கை சுவாச கருவிகளை (வென்டிலேட்டர்) பயன்படுத்தினால், ‘மரணம் உட்பட குறிப்பிடத்தக்க நோயாளிகளுக்கு தீங்கு விளைவிக்கப்படும்’ என பிரித்தானிய மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். சீனாவின் முக்கிய வென்டிலேட்டர் உற்பத்தி நிறுவனங்களின் ஒன்றான ‘பெய்ஜிங் ஏயன்மெட் கோ லிமிடெட்’ நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட ...

மேலும்..

டெஸ்ட், ரி-20 கிரிக்கெட்டில் அவுஸ்ரேலியா முதலிடம்: அணிகளின் புதிய தரவரிசைப் பட்டியல் வெளியீடு!

கிரிக்கெட் இரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த டெஸ்ட், ஒருநாள் மற்றும் ரி-20 அணிகளின் தரவரிசைப் பட்டியலை, சர்வதேச கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ளது. ஒவ்வொரு தொடருக்கும் பிறகு, சிறப்பாக விளையாடும் அணிகள் மற்றும் வீரர்களின் தரவரிசைப் பட்டியலை ஐ.சி.சி. வெளியிட்டு வருகிறது. எனினும், தற்போது கொரோனா ...

மேலும்..

கனடாவில் கொரோனா வைரஸ் தொற்று ஒரேநாளில் 188பேர் உயிரிழப்பு- 1639பேர் பாதிப்பு!

கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால் ஒரேநாளில் 188பேர் உயிரிழந்துள்ளதோடு, 1639பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இது நேற்றைய (வியாழக்கிழமை) நிலவரம் ஆகும். இதன்மூலம் கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை, 3184ஆக உயர்வடைந்துள்ளது. மேலும், கொடிய கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால் ...

மேலும்..

ஒரு கோடி ரூபா பெறுமதியான ஹெரோயினுடன் 3 இளைஞர்கள் – சி.ஐ.டியினரிடம் சிக்கினர்

களுத்துறைப் பகுதியில் ஒரு கிலோ கிராம் ஹெரொயின் போதைப்பொருளுடன் மூன்று இளைஞர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். களுத்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மடவல பகுதியில் இன்று அதிகாலை 3.20 மணியளவில் குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைக்கப் பெற்ற இரகசியத் தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போதே சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்று ...

மேலும்..

வவுனியாவில் இருந்து டுபாய் நாட்டுக்கு பப்பாசி ஏற்றுமதி!

வவுனியாநிருபர் வவுனியாவில் உள்ள பழச் செய்கையாளர்களிடம் கொள்வனவு செய்யப்பட்ட பப்பாசிகளை டுபாய் நாட்டுக்கு அனுப்புவதற்கான நடவடிக்கை ஆரம்பி வைக்கப்பட்டது. வவுனியா, பம்பைமடு கமநல அபிவிருத்திணைக்களப் பிரிவில் இந் நிகழ்வு இன்று இடம்பெற்றது. மாவட்ட கடநல அபிவிருத்தி திணைக்கள உதவிப் பணிப்பாளர் இ.விஜயகுமார் தலைமையில் நடைபெற்ற ...

மேலும்..

ஒலுவில் தனிமைப்படுத்தல் முகாமில் நால்வருக்கு கொரோனா தொற்று-வைத்தியர் சுகுணன்

அம்பாறை, ஒலுவில் தனிமைப்படுத்தல் முகாமில் மேலும் நால்வருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்  வைத்தியர் ஜீ.சுகுணன் தெரிவித்தார். இந்நிலையில் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நால்வரும் சிகிச்சைககாக காத்தான்குடி வைத்தியசாலைக்கு நேற்று (வியாழக்கிழமை) இரவு அனுப்பிவைக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார். மேலும், “கடற்படையினரால் ...

மேலும்..

மாநகர முதல்வரின் தொழிலாளர் தின வாழ்த்துச் செய்தி….

உலகெங்கும் வாழும் உழைக்கும் மக்களை நினைவு கூரும் ஓர் நன்நாளாக ஒவ்வொரு வருடமும் மே 1ஆம் திகதி சர்வதேச மே தினம் (தொழிலாளர் தினம்) அமைந்திருக்கின்றது. இந் நன்நாளில் உழைப்பாளர்கள் அனைவருக்கும் எனது தொழிலாளர் தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன். இன்றைய நாளில் ...

மேலும்..

மஹிந்தவின் கூட்டத்தை புறக்கணித்தது ஜே.வி.பி.

அலரி மாளிகையில் எதிர்வரும் திங்கட்கிழமை பிரதமர் மஹிந்த ராஜபக்ச தலைமையில் நடைபெறவுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான கூட்டத்தை மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) புறக்கணித்துள்ளது. இந்தப் புறக்கணிப்பை ஜே.வி.பியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க பிரதமர் மஹிந்த ராஜபக்சவுக்கு இன்று கடிதம் மூலம் அறிவித்துள்ளார். "நாளுமன்றம் ...

மேலும்..

வடமராட்சி கிழக்கில் பொலிஸ், அதிரடிப்படை கொலை வெறியாட்டம்!

வடமராட்சி கிழக்கு, குடத்தனை - மாளிகைத்திடல் அம்மன் கோயிலடிப் பகுதியிலுள்ள வீடொன்றுக்குள் துப்பாக்கிகள் மற்றும் கொட்டன்களுடன் இன்று காலை புகுந்த பொலிஸாா் மற்றும் விசேட அதிரடிப் படையினர் ஆகியோர் அந்த வீட்டிலிருந்தவா்கள் மீதும், அயல் வீட்டவா்கள் மீதும் நடத்திய கொலைவெறித் தாக்குதலில் ...

மேலும்..

கந்தளாயில் மறை இறைச்சி, துவக்கு,தேன் மற்றும் இரும்புகளுடன் 31 பேர் கைது.

எப்.முபாரக்  திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய் வன ஜீவராசி பாதுகாப்பு பிரிவுக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமான செயற்பாடுகளில் ஈடுபட்ட 31 சந்தேக நபர்களை நேற்றிரவு(30) கைது செய்துள்ளதாக கந்தளாய் வனஜீவராசி பாதுகாப்பு பிரிவினர் தெரிவிக்கின்றனர். சந்தேக நபர்களிடமிருந்து இரண்டு சட்டவிரோத துப்பாக்கிகளும்,தேன் போத்தல்களும்,மறை இறைச்சி வகைகள் மற்றும் ...

மேலும்..

பொலனறுவையில் கற்பாறைக்கு வெடி வைத்தவர் பலி!

பொலனறுவையில் கற்களை உடைப்பதற்காக வைக்கப்பட்ட வெடியில் அகப்பட்டு ஒருவர் உயிரிழந்துள்ளார். பொலனறுவை, கலஹகல பிரதேசத்தில் நேற்று மாலை இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த பிரதேசத்தில் அமைந்துள்ள கருங்கல் அகழும் இடத்தில் கருங்கற்களை உடைப்பதற்காக குறித்த நபர் கல் வெடி வைத்துக் கொண்டிருந்துள்ளார். இதன்போது, அக்கல் ...

மேலும்..

ஜுன் 20ஆம் திகதி தேர்தல் வேண்டாம் – உயர்நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனு

நாட்டின் தற்போதைய சூழ்நிலையைக் கருத்தில்கொண்டு, எதிர்வரும் ஜுன் 20 ஆம் திகதியன்று நடத்தத் திட்டமிடப்பட்டுள்ள நாடாளுமன்றத் தேர்தலை ஒத்திவைக்குமாறு உத்தரவிடக் கோரி உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது கொழும்பு மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் சரித்தா மைத்ரி குணரத்ன ...

மேலும்..

அரசியல் கட்சிகளின் செயலாளர்களை சந்திக்கின்றது தேர்தல்கள் ஆணைக்குழு!

நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடவுள்ள அரசியல் கட்சிகளின் செயலாளர்கள் மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு இடையிலான கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது. குறித்த கலந்துரையாடல் நாளை காலை 11.15 மணிக்கு தேர்தல்கள் செயலகத்தில் இடம்பெறவுள்ளது. இந்தக் கலந்துரையாடலில் ஒரு அரசியல் கட்சியிலிருந்து ஒரு பிரதிநிதியை மாத்திரம் கலந்துகொள்ளச் ...

மேலும்..

தேசிய வெசாக் வாரம் பிரகடனம்!

எதிர்வரும் 4 ஆம் திகதி முதல் 8 ஆம் திகதி வரை தேசிய வெசாக் வாரம் பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. பௌத்த அலுவல்கள் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெசாக் பௌர்ணமி தினமான எதிர்வரும் 7 ஆம் திகதி விசேட நிகழ்வுகள் இடம்பெறவுள்ளதாகவும் ...

மேலும்..

கொரோனாவுக்கு எதிராக போராடும் படையினரை விமர்சிப்பது கவலைக்குரியது- சங்கரத்ன தேரர்

வைத்தியர்கள், தாதியர்கள், படையினரை கடவுள்கள் என போற்றியவர்கள் தான் இன்று மோசமானவர்கள் என விமர்சிக்கிறார்கள் என கல்முனை சுபத்திராம விகாரையின் விகாராதிபதி சங்கைக்குரிய ரண்முத்துக்கல சங்கரத்ன தேரர் தெரிவித்தார். கல்முனை சுபத்திராம விகாரையில் தொழிலாளர் தினம் தொடர்பாக செய்தியாளர்களுக்கு இன்று (வெள்ளிக்கிழமை) கருத்துத் ...

மேலும்..

வவுனியா, பம்பைமடுவில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள 9 பேரிடம் பரிசோதனை!

வவுனியா, பம்பைமடு இராணுவ முகாமில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா வைரஸ் தனிமைப்படுத்தல் முகாமில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள வவுனியா மகாகச்சகொடியைச் சேர்ந்த 9 பேரிடம் பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. குறித்த 9 பேரிடமும் சுகாதார பரிசோதகர்களால் நேற்று (வியாழக்கிழமை) மாலை பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதுடன் அவர்களிடம் பெறப்பட்ட ...

மேலும்..

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையில் மேலும் அதிகரிப்பு

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார். இதன்காரணமாக மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 666 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 154 ஆக அதிகரித்துள்ளதுடன், இதுவரையில் 7 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும்..

கொரோனாவுக்கு எதிராகப் போராடும் அனைவரையம் சிரம்தாழ்த்தி வணங்குகிறோம்- மே தினச் செய்தியில் அங்கஜன்

உலக தொழிலாளர் தினத்தன்று கொவிட்-19 நோய் தொற்றுக்கு எதிராகப் போராடும் அனைவருக்கும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் யாழ். மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான அங்கஜன் இராமநாதன் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். அந்தவகையில், சுகாதாரப் பிரிவினர், பாதுகாப்புத் தரப்பினர், அரச ஊழியர்கள் உட்பட அனைவரும் ...

மேலும்..

உலகில் அருகிவரும் ஆமை இனமான ‘புலி ஆமை’ திருமலை கடலில் கரையொதுங்கியது!

உலகில் அருகிவரும் ஆமை இனங்களில் ஒன்றான ‘புலி ஆமை’ இனத்தினைக் சேர்ந்த கடல் ஆமை ஒன்று திருகோணமலை – கிண்ணியா கடற்கரையில் உயிரிழந்த நிலையில் கரையொதுங்கியிருந்தது. குறித்த ஆமையானது இன்று (வெள்ளிக்கிழமை) காலை கரை ஒதுங்கியதாக தெரிவிக்கப்படுவதோடு சம்பவ இடத்திற்கு வருகைதந்த வனஜீவராசிகள் ...

மேலும்..

கலைக்கப்பட்டுள்ள நாடாளுமன்றத்தை மீண்டும் கூட்டப்போவதில்லை – ஜனாதிபதி!

கலைக்கப்பட்டுள்ள நாடாளுமன்றத்தை மீண்டும் கூட்டப்போவதில்லை என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தை மீண்டும் கூட்டவேண்டும் என கோரிக்கை விடுத்து எதிர்கட்சிகளின் தலைவர்கள் அனுப்பியிருந்த கடிதத்திற்கான பதில் கடிதத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இதனை தெரிவித்துள்ளார். எதிர்வரும் ஜீன் மாதம் 20 திகதி நாடாளுமன்ற ...

மேலும்..

அனைத்து உரிமைகளையும் வென்றெடுக்க உறுதியேற்போம்- செல்வம் மே தின வாழ்த்து!

தொழிலாளர்கள் தங்கள் தொழில் சார் உரிமைகளுக்காக மட்டும் போராடாது அடக்குமுறை, சர்வாதிகாரத்தை எதிர்த்தும் இரத்தம் சிந்திப் போராடினார்கள் என வன்னி மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். இந்நிலையில் அனைத்து உரிமைகளையும் வென்றெடுக்க தொழிலாளர் தினமான இந்நாளில் உறுதியெடுப்போம் என ...

மேலும்..

கொரோனாவினால் இரண்டு இலட்சம் தனியார் துறை ஊழியர்கள் தொழிலை இழந்துள்ளனர்!

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக தனியார் துறை ஊழியர்கள் இரண்டு இலட்சம் பேர் தொழிலை இழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தனியார் துறை ஊழியர்கள் சங்கத்தின் தலைவர் வசந்த சமரசிங்க இதனைத் தெரிவித்துள்ளார். இந்த நிலைமை எதிர்வரும் இரண்டு மூன்று வாரங்களுக்குள் 10 முதல் 15 இலட்சம் ...

மேலும்..

மேலும் ஒரு மாதம் ஊரடங்கை நீடிப்பது குறித்து எந்தத் தீர்மானமும் இல்லை- அஜித் ரோஹன

எதிர்வரும் 31ஆம் திகதி வரை ஊரடங்கினை நீடிப்பது குறித்து இதுவரை தீர்மானம் ஏதும் எடுக்கப்படவில்லை என சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். சுகாதார அதிகாரிகளின் ஆலோசனையை அடிப்படையாக வைத்தே இது குறித்த தீர்மானம் எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அத்தியாவசிய ...

மேலும்..

நாவலப்பிட்டி நகரசபை தலைவர் உள்ளிட்ட 7 பேர் கைது!

நாவலப்பிட்டி  நகரசபைத் தலைவர் உள்ளிட்ட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தனிமைப்படுத்தல் சட்ட விதிமுறைகளை மீறும் வகையில் கினிகத்தேனை பகுதியிலுள்ள சுற்றுலா விடுதியொன்றில் சூதாட்டத்தில் ஈடுபட்டார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸாரின் முற்றுகையையடுத்து அங்கிருந்து சிலர் தப்பியோடியுள்ளனர். இந்தநிலையில் அவர்களை ...

மேலும்..

தமிழ்நாட்டில் இதுவரை இல்லாத அளவில் ஒரே நாளில் 161 பேருக்கு கொரோனா

தமிழ்நாட்டில் இதுவரை இல்லாத அளவில், ஒரே நாளில், 161 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை, கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 138 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பாதிப்பு நிலவரம், நோயாளிகள், குணமடைந்தோர் எண்ணிக்கை உள்ளிட்டவைத் ...

மேலும்..

வடக்கு ஆளுநர் பி.எம்.எஸ்.சார்ள்ஸ் மூன்று மாதங்களுக்கு விடுமுறை கோரிக்கை!

வடக்கு மாகாண ஆளுநர் பி.எம்.எஸ்.சார்ள்ஸ் மூன்று மாதங்கள் மருத்துவ விடுமுறை கோரியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் இந்த அனுமதியை அவர் கோரியுள்ளதுடன் முதலாம் திகதியான இன்று (வெள்ளிக்கிழமை) முதல் வரும் மூன்று மாதங்களுக்கு அவர் இந்த விடுப்பைக் கோரியுள்ளார். அத்துடன், ஆளுநரின் பணிகளை ...

மேலும்..

பிரதமரின் அழைப்பினை நிராகரிக்க சஜித் தரப்பு தீர்மானம்!

  பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் விடுக்கப்பட்டுள்ள அழைப்பினை நிராகரிப்பதற்கு சஜித் தரப்பு தீர்மானித்துள்ளது. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் எதிர்வரும் திங்கள் கிழமை கூட்டம் ஒன்றுக்கு வருகை தருமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அழைப்பு விடுத்திருந்தார். இந்நிலையில் சஜித் பிரேதமாச தலைமையில் நேற்று (வியாழக்கிழமை) இரவு ...

மேலும்..

உலக சுகாதார ஸ்தாபனத்தின் அறிக்கையை ஜனாதிபதி பகிரங்கப்படுத்த வேண்டும் – ரணில்

உலக சுகாதார ஸ்தாபனத்தினால் வழங்கப்பட்ட அறிக்கையை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பகிரங்கப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மே தினத்தை முன்னிட்டு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர்  ரணில் விக்ரமசிங்க இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார். உலகை ஆட்டிப் படைக்கும் கொரோனா வைரஸின் ...

மேலும்..

“ஊர்வலங்கள் மேளதாளங்கள் அன்றி உணர்வு ரீதியாக கொண்டாடுவோம்” –  மேதின செய்தியில் முன்னாள் அமைச்சர் ரிஷாட்!

தொழிலாளர் வர்க்கத்தினரின் உழைப்பு, அர்ப்பணிப்பு, வாழ்க்கைப் போராட்டங்களுக்கு விடிவு, விடுதலை கிடைக்க வேண்டுமெனக் கூறியுள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட்பதியுதீன், அதிகாரத் தொனியில் உழைப்பாளிகளை அடக்க முனைவதை ஏற்றுக்கொள்ள முடியாதெனவும் குறிப்பிட்டுள்ளார். தொழிலாளர் தினத்தை முன்னிட்டு ...

மேலும்..

வுஹானில் உள்ள ஆய்வகத்திலிருந்து தான் வைரஸ் பரவியது: ட்ரம்ப் நம்பிக்கை

உலகையே அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று, சீனாவின் வுஹானில் உள்ள ஆய்வகத்திலிருந்து பரவியது என்பதில் தனக்கு நம்பிக்கை உள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். மனித அழிவுகளை ஏற்படுத்திவரும் கொரோனா வைரஸ் தொற்று (கொவிட்-19) விவாகாரத்தில், அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே ...

மேலும்..

விருமாண்டி படத்தில் நடித்த அபிராமியா இது.. 38 வயசுல முழுசா வேற மாதிரி இருக்காங்களே

கேரளாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட நடிகை அபிராமி தென்னிந்திய மொழிகளில் கொடிகட்டிப் பறந்த நாயகி ஆவார். மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி குமரியாக ஒரு கலக்கு கலக்கியவர். 2001 ஆம் ஆண்டு வெளிவந்த வானவில் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான அபிராமி ...

மேலும்..

மே 01 – சர்வதேச தொழிலாளர் தினம் இன்று

உலக தொழிலாளர்களை கெளரவிக்கும் முகமாக இன்று உலகளாவிய ரீதியில் தொழிலாளர் தினம் அனுஷ்டிக்கப்படுகின்றது. “பாடுபட்டு உழைப்போர்க்கே இப்பார் உலகம் சொந்தம்” என்பது மூத்தோர் வாக்கு. உலகத்தின் இயக்கத்தின் அத்தனை அங்கங்களிலும் ஒரு தொழிலாளியின் முயற்சியும், அந்த முயற்சியின் வெளிப்பாடான வியர்வைத்துளிகளும் அங்கம் வகிக்கின்றன. இவ்வாறு பார் ...

மேலும்..

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் மணிவண்ணனிடம் TID விசாரணை!

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணனிடம் பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் விசாரணை மேற்கொண்டனர். கொக்குவிலில் உள்ள சட்டத்தரணி மணிவண்ணனின் வீட்டுக்கு நேற்று (வியாழக்கிழமை) பிற்பகல் 2 மணியளவில் சென்ற பயங்கரவாத விசாரணைப் பிரிவினர், சில ஆவணங்களைக் காண்பித்து ...

மேலும்..

ஒரு தடவே தான் கண்ணா மிஸ் ஆகும்.. ஒரு முடிவோட களமிறங்கும் ரஜினி.. இந்தவாட்டி தலயா? தலைவரா?

தமிழ் சினிமாவில் உள்ள முன்னணி நடிகர்கள் சமீபகாலமாக நேரடியாக படங்களை ஒரே தேதியில் வெளியிட்டு மோதிக் கொள்வதில் ஈடுபாடுகொள்வதில்லை. வசூல் பாதிக்கப்படும் என்பதால் தியேட்டர்காரர்களே இதை பெரும்பாலும் விரும்புவதில்லை. இருந்தாலும் தொடர் விடுமுறை என்றால் போட்டி போட்டுக்கொண்டு ரிலீஸ் செய்வதையும் பார்க்க முடிகிறது. அப்படித்தான் ...

மேலும்..

அமேசானில் மாஸ்டர் ரிலீசுக்கு விஜய்யின் பதில்.. காவடியின் பாரம் சுமக்கிறவனுக்குதான் தெரியும்

தளபதி விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அட்டகாசமான அதிரடி படமாக உருவாகியிருக்கிறது மாஸ்டர். ஆனால் மாஸ்டர் படம் ரிலீசில் மண்ணை அள்ளிப் போட்டது கொரானா. இருந்தாலும் படக்குழுவினர் எப்போது ஊரடங்கும் முடிவடையும் என வழிமேல் விழி வைத்துக் காத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் ...

மேலும்..

பரீட்சைகள் திணைக்களத்தினால் புதிய இணையத்தள சேவை அறிமுகம்!

பரீட்சைகள் திணைக்களத்தினால் புதிய இணையத்தள சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பரீட்சை பெறுபேற்றை அங்கீகரித்து உறுதிப்படுத்தும் ஆவணங்களை வழங்கும் நோக்கில் இந்த இணையத்தள சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கல்விப் பொதுத்தராதர சாதாரண தர பரீட்சை மற்றும் உயர்தர பரீட்சை பெறுபேறுகளை இணையத்தளத்தில் பார்வையிடுவதற்கு மேலதிகமாக இந்த ...

மேலும்..

வௌிநாடுகளில் பணிபுரியும் தொழிலாளர்கள் தொடர்பாக தகவல்களை பெற்றுக்கொள்ள தொலைபேசி சேவை!

வௌிநாடுகளில் பணிபுரியும் தொழிலாளர்கள் தொடர்பாக தகவல்களை பெற்றுக்கொள்ள 24 மணித்தியால தொலைபேசி சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று(வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அமைச்சரவை இணைப்பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன இதனை தெரிவித்துள்ளார். 1989 என்ற இலக்கத்துடன் தொடர்புகொண்டு அவர்கள் தொடர்பான ...

மேலும்..

உர இறக்குமதிக்காக 10 பில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்ய அமைச்சரவை அனுமதி!

உர இறக்குமதிக்காக 10 பில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று(வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அமைச்சரவை இணைப்பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன இதனை தெரிவித்துள்ளார். விவசாயிகளுக்கு அறுவடைக்கான விசேட கடன் பெற்றுக்கொடுக்கவும் உத்தேசிக்கப்பட்டுள்ளதாகவும் ...

மேலும்..

ட்ரோன் கெமராக்களை பயன்படுத்தி மருத்துவப் பொருட்களை விநியோகிக்க தீர்மானம்!

ட்ரோன் கெமராக்களை பயன்படுத்தி மருத்துவப் பொருட்களை விநியோகிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்காக நாடளாவிய ரீதியில் ட்ரோன் (Drone) கெமராவை இயக்குபவர்கள் தொடர்பான தரவுகளை சேகரிக்க சிவில் விமான சேவைகள் அதிகார சபை தீர்மானித்துள்ளது. ட்ரோன் கெமராவை இயக்கக்கூடிய 450 இற்கும் அதிகமானோர் பதிவுசெய்யப்பட்டுள்ளதாக சிவில் விமான ...

மேலும்..

சூதாட்டத்தில் ஈடுபட்ட நகரசபை தலைவர் உட்பட 7 பேர் கைது

(க.கிஷாந்தன்) நாவலப்பிட்டிய நகரசபை தலைவர் உட்பட 7 பேர் நேற்று (30.04.2020)  மாலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். தனிமைப்படுத்தல் சட்டவிதிமுறைகளை மீறும் வகையில் கினிகத்தேனை பகுதியிலுள்ள சுற்றுலா ஹோட்டலொன்றில் சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்த வேளையிலேயே இவர்கள் மடக்கிப்பிடிக்கப்பட்டுள்ளனர். அட்டன் பொலிஸ், ஊழல் ஒழிப்பு பிரிவுக்கு கிடைக்கப்பெற்ற ...

மேலும்..

அயர்லாந்தில் கார் விற்பனை சரிவு: ஏப்ரல் மாதத்தில் வெறும் 280 கார்கள் மட்டுமே விற்பனை!

அயர்லாந்தில் கார் விற்பனை ஏப்ரல் மாதத்தில் கிட்டத்தட்ட 96 சதவீதம் குறைந்துள்ளதாக, சமீபத்திய புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. இதனடிப்படையில் குறித்த புள்ளிவிபரங்கள், ஏப்ரல் மாதத்தில் வெறும் 280 கார்கள் மட்டுமே விற்பனையாகியுள்ளன என்பதைக் காட்டுகின்றன. கொரோனா வைரஸ் (கொவிட்-19) கட்டுப்பாடுகள் அரசாங்கத்தால் நடைமுறைப்படுத்தப்பட்ட பின்னர் மார்ச் ...

மேலும்..