May 10, 2020 அன்று பிரசுரிக்கப்பட்டவை

எப்போது தேர்தல் நடந்தாலுமே சுகாதார நடைமுறை அவசியம் – தேர்தல் ஆணைக்குழுவிடம் ஓரிரு நாட்களில் அறிக்கை கையளிப்பு

பொதுத்தேர்தலை நடத்தும்போது பின்பற்றவேண்டிய சுகாதார நடைமுறைகள் தொடர்பான பரிந்துரை அறிக்கை இன்னும் ஓரிரு நாள்களில் தேர்தல் ஆணைக்குழுவிடம் கையளிக்கப்படும் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார். பொதுத்தேர்தல் ஜூன் 20 ஆம் திகதி நடத்தப்பட்டாலோ ...

மேலும்..

எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பையடுத்து செப்டெம்பர் வரையில் தள்ளிப்போகுமா தேர்தல்?

ஜூன் மாதம் 20ஆம் திகதி நாடாளுமன்றத் தேர்தலை நடத்த முடியாமல் போனால் செப்டெம்பர் மாதம் வரையில் ஒத்திவைக்கப்படலாம் என்று நம்பகரமான வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது. தற்போதைய நெருக்கடி சூழ்நிலையைக் கருத்தில்கொண்டு குறைந்தபட்சம் செப்டெம்பர் மாதம் வரையாவது தேர்தலை பிற்போடுமாறு எதிர்க்கட்சிகள் தேர்தல் ஆணைக்குழுவிடம் ...

மேலும்..

மலேசியாவில் சிக்கியிருந்த 178 இலங்கையர் நாட்டுக்கு!

இலங்கைக்கு வர முடியாமல், மலேசியாவில் சிக்கியிருந்த இலங்கையர்கள் 178 பேரை ஏற்றிய ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸின் விசேட விமானம் கோலாலம்பூர் நகரிலிருந்து கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது. மலேசியாவின் கோலாலம்பூர் நகரிலிருந்து ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸின் UL 315 எனும் விசேட விமானம், பயணிகளுடன் ...

மேலும்..

இலங்கையில் மேலும் 8 பேருக்கு கொரோனா தொற்று!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான மேலும் 8 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இந்நிலையில் நாட்டில் மொத்தமாக வைரஸ் தொற்றுக்கு இலக்கானோரின் எண்ணிக்கை 855ஆக அதிகரித்துள்ளது.

மேலும்..

கொழும்பு, கம்பஹா மாவட்டங்களில் மறு அறிவித்தல் வரை ஊரடங்கு நீடிப்பு!

கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் மறு அறிவித்தல் வரை ஊரடங்கு தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி ஊடகப்பிரிவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. களுத்துறை மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்கள் உள்ளிட்ட ஏனைய 23 மாவட்டங்களிலும் நாளை முதல் மறு ...

மேலும்..

ஆயுதப் போராட்டத்தை கொச்சைப்படுத்திய சுமந்திரனுக்கு தமிழரசுக் கட்சி நடவடிக்கை எடுக்கவேண்டும் – கண்டிக்கிறார் செல்வம்

Capital F.M , இணையம் ஊடாக தழிழரசுக்கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் M.A சுமந்திரன் பேட்டி ஒன்றினை வெளியிட்டிருந்தது. அதில் ஒட்டுமொத்தமான ஆயுதப்போராட்டத்தினை தவறு என்று கூறுவது மன்னிக்க முடியாத குற்றமாகும். https://www.facebook.com/selvam.adaikalanathan/videos/3105123459551679/?t=4 தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவாவதற்கு காரணமாக இருந்தது ஆயுதப்போராட்டமாகும். அயுதம் ...

மேலும்..

காரைதீவு மண்ணை சேர்ந்த சொல்லிசை கலைஞர் பருவிந்தன் சிறப்பு பார்வை…

காரைதீவு மண்ணை சேர்ந்த சொல்லிசை கலைஞர் பருவிந்தன் அவர்களை அறிமுகம் செய்வதில் நாம் பெருமிதம் கொள்கின்றோம் . நம் நாட்டு இளைஞர்களுக்கு முக்கியத்தும் வழங்குவதில் நம் Tamilcnn பெரும் பங்கு வகிக்கின்றது அந்த வகையில் இளம் வயதில் தான் ஒரு சொல்லிசை கலைஞனாக ...

மேலும்..

கட்சியில் இணைய மாகாணசபை வேட்பாளர் உத்தரவாதம் கோரினார் வெள்ளிமலை: கி.துரைராசசிங்கம்

திருவாளர் ஞானமுத்து கிருஸ்ணபிள்ளை தமிழரசுக் கட்சியில் இணைவதாயின் ஏற்கனவே இருந்த கட்சியில் இருந்து நீங்கியமை தொடர்பான கடிதத்தைப் பகிரங்கப்படுத்தச் சொன்னேன் அவர் செய்யவில்லை என்பதோடு அவர் கட்சியில் இணைவதாயின் மாகாணசபை வேட்பாளர் உத்தரவாதம் கோரப்பட்டபோது அதனை உரிய நேரத்தில் தான் தீர்மானிக்க ...

மேலும்..

அரசியல் தீர்வே தமிழருக்கு முக்கியம் இனவாதிகளின் வாய்களை அடக்குவது அரசின் பொறுப்பு – மஹிந்தவிடம் சுட்டிக்காட்டினோம் என்கின்றனர் சம்பந்தன், மாவை

"தமிழ் மக்கள் எதிர்நோக்கும் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு காணப்பட வேண்டும். அதில் புதிய அரசமைப்பின் ஊடாக அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் என்பது மிக முக்கியம். இதைப் பிரதமர் மஹிந்த ராஜபக் ஷ வுடன் நடத்திய பேச்சின்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ...

மேலும்..

நாளை கூடுகின்றது அரசமைப்பு பேரவை!

அரமைப்புப் பேரவையின் விசேட கூட்டம் நாளை திங்கட்கிழமை மாலை 4 மணிக்கு சபாநாயகரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெறவுள்ளது. சபாநாயகர் கரு ஜயசூரிய அரசமைப்புப் பேரவையின் தலைவர் என்ற அடிப்படையில் நாளைய கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளார். பிரதமர் மஹிந்த ராஜபக்ச உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள், அரசமைப்புச் ...

மேலும்..

மஹிந்த விசேட அறிக்கை!

"இலங்கையில் கொரோனா வைரஸ் பரவல் குறிப்பிடத்தக்க அளவே கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், இன்னமும் முற்றாக ஒழிக்கப்படவில்லை. நாளை திங்கட்கிழமையிலிருந்து இயல்பு நிலையை ஏற்படுத்திய பின்னரும் சில இடங்களில் முடக்கல் நிலையை நடைமுறைப்படுத்த வேண்டியிருக்கும். ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்த வேண்டியிருக்கும்." - இவ்வாறு பிரதமர் மஹிந்த ...

மேலும்..

சிகையலங்கார நிலையங்களில் பத்திரிகைகளோ வானொலிகள் தொலைக்காட்சிகள் காட்சிப்படுத்த வேண்டாம் Dr.கு.சுகுணன்

பாறுக் ஷிஹான் சிகையலங்கார நிலையங்களில்  பத்திரிகைகளோ வானொலிகள் தொலைக்காட்சிகள் காட்சிப்படுத்த வேண்டாம்    என கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைப் பணிப்பாளர் கு.சுகுணன் தெரிவித்தார். அம்பாறை மாவட்ட  கொரோனா வைரஸ் தொடர்பில்   ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளிக்கும் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை(10) நண்பகல்  இடம்பெற்ற போது  மேற்கண்டவாறு ...

மேலும்..

ஊரடங்கு தளர்த்தப்படுவது பரீட்சார்த்த முயற்சியாகத்தான் ஆரம்பிக்கப்படவுள்ளது Dr.கு.சுகுணன்

பாறுக் ஷிஹான்   ஊரடங்கு தளர்த்தப்படுவது    பரீட்சார்த்த முயற்சியாகத்தான்   ஆரம்பிக்கப்படவுள்ளது. இந்த பரீட்சார்த்த முயற்சிகள் வெற்றியளிக்கும் பட்டத்தில் இறுக்கமான நடைமுறைகள் மேலும் தளர்த்தப்பட்டு அனைத்து சேவைகளும் சுமூக நிலைக்கு திரும்பும் என கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைப் பணிப்பாளர் கு.சுகுணன் தெரிவித்தார். அம்பாறை ...

மேலும்..

கொரோனாவிலிருந்து 321 பேர் குணமடைவு! – 517 பேர் சிகிச்சையில் – 116 பேர் கண்காணிப்பில்

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 61 பேர் பூரண குணமடைந்து இன்று வீடு திரும்பியுள்ளனர். இதையடுத்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 260 இலிருந்து 321 ஆக உயர்ந்துள்ளது. அந்தவகையில், இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றியதாக அடையாளம் காணப்பட்டுள்ள 847 பேரில் 09 ...

மேலும்..

கூட்டமைப்புக்காக தமிழீழத்தை தாரைவார்க்கோம்! – ராஜபக்சக்களின் சகா விமல் கூறுகிறார்

"நாட்டின் நலன் கருதி நெருக்கடியான சூழ்நிலையில் அரசுக்கு ஒத்துழைப்பு வழங்கத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் முன்வந்தமைக்காக அவர்களின் வடக்கு, கிழக்கு இணைப்புக் கனவை - சமஷ்டிக் கோட்பாட்டை - பிரபாகரனின் தமிழீழ இலட்சியத்தை அரசு நிறைவேற்றும் என்று எவரும் தப்புக்கணக்குப் போடக்கூடாது. ...

மேலும்..

திருமலையில் சுவர் இடிந்து வீழ்ந்து 4 வயது சிறுவன் பலி – 2 வயது சிறுவன் படுகாயம்

திருகோணமலை, கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதேசத்தில் வீட்டின் சுவர் இடிந்து வீழ்ந்ததில் நான்கு வயது சிறுவன் உயிரிழந்துள்ளார் எனவும், அவரது சகோதரரான இரண்டு வயது சிறுவன் படுகாயமடைந்துள்ளார் எனவும் பொலிஸார் தெரிவித்தனர். இந்தப் பரிதாப சம்பவம் கிண்ணியா 03, மாஞ்சோலைச் சேனை, ஆலீம் ...

மேலும்..

கைவிடப்பட்ட தோட்ட விடுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சி வந்த இருவர் டயகம பொலிஸாரால் கைது!

ஹட்டன் கே.சுந்தரலிங்கம் டயகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டயகம கிழக்கு தோட்டத்தில் கைவிடப்பட்ட தோட்ட விடுதியொன்றில் மிகவும் ரகசியமான முறையில் பாரிய அளவில் கள்ளச்சாராயம் ( கசிப்பு ) காய்ச்சி வந்த இருவரை டயகம பொலிஸாரால் நேற்று இரவு கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். டயகம ...

மேலும்..

ரயில் சேவைகள் நாளை ஆரம்பம்!

ரயில் பயணிகளுக்கான அனைத்து சுகாதார பாதுகாப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன எனவும், அதற்கிணங்க நாளை 11ஆம் திகதி முதல் ரயில் சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன எனவும் ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்தநிலையில் கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தில் உட்பிரவேசிக்கும் பயணிகளின் உஷ்ண நிலையைப் பரிசோதிக்கும் வகையில் ...

மேலும்..

தனிமைப்படுத்தலை மீறினால் இரு ஆண்டுகள் கடூழியச் சிறை – வழிகாட்டல்கள் அடங்கிய விசேட வர்த்தமானி நாளை வெளியாகும்

தனிமைப்படுத்தல் சட்டத்தின் விதிமுறைகளை மீறுபவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுப்பதற்கு அரசு தீர்மானித்துள்ளது. இதன்படி இந்தச் சட்டத்தை மீறும் நபருக்கு 2 வருடங்கள் கடூழியச் சிறைதண்டனை விதிக்கப்படக்கூடும் என பொலிஸ் சட்டப்பிரிவுக்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். தனிமைப்படுத்தல் ...

மேலும்..

புலிப் பல்லவி இப்போது எதற்கு? – அரசிடம் சஜித் அணி கேள்வி

"கொரோனா விவகாரத்திலும் எவ்வித சம்பந்தமும் இல்லாமல் அரசு புலிப் பல்லவி பாடிவருகின்றது. புலிகளுக்கு எதிரான போரும், கொரோனா ஒழிப்புச் சமரும் இருவேறுபட்ட விடயங்கள் என்பதை அரசு புரிந்து கொள்ளவேண்டும்." - இவ்வாறு சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்தது. "பிரதமர் மஹிந்த ...

மேலும்..

அலுவலகப் பணியாளர்களுக்கான சுகாதாரத் துறையின் அறிவுறுத்தல்

ஊரடங்கு தளர்வு காரணமாக அலுவலகங்கள் வழமைபோன்று இயங்கவுள்ள நிலையில், பணியாளர்கள் எவ்வாறான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவக் கலாநிதி ஆ.கேதீஸ்வரன் அறிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் அனுப்பி வைத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:- 1) ...

மேலும்..

ஆசிரியர்களின் ஒரு மாத சம்பளத்தை ஜனாதிபதியின் செயலாளர் கோருவது நியாயமற்றது- செல்வம்

ஆசிரியர்கள் பல்வேறு துன்ப துயரங்களுக்கு மத்தியில் வாழ்ந்து வரும் நிலையில் அவர்களுடைய ஒரு மாத சம்பளத்தை ஜனாதிபதியின் செயலாளர் கோருவது நியாயமற்றது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் கருத்துத் தெரிவிக்கையில், ...

மேலும்..

நாளை முதல் பொதுமக்கள் வீதிகளில் ஒன்றுகூட அனுமதிக்க போவதில்லை – இராணுவ தளபதி

அனைத்து மாவட்டங்களிலும் நாளை (திங்கட்கிழமை) முதல் உள்ள அரச மற்றும் தனியார் நிறுவனங்களை கட்டுப்பாடுடன் திறப்பதாக அரசு அறிவித்துள்ளது. இந்த விடயம் தொடர்பாக சற்றுமுன்னர் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்துள்ள இராணுவத் தளபதி சவேந்திர சில்வா, இந்த காலப்பகுதியில் பொதுமக்கள் பொறுப்புடன் ...

மேலும்..

மட்டக்களப்பில் கொரோனா தொற்று நீக்கி விசிறும் நடவடிக்கையில் பொலிஸார்

மட்டக்களப்பில் கொரோனா பரவலைத் தடுக்கும் செயற்றிட்டத்தில் தொற்று நீக்கி விசிறும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் மற்றும் மாநகரசபை இணைந்து நகரத்தின் பொது இடங்களில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) தொற்று நீக்கும் நடவடிக்கையை மேற்கொண்டனர். இதனடிப்படையில் நகரின் பிரதான வீதி மற்றும் கடைத் தொகுதிகள் ...

மேலும்..

கொழும்பில் இருந்து மேலும் 1200 பேர் சொந்த இடங்களுக்கு அனுப்பப்பட்டனர்..!

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவால், தமது சொந்த இடங்களுக்கு செல்ல முடியாமல் மேல் மாகாணத்தில் சிக்கியுள்ளவர்களில் மேலும் 1200 பேர் நேற்று (சனிக்கிழமை) சொந்த இடங்களுக்கு அனுப்பப்பட்டனர். கல்கிசை பொலிஸ் வலயத்தில் 10 பொலிஸ் பிரிவுகளில்  இவ்வாறு மேல் ...

மேலும்..

இயக்கச்சியில் தனிமைப்படுத்தப்பட்ட 160 பேர் இன்று விடுவிப்பு..!

கிளிநொச்சி – இயக்கச்சி 55 படையணியின் தனிமைப்படுத்தப் நிலையத்தில் தங்கவைக்கப்பட்டிருந்த 160 பேர் அவர்களது சொந்த இடங்களுக்குச் செல்ல இன்று அனுமதிக்கப்பட்டனர். கொழும்பு பண்டாரநாயக்க மாவத்தை மற்றும் வாழைத்தோட்டம் ஆகிய பகுதிகளிலிருந்து தனிமைப்படுத்தப்பட்டிருந்த 22 ஆண்களும், 138 பெண்களும் இந்த தனிமைப்படுத்தப் முகாமில் ...

மேலும்..

இயல்புநிலை திரும்புகின்றது என்றாலும் அவசியமெனில் மட்டுமே வெளியே வரவேண்டும்! யாழ். மாவட்ட செயலர் மகேசன் கோரிக்கை

"யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இரண்டு மாதங்களின் பின்னர் இயல்புநிலை திரும்புகின்றது என்றாலும், பொதுமக்கள் அத்தியாவசிய சேவைக்கு மாத்திரமே வீடுகளிலிருந்து வெளியே வரவேண்டும். ஊரடங்கு தளர்த்தப்பட்டாலும் கொரோனா ஆபத்து இன்னமும் நீங்கவில்லை என்பதை மக்கள் மனதிலிருத்த வேண்டும்." - இவ்வாறு யாழ்ப்பாண மாவட்ட செயலர் கணபதிப்பிள்ளை ...

மேலும்..

உரிய நேரத்தில் பேச்சுக்களை முன்னெடுப்போம்: இலாபம் தேடுவோருக்கு பதிலளிக்கமாட்டோம்- சம்பந்தன்

தமிழ் மக்களின் விடயங்கள் தொடர்பாக பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ள வேண்டிய தரப்பினருடன் உரிய நேரத்தில் பேச்சுக்களை முன்னெடுப்போம் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். அத்துடன், அரசியல் இலாபங்களை அடைவதற்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் செயற்பாடுகளை விமர்சிப்பவர்களுக்கு பதிலளிக்க வேண்டிய அவசியமில்லை ...

மேலும்..

காத்தான்குடி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 55 பேர் சிகிச்சையின் பின்னர் வீடுதிரும்பினர்!

கொரோனா வைரஸ் தொற்று குறித்த சந்தேகத்தின் பேரில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த 55 பேர் சிகிச்சையின் பின்னர் வீடுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். இவ்வாறு மட்டக்களப்பு, காத்தான்குடி ஆதாரவைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த 62 பேரில் 55 பேரே குணமடைந்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) வெளியேறியுள்ளனர். அத்துடன் ஏனைய 7 பேரும் ...

மேலும்..

மக்களின் வாழ்க்கையை வழமைக்கு கொண்டுவருவதற்கான விசேட வர்த்தமானி அறிவிப்பு இன்று..!

பொது மக்களின் வாழ்க்கை நிலையை வழமை நிலைக்கு கொண்டுவருவதற்கான வேலைத்திட்டம் குறித்த விசேட வர்த்தமானி இன்று (ஞாயிற்றுக்கிழமை) வெளியிடப்படவுள்ளது. பொதுமக்கள் நாளாந்த நடவடிக்கைகளை முன்னெடுத்து செல்வது மற்றும் மக்கள் பின்பற்றவேண்டிய நடைமுறைகள் குறித்து அதில் அறிவிக்கப்படும் என கூறப்படுகின்றது. தனிமைப்படுத்தல் உத்தரவு மற்றும் சட்டப்பூரவமான ...

மேலும்..

அடுத்த இரண்டு வாரங்களுக்கு பொதுப் போக்குவரத்து சேவைகளை பயன்படுத்த வேண்டாம்!

நாளை முதல் அடுத்த இரண்டு வாரங்களுக்கு பொதுப் போக்குவரத்து சேவைகளை பயன்படுத்த வேண்டாம் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க சம்பந்தப்பட்ட அமைச்சரிடம் ஆலோசனை வழங்கியுள்ளார். அத்தியாவசிய தேவைகளுக்காக அரச, தனியார் சேவைகளுக்கு செல்லும் பிரிவினருக்கு மாத்திரம் அனுமதி வழங்க ...

மேலும்..

பாடசாலைகள் மீண்டும் திறக்கப்படும்போது அவற்றை எவ்வாறு பாதுகாப்பது – விசேட சுற்றறிக்கை

கொரோனா வைரஸ் பாதிப்புக்களுக்கு மத்தியில் இரண்டாம் தவணைக்காக பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கான ஒரு முடிவு என்னும் எடுக்கப்படவில்லை கல்வி அமைச்சு கூறியுள்ளது. இந்நிலையில் பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிக்கபட்ட பின்னர் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து எவ்வாறு பாதுகாப்பது என்பதற்கான வழிமுறைகளுடன் கூடிய ஒரு ...

மேலும்..

தேர்தல் சம்பந்தமாக திங்கள்,செவ்வாய் விஷேட பேச்சுவார்த்தைகள்!

ஜே.எப்.காமிலா பேகம்-பொதுத்தேர்தல் நெருக்கடிநிலை குறித்து தேர்தல்கள் ஆணைக்குழுவில் நாளையும், நாளை மறுதினமும் விஷேட பேச்சுக்கள் நடத்தப்படவுள்ளன. அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் நாளை மறுநாள் செவ்வாய்க்கிழமை தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் மஹிந்த தேஷப்பிரியவை சந்திக்கவுள்ளனர். அதேபோல, நாளை திங்கட்கிழமை தேர்தல்கள் ஆணைக்குழு தலைவருக்கும், ஆணைக்குழு உறுப்பினர்களுக்கும் ...

மேலும்..

சுகாதார அமைச்சின் விசேட சுற்றறிக்கை வெளியாகியது..!

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக அமுல்படுத்தப்பட்டுள்ள கட்டுப்பாடுகளைதளர்த்தி பொது மக்களின் அன்றாட நடவடிக்கைகளை வழமைக்கு கொண்டுவரும் நடவடிக்கைகள்  நாளை  (திங்கட்கிழமை) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளன. இந்நிலையில் இதன்போது பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் மற்றும் சட்ட திட்டங்கள் அடங்கிய விஷேட சுற்றறிக்கை சுகாதார சேவைகள் பணிப்பாளர் ...

மேலும்..

ஊடரங்குத் தளர்வின்போது மக்கள் பின்பற்றவேண்டிய அறிவுறுத்தல்கள்

நாளை திங்கட்கிழமை தொடக்கம் ஊரடங்கு தளர்த்தப்படுவதன் காரணமாக பொதுமக்கள் பின்பற்ற வேண்டிய அறிவுறுத்தல்களை வடக்கு மாகாண சுகாதாரப் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் வெளியிட்டுள்ளார். இது தொடர்பில் அவர் அனுப்பி வைத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:- "நாட்டின் பொருளாதாரத்தையும், மக்களின் வாழ்வாதரத்தையும் மேம்படுத்தும் நோக்குடன் ...

மேலும்..

மாவையின் சிறந்த மதிநுட்பம்: புத்தெழுச்சி பெறும் தமிழ் தேசிய கூட்டமைப்பு!

மழுங்கடிக்கப்பட்டுள்ள தமிழர்களின் அரசியல் பேரம் பேசும் சக்தி மீண்டும் ஒரு அத்தியாயத்திற்குள் நுழைவதாகவே அண்மைக்கால அரசியல் நகர்வுகள் புடம்போட்டுக் காட்டுகின்றன என ராக்கி எழுதிய கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். அவர் தனது கட்டுரையில் மேலும், ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்டு 11 ஆண்டுகளை தொட்டு நிற்கும் இக்காலகட்டத்தில், ...

மேலும்..

இனத்துக்காகத் தன்னை அர்ப்பணித்தவர் மாவை!

எமது அரசியல் பரப்பில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சோ.சேனாதிராசா ஐயா பற்றி பல்வேறு எதிர் விமர்சனங்கள் கட்டவிழ்கின்றன. அரசியல், பொதுவாழ்வு என்று ஈடுபட்டாலே விமர்சனங்களை எதிர்கொள்ளத்தான் வேண்டும். ''காய்த்த மரம் அதுமிகக் கல்லடிபடும் கன்மவினை கொண்டகாயம் தண்டனைபெறும்- வாய்த்த தவம் உடையவர் வாழ்பவர் ...

மேலும்..

வெப் சீரியஸில் வெளியாகும் வடசென்னை 2.. தியேட்டர்காரர்களுக்கு பீதியை கிளப்பிய வெற்றிமாறன்

தனுஷ்-வெற்றிமாறன் கூட்டணி என்றாலே தனுஷ் ரசிகர்கள் மட்டுமின்றி தமிழ் சினிமா ரசிகர்கள் அனைவரிடமும் எதிர்பார்ப்புகள் இருக்கும். இதுவரை இருவரின் கூட்டணியிலும் உருவான பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை, அசுரன் போன்ற அனைத்து படங்களுமே மாபெரும் வெற்றியை பெற்றுள்ளன. இந்நிலையில் வெற்றிமாறன் அடுத்ததாக சூரியை வைத்து ...

மேலும்..

உச்சத்தில் இருந்து காணாமல் போன ஹீரோக்கள்.. பழுத்த மரம்தான் கல்லடி படும்

தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருந்து திடீரென அதல பாதாளத்திற்கு சென்று நடிகர் நடிகைகள் கதை ஏராளம் உண்டு. அந்த வகையில் சில நடிகர்களைப் பற்றி பார்ப்போம். மைக் மோகன்: ரஜினி கமல் என அனைவரின் வெற்றிகளையும் சர்வசாதாரணமாக ஓரங்கட்டி முன்னணி ஹீரோவாக வலம் ...

மேலும்..

தளபதி66 படத்திற்கு சிக்கனமான இயக்குனர் போதும்.. தயாரிப்பாளர் முடிவால் குழப்பத்தில் விஜய்

தளபதி விஜய் மாஸ்டர் படத்தை அடுத்து தளபதி 65 படத்தில் நடிக்க உள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தை ஏ ஆர் முருகதாஸ் இயக்க உள்ளார் என அரசல் புரசலாக செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. இன்னும் தளபதி 65 படத்தின் ...

மேலும்..

சீனா- தென் கொரியாவை மீண்டும் அச்சுறுத்தும் கொரோனா வைரஸ்!

உலகையே அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸை (கொவிட்-19) கட்டுப்படுத்துவதில், 90 சதவீதமான வெற்றியை கண்ட சீனா மற்றும் தென்கொரியாவில், மீண்டும் வைரஸ் அச்சுறுத்தல் தலைதூக்கியுள்ளது. கொரோனா வைரஸின் தாயகம் என கூறப்படும் சீனாவில், வைரஸ் பரவல் பெரிதளவில் கட்டுப்படுத்தப்பட்டதையடுத்து, அங்கு நடைமுறையில் இருந்த முடக்கநிலை ...

மேலும்..

கனடாவில் கொவிட்-19 தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஐந்தாயிரத்தை நெருங்குகிறது!

கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றுக்கு கடந்த 24 மணித்தியாலங்களில், 1,268பேர் பாதிப்படைந்துள்ளதோடு, 124பேர் உயிரிழந்துள்ளனர். இதன்படி, அங்கு பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 67,702ஆக உள்ளது. உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4,693ஆகும். மேலும், 31,760பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதோடு, 31,249பேர் பூரண குணமடைந்து ...

மேலும்..

ஊரடங்கு சட்டத்தை நீக்கியமை மக்கள் தலையில் மண்ணை தூவும் செயல் – பா.அரியநேத்திரன்.மு.பா.உ.

கொரோனா வைரஷ் நோயாளர் தொகை முயல் வேகத்தில் கூடிக்கொண்டு போகும் நிலையில் ஊரடங்கு சட்டத்தை தளர்த்தி மக்கள் தலையில் மண்ணை வீசும் செயலாகவே இதனை பார்க்க முடிகிறது. இன்னும் சொல்வதானால் மக்கள் செத்தாலும் பறவாய் இல்லை தேர்தலே எமக்கு முக்கியம் என்பதையே ...

மேலும்..

கொழும்பில் இருந்து மேலும் 1200 பேர் சொந்த இடங்களுக்கு அனுப்பப்பட்டனர்..!

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவால், தமது சொந்த இடங்களுக்கு செல்ல முடியாமல் மேல் மாகாணத்தில் சிக்கியுள்ளவர்களில் மேலும் 1200 பேர் நேற்று (சனிக்கிழமை) சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். கல்கிசை பொலிஸ் வலயத்தில் 10 பொலிஸ் பிரிவுகளில்  இவ்வாறு ...

மேலும்..

உரிய நேரத்தில் பேச்சுக்களை முன்னெடுப்போம்: இலாபம் தேடுவோருக்கு பதிலளிக்கமாட்டோம்- சம்பந்தன்

தமிழ் மக்களின் விடயங்கள் தொடர்பாக பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ள வேண்டிய தரப்பினருடன் உரிய நேரத்தில் பேச்சுக்களை முன்னெடுப்போம் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். அத்துடன், அரசியல் இலாபங்களை அடைவதற்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் செயற்பாடுகளை விமர்சிப்பவர்களுக்கு பதிலளிக்க வேண்டிய அவசியமில்லை ...

மேலும்..