May 13, 2020 அன்று பிரசுரிக்கப்பட்டவை

அரசியலமைப்பு பேரவையின் பிரதிநிதி பதவியினை துறந்தார் கலாநிதி ஜயந்த தனபால?

அரசியலமைப்பு பேரவையின் பிரதிநிதி பதவியிலிருந்து கலாநிதி ஜயந்த தனபால விலகியுள்ளார். இவர் தனது பதவி விலகல் கடிதத்தினை, அரசியலமைப்பு சபையின் தலைவரான முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரியவிற்கு அனுப்பி வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமது சுகாதார நிலைமைகளை கருத்திற்கொண்டு, இந்தத் தீர்மானத்தை தாம் மேற்கொண்டுள்ளதாக ...

மேலும்..

நல்லூர் பிரதேச சபை ஊழியர் மீது வாள் வெட்டுத் தாக்குதல்

யாழ்ப்பாணம் – நல்லூர் பிரதேச சபை ஊழியர் மீது வாள் வெட்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த நபர் நல்லூர் பிரதேச சபையில் இருந்து கடமை முடிந்து சுன்னாகத்தில் உள்ள தனது வீட்டுக்கு சென்றுகொண்டிருந்தபோது, இணுவில் காரைக்கால் இந்து மயானத்திற்கு அருகில் வைத்து இவ்வாறு ...

மேலும்..

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 915 ஆக அதிகரிப்பு!

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 915ஆக அதிகரித்துள்ளது. ஏற்கனவே 893 பேர் அடையாளம் காணப்பட்டிருந்த நிலையில் புதிதாக மேலும் 22 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 524 பேர் இதுவரை மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அத்துடன், 382 பேர் கொரோனா தொற்றில் ...

மேலும்..

கொவிட் 19 சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்தின் வைப்பு மீதி 915 மில்லியனாக அதிகரிப்பு

இலங்கை சுதந்திர ஊழியர் சங்கம் ஐந்து மில்லியன் ரூபாவையும் ரங்கிரி தம்புள்ளை விசேட பொருளாதார மத்திய நிலைய வர்த்தக சங்கம் ஐந்து மில்லியன் ரூபாவையும் நிதியத்திற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கையளித்தனர். பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும், அமைச்சர்களான தினேஷ் குணவர்தன மற்றும் ஜனக ...

மேலும்..

இலங்கையில் கொரோனா தொற்று 915!

* நேற்று 26 பேர் அடையாளம் * 382 பேர் குணமடைவு * 524 பேர் சிகிச்சையில் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியவர்களின் மொத்த எண்ணிக்கை 915 ஆக அதிகரித்துள்ளது. நேற்று புதிய தொற்றாளர்களாக 26 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று சுகாதார அமைச்சு இன்று காலை ...

மேலும்..

முஸ்லிம்களுக்கு எதிராக இனவாதச் செயற்பாடுகள் – அருவருக்கத்தக்கவை என்கிறார் சஜித்

எமது முஸ்லிம் சகோதரர்களுக்கு எதிராகப் பரவலாக அரங்கேற்றப்படுகின்ற இனவாதச் செயற்பாடுகள் அருவருக்கத்தக்கவை என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், "எமது சமூகத்தில் தொடக்க நிலையிலுள்ள இனவாதமானது எமது தாய் நாட்டின் மக்களுக்கு மத்தியில் இன, மத, ...

மேலும்..

ராஜபக்சக்களின் விஷமத்தனமான ஆயுதமே இனவாதம்   – அநுரகுமார குற்றச்சாட்டு

"நாட்டு மக்களுக்கு நல்லவர்கள் போல் பாசாங்கு காட்டிக்கொண்டு மறுபுறத்தில் ஆட்சியைத் தக்கவைப்பதற்காக தமிழ் - முஸ்லிம் - சிங்கள விரோத இனவாதத்தைக் கிளறிவிடுவது ராஜபக்ச கூட்டணியின் விஷமத்தனமான ஆயுதமாக உள்ளது." - இவ்வாறு ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க குற்றம்சாட்டினார். அவர் மேலும் தெரிவிக்கையில், "நாடாளுமன்றத் ...

மேலும்..

சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார் சுமந்திரன்!

கடந்த 8ஆம் திகதி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் Truth With Chamuditha என்பவருக்கு வழங்கிய நேர்காணல் மிகப்பெரும் சர்ச்சையை தமிழ் தேசிய அரசியல் பரப்பில் உருவாக்கியுள்ளது. https://youtu.be/msg50-5DsYY இந்நிலையில் பல்வேறு தமிழ் அரசியல் கட்சியினரும் கண்டனங்களையும் விமர்சனங்களையும் முன்வைத்துவரும் நிலையில் முன்னாள் நாடாளுமன்ற ...

மேலும்..

இனவாதத்தைத் தூண்டாதீர்கள்; இன ஒற்றுமையுடன் வாழ்வோம் – பிரதமர் மஹிந்த வேண்டுகோள்

"இனவாதங்களைத் தூண்டும் வகையில் எவரும் செயற்படக்கூடாது. இன ஒற்றுமையுடன் அனைவரும் வாழ ஓரணியில் திகழ வேண்டும்." - இவ்வாறு தெரிவித்தார் பிரதமர் மஹிந்த ராஜபக்ச. இனவாதத்தைத் தூண்டும் வகையில் செயற்படுபவர்களுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் உறுதியளித்தார். இனவாதத்தை வளர்த்து விட்டு, அதில் ...

மேலும்..

மட்டக்களப்பில் இடம்பெற்ற விபத்தில் ஊடகவியலாளர் உயிரிழப்பு!

மட்டக்களப்பு, கல்முனை பிரதான வீதி, பெரிய கல்லாறு நாகதம்பிரான் ஆலயத்துக்கு அருகில் மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் உழவு இயந்திரம் மோதி விபத்துக்குள்ளானது. இதன்போது, மோட்டர் சைக்கிளில் பிரயாணித்த ஊடகவியலாளர் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் இன்று (புதன்கிழமை) பிற்பகல் 2 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக களுவாஞ்சிக்குடி ...

மேலும்..

இலங்கையில் நடைபெறவிருந்த உலகக்கிண்ண தகுதிச்சுற்று போட்டிகள் ஒத்திவைப்பு!

இலங்கையில் நடைபெற இருந்த மகளிர் உலகக்கிண்ண ஒருநாள் கிரிக்கெட் தகுதிச்சுற்று போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. அத்துடன், ஐ.சி.சி.யின் பத்தொன்பது வயதுக்குட்பட்ட உலகக்கிண்ண ஐரோப்பா பிரிவு- 2 தகுதி சுற்றுப் போட்டிகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. ஐ.சி.சி.யின் விரிவான தற்செயல் திட்டமிடல் செயல்பாட்டின் ஒரு பகுதியாக, உறுப்பினர்கள், சம்பந்தப்பட்ட அரசு ...

மேலும்..

மரக்கறி வகைகளின் விலைகள் வெகுவாகக் குறைவடைந்துள்ளதால் நுவரெலியா மாவட்ட விவசாயிகள் பெரும் பாதிப்பு

(க.கிஷாந்தன்) மரக்கறி வகைகளின் விலைகள் வெகுவாகக் குறைவடைந்துள்ளதால் நுவரெலியா மாவட்ட விவசாயிகள் பெரும் நட்டத்தை எதிர்நோக்கியுள்ளனர். உற்பத்திக்காக செலவிட்ட பணத்தைக்கூட ஈடுசெய்ய முடியாதிருப்பதாக கவலை வெளியிடும் விவசாயிகள், இது விடயத்தில் அரசாங்கம் உடனடியாக தலையிட வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கின்றனர். இலங்கையில் அதிகளவு மரக்கறி ...

மேலும்..

கடல் கொந்தளிப்பால் அம்பாறை மாவட்ட பிரதேச பகுதிகளில் கரைவலை மீன்பிடி தொழில் பாதிப்பு!

பாறுக் ஷிஹான் அம்பாறை மாவட்டம் கல்முனை பிரதேச பகுதிகளில்   கரைவலை மீன்பிடித் தொழிலானது முற்றுமுழுதாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக கரையோர மீனவர்கள் தெரிவிக்கின்றனர் பெரியநீலாவணை-மருதமுனை-கல்முனை உள்ளிட்ட பிரதேசங்கள் முழுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.கடந்த சில தினங்களாக ஏற்பட்ட கடல்மட்ட வேறுபாடும் கடல்கொந்தளிப்பின் அதிகரித்த நிலையுமே இதற்கான காரணங்களாக உள்ளதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். கடல்நீரானது ...

மேலும்..

மலையகத்திலுள்ள நகர்ப்பகுதிகளில் மதுபான நிலையங்களுக்கு முன்னால் பெருமளவானவர்கள் அணிதிரண்டனர்.

(க.கிஷாந்தன்) மதுபான விற்பனை நிலையங்களை திறப்பதற்கு இன்று அனுமதி வழங்கப்பட்டிருந்த நிலையில், மலையகத்திலுள்ள நகர்ப்பகுதிகளில் மதுபான நிலையங்களுக்கு முன்னால் பெருமளவானவர்கள் அணிதிரண்டனர். சமூக இடைவெளி உட்பட சுகாதார நடைமுறைகள் எதையும் பின்பற்றாமல் மதுபானம் வாங்குவதற்கு முண்டியடித்துக்கொண்டு செயற்பட்டதால் சர்ச்சை ஏற்பட்டது. குறிப்பாக அட்டன் நகரிலுள்ள ...

மேலும்..

கொரோனா வைரஸ் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இரண்டாம் கட்ட நிவாரண கொடுப்பனவு ஆரம்பம்

பாறுக் ஷிஹான்   கொரோனா வைரஸ் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இரண்டாம் கட்ட நிவாரண கொடுப்பனவுகள் இம்மாதம் 18 ஆம் திகதி முதல் 29 ஆம் திகதி வரை வழங்கப்படவுள்ளதாக      அம்பாறை மாவட்ட    சமூர்த்தி  பணிப்பாளர் எம்.எஸ்.எம் சப்றாஸ் தெரிவித்தார். அம்பாறை ...

மேலும்..

இலங்கையில் சிக்கியுள்ள இந்தியர்கள் மத்திய அரசிடம் கோரிக்கை

இந்தியாவின் தமிழகத்திலிருந்து இலங்கைக்கு வந்த தங்களை நாட்டுக்கு அழைக்க நடவடிக்கை எடுங்கள் என மத்திய அரசிடம் இந்தியத் தமிழர்கள் உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளனர். கிளிநொச்சியில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர்கள் இந்த வேண்டுகோளை முன்வைத்துள்ளனர். கடந்த பெப்ரவரி மாதமளவில் இலங்கைக்கு 8 ...

மேலும்..

பயணிகள் விமான சேவை இடைநிறுத்தம் இம்மாத இறுதிவரை நீடிப்பு

ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் தனது நாளாந்த பயணிகள் விமான சேவைகளின் தற்காலிகமாக இடைநிறுத்தத்தை எதிர்வரும் மே 30 ஆம் திகதிவரை நீடிப்பதாக அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக தாம் விமான சேவைகளை மேற்கொள்ளும் உலகளாவிய வலையமைப்பிலுள்ள நாடுகள் விதித்துள்ள பயணக் கட்டுப்பாடுகள், ...

மேலும்..

தமிழரசுக் கட்சியில் சுமந்திரன் நீடித்தால் அது சம்பந்தன், மாவையின் பலவீனமே- சிவசக்தி ஆனந்தன்

தமிழின உரிமைப் போராட்டத்தின் ஓரங்கமான ஆயுத விடுதலைப் போராட்டத்தினை மோசமாக விமர்சித்த சுமந்திரன் தமிழரசுக் கட்சியில் நீடித்தால் அது அக்கட்சியின் சிரேஷ்ட தலைவர் இரா.சம்பந்தன், தலைவர் மாவை.சேனாதிராஜா ஆகியோரின் பலவீனத்தை வெளிப்படுத்துவதாக அமையும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் ...

மேலும்..

இலங்கையர்கள் அனைவருக்கும் விரைவில் டிஜிட்டல் அடையாள அட்டை

அனைத்து பிரஜைகளினதும் தனிப்பட்ட தகவல்களை வாழ்நாளில் ஒரே முறை பெற்றுக்கொண்டு வழங்கப்படவுள்ள பயோ-மெட்ரிக் டிஜிட்டல் அடையாள அட்டைகளின் தற்போதைய நிலை பற்றி ஆராயும் கலந்துரையாடல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்றது. இந்த புதிய அடையாள அட்டை மூலம் மக்கள் ...

மேலும்..

முள்ளிவாய்க்கால் நினைவுகூரலில் கலந்துகொண்டவர்களை தனிமைப்படுத்த நடவடிக்கை

முள்ளிவாய்க்கால் நினைவுகூரலில் கலந்துகொண்டவர்களை தனிமைப்படுத்தவுள்ளதாக யாழ்.பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரசாத் பெர்ணான்டோ கூறியுள்ளார். 2009ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் மண்ணில் நிகழ்ந்த போரில் படுகொலை செய்யப்பட்ட அப்பாவி பொதுமக்களுக்கான நினைவேந்தல் ஆண்டுதோறும் இடம்பெற்று வருகிறது. இதன்படி இந்த ஆண்டும் முள்ளிவாய்க்கால் நினைவு வாரத்தின் முதலாம் நாள் ...

மேலும்..

மன்னார் நகர சபையின் அபிவிருத்தி திட்டங்களை சிலர் தடுக்க முயற்சி- நகர முதல்வர்

மன்னார் நகர சபையின் அபிவிருத்தி திட்டங்களை அரசியல்வாதிகளான சட்டத்தரணிகள் சிலர் தடுத்திருக்கின்றார்கள் என மன்னார் நகர முதல்வர் ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன் குற்றம் சுமத்தியுள்ளார். ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி உதவியுடன் மன்னார் நகரத்தை அழகுபடுத்தி பல்வேறு கட்டடங்களை அமைத்து நகரசபைக்கு வருமானத்தை ...

மேலும்..

தனிமைப்படுத்தல் முகாம்களில் இருந்து சுமார் 7500க்கும் அதிகமானவர்கள் வீடு திரும்பினர்

முப்படையினரால் நிர்வகிக்கப்பட்டு வரும் தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களில் இருந்து இதுவரை சுமார் 7500க்கும் அதிகமானவர்கள் வீடு திரும்பியுள்ளனர். அவர்கள் தனிமைப்படுத்தல் செயற்பாடுகளை வெற்றிகரமாக நிறைவு செய்து அங்கிருந்து வெளியேறியுள்ளதாக கொரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்கான விசேட செயலணி தெரிவித்துள்ளது. நேற்றைய தினத்திலும் 242 பேர் ...

மேலும்..

ராஜிதவை நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு சி.ஐ.டி.க்கு நீதிமன்றம் உத்தரவு

முன்னாள் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் சி.ஐ.டி.க்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக நவம்பர் 10 ஆம் திகதி வெள்ளை வான் ஊடக சந்திப்பை ஏற்பாடு செய்த வழக்கில் முன்னாள் அமைச்சர் கடந்த டிசம்பர் ...

மேலும்..

மழைக்கு மத்தியிலும் மதுபான சாலைகளில் அலைமோதும் மதுபிரியர்கள்

கொழும்பு மற்றும் கம்பஹா தவிர்ந்த ஏனைய 23 மாவட்டங்களில் மதுபானசாலைகள் திறக்கப்பட்டதைத் தொடர்ந்து மதுபான சாலைகளுக்கு முன்பாக மதுபிரியர்கள் அலைமோதுவதாக எமது பிராந்திய செய்தியாளர்கள் தெரிவித்தனர். நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக மறு அறிவித்தல் வரை மதுபான சாலைகள் மூடப்பட்டிருந்தன. இந்நிலையில் ...

மேலும்..

அரசியல் கைதிகளின் விபரங்களை மஹிந்தவிடம் கையளித்தார் டக்ளஸ்!

தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பாக நெட்டகாலமாக பேசப்பட்டுவந்த நிலையில் அவர்களின் பெயர் விபரங்கள் அடங்கிய மகஜர் ஒன்றினை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் கையளித்துள்ளனர். பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் பொதுச் செயலாளர் மற்றும் ...

மேலும்..

தமிழர் பிரச்சினையை சர்வதேச மயப்படுத்தியது விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்டம்தான்: மறுப்புக்கு இடமில்லை- சீ.வீ.கே.

தமிழர் பிரச்சினையை சர்வதேச மயப்படுத்தியது விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்டம்தான் எனத் தெரிவித்துள்ள வடமாகாண அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் ஆயுதப் போராட்டத்துடன் அரசியல், இராஜதந்திர அணுகுமுறைகளும் அவர்களிடம் இருந்தது என சுட்டிக்காட்டியுள்ளார். கடந்த 8ஆம் திகதி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் Truth With ...

மேலும்..

வாரத்தின் ஏழு நாட்களும் பாடசாலைகளை திறப்பதற்கு கல்வி அமைச்சு தீர்மானம்

பாடத்திட்டங்களை விரைவாக முடிப்பதற்காக வாரத்தின் ஏழு நாட்களும் பாடசாலைகளை திறப்பது தொடர்பாக கல்வி அமைச்சு கவனம் செலுத்தி வருகின்றது என கல்வி அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக பாடசாலைகள் நீண்ட நாட்கள் மூடப்பட்டமையினால் பாடத்திட்டங்களை விரைவாக முடிக்க ...

மேலும்..

இலங்கையைச் சூழவுள்ள கீழ் வளிமண்டலத்தில் தளம்பல் நிலை – மழையுடனான வானிலை அதிகரிக்கும்

இலங்கையைச் சூழவுள்ள கீழ் வளிமண்டலத்தில் ஏற்பட்ட தளம்பல் நிலை காரணமாக எதிர்வரும் சில நாட்களில் நாடு முழுவதும் மழையுடனான வானிலை அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களத்தினால் இன்று (புதன்கிழமை) வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தொடர்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் பெரும்பாலான ...

மேலும்..

களுவாஞ்சிகுடி மாணிக்கப் பிள்ளையார் ஆலயத்தின் கிணறு பொங்கி வழிந்து அற்புதம்

மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்தின் கிழக்குப் பக்கமாக அமைந்துள்ள கிணறு பொங்கி வழிந்த அற்புதம் இன்று (புதன்கிழமை) அதிகாலை நிகழ்ந்துள்ளதாக ஆலயத்தின் பிரதம குரு சிவஸ்ரீ மு.அங்குசசர்மா தெரிவித்தார். இதனையடுத்து இந்த விடயம் தொடர்பாக ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ மு.அங்குசசர்மா ஆலய நிருவாகத்தினரிடம் ...

மேலும்..

கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கையில் அதிகரிப்பு

கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியவர்களில் மேலும் 16 பேர் இன்று (புதன்கிழமை) குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி இதுவரை 382 பேர் குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

மேலும்..

கடலில் பாய்ந்து தப்பிக்க முயற்சித்த போதை மாத்திரை விற்பனை செய்துவந்த இளைஞன் யாழில் கைது

யாழ். தீவக பகுதியில் போதை மாத்திரை விற்பனை செய்துவந்த இளைஞன் பொலிஸாரிடமிருந்து தப்பிப்பதற்காக கடலில் பாய்ந்த நிலையில், கடற்படையினர் அவரை மீட்டு கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் யாழ். மண்டைதீவுச் சந்திக்கு அண்மையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) மாலை இடம்பெற்றது. வேலணை சாட்டி கடற்கரை பள்ளிவாசல் ...

மேலும்..

வாரத்தின் ஏழு நாட்களும் பாடசாலைகளை திறப்பதற்கு கல்வி அமைச்சு தீர்மானம்

பாடத்திட்டங்களை விரைவாக முடிப்பதற்காக வாரத்தின் ஏழு நாட்களும் பாடசாலைகளை திறப்பது தொடர்பாக கல்வி அமைச்சு கவனம் செலுத்தி வருகின்றது என கல்வி அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக பாடசாலைகள் நீண்ட நாட்கள் மூடப்பட்டமையினால் பாடத்திட்டங்களை விரைவாக முடிக்க ...

மேலும்..

மதுபான சாலைகளைத் திறக்க அனுமதி

ஊரடங்கு தளர்த்தப்பட்ட மாவட்டங்களில் மதுபான சாலைகளை இன்று (புதன்கிழமை) முற்பகல் 11 மணிக்கு திறக்க மதுவரித் திணைக்களம் அனுமதியளித்துள்ளது. மேலும் ஊரடங்கு சட்டம் தொடர்ந்தும் அமுலில் உள்ள கொழும்பு கம்பாஹாவில் உரிமம் பெற்ற பல்பொருள் அங்காடிகள் உள்ள மதுபானசாலைகளில் விற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மதுபான ...

மேலும்..

சுமந்திரனுக்கு எதிராக யாழில் உருவ பொம்மைகள் வைப்பு!

ஆயுதப் போராட்டம் தொடர்பாக சர்ச்சைக்குரிய கருத்தைத் தெரிவித்துள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரனுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் விதமாக நல்லூரில் இரு இடங்களில் உருவ பொம்மைகள் வைக்கப்பட்டன. நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவு தூபிக்கு அண்மையில் உருவ பொம்மை ...

மேலும்..

காதல் தோல்வியா? அதிலிருந்து எப்படி வெளிய வர்றதுனு தெரியலையா?

எப்பொழுதும் நம்மை ஆட்கொள்ளுகின்ற ஒரு விஷயம் என்றால் அது உணர்வுகள் தான். அதிலும் காதல் உணர்வுகள் என்றால் உணர்ச்சிவசப்படாதவர்கள் என்று யாரும் கிடையாது. தற்போதைய சமூகத்தில் ஒரு காதல் ஜோடிகள் சேர்ந்தாலும் சரி பிரிந்தாலும் சரி தங்களுடைய நிலைமையை சமூக வலைத்தளங்களில் ...

மேலும்..

யாழில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் முதலாம் நாள் நிகழ்வு

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் முதலாம் நாள் நிகழ்வுகள் இன்று (புதன்கிழமை) காலை யாழ்.செம்மணி பகுதியில் இடம்பெற்றது. பொலிஸார், இராணுவத்தினர் நிகழ்வை தடுத்தபோதும் எதிர்ப்பை மீறி இந்த நினைவுகூரல் நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளது. 2009ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் மண்ணில் நிகழ்ந்த போரில் படுகொலை செய்யப்பட்ட அப்பாவி பொதுமக்களுக்கான ...

மேலும்..

முன்னணி நடிகர்களிடம் மல்லுக்கட்டும் சன் பிக்சர்ஸ்.. முடியவே முடியாது என முட்டுக்கட்டை போடும் தளபதி

கொரானா பாதிப்பால் சினிமாவைச் சேர்ந்த பல தொழிலாளர்களும் தங்களது வாழ்வாதாரங்களை இழந்து தவித்து வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் கடன் வாங்கி படத்தை தயாரித்த தயாரிப்பாளர்கள் வட்டி கட்ட முடியாமல் தவித்து வருகின்றனர். தமிழ் சினிமாவைப் பொறுத்தவரையில் மிகப் பெரிய தயாரிப்பாளர் என்றால் அது சன் ...

மேலும்..

யார் எப்படி போனால் எனக்கென்ன.. மீண்டும் வேலையை தொடங்கிய சினிமாக்காரர்கள்

உலகம் முழுவதும் கொரானா பாதிப்பால் துவண்டு போயுள்ளனர். பலரும் தங்களது வாழ்வாதாரங்களை இழந்து சோற்றுக்கே கஷ்டப்படும் நிலைமை ஏற்பட்டுள்ளது. கொரானா தொற்று அதிகமாக இருப்பதால் கடந்த இரண்டு மாதங்களாக எந்த ஒரு பணியும் நடக்காமல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் மீண்டும் சினிமாத்துறையில் வழக்கம்போல் ...

மேலும்..

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3525 பேர் கொரோனாவால் பாதிப்பு – மொத்த பாதிப்பு 74 ஆயிரத்தைக் கடந்தது

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 74 ஆயிரத்தை கடந்துள்ள நிலையில், 2415 பேர் இதுவரையில் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு, நோய் அறிகுறி உள்ளவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளித்தல் உள்ளிட்ட பல்வேறு நோய்த்தடுப்பு ...

மேலும்..

வெள்ளை வான் ஊடக சந்திப்பு – ராஜித மீண்டும் விளக்கமறியலில்

வெள்ளை வான் ஊடக சந்திப்பு தொடர்பாக ராஜித சேனாரத்னவிற்கு கொழும்பு நீதவான் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட பிணை உத்தரவு கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் இரத்து செய்யப்பட்டுள்ளது. ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக நவம்பர் 10 ஆம் திகதி வெள்ளை வான் ஊடக சந்திப்பை ஏற்பாடு செய்த ...

மேலும்..

வவுனியா மாவட்ட விவசாயிகளுக்கு ஓர் நற்செய்தி: மாவட்ட பிரதி மாகாண விவசாய பணிப்பாளர் அருந்ததி வேல்சிவானந்தன்

வவுனியாநிருபர்் 2020ம் ஆண்டிற்கான சிறுபோகச்செய்கை விதை மானியம் வழங்கல் திட்டத்திற்கு வவுனியா மாவட்ட விவசாயிகளை எதிர்வரும் 20.05.2020ம் திகதிக்கு முன்னாராக விண்ணப்பிக்குமாறு வவுனியா மாவட்ட பிரதி மாகாண விவசாய பணிப்பாளர் அருந்ததி வேல்சிவானந்தன் அறிவித்தல் ஒன்றினை விடுத்துள்ளார். சிறுபோகச்செய்கை விதை மானியம் வழங்கல் திட்டம் ...

மேலும்..

ராஜபக்சக்களின் சர்வாதிகார இராணுவ ஆட்சிக்கு தேர்தலில் முடிவு கட்டுவர் மக்கள் – சஜித் திட்டவட்டம்

"கொரோனாவின் அபாயத்துக்குள் நாட்டு சிக்கித் தவிர்த்துக்கொண்டிருக்கும்போது மறுபுறத்தில் ராஜபக்சக்களின் சர்வாதிகார இராணுவ ஆட்சி தொடர்கின்றது. இந்தக் கொடூர ஆட்சிக்கு எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் நாட்டு மக்கள் தக்க பாடம் புகட்டி முடிவு கட்டுவர்." - இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் ...

மேலும்..

இராணுவ ஆட்சி இல்லை என்று மறுக்கிறது அரசு!

"இராணுவத் தளபதிகளை ஜனாதிபதியாக்குவதற்கு முயற்சித்து இரண்டு தடவைகளும் தோல்வி கண்டவர்களே இன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இராணுவ ஆட்சியை நோக்கிப் பயணிக்கின்றார் என்ற குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர்." - இவ்வாறு அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார். முன்னாள், இந்நாள் இராணுவ அதிகாரிகளுக்கு அரச கட்டமைப்பில் முக்கிய ...

மேலும்..

கொழும்பில் இன்று விசேட சோதனை

கொழும்பில் இன்று (புதன்கிழமை) விசேட சோதனை நடவடிக்கையொன்று மேற்கொள்ளப்படவுள்ளது. பொதுமக்கள் சுகாதார அறிவுறுத்தல்களுக்கு அமைய செயற்படுகிறார்களா என்பதை அவதானிக்க இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது. மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனின் ஆலோசனைக்கு அமைவாக குறித்த சோதனை நடவடிக்கைகள் ...

மேலும்..

வவுனியா – பம்பைமடு தனிமைப்படுத்தல் முகாமில் இருந்து மேலும் 129 பேர் விடுவிப்பு

வவுனியா பம்பைமடு தனிமைப்படுத்தல் முகாமில் இருந்து இன்று (புதன்கிழமை) 129 பேர் வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கான பி.சி.ஆர். பரிதோதனைகளும் முன்னெடுக்கப்பட்டிருந்ததுடன், கொரோனா தொற்று இல்லை என உறுதிப்படுத்தப்பட்ட 129 பேர் இன்றைய தினம் தமது சொந்த இருப்பிடங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டமைக்கான சான்றிதழ்களும் ...

மேலும்..

கோட்டாவின் ஆட்சியில் இராணுவ மயம்! – இதுவரை 22 படை அதிகாரிகள் சிவில் சேவைக்குள் நியமனம்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவால் இலங்கையின் சிவில் சேவைக்குள் நியமிக்கப்பட்ட முன்னாள் இராணுவ அதிகாரிகளின் எண்ணிக்கை 22 ஆக உயர்ந்துள்ளது. கோட்டாபய ஜனாதிபதியாகப் பொறுப்பேற்ற பின்னர் இதுவரை சிவில் நிர்வாகத்துக்குள் உயர் பதவிகளில் அமர்த்தப்பட்ட படை அதிகாரிகள் விவரம் வருமாறு:- 01. மேஜர் ஜெனரல் கமல் ...

மேலும்..

அரசியல் கைதிகள் தீர்வு விவகாரங்கள்: சுமந்திரன் – மஹிந்த ஒருமணிநேரம் பேச்சு

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரனுக்கும் இடையில் சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேல் நீடித்த பேச்சுக்களின் போது, தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை, இன நெருக்கடிக்கான அரசியல் தீர்வு குறித்து பேசியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விஜயராம மாவத்தையிலுள்ள பிரதமரின் ...

மேலும்..

350 இற்கும் மேற்பட்ட மாற்றுவலுவுள்ளோர், முன்னாள் போராளிகளுக்கு (2ம் கட்டம்) தமிழ் சி.என்.என். நிவாரணப் பணி காரைதீவு அம்பாறையில்!

தமிழ் சி.என்.என். குழுமம் யாழ். மற்றும் வன்னி மாவட்டங்களில் பல்வேறு பட்ட உதவித்திட்டங்களை அதன் நிர்வாக இயக்குநர் கலாநிதி அகிலன் முத்துக்குமாரசுவாமியால் பல்வேறு சேவை நோக்குள்ள நல்லுள்ளம் படைத்தவர்கள் ஊடாகவும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இரண்டாம் கட்ட உலர் உணவு வழங்கும் செயற்றிட்டத்துக்கு ...

மேலும்..

நிவாரணப் பணிகளுக்கு பதிலாக பிரசார நடவடிக்கைளே அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படும் – அனுர குற்றச்சாட்டு

தேர்தல் பிரசார நடவடிக்கைள் தற்போது ஆரம்பிக்கப்பட்டால் நிவாரணப் பணிகளுக்கு பதிலாக முற்றுமுழுதாக தேர்தல் பிரசார நடவடிக்கைகள் மட்டுமே முன்னெடுக்கப்படும் என தேசிய மக்கள் சக்தியின்  தலைவர் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். தேர்தல்கள் செயலகத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே ...

மேலும்..

தேர்தலை நடத்தாது பாத்திருக்க முடியாது – திஸ்ஸ விதாரண

கொரோனா வைரஸ் இன்னும் இரண்டு ஆண்டுகள் கூட நீடிக்கலாம். அதுவரை தேர்தலை நடத்தாது பாத்திருக்க முடியாது என லங்கா சம்சமாஜ கட்சியின் தலைவர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்துள்ளார். தேர்தல்கள் செயலகத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்துகொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து ...

மேலும்..

அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் மாவையின் கோரிக்கைக்கு மஹிந்த உறுதி!

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் உரிய நடவடிக்கை எடுப்பதாக பிரதமர் மகிந்த ராஜபக்ச, தமிழ் தேசியக் கூட்டமைப்பிடம் உறுதி வழங்கியுள்ளார். நேற்று காலை பிரதமரின் செயலாளருடன் தொடர்பு கொண்டு மாவை சேனாதிராஜா வழங்கிய தகவலின் அடிப்படையில் கூட்டமைப்பின் பேச்சாரள் எம்.ஏ.சுமந்திரனுடன் இடம்பெற்ற ...

மேலும்..