May 20, 2020 அன்று பிரசுரிக்கப்பட்டவை

கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 1028 ஆக அதிகரிப்பு

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் ஒருவர் நேற்று (புதன்கிழமை) அடையாளம் காணப்பட்டதை அடுத்து தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 1028 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது. இறுதியாக தொற்றுக்குள்ளானவர் குவைத்தில் இருந்து நாடு திரும்பிய நிலையில் தனிமைப்படுத்தல் மையத்தில் இருந்தவர் என ...

மேலும்..

சுமந்திரனின் சர்ச்சைக்குரியதான பேட்டிக்கு நீதிபதியாகிய மக்கள் தீர்ப்பு எழுதுவார்கள்! நாசூக்காகப் பதிலளிக்கிறார் சி.வி.கே.சிவஞானம்

கூட்டமைப்பு பிரபாகரனால் உருவாக்கப்பட்ட கட்சி. வளர்க்கப்பட்ட கட்சி. இன்றைக்கும் தந்தை செல்வநாயகத்தால் ஆரம்பிக்கப்பட்ட அகிம்சை பேராட்டம் பிரபாகரனின் ஆயுதப் போராட்டம் என இராஐதந்திர வடிவங்கள் மாறினாலும் இலக்கு ஒன்றாகவே இருக்கும். சுமந்திரனின் கருத்து என்பது பாரிய சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது உண்மை தான். அது ...

மேலும்..

கிடைத்த சந்தர்ப்பத்தை தமிழர்   சரியாகப் பயன்படுத்தவேண்டும் – மாவை தெரிவிப்பு

"எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தல் வெற்றிக்காக, சிங்கள, பௌத்த இனவாதத்தின் உச்சத்தில் நின்று ஆற்றியிருக்கும் கோட்டாபய ராஜபக்சவின் உரையால், நாட்டுக்கே மிகப் பெரிய பாதிப்பு ஏற்படப் போகின்றது. இந்த உரையால் தமிழ் மக்களுக்கு கிடைத்துள்ள சந்தர்ப்பத்தை சரியாகப் பயன்படுத்துவோம்." - இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் ...

மேலும்..

போர் வெற்றி விழா பொருத்தமற்றது! – மங்கள தெரிவிப்பு

"போரிலிருந்து  பாடங்களைக் கற்றுக்கொண்டு மீண்டுமொரு போர் ஏற்படாமல் இருக்கும் வகையிலேயே நாம் செயற்படவேண்டும். மாறாக போர் வெற்றியைக் கொண்டாடுவது பொருத்தமான நடவடிக்கையாக அமையாது" என்று முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது:- "தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு தோற்கடிக்கப்பட்டதையிட்டு மகிழ்ச்சியடைகின்றேன். ...

மேலும்..

சர்வதேச அமைப்புகளில் இருந்து இலங்கையை விலக்க வேண்டாம் – நியாயத்தை விளக்குமாறு கோட்டாவிடம் சஜித் அணி வலியுறுத்து

"சர்வதேச அமைப்புகளிலிருந்து விலகுவதென்பது நாட்டை பின்நோக்கியே அழைத்துச் செல்லும். அத்தகைய அமைப்புகளுடன் பேச்சு நடத்தி தனது தரப்பு நியாயத்தை அரசு உறுதிப்படுத்த வேண்டும்." - இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினரும் முன்னாள் சபை முதல்வருமான லக்‌ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார். இராணுவத்தையும், நாட்டையும் தொடர்ச்சியாக ...

மேலும்..

“வேண்டாம் சுமந்திரன்” கிளிநொச்சி வீதிகளில் வீசப்பட்டுள்ள துண்டுப்பிரசுரங்கள்

கிளிநொச்சி வீதிகளில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளருமான எம்ஏ.சுமந்திரனுக்கு எதிரான துண்டுப் பிரசுரங்கள் வீசப்பட்டுள்ளன. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் அண்மையில் சிங்கள் ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணல் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. தமிழீழ விடுதலைப்புலிகளின் போராட்டத்தை அவர் கொச்சைப்படுத்திவிட்டார் ...

மேலும்..

அத்தனை பேரும் உத்தமர்தானா? -கம்பவாரிதி இலங்கை. ஜெயராஜ்-

உலகம் கொரோனாவால் கொந்தளித்துக் கொண்டிருக்க, ஈழத்தமிழினத்தார் மத்தியில் விறுவிறுப்பாக வேறு கொந்தளிப்பு. கொந்தளிப்பை ஏற்படுத்தி இருப்பவர், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம் ஏ.சுமந்திரன் அவர்கள். சிங்களத் தொலைக்காட்சி ஒன்றிற்கு அளித்த பேட்டியில், அவர் வெளியிட்ட சில கருத்துக்களால், உணர்ச்சிமிக்க (?) ஈழத்தமிழினத்தார் கொந்தளித்துக் கிடக்கிறார்கள். அறிக்கைகள், பேட்டிகள் இணையப் பதிவுகள் என, வெளிவரும் ...

மேலும்..

முல்லைத்தீவிலிருந்து தேர்தல் ஆணையாளருக்கு அவசர கடிதம் – சமூக ஆர்வலர் பீற்றர் இளஞ்செழியன்

முல்லைத்தீவு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி சுகந்தன் அவர்களை காரணம் இன்றி தேர்தல் காலத்தில் இடமாற்றம் செய்வதை நிறுத்தகோரி தேர்தல் ஆணையாளருக்கு கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. சமூக ஆர்வலர் அன்ரனி ஜெயநாதன் பீற்றர் இளஞ்செழியன் தேர்தல் ஆணையாளருக்கு முகவரியிட்டு அவசர கடிதம் ...

மேலும்..

கோட்டாபயவின் இனவாதப் பேச்சு நாட்டுக்கே பேராபத்தாக அமையும்! அரசை எச்சரிக்கிறார் சேனாதிராசா

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தல் வெற்றிக்காக, சிங்கள, பௌத்த இனவாதத்தின் உச்சத்தில் நின்று ஆற்றியிருக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் உரையால், நாட்டுக்கே மிகப் பெரிய பாதிப்பு ஏற்படப் போகின்றது. இந்த உரையால் தமிழ் மக்களுக்கு கிடைத்துள்ள சந்தர்ப்பத்தை சரியாகப் பயன்படுத்துவோம்." என இலங்கைத் தமிழரசுக் ...

மேலும்..

11 வருடங்களாக தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிக்காக வாதாடிய ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா

பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராகிய பஷிர்அலி மொகமட் என்பவரை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டி 2006ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 14ஆந் திகதி நடாத்தப்பட்ட குண்டுத் தாக்குதலில் இராணுப் பாதுகாப்புப் பிரிவை சேர்ந்த ஏழு இராணுவ அதிகாரிகளுக்கு மரணத்தை ஏற்படுத்தியதுடன் மேலும் பத்து பொதுமக்களுக்கு ...

மேலும்..

நாடாளுமன்றத் தேர்தலை செப்டெம்பர் நடத்த முடிவு? தேசப்பிரிய தலைமையிலான ஆணைக்குழு உறுப்பினர்களுடனான சந்திப்பில் தீர்மானம்

பெரும் சர்ச்சைகளுக்குள்ளாகியுள்ளா நாடாளுமன்றத் தேர்தலை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் நடத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு முடிவு செய்துள்ளது என அறியமுடிந்தது. மஹிந்த தேசப்பிரிய தலைமையிலான தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர்களுக்கிடையில் இன்று நடைபெற்ற சந்திப்பின்போதே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத் தேர்தல் திகதியில் மாற்றம் ஏற்படும் என ...

மேலும்..

இலங்கையில் கொரோனா: 584 பேர் குணமடைவு! 434 பேர் சிகிச்சையில்!!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியவர்களில் மேலும் 15 பேர் குணமடைந்து இன்று வீடு திரும்பியுள்ளனர். அதற்கமைய தொற்றிலிருந்து பூரண குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 569 இலிருந்து 584 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை தொற்றுடன் அடையாளம் காணப்பட்ட 1,027 பேரில் 9 பேர் உயிரிழந்துள்ள ...

மேலும்..

கடற்படை சிப்பாய்களில் 585 பேருக்கு கொரோனா…

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுடன் இதுவரை அடையாளம் காணப்பட்டவர்களில் 585 பேர் கடற்படையினர் என்று சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. அவர்களில் 221 பேர் இதுவரை குணமடைந்துள்ளனர் எனவும், 364 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர் எனவும் கடற்படையின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. சிகிச்சை ...

மேலும்..

வடிகான்களை சுத்தப்படுத்தி புனரமைக்கும் பணிகளை முன்னெடுப்பதற்கான அங்கீகாரத்தினை கிழக்கு மாகாணஆளுநர் இன்று மாநகர முதல்வருக்கு வழங்கினார்…

மட்டக்களப்பு மாநகர சபையின் நிர்வாக எல்லைக்குள் காணப்படுகின்ற தூர்ந்து வடிகான்களைசுத்தப்படுத்தி புனரமைக்கும் பணிகளை முன்னெடுப்பதற்கான அங்கீகாரத்தினை கிழக்கு மாகாணஆளுநர் இன்று மாநகர முதல்வருடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது வழங்கியுள்ளார். கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் மற்றும் மட்டக்களப்பு மாநகர முதல்வர் தியாகராஜாசரவணபவன் ஆகியோருக்கு இடையிலான கலந்துரையாடல் இன்று புதன்கிழமை (20.05.2020) திருகோணமலையில் உள்ள ஆளுநர் செயலாகத்தில் இடம்பெற்றது. குறித்த கலந்துரையாடலில் மட்டக்களப்பில் உள்ள வடிகான்கள் முகாமைத்துவம் பற்றி முதல்வர்அவர்களால் பல திட்டங்கள் முன்வைக்கப்பட்டன. வெள்ள காலங்களில் மக்கள் எதிர்நோக்கும்அசௌகரியங்கள் பற்றியும், அதற்கு தீர்வாக வடிகான்கள் அமைப்பு முறை மற்றும் பராமரிப்புகுறித்தும் கலந்துரையாடப்பட்டது. அண்மையில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக வடிகான்கள் நிரம்பி வழிந்து மக்கள் பெரும் பாதிப்புக்கு    உள்ளாகினர், இந்த பிரச்சினைக்கு தீர்வு காண பல முன்னெடுப்புக்கள் முதல்வர் அவர்களால்முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அதில் மட்டக்களப்பு மாநகர எல்லையில் முழுமைத்துவமானவடிகான்கள் அமைப்பு மற்றும் வடிகான்கள் பராமரிப்பு பற்றிய திட்டங்கள் அமைந்துள்ளன. ஆளுனருடனான கலந்துரையாடலில் வடிகான் விடயம் பற்றி பிரதான பேசு பொருளாக முதல்வர்அவர்களால் கருத்து பரிமாறப்பட்டதுடன், அதற்கான தீர்வுகள் சிலவற்றை நடைமுறைப்படுத்தஆளுநரால் அனுமதியும்  வழங்கப்பட்டுள்ளது. மேற்படிக் கலந்துரையாடலில் கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் நா.மணிவண்ணன், ஆளுநரின் செயலாளர், திட்டமிடல் பணிபாளர் உள்ளிட்ட அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

மேலும்..

ரோல்ஸ் ரோய்ஸ் நிறுவனம் 9,000 பேரை பணிநீக்கம் செய்ய முடிவு!

உலகளவில் தலைசிறந்த நிறுவனமாக திகழும் பிரித்தானியாவின் ரோல்ஸ் ரோய்ஸ் நிறுவனம், 9,000 பேரை பணிநீக்கம் செய்யவுள்ளதாக தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் (கொவிட்-19) காரணமாக எழுந்த விமானப் பயணத்தின் வீழ்ச்சியைச் சமாளிக்க, வருடாந்திர செலவான 1.3 பில்லியன் பவுண்டுகளை சேமிக்கும் ஒரு கட்டமாக இந்த ...

மேலும்..

விட்டா எல்லாம் இந்தியன் 2 படத்தை முடிச்சு கட்டிடுவாங்க போல.. சர்ச்சைகளுக்கு சங்கு ஊதிய படக்குழு

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உலகநாயகன் கமலஹாசன் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் இந்தியன்2. லைகா புரோடக்சன்ஸ் இந்த படத்தை மிகப் பெரும் பொருட்செலவில் தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது. ஏனெனில் இந்தியன் 2 படப்பிடிப்பில் சமீபத்தில் ஏற்பட்ட கிரேன் விபத்து காரணமாக மூன்று ...

மேலும்..

ஈழ சினிமா படைப்பாளிகளுக்கான பயிற்சிப் பட்டறையில் இணைந்துகொள்ள அழைப்பு

ஈழ சினிமாத்துறையை தொழில் மயப்படுத்தும் நோக்குடன், இலங்கை மற்றும் இந்திய தேர்ச்சியாளர்களால் விரிவுரையாற்றப்பட்டுக்கொண்டிருக்கும் நிலையில், குறித்த பயிற்சியில் இணைந்து கொள்ள paddarai.org (பட்டறை) எனும் இணையத்தளத்தை அணுகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், ஈழ சினிமாவிற்கென்று ஒரு பெரும் வரலாறு ...

மேலும்..

ஜனநாயக நாடு என்ற அந்தஸ்த்தை இழக்கும் ஆபத்து – சட்டத்தரணி சுரேன் பெர்ணான்டோ

ஜூன் முதலாம் திகதிக்கு முன்னர் நாடாளுன்றம் மீண்டும் செயற்படாவிட்டால் இலங்கை ஜனநாயக நாடு என அங்கீகரிக்கப்படுவதற்கான தகுதியை இழக்கலாம் என சட்டத்தரணி சுரேன் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார். ஜூன் 20 திகதி தேர்தலை நடத்தும் தேர்தல் ஆணையகத்தின் அறிவிப்பிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட எட்டு ...

மேலும்..

கடத்தல்கள் உண்மையாக நடக்கவில்லை என்பதைக் காட்ட ராஜிதவின் ஊடக சந்திப்பு உதவும் – ரஞ்சன்

முன்னாள் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவினால் முன்னெடுக்கப்பட்ட வெள்ளை வான் ஊடக சந்திப்பு, உண்மையான கடத்தல்கள் நடக்கவில்லை என்பதைக் காட்ட உதவும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க குற்றம் சாட்டியுள்ளார். இந்த விடயம் குறித்து நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஊடக ...

மேலும்..

மீன்பிடித் துறைமுகங்களில் 24 மணி நேர தகவல் பரிமாற்றச் சேவையை அமுல்படுத்துமாறு பணிப்புரை

இலங்கையில் தற்போது செயற்பட்டு வருகின்ற 22 மீன்பிடித் துறைமுகங்களிலும் 24 மணி நேர தகவல் பரிமாற்றச் சேவையை அமுல்படுத்துமாறு கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் திணைக்கள அதிகாரிகளுக்கு பணிப்புரை ...

மேலும்..

எரிபொருள் விலை அதிகரிப்பின் எதிரொலி – லங்கா IOC நிறுவன நிலையங்களை புறக்கணிக்க பொதுஜன பெரமுன கோரிக்கை

எரிபொருள் விலையை அதிகரிப்பதாக லங்கா IOC நிறுவனம் அறிவித்த நிலையில் குறித்த நிறுவனத்தின் எரிபொருள் நிலையங்களை புறக்கணிக்குமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அழைப்பு விடுத்துள்ளது. ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஸ்ரீலங்கா ...

மேலும்..

மத்தள, யாழ், மட்டக்களப்பு மற்றும் இரத்மலானை விமான நிலையங்களில் பயணிகள் சேவைகள் – பிரசன்ன ரணதுங்க

கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு மேலதிகமாக மத்தள, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு மற்றும் இரத்மலானை விமான நிலையங்களில் பயணிகள் சேவைகளை விரிவுபடுத்துவதில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக விமான சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது. மேலும் கொரோனா வைரஸ் நாட்டிற்குள் பரவுவதை தடுக்க பல மாற்று நடவடிக்கைகளில் அரசாங்கம் கவனம் ...

மேலும்..

ஜூன் 20 இல் பொதுத் தேர்தலை நடத்துவதற்கான சாத்தியம் இல்லை – தேர்தல்கள் ஆணைக்குழு!

நாட்டின் தற்போதைய சூழ்நிலையில் ஜூன் 20 ஆம் திகதி பொதுத் தேர்தலை நடத்துவதற்கான சாத்தியம் இல்லை என தேர்தல்கள் ஆணைக்குழு உயர் நீதிமன்றத்திற்கு தெரிவித்துள்ளது. பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையிலான ஐவரடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இந்த மனுக்கள் மூன்றாவது நாளாக ...

மேலும்..

அடக்குமுறைகள் மீண்டும் மக்களை ஒரு அவலத்தை நோக்கி கொண்டு செல்லும் – சிறிநேசன்

அடக்குமுறைகள் ஒடுக்குமுறைகள் என்பது மீண்டும் மீண்டும் மக்களை ஒரு அவலத்தை நோக்கி கொண்டு செல்லும் செயற்பாடாகத்தான் இருக்கும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் இன்று(புதன்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது ...

மேலும்..

கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 584 ஆக அதிகரிப்பு

கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகி தற்போது குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 584 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 15 பேர் குணமடைந்த நிலையிலேயே இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. அத்தோடு கொரோனா தொற்று கண்டறியப்பட்ட 1027 பேரில் 434 பேர் ...

மேலும்..

முன்னாள் போராளிகளை விடுவிப்பது குறித்து அரசாங்கம் பரிசீலனை..!

விடுதலை புலிகள் அமைப்பில் இருந்த முன்னாள் போராளிகளை விடுவிப்பது குறித்து அரசாங்கம் பரிசீலித்துவருவதாக ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டிலும் அமுனுகம தெரிவித்துள்ளார். மேலும் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு எந்தவொரு வழக்குகளும் பதிவு செய்யப்படாமல் ...

மேலும்..

ஜனாதிபதியின் அணுகுமுறை நாட்டை பேராபத்திற்கு கொண்டு செல்லும் – ஐ.தே.க. எச்சரிக்கை

ஐ.நா மனித உரிமைகள் பேரவையிலிருந்தா அல்லது ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்தா இலங்கையை ஜனாதிபதி நீக்கிக்கொள்ளப் போகிறார் என்பதை நாட்டு மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும் என ஐக்கிய தேசிய கட்சி வலியுறுத்தியுள்ளது. அத்தோடு ஜனாதிபதியின் அணுகு முறைகள் நாட்டை பேராபத்திற்கு கொண்டு செல்லும் எனவும் ஐ.தே.க ...

மேலும்..

தேர்தலுக்கு எதிரான மனு மீதான விசாரணை மீண்டும் ஒத்திவைப்பு

தேர்தலுக்கு எதிரான மனு மீதான விசாரணை நாளை (வியாழக்கிழமை) காலை 10 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையிலான ஐவர் அடங்கிய புவனெக அலுவிகார ,சிசிர ஆப்ரு ,பியந்த ஜயவர்தன, விஜித் மலல்கொட ஆகியோர் அடங்கிய நீதியரசர்கள் குழாம் ...

மேலும்..

“அரசியல் கைதிகள் விரைவில் விடுதலை”திலும் அமுனுகம!

ஜே.எப்.காமிலா பேகம் நீண்டகாலமாக சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளை விடுவிப்பது குறித்து, அரசாங்கம் கவனம் செலுத்தி வருகிறது என்று ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், பிரதியமைச்சருமான திலும் அமுனுகம தெரிவிக்கின்றார். கண்டியில் இன்று(20) புதன்கிழமை நடந்த ஊடக சந்திப்பில் ...

மேலும்..

அட்டன், செனன் தோட்டப்பகுதியில் மண்சரிவு ஏற்பட்டதால் 6 குடும்பங்களை சேர்ந்த 21 பேர் இடம்பெயர்வு…

(க.கிஷாந்தன்) மலைநாட்டில் நிலவும்  சீரற்ற காலநிலையால் மக்களின் நாளாந்த நடவடிக்கைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. அடை மழையால் ஏற்பட்டுள்ள வெள்ளம் மற்றும் மண்சரிவால் நூற்றுக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் அட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செனன் தோட்டப்பகுதியில் மண்சரிவு ஏற்பட்டதால் 6 குடும்பங்களைச் சேர்ந்த 21 பேர் இடம்பெயர்ந்துள்ளனர். இவர்களை ...

மேலும்..

கொவிட் – 19 இன் தாக்கத்தால் வவுனியாவில் சிரட்டை கைத்தொழிலாளர்கள் பாதிப்பு…

கொவிட்- 19 இன் தாக்கம் காரணமாக வவுனியாவில் சிரட்டை கைத்தொழிலாளர்கள் பாதிப்பை எதிர்நோக்கியுள்ளனர். வவுனியா, பூம்புகார் கிராமத்தில் அரச சார்பற்ற நிறுவனம் ஒன்றிடம் பெற்ற பயிற்சிகளை அடிப்படையாக கொண்டு 20 குடும்பங்கள் சிரட்டை கைத்தொழில் நடவடிக்கையில் ஈடுபட்டனர். வீட்டில் பயன்படுத்தப்படும் தேங்காயில் இருந்து பெறப்படும் ...

மேலும்..

வெற்றியைக் கொண்டாடும் இராணுவத்தினருக்கும் கொரோனா தொற்றும் என்பதை அரசாங்கம் அறிந்துகொள்ள வேண்டும் – ஸ்ரீநேஷன்

முள்ளி வாய்க்கால் நினைவு தினத்தினை அனுஸ்டிக்க விடாமல் பாதுகாப்பு கெடுபிடிகளை அதிகரித்து விட்டு மறுபுறம் அராசாங்கம் இராணுவ வெற்றி தினத்தை கொண்டாடி வருவதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் குற்றஞ்சாட்டியுள்ளார். இன்று (20) மாமாங்கத்தில் அமைந்துள்ள அவரது அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ...

மேலும்..

கந்தளாய் சுகாதார வைத்திய அலுவலகத்திற்கு பாதுகாப்பு உபகரணங்கள் அன்பளிப்பு…

எப்.முபாரக்  2020-05-20 கொவிட்-19 எனப்படும் கொரோனா தொற்றுநோய் பரவுவதை தடுக்கும் நடவடிக்கைளுக்கு உதவியாகவும் இதற்காக பணியாற்றிக்கொண்டிருக்கும் ஊழியர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டும் கந்தளாய்  சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்துக்கு மருந்து தொளிக்கும் இயந்திரம்,  முகக்கவசம், காலனி  உள்ளிட்ட பாதுகாப்பு அணிகலன்கள் கந்தளாய்  சுகாதார ...

மேலும்..

சீரற்ற காலநிலையால் அக்கரபத்தனை பிரதேச சபைக்குட்பட்ட பகுதியில் 42 குடும்பங்களை சேர்ந்த 162 பேர் இடம்பெயர்வு

(க.கிஷாந்தன்) மலைநாட்டில் தொடரும் அடை மழையுடன் கூடிய சீரற்ற காலநிலையால் அக்கரபத்தனை பிரதேச சபைக்குட்பட்ட பகுதியில் 42 குடும்பங்களைச் சேர்ந்த 162 பேர் இடம்பெயர்ந்துள்ளனர் என்று பிரதேச சபை தவிசாளர் எஸ். கதிர்ச்செல்வன் தெரிவித்தார். இதன்படி லிந்துலை எகமுதுகம பகுதியில் 14 குடும்பங்களைச் சேர்ந்த ...

மேலும்..

ஹோமகம மைதானம்: அர்ஜுனவும் எதிர்ப்பு!

ஜே.எப்.காமிலா பேகம்-ஹோமகம பகுதியில் அமைக்கப்படவுள்ள இலங்கையின் மிகப்பெரிய சர்வதேச கிரிக்கெட் மைதானத்திற்கு இலங்கைக்கு உலகக்கிண்ணத்தை வென்றெடுத்த அணியை தலைமைதாங்கிய முன்னாள் எம்.பி அர்ஜுன ரணதுங்க எதிர்ப்பு வெளியிட்டுள்ளார். இதற்கு செலவாகும் 40 மில்லியன் அமெரிக்க டொலர்களை கிரிக்கெட் விளையாட்டினை மேம்படுத்த ஒதுக்கீடு செய்யுமாறும் ...

மேலும்..

இலங்கையில் சிக்கியுள்ள இந்தியர்களை நாட்டிற்கு அழைத்துச் செல்ல நடவடிக்கை!

இலங்கையில் சிக்கியுள்ள இந்தியர்களை நாட்டிற்கு அழைத்துச் செல்வதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இலங்கைக்கான இந்திய தூதரகத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “இந்திய உயர் ஸ்தானிகராலயத்தில் மேற்கொள்ளப்பட்ட பதிவுகளின் அடிப்படையில் இந்த விமானத்திற்கான பயணிகள் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் அவசரமாக நாடு ...

மேலும்..

அங்கத்தர் அல்லாத கணக்கு திறக்கும் பணியில் இருந்து சமுர்த்தி உத்தியோகத்தர்கள் விலகிக்கொள்ளவும் – தொழிற்சங்கம்.

வி.சுகிர்தகுமார்   அங்கத்தர் அல்லாத கணக்கு திறக்கும் பணியில் இருந்து விலகிக்கொள்ளுமாறு அம்பாரை மாவட்ட சமுர்த்தி உத்தியோகத்தர்களை கேட்டுக்கொள்வதாக அகில இலங்கை சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கத்தின் அம்பாரை மாவட்ட தலைவர் மற்றும் செயலாளர் ஆகியோர் கேட்டுக்கொண்டுள்ளனர்.இது தொடர்பிலான கடிதம் ஒன்றினையும் மாவட்ட ...

மேலும்..

100 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகலாம்

100 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகலாம் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. காலநிலை அவதான நிலையத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு எதிர்வு கூறப்பட்டுள்ளது. வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “AMPHAN” என்ற மீயுயர்பாரிய சூறாவளியானது நேற்று (2020 மே 19ஆம் திகதி) பிற்பகல்11.30 மணிக்கு மணிக்கு திருகோணமலைக்கு வடகிழக்காக ஏறத்தாழ 1250 ...

மேலும்..

உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது எப்படி – சித்த ஆயுர்வேத வைத்திய அத்தியட்சகர் விளக்கம்

கொரோனா வைரஸை தடுப்பதற்கு இன்னும் மருந்துகள் கண்டுபிடிக்கப்படாத நிலையில் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதன் ஊடாக வைரஸ் தொற்றிலிருந்து எம்மை தற்காத்துக்கொள்ள முடியும் என திருகோணாமலை – நிலாவெளியில் அமைந்துள்ள கிராமிய சித்த ஆயுர்வேத வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் மஹாதேவன் ...

மேலும்..

கடந்த 24 மணித்தியாலங்களில் ஊரடங்கு விதிமுறைகளை மீறிய 660 பேர் கைது

கடந்த 24 மணித்தியாலங்களில் ஊரடங்கு விதிமுறைகளை மீறிய 660 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் தலைமையகத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்போது 256 வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று காலை 6 மணி முதல் இன்று(புதன்கிழமை) காலை 6 மணி வரையான ...

மேலும்..

நாவிதன்வெளியில் இரண்டாம் கட்ட கொடுப்பனவு வழங்கி வைப்பு

னாதிபதியின் பணிப்புரைக்கு அமைய நாவிதன்வெளி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட சமூர்த்தி பயனாளிகள், குறைந்த வருமானம் பெறுவோர், தொழில் பாதுப்புக்குள்ளானவர்கள் மற்றும் மேன்முறையீடு செய்தவர்கள் போன்றவர்களுக்கான இரண்டாம் கட்டமாக 5000 ரூபாய் கொடுப்பனவு வழங்கும் நிகழ்வு நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்றது. இதனடிப்படையில் சாளம்பைக்கேணி 3 ...

மேலும்..

பிரபாகரனின் ஆயுதப் போராட்டம் குறித்து சி.வி.விக்னேஸ்வரன் கருத்து

தம்பி பிரபாகரனின் ஆயுதப் போராட்டம் அன்றைய தமிழ்த் தலைமைகளின் கோரிக்கைகளை நடைமுறைப்படுத்த நடத்தப்பட்ட போர் என வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். பிரபாகரனின் ஆயுதப் போராட்டம் சரியானது என்று நீங்கள் கருதுகின்றீர்களா? என்ற வாராந்த கேள்விக்கு பதிலளித்து பேசிய போதே அவர் ...

மேலும்..

குவைத்திலிருந்து விசேட விமானம் ஊடாக 300 இலங்கையர்கள் அழைத்து வரப்பட்டனர்!

இலங்கையர்கள் 300 பேருடன் குவைத்திலிருந்து விமானமொன்று கட்டுநாயக்க பண்டாரநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது. நேற்று(செவ்வாய்கிழமை) இந்த விமானம் இலங்கையினை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடு திரும்ப முடியாமல் குவைத்தில் சிக்கித்தவித்த 300 இலங்கையர்களே அவ்வாறு நாட்டுக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர். குவைத்திற்கு சொந்தமான குவைத் ...

மேலும்..

இலங்கையில் சிக்கியுள்ள இந்தியர்களை நாட்டிற்கு அழைத்துச் செல்ல நடவடிக்கை!

இலங்கையில் சிக்கியுள்ள இந்தியர்களை நாட்டிற்கு அழைத்துச் செல்வதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இலங்கைக்கான இந்திய தூதரகத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “இந்திய உயர் ஸ்தானிகராலயத்தில் மேற்கொள்ளப்பட்ட பதிவுகளின் அடிப்படையில் இந்த விமானத்திற்கான பயணிகள் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் அவசரமாக நாடு ...

மேலும்..

நாடாளுமன்றம் கூட்டப்படாமல் நாளுக்கு நாள் காலம் தாழ்த்தப்படுவதானது சிறந்ததல்ல – மைத்திரிபால சிறிசேன

நாடாளுமன்றம் கூட்டப்படாமல் நாளுக்கு நாள் காலம் தாழ்த்தப்படுவதானது நாட்டின் பொருளாதாரம் உள்ளிட்ட அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு சிறந்ததல்ல என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று(செவ்வாய்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து ...

மேலும்..

ஆய்வு ஒன்றினை முன்னெடுக்க கல்வி அமைச்சு தீர்மானம்!

அரச பாடசாலையில் கடமையாற்றும் ஆசிரியர்கள் தங்களுக்கு விருப்பமான இடங்களையும் கற்பிப்பதற்கான பாடங்களையும் கண்டறிய ஆய்வு ஒன்றை நடத்த கல்வி அமைச்சு திட்டமிட்டுள்ளது. அதற்காக https//moe.gov.lk இல் “Teacher Survey Form” அல்லது https://nemis.moe.gov.lk என்ற இணைய முகவரிக்குள் பிரவேசித்து கணக்கெடுப்பு படிவத்தை பெற்றுக்கொள்ள முடியும் என ...

மேலும்..

சீரற்ற வானிலை – நாடளாவிய ரீதியில் 9 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக நாடளாவிய ரீதியில் இரண்டாயிரத்து 487 குடும்பங்களைச் சேர்ந்த 9 ஆயிரத்து 716 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இடர் முகாமைத்துவ மத்திய நிலையத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அனர்த்தங்கள் காரணமாக இதுவரை 23 பேர் உயிரிழந்துள்ளதுடன், ...

மேலும்..

அனைவரும் சர்வதேச சமூகத்துடன் இணைந்து செயற்படவேண்டும் – நவநீதம்பிள்ளை!

தமிழ் மக்களின் உரிமைகள் உறுதிப்படுத்துவதற்கும், நீதியையும், இழப்பீடுகளையும் அவர்கள் பெற்றுக்கொள்வதற்குமாக நாம் அனைவரும் சர்வதேச சமூகத்துடன் இணைந்து செயற்படவேண்டும் என ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் முன்னாள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை அழைப்பு விடுத்துள்ளார். முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை முன்னிட்டு காணொளி மூலம் வெளியிட்டுள்ள செய்தியிலேயே ...

மேலும்..

சீரற்ற வானிலை – வடக்கு மற்றும் மத்திய மலைநாட்டில் அதிகளவானவர்கள் பாதிப்பு!

இலங்கையில் தொடரும் சீரற்ற வானிலை காரணமாக வடக்கு மற்றும் மத்திய மலைநாட்டில் நூற்றுக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். வங்காளவிரிகுடாவில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் காரணமாக வடக்கில் வீசிய பலத்த காற்றினால், யாழ்ப்பாணம், நெடுந்தீவு, உடுவில், நல்லூர், பருத்தித்துரை ஆகிய பகுகளைச் சேர்ந்த 66 குடும்பங்களைச் சேர்ந்த 229 ...

மேலும்..

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1027 ஆக அதிகரிப்பு!

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட மேலும் நான்கு பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 1027 ஆக  அதிகரித்துள்ளது. அத்துடன், இதுவரை 569 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. மேலும் 449 பேர் வைத்தியசாலைகளில் ...

மேலும்..