May 25, 2020 அன்று பிரசுரிக்கப்பட்டவை

இயேசு நாதர், நபிகள், சித்தர்கள் போற்றிய அத்தி மரத்தின் சிறப்புகள் இதோ….

.அத்தி மரத்தின் உள்ள தனித்துவம் மற்றும் அதன் சிறப்புகள் குறித்து இங்கு பார்போம். அத்தி மரத்தின் சிறப்புகள்: 1. சிலை, சுதை, தாரு என மூன்று வகை சுவாமி சிலைகள் செய்யப்படுகின்றன. அப்படி தாரு எனும் மரத்திலான சிலையை செய்ய வேண்டுமெனில் அது அத்தி ...

மேலும்..

இன்று முதல் மாகாணங்களுக்கு இடையிலான பேருந்து சேவைகள் ஆரம்பம்

கொழும்பு மற்றும் கம்பஹா தவிர்ந்த ஏனைய மாகாணங்களுக்கு இடையிலான பேருந்து சேவைகள் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அதன்படி அதிகாலை 4.30 மணி முதல் மாலை 6 மணி வரையில் சுகாதார ஆலோசனைகளுக்கு உட்பட்டு இவ்வாறு போக்குவரத்து சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது. மேலும் ...

மேலும்..

நாடளாவிய ரீதியில் தளர்த்தப்பட்டது ஊரடங்கு

நாடளாவிய ரீதியில் கடந்த இரண்டு நாட்களாக அமுல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கு சட்டம் இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 5 மணியுடன் தளர்த்தப்பட்டுள்ளது. அதேநேரம் இரண்டு மாதங்களுக்கும் அதிக காலம், கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் அமுலாக்கப்பட்ட ஊரடங்கு சட்டம் இன்று முதல் தற்காலிகமாக தளர்த்தப்படுகிறது. இதன்படி, இன்று ...

மேலும்..

முடக்கநிலையின் போது தூய்மையான காற்றைப் பராமரிக்க பெரும்பாலான பிரித்தானிய சாரதிகள் தயார்!

முடக்கநிலையின் போது தூய்மையான காற்றைப் பராமரிக்கவும் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும் பிரித்தானிய சாரதிகள், தங்கள் நடத்தையை மாற்றத் தயாராக உள்ளதாக கணக்கொடுப்பின் மூலம் தெரிய வந்துள்ளது. Automobile Association நடத்திய வாக்கெடுப்பில் வாக்களித்த 20,000 வாகன சாரதிகளில் பாதிக்கும் அதிகமானோர் தூய்மையான காற்றைப் பராமரிக்க ...

மேலும்..

மந்திகையில் இராணுவ சிப்பாயைத் தாக்கிவர் கைது

யாழ். மந்திகை பகுதியில் இராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்திய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத் தடுப்புப் பொலிஸார் தெரிவித்தனர். பருத்தித்துறை மற்றும் சாவகச்சேரி ஆகிய பகுதிகளில் 3 கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய புத்தளத்தைச் சேர்ந்தவரே இராணுவச் சிப்பாய் ...

மேலும்..

பண்டிகை நாளில் இன்றும் முடங்கியது மட்டக்களப்பு – சோதனைகள் தீவிரம்

கொரோனா அச்சுறுத்தலை தடுக்கும் வகையில் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் பொலிஸ் ஊரடங்கு சட்டம் இன்றும் மட்டக்களப்பு மாவட்டத்தில் முழுமையாக அமுல்படுத்தப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் இரவு பிறப்பிக்கப்பட்டுள்ள இந்த ஊரடங்கு சட்டம் நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 05 மணி வரையில் அமுல்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு காரணமாக மட்டக்களப்பு ...

மேலும்..

யாழ். சுன்னாகம் பகுதியில் தாக்குதலுக்கு தயாராகவிருந்த சிலர் கூரிய ஆயுதங்களுடன் கைது

யாழில் வாள்கள் உள்ளிட்ட கூரிய ஆயுதங்களுடன் தாக்குதல் ஒன்றுக்கு தயாராகவிருந்த வன்முறைக் கும்பல் ஒன்றைச் சேர்ந்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர். உடுவில் அம்பலவாணர் வீதி, காலி கோவிலடியில் வைத்து இன்று (திங்கட்கிழமை) மாலை மூவரும் கைது செய்யப்பட்டனர் ...

மேலும்..

வவுனியாவில் காட்டில் தனிமையில் நின்ற ஒரு மாத யானை குட்டி மீட்பு!

வவுனியா நிருபர் வவுனியா போகாஸ்வேவ - பதவிய பிரதான வீதியில் அமைந்துள்ள காட்டுப்பகுதியில் தனிமையில் நின்ற ஒரு மாத குட்டி யானையினை வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களத்தினால் மீட்கப்பட்டுள்ளது. குறித்த காட்டுப்பகுதியில் தனிமையில் ஒர் யானைக்குட்டி நிற்பதாக இன்று (24.05) அதிகாலை வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களத்திற்கு ...

மேலும்..

ஊரடங்குச் சட்டம் காரணமாக அம்பாறை மாவட்டத்தில் வெறிச்சோடிய வீதிகள்…

பாறுக் ஷிஹான் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக அமுல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்குச் சட்டம்  காரணமாக  கிழக்கு மாகாணத்தில் அம்பாறை மாவட்டத்தில்   பொதுமக்களின் நடமாட்டம்  இன்றி பாதைகள் வெறிச்சோடி காணப்பட்டன. குறிப்பாக இம் மாவட்டத்தின் கல்முனை,  சவளக்கடை,மத்தியமுகாம்,  அக்கரைப்பற்று ,பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் பெருநாள் தின ...

மேலும்..

இலங்கையில் கொரோனா மரணம் 10 ஆக அதிகரித்தது குவைத்திலிருந்து நாடு திரும்பிய பெண்ணே சாவு

குவைத்தில் இருந்து நாடு திரும்பி திருகோணமலை இராணுவ முகாமில் கட்டாயத் தனிமைப்படுத்தலில் இருந்த பெண் ஒருவர் இன்று அதிகாலை திடீரென சுகயீனமுற்று உயிரிழந்துள்ளார். இதன்பின்னர் இடம்பெற்ற பி.சி.ஆர். பரிசோதனையில் குறித்த பெண் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாகவே உயிரிழந்துள்ளார் என்று தெரியவந்துள்ளது எனச் ...

மேலும்..

மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 1,162 ஆக அதிகரிப்பு

கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியவர்களின் மொத்த எண்ணிக்கை 1,162 ஆக அதிகரித்துள்ளது என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இன்றுமட்டும் மேலும் 14 பேர் அடையாளம் காணப்பட்டதை அடுத்து இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது என அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இதேவேளை ஏற்கனவே குவைத்தில் இருந்து நாடுதிரும்பிய மேலும் ...

மேலும்..

நடிகையை பார்க்க இந்தியாவிற்கு அழைத்து செல்லவில்லை: யாழில் இளம் யுவதி தற்கொலை!

தென்னிந்திய சின்னத்திரை நடிகையை பார்க்க இந்தியா அழைத்து செல்லவில்லை என்ற மன விரக்தியில் இளம் யுவதி ஒருவர் மண்ணெண்ணெய் ஊற்றி தனக்கு தானே தீ வைத்து உயிரிழந்துள்ளார். இந்த சம்பவத்தில் கொட்டைக்காடு மல்லாகம் பகுதியை சேர்ந்த 26 வயதுடைய சூரியகுமார் தேனுஜா என்ற ...

மேலும்..

இலங்கையில் கொரோனாவினால் 10 ஆவது மரணம் பதிவானது

குவைத்தில் இருந்து நாடுதிரும்பு தனிமைப்படுத்தப்பட்ட 52 வயதுடைய பெண் உயிரிழந்ததை அடுத்து இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது. குவைத்தில் இருந்து நாடு திரும்பி திருகோணமலை மங்கி பிரிட்ஜ் இராணுவ முகாமில் தனிமைப்படுத்தலில் இருந்த பெண்ணே திடீரென ...

மேலும்..

கொவிட்-19 நெருக்கடியிலிருந்து முக்கிய நிறுவனங்களை மீட்பதற்கான திட்டத்தை வகுக்கும் அரசு!

கொரோனா வைரஸ் (கொவிட்-19) நெருக்கடியால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள முக்கிய பெரிய நிறுவனங்களை மீட்பதற்கான திட்டத்தை பிரித்தானிய அரசு வகுத்துள்ளது. இவ்வாறான நிறுவனங்களை சரிவிலிருந்து காப்பாற்ற வழங்கும் நிதி உதவி செயற்திட்டத்திற்கு, ‘Project Birch’ என பெயரிடப்பட்டுள்ளது. குறித்த திட்டத்தை போக்குவரத்துச் செயலாளர் கிராண்ட் ஷாப்ஸ் ...

மேலும்..

கொரோனா தொற்றிலிருந்து மேலும் 13 கடற்படை வீரர்கள் பூரண குணம்

கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து மேலும் 13 கடற்படை வீரர்கள் பூரண குணமடைந்துள்ளதாக கடற்படை ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. அதற்கமைய கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்ட கடற்படை வீரர்களில் 313 பேர் இதுவரை குணமடைந்துள்ளனர். இதேவேளை இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து மொத்தமாக 695 பேர் குணமடைந்துள்ளதாக ...

மேலும்..

ஐ.சி.சி. வகுத்துள்ள சில வழிமுறைகளில் குளறுபடிகள் உள்ளன: ஷகீப் ஹல் ஹசன்

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளை மீண்டும் தொடங்கும்போது பின்பற்றப்பட வேண்டிய வழிமுறைகள் குறித்து, சர்வதேச கிரிக்கெட் சபை வகுத்துள்ள சில விடயங்களில் தனக்கு சந்தேகம் இருப்பதாக பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் சகலதுறை வீரரான ஷகீப் ஹல் ஹசன் தெரிவித்துள்ளார். உலகையே அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் பெருந்தொற்றால், கடந்த மார்ச் மாதம் முதல் அனைத்து சர்வதேச போட்டிகளும் இரத்து செய்யப்பட்டுள்ளன. இந்தநிலையில் ...

மேலும்..

நிந்தவூர் காரைதீவு பிரதேசத்தில் கடலரிப்பு-மீனவர்கள் பாதிப்பு!

பாறுக் ஷிஹான் அம்பாறை மாவட்டத்தின் கரையோரப் பிரதேசங்களில் தீவிரமடைந்து வரும் கடலரிப்பின் காரணமாக பல நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்களை மக்கள் இழந்து வருவதோடு அங்குள்ள மீனவர்களும் தொழில் நடவடிக்கைகளில் பெரிய இடர்களை எதிர்கொண்டு வருவதாக கவலை தெரிவிக்கின்றனர். குறிப்பாக அம்பாறை மாவட்டத்தில் ஒலுவில் தொடங்கி ...

மேலும்..

வவுனியாவில் கிருமி தொற்று நீக்கும் நடவடிக்கை முன்னெடுப்பு

வவுனியா புதிய பேருந்து நிலையத்தில் கொரோனா கிருமி தொற்று நீக்கல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. லண்டன் என்பீல்ட் நாகபூசனி அம்பாள் ஆலயம், வெளிச்சம் அறக்கட்டளை மற்றும் வவுனியா மாவட்ட சமூக சேவை திணைக்களத்துடன் இணைந்து இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருந்தது. அதற்கமைய கொவிட்19 சுகாதாரத்தை மேம்படுத்தல் பணியின் ...

மேலும்..

சமீபத்தில் நாடுதிரும்பிய 80 பேருக்கு கொரோனா – பிரஜைகளை அழைத்துவரும் நடவடிக்கையை பரிசீலனை செய்யும் அதிகாரிகள்

வெளிநாடுகளில் சிக்கித்தவிக்கும் இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்துவரும் நடவடிக்கைகளை பரிசீலனை செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார். இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற விசேட ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு ...

மேலும்..

சமூக இடைவெளியை பேணாத நபர்கள் கைது செய்யப்படுவர் – பொலிஸ் எச்சரிக்கை

சமூக இடைவெளியை கடைப்பிடிக்காத நபர்களை கைது செய்யும் நடவடிக்கையை நாளை முதல் முன்னெடுக்கவுள்ளதாக பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் அனில் ஜாசிங்கவினால் பொலிஸாருக்கு அதிகாரம் வழங்கும் வகையிலான விசேட சுற்றறிக்கை ஒன்று ...

மேலும்..

சாய்ந்தமருது மாளிகைக்காடு ஆழ்கடல் மீனவர்கள் தொழிலுக்கு தயாராகி வருகின்றனர்

அம்பாறை மாவட்டத்தில் அண்மைக்காலமாக நிலவிய சீரற்ற காலநிலை தற்போது படிப்படியாக சீரடைந்து வருகின்றமையினால், சாய்ந்தமருது மாளிகைக்காடு ஆழ்கடல் மீன்பிடியில் ஈடுபட்டுவந்த மீனவர்கள் தங்களது தொழிலை மேற்கொள்ள தயாராகி வருகின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஆழ்கடலில் ஏற்கனவே போடப்பட்ட ஒரு சில மீனவர்களின் ...

மேலும்..

புதிய முறையை தெளிவுபடுத்துமாறு மக்கள் விடுதலை முன்னணி கோரிக்கை

பொதுத்தேர்தலுக்காக அறிமுகப்படுத்தப்படவுள்ள புதிய தேர்தல் முறைகள் தொடர்பாக அரசியல் கட்சிகளுக்கான தெளிவுபடுத்தலை தேர்தல்கள் ஆணைக்குழு வழங்கவேண்டும் என மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஏற்கனவே நடைபெறவிருந்த பொதுத்தேர்தல் பிற்போடப்பட்டுள்ள நிலையில், ...

மேலும்..

வவுனியா விபத்தில் படுகாயமடைந்த 3 பிள்ளைகளின் தந்தை உயிரிழப்பு

வவுனியா ரயில் நிலைய வீதியில் இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த குடும்பஸ்தர் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், இன்று (திங்கட்கிழமை) காலை உயிரிழந்துள்ளார். கடந்த 15 ஆம் திகதி மாலை குருமன்காடு பகுதியில் இருந்து ரயில் நிலைய வீதியூடாக பயணித்த மோட்டார் சைக்கிள், ...

மேலும்..

நாட்டை சிங்களமயமாக்கவே தொல்லியல் துறை கையாளப்படுகிறது – துரைராஜசிங்கம்

நாடு முழுவதையும் சிங்கள பௌத்த தேசியவாதத்தின் பரப்புக்குள் கொண்டு வரும் வஞ்சக நடைமுறையாகவே தொல்லியல் துறை இலங்கையில் கையாளப்படுகிறது என இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் கி.துரைராஜசிங்கம் தெரிவித்தார். தொல்லியல் துறை தொடர்பாக அமைக்கப்பட்ட ஜனாதிபதி செயலணியின் தலைவராக முன்னாள் ...

மேலும்..

கொழும்பு பங்குச்சந்தை பரிவர்த்தனை நடவடிக்கைகள் நாளை ஆரம்பம்

கொழும்பு பங்குச் சந்தை நாளாந்த பரிவர்த்தனை நடவடிக்கைகள் நாளை (செவ்வாய்க்கிழமை) மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக கொழும்பு பங்குச் சந்தையின் பிரதான நிறைவேற்று அதிகாரி ரேணுக விஜயவர்த்தன தெரிவித்துள்ளார். அதன்படி குறித்த கொழும்பு பங்குச் சந்தையின் நாளாந்த பரிவர்த்தனை நடவடிக்கைகள் நாளை முற்பகல் 11 மணிக்கு ...

மேலும்..

ஜனகனின் எண்ணக்கருவில் VJ Digital Uni உதயமாகின்றது

கல்வியில் பின்னடையும் எதிர்காலச் சந்ததியின் நிர்க்கதி நிலையைக் கருத்திற்கொண்டு, ஜனகனின் எண்ணக்கருவில் புதிய இணையவழிக் கல்வித் தளமொன்று அறிமுகப்படுத்தப்படுகிறது. ‘VJ Digital Uni’ என்னும் இந்த இணையவழிக் கல்வித்தளத்தை, ஜனநாயக மக்கள் முன்னணியில் தலைவரும் முன்னாள் அமைச்சருமான மனோ கணேசனின் பங்குபற்றுதலுடன், ஜனநாயக ...

மேலும்..

வடகொரிய தலைவர் தலைமையில் இராணுவக் கூட்டம்: மூன்று வாரங்களுக்கு பிறகு பொதுத்தோற்றம்!

அமெரிக்காவுடனான அணுசக்தி மயமாக்கல் பேச்சுவார்த்தைகளுக்கு மத்தியில் நாட்டின் அணுசக்தி திறன்களை மேம்படுத்துவதற்கான புதிய கொள்கைகள் குறித்து விவாதிக்க வட கொரிய தலைவர் கிம் ஜோங் உன் ஒரு இராணுவக் கூட்டத்தை நடத்தியதாக அரசு ஊடகமான கொரிய மத்திய செய்தி நிறுவனம் (கே.சி.என்.ஏ) ...

மேலும்..

அம்பாறை சாய்ந்தமருது மாளிகைக்காடு ஆழ்கடல் மீனவர்கள் தொழிலுக்கு தயாராகி வருகின்றனர்

பாறுக் ஷிஹான் அம்பாறை மாவட்டத்தில் அண்மைக்காலமாக நிலவிய சீரற்ற காலநிலை தற்போது படிப்படியாக சீரடைந்து வருகின்றதை தொடர்ந்து சாய்ந்தமருது மாளிகைக்காடு  ஆழ்கடல் மீன்பிடியில் ஈடுபட்டுவந்த மீனவர்கள் தங்களது தொழிலை மேற்கொள்ள தயாராகி வருகின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன்னர்  ஆழ்கடலில் ஏற்கனவே போடப்பட்ட ஒரு ...

மேலும்..

வவுனியா விபத்தில் படுகாயமடைந்த இளம் குடும்பஸ்தர் மரணம்!

வவுனியாநிருபர் வவுனியா, புகையிரத நிலைய வீதியில் இடம்பெற்ற மோட்டர் சைக்கிள் விபத்தில் படுகாயமடைந்த இளம் குடும்பஸ்தர் சிகிச்சை பலனின்றி இன்று மரணமடைந்துள்ளார். கடந்த 15 ஆம் திகதி வவுனியா, குருமன்காடு பகுதியில் இருந்து நகர் நோக்கி புகையிரத நிலைய வீதியில் மோட்டர் சைக்கிளில் பயணித்த ...

மேலும்..

தமிழகத்தில் 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக 11 மாவட்டங்களில் இன்று (திங்கட்கிழமை) இடியுடன் கூடிய லேசான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன்படி  கிருஷ்ணகிரி,  தருமபுரி,  திருப்பத்தூர்,  சேலம்,  நாமக்கல்,  திருச்சி,  தேனி,  தென்காசி,  நீலகிரி,  கோயம்புத்தூர்,  மதுரை ஆகிய மாவட்டங்களில் ...

மேலும்..

குளவி கொட்டுக்கு இலக்காகி பெண் ஒரு வர் மரணம் ஏழு பேர் வைத்தியசாலையில் அனுமதிப்பு

ஹட்டன் கே.சுந்தரலிங்கம் ஹட்டன் பொலிஸ் பிரிவுகுட்பட்ட  டிக்கோயா பகுதியில் குளவிக்கொட்டுக்கு இலக்காகி பெண் தொழிலாளி பரிதாபமான நிலையில்    உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.  இச்சம்பவம் 25 இன்று காலை 10.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது தேயிலை மலையில் கொழுந்து பரித்துகொண்டிருந்த போது அப்பகுதியில் உள்ள மரத்தில் இருந்த குளவிகள் கலைந்து ...

மேலும்..

குவைத்திலிருந்து நாடு திரும்பி தனிமைப்படுத்தலில் இருந்த பெண் உயிரிழப்பு

குவைத்தில் இருந்து நாடு திரும்பி திருகோணமலை மங்கி பிரிட்ஜ் இராணுவ முகாமில் தனிமைப்படுத்தலில் இருந்த பெண்ணொருவர் திடீரென உயிரிழந்துள்ளார். பயாகலையைச் சேர்ந்த குறித்த பெண் இன்று (திங்கட்கிழமை) அதிகாலை திடீரென சுகயீனமுற்றுள்ளார். இதனையடுத்து இராணுவத்தினர் அவரை வைத்தியசாலையில் அனுமதித்துள்ள நிலையில், அவர் உயிரிழந்துள்ளதாக ...

மேலும்..

முன்னாள் ஜனாதிபதியுடன் உறவாடி விட்டு கட்சிக்குள் பிரச்சினையை ஏற்படுத்த முயற்சித்தார்கள் – ரவி கருணாநாயக்க

முன்னாள் ஜனாதிபதியுடன் உறவாடி இருந்துவிட்டு, ஐக்கிய தேசியக் கட்சிக்குள் பிரச்சினையை ஏற்படுத்த சிலர் முயற்சித்தார்கள் என ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். ஊடகங்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். இதன்போது கருத்து வெளியிட்ட ...

மேலும்..

கட்சி அதிகாரத்திற்கு ஆசைப்பட்டே திட்டமிட்ட வகையில் சஜித் பிரேமதாஸ ஒதுக்கப்பட்டார் – நளின் பண்டார

கட்சி அதிகாரத்திற்கு ஆசைப்பட்டே, திட்டமிட்ட வகையில் சஜித் பிரேமதாஸ ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து ஒதுக்கப்பட்டார் என சஜித் ஆதரவாளரான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்தார். கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறினார். இதன்போது கருத்து வெளியிட்ட அவர், அரசாங்கத்தின் ...

மேலும்..

ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டாலும் இதனை கடைப்பிடிக்க வேண்டும் – ஜனாதிபதி செயலகம்

நாடுமுழுவதும் அமுலில் உள்ள ஊரடங்கு உத்தரவு நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 4 மணிக்கு தளர்த்தப்படவுள்ள நிலையில் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றுவது அவசியம் என ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது. கடந்த 2 மாதங்களாக ஊரடங்கு சட்டம் தொடர்ந்தும் அமுலில் இருந்த கொழும்பு, கம்பஹா மாவட்டங்களிலும் ...

மேலும்..

பொதுத்தேர்தலை பிற்போடும் நோக்குடன் தேர்தல்கள் ஆணைக்குழு என்றும் செயற்பட்டது கிடையாது – மஹிந்த தேசப்பிரிய

பொதுத் தேர்தலை பிற்போடும் நோக்குடன் தேர்தல்கள் ஆணைக்குழு என்றும் செயற்பட்டது கிடையாது என தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார். ஊடகம் ஒன்றின் கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டார். இதன்போது கருத்து வெளியிட்ட அவர், “கொரோனா அச்சுறுத்தல் நிலவி ...

மேலும்..

கொழும்பு பேராயரை சந்தித்தார் சுகாதார அமைச்சர் பவித்ராதேவி வன்னியாராச்சி

சுகாதார அமைச்சர் பவித்ராதேவி வன்னியாராச்சிக்கும் கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்ஜித் ஆண்டகைக்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. கொழும்பு, ஆயர் இல்லத்தில் நேற்று(ஞாயிற்றுக்கிழமை)  இந்த சந்திப்பு நடைபெற்றது. இதன்போது, கொரோனா வைரஸை கட்டுப்படுத்த அரசாங்கம் மேற்கொண்டுவரும் முயற்சிகள் தொடர்பாக பேராயர் அமைச்சரிடம் கேட்டறிந்துக் ...

மேலும்..

மேலும் 07 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி!

குவைத்தில் இருந்து நாடுதிரும்பிய மேலும் 07 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகிய நிலையில் மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 1,148 ஆக அதிகரித்துள்ளது. அத்தோடு கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மேலும் 21 பேர் குணமடைந்த நிலையில் இதுவரை குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கையும் ...

மேலும்..

இதுவரை நடத்தப்பட்ட பி.சி.ஆர் சோதனைகளின் எண்ணிக்கை 50,000 ஐ தாண்டியது

கொரோனா வைரஸ் தாக்கத்தை அடுத்து இலங்கையில் இதுவரை நடத்தப்பட்ட பி.சி.ஆர் சோதனைகளின் எண்ணிக்கை 50,000 ஐ தாண்டியுள்ளது என்று சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி தெரிவித்துள்ளார். அவற்றில் 16 ஆயிரத்து 59 சோதனைகள் பெறளையில் உள்ள மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தால் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றும் ...

மேலும்..

நாட்டின் தேசிய பாதுகாப்பையும் கடந்த அரசாங்கத்தினர் பலவீனப்படுத்தினார்கள் – சந்திம வீரக்கொடி

நாட்டின் தேசிய பாதுகாப்பையும் கடந்த அரசாங்கத்தினர் பலவீனப்படுத்தினார்கள் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். இதன்போது அங்கு கருத்து வெளியிட்ட அவர், “நூற்றுக்கு 4.5 ஆக இருந்த நாட்டின் பொருளாதார வளர்ச்சியை ...

மேலும்..

மட்டு. வவுணதீவில் சட்டவிரோதமான உள்ளூர் தயாரிப்பு துப்பாக்கியுடன் ஒருவர் கைது

மட்டக்களப்பு வவுணதீவு பொலிஸ் பிரிவிலுள்ள கண்ணகிபுரம் பாவற்கொடிச்சேனை காட்டுப் பகுதியில் சட்டவிரோதமான உள்ளூர் தயாரிப்பு துப்பாக்கியுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தாண்டியடி விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு சுமார் 8.30 மணியளவில் குறித்த பகுதியை விசேட அதிரடிப்படையினர் ...

மேலும்..

ஏகாதிபத்திய ஆட்சியை நோக்கி நாடு நகர்ந்துக் கொண்டிருக்கிறதா எனும் சந்தேகம் எழுந்துள்ளது – தலதா அத்துக்கோரள

நாடாளுமன்றை அரசாங்கம் கூட்டாமல் இருப்பதனால் ஏற்படும் விளைவுக்கான பொறுப்பை அரசாங்கத் தரப்பினர் ஏற்றுக் கொள்ள வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான தலதா அத்துக்கோரள தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார். இதன்போது அங்கு ...

மேலும்..

குளவி கொட்டுக்கு இலக்காகி மூன்று பிள்ளைகளின் தாய் உயிரிழப்பு – 7 பேர் காயம்

ஹட்டன் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட டிக்கோயா தோட்டத்தில் குளவி கொட்டுக்கு இலக்காகிய பெண் தொழிலாளி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் ஏழு பேர் காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். டிக்கோயா தோட்ட தேயிலை மலையில் இன்று (திங்கட்கிழமை) காலை 10 மணியளவில் மரமொன்றிலிருந்த குளவிக் கூட்டை ...

மேலும்..

அரிசிக்கென வெளியிடப்பட்ட அதிகபட்ச சில்லறை விலை தொடர்ந்தும் செல்லுபடியாகும்

அரிசிக்கென வெளியிடப்பட்ட அதிகபட்ச சில்லறை விலை தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் தொடர்ந்தும் செல்லுபடியாகுமென பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபை தெரிவித்துள்ளது. நிர்ணய விலையை விடவும் அதிக விலைக் அரிசியை விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். அவ்வாறான வர்த்தகர்களை கண்டறியும் ...

மேலும்..

சீஷெல்ஸ் அரசாங்கத்தின் கோரிக்கைக்கு அமையவே 35 அந்நாட்டு பிரஜைகள் அழைத்துவரப்பட்டனர்!

35 சீஷெல்ஸ் பிரஜைகளை இலங்கையில் வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்த அனுமதி தருமாறு அந்நாட்டு அரசாங்கம் விடுத்த கோரிக்கைக்கு அமையவே அவர்கள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் ஜயநாத் கொலம்பகே தெரிவித்துள்ளார். இலங்கையில் கொரோனா தொற்றாளர்களாக தற்போது அதிகம் அடையாளம் காணப்படுபவர்கள் ...

மேலும்..

குழந்தைகள் மத்தியில் பரவும் கவசாக்கி நோய் குறித்து அச்சம் கொள்ளத்தேவையில்லை

குழந்தைகள் மத்தியில் பரவுவதாக தெரிவிக்கப்படும் கவசாக்கி நோய் தொற்று குறித்து தேவையற்ற பயத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ள சூழலில், குழந்தைகள் மத்தியில் பரவுவதாக தெரிவிக்கப்படும் கவசாக்கி நோய் தொற்று குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இவ்வாறான நிலையில் ...

மேலும்..

நாட்டின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது!

நாட்டின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. வானிலை அவதான நிலையத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு எதிர்வு கூறப்பட்டுள்ளது. வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில் மழை ...

மேலும்..

சிறையில் சுகாதார, மருத்துவ பரிசோதனைகள் இல்லை – தமிழ் அரசியல் கைதிகள்!

சிறைச்சாலைகளில் சுகாதார, மருத்துவ பரிசோதனைகள் இல்லை எனவும் இதன்காரணமாக தங்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு தமிழ் அரசியல் கைதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழ் அரசியல் கைதிகளினால் அனுப்பி வைக்கப்பட்டுள்ள மனு ஒன்றிலேயே இவ்வாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அனுப்பி வைக்கப்பட்டுள்ள மனுவில், “தற்போதைய சூழ்நிலையில் ...

மேலும்..

கூட்டமைப்பு கடந்த முறை பெற்ற ஆசனங்களைவிட அதிக ஆசனங்களைப் பெற வேண்டியது கட்டாயம் – ஸ்ரீதரன்

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு கடந்த முறை பெற்ற ஆசனங்களைவிட அதிகளவான ஆசனங்களைப் பெற வேண்டிய சூழ்நிலை தற்போது காணப்படுவதாக அக்கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் தெரிவித்தார் யாழ்ப்பாணத்தில் இன்று (திங்கட்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் ...

மேலும்..

கொழும்பில் ஹோட்டல்களை திறப்பதற்கு அனுமதி..!

சுற்றுலாத் துறையின் கீழ் பதிவு செய்யப்பட்ட அனைத்து ஹோட்டல்களுக்கும் உணவகங்களுக்கும் நாளை (செவ்வாய்க்கிழமை) முதல் சேவைகளை மீண்டும் ஆரம்பிக்க அனுமதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை கொழும்பு மாநாகர சபையின் பிரதம சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் ருவன் விஜேமுனி தெரிவித்துள்ளார். அந்தவகையில் கொழும்புக்குள் ...

மேலும்..

மட்டக்களப்பில் 141 பொலிஸ் உத்தியோகத்தர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்

விடுமுறையில் வீடுகளுக்குச் சென்று திரும்பிய மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள 141 பொலிஸ் உத்தியோகத்தர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். கல்லடி காவல்துறை பயிற்சி முகாமில் அவர்கள் இன்று (திங்கட்கிழமை) முதல் 7 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்படவுள்ளனர் என பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள 14 பொலிஸ் நிலையங்களில் ...

மேலும்..

மேல் மாகாணத்திலுள்ள வெளிமாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் விசேட அனுமதியைப் பெறாமல் வெளியேற முடியாது!

மேல் மாகாணத்திலுள்ள வெளிமாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் விசேட அனுமதியைப் பெறாமல் தமது மாவட்டங்களுக்குச் செல்ல அனுமதிக்கப்படமாட்டார்கள் எனத் தெரிவிக்கப்படுகின்றது. கொழும்பு, கம்பஹா மாவட்டங்களில் நாளை(செவ்வாய்கிழமை) காலை ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படவுள்ள நிலையிலேயே இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஏனைய மாகாணங்களில் மாவட்டங்களுக்கு இடையிலான போக்குவரத்துக்கு அனுமதி வழங்கப்படுகின்ற ...

மேலும்..

வழிபாட்டுத் தலங்களை மீண்டும் திறப்பது குறித்து இறுதி முடிவில்லை..!

வழிபாட்டுத் தலங்களை மீண்டும் திறப்பது குறித்து அரசாங்கம் இன்னும் இறுதி முடிவை எட்டவில்லை என புத்தசாசனம், கலாசாரம் மற்றும் மத அலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது. காலை முதல் இரவு வரை அனைத்து மாவட்டங்களிலும் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டாலும் பொதுமக்களின் பாதுகாப்பிற்காக வழிபாட்டுத் தலங்கள் ...

மேலும்..

திருமணம், விசேட விழாக்களில் எத்தனை பேர் பங்குகொள்ளலாம் – தகவல் வெளியானது!

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக திருமணம் மற்றும் விசேட விழாக்களில் பங்கேற்பவர்களின் எண்ணிக்கை வரையறுக்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் திருமணத்தை நடத்தத் திட்டமிட்டால், அதில் அதிகபட்சம் 100 விருந்தினர் மாத்திரமே பங்கேற்க வேண்டும் என சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதேவேளை, திருமண விழா மற்றும் பிற அனைத்து ...

மேலும்..

பிரபல முன்னாள் கிரிக்கெட் வீரர் ஒருவர் ஹெரோயினுடன் கைது

25 வயதுடைய பிரபல முன்னாள் கிரிக்கெட் வீரர் ஒருவர் பன்னல பகுதியில் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டுள்ளார். கிரிக்கெட் வீரர் சில காலமாக ஹெராயினுக்கு அடிமையாகியிருந்த நிலையில் நேற்று முன்தினம் (சனிக்கிழமை) 2.7 கிராம் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் அவருடன் கைது செய்யப்பட்ட மற்றுமொருவரிடம் ...

மேலும்..

ஒருநாள் மரணங்கள்- 100களில் பிரிட்டன் – 75களில் ஐரோப்பா – 1 லட்சத்தை நெருங்கும் USAயின் மொத்த மரணங்கள்…

பிரிட்டனில் கடந்த 24 மணித்தியாலத்தில் +118  இறப்புகள் பதிவாகி உள்ளதாக, கொரோனா வைரஸ் தொற்று அனர்த்தம் குறித்து, புள்ளிவிபரங்களை வெளியிட்டுவரும் உலக இணையம் தெரிவித்துள்ளது. நேற்றைய தினம் +282 ஆக பதிவாகிய இறப்புகள், இன்று  +164ஆல் மீண்டும்  குறைந்துள்ளது. இந்த நிலையில் பிரிட்டனின் மொத்த மரணங்கள், 36,793 ஆக உயர்ந்துள்ளன. அத்துடன் புதிய ...

மேலும்..

காட்சிகள் தேர்தல் தொடர்பாக இன்னும் நிலைப்பாட்டினை அறிவிக்கவில்லை – மஹிந்த தேசப்பிரிய

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் அச்சத்திற்கு மத்தியில் தேர்தலை எவ்வாறு நடத்துவது என்பது குறித்த கருத்தை தெரிவிக்குமாறு கோரியிருந்தபோதும் ஒருவர்கூட இன்னும் பதிலளிக்கவில்லை என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. பொதுத்தேர்தல் தொடர்பாக அனைத்து கட்சிகளையும் தங்கள் கருத்துக்களை சமர்ப்பிக்குமாறு ஆணைக்குழு சார்பாக வேண்டுகோள் ...

மேலும்..

வடக்கில் தீவிரவாதிகள் இருக்கலாம் ஆனால் அவர்கள் சிறிய எண்ணிக்கையிலானவர்கள் – தினேஷ் குணவர்தன

வடக்கு மக்களை பொறுத்தவரையில் அவர்களில் தீவிரவாதிகள் இருக்கலாம் ஆனால் அவர்கள் சிறிய எண்ணிக்கையிலானவர்கள் என வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்துள்ளார். இது குறித்து ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவித்த அவர், ஒவ்வொரு நாட்டிலும் இத்தகைய தீவிரவாதிகள் உள்ளனர் என்றும் உயர்ந்த ...

மேலும்..

மாகாணங்களுக்கு இடையிலான பேருந்து சேவை – கட்டுப்பாடுகள் குறித்து முழு விபரம்

மாகாணங்களுக்கு இடையிலான பேருந்து போக்குவரத்து சேவைகள் நாளை முதல் முன்னெடுக்கப்படவுள்ள நிலையில், கட்டுப்பாடுகள் குறித்து போக்குவரத்து ஆணைக்குழுவில் பல தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கொழும்பு, கம்பஹா மாவட்டங்களை தவிர ஏனைய மாவட்டங்களுக்கு இடையில் பேருந்து போக்குவரத்து சேவைகள் நாளை (செவ்வாய்க்கிழமை) முதல் முன்னெடுக்கப்படுமென போக்குவரத்து ...

மேலும்..

ஊரடங்கு தளர்த்தப்படுகின்றது என்பதற்காக ஒருபோதும் பாதுகாப்பை குறைக்ககூடாது என வலியுறுத்து!

நாட்டில் ஊரடங்கு தளர்த்தப்படுகின்றது என்பதற்காக ஒருபோதும் பாதுகாப்பை குறைக்ககூடாது என வலியுறுத்தப்பட்டுள்ளது. காதார சேவைகள் துணை இயக்குநர் பபா பலிகஹவதன இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். தனியார் துறையினருக்கு என கடந்த 11ஆம் திகதி வெளியிடப்பட்ட சுகாதார வழிகாட்டுதல்கள் மற்றும் ஆலோசனைகள் நாளை ஊரடங்கு தளர்த்தப்பட்ட ...

மேலும்..

அனுமதி கிடைத்து 12 மணித்தியாலத்திற்குள் விமானநிலையம் திறக்கப்படும் – பிரசன்ன ரணதுங்க

ஜனாதிபதி செயலணியின் அனுமதி கிடைத்து 12 மணித்தியாலத்திற்குள் பண்டாரநாயக்க சர்வதேச விமானநிலையம் திறக்கப்படும் என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். ஊடகம் ஒன்றின் கேள்விக்கு வழங்கியுள்ள விசேட செவ்வியிலேயே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி செயலணியின் பரிந்துரைகளிற்காக தற்போது காத்திருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இவ்வாறு ...

மேலும்..

நல்லாட்சி அரசாங்கம் தற்போது ஆட்சியில் இருந்திருந்தால் பல விளைவுகளை சந்திக்க நேர்ந்திருக்கும்- மஹிந்த

நல்லாட்சி அரசாங்கம் கொரோனா அச்சுறுத்தல் நிலவும் இந்தக் காலப்பகுதியில் ஆட்சியில் இருந்திருந்தால் எவ்வாறான விளைவுகளை சந்திக்க நேர்ந்திருக்கும் என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என  பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். அரசாங்க அதிகாரிகளை இலக்குவைத்து தாக்குவதன் ...

மேலும்..

வயோதிபத் தம்பதியை அச்சுறுத்தி யாழில் கொள்ளை

யாழ்ப்பாணம் – கந்தரோடை ஆலடியில் வயோதிபத் தம்பதியை அச்சுறுத்தி நகைகள் மற்றும் பணம் கொள்ளையிடப்பட்டுள்ளன. குறித்த வீட்டில் வயோதிபத் தம்பதிகள் மாத்திரம் வசித்து வரும் நிலையில், நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு கூரிய ஆயுதங்களுடன் வீட்டுக்குள் புகுந்த கும்பல், அவர்கள் இருவரையும் அச்சுறுத்தி கட்டிவைத்துவிட்டு ...

மேலும்..

பிரபாகரன் உயிர் பிழைத்திருந்தால் இன்று ஒரு செல்வாக்கு மிக்க நிலையில் இருந்திருப்பார் – சரத் பொன்சேகா

வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிர் பிழைத்திருந்தால், அவர் இன்று ஒரு செல்வாக்கு மிக்க நிலையில் இருந்திருப்பார் என முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். சிங்கள தொலைக்காட்சி ஒன்றின் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர், கருணா போன்றவர்கள் தற்போது ...

மேலும்..

நாளுக்கு நாள் டெங்கு காய்ச்சலினால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கையில் அதிகரிப்பு!

மழையுடனான வானிலை காரணமாக நாட்டின் 10 மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் பரவுவதற்கான சாத்தியமுள்ளதாக மீண்டும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவின் பணிப்பாளர் டொக்டர் அருண ஜயசேகர இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். கொழும்பு, கம்பஹா, களுத்துறை, காலி, மாத்தறை, இரத்தினபுரி, கேகாலை, கண்டி, ...

மேலும்..

ஒரே நாளில் 52 பேருக்கு கொரோனா தொற்று – மொத்த எண்ணிக்கை 1,141 ஆக உயர்வு

கொரோனா தொற்றுக்கு உள்ளாகிய 52 பேர் ஒரே நாளில் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், நாட்டில் கொரோனா தொற்றுள்ளோரின் எண்ணிக்கை ஆயிரத்து 141 ஆக அதிகரித்துள்ளது. இலங்கையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கொரோனா தொற்றுக்கு உள்ளாகிய 52 பேர் அடையாளம் காணப்பட்டனர். இவர்களில் 49 பேர் குவைத்திலிருந்து நாடு ...

மேலும்..

ரஷ்யாவில் சிக்கித்தவித்த 181 பேர் நாடு திரும்பினர்

ரஷ்யாவில் சிக்கித்தவித்த 181 பேர் விசேட விமானம் மூலம் நாட்டுக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர். ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸிற்கு சொந்தமான யுஎல் -1206 சிறப்பு விசேட விமானம் மூலம் குறித்த 181 பேரும் ரஷ்யாவின் மொஸ்கோவில் இருந்து இன்று (திங்கட்கிழமை) காலை 5.50 மணியளவில் நாட்டுக்கு ...

மேலும்..

கடந்த 24 மணித்தியாலங்களில் 1710 பேர் கைது

ஊரடங்கு உத்தரவை மீறிய குற்றச்சாட்டில் கடந்த 24 மணித்தியாலங்களில் 1710 பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன், இன்று (திங்கட்கிழமை) காலை 6 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் ஊரடங்கு உத்தரவை மீறி பயணித்த 557 வாகனங்களும் கையகப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உலகை அச்சுறுத்தும் ...

மேலும்..

நடைப்பயிற்சியில் ஈடுபடும் போது முகக்கவசம் அணிந்து கொள்ளுமாறு அறிவுறுத்தல்!

நடைபயிற்சியில ஈடுபடுபவர்கள் முகக்கவசங்களை அணிவது மிகவும் உகந்தது என அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். வீதிகளில் நடைபயிற்சியில் ஈடுபடுபவர்கள் முகக்கவசங்களைப் பயன்படுத்துவது அவசியமாகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து சுகாதார தரப்பினர் ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் ...

மேலும்..

யாழில் வீட்டின் மீது பெற்றோல் குண்டுத் தாக்குதல்

யாழ். உடுவில் அம்பலவாணவர் வீதியில் எவரும் இல்லாத வீடொன்றின் மீது பெற்றோல் குண்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அத்தோடு அந்த வீட்டின் மீது மிளகாய்த் தூள் கரைசலும் விசிறப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு 9 மணியளவில் இடம்பெற்றுள்ளது. குறித்த வீட்டில் எவரும் இல்லாதமையினால் ...

மேலும்..