May 30, 2020 அன்று பிரசுரிக்கப்பட்டவை

நாடு முழுவதும் மழையுடனான வானிலை அதிகரிக்கும்

நாட்டில் தென்மேற்கு பருவப் பெயர்ச்சி மழை நிலைமை படிப்படியாக நாடு முழுவதும் அதிகரித்து வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களில் பல இடங்களில்மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது என அத்திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் ...

மேலும்..

காலஞ்சென்ற ஆறுமுகன் தொண்டமானின் இறுதிக் கிரியைகள் இன்று

காலஞ்சென்ற அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் இறுதிக் கிரியைகள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நோர்வூட் சௌமியமூர்த்தி தொண்டமான் மைதானத்தில் இடம்பெறவுள்ளன. இந்நிலையில்,  குறிப்பிட்ட அளவான மக்கள் ஒன்றுகூடுவதற்கே அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் தமது 55ஆவது வயதில் கடந்த ...

மேலும்..

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை அதிகரிப்பு

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 07 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என சுகாதார அமைச்சின் தொற்றுநோய் பிரிவு தெரிவித்துள்ளது. இந்நிலையில், இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை நிலவரப்படி நாட்டில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,620 ஆக அதிகரித்துள்ளதாக அந்த பிரிவு மேலும் ...

மேலும்..

நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் அமுல்

நாடளாவிய ரீதியில் தற்போது ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. நாடுமுழுவதும் நேற்று (சனிக்கிழமை) இரவு 10 மணி முதல் அமுலாக்கப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம், நாளை அதிகாலை 4 மணிவரை நீடிக்கப்படவுள்ளது. அதன் பின்னர் நாளை முதல் எதிர்வரும் 3ஆம் திகதி வரையில் அனைத்து மாவட்டங்களிலும் இரவு ...

மேலும்..

தேர்தலை நடத்துவதற்கான நடவடிக்கைகளை ஆணைக்குழு முன்னெடுக்க வேண்டும் – பிரதமர் மஹிந்த

பொதுத் தேர்தலை நடத்துவதற்கான ஆயத்த நடவடிக்கைகளை தேர்தல்கள் ஆணைக்குழு முன்னெடுக்க வேண்டும் என இலங்கைப் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். கண்டியில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர், “பொதுத் தேர்தலொன்றை நிச்சயமாக நடத்தியே ஆகவேண்டும். இதற்கு தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவரும் தயாராகிக் கொள்ள ...

மேலும்..

துணைவேந்தர் மதிப்பீட்டுக் குழுவுக்கான பல்கலைக்கழகப் பிரதிநிதிகள் தெரிவு!

கடந்த ஒரு வருடத்துக்கும் மேலாக வெற்றிடமாகக் காணப்படும் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக துணைவேந்தர் பதவிக்கான மதிப்பீட்டுக் குழுவுக்கான யாழ்ப்பாண பல்கலைக்கழக மூதவைப் பிரதிநிதிகள், பேரவையினால் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற யாழ். பல்கலைக்கழக பேரவையின் மாதாந்த கூட்டத்திலேயே இந்தத் தெரிவு இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் ...

மேலும்..

நாடு இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது – மைத்திரி

நாடு இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அறிவித்துள்ளார். கண்டியில் இன்று (சனிக்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி, எதிர்வரும் பொதுத் தேர்தலை இலக்காகக் கொண்டு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திர பொதுஜன பெரமுனவும் பிரச்சாரத்தை முன்னெடுக்க ...

மேலும்..

நாட்டில் இதுவரை மேலும் 05 பேருக்கு கொரோனா – மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 1563 ஆக அதிகரிப்பு

நாட்டில் மேலும் இரண்டு பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 1563 ஆக அதிகரிதுள்ளது. இன்று (சனிக்கிழமை) 5:30மணி வரையான நிலவரப்படி 05 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

மேலும்..

நெடுந்தீவு- குறிகட்டுவான் படகு சேவை மீள ஆரம்பம்

கொரோனா தாக்கத்தின் காரணமாக நிறுத்தப்பட்டிருந்த நெடுந்தீவு- குறிகட்டுவான் படகுசேவைகள் எதிர்வரும் திங்கட்கிழமையிலிருந்து வழமைக்குத் திரும்பவுள்ளதாக நெடுந்தீவு பிரதேச செயலாளர் சத்தியசோதி அறிவித்துள்ளார் நெடுந்தீவு- குறிகட்டுவான் இடையிலான படகு சேவைகள் வழமைபோன்று இடம்பெறும். வட.தாரகை காலை 8 மணிக்கு குறிகட்டுவானிலிருந்து நெடுந்தீவு புறப்பட்டு மாலை ...

மேலும்..

வவுனியாவில் வெடிக்காத நிலையில் மோட்டார் செல்கள் கண்டெடுப்பு

வவுனியா- ஈச்சங்குளம் பகுதியிலுள்ள வீடொன்றின் காணியிலிருந்து வெடிபொருட்களை  பொலிஸார் இன்று (சனிக்கிழமை) கண்டெடுத்துள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது,  ஈச்சங்குளம் – சாளம்பன் பகுதியிலுள்ள தனியார் காணியை அதன் உரிமையாளர் உழவியந்திரம்  ஊடாக பண்படுத்தியுள்ளார். இதன்போது பண்படுத்தப்பட்ட குறித்த காணியில் சந்தேகத்திற்கிடமான பொருட்கள் இருப்பதை ...

மேலும்..

சூரியனின் விழுதுகள் நிகழ்வில் சம்பந்தனின் செவ்வி (வீடியோ)

https://www.facebook.com/varatharajah.nitharsan/videos/2645884345526778/

மேலும்..

உண்மை, நீதி, நியாயத்தின் அடிப்படையில் தீர்வு கிடைப்பதை கோட்டா தடுக்கமுடியாது! இடித்துரைக்கின்றார் இரா.சம்பந்தன்

தமிழ் மக்களுக்குத் தீர்வு கிடைப்பதை ஜனாதிபதி கோட்டாபயராஜபக்ஷவால் தடுக்க முடியாது என்று தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார். சூரியன் எவ்.எம். வானொலியில் இன்று காலை ஒலிபரப்பான ‘விழுதுகள்’ நிகழ்ச்சியிலேயே அவர் இவ்வாறு கூறினார்.  அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு - தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வு ...

மேலும்..

பாடசாலைகளை மீள திறப்பது குறித்து கலந்துரையாடல்

கொவிட் 19 கொரோனா தொற்று நோய் காரணமாக மூடப்பட்டுள்ள பாடசாலைகளை மீள திறப்பது தொடர்பாகவும் சுகாதார முன்னேற்பாடுகள் தொடர்பாகவும் கலந்துரையாடலொன்று கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் இன்று (சனிக்கிழமை) இடம்பெற்றது. சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் எம்.எச்.றிஸ்வின் தலைமையில் நடைபெற்ற ...

மேலும்..

நாட்டை முன்னேற்றுவதற்கான வேலைத்திட்டங்களை அரசாங்கம் ஆரம்பிக்க வேண்டும் – சஜித்

நாடாளுமன்றை மீளக்கூட்டி, நாட்டை முன்னேற்றுவதற்கான வேலைத்திட்டங்களை அரசாங்கம் ஆரம்பிக்க வேண்டும் என முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாச கேட்டுக் கொண்டார். கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டிருந்த அவர், மக்களை திசைத்திருப்பும் கருத்துக்களைத்தான் அரசாங்கம் ...

மேலும்..

மன்னாரில் பனை சார் உற்பத்தி தொழிலை மேற்கொள்வோர் தொடர்ந்தும் பாதிப்பு

மன்னார் பிரதேசச் செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட மன்னார் தீவுப்பகுதிக்குள் பனை உற்பத்தி சார்ந்த தொழிலை மேற்கொள்ளும் சுமார் 8 கிராமங்களைச் சேர்ந்த 300 குடும்பங்கள் வாழ்வாதாரத்தை இழந்து பல்வேறு துன்பங்களுக்கு மத்தியில் வாழ்ந்து வருகின்றனர். குறித்த கிராம மக்கள் கூலித்தொழிலையும் விறகு வெட்டுதல், ...

மேலும்..

இராணுவப் பின்னணியையுடைய ஒருவரை வடக்கு மாகாண ஆளுநராக ஏற்கமுடியாது- சிவமோகன்

இராணுவப் பின்னணியையுடைய ஒருவரை வடக்கு மாகாண ஆளுநராக  ஒருபோதும் ஏற்க முடியாதென முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வைத்திய கலாநிதி சிவமோகன் தெரிவித்துள்ளார்.வடக்கு மாகாணத்திற்கு புதிய ஆளுநர் ஒருவர் நியமிக்கப்பட உள்ளதாகவும் அவர் இராணுவ பின்னணியையுடையவர் என்றும் செய்தி வெளியாகியுள்ளமைக்கு பதிலளிக்கும் வகையில்  ...

மேலும்..

மலையகத்துக்கு விடுதலை வேண்டும்: மட்டக்களப்பில் தனிநபர் போராட்டம்

மலையக மக்கள் இதுவரைப்பட்ட கஷ்டங்களை போக்க நஷ்டத்தில் இயங்கும் தனியார் கம்பனிகளை அரசு பொறுப்பேற்று, மலையகத்துக்கு விடுதலையை பெற்றுக்கொடுக்க  வேண்டுமென கோரி தனிநபரொருவர் மட்டக்களப்பில் உண்ணாவிரத போராட்டத்தில்  இன்று (சனிக்கிழமை) காலை முதல் ஈடுபட்டுள்ளார். நுவரெலியா- பூண்டுலோயாவைச் சோ்ந்த சண்முகம் மகேஸ்காந் (26 ...

மேலும்..

முன்னாள் ஆளுநர் மார்ஷல் பெரேரா காலமானார்

ஊவா மாகாணத்தின் முன்னாள் ஆளுநர் மார்ஷல் பெரேரா தனது 89 வயதில் காலமானார். கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் காலமானார். இவர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேராவின் தந்தை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும்..

கொரோனா தொற்றில் இருந்து மேலும் 27 பேர் மீண்டனர்

நாட்டில்  கொரோனா வைரஸ் தொற்று உறுதியானவர்களில் மேலும் 27 பேர் குணமடைந்து வெளியேறியுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. அதன்படி இதுவரை நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து பூரண குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து 781 பேர் வெளியேறியுள்ளதாகவும் அறிவித்துள்ளது. இதுவரை கொரோனா வைரஸ் தொற்று உறுதியான ...

மேலும்..

புலம்பெயர் தொழிலாளர்களை நாட்டிற்கு மீள அழைத்து வருவதற்கு வெளிநாட்டு உறவுகள் அமைச்சர் உறுதி

புலம்பெயர்ந்த தொழிலாளர்களை நாட்டிற்கு மீள அழைத்து வருவதற்கு வெளிநாட்டு உறவுகள் அமைச்சர் உறுதி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக வெளிநாட்டு உறவுகள் அமைச்சு வெளியிட்டுளள ஊடக அறிக்கையில் இந்தவிடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில், “வெளிநாடுகளில் குறிப்பாக தமது சட்ட ரீதியான அந்தஸ்த்துக்களை மற்றும் / அல்லது ...

மேலும்..

யாழில் ஆறுமுகன் தொண்டமானுக்கு அஞ்சலி

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான மறைந்த ஆறுமுகன் தொண்டமானுக்கு யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் (சனிக்கிழமை) அஞ்சலி செலுத்தப்பட்டது. யாழ்ப்பாணம் நண்பர்கள் அமைப்பின் ஏற்பாட்டில், நல்லை திருஞானசம்பந்தர் ஆதீனத்திற்கு அருகாமையில் பருத்தித்துறை வீதியில் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது. இதன்போது அன்னாரது உருவப்படத்திற்கு மலரஞ்சலி ...

மேலும்..

பலத்த பாதுகாப்புடன் கொட்டகலைக்கு கொண்டு செல்லப்பட்டது தொண்டமானின் பூதவுடல்

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் அமரர். ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல் பலத்த பாதுகாப்புடன் இன்று (சனிக்கிழமை) முற்பகல் கொட்டகலை தொண்டமான் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்துக்கு எடுத்துச்செல்லப்பட்டது. கொழும்பில் இருந்து ஹெலிகொப்டரில் எடுத்து வரபட்ட அன்னாரின் பூதவுடல் நேற்று, வேவண்டன் இல்லத்தில் வைக்கப்பட்டது. மதத் ...

மேலும்..

இந்தியா, அவுஸ்ரேலியாவிலிருந்து 304 பேர் நாடுதிரும்பினர்

கொரோனா வைரஸ் தாக்கத்தை அடுத்து மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையினால் இலங்கைக்கு வர முடியாமல், அவுஸ்ரேலியாவிலும் இந்தியாவிலும் சிக்கியிருந்த இலங்கையர்கள் 304 பேர் இன்று நாட்டினை வந்தடைந்துள்ளனர். ரீலங்கன் எயார்லைன்ஸின் 02 விசேட விமானங்கள், இன்று (சனிக்கிழமை) அதிகாலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தன. முதலில் ...

மேலும்..

மீண்டும் இராணுவ ஆட்சியை ஏற்படுத்துவதற்கு அரசு முயற்சி- மணிவண்ணன்

தமிழ் மக்களின் ஜனநாயக ரீதியான உரிமைக் குரல்களை நசுக்கி, மீண்டும் ஒரு இராணுவ ஆட்சியை  ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்வதாக தமிழ் தேசிய  மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளரும் சட்டத்தரணியுமான வி.மணிவண்ணன் குற்றம் சுமத்தியுள்ளார். நாகர் கோயில் குண்டுவெடிப்பு சம்பவம், அமைச்சுக்களின் செயலாளர்களாக ...

மேலும்..

ஜூன் முதலாம் திகதி முதல் 33 ரயில்கள் சேவையில் – ரயில்வே திணைக்களம்

ஜூன் முதலாம் திகதி முதல் 33 ரயில்கள் சேவையில் ஈடுபடுத்தப்படும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. 19,593 பேர் வேலைக்காக பயணிக்க ரயில்வே திணைக்களத்தில் பதிவு செய்துள்ளதாக ரயில்வே பொது முகாமையாளர் டிலந்த பெர்னாண்டோ தெரிவித்தார். இதேவேளை அடுத்த வாரம் முதல் 5000 க்கும் ...

மேலும்..

ஆறுமுகன் தொண்டமானுக்கு வவுனியாவில் பல்வேறு அமைப்புக்களினால் அஞ்சலி

றைந்த முன்னாள் அமைச்சரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவருமான ஆறுமுகன் தொண்டமானுக்கு வவுனியாவில் பல்வேறு அமைப்புக்களினால் இன்று (சனிக்கிழமை) அஞ்சலி செலுத்தப்பட்டது. வவுனியா- கூமாங்குளம் பொதுநோக்கு மண்டபத்தில் பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த அஞ்சலி நிகழ்வின்போது அன்னாரது உருவபடத்திற்கு நினைவு சுடர் ...

மேலும்..

கொரோனாவை காரணம் காட்டி வடக்கில் இராணுவம் குவிப்பு-செல்வம்

இலங்கையின் வடபுலத்தில் கொரோனா அச்சுறுத்தலை அடிப்படையாக கொண்டு தொடர்ந்தும் இராணுவ மயப்படுத்தல் செயற்பாடுகள் இடம்பெற்று வருவதாக முன்னாள் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் விசனம் தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “வடக்கு மாகாணம் இராணுவ மயப்படுத்தலுக்குள்ளாக்கப்பட்டு வருவது ...

மேலும்..

நாட்டில் தென்மேற்கு பருவப் பெயர்ச்சி மழை நிலைமை படிப்படியாக உருவாகி வருகின்றது – வளிமண்டலவியல் திணைக்களம்

நாட்டில் தென்மேற்கு பருவப் பெயர்ச்சி மழை நிலைமை படிப்படியாக உருவாகி வருகின்றது என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. அதன்படி மேல், சப்ரகமுவ,மத்திய, வடமேல்மற்றும் தென் மாகாணங்களில் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது களுத்துறை, ...

மேலும்..

நாடாளுமன்றத்தை கலைப்பது அல்லது காலத்தை நீடிப்பது என்பது அதன் நிரந்தர முடிவைக் குறிக்கவில்லை – உயர் நீதிமன்றம்

நாடாளுமன்றத்தை கலைப்பது அல்லது காலத்தை நீடிப்பது என்பது அதன் நிரந்தர முடிவைக் குறிக்கவில்லை என்று உயர் நீதிமன்றம் நேற்று (வெள்ளிக்கிழமை) அறிவித்துள்ளது. இடையீட்டு மனுதாரரான, சீத்தாவக்கை பிரதேச சபை உறுப்பினர் பிரதீப் குமார சார்பில் மன்றில் ஆஜரான சட்டத்தரணி கிரிஷ்மால் வர்ணசூரிய, சட்டமன்றத்தை ...

மேலும்..

இரத்ததானம் செய்வதற்கு முன்வருமாறு மக்களுக்கு அழைப்பு

யாழ்.போதனா வைத்தியசாலையிலுள்ள இரத்த வங்கியில் கடந்த சில வாரங்களாக தேவையான குருதி போதிய அளவில் கிடைக்கவில்லை என்று யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார். இதனால் குருதி கொடையாளர்கள் இரத்ததானம் செய்வதற்கு முன்வர வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார். இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் ...

மேலும்..

ரணிலுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை…!

ஐக்கிய தேசிய தேசிய கட்சி செயற்குழு உறுப்பினர்களில் 40 க்கும் மேற்பட்டவர்கள், தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டுவர முடிவு செய்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார். ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையகத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) இந்த ...

மேலும்..

மருதமுனையில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை வெளியேறுமாறு நீதிமன்றம் உத்தரவு

மருதமுனை அல்-மனார் மத்திய கல்லூரியின் பின்புறமாக உள்ள நவியான் குளப்பகுதியில் கமநல சேவைகள் திணைக்களத்தின் பராமரிப்பின் கீழ் உள்ள அரச காணிகளில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை அந்தக் காணிகளிலிருந்து உடனடியாக வெளியேறுமாறு கல்முனை நீதவான் நீதிமன்றத்தினால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த அரச காணிகளில் பலவந்தமாக ...

மேலும்..

யாழில் பேஸ்புக் காதலியை பார்க்க வந்த இளைஞனுக்கு நேர்ந்தகதி…!

பேஸ்புக் காதலியை பார்க்க வந்த இளைஞரை வழிமறித்து தாக்குதல் நடத்திய கும்பல் ஒன்று அவரிடம் இருந்து கைத்தொலைபேசி மற்றும் ஒரு தொகை பணத்தினையும் பறித்துச் சென்றுள்ளனர். கொக்குவில் பொற்பதிப் பகுதியில் நேற்று (வெள்ளிக்கிழமை) இச்சம்பவம் நடந்துள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர். இச் சம்பவத்தில் தலையில் ...

மேலும்..

நல்லூர் பிரதேச சபைக்கு 7.5 மில்லியன் ரூபாய் வருமான இழப்பு – தவிசாளர் த.தியாகமூர்த்தி

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா தாக்கத்தினால் அமுல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கு சட்டம் காரணமாக நல்லூர் பிரதேச சபைக்கு 7.5 மில்லியன் ரூபாய் வருமான இழப்பு ஏற்பட்டுள்ளதாக தவிசாளர் த.தியாகமூர்த்தி தெரிவித்துள்ளார். அத்தோடு எதிர்வரும் 1 ஆம் திகதியில் இருந்து தமது பிரதேச சபையின் எல்லைக்குள் இருக்கும் ...

மேலும்..

வவுனியாவில் இருவேறு கத்திக்குத்து சம்பவங்கள்: பெண்கள் உட்பட மூவர் காயம்

வவுனியாவில் நேற்று (வெள்ளிக்கிழமை) மாலை இடம்பெற்ற இருவேறு கத்திகுத்து சம்பவங்களில் இரண்டு பெண்கள் உட்பட மூன்று பேர் படுகாயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காதல் விவகாரம் காரணமாக கற்பகபுரம் பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் ஆண் ஒருவரும், பெண் ஒருவரும் படுகாமடைந்துள்ளனர். இதேவேளை அலகல்லு ...

மேலும்..

அம்பாறையில் பலத்த காற்றுடன் கூடிய மழை: மின்சாரம் துண்டிப்பு

அம்பாறை மாவட்டத்தின் பல பிரதேசங்களில், திடீரென வீசிய பலத்த காற்று மற்றும் மழையினால் பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகினர். அம்பாறை நகரப்பகுதி,  காரைதீவு,  கல்முனை, மருதமுனை, பெரியநீலாவணை, நற்பிட்டிமுனை, சேனைக்குடியிருப்பு, மணல்சேனை மற்றும் சம்மாந்துறை, சவளைக்கடை , மத்திய முகாம் போன்ற பகுதிகளில்  வீசிய ...

மேலும்..

தமிழீழ சைபர் படையணியென்ற பெயரில் அரச இணையதளங்கள் மீது சைபர் தாக்குதல்!

பொது நிர்வாக அமைச்சு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் ஆகியவற்றின் இணையதளங்கள் மீது தமிழீழ சைபர் படையணியென்ற பெயரில் சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. சைபர் தாக்குதலுக்குப் பின்னர் இலங்கை கணினி அவசரநிலை பதிலளிப்பு குழு மற்றும் இலங்கையின் தகவல் மற்றும் தொடர்பு தொழில்நுட்ப நிறுவனத்திற்கு அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விமானப்படை ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார். இரண்டு வலைத்தளங்களையும் சீரமைக்க ...

மேலும்..

புலனாய்வு அமைப்புகளை ஐக்கியப்படுத்து அவசியம் – கமல் குணரத்தன

கடந்த ஆட்சியின் போது தனித்து செயற்பட்ட புலனாய்வு அமைப்புகளை ஐக்கியப்படுத்து அவசியம் என பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார். தேசிய பாதுகாப்பினை பேணுவதற்காக புலனாய்வு பிரிவினருக்குடி புத்துயுர் கொடுப்பதற்கான ஜனாதிபதியின் உத்தரவின் கீழ் இது இடம்பெறுவதாக தெரிவித்துள்ளார். தீவிரவாதத்தினையும் போதைப்பொருள் கடத்தற்காரர்களையும் ...

மேலும்..

இலங்கைக்கு வருகை தந்துள்ள பிலிப்பைன்ஸ் நாட்டு கப்பல்கள்

இலங்கையில் தங்கியுள்ள பிலிப்பினியர்களை பிலிப்பைன்ஸ் நாட்டுக்கு மீள அழைத்துச் செல்ல  BRP Davao del Sur  மற்றும் BRP Ramon Alcaraz  ஆகிய கப்பல்கள் கொழும்பு துறைமுகத்திற்கு இன்று (சனிக்கிழமை) வருகைத் தந்துள்ளன. கொரோனா வைரஸ் பரவலால் விதிக்கப்பட்டுள்ள பயணக் கட்டுப்பாடுகள் காரணமாக சொந்த ...

மேலும்..

நுவரெலியாவில் ஞாயிறு நள்ளிரவு வரை ஊரடங்கு அமுல்

நுவரேலியா மாவட்டத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) நள்ளிரவு முதல் நாளை நள்ளிரவு வரை ‘தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம்’ நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி இன்றும் நாளையும் நுவரேலியா மாவட்டத்தில் ஊரடங்கு நடைமுறையில் இருக்கும் என பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது. இந்த காலத்தில் அத்தியாவசியச் சேவைகள் தவிர மற்றவை நடைபெறாவது ...

மேலும்..

மக்களின் உணர்வைப் புரிந்து சுமந்திரன் செயற்படவேண்டும் – மாவை

சுமந்திரன் சிங்கள ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணல் விவகாரம் நேற்று இடம்பெற்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளின் தலைவர்கள் கூட்டத்தில் பாரியதொரு பூகம்பம் வெடிக்கும் என எதிர்பார்க்கப்பட்டபோதும் கூட்டம் சுமூகமாகவ இடம்பெற்றதாக அறிய முடிகின்றது. இரா.சம்பந்தன் தலைமையில் நேற்று மாலை கொழும்பில் இடம்பெற்ற ...

மேலும்..