June 1, 2020 அன்று பிரசுரிக்கப்பட்டவை

முரசுமோட்டை மக்கள் ஒன்றியத்தால் சாதனை மாணவனுக்கு உதவி

கிளிநொச்சியில் கழிவுப்பொருட்களை கொண்டு கார் ஒன்றினை தயாரித்த மாணவனுக்கு முரசுமோட்டை மக்கள் ஒன்றியம் பிரான்ஸ் அமைப்பினால் உதவித்தொகை வழங்கி வைக்கப்பட்டது. கடந்த வாரம் கிளிநொச்சி பரந்தனை சேர்ந்த ரொசான் என்ற மாணவன் நால்வர் பயணிக்க கூடிய கார் ஒன்றினை அண்மையில் தயாரித்திருந்தார். குடும்ப வறுமையிலும் ...

மேலும்..

இடுகம கொவிட்- 19 சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்தின் மீதி 1,217 மில்லியனாக அதிகரிப்பு

தனிப்பட்ட, நிறுவன அன்பளிப்புகள் மற்றும் நேரடி வைப்புகளுடன் இடுகம கொவிட் -19 சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்தின் வைப்பு மீதி 1,217 மில்லியனாக அதிகரித்துள்ளது. சோமாவதி ரஜமகா விகாராதிபதி கலாநிதி பஹமுனே ஸ்ரீ சுமங்கள நாயக தேரர் 500000 ரூபாவை நிதியத்திற்கு அன்பளிப்புச் ...

மேலும்..

சிங்கப்பூரில் சிக்கித் தவிக்கும் இலங்கையர்கள் 291 பேர் தாயகம் திரும்பவுள்ளனர்

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடு திரும்ப முடியாமல் சிங்கப்பூரில் சிக்கித் தவிக்கும் இலங்கையர்கள் சிலர் இன்றைய தினம் நாடு திரும்பவுள்ளனர். அதற்கமைய அங்கு தங்கியுள்ள 291 பேர் இவ்வாறு இன்று (செவ்வாய்க்கிழமை) நாடு திரும்பவுள்ளனர் என இராணுவத் தளபதி சவேந்திர சில்வா ...

மேலும்..

டெங்கு ஒழிப்பு தொடர்பில் ஜனாதிபதி, பிரதமர் விசேட கவனம்

தற்போதைய மழையுடன் கூடிய காலநிலை குறைந்துவரும் நிலையில் ஏற்படக்கூடிய டெங்கு நோய் பரவலை கட்டுப்படுத்துவதற்கு உடனடியாக தயாராகுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும் ஆளுநர்கள் மற்றும் உள்ளுராட்சி தலைவர்கள் உட்பட சுகாதார அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தள்ளனர். ஒவ்வொரு வருடமும் டெங்கு ...

மேலும்..

பொதுத்தேர்தல் திகதியை ஆட்சேபிக்கும் மனுக்கள் மீதான தீர்ப்பு இன்று

பொதுத் தேர்தல்  திகதி குறித்த வர்த்தமானி அறிவிப்பை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுக்களை விசாரணைக்கு எடுத்துக்கொள்வது தொடர்பான தீர்ப்பு இன்று வழங்கப்படவுள்ளது. இந்த தீர்ப்பு இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை 3 மணிக்கு உயர் நீதிமன்றினால் வழங்கப்படவுள்ளது. தேர்தல் தினத்தை சவாலுக்கு ...

மேலும்..

சிறைச்சாலைகளில் இருந்து குற்றங்களை வழிநடத்துவோருக்கு ஜனாதிபதியின் எச்சரிக்கை

பாதாள தலைவர்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரர்கள் சிறைச்சாலைகளில் இருந்து குற்றங்களை வழிநடத்தும் செயற்பாடுகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ எச்சரிக்கை விடுத்துள்ளார். சிறைச்சாலைகளின் உள்ளக நிலைமைகள் பற்றி ஆராய்வதற்காக நேற்று (திங்கட்கிழமை) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே அவர் ...

மேலும்..

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1643 ஆக அதிகரிப்பு

நாட்டில் நேற்றைய தினம் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான 10 பேர் அடையாளங்காணப்பட்டுள்ளனர் என சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது. இதன்படி நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 1643 ஆக அதிகரித்துள்ளது. இவர்கள் இந்தோனேசியா, பெரலஸ் ...

மேலும்..

அதிகாரத்தில் இருக்கின்ற எவருமே கொரோனா சட்டத்தை மீறமுடியாது சுகாதார சேவைகள் பணிப்பாளர் இடித்துரைப்பு

"கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் பொறுப்பு நாட்டிலுள்ள அனைவருக்கும் உள்ளது. வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தப் பிறப்பிக்கப்பட்டுள்ள சட்டதிட்டங்கள் நாட்டில் வாழும் 22 மில்லியன் மக்களுக்கும் பொதுவானது. ஒரு குடும்பமோ அல்லது அதிகாரத்தில் உள்ள எவருமே அதனை மீற முடியாது." - இவ்வாறு சுகாதார ...

மேலும்..

பிரபாகரன் உயிருடன் இருந்திருந்தால் இன்று அரசியலில் மிகப்பெரும் சக்தி!- புலிகளுடனான போர் குறித்து பொன்சேகா கருத்து

"தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் இன்று உயிருடன் இருந்திருந்தால் வடக்கு - கிழக்கு அரசியலில் மிகப்பெரிய சக்தியாகத் திகழ்ந்திருப்பார். வடக்கு - கிழக்கை தனது அரசியல் கட்டுப்பாட்டில் வைத்திருந்திருப்பார்." - இவ்வாறு முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார். தமிழீழ ...

மேலும்..

கொரோனா தொற்று 1,643 ஆக அதிகரிப்பு!- 811 பேர் குணமடைவு

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி நேற்று 10 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளார். நேற்றிரவு 10.30 மணியளவில் தேசிய தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவினால் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி, கொரோனா வைரஸ் தொற்றியவர்களின் எண்ணிக்கை 1,643 ஆக அதிகரித்துள்ளது. நேற்று புதிய தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டவர்களில் 02 ...

மேலும்..

பொன்னாலைக் கிராம மக்களுக்கும் தமிழ் இளையோர் கூட்டமைப்பு உதவி!

வலிகாமம் மேற்கு பிரதேச சபை எல்லைக்குட்பட்ட பொன்னாலைக் கிராமத்தில் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ள சுயதொழில் மேற்கொள்ளும் 20 குடும்பங்களுக்கு தமிழ் இளையோர் கூட்டமைப்பால் உலர் உணவுப் பொதிகள் வழங்கிவைக்கப்பட்டன. இந்த உலர் உணவுப் பொதிகளுக்கான அனுசரணையை ஊரெழு கிராமத்தைச் சேர்ந்த தற்போது ...

மேலும்..

கொரோனா வைரஸ் சோதனை இலக்கை பிரித்தானியா வெற்றிகரமாக கடந்துள்ளது!

கொரோனா வைரஸ் சோதனை திறனை மே மாத இறுதிக்குள் ஒரு நாளைக்கு 200,000ஆக உயர்த்துவதற்கான இலக்கை பிரித்தானியா கடந்துள்ளது. நேற்று முன்தினம் (சனிக்கிழமை) சுமார் 205,634 சோதனைகள் இடம்பெற்றதாக அரசாங்கம் உறுதிப்படுத்தியுள்ளது. சுகாதார செயலாளர் மாற் ஹான்காக் இதை ‘வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்தும் எங்கள் ...

மேலும்..

ஜோர்ஜ் ஃபிலாய்டின் மரணத்துக்கு நீதிக் கோரி மத்திய லண்டனிலும் போராட்டம்: ஐந்து பேர் கைது!

அமெரிக்காவில் கொல்லப்பட்ட நிராயுதபாணியான கறுப்பின மனிதர் ஜோர்ஜ் ஃபிலாய்டின் மரணத்துக்கு நீதிக் கோரி, மத்திய லண்டன் முழுவதும் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு போராட்டம் நடத்தியுள்ளனர். ‘ஜஸ்டிஸ் ஃபார் ஜோர்ஜ் ஃபிலாய்ட்’ (ஜோர்ஜ் ஃபிலாய்டின் மரணத்துக்கு நீதி வேண்டும்) என்று கோஷம் எழுப்பியவாறு நேற்று ...

மேலும்..

கொவிட்-19 சோதனை- தடமறிதல் சேவை வேல்ஸில் நடைமுறைக்கு வருகின்றது!

முடக்கநிலை கட்டுப்பாடுகளை தளர்த்த உதவும் வகையில் கொவிட்-19 சோதனை மற்றும் தடமறிதல் சேவை, வேல்ஸில் நடைமுறைக்கு வருகின்றது. இன்று (திங்கட்கிழமை) இந்த சேவை நடைமுறைக்கு வருவதாக சுகாதார அமைச்சர் வாகன் கெதிங் (Vaughan Gething) தெரிவித்துள்ளார். அறிவியல் ஆலோசனையின்படி இந்த முடிவினை எடுப்பதில் பெருமிதம் ...

மேலும்..

ஸ்கொட்லாந்தில் ஒரு நாளைக்கு 15,500 கொவிட்-19 சோதனைகள் செய்ய முடியும்: Jeane Freeman

ஸ்கொட்லாந்தில் ஒரு நாளைக்கு 15,500 கொவிட்-19 சோதனைகள் செய்ய முடியும் என சுகாதார செயலாளர் ஜீன் ஃப்ரீமேன் (Jeane Freeman) தெரிவித்துள்ளார். முடக்கநிலை கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் தளர்த்தப்படுவதால், நோய்த்தொற்றுகள் அதிகரிப்பதற்கு தயாராக இருப்பதை உறுதிசெய்யும் ஒரு பகுதியாக இது அமையுமென அவர் மேலும் ...

மேலும்..

ஒன்ராறியோ தொழிற்சாலையில் பணிபுரிந்த மெக்ஸிகோ தொழிலாளர்களுக்கு கொவிட்-19 தொற்று!

ஒன்ராறியோவின் சிம்கோவிற்கு அருகிலுள்ள ஸ்காட்லின் தொழிற்சாலையில் பணிபுரியும் பருவகால தொழிலாளர்களிடையே கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த மாத இறுதியில் மெக்ஸிகோவிலிருந்து அழைத்துவந்த 207 தொழிலாளர்களில் மூன்று பேருக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக ...

மேலும்..

வடக்கு சஸ்காட்செவன் ஆற்றில் நீரின் மட்டம் மீண்டும் உயர்வு!

வடக்கு சஸ்காட்செவன் ஆற்றில் நீரின் மட்டம் உயர்ந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எனவே, அதிகாரிகள் மீண்டும் வடக்கு சஸ்காட்செவன் ஆற்றின் கரையில் இருந்து விலகி இருக்குமாறு மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளனர். நீர்மட்டம் இயல்பை விட ஒரு மீட்டர் அதிகமாக இருப்பதாகவும், நீரோட்ட வீதம் வழக்கமான வீதத்தை விட ...

மேலும்..

கனடாவில் நாளொன்றுக்கு பதிவான அதிகபட்ச கொவிட்-19 தொற்று உயிரிழப்புக்கள்!

கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றுக்கு நாளொன்றுக்கு உயிரிழந்தவர்களின் அதிகபட்ச எண்ணிக்கை பதிவாகியுள்ளது. கடந்த 24 மணித்தியாலத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு 757பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு, 222பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த பெப்ரவரி மாதத்திலிருந்து இதுவரையான காலப்பகுதியில் கனடாவில் பதிவான அதிகூடிய உயிரிழப்பு எண்ணிக்கை இதுவாகும். இதற்கமைய வைரஸ் ...

மேலும்..

ஜோர்ஜ் ஃபிலாய்டின் மரணத்துக்கு நிதிக் கோரும் போராட்டம் மோதலில் முடிந்தது!

நிராயுதபாணியான கறுப்பின மனிதர் ஜோர்ஜ் ஃபிலாய்டின் மரணத்துக்கு நிதிக் கோரும் போராட்டம், கனடாவிலும் இடம்பெற்றுள்ளது. மொன்றியலில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) பிற்பகல் இடம்பெற்ற இப்போராட்டம், மோதலுடன் முடிவுக்கு வந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மொன்றியல் நகரத்தின் வழியாக பதுங்கியிருந்த போராட்டக்காரர்கள் இரவு வேளையிலும் அதே இடத்தில் இருந்ததாலேயே ...

மேலும்..

கொரோனா வைரஸ் பாதிப்பு : உலகளவில் ஏழாவது இடத்திற்கு முன்னேறியது இந்தியா!

கொரோனா வைரஸ் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளின் வரிசையில்  இந்தியா 7 ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. கொரோனா  தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட 10 நாடுகளில் கடைசி இடத்தில் இருந்த ஈரானை பின் தள்ளிய இந்தியா கடந்த 25 ஆம் திகதி 10ஆவது இடத்தை ...

மேலும்..

கண்ணுக்கு தெரியாத எதிரி கொரோனாவை எமது மருத்துவர்கள் வீழ்த்துவர் – மோடி நம்பிக்கை

கொரோனா வைரஸ் ஒரு கண்ணுக்கு தெரியாத எதிரியாக இருக்கலாம், ஆனால் நமது மருத்துவ ஊழியர்கள் அதனை வீழ்த்துவார்கள் என்று பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை வெளியிட்டுள்ளார். இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், வைரஸ் பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு ...

மேலும்..

இந்தியாவை தாக்கவுள்ள நிசார்கா புயல் – மும்பைக்கு ஆபத்து என எச்சரிக்கை

அரபிக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலையானது, வலுப்பெற்று புயலாக மாற வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையத்தின் புயல் எச்சரிக்கை பிரிவு தெரிவித்துள்ளது. இதன் காரணமாக மும்பை அதிக பாதிப்புக்களை எதிர்கொள்ள நேரிடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அரபி கடலில் மத்திய கிழக்கு ...

மேலும்..

மோடி தலைமையில் அமைச்சரவை குழுக் கூட்டம்: பொருளாதார நடவடிக்கைகள் குறித்து விசேட கலந்துரையாடல்!

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று (திங்கட்கிழமை) பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவை குழு கூட்டம் நடைபெற்றது. பிரதமரின் இல்லத்தில் நடைபெற்ற இந்தக்கூட்டத்தில்  கொரோனா தடுப்பு நடவடிக்கை,  நிவாரண நடவடிக்கைகள்,  பொருளாதார மீட்பு திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அத்துடன் விவசாயிகளுக்கான நிவாரணம் குறித்து ...

மேலும்..

இந்திய எல்லைப்பகுதிகளை இணைத்து புதிய வரைப்படத்தை உருவாக்கியது நேபாள அரசு!

இந்தியா,  நேபாளம் இடையே எல்லைப் பிரச்சினை நீடித்துவரும் நிலையில் இந்திய எல்லைப் பகுதிகளை இணைத்து புதிய வரைபடத்துக்கு ஒப்புதல் கோரும் சட்ட மூலத்தை நேபாள அரசு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. இதன்படி  இந்திய – நேபாள எல்லையில் அமைந்துள்ள காலாபாணி, ...

மேலும்..

அம்பாறையில் தமிழ் சி.என்.என். நிவாரணப் பணி! 350 இற்கும் மேற்பட்ட மாற்றுவலுவுள்ளோர், முன்னாள் போராளிகளுக்கு 

தமிழ் சி.என்.என். குழுமத்தின் அம்பாறை மாவட்டத்துக்கான நிவாரணப் பணி 4 ஆவது கட்டமாக நீலாவணையில் மேற்கொள்ளப்பட்டது. தென்மராட்சி சேவை நிறுவனம் கனடாவின் போசகர் வீ எஸ் துரைராசா குடும்பத்தினரின் நிதி அனுசரணையுடன் 350 இற்கும் மேற்பட்ட மாற்றுவலுவுள்ளோர், முன்னாள் போராளிகளுக்கு  வழங்கி வைக்கப்பட்டது. தமிழ் சி.என்.என். ...

மேலும்..

வாகனேரி தாக்குதல் சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட 9 பேருக்கும் விளக்கமறியல்

மட்டக்களப்பு- வாகனேரி, குளத்துமடு பகுதியில் சட்டவிரோதமாக மணல் ஏற்றி வந்தவர்களை தடுத்தவர்கள் மீது தாக்குதலை மேற்கொண்ட 9 பேரையும் எதிர்வரும் 11 ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு வாழைச்சேனை நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் உத்தரவிட்டுள்ளார். குறித்த 9 சந்தேகநபர்களையும் நேற்று (ஞாயிற்றுக்கிழமை), ...

மேலும்..

கிளிநொச்சியில் திண்மக்கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் திறந்து வைப்பு

கிளிநொச்சியில் 84.4 மில்லியன் ரூபாய் செலவில் திண்மக்கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் இன்று (திங்கட்கிழமை) திறந்து வைக்கப்பட்டது. உலக வங்கியின் நிதி உதவியுடன் நீர்வழங்கல் மற்றும் சுகாதார மேம்பாட்டு திட்டத்தின் கீழ் குறித்த சுத்திகரிப்பு நிலையம் நகர அபிவிருத்தி மற்றும் நீர்வழங்கல், வீடமைப்பு வசதிகள் ...

மேலும்..

தமிழ் மக்களுக்கு ஒரு சட்டம் படையினருக்கு ஒரு சட்டமா?- சிவமோகன்

தமிழ் மக்களுக்கு ஒரு சட்டம் படையினருக்கு ஒரு சட்டமா என வனவளப்பிரிவினரிடம் வைத்திய கலாநிதி சிவமோகன் கேள்வி எழுப்பியுள்ளார். இன்று (திங்கட்கிழமை) அவர் வெளியிட்ட அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். அதில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, “வவுனியா- செட்டிகுளம் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பொதுமக்களின் ...

மேலும்..

பொது விவாதத்திற்கு வருமாறு பகிரங்க சவால்

தனியார் துறை ஊழியர்களின் வேலைவாய்ப்பை பெற்றுக்கொள்ள அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து விவாதத்திற்கு வருமாறு முன்னாள் அமைச்சர் ஹர்ஷ டி சில்வா, முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவிற்கு பகிரங்க அழைப்பினை விடுத்துள்ளார். இது குறித்து ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர், “மத்திய ...

மேலும்..

மட்டக்களப்பில் ஊரடங்கு சட்டத்தை மீறி நிவாரணம் வழங்கலில் ஈடுபட்ட 6 பேருக்கு விளக்கமறியல்

மட்டக்களப்பு- கரடியனாறு பிரதேசத்தில் ஊரடங்கு சட்டம் அமுலில் இருந்த வேளையில்,  நிவாரண பொதி வழங்கலில் ஈடுபட்ட 6 பேரையும்  எதிர்வரும் ஜுன் 4 ம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற மேலதிக நீதவான் உத்தரவிட்டுள்ளார். சுவிஸ் நாட்டிலுள்ள ...

மேலும்..

பொதுத்தேர்தல் திகதியை ஆட்சேபிக்கும் மனுக்கள் மீதான தீர்ப்பு நாளை 3 மணிக்கு..!

பொதுத் தேர்தலை நடத்துவதற்கான திகதி குறித்த வர்த்தமானி அறிவிப்பை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக் கொள்வது தொடர்பான தீர்ப்பு நாளை மாலை 3 மணிக்கு உயர் நீதிமன்றால் வழங்கப்படவுள்ளது. மனுதாரர்கள், எதிர்மனுதாரர்கள் மற்றும் இடைபுகு மனுதாரர்களின் ...

மேலும்..

ஐந்து மாதங்களில் 840 பேருக்கு டெங்கு- கல்முனை பிராந்திய சுகாதார பணிப்பாளர்

கல்முனை சுகாதார திணைக்கள பிராந்தியத்தில் ஐந்து மாதங்களில் 840 பேருக்கு  டெங்கு நோய் கண்டறியப்பட்டுள்ளதாக அப்பிராந்தியத்தின் சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஜீ. சுகுணன் தெரிவித்துள்ளார். கல்முனை பிராந்திய சுகாதார சேவைப் பணிமனையில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடகவியாலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு ...

மேலும்..

மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 1,635 ஆக அதிகரிப்பு

கொரோனா வைரஸ் தொற்று உறுதியான மேலும் ஒரு கடற்படை வீரர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 1,635 ஆக அதிகரித்துள்ளது.

மேலும்..

வடமராட்சி வெடிப்பு சம்பவம் – சந்தேகநபர் TID யின் கீழ் விசாரணை

வடமராட்சி கிழக்கில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் எனும் சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட நபரை பயங்கரவாத தடுப்பு பிரிவினர் தொடர்ந்து தமது பாதுகாப்பின் கீழ் வைத்து தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். துன்னாலை பகுதியைச் பொன்னுத்துரை சுஜீதரன் (வயது ...

மேலும்..

சேருவில வீதியில்  கார் ஒன்று மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைச்சிளில் பயணித்த இருவரில் ஒருவர் பலி…

ஹஸ்பர் ஏ ஹலீம்_ கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கந்தளாய் சேருவில வீதியில்  கார் ஒன்று மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைச்சிளில் பயணித்த இருவரில் ஒருவர் பலியானதோடு மற்றொருவர் பலத்த காயங்களுக்குள்ளான நிலையில் கந்தளாய் தள வைத்தியசாலையில்  அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் ...

மேலும்..

வெள்ளை மாளிகைக்குள் நுழைந்த போராட்டக்காரர்ருக்கும் பொலிஸாருக்கும் இடையில் மோதல்…

வெள்ளை மாளிகைக்குள் நுழைந்த போராட்டக்காரர்ருக்கும் பொலிஸாருக்கும் இடையில் மோதல் ஏற்பட்டுள்ளதுடன் பொலிஸார் கண்ணீர் புகைக்குண்டு தாக்குதல் நடத்தியுள்ளனர். வெள்ளை மாளிகை கண்ணாடிகள் உடைக்கப்பட்டுள்ளதுடன் பாதுகாப்பு வேலி என்பன சேதமாக்கப்பட்டு கொடி தீ வைத்து கொளுத்தப்பட்டுள்ளது அத்துடன் பொலிஸாரின் கார் தீ வைத்து கொளுத்தப்பட்டுள்ளது. இதுவரை ...

மேலும்..

பொதுத் தேர்தலை ஒத்திவைப்பது நாட்டின் ஜனநாயகத்தின் மீதான தாக்குதல் – ஜி.எல்.பீரிஸ்

பொதுத் தேர்தல் நடைபெறுவதை ஒத்திவைப்பது நாட்டின் ஜனநாயக கலாசாரத்தின் மீதான தாக்குதல் என்று ஸ்ரீலங்கா பொடுஜன பெரமுன தெரிவித்துள்ளது. இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த அக்கட்சியின் தவிசாளர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ், இந்த நடவடிக்கை தவறான முன்னுதாரணத்திற்கு வழிவகுக்கும் என கூறினார். தேர்தல்களை ...

மேலும்..

காரைதீவு ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலய திருக்குளிர்ச்தி சடங்கின் கடல்தீர்த்தம் எடுத்து வருதல்…

காரைதீவு ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலய திருக்குளிர்ச்தி சடங்கின் இன்றயனால் கடல்தீர்த்தம் எடுத்துவருதல் அதனைத்தொடர்ந்து ஆலய முன்றலில் கல்யாணக்கால் நாட்டும் நிகழ்வும்.

மேலும்..

அரசியல் கூட்டங்கள் கட்சி ஆதரவாளர்கள் உடனான ஒன்றுகூடல்கள் தவிர்ப்பது மிகச் சிறந்ததுவைத்திய கலாநிதி ஜீ. சுகுணன்

பாறுக் ஷிஹான்     தேர்தல் நடைபெறும் தினம் நிச்சயிக்கப்படாத நிலையில் அரசியல் கூட்டங்கள் கட்சி ஆதரவாளர்கள் உடனான ஒன்றுகூடல்கள் தவிர்ப்பது மிகச் சிறந்தது என  கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஜீ. சுகுணன் தெரிவித்தார். அம்பாறை மாவட்டத்தில்   ஊடகவியலாளர் சந்திப்பு  திங்கட்கிழமை(1) ...

மேலும்..

போராட்டத்துக்கு தயாராகும் அட்டாளைச்சேனை மீனவர்கள்

எமது தொழிலை இலகுபடுத்தும் வகையில் கடற்கரையோரமாக நிர்மாணிக்கப்பட இருந்த வீதியை இடைநிறுத்திய தரப்பினர், மீண்டும் அவ்வீதியை பூரணமாக செப்பமிட்டு உதவ வேண்டும். இல்லாவிடின் போராட்டம் ஒன்றினை முன்னெடுக்கவுள்ளதாக பாதிக்கப்பட்ட மீனவர்கள் குறிப்பிட்டனர். அம்பாறை மாவட்டம்- அட்டாளைச்சேனை, கோணாவத்தை-8 பகுதியில் வசிக்கின்ற சுமார் 55 ...

மேலும்..

இலங்கை இந்தியாவுடன் சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தில் ஈடுபட வேண்டும்!

கொரோனா வைரஸ் தாக்கத்தினால் ஏற்பட்ட பொருளாதார தாக்கத்தை தணிக்கும் முயற்சியில், இலங்கை இந்தியாவுடன் சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தில் ஈடுபட வேண்டும் என்று முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். குறித்த தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகத்திற்கான தடைகளை குறைக்கும் ...

மேலும்..

திருமண மண்டபங்களில் பின்பற்றவேண்டிய சுகாதார நடைமுறைகள் குறித்து முக்கிய அறிவிப்பு

திருமண, வரவேற்பு மண்டபங்கள் மற்றும் விருந்தினர் விடுதிகளுக்கான  சுகாதார பாதுகாப்பு நடைமுறைகள் மண்டப வாயிலில் காட்சிப்படுத்தப்பட வேண்டும் என வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில், “நடைபாதைகள், ஆசனங்கள், அலங்கார ...

மேலும்..

தமிழரின் தலையெழுத்தில் இனியும் விளையாட வேண்டாம்: இந்திய உயர்ஸ்தானிகரிடம் குகவரதன் வலியுறுத்தல்

வட-கிழக்கு இணைப்பையையும் சிதறி நிற்கும் தமிழர் அரசியலையும் மீளிணைப்பதற்கு இந்திய மத்திய அரசுக்கு இதுவே சரியான தருணமாகும். இனியும் தமிழரின் தலையெழுத்தில் விளையாட வேண்டாம் என்று இலங்கைக்கான புதிய இந்திய உயர்ஸ்தானிகர் ஸ்ரீ.கோபால் பாக்லேயிரிடம் மேல் மாகாண சபையின் முன்னாள் உறுப்பினரும் ...

மேலும்..

20 ஆம், 21 ஆம் நூற்றாண்டில் இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு சர்வதேசத்தின் ஊடாகத் தீர்வு வேண்டும் – சிவாஜிலிங்கம்

20 ஆம் நூற்றாண்டிலும் 21 ஆம் நூற்றாண்டிலும் தமிழ் மக்களுக்கு எதிராக இலங்கையில், இழைக்கப்பட்ட அனைத்து அநீதிகளுக்கும் சர்வதேசத்தின் ஊடாகத் தீர்வு வழங்கப்பட வேண்டும் என முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்தார். யாழ். நூலகத்தில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற ...

மேலும்..

கிளிநொச்சியில் நவீன பொது வசதிகள் மையம் திறந்து வைப்பு

கிளிநொச்சி நகரிற்கு, 12.2 மில்லியன் ரூபாய் செலவில் நவீன பொது வசதிகள் மையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. குறித்த நிகழ்வு இன்று (திங்கட்கிழமை) காலை 11 மணியளவில் இடம்பெற்றது. உலக வங்கியின் நிதி உதவியுடன் நீர் வழங்கல் மற்றும் சுகாதார மேம்பாட்டு திட்டத்தின் கீழ் குறித்த ...

மேலும்..

திருமண மண்டபங்களில் பின்பற்றவேண்டிய சுகாதார நடைமுறைகள் குறித்து முக்கிய அறிவிப்பு

திருமண, வரவேற்பு மண்டபங்கள் மற்றும் விருந்தினர் விடுதிகளுக்கான  சுகாதார பாதுகாப்பு நடைமுறைகள் மண்டப வாயிலில் காட்சிப்படுத்தப்பட வேண்டும் என வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில், “நடைபாதைகள், ஆசனங்கள், அலங்கார ...

மேலும்..

குவைத்திலிருந்து வந்தவர்களுக்கே அதிகளவில் கொரோனா தொற்று – பிரசன்ன ரணதுங்க

குவைத்திலிருந்து வந்தவர்களே அதிகளவில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர் என சுற்றுலாத்துறை அபிவிருத்தி மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார். கம்பஹாவில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் அங்கு ...

மேலும்..

வெலிக்கடை முன்னாள் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியை பிடியாணை பெற்று கைது செய்ய பணிப்பு

வெலிக்கடை பொலிஸ் நிலையத்தின் முன்னாள் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியை கைது செய்ய பிடியாணை பெற்றுக்கொள்ளுமாறு சட்டமா அதிபர் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவுக்கு அறிவுறுத்தியுள்ளார். முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தொடர்புப்பட்டதாக கூறப்படும் விபத்து சம்பவத்தில் தவறான சாட்சியங்களை தயாரிப்பதற்காகவே அவரை கைது ...

மேலும்..

அம்பாறையில் டெங்கு நோய் தாக்கத்தின் வீரியம் அதிகரித்துக் காணப்படுகின்றது.

பாறுக் ஷிஹான்   அம்பாறை மாவட்டத்தில் காலநிலை எவ்வாறு அமைந்தாலும் டெங்கு நோய் வருவதைத் தடுப்பதற்கு பொதுமக்கள் முன்வர வேண்டும் மக்களின் பங்களிப்பு தான் டெங்கு நோயை கட்டுப்படுத்துவதற்கும் பரவாமல் தடுப்பதற்கும் மிக முக்கியமான விடயமாக காணப்படுகின்றது என   கல்முனை பிராந்திய சுகாதார ...

மேலும்..

பொதுத் தேர்தலை ஒத்திவைப்பது நாட்டின் ஜனநாயகத்தின் மீதான தாக்குதல் – ஜி.எல்.பீரிஸ்

பொதுத் தேர்தல் நடைபெறுவதை  ஒத்திவைப்பது நாட்டின் ஜனநாயக கலாசாரத்தின் மீதான தாக்குதல் என்று ஸ்ரீலங்கா பொடுஜன பெரமுன தெரிவித்துள்ளது. இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த அக்கட்சியின் தவிசாளர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ், இந்த நடவடிக்கை தவறான முன்னுதாரணத்திற்கு வழிவகுக்கும் என கூறினார். தேர்தல்களை ...

மேலும்..

பொலிஸாரின் செயற்பாடு குறித்து கண்ணீருடன் மனித உரிமை ஆணைக்குழுவில் மாற்றுத்திறனாளி முறைப்பாடு

மாற்றுத்திறனாளி ஒருவரின் வீட்டுக்குள் அத்துமீறி சிவில் உடையில் சென்ற காங்கேசன்துறை பொலிஸார், அவர் மீது கட்டை ஒன்றினால் கடுமையாக தாக்கியதாக மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய அலுவலகத்தில் இன்று (திங்கட்கிழமை) முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, காங்கேசன்துறை பொலிஸ் ...

மேலும்..

வடக்கு – கிழக்கு இணைப்பு கோரிக்கையும் தனிநாடுதான் – அதையும் கைவிடுமாறே கேட்கின்றோம் என்கிறார் பிரதமர் மஹிந்த ராஜபக்ச

"வடக்கு, கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்பட்டு ஒரு மாகாணம் ஆக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் தனிநாட்டக்கான கோரிக்கைதான். அதனையும் கைவிடுமாறே நாம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் கேட்கின்றோம்." - இவ்வாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். சர்வதேச ஊடகம் ஒன்றின் கொழும்புச் செய்தியாளருக்கு வழங்கிய பிரத்தியேக ...

மேலும்..