June 12, 2020 அன்று பிரசுரிக்கப்பட்டவை

முழுத் தீவுக்குமான சமாதான நீதவானாக தருமலிங்கம் குவேந்திரன் ஆசிரியர் சத்தியப் பிரமாணம்…

அம்பாரை மாவட்டம் காரைதீவினைச் சேர்ந்த  தருமலிங்கம் குவேந்திரன் ஆசிரியர் தீவு முழுவதிற்குமான சமாதான நீதவானாக  12.06.2020 திகதியன்று   அம்பாரை மாவட்ட நீதிமன்ற நீதவான்  முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்து  கொண்டார். கமு / கமு / இ.கி.மி பெண்கள் பாடசாலை காரைதீவில்  ஆசிரியராகக் கடமை புரியும் ...

மேலும்..

சஜித் இன்று நடுவீதியில் சகாக்கள் மூவர் விலகல் தேர்தலின் பின் பலர் மொட்டுவுடன் இணைவர் என்கின்றார் சேமசிங்க

"ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவைப் போன்று அரசியலில் முன்னேறலாம் என்ற நோக்கத்திலேயே   முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேதமாஸ ஐக்கிய மக்கள் சக்தியை உருவாக்கினார். ஆனால், இவரது நோக்கம் இன்று தோல்வியடைந்துள்ளது. அவர் இன்று நடுவீதிக்கு வரவேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது." - இவ்வாறு ...

மேலும்..

நல்லாட்சியா? படுகொலையாட்சியா? ஆகஸ்ட் 5இல் மக்கள் தீர்மானிக்கட்டும்  ஐக்கிய தேசியக் கட்சி வலியுறுத்து

"இலங்கையில் நல்லாட்சி வேண்டுமா? அல்லது படுகொலையாட்சி வேண்டுமா? என்பதை எதிர்வரும் ஆகஸ்ட் 5ஆம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் தீர்மானிக்க வேண்டும்." - இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட வேட்பாளர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது:- "ராஜபக்சக்களின் ஆட்சி ...

மேலும்..

சுகாதார வழிகாட்டல்களைப் பின்பற்றி அடுத்த வாரம் முதல் பரப்புரைக்கு தயாராகின்றன பிரதான கட்சிகள் – தேர்தல் அறிக்கைகளும் தயாரிப்பு  

நாடாளுமன்றத் தேர்தலுக்கான புதிய திகதி தேர்தல்கள் ஆணைக்குழுவால் அறிவிக்கப்பட்டுள்ளதைத்  தொடர்ந்து பிரதான அரசியல் கட்சிகள் சுகாதார வழிகாட்டல்களைப் பின்பற்றிப் பரப்புரைக்குத் தயாராகி வருகின்றன. அடுத்த வாரம் முதல் பரப்புரைகள் ஆரம்பமாகும் எனவும், தேர்தல் அறிக்கைகளும் தயாரிக்கப்படும் எனவும் பிரதான கட்சிகளின் முக்கியஸ்தர்கள் கருத்து ...

மேலும்..

தமிழ், முஸ்லிம்களிடம் வாக்குகளுக்காக கையேந்தோம்! – ராஜபக்சக்களின் சகா விமல் கூறுகின்றார்

"வாக்குகளுக்காக ஜனாதிபதித் தேர்தலிலும் தமிழ், முஸ்லிம் மக்களிடம் நாம் கையேந்தவில்லை. அதேபோல் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலிலும் அவர்களிடம் கையேந்தமாட்டோம். அவர்கள் விரும்பினால் எமது வெற்றியின் பங்குதாரர்களாக மாறலாம்." - இவ்வாறு தெரிவித்தார் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பங்காளிக் கட்சியான தேசிய சுதந்திர முன்னணியின் ...

மேலும்..

காரைதீவு ப.நோ.கூட்டுறவு சங்கத்தின் கட்டடத் திறப்புவிழா…

காரைதீவு ப.நோ.கூட்டுறவு சங்கத்தின் அலுவலக கட்டிடமானது இன்று (10.06.2020)சங்கத்தின் தலைவர் யோகரெத்தினம் கோபிகாந் அவர்களின் தலைமையில் திறந்து வைக்கப்பட்டது. காரைதீவு 12 ம் பிரிவு பிரதான வீதியில் அமைந்துள்ள ப.நோ.கூட்டுறவு சங்கத்திற்கு சொந்தமான கட்டிடத் தொகுதியினை புனரமைப்பு செய்யப்பட்டு சங்கத்தின் செயற்பாட்டிற்கு தலமை ...

மேலும்..

சென்னை உயர்நீதிமன்றத்தில் வைகோ வழக்கு…

மருத்துவக் கல்லூரிகளில் அனைத்து இந்திய ஒதுக்கீட்டில், பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 50 விழுக்காடு இடங்கள் தரப்படவில்லை என்பதைச் சுட்டிக்காட்டி, இடஒதுக்கீடு தரக்கோரி மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் இன்று (12.06.2020) உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். தமிழ்நாட்டில் உள்ள மருத்துவக்கல்லூரிகளில், தமிழ்நாட்டில் ஏற்கனவே ...

மேலும்..

சிறுபான்மை மக்களின் குறைகளுக்கு ஐக்கிய தேசிய கட்சியே காரணம். இலங்கை தொழிலாளர் ஐக்கிய முன்னணின் பொதுச்செயலாளரும் வேட்பாளருமான சுப்பையா சதாசிவம் தெரிவிப்பு…

ஹட்டன் கே.சுந்தரலிங்கம் விசேட நிருபர் ஐக்கிய தேசிய கட்சி கடந்த நாலரை வருடங்களாக ஆட்சியில் இருந்தது அவர்கள் தேர்தலுக்கு முன் ஆயிரம் ரூபா தோட்டதொழிலாளர்களுக்கு தருவதாக தெரிவித்தார்கள் ஆனால் அவர்கள் வெற்றி பின் அவர்களால் 50 ரூபா கூட பெற்றுக்கொடுக்க முடியவில்லை.இன்று சிறுபான்மை ...

மேலும்..

வடக்கு மாகாண ஆளுனர் தலைமையில் வவுனியா மாவட்ட கல்வி அபிவிருத்தி தொடர்பில் ஆராய்வு

வவுனியாநிருபர் வடமாகாண ஆளுனர் தலைமையில் வவுனியா மாவட்டத்தின் கல்வி அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல் வவுனியா நகரசபை கலாசாரமண்டபத்தில் இன்று (12.06) இடம்பெற்றது. அண்மையில் வெளியாகிய க.பொ.சாதரண தரப் பரீட்சைப் பெறுபேற்றில் வவுனியா மாவட்டம் 21 ஆவது நிலையைப் பெற்றுள்ளது. இந்நிலையில் வவுனியா மாவட்டம் கல்வி ...

மேலும்..

போரால் பாதிக்கப்பட்ட பெண்கள் அமைப்பால் சிறுவர் வன்முறைக்கு எதிராக விழிப்புணர்வு

போரால் பாதிக்கப்பட்ட பெண்கள் அமைப்பின் ஏற்பாட்டில் சிறுவர் உரிமை மற்றும் வன்முறைக்கு எதிரான விழிப்புணர்வு நடவடிக்கை ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டது. வவுனியா தெற்கு சிங்கள பிரதேச செயலகத்தில் சிறுவர் உரிமை மற்றும் வன்முறை தொடர்பான விழிப்புணர்வு கூட்டம் இடம்பெற்றதுடன் வவுனியா நகரில் விழிப்புணர்வு ...

மேலும்..

தேர்தல் விதிமுறைகளை மீறி பாராளுமன்ற தேர்தலுக்கான வேட்பாளர் சுவரொட்டிகளை ஒட்டியவர்கள் கைது. தலைமன்னாரில் சம்பவம்.

(தலைமன்னார் நிருபர் வாஸ் கூஞ்ஞ) தேர்தல் விதிமுறைகளை மீறி எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலுக்கான வேட்பாளர் சுவரொட்டிகளை ஒட்டியவர்கள் பொலிசாரால் கைது செய்யப்பட்டு பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டனர். இவ் சம்பவம் புதன் கிழமை இரவு (10.06.2020) தலைமன்னார் பியர் பகுதியில் இடம்பெற்றுள்ளது. இவ் சம்பவம் பற்றி தெரியவருவதாவது சம்பவம் அன்று மன்னாரைச் ...

மேலும்..

சட்டவிரோதமான முறையில் ஆயுள்வேத கிழங்கு பிடுங்கியவர்கள் கைது!

வாகரைப் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பனிச்சங்கேணி பகுதியில் சட்டவிரோதமான முறையில் மருத்துவ மூலிகை கிடாரம் கிழங்கு பிடுங்கும் நடவடிக்கையில் ஈடுபட்ட இரண்டு சந்தேக நபர்களும், மருத்துவ மூலிகை கிடாரம் கிழங்கும் இன்று கைப்பற்றப்பட்டுள்ளதாக வாழைச்சேனை வட்டார வன உத்தியோகத்தர் எஸ்.தணிகாசலம் தெரிவித்தார். வாழைச்சேனை ...

மேலும்..

இணுவில், ஏழாலையில் எவருக்கும் கொரோனா வைரஸ் தொற்றில்லை

இந்தியப் புடவை வியாபாரியோடு தொடர்பில் இருந்த இணுவில், ஏழாலைப் பகுதியைச் சேர்ந்த  28 பேருக்கும் தொற்றில்லை என்று பி.சி.ஆர் பரிசோதனையில் தெரியவந்துள்ளது. எனினும் அவர்கள் 14 நாள்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவார்கள் என்று வடக்கு மாகாண சுகாதார சேவைப் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். யாழ். ...

மேலும்..

தமிழ் மக்களுக்குத் தீர்வு உறுதி; அவர்கள் எம்மை நம்பவேண்டும் – இப்படிக் கோருகின்றார் மஹிந்த

"தமிழ் மக்களின் பிரச்சினைகளில் பிரதான பிரச்சினையாக அரசியல் பிரச்சினை இருக்கின்றது. அந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண புதிய நாடாளுமன்றத்தில் நாம் கட்டாயம் நடவடிக்கை எடுப்போம். தீர்வை நாம் வழங்கியே தீருவோம். எனவே, தமிழ் மக்கள் முதலில் எங்களை நம்ப வேண்டும்." - இவ்வாறு ...

மேலும்..

வடக்கில் கூட்டமைப்பு கோலோச்சும்! தெற்கில் ‘பெரமுன’ கொடி பறக்கும்!! – அடித்துக் கூறுகின்றார் பீரிஸ்

"நாடாளுமன்றத் தேர்தலில் வடக்கில் பல கட்சிகள் போட்டியிட்டாலும் அங்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே அதிக ஆசனங்களைக் கைப்பற்றி வெற்றிபெறும். ஆனால், தெற்கு உட்பட ஏனைய பகுதிகளில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியே வெற்றி பெறும். அந்த வெற்றி வரலாற்று வெற்றியாகப் பதிவாகும்." - இவ்வாறு ...

மேலும்..

அரசியல் தீர்வுப் பேச்சுக்கு தமிழ்க் கூட்டமைப்பு தயார் நம்பும் வகையில் அரசே நடக்கவேண்டும்; மஹிந்தவின் கருத்துக்கு சம்பந்தன் பதில்

"தமிழர்களுக்கான அரசியல் தீர்வுக்காகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எந்தவேளையிலும் மஹிந்த அரசுடன் பேசத் தயாராக இருக்கின்றது." - இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார். "பிரதமர் மஹிந்த ராஜபக்ச கூறுவது போன்று தமிழ் மக்களின் பிரதிநிதிகள் நாங்கள்தான். எனவே, எமது மக்களுக்குத் ...

மேலும்..

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட வேட்பாளர்களுக்கிடையில் கலந்துரையாடல்!

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் யாழ். மாவட்டத்தில் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான கலந்துரையாடல் இன்று (வெள்ளிக்கிழமை) மாலை மாட்டீன் வீதியில் உள்ள கட்சியின் தலைமைச் செயலகத்தில் இடம்பெற்றது. இலங்கை தமிழரசுக் கட்சியில் 7 வேட்பாளர்கள், புளொட் அமைப்பில் இருவர் மற்றும் ரேலோவில் ...

மேலும்..

பெரஹர நிகழ்வுகள் குறித்து ஜனாதிபதியின் முக்கிய அறிவிப்பு!

இம்முறை பெரஹர நிகழ்வுகளை பிரதான வணக்கஸ்தலங்கள் மற்றும் தேவாலயங்களில்  முன்னெடுக்குமாறு ஜனாதிபதி அறிவிறுத்தல் வழங்கியுள்ளார். இருப்பினும் குறித்த பெரஹர நிகழ்வுகளை பார்வையிட மக்களுக்கு அனுமதி இல்லை என இன்று (வெள்ளிக்கிழமை) ஜனாதிபதி ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. “எமது பாரம்பரியம் மற்றும் மத கோட்பாடுகளுக்கு ...

மேலும்..

மத அடிப்படையில் சிறுபான்மையின மக்கள் மீது திட்டமிட்ட பாகுபாடு- இலங்கை குறித்து அமெரிக்கா அறிக்கை

மத அடிப்படையில் சிறுபான்மையின மக்கள் மீது இலங்கை அரசாங்கத்தினால் திட்டமிட்ட பாகுபாடு  தொடர்ச்சியாக காண்பிக்கப்பட்டு வருவதாக சர்வதேச மத சுதந்திரம் தொடர்பான அறிக்கையில் அமெரிக்கா தெரிவித்துள்ளது. ஐக்கிய அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோவினால் வெளியிட்டுவைக்கப்பட்ட 2019ஆம் ஆண்டிற்கான சர்வதேச மதச் சுதந்திரம் ...

மேலும்..

தேசிய அடையாள அட்டை பெறுவதற்கான ஒரு நாள் சேவை மீண்டும் ஆரம்பமாகிறது!

தேசிய அடையாள அட்டை பெறுவதற்கான ஒரு நாள் சேவை  தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த நிலையில் குறித்த சேவை இம்மாதம் 22 ஆம் திகதி முதல் மீண்டும் ஆரம்பமாகவுள்ளதாக ஆட்பதிவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது. இது குறித்து ஆட்பதிவுத் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் வியானி குணதிலக்க தெரிவிக்கையில், ...

மேலும்..

தபால் மூல வாக்களிப்பு குறித்து வெளியான செய்தியில் உண்மை இல்லை- தேர்தல்கள் ஆணைக்குழு

பொதுத்தேர்தலில் தபால் மூல வாக்களிப்புக்கான தினங்கள் தேர்தல்கள் ஆணைக்குழுவினால் இதுவரை உத்தியோகபூர்வமாக நிர்ணயிக்கப்படவில்லை என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. மேலும் தபால் மூல வாக்களிப்புக்கான தினங்கள் தொடர்பாக ஊடகங்களில் வெளியாகி இருக்கும் செய்தியில் உண்மை இல்லையென ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். இவ்விடயம் ...

மேலும்..

தீர்க்கப்படாத காணிப் பிணக்குகள்: ஆளுநர் செயலக விசேட குழு கிளிநொச்சியில் விசாரணை

கிளிநொச்சி, கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள தீர்க்கப்படாத 55 காணிப் பிணக்குகள் ஆளுநர் செயலக விசாரணைக் குழுவினால் விசாரணைக்கு  உட்படுத்தப்பட்டது. வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தால் நியமிக்கப்பட்ட இளைப்பாறிய நீதிபதி வசந்தசேனன் தலைமையிலான குறித்த குழு இன்று (வெள்ளிக்கிழமை) கண்டாவளை பிரதேச ...

மேலும்..

பிலிப்பைன்ஸில் இருந்து 223 இலங்கையர்கள் நாடு திரும்பினர்

பிலிப்பைன்ஸ் நாட்டில் இருந்து 223 இலங்கையர்கள் இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை நாட்டை வந்தடைந்துள்ளனர். ஸ்ரீலங்கன் விமான சேவைகள் நிறுவனத்துக்கு சொந்தமான யூ.எல்.1423 என்ற இலக்க விமானத்தில் பிலிபைன்ஸ் மணிலாவில் இருந்து இவர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர். இவ்வாறு வருகை தந்த 223 பேரும்,  ...

மேலும்..

முன்னாள் போராளிகள் மீது அக்கறை கொண்டுள்ளதாக சுமந்திரன் கூறுவது முற்றிலும் பொய்- சுரேஸ்

தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகள் மீது அக்கறை கொண்டுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ள கருத்துக்கள் அனைத்தும் பொய்யானவை என ஈ.பி.ஆர்.எல்.எப். கட்சியின் தலைவரும், தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் நாடாளுமன்றத் தேர்தல் வேட்பாளருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். அத்துடன், ...

மேலும்..

பொதுத்தேர்தல்: சஜித் அணியின் வேட்பாளர்கள் மூவர் விலகல்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் போட்டியிடவிருந்த  3 வேட்பாளர்கள் அதிலிருந்து விலகியுள்ளனர். அதாவது ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் இரத்தினபுரி மாவட்டத்தில் போட்டியிடவிருந்த வேட்பாளரான நிலூகா ஏக்கநாயக்க போட்டியிடுவதிலிருந்து விலகியுள்ளார். இவர் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் மற்றும் பொதுச் ...

மேலும்..

தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை குறித்து தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி ஜனாதிபதிக்குக் கடிதம்

தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பாக தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியினரால் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் சி.வி.விக்னேஸ்வரன், ஈ.பி.ஆர்.எல்.எப். தலைவர் சுரேஷ் பிறேமச்சந்திரன், தமிழ் தேசியக் கட்சியின் தலைவர் என்.ஸ்ரீகாந்தா மற்றும் ...

மேலும்..

பிரதமர் மஹிந்தவை மெய்சிலிர்க்க வைத்த முதியவர்

பொலன்னறுவை- மெதிரிகிரியவைச் சேர்ந்த 86 வயது முதியவர் ஒருவர் நோயுற்றிருக்கும் நிலையிலும் கொரோனா நிதியத்துக்கு 5,000 ரூபாயை வழங்கி,  பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை மெய்சிலிர்க்க வைத்த சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் கைகளுக்கு என எழுதப்பட்ட கடிதமொன்று அலரி மாளிகைக்கு கிடைத்த ...

மேலும்..

குத்தகை வழங்கல் கம்பனிகள் குறித்த நாடாளுமன்றச் சட்டம் திருத்தப்பட வேண்டும்- ஜே.வி.பி.

குத்தகை வழங்கல் கம்பனிகள் தொடர்பான நாடாளுமன்றச் சட்டம் திருத்தியமைக்கப்பட வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். குறித்த கம்பனிகளுக்கு அதிகூடிய அதிகாரங்களை தற்போதுள்ள சட்டம் வழங்குவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். வாகன குத்தகை வழங்கல் மாபியா தொடர்பாக ...

மேலும்..

மக்களின் குறைகளை தீர்க்க ஒம்புட்ஸ்மன் நியமனம்

பொதுமக்களின் முறைப்பாடுகள் குறித்து விசாரணை மேற்கொண்டு, உடனடியாக நடவடிக்கை எடுப்பதற்காக ஜனாதிபதி செயலணிக்கு ஒம்புட்ஸ்மன் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். குறித்த பதவிக்கு ஓய்வுபெற்ற சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் எஸ்.எம்.விக்ரமசிங்க, ஒம்புட்ஸ்மனாக நியமிக்கப்பட்டுள்ளார். பொதுமக்களின் முறைப்பாடுகளுக்கு உரிய முறையில் தீர்வுகள் வழங்கப்படுவதில்லை என தொடர்ந்து பலரினால் ...

மேலும்..

விடுதலைப் புலிகளினால் பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் ஆயுதங்கள் கண்டெடுப்பு

மட்டக்களப்பு- கிரான் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட வாகனேரி,  குளத்துமடு பகுதியில் விடுதலைப் புலிகளினால் பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும்  சில ஆயுதங்கள், இன்று (வெள்ளிக்கிழமை) கண்டெடுக்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்துள்ளர். வாழைச்சேனை கடதாசி ஆலை புலனாய்வு பிரிவினருக்கு இவ்விடயம் தொடர்பாக தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது. அதனைத் தொடர்ந்து குறித்த ...

மேலும்..

தனியார் கல்வி நிலையங்களை நடத்துவதற்கான சுகாதாரப் பாதுகாப்பு நடைமுறைகள் அறிவிப்பு

தனியார் கல்வி நிலையங்களை எதிர்வரும் 29 ஆம் திகதி முதல் கொரோனா தடுப்பு சுகாதார பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றி நடத்துவதற்கு மத்திய சுகாதார அமைச்சினால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அந்தவகையில் பின்வரும் நடைமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ...

மேலும்..

வவுனியாவிற்கு விஜயம் மேற்கொண்டிருந்த சமல் ராஜபக்ஷ

விவசாய நீர்பாசன மற்றும் கிராமிய அபிவிருத்தி அமைச்சர் சமல் ராஜபக்ஷ வவுனியாவிற்கு இன்று (வெள்ளிக்கிழமை) விஜயம் மேற்கொண்டிருந்தார் வவுனியா- போகஸ்வெவ பகுதிக்கு விஜயம் செய்த அவர் அப்பகுதியிலுள்ள மகாகம்பிலிவெவ குளத்தின் புனரமைப்பு  பணிகளை ஆரம்பித்து வைத்தார். குறித்த குளமானது 32 மில்லியன் ரூபாய் செலவில் ...

மேலும்..

சிறுவர் உரிமைகள் தொடர்பான விழிப்புணர்வு ஊர்வலம்

சிறுவர் உரிமைகள் தொடர்பான விழிப்புணர்வு ஊர்வலமொன்று வவுனியாவில் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்றது. போரினால் பாதிக்கப்பட்ட பெண்களின் சங்கத்தின் ஏற்பாட்டில் சிறுவர்களை பாதுகாப்போம் எனும் தொனிப்பொருளில்  இந்த விழிப்புணர்வு ஊர்வலம்  இடம்பெற்றது. குறித்த ஊர்வலத்துக்கு முன்னதாக காலை11 மணியலவில், வவுனியா- தெற்கு சிங்கள பிரதேச செயலகத்தில் ...

மேலும்..

இந்தியாவில் இருந்து நாடு திரும்பிய வவுனியாவைச் சேர்ந்த 7 பேர் தனிமைப்படுத்தல் காலம் முடிவடைந்து வீடுகளுக்கு அனுப்பி வைப்பு…

இந்தியாவில் இருந்து நாடு திரும்பிய வவுனியாவைச் சேர்ந்த  7 பேர் தனிமைப்படுத்தல் காலம் முடிவடைந்து பொலிசார் ஊடாக இன்று வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்தியாவுக்கு சென்ற நிலையில் கொவிட் 19 தாக்கம் காரணமாக நாடு திரும்ப முடியாத நிலையில் இருந்த பலர் அரசாங்கத்தினால் ...

மேலும்..

வவுனியாவில் தனிமைப்படுத்தலை நிறைவு செய்த 7 பேர் விடுவிப்பு

வவுனியாவைச் சேர்ந்த 7பேர் தனிமைப்படுத்தலை நிறைவு செய்து விடுவிக்கப்பட்டுள்ளனர். மின்னேரிய இராணுவ முகாமில் 14 நாட்களில் தனிமைப்படுத்தலில் இருந்த  7 பேரும் இன்று (வெள்ளிக்கிழமை) காலை, வவுனியா பொலிஸ் நிலையத்தினூடாக விடுவிக்கப்பட்டுள்ளனர் . மின்னேரிய இராணுவ முகாமில் இந்தியாவிலிருந்து வருகை தந்தவர்கள் உட்பட வவுனியாவை ...

மேலும்..

மூன்றிலிரண்டு’ அதுவே இலக்கு! – ‘மொட்டு’வின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களிடம் மஹிந்த இடித்துரைப்பு…

"நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் நாம் மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டும். இதுவே எமது குறிக்கோளாக இருக்க வேண்டும். இதற்கான பிரசாரங்களை நாட்டின் சகல பகுதிகளிலும் சுகாதார விதிமுறைகளுக்கமைய நாம் ஆரம்பிக்க வேண்டும்." - இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவரான ...

மேலும்..

ராஜபக்ச குடும்ப ஆட்சிக்கு தேர்தலில் முடிவு கட்டுங்கள் மக்களிடம் அநுரகுமார வேண்டுகோள்

"நாடாளுமன்றத் தேர்தலின் பின்னர் ஜனநாயகத்துக்கு முரணான ராஜபக்ச குடும்ப ஆட்சியில் நாடு சிக்கிக்கொள்ளாமல் தடுக்க வேண்டும். ஐக்கிய தேசியக் கட்சிக்குத் தற்போது அரசுக்கு எதிராகச் செயற்படும் நோக்கம் கிடையாது. எனவே, நாடாளுமன்றத்தில் மக்களின் உரிமை மீறப்படும்போது அதற்கு எதிராகக் குரல் கொடுப்பதற்கு ...

மேலும்..

சர்வாதிகார ஆட்சி பற்றி விமர்சிக்க கூட்டமைப்புக்கு உரிமை கிடையாது – இப்படிக் கூறுகின்றது கோட்டா அணி…

"அரசு இராணுவ ஆட்சியை முன்னெடுத்துச் செல்வதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் உள்ளிட்ட எதிரணியினர் குற்றஞ்சாட்டுகின்றனர். கூட்டமைப்பினருக்கு சர்வாதிகார ஆட்சி முறைமை தொடர்பில் கருத்துரைப்பதற்கு - விமர்சிப்பதற்கு எவ்வித தார்மீக உரிமையும் கிடையாது." - இவ்வாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் சகாவான முன்னாள் நாடாளுமன்ற ...

மேலும்..

ரணில் தெரிவித்த கருத்து உண்மைக்குப் புறம்பானது – பவித்ரா பதிலடி…

"உலக சுகாதார ஸ்தாபனம்  சுகாதா அமைச்சுக்கு 230 மில்லியன் டொலர் நிவாரண நிதி  வழங்கியதாக  முன்னாள்  பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்ட கருத்து உண்மைக்குப் புறம்பானது. கொரோனா வைரஸ் ஒழிப்புக்கு உலக சுகாதார ஸ்தாபனம் 1.9 மில்லியன் அமெரிக்க  டொலரை இலங்கையிலுள்ள ...

மேலும்..

150 ஆசனங்கள் உறுதி! – மொட்டு நம்பிக்கை…

"எதிர்வரும் பொதுத்தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கூட்டணி 150 ஆசனங்களைப் பெறுவது உறுதியாகும். ரணில், சஜித் இடையில் ஏற்பட்டிருக்கும் முரண்பாட்டால் தேர்தலில் எமக்குப் போட்டியாக யாரும் இல்லை." - இவ்வாறு ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான வாசுதேவ நாணயக்கார ...

மேலும்..

கோட்டா அரசு முடியுமானால் ஆட்சியைப் பாதுகாக்கட்டும்! – சஜித் அணி சவால்…

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் ஏகாதிபத்திய ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்த நாட்டில் தற்போது தேர்தல் அத்தியாவசியமானதாகும். ஆகஸ்ட் 5ஆம் திகதி மூன்றிலிரண்டு பெரும்பான்மையைப் பெறுவதல்ல; முடியுமானால் ஆட்சி அதிகாரத்தைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள் என்று அரசுக்குச் சவால் விடுகின்றேன்." - இவ்வாறு முன்னாள் ...

மேலும்..

பொலிஸாரின் வன்முறைகளுக்கு எதிராக சர்வதேச மன்னிப்புச் சபையும் கண்டனம்…

அமைதிவழிப் போராட்டக்காரர்கள் மீது வன்முறைகள் பிரயோகிக்கப்படுவதை எவ்வகையிலும் நியாயப்படுத்த முடியாது என சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது. அமெரிக்காவில் கறுப்பினத்தவரான ஜோர்ஜ் புளொய்ட் வெள்ளையின பொலிஸ்காரர் ஒருவரால் முழங்காலினால் கழுத்து நசுக்கப்பட்டுக் கொலை செய்யப்பட்டதையடுத்து அமெரிக்க உட்பட உலகின் பல பாகங்களிலும் இந்தச் ...

மேலும்..

மலசலக்குழியில் பெண்ணின் சடலம்; சிவில் பாதுகாப்புப் படை வீரர் கைது…

திருகோணமலை, கல்மெடியாவ பகுதியில் மலசலகூடக் குழிக்குள் பெண்ணின் சடலம்  கண்டெடுக்கப்பட்டமை தொடர்பில் சிவில் பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார் என்று  தம்பலகாமம்  பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் குறித்து தெரியவருவதாவது:- தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்மெடியாவ பகுதியில் மலசல கூடத்துக்கு வெட்டப்பட்டிருந்த குழிக்குள் இருந்து ...

மேலும்..

1,877 ஆக அதிகரித்தது கொரோனாத் தொற்று – நேற்று 8 கடற்படையினர் அடையாளம்…

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 8 பேர் நேற்று அடையாளம் காணப்பட்டுள்ளனர் நேற்றிரவு 10.45 மணியளவில் தேசிய தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவினால் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி, கொரோனா தொற்றியவர்களின் மொத்த எண்ணிக்கை 1,877 ஆக அதிகரித்துள்ளது. நேற்று புதிய தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்ட ...

மேலும்..

வடக்கு கல்வி வளர்ச்சிக்கு முன்னுரிமை வழங்க ஜனாதிபதி விருப்புடன் உள்ளார் – மன்னாரில் ஆளுநர் சார்ள்ஸ் தெரிவிப்பு

கிராமங்களில் பாடசலைகள் மூடப்படும் நிலைமையை மாற்றியமைப்பதற்கு ஆசிரியர் சமூகம் சுயவிருப்புடன் கைகோர்க்க வேண்டும் என்று வடக்கு மாகாண ஆளுநர் திருமதி.பி.எஸ்.எம்.சார்ள்ஸ் வலியுறுத்தியுள்ளார். மன்னார் மாவட்ட கல்வித்துறையை முன்னேற்றுவதற்குப் பூரண ஒத்துழைப்புக்களையும் வழங்குவதற்குத்  தயாராகவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டதோடு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவும் வடக்கு மாகாண ...

மேலும்..

ஊரடங்கு கடுமையாக்கப்படும் என்பது தவறான செய்தி – முதலமைச்சர்

சென்னையில் மீண்டும் ஊரடங்கு கடுமையாக்கப்படும் என்பது தவறான செய்தி என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் கர்நாடக மாநில அணைகளில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இந்தநிலையில் தற்போது மேட்டூர் அணையின் நீர்மட்டம் ...

மேலும்..

கொரோனா வைரஸ்: குணமடைந்தோர் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியவர்களின்  எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது. இன்று (வெள்ளிக்கிழமை) மேலும் 46 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு  வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் ...

மேலும்..

24 மணி நேரத்தில் 10,956 பேருக்கு கொரோனா!

இந்தியாவில் 24 மணி நேரத்தில் 10,956 பேருக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது மத்திய சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,  இந்தியாவில் 24 மணி நேரத்தில் 10,956 ...

மேலும்..

யாழில் சுமந்திரன் கூறிய பெரும் பொய்! ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி .தவராசா பகிரங்க எச்சரிக்கை (vedio)

https://youtu.be/qZXRKIsKXC8

மேலும்..

கொழும்பின் சில பகுதிகளில் 15 மணித்தியால நீர்வெட்டு!

கொழும்பின் சில பகுதிகளில் 15 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி முதல் இவ்வாறு 15 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை குறிப்பிட்டுள்ளது. கொம்பனித்தெரு, கொள்ளுப்பிட்டி, கறுவாத்தோட்டம், பொரளை மற்றும் மருதானை ஆகிய பகுதிகளில் ...

மேலும்..

சடலமாக கண்டெடுக்கப்பட்டவர் தொடர்பான தகவல் வெளியானது!

கொழும்பு சுதந்திர சதுக்க பகுதியில் சடலமாக கண்டெடுக்கப்பட்டவர், பம்பலப்பிட்டியில் தற்காலிகமாக வசித்து வந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 64 வயதுடைய குறித்த நபர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. குறித்த நபரின் சடலத்துக்கு அருகில் இருந்து துப்பாக்கி மற்றும் கடிதம் ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளதாக ...

மேலும்..

சட்டவிரோத செயற்பாடுகளைத் தடுப்பதற்கு பொதுமக்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்-

யாழ்ப்பாண மாவட்டத்தில் சட்டவிரோத செயற்பாடுகளைத் தடுப்பதற்கு பொதுமக்களின் ஒத்துழைப்பு மிக அவசியமானது என யாழ். மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ருவான் வணிகசூரிய தெரிவித்தார். கரணவாய் வடக்கு கரவெட்டி கொற்றாவத்தையில் பெண் தலைமைத்துவ குடும்பம் ஒன்றிற்கான வீட்டிற்கான அடிக்கல் யாழ். ...

மேலும்..

போராட்டங்களை நடத்த எவருக்கும் உரிமை இல்லை- விமல்

நாடு கொரோனா தொற்றுநோயை எதிர்கொண்டுள்ள நிலையில் போராட்டங்களை நடத்த எவருக்கும் உரிமை இல்லையென அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் கறுப்பினத்தவர் ஒருவர் பொலிஸாரால் கொல்லப்பட்ட விவகாரம் தொடர்பாக இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதரகத்துக்கு முன்பாக போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது. குறித்த போராட்டம் கலவரமாக மாறிய விடயம் ...

மேலும்..

இன்று முதல் பள்ளிவாசல்களை திறக்க தீர்மானம்!

பொது சுகாதார அதிகாரியின் பரிசோதனையினைத் தொடர்ந்து இன்று(வெள்ளிக்கிழமை) முதல் பள்ளிவாசல்களை திறக்க முடியும் என வக்பு சபையின் தலைவர் சட்டத்தரணி சப்ரி ஹலீம் தீன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர், “கொரோனா தொற்று பரவுவதை தடுக்கும் நோக்கில் அரசாங்கத்தின் கோரிக்கைக்கமைய சகல ...

மேலும்..

மன்னாரில் பாடசாலை ஒன்றில் தொழில்நுட்பக் கூடம் ஆளுநரால் திறந்துவைப்பு!

மன்னார், கருங்கண்டல் றோமன் கத்தோலிக்க தமிழ் மகா வித்தியாலய பாடசாலையில் அமைக்கப்பட்ட தொழில்நுட்பக் கூடத்தை வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் திறந்துவைத்தார். மடு கல்வி வலயத்திற்குட்பட்ட குறித்த பாடசாலையில் அமைக்கப்பட்ட தொழில் நுட்பக்கூடம் நேற்று (வியாழக்கிழமை) மாலை வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது. பாடசாலையின் அதிபர் ...

மேலும்..

மீண்டும் ஐ.தே.கவினை பலப்படுத்த மக்கள் பங்களிப்பு வழங்குவார்கள் – சுஜீவ சேனசிங்க

மீண்டும் ஐக்கிய தேசிய கட்சியை பலப்படுத்த மக்கள் பங்களிப்பு வழங்குவார்கள் என்று எதிர்பார்க்கின்றோம் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று(வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள ...

மேலும்..

மிருசுவிலில் வாள்வெட்டுக்குழு அட்டகாசம்: ஒருவர் காயம், நிறுவனமொன்றின் சொத்துக்கள் சேதம்!

யாழ்ப்பாணம், கொடிகாமம், மிருசுவில் பகுதியில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றின் மீது வாள்வெட்டுக் குழு ஒன்றினால் இரவுவேளையில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இத்தாக்குதல் சம்பவத்தில் குறித்த நிறுவனத்தின் பணியாளர் ஒருவர் வாள்வெட்டுக்கு இலக்கானதுடன், நிறுவனத்தின் சொத்துக்கள் அனைத்தும் உடைத்து நாசம் செய்யப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக ...

மேலும்..

அமெரிக்க தூதரகம் இலங்கையின் இறைமையை மீறியுள்ளது – விமல்

அமெரிக்க தூதரகம் இலங்கையின் இறைமையை மீறியுள்ளது என மைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். இதன்போது கருத்து வெளியிட்டுள்ள அவர், ‘இலங்கை விமானநிலையத்தில் பிசிஆர் சோதனைக்கு தன்னை உட்படுத்த மறுத்தவர் அமெரிக்க இராஜதந்திரி இல்லை. ...

மேலும்..

வாக்களித்த மக்களின் நம்பிக்கையை ஜனாதிபதி சிதைத்துள்ளார் – ஜே.வி.பி!

வாக்களித்த மக்களின் நம்பிக்கையை ஜனாதிபதி சிதைத்துள்ளார் என மக்கள் விடுதலை முன்னணி குற்றம் சுமத்தியுள்ளது. கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அந்த கட்சியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க இவ்வாறு குற்றம் சுமத்தியுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “தற்போது, நாட்டை ஆளும் ...

மேலும்..

ஆர்ப்பாட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை – அனில் ஜாசிங்க

முன்னணி சோசலிஷ கட்சி ஏற்பாடு செய்த ஆர்ப்பாட்டத்திற்கு எந்த ஆட்சேபனையும் தெரிவிக்கவில்லை என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார். ஊடகம் ஒன்றினால் முன்வைக்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். ஆர்ப்பாட்டங்களின் போது சமூக இடைவெளி மற்றும் ...

மேலும்..

கொரோனா சிகிச்சைக்கான மையமாக மாற்றமடைகிறது அக்கராயன் வைத்தியசாலை!

தேசிய பேரிடர் நிலைமையினை கருத்திற்கொண்டு மத்திய சுகாதார அமைச்சின் அறிவுறுத்தலிற்கமைவாக அக்கராயன்குளம் பிரதேச வைத்தியசாலை கொரோனா சிகிச்சைக்கான மையமாக மாற்றமடையவுள்ளது. கடந்த இரு தினங்களுக்கு முன்னர் மத்திய சுகாதார அமைச்சு கொழும்பில் நடைபெற்ற உயர்மட்ட கலந்துரையாடலின் பிரகாரம் ஏற்கனவே அறியத்தரப்பட்டதற்கமைய கொரோனா சிகிச்சை ...

மேலும்..

ஜனாதிபதி செயலணியால் ஜனநாயகத்திற்கு பெரும் ஆபத்து – லால் விஜயநாயக்க

ஜனாதிபதி உருவாக்கிய செயலணியால் ஜனநாயகத்திற்கு பெரும் ஆபத்து ஏற்படும் என சட்டத்தரணி லால் விஜயநாயக்க தெரிவித்துள்ளார். இராணுவமயப்படுத்தலினையும், அரசமைப்பிற்கு வெளியே அமைப்புகளை உருவாக்குவதற்குமான முயற்சி இதுவென்பதில் எந்த சந்தேகமும் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். முப்படையினர் பொலிஸ் அதிகாரிகளை உள்ளடக்கிய, பரந்துபட்ட அதிகாரங்களை உடைய ...

மேலும்..

யாழில் கடலில் மிதந்துவந்த 57 கிலோ கஞ்சா!

யாழ்ப்பாணம், இளவாலை கடற்பரப்பில் கடலில் மிதந்துவந்த நிலையில் 57 கிலோ கஞ்சா கடற்படையினரால் கண்டெடுக்கப்பட்டு இளவாலை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இளவாலை கடற்பரப்பில் சந்தேகத்துக்கிடமான முறையில் மர்மப் பொருட்கள் மிதந்துவந்த நிலையில் அதனை அவதானித்த கடற்படையினர் குறித்த மூட்டைகளை சோதனையிட்டுள்ளனர். அப்போது அதற்குள் கஞ்சா ...

மேலும்..

முடியுமானால் ஆட்சியைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள் – தலதா அத்துகோரல

மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெறுவதல்ல, முடியுமானால் ஆட்சி அதிகாரத்தை பாதுகாத்துக் கொள்ளுங்கள் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரல பகிரங்க சவால் விடுத்துள்ளார். கொழும்பில் நேற்று(வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு சவால் விடுத்துள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து ...

மேலும்..

மேட்டூர் அணை நீரைத் திறந்து வைத்தார் முதலமைச்சர்

காவிரி, டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நீரைத் திறந்து வைத்தார். தற்போது காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் கர்நாடக மாநில அணைகளில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது மேட்டூர் அணையின் ...

மேலும்..

தமிழ் மருத்துவரின் கொரோனா மருந்து கண்டுபிடிப்பை பரிசீலிக்க மத்திய அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு!

கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த வைத்தியர் வசந்தகுமார் கண்டுபிடித்த 2 ரூபாய்க்கான கொரோனா மருந்து குறித்து விரைவாக பரிசீலிக்குமாறு மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த வைத்தியர், சென்னை உயர்நீதிமன்றில் மனுவொன்றை தாக்கல் செய்த நிலையில் நீதிமன்ற்ம இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது. வைத்தியரின் மனுவில், ...

மேலும்..

இராணுவத்தினர் சாதிக்க கூடிய சில விடயங்களை பொதுமக்களால் சாதிக்க முடியாது – விமல்!

இராணுவத்தினர் சாதிக்க கூடிய சில விடயங்களை பொதுமக்களால் சாதிக்க முடியாது என அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். பாதுகாப்பு செயலாளர் தலைமையிலான ஜனாதிபதி செயலணியில் தற்போது பணியில் உள்ள படை அதிகாரிகள் இடம்பெற்றிருப்பது ...

மேலும்..

தேர்தல் பிரச்சாரத்தினை மேற்கொள்வதற்கான சுதந்திரம் காணப்படவேண்டும் – லஷ்மன் கிரியல்ல

தேர்தல் பிரச்சாரத்தினை மேற்கொள்வதற்கான சுதந்திரம் காணப்படவேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் லஷ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார். கண்டியில் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். இதன்போது கருத்து வெளியிட்டுள்ள அவர், “தேர்தலிற்காக அறிவிக்கப்பட்டுள்ள சுகாதார வழிகாட்டுதல்கள் நடைமுறை சாத்தியமற்றவை. தேர்தல் பிரச்சாரத்தினை ...

மேலும்..

கனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் கொவிட்-19 தொற்றால் 405பேர் பாதிப்பு- 34பேர் உயிரிழப்பு!

கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றால் கடந்த 24 மணித்தியாலத்தில் 405பேர் பாதிப்படைந்துள்ளதோடு, 34பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 17ஆவது நாடாக விளங்கும் கனடாவில், இதுவரை கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஒட்டுமொத்தமாக 97,530 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 7,994பேர் மொத்தமாக ...

மேலும்..

உலகளவில் கொவிட்-19 பெருந் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7.5 மில்லியனை கடந்தது!

கொடிய கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றால் உலகளவில் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 7.5 மில்லியனை கடந்துள்ளது. அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, 75 இலட்சத்து 97 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன், கொடிய கொரோனா வைரஸ் பெருந் தொற்றினால் 4 இலட்சத்து ...

மேலும்..

இந்திய பொருளாதாரத்துக்கு வேலைவாய்ப்பு இதயம் போன்றது- நிதின் கட்காரி

இந்திய பொருளாதாரத்துக்கு வேலைவாய்ப்பு இதயம் போன்றதென மத்திய  அமைச்சர் நிதின் கட்காரி  தெரிவித்துள்ளார். நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற இணைய உரையாடல் நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த நிகழ்ச்சியில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, “இந்திய பொருளாதாரத்துக்கு வேலைவாய்ப்பு, வளர்ச்சி, நிலைத்தன்மை ...

மேலும்..

கொரோனா தொற்று: நான்காவது இடத்தை அடைந்தது இந்தியா

உலகளவில் கொரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா தற்போது நான்காவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. உலக அளவில் கொரோனா  தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் 6ஆவது இடத்தில் இருக்கும் இந்தியா ஒரே நாளில் 4வது இடத்துக்குச் செல்லும் நிலையில் உள்ளது. இந்தியாவில் ...

மேலும்..

சங்கிலிய மன்னனின் 401 ஆவது ஆண்டு நினைவுநாள் யாழில் அனுஷ்டிப்பு

சங்கிலிய மன்னனின் 401 ஆவது ஆண்டு நினைவு தினம் இன்று யாழ்ப்பாணத்தில் நினைவுகூரப்பட்டது. யாழ்ப்பாணம், பருத்தித்துறை வீதி, செம்மணிச் சந்தியிலுள்ள சங்கிலி மன்னன் சிலைக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த அஞ்சலி நிகழ்வில் யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் துணைத் தூதரகத்தின் தூதுவர் பாலச்சந்திரன், ...

மேலும்..

யுத்தகாலத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த தொலைத்தொடர்பு சாதனங்கள் மன்னாரில் கண்டெடுப்பு!

மன்னார், பேசாலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தென் கடற்கரைப் பகுதியில் மறைத்து வைக்கப்பட்ட தொலைத் தொடர்பு சாதனங்களை பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் இணைந்து கண்டெடுத்துள்ளனர். பேசாலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நடுக்குடா தென் கடற்கரைப் பகுதில் காணப்பட்ட சந்தேகத்திற்கிடமான பொருட்கள் தொடர்பாக பேசாலை ...

மேலும்..

நமது மாகாணத்தின் தற்போதைய கல்விநிலை மிகவும் வேதனைக்குரியது- வடக்கு ஆளுநர்

கல்வியையும் நிபுணத்துவத்தையும் இலங்கையின் பிற மாகாணங்களுக்கும் மத்திய கிழக்கு நாடுகளுக்கும் புலம்பெயர்ந்து சென்று பரப்பிய கல்விமான்களைக் கொண்டிருந்த வடக்கு மாகாணத்தின் தற்போதைய கல்வியின் நிலை மிகவும் வேதனைக்குரியதாக உள்ளதாக வடக்கு ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்துள்ளார். மன்னார் மாவட்ட கல்வி அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல்  ...

மேலும்..

இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 1877 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றுக்குள்ளாகி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 716 ஆக உயர்வடைந்துள்ளது. மேலும்  1150 பேர்  குணமடைந்துள்ளனர். இலங்கையில் இதுவரை 11 பேர் கொரோனா தொற்றால் மரணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும்..

ரணில் உண்மைக்கு புறம்பான கருத்தை வெளியிடுகிறார்- பவித்ரா

கொரோனா தொற்று நோயை கட்டுப்படுத்துவதற்கு உலக சுகாதார ஸ்தாபனம் 230 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியை வழங்கியுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க உண்மைக்கு புறம்பான கருத்தை வெளியிடுகிறாரென சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று (வியாழக்கிழமை) ...

மேலும்..

முழுமையான உதவியை தருகிறேன் பெறுபேறுகளை காட்டுங்கள் – ஜனாதிபதி

ஏற்றுமதி துறையின் பிரச்சினைகள் மற்றும் தடைகளை சரியாக இனம்கண்டு அவற்றை தீர்ப்பதற்கு முழுமையான உதவியை வழங்க அரசாங்கம் தயாராகவுள்ளது என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ குறிப்பிட்டார். மிகவும் சிறியளவில் உள்ள ஏற்றுமதித் துறையை சர்வதேச சந்தையை இலக்காகக் கொண்டு விரிந்தளவில் எடுத்துச் சென்று ...

மேலும்..

நாட்டில் மழையுடனான காலநிலை நீடிக்கும்

நாட்டில் நிலவும் மழையுடனான வானிலை தொடரும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. வானிலை அவதான நிலையத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “மேல், வடமேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய ...

மேலும்..

சுதந்திர சதுக்கத்துக்கு அருகில் சடலம் கண்டெடுப்பு!

கொழும்பு-7, சுதந்திர சதுக்கத்திற்கு அருகில் ஆணின் சடலமொன்று இன்று (வெள்ளிக்கிழமை) காலை கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சடலம் அடையாளம் காணப்படவில்லையெனவும் 60 முதல் 65 வயதிற்குட்பட்டவருடையதாக இருக்கலாமென சந்தேகிப்பதாகவும் பொலிஸார் குறிப்பிடுகின்றனர். இச்சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

மேலும்..