June 13, 2020 அன்று பிரசுரிக்கப்பட்டவை

கொள்ளுப்பிட்டி சம்பவத்தை அரசியல் ஆக்க வேண்டாம்! – மஹிந்த வேண்டுகோள்

"நீதிமன்றத்தின் தடையுத்தரவையும் சுகாதார விதிமுறைகளையும் மீறியே கொழும்பு - கொள்ளுப்பிட்டியில் அரசியல் கட்சி ஒன்றின் ஏற்பாட்டில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதைப் பொலிஸார் தடுக்க முயன்றபோதுதான் அவர்களுக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையில் மோதல் இடம்பெற்றது. தற்போதைய தேர்தல் காலத்தில் இந்த ஆர்ப்பாட்டத்தை வைத்து அரசியல் ...

மேலும்..

ராஜபக்ச ஆட்சியில் நீதிக்கு இடமில்லை – தேர்தலில் பாடம் புகட்ட வேண்டுமென கடுமையாகச் சாடுகின்றார் ரணில்

"ராஜபக்சக்களின் குடும்ப ஆட்சியில் நாட்டு மக்கள் ஒருபோதும் சுதந்திரத்தையும், நீதியையும் எதிர்பார்க்க முடியாது. மனிதாபிமானமும், மனச்சாட்சியும் இல்லாத இந்த அரசிடம் இருந்து எப்படி நீதியை எதிர்பார்க்க முடியும்?." - இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க கேள்வி எழும்பியுள்ளார். அமெரிக்காவில் கறுப்பினத்தவரான ...

மேலும்..

நவீனை தொழிற்சங்கத் தலைவராக நியமித்து ரணில், தமிழர்களை அவமானப்படுத்தியுள்ளார்- மனோ

நவீன் திசாநாயக்கவை தொழிற்சங்கத் தலைவராக நியமித்து ரணில் விக்ரமசிங்க தமிழர்களை அவமானப்படுத்தியுள்ளார் என தமிழ் முற்போக்குக் கூட்டணி தலைவர் மனோகணேசன் தெரிவித்துள்ளார். அத்துடன், தாமும் பங்களித்து உருவாக்கிய நல்லாட்சியில் பெருந்தோட்டதுறை அமைச்சராக இருந்து, தமிழ் தோட்டத்தொழிலாளரின் ஆயிரம் ரூபாய் சம்பள விவகாரத்தில், பெருந்தடையாக ...

மேலும்..

கேரளாவில் உருவானது ‘கொரோனா தேவி’ ஆலயம்!

கேரளாவைச் சேர்ந்த ஒருவர், கொரோனா தேவி ஆலயத்தை உருவாக்கி கொரோனாவுக்கு எதிரான போரில் ஈடுபடுபவர்களுக்காக வழிபாடு நடத்தி வருகிறார். கொரோனாவால் உலகம் முழுவதும் உள்ள வழிபாட்டுத் தலங்கள் மூடப்பட்டுள்ளன. சமீபத்தில்தான் படிப்படியாக வழிபாட்டுத் தலங்கள் திறக்கப்பட்டு வருகின்றன. இருந்தும் கொரோனாவுக்குப் பயந்து சமூக ...

மேலும்..

வழமைக்கு திரும்ப தயாராகும் மெக்ஸிகோ சிட்டி!

மெக்ஸிகோ தலைநகர் மெக்ஸிகோ சிட்டியில், கார் போக்குவரத்து மற்றும் பொது போக்குவரத்து மீதான கட்டுப்பாடுகள் அடுத்த வாரம் நீக்கப்படுகின்றது. அத்துடன், 340,000 தொழிற்சாலை தொழிலாளர்கள் கடுமையான சுகாதார நிலைமைகளின் கீழ் பணிக்கு திரும்ப அனுமதிக்கப்படுகின்றனர். இதேவேளை, வீதிச் சந்தைகள், வணிக வாளகங்கள், உணவகங்கள் மற்றும் ...

மேலும்..

ஒன்றாரியோவில் மருந்துகளை வாங்குவதற்கான வரம்பு நீக்கம்!

மருந்தகங்களில் மருந்துகளை கொள்வனவு செய்வதற்கான வரம்புகளை, ஒன்றாரியோ மாகாணம் தளர்த்தியுள்ளது. பெரும்பாலான கனேடிய மாகாணங்கள் இப்போது பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளை வழங்குவதற்கான கட்டுப்பாடுகளை தளர்த்தி வருகின்ற நிலையில், ஒன்றாரியோ மாகாணமும் இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. முடக்கநிலை காரணமாக, கடந்த மார்ச் மாதத்தில் ஒரே நேரத்தில் பெறக்கூடிய ...

மேலும்..

ஷஹித் அப்ரிடிக்கு கொரோனா தொற்று உறுதி..!

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும் சகலதுறை வீரருமான ஷஹித் அப்ரிடிக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது. கடந்த வியாழக்கிழமை முதல் தனது உடல்நிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் இதனை அடுத்து மேற்கொள்ளப்பட்ட சோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாகவும் அவர் டுவிட்டரில் தெரிவித்துள்ளார். அப்ரிடி ...

மேலும்..

இனவெறி எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களுக்கு கட்டுப்பாடுகள் விதித்த பொலிஸார்!

இந்த வார இறுதியில் லண்டனில் திட்டமிடப்பட்ட இனவெறி எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களுக்கு முன்னதாக பல குழுக்களுக்கு பொலிஸார் கட்டுப்பாடுகள் விதித்துள்ளனர். இன்று (சனிக்கிழமை) தலைநகரில் பிளாக் லைவ்ஸ் மேட்டர் ஆர்ப்பாட்டம் உட்பட பல போராட்டங்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக பெருநகர பொலிஸ்துறை தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றுநோய் ...

மேலும்..

கொவிட்-19 தொற்றின் மிகப்பெரிய ஒருநாள் உயர்வைக் கண்டது தென்னாபிரிக்கா!

கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றுகளில் தென்னாபிரிக்கா அதன் மிகப்பெரிய ஒற்றை நாள் அதிகரிப்பை கண்டுள்ளது. சுகாதார அமைச்சின் கடந்த 24 மணித்தியால அறிக்கையின் படி, புதிதாக 3,359பேர் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டதோடு, 70 பேர் உயிரிழந்துள்ளனர். தென்னாபிரிக்காவில் வைரஸ் தொற்று பரவியதிலிருந்து பதிவான அதிகப்பட்ச ...

மேலும்..

மட்டக்களப்பில் தமிழரசின் தேர்தல் முன்னாயத்தக் கூட்டம் இன்று…

எதிர்வரும் பாhளுமன்றப் பொதுத் தேர்தலை முன்னிட்டு மேற்கொள்ளப்படவுள்ள செயற்பாடுகள் தொடர்பில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மட்டக்களப்பு உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் கட்சிக் கிளைகளின் பிரதிநிதிகளுக்கான கலந்துரையாடல் இன்றைய தினம் (13) கட்சிப் பணிமனையில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் ...

மேலும்..

கொவிட் 19 நிதியத்தின் இருப்பு ஆயிரத்து 378 மில்லியன் ரூபாயாக அதிகரிப்பு

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் பணிகளுக்கென ஜனாதிபதியினால் சுகாதார மற்றும் சமூக பாதுகாப்பு நிதியமான இடுகம நிதியம் ஸ்த்தாபிக்கப்பட்டது. இந்நிலையில் இடுகம கொவிட் 19 நிதியத்தின் இருப்பு ஆயிரத்து 378 மில்லியன் ரூபாயாக அதிகரித்துள்ளது. இந்நிலையில் ஹெலரணவிரு படையணியின் அநுராதபுர மாவட்ட அலுவலகத்தினால் 2 ...

மேலும்..

அம்பாறையில் வீதி அபிவிருத்தி அதிகார சபை சிரமதான நடவடிக்கை

பாறுக் ஷிஹான் நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் அசாதாரண சூழ்நிலை காரணமாக வீதியோரங்களில்  வளர்ந்திருந்த பாரிய மரக்கிளைகள் வெட்டப்பட்டு வருகின்றன. மக்களின் பாதுகாப்புக்கருதி  குறித்த வேலைத்திட்டத்தினை  வீதி அபிவிருத்தி அதிகார சபை  நடவடிக்கை  மேற்கொண்டுள்ளது. அந்த வகையில் அம்பாறை மாவட்டத்தில் கல்முனை மருதமுனை நற்பிட்டிமுனை நாவிதன்வெளி ...

மேலும்..

நான் இரட்டை பிரஜாவுரிமையுள்ள ஒரு குடிமகன்-ரத்ன ஜீவன் ஹூல்

நான் இரட்டை பிரஜாவுரிமையுள்ள ஒரு குடிமகன் என தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினரான பேராசிரியர் ரத்ன ஜீவன் ஹூல் தெரிவித்துள்ளார். மேலும் இலங்கையை விட்டு இருமுறை வெளியேற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டமையினால், இரட்டை குடியுரிமை பெறவேண்டி ஏற்பட்டதாக அவர்  சுட்டிக்காட்டியுள்ளார். அத்துடன் இந்நாட்டிலே வாழ்ந்து,  உயிரிழப்பதற்கு ...

மேலும்..

எரிபொருள் விலை இந்த ஆண்டு எந்தவொரு சூழ்நிலையிலும் அதிகரிக்கப்படாது – மஹிந்த அமரவீர

வீழ்ச்சியடைந்த உலகளாவிய எரிபொருள் விலை, இந்த ஆண்டு இறுதிக்குள் கணிசமான அளவு மீண்டும் அதிகரிக்கும் என நம்புவதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். தங்காலையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அமைச்சர், கச்சா எண்ணெய் விலை எவ்வளவு உயர்ந்தாலும், இலங்கையில் ...

மேலும்..

சங்கிலிய மன்னனின் நினைவுதினம் வவுனியாவில் அனுஷ்டிப்பு!

சங்கிலிய மன்னனின் 401ஆவது நினைவு தினம் வவுனியா கற்குளம் பகுதியில் நினைவுகூரப்பட்டது. அத்துடன், குறித்த பிரதேசத்தில் அமைந்துள்ள ஆற்றுப் பகுதியில் சங்கிலிய மன்னனுக்கான பிதிர்கடன் நிகழ்வுகள் சம்பிரதாயபூர்வமாக இடம்பெற்றதுடன், சிதம்பரபுரம் திருப்பழனி முருகன் ஆலய வளாகதத்தில் அவருக்கான அஞ்சலி நிகழ்வு நடைபெற்றது. இதன்போது, சங்கிலிய ...

மேலும்..

கொழும்பில் சிறுபான்மையினரின் வாக்குகள் சிதறாது – ஜனகன் நம்பிக்கை!

நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் கொழும்பில் சிறுபான்மையினரின் வாக்குகள் சிதறாது என ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட வேட்பாளர் விநாயகமூர்த்தி ஜனகன் நம்பிக்கை வெளியிட்டார். கொழும்பில் இன்று(சனிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டார். கொழும்பில் இம்முறை அதிகளவான வேட்பாளர்கள் களமிறங்குவதாகவும், ...

மேலும்..

மலையக மக்கள் யானைக்கே வாக்களிப்பார்கள் என்ற யுகம் மாறிவிட்டது- இராதாகிருஷ்ணன்

மலையக மக்கள் யானைக்கே வாக்களிப்பார்களென சிலர் நினைத்துக்கொண்டிருக்கின்றனர். அந்த யுகம்  தற்போது மாறிவிட்டதென மலையக மக்கள் முன்னணியின் தலைவர் வே.இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். ஹட்டன் காசல்ரீ விருந்தகத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார். இதன்போது அவர் மேலும் கூறியுள்ளதாவது, “தமிழ் ...

மேலும்..

இயக்கச்சிப் பகுதியில் மக்கள் வீதி மறியல் போராட்டம்!

கிளிநொச்சி, பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இயக்கச்சி கொற்றாண்டகுளம் பிரதேச மக்கள் வீதி மறியல் போராட்டத்தை முன்னெடுத்தனர். குறித்த போராட்டம் இன்று (சனிக்கிழமை) காலை 6.30 மணியளவில் பிரதேச மக்களால் கட்டைக்காடு பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் வீதி அபிவிருத்தி பணிகளுக்காக கிரவல் ஏற்றிச் சென்ற டிப்பர் ...

மேலும்..

சங்கிலிய மன்னனின் 401 ஆவது நினைவு தினம் மன்னாரில் அனுஷ்டிப்பு

ஈழத்து தமிழ் மன்னன் சங்கிலியனுடைய 401 ஆவது சிரார்த்த நினைவு தினம், மன்னாரில் இன்று (சனிக்கிழமை) காலை அனுஷ்டிக்கப்பட்டது. மன்னார் தேசிய சைவ மக்கள் கட்சியின் ஏற்பாட்டில் அதன் தலைவர் பிரம்ம சிறி ஐங்கசர சர்மா தலைமையில் மன்னார், கீரி கடற்கரையில்  குறித்த ...

மேலும்..

ஹூலை விலக்க வேண்டுமென வாய்ப்பாடு போல் தினமும் கூறுவது வேடிக்கையானது – அஷாத் சாலி

தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர் ஹூலை விலக்க வேண்டுமென வாய்ப்பாடு போல் தினமும் கூறுவது வேடிக்கையானது என தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவரும் முன்னாள் ஆளுநருமான அஷாத் சாலி தெரிவித்துள்ளார். நேற்று (வெள்ளிக்கிழமை) கட்சி அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய அவர், அரசாங்கத்தின் ...

மேலும்..

கொரோனா வைரஸ் – குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,252 ஆக உயர்வு

கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,252 ஆக உயர்ந்துள்ளது. இன்று (சனிக்கிழமை) 12 மணியுடன் நிறைவடையும் கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 56 பேர் குணமடைந்துள்ள நிலையில் இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு அறிவித்துள்ளது. அந்தவகையில் இதுவரை ...

மேலும்..

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் படுகொலை

வெலிமடை, பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நுகதலாவ பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு நபரொருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். குறித்த பகுதியிலுள்ள இரட்டைமாடி வீட்டுக்குள் வைத்தே குறித்த நபர் (60 வயது) நேற்று (வெள்ளிக்கிழமை), கொலை செய்யப்பட்டுள்ளார் என பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் ஓய்வுபெற்ற ஆசிரியரான ...

மேலும்..

அரசாங்கத்தை சார்ந்திருந்தவர்களே இப்போது சூரியனை வாடகைக்கு எடுத்துள்ளனர்- துரைராஜசிங்கம்

முற்றுமுழுதாக அரசாங்கத்தை சார்ந்திருந்தவர்களே இப்போது சூரியனை வாடகைக்கு எடுத்துக்கொண்டு மட்டக்களப்பில் தேர்தலில் களமிறங்கியுள்ளதாக இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட தலைமை வேட்பாளருமான கி.துரைராஜசிங்கம் தெரிவித்தார். எதிர்வரும் நடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களின் தேர்தல் பிரசாரப் பணிகள் ...

மேலும்..

அந்தோனியார் ஆலயத்தில் சிறப்பாக இடம்பெற்ற திருப்பலி பூஜைகள்

அந்தோனியார் பெருநாளை முன்னிட்டு இன்று (சனிக்கிழமை) வவுனியா- இறம்பைக்குளம், அந்தோனியார் ஆலயத்தில் விசேட திருப்பலி பூஜைகள் சிறப்பாக இடம்பெற்றன. மன்னார் மறை மாவட்ட ஆயர் இமானுவேல் அடிகளாரின் தலைமையில் இடம்பெற்ற விசேட வழிபாடுகளில், மட்டுப்படுத்தப்பட்ட கத்தோலிக்கர்களே அனுமதிக்கப்பட்டிருந்தனர். இதன்போது ஆயரினால் விசேட நற்கருத்துக்கள் வழங்கப்பட்டதுடன் ...

மேலும்..

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு நபர் ஒருவர் படுகொலை…

(க.கிஷாந்தன்) வெலிமடை, பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நுகதலாவ பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு நபரொருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இரட்டைமாடி வீட்டுக்குள் வைத்தே நேற்று (12) 60 வயதுடைய குறித்த நபர் கொலை செய்யப்பட்டுள்ளார் என பிரதேச வாசிகள் தெரிவித்தனர். ஓய்வுபெற்ற ஆசிரியரான இவர் ஒரு பிள்ளையின் தந்தையாவார். ...

மேலும்..

சிசு கொலை – தாய் தொடர்பில் விசாரணை…

(க.கிஷாந்தன்) நோர்வூட் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட நோர்வூட் ஜனபதய கொலனி பகுதியில் உள்ள வீடு ஒன்றின் பின்புறத்தில் மானா தோப்புக்குள் பிறந்து ஒரு நாளான சிசு ஒன்று புதைக்கப்பட்டுள்ளதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் 12.06.2020 அன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸார் மேலும் ...

மேலும்..

ரணில் அணியினர் ஒழுங்காக செயற்பட்டிருந்தால் சஜித் பிரேமதாச வெற்றி பெற்றிருப்பார் – குற்றம் சுமத்துகின்றார் இராதாகிருஷ்ணன்…

(க.கிஷாந்தன்) "தமிழ் முற்போக்கு கூட்டணி உதயமாகிய பின்னரே மலையகத்தில் மறுமலர்ச்சி ஏற்பட ஆரம்பித்தது. அமைச்சுப் பதவிகளை வகித்து அரசாங்கத்துடன் இருந்தவர்களால் கூட செய்ய முடியாமல் போன பல விடயங்களை எமது கூட்டணி செய்து முடித்துள்ளது. எனவே, தமிழ் முற்போக்கு கூட்டணி மீது மக்களுக்கு ...

மேலும்..

460 மில்லி கிராம் கெரோயின் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது…

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிறைந்துரைச்சேனை பகுதியில் வெவ்வேறு இடங்களில் இருந்து 460 மில்லி கிராம் கெரோயின் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் சந்தேகத்தில் இரண்டு இளைஞர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தெரிவித்தார். வாழைச்சேனை காகித ஆலை இராணுவ ...

மேலும்..

“IDFC First Bharat” என்ற நிதி நிறுவனத்தின் வசூல் வேட்டை…

அனுப்புநர், தர்ஷினி பிரியா பூங்கா நகர், இராஜகோபாலபுரம், புதுக்கோட்டை - 622003 பெறுநர், மாவட்ட ஆட்சியர் அவர்கள், புதுக்கோட்டை. பொருள்: மகளிர் குழு வசூல் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு வணக்கம், நான் புதுக்கோட்டை மாவட்டத்தில் பூங்கா நகரில் வசித்து வருகிறேன். IDFC First Bharat என்ற நிதி நிறுவனம், மகளிர் குழு என்ற பெயரில் வாரம் தோறும் திங்கள் கிழமை ...

மேலும்..

‘தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர் ஹூலை விலக்க வேண்டுமென வாய்ப்பாடு போல் தினமும் கூறுவது வேடிக்கையானது’ – அஷாத் சாலி தெரிவிப்பு…

அரசாங்கத்தின் கொள்கைகளும், போக்குகளும், கோட்பாடுகளும் என்னவென்பது   அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தனவின் மழுப்பல்கள் தடுமாற்றங்களிலிருந்து தெரிவதாக தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவரும் முன்னாள் ஆளுநருமான அஷாத் சாலி தெரிவித்துள்ளார். நேற்று (12) கட்சி அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் ...

மேலும்..

கிளிநொச்சியில் இடம்பெற்ற விபத்தில் மூவர் படுகாயம்!

கிளிநொச்சி ஏ-9 வீதியில் இடம்பெற்ற விபத்தில் மூவர் படுகாயமடைந்துள்ளனர். குறித்த விபத்து இன்று (சனிக்கிழமை) காலை 9.30 மணியளவில் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு அண்மித்த ஏ-9 வீதியில் இடம்பெற்றுள்ளது. முறிகண்டி பகுதியிலிருந்து கிளிநொச்சி நகர் நோக்கி ஒரே திசையில் பயணித்த இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மோதி ...

மேலும்..

பிறந்து ஒரு நாளான சிசுவை குழி தோண்டி புதைத்த பெண்: நுவரெலியாவில் சம்பவம்

நுவரெலியா- நோர்வூட், ஜனபதய கொலனி பகுதியைச் சேர்ந்த பெண்ணொருவர், பிறந்து ஒரு நாளான சிசுவை வீட்டின் பின்புறத்திலுள்ள தேயிலை தோட்டத்திற்குள் புதைத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறித்த சந்தேகநபரான பெண்ணை நோர்வூட் பொலிஸார் கைது செய்து, சம்பவம் தொடர்பாக மேலதிக ...

மேலும்..

இராணுவக் கெடுபிடிகள் மீண்டும் அதிகரிப்பு: இம்முறை தமிழர்களின் வாக்களிப்பு வீதம் குறையும் அச்சம்- இரா.துரைரட்ணம்

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழ் மக்களின் வாக்களிப்பு வீதம் குறையுமானால் மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழர்களின் பிரதிநிதித்துவம் குறையக்கூடிய வாய்ப்பு உள்ளது என கிழக்கு மாகாணசபையின் முன்னாள் உறுப்பினர் இரா.துரைரெட்னம் தெரிவித்துள்ளார். இதேவேளை, புதிய ஜனாதிபதி தெரிவுசெய்யப்பட்டதன் பின்னர் மீண்டும் யுத்த காலத்தைப் போன்று ...

மேலும்..

நாடளாவிய ரீதியிலான ஊரடங்கு உத்தரவில் மேலும் தளர்வு

அனைத்து மாவட்டங்களிலும் நாளை (ஞாயிற்றுக்கிழமை) முதல் மறு அறிவித்தல் வரும்வரை தினமும்  ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்படும் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது. அந்தவகையில் ஜூன் 14 ஆம் திகதி முதல் நாட்டின் அனைத்து மாவட்டிங்களிலும் ஊரடங்குச் சட்டம் நள்ளிரவு 12 மணி முதல் ...

மேலும்..

அனைத்து பல்கலைக்கழகங்களின் 4 வது ஆண்டு பரீட்சை ஜூன் 22 முதல் ஆரம்பம்

இறுதி ஆண்டு பரீட்சைகளுக்காக ஜூன் 22 அன்று அனைத்து பல்கலைக்கழக நடவடிக்கைகள் ஆரம்பமாகும் என பல்கலை மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இறுதி ஆண்டு மாணவர்களுக்கான அனைத்து பல்கலைக்கழகங்களின் மருத்துவ பீடங்களும் 2020 ஜூன் 15 ஆம் திகதி திங்கட்கிழமை முதல் மீண்டும் திறக்கப்படும் ...

மேலும்..

கூட்டமைப்புக்கும் மக்களுக்குமிடையில் இடைவெளியை ஏற்படுத்துபவர்கள் அரசின் முகவர்கள்? – சிவமோகன்

கூட்டமைப்புக்கும் மக்களுக்குமிடையில் இடைவெளியை ஏற்படுத்துபவர்கள் அரசின் முகவர்களா என்ற சந்தேகத்தினை ஏற்படுத்துகின்றது என வைத்தியகலாநிதி சிவமோகன் தெரிவித்துள்ளார். இது குறித்து இன்று (சனிக்கிழமை) அனுப்பி வைத்துள்ள ஊடக அறிக்கையிலேயே இந்த கேள்வியை எழுப்பியுள்ள அவர், தமிழர் ஒற்றுமையை சீர் குலைக்க நினைக்கும் பலர் ...

மேலும்..

தமிழ் மக்களிள் ஆதரவை ஒருபோதும் மறக்கப்போவதில்லை- மைத்திரி

தன்மீது நம்பிக்கை வைத்தே ஒட்டுமொத்த தமிழ் பேசும் மக்கள் எனக்கு வாக்களித்தனர் எனவும் அதனைத் தான் ஒருபோதும் மறக்கப்போவதில்லை என்றும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். மேலும், தற்போதைய ஆட்சியில் தமிழர்கள் பாதிக்கப்படுவார்கள் என தான் நம்பவில்லை என்று குறிப்பிட்ட அவர், ...

மேலும்..

கொரோனாவால் வீழ்ச்சியடைந்த சுற்றுலாத்துறை: மீளக் கட்டியெழுப்பவும் நிவாரணம் வழங்கவும் தீர்மானம்

சுற்றுலாத்துறை சேவையினை மீளக் கட்டியெழுப்பவும், பாதிக்கப்பட்டுள்ள சுற்றுலாத்துறை சேவையாளர்களுக்கு நிவாரணம் வழங்கவும் அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக பிரதமர் அலுவலகத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொவிட்-19 வைரஸ் பரவல் தாக்கத்தின் காரணமாக வீழ்ச்சியடைந்துள்ள சுற்றுலாத்துறை சேவையினை மீளக் கட்டியெழுப்பல் தொடர்பான பேச்சுவார்த்தை நேற்று (வெள்ளிக்கிழமை) அலரி ...

மேலும்..

இலங்கை சிவில் சமூகத்தில் மங்கள பங்கு வகிப்பார் – மனோ கணேசன் தகவல்

முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர சிவில் சமூகத்தில் ஒரு குறிப்பிட்ட பங்கை வகிப்பார் என்று தான் எதிர்பார்ப்பதாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். இது குறித்து டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள மனோ கணேசன், மங்கள சமரவீர அரசியலில் இருந்து ...

மேலும்..

போலியான பெயரில் தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைபெற்ற சஹ்ரானின் சகோதரன்- விசாரணையில் முக்கிய தகவல்

கடந்த வருடம் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சூத்திரதாரி சஹ்ரான் ஹாசிமின் சகோதரர் ரில்வான் ஹாசீம், போலியான பெயரில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற சம்பவம் தொடர்பாக தகவல் வெளியாகியுள்ளது. உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் சாய்ந்தமருது பிரதேசத்தில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் ...

மேலும்..

ஆயுர்வேத சிகிச்சை நிலையம் என்னும் போர்வையில் விபச்சார விடுதி: பெண்கள் உட்பட 08 பேர் கைது

கொழும்பு புறநகர் பகுதியான இரத்மலானையில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின்போது விபச்சார விடுதி நடத்திய குற்றச்சாட்டில் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆயுர்வேத சிகிச்சை நிலையம் என்னும் போர்வையில் விபச்சார விடுதி இயங்குவதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலை அடுத்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போதே இவர்கள் கைது ...

மேலும்..

முஸ்லிம்களிடையே பாரிய வேறுபாடுகளை அறிந்தேன்: பல தகவல்களை சாட்சியமளித்தார் அஜித் ரோஹன

முஸ்லிம்களிடையே உள்ள பாரிய வேறுபாடுகள் மற்றும் தான் அம்பாறை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சராக இருந்த போது கடற்கரை பள்ளிவாசல் தொடர்பாக மேற்கொண்ட மேற்பார்வைகள் குறித்தும் பொலிஸ் சட்டப் பிரிவின் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன சாட்சியமளித்துள்ளார். அத்துடன், உயிர்த்த ஞாயிறு ...

மேலும்..

லீசிங் நிறுவனங்களின் சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு இடமளிக்கப்படாது – மீறினால் தண்டனை கோவை சட்டத்தின் கீழ் நடவடிக்கை

லீசிங் வசதிகளின் கீழ் வாகனங்களை கொள்வனவு செய்து கடன் தவணைகளை செலுத்தத் தவறும் நபர்களின் வாகனங்களை பறிமுதல் செய்வதற்கு லீசிங் கம்பனிகள் பின்பற்றும் முறைமை சட்ட விரோதமானது என்பதால் ஒருபோதும் அதற்கு இடமளிக்க வேண்டாம் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதில் ...

மேலும்..

காற்றுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு- வளிமண்டலவியல் திணைக்களம்

மேல்,  வடமேல்,  சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி, மாத்தறை மாவட்டங்களிலும் இன்று (சனிக்கிழமை) இடைக்கிடையே மழை பெய்யக்கூடிய சாத்தியக் கூறுகள் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது, ...

மேலும்..

நீர், மின்சார கட்டணங்களுக்கான சலுகைகளை வழங்குமாறு சஜித் கோரிக்கை

மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களுக்கு நீர் மற்றும் மின்சார கட்டணங்களுக்கான சலுகைகளைப் பெறுவதற்காக பொதுமக்களுடன் இணைந்து போராட்டத்தில் ஈடுபட கட்சி தயாராக இருப்பதாக சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். இரண்டு மாதங்களுக்கான கட்டணங்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று அமைச்சர் ஒருவர் அண்மையில் கூறியதாகவும் ஐக்கிய ...

மேலும்..

மேலும் 22 கடற்படை வீரர்கள் பூரணமாக குணமடைந்தனர்

இலங்கையில் மேலும் 22 கடற்படை வீரர்கள் பூரணமாக குணமடைந்து, வைத்தியசாலையிலிருந்து வெளியேறி உள்ளதாக கடற்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார். இதற்கமைய இதுவரையில் 679 கடற்படை வீரர்கள் பூரணமாக குணமடைந்து வைத்தியசாலையில் இருந்து வெளியேறி உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். இதேவேளை, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று ...

மேலும்..

ஜனாதிபதியினால் அமைக்கப்பட்ட செயலணி கட்டமைக்கப்பட்ட இன அழிப்பின் ஓர் புதிய பரிமாணம் – தமிழர் மரபுரிமைப் பேரவை

கிழக்கில் தொல்லியல் மரபுரிமைகளை பாதுகாப்பதற்காக ஜனாதிபதியினால் அமைக்கப்பட்ட 11 பேர் கொண்ட ஜனாதிபதி செயலணி கட்டமைக்கப்பட்ட இன அழிப்பின் ஓர் புதிய பரிமாணம் என தமிழர் மரபுரிமைப் பேரவை கண்டனம் வெளியிட்டுள்ளது. இதுக்கு உரித்து அறிக்கையொன்றினை வெளியிட்டுள்ள தமிழர் மரபுரிமைப் பேரவை, “ஜனாதிபதி ...

மேலும்..

தேர்தல் வெற்றியின் பின்னர் சிறிகொத்தவின் பொறுப்பை ஏற்பேன்- சஜித்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் எமது கட்சி வெற்றி பெற்ற பின்னர் சிறிகொத்தவின் பொறுப்பை ஏற்றுக்கொள்வேன் என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த ஊடக சந்திப்பில் அவர் ...

மேலும்..

இரணைமடு புகையிரத விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழப்பு

கிளிநொச்சி- இரணைமடு சேவைச்சந்தை அருகே இடம்பெற்ற புகையிரத விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு 10.20 மணியளவில் இடம்பெற்ற இந்த விபத்தில் பொன்னகர் பகுதியை சேர்ந்த தர்ஷன் என்ற குடும்பஸ்தரே உயிரிழந்துள்ளார். மேலும் உயிரிழந்தவரின் உடல் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு, உறவினர்களிடம் ...

மேலும்..

48,000 ஆண்டுகளுக்கு முன்பு வில் மற்றும் அம்பு தொழில்நுட்பத்தின் ஆரம்ப சான்றுகள் இலங்கையில் இருந்துள்ளது – ஆய்வில் தகவல்

இலங்கையின் ஆதிமனிதர்கள் 48,000 ஆண்டுகளுக்கு முன்பு விலங்குகளின் எலும்புகளிலிருந்து கருவிகளை வடிவமைத்து குரங்குகள் மற்றும் அணில்களை வேட்டையாட பயன்படுத்தினர் என்று ஒரு புதிய ஆய்வு தெரிவிக்கிறது. இது ஐரோப்பா மற்றும் ஆபிரிக்காவிற்கு வெளியே, இலங்கையில், வில் மற்றும் அம்பு பயன்பாட்டின் ஆதாரங்களை தொல்பொருள் ...

மேலும்..

யாழில் இருந்து தமிழகம் சென்ற வியாபாரிக்கு கொரோனோ தொற்று இல்லை

யாழ்.இணுவில் பகுதியில் நீண்ட காலமாக தங்கியிருந்த நிலையில், தமிழகம் திரும்பியவருக்கு கொரோனோ தொற்று இல்லையென மருத்துவ பரிசோதனைகள் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. இணுவில் பகுதியில் தங்கியிருந்த தமிழகத்தை சேர்ந்த கணேஷ் பாபு என்பவர் கடந்த முதலாம் திகதி தமிழகம் திரும்பிய நிலையில் அவருக்கு ...

மேலும்..

இந்திய உதவியுடன் பலாலி விமான நிலையம் விரைவில் அபிவிருத்தி செய்யப்படும்- பிரசன்ன

பலாலி சர்வதேச விமான நிலையம் இந்தியாவின் உதவியுடன்  விரைவாக  அபிவிருத்தி செய்யப்படுமென சுற்றுலா மற்றும் விமான சேவைகள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். பலாலி விமான நிலைய அபிவிருத்தி செயற்பாடுகள் தொடர்பாக கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் ...

மேலும்..

வல்லைவெளியில் வெடிப்பு: இராணுவத்தினர் ஒத்துழைக்கவில்லை, பொலிஸார் குற்றச்சாட்டு

யாழ்ப்பாணம் வல்லை இராணுவ முகாமுக்கு அருகில் வெடிப்பு சம்பவம் ஒன்று இடம்பெற்ற நிலையில் பொலிசாரின் விசாரணைக்கு இராணுவத்தினர் ஒத்துழைக்கவில்லை என கூறப்படுகின்றது. வல்லை இராணுவ முகாமை அண்டிய பகுதியில் நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு குண்டு வெடிப்பு சத்தம் கேட்டதாக நெல்லியடி பொலிஸாருக்கு தகவல் ...

மேலும்..

நாடாளுமன்றத் தேர்தல் ஒத்திகை இன்று

சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றி நாடாளுமன்றத் தேர்தலை எவ்வாறு எதிர்கொள்வது என்பது தொடர்பில் தெளிவூட்டும் வகையில் குறித்த தேர்தல் ஒத்திகை இன்று (சனிக்கிழமை) இடம்பெறவுள்ளது. கம்பஹா மாவட்டத்தில் தெரிவுசெய்யப்பட்ட சுமார் 200  வாக்காளர்களைக் கொண்டு குறித்த தேர்தல் ஒத்திகை  இன்று நடைபெறவுள்ளது. நீர்கொழும்பு செபஸ்டியார் வித்தியாலயத்தில், ...

மேலும்..

கொரோனா வைரஸ்: மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 1880 ஆக அதிகரிப்பு

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று உறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 1880 ஆக அதிகரித்துள்ளது என சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு அறிவித்துள்ளது. நேற்று (வெள்ளிக்கிழமை) மட்டும் புதிதாக 03 பேர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் இந்த எண்ணிக்கையில் உயர்வு ஏற்பட்டுள்ளதாக அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. அந்தவகையில் ...

மேலும்..

தமிழ் அரசியல் கைதிகளுக்கு விரைவில் விடுதலை வழங்கப்படும்- மஹிந்த

தமிழ் அரசியல் கைதிகளில் பாரிய குற்றங்கள் புரிந்தவர்கள் தவிர்ந்த ஏனையோர் விரைந்து விடுவிக்கப்படுவார்கள் என பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார். வெளிநாட்டு ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த நேர்காணலில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, “சிறைச்சாலைகளிலுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் ...

மேலும்..

தமிழ் மக்களுக்குத் தீர்வு உறுதி; அவர்கள் எம்மை நம்பவேண்டும்…

தமிழ் மக்களுக்குத் தீர்வு உறுதி; அவர்கள் எம்மை நம்பவேண்டும் - மஹிந்த தமிழ் மக்களின் பிரச்சினைகளில் பிரதான பிரச்சினையாக அரசியல் பிரச்சினை இருக்கின்றது. அந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண புதிய நாடாளுமன்றத்தில் நாம் கட்டாயம் நடவடிக்கை எடுப்போம். தீர்வை நாம் வழங்கியே தீருவோம். ...

மேலும்..

காரைதீவு சர்வேஸ்வரா கலை மன்றம் வழங்கும் (ஆசாமி) ரெப் பாடல் மிக விரைவில்

Aasami... Coming soon. #Rap #monsters #team Sharweshwara kalai mandram support. Media support - tamilcnn.lk Vocal recording - humap preyen Rap - Parvinthan Recording studio - shamy top sound Cast - kapilan, Thashaananth, sathurshan, parvinthan Editing - sabesan sajeeth காரைதீவு சர்வேஸ்வரா கலை மன்றம் ...

மேலும்..

காரைதீவு சர்வேஸ்வரா கலை மன்றம் வழங்கும் (ஆசாமி) ரெப் பாடல் மிக விரைவில்…

Aasami... Coming soon. #Rap #monsters #team Sharweshwara kalai mandram support. Media support - tamilcnn.lk Vocal recording - humap preyen Rap - Parvinthan Recording studio - shamy top sound Cast - kapilan, Thashaananth, sathurshan, parvinthan Editing - sabesan sajeeth காரைதீவு சர்வேஸ்வரா கலை மன்றம் ...

மேலும்..

இந்தியாவின் பெயரை மாற்ற நினைத்தால் எதிர்மறை விளைவுகள் நேரும் வைகோ அறிக்கை…

உச்சநீதிமன்றத்தில் கடந்த மே மாதம் டெல்லியைச் சேர்ந்த நமஹா என்பவர் தாக்கல் செய்திருந்த பொதுநல மனுவில், “அரசியலமைப்புச் சட்டத்தில் இருக்கும் தேசத்துக்கான இந்தியா எனும் பெயர் ஆங்கிலேயர் காலத்தில் வைக்கப்பட்டது. ‘இந்தியா’ என்ற பெயர் இன்னும் குறியீடாகவும், சொந்த மக்களுக்குப் பெருமையாகவும் இருக்கிறது. ஆனால் ‘இந்தியா’ ...

மேலும்..