June 14, 2020 அன்று பிரசுரிக்கப்பட்டவை

கருணாவின் கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டிய தேவை இல்லை – சுமந்திரன்

கருணா என்பவர் யார் என்று விஷேடமாக கிழக்கு மாகாணத்தில் உள்ள மக்களுக்கு நன்றாகத் தெரியும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் குறிப்பிட்டார். அம்பாறை – அக்கரைப்பற்று ஆலையடி வேம்பு பகுதியில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) விசேட ஊடகவியலாளர் சந்திப்பு இடம்பெற்றபோதே ...

மேலும்..

அரச ஊடகம் பிரதமருக்கு ஆதரவாக பிரச்சாரம்- கபே குற்றச்சாட்டு

கடும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள அரச ஊடகமொன்று பிரதமர் மகிந்த ராஜபக்ஷவிற்கு ஆதரவாக பிரச்சாரங்களை முன்னெடுக்கின்றதென தேர்தல் கண்காணிப்பு அமைப்பான கபே குற்றம் சுமத்தியுள்ளது. தேர்தல் ஆணைக்குழுவின் தலைவருக்கு எழுதியுள்ள கடிதத்தில் கபே இதனை குறிப்பிட்டுள்ளது. குறித்த கடிதத்தில் கபே தெரிவித்துள்ளதாவது, ‘பிரதமர் மஹிந்த ...

மேலும்..

சந்திரிக்காவுக்கும் மங்களவுக்கும் இடையில் சந்திப்பு

முன்னாள் ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீரவுக்கும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. குறித்த சந்திப்பு சந்திரிகாவின் அத்தனகல்ல இல்லத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்றுள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் இருந்து விலகுவதாகச் சில தினங்களுக்கு முன்னர் மங்கள அறிவித்திருந்த ...

மேலும்..

கேகாலையில் பாரிய தீ விபத்து – 200 வர்த்தக நிலையங்கள் தீக்கிரை

கேகாலை மத்திய வர்த்தக நிலையத்தில் ஏற்பட்ட திடீர் தீப்பரவல் காரணமாக 200 வர்த்தக நிலையங்கள் தீக்கிரையாகியுள்ளன. கேகாலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கேகாலை வர்த்தக மத்திய நிலையத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) பிற்பகல் 4 மணியளவில் இவ்வாறு திடீரென தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து கேகாலை பொலிஸாருக்கு கிடைக்கப் ...

மேலும்..

ஜஸ்மின் சூக்காவிற்கு எதிராக இலங்கை சட்ட நடவடிக்கை

இலங்கையின் தேசிய புலனாய்வு பிரிவின் இயக்குநர் மேஜர் ஜெனரல் சுரேஸ் சால்லே சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டத்தின் இயக்குநர் ஜஸ்மின் சூக்காவிற்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை எடுப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளளது. மேஜர் ஜெனரல் சுரேஸ் சால்லே, தனது சட்டத்தரணி ...

மேலும்..

இலங்கையில் சுமார் 3 மாதங்களுக்கு பின்னர் திறக்கப்படும் சுற்றுலாத் தலங்கள்

தேசிய மிருகக்காட்சிசாலை, தேசிய பூங்காக்கள் என்பன உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்காக மீள திறக்கப்படவுள்ளன. உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் தொற்று இலங்கையிலும் பரவியதைத் தொடர்ந்து தேசிய மிருகக்காட்சிசாலை, பூங்காக்கள் என்பன கடந்த மார்ச் மாதம் முதல் தற்காலிகமாக மூடப்பட்டிருந்தது. இந்த நிலையில் நாடு ...

மேலும்..

பாகிஸ்தானில் சிக்கித் தவித்த 129 இலங்கையர்கள் நாடு திரும்பினர்

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பாகிஸ்தானில் சிக்கியிருந்த மேலும் 129 இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளனர். ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான யு.எல் 1282 என்ற விசேட விமானத்தின் ஊடாக அவர்கள் இன்று (திங்கட்கிழமை) அதிகாலை நாட்டிற்கு வந்தடைந்துள்ளனர். கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பாகிஸ்தானின் ...

மேலும்..

ஜனாதிபதித் தேர்தல் தவறை இப்போதாவது சரி செய்யுங்கள் – தமிழர்களுக்கு மஹிந்த அணி அழுத்தம்

"ஜனாதிபதித் தேர்தலில் கோட்டாபய ராஜபக்சவுக்குப் பெரும்பாலான தமிழ், முஸ்லிம் மக்கள் வாக்களிக்கவில்லை என்பது உண்மை. சிங்கள மக்கள் அள்ளி வழங்கிய வாக்குகளில்தான் கோட்டாபய ராஜபக்ச அமோக வெற்றியடைந்தார். எனவே, ஜனாதிபதித் தேர்தலில் விட்ட தவறை நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலிலும் விட வேண்டாம் ...

மேலும்..

113 ஆசனங்கள் பெறவே வக்கில்லை; மூன்றிலிரண்டு எப்படிக் கிடைக்கும்? – ராஜபக்ச அரசிடம் சஜித் அணி கேள்விக்கணை

"நாடாளுமன்றத் தேர்தலில் ராஜபக்ச அரசு 113 ஆசனங்களைப் பெறுவதற்குக்கூட நெருக்கடியைச் சந்தித்துள்ளது. இப்படிப்பட்ட அரசு150 ஆசனங்களுடன் மூன்றிலிரண்டு பெரும்பான்மையை எப்படிப் பெறப் போகின்றது?" - இப்படிக் கேள்வி எழுப்பியுள்ளார் முன்னாள் ஊடகத்துறை அமைச்சரும் ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளருமான கயந்த கருணாதிலக. இந்த அரசின் ...

மேலும்..

அடுத்த பிரதமர் நானேதான்; சிறையில் கைதிகள் கூறினர் ராஜித அதிரடித் தகவல்

"இலங்கையின் அடுத்த பிரதமர் நானே என்று நீர்கொழும்பு சிறைச்சாலையில் உள்ள கைதிகள் என்னிடம் கூறினர்." - இவ்வாறு முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது:- "வெள்ளை வான் ஊடகவியலாளர் மாநாடு தொடர்பான வழக்கில் நான் கைதுசெய்யப்பட்டு நீர்கொழும்பு சிறைச்சாலையில் விளக்கமறியலில் தடுத்துவைக்கப்பட்டிருந்தபோது ...

மேலும்..

மைத்திரிக்கு எதிராக மஹிந்த அணி போர்க்கொடி!

"ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் 'தாமரை மொட்டு'ச் சின்னத்துக்குள் மறைந்து நாடாளுமன்றத்துக்குச்  செல்ல முயற்சிக்கும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பில் நாங்கள் மிகவும் அவதானத்துடன் இருக்கின்றோாம். நல்லாட்சியில் இருந்து நாட்டை அழித்தவர்கள் இன்று நல்லவர்கள் போல் இருக்கின்றனர்." - இவ்வாறு ...

மேலும்..

மாவை கலந்து கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு வேட்பாளர்களின் விசேட கலந்துரையாடல்…

நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தல் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர்களின் விசேட கலந்துரையாடல் நிகழ்வொன்று இன்றைய தினம் மட்டக்களப்பு தமிழரசுக் கட்சிக் காரியாலயத்தில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளரும், மட்டக்களப்பு மாவட்ட முதன்மை வேட்பாளருமாகிய கி.துரைராசசிங்கம் ...

மேலும்..

இம் முறை கதிர்காம பாத யாத்திரையாக செல்லும் அடியார்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை…

இம் முறை பெரஹர பார்வையிட மக்களுக்கு அனுமதியில்லை என ஜனாதிபதி ஊடகத்தினால் செய்தி வெளியிடப்பட்டுள்ளது மேலும் இம்முறை எந்தவொரு புண்ணிதஸ் தலங்கள் பெரஹரவில் பங்கு பற்றுவதற்கும் ,பார்வையிடுவதற்கும் பொது மக்களுக்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது எனவும். நல்லூர்,திருகோணமலை,மற்றும் கிழக்கு மாகாணத்தின் ஏனைய பிரதேசங்களில் ...

மேலும்..

வடமராட்சி கிழக்கில் வாள்வெட்டு மூவர் படுகாயம்; மக்கள் பதற்றம்!

வடமராட்சி கிழக்கு, குடத்தனை கிழக்கின் குலான் பகுதியில் இன்று மாலை இரண்டு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் மூவர் படுகாயம் அடைந்துள்ளனர். இரண்டு தரப்பினர் மோதிக்கொண்டதுடன் இறுதியில் வாள்வெட்டுத் தாக்குதலும் நடத்தப்பட்டுள்ளது. இதன்போது மூவர் படுகாயம் அடைந்தனர் எனவும், அவர்களில் இருவரின் நிலை ...

மேலும்..

குழந்தைகள் பராமரிப்பு நிலையங்களுக்கு ஒன்ராறியோ அரசாங்கம் நிதியுதவி வழங்க முடிவு!

நிதிப் பற்றாக்குறையால் சிரமப்படும் மற்றும் மூடப்பட்டுள்ள குழந்தைகள் பராமரிப்பு நிலையங்களுக்கு ஒன்ராறியோ அரசாங்கம் நிதியுதவி வழங்கவுள்ளது. ஒன்ராறியோ மாநிலம் கொரோனா வைரஸூக்கு எதிராக தீவிரமாகப் போராடிவரும் நிலையில் குழந்தைகள் பராமரிப்புக்கு முன்னுரிமையளிக்கும் வகையில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுகிறது. இதன்படி, நிதிப் பிரச்சினையால் பல பராமரிப்பு ...

மேலும்..

புஜாரா, ஜடேஜா உட்பட இந்திய வீரர்களுக்கு தேசிய ஊக்க மருந்து தடுப்பு முகாமை முக்கிய அறிவிப்பு

லோகேஷ் ராகுல், ரவீந்திர ஜடேஜா உட்பட 3 இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு தேசிய ஊக்க மருந்து தடுப்பு முகாமையால் அறிவிப்பொன்று அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. குறித்த வீரர்கள் தங்களின் இருப்பிடம் குறித்து முன்கூட்டியே தகவல் தெரிவிக்க தவறியதன் விளைவாக விளக்கம் கேட்டு இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது. சர்வதேச ...

மேலும்..

செப்டெம்பரில் பாடசாலைகளை திறப்பது குறித்து பிரதமர் பொரிஸ் ஜோன்சன் கலந்துரையாடல்

அனைத்து பாடசாலைகளையும் எதிர்வரும் செப்டெம்பரில் மீண்டும் திறக்கப்படுவதை உறுதிசெய்யம் முகமாக பிரதமர் பொரிஸ் ஜோன்சன் கல்வி அமைச்சர் கவின் வில்லியம்சனுடன் கலந்துரையாடி வருவதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. செப்டெம்பர் மாதத்தில் அனைத்து மாணவர்களும் பாதுகாப்பாக இருந்தால் பாடசாலைகளுக்கு திரும்ப முடியும் என்பதை உறுதிசெய்ய ...

மேலும்..

டோனியின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடித்த பிரபல நடிகர் தற்கொலை

பாலிவுட் மற்றும் இந்திய நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மும்பையில் உள்ள அவரது வீட்டில் தற்கொலை செய்து கொண்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் டோனியின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடித்த பிரபல இந்தி நடிகர் ...

மேலும்..

இறம்பொடை ஆஞ்சநேயர் கோவில் தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சைகள் சம்பந்தமாக நடைபெற்ற உயர்மட்ட கலந்துரையாடலின் போது கடும் சொற்போர் – கூட்டத்தை இடைநடுவிலேயே கைவிடவேண்டிய நிலை

(க.கிஷாந்தன்) இறம்பொடை ஆஞ்சநேயர் கோவில் தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சைகள் சம்பந்தமாக இன்று (14.06.2020) நடைபெற்ற உயர்மட்ட கலந்துரையாடலின் போது கடும் சொற்போர் மூண்டது. இதனால் கூட்டத்தை இடைநடுவிலேயே கைவிடவேண்டிய நிலை ஏற்பட்டதுடன் தீர்வுகளை முன்வைப்பதற்கு ஒருமாத கால அவகாசம் கோரப்பட்டுள்ளது. சின்மயா மிஷன் ஆன்மீக ...

மேலும்..

முன்னாள் அமைச்சர் ரிஷாட்டின் முயற்சியினால், இடம்பெயர்ந்தோருக்கான கொரோனா இடர் கொடுப்பனவை இவ்வாரம் வழங்க துரித நடவடிக்கை!

கொரோனா பாதிப்பினால் முடக்கப்பட்ட நாட்டின் பொருளாதார நிலையினையடுத்து, பொதுமக்களுக்கு வழங்கப்பட்ட 5000 ரூபா கொடுப்பனவு, வடக்கிலிருந்து இடம்பெயர்ந்த நிலையில் புத்தளம் மாவட்டத்தில் வாழும் மக்களுக்கு வழங்கப்படாத நிலையில், அதனை அரசியல் பாகுபாடுகளுக்கு அப்பால், சகலருக்கும் பெற்றுக்கொடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ...

மேலும்..

கருணா யார் என்பது விஷேடமாக கிழக்கு மக்களுக்கு நன்றாக தெரியும்- எம்.ஏ.சுமந்திரன்

பாறுக் ஷிஹான் கருணாவின் கேள்விகளுக்கு நான் பதிலளிக்க வேண்டிய தேவை இல்லை . கருணா என்பவர் யார் என்று விஷேடமாக கிழக்கு மாகாணத்தில் உள்ள மக்களுக்கு நன்றாக தெரியும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் குறிப்பிட்டார். அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்று ஆலையடி ...

மேலும்..

முதலமைச்சர் மக்களிடம் தேர்தலுக்காக பணம் கேட்பதற்கு பதிலடி கொடுப்பார்கள்: ஆலையடிவேம்பு விசேட செய்தியாளர் சந்திப்பில் எம்.ஏ.சுமந்திரன்…

பாறுக் ஷிஹான் அரசாங்கம் தமிழ் மக்களின் நீண்டகால இனப் பிரச்சினையை தீர்ப்பதற்கும்  அவர்களின் அடிப்படை அபிலாஷைகளை வென்றெடுக்கும் வகையிலும் புதிய அரசியலமைப்பை கொண்டு வருவதற்கும்  தயாராக இருந்தால் மாத்திரமே  ஆதரவு வழங்க தாம் தயாராக இருப்பதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன்  ...

மேலும்..

அனைத்து கட்சிகளுக்கும் சமமான ஒரு தேர்தலாக அமையவேண்டும் – ரிஷாட்

எதிர்வரும் தேர்தல் ஆளுங்கட்சிக்கு மாத்திரமன்றி, அனைத்து கட்சிகளுக்கும் சமமான ஒரு தேர்தலாக அமையவேண்டும்  என்று முன்னாள் அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்களிடையில் வவுனியாவில் இடம்பெற்ற தேர்தல் தொடர்பான கலந்துரையாடலின் பின்னர், ...

மேலும்..

யாழில் கொரோனாவின் தாக்கத்தையடுத்து வேகமாகப் பரவும் காசநோய்

யாழ். மாவட்டத்தில் கொரோனா வைரஸ் அச்சம் படிப்படியாக குறைந்துவரும் நிலையில், காச நோய் பரவல் தொடர்பான அச்சம் அதிகரித்துள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் ஜமுனானந்தா எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்த நோய்த் தொற்றுடையவர்கள் 90 பேர் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்பதுடன், ...

மேலும்..

மட்டக்களப்பில் தேர்தல் ஒத்திகை வெற்றி – அரசாங்க அதிபர்

மட்டக்களப்பில் தேர்தல் ஒத்திகை வெற்றியளித்துள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரியுமான திருமதி கலாமதி பத்மராஜா தெரிவித்தார். கொரோனா வைரஸ் அச்சுறுத்தலுக்கு மத்தியில் தேர்தலை நடத்துவது தொடர்பிலான ஒத்திகை நடவடிக்கைகள் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதற்கமைய மட்டக்களப்பு அம்பாறை மாவட்டத்தில் ...

மேலும்..

படுகொலை செய்யப்பட்ட முச்சக்கரவண்டி சம்மேளனத்தின் தலைவருக்கு யாழில் அஞ்சலி

யாழ். மாவட்ட முச்சக்கர வண்டிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் படுகொலை செய்யப்பட்ட முச்சக்கரவண்டி சம்மேளனத்தின் தலைவர் சுனில் ஜெயவர்த்தனவிற்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. யாழ். முச்சக்கர வண்டிகள் தரிப்பிடத்திற்கு முன்னால் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை ஒன்று கூடிய முச்சக்கரவண்டி உறுப்பினர்கள் சிலர் இரண்டு நிமிட மௌன ...

மேலும்..

பரந்தனில் சந்தேகத்திற்கிடமான வெடி பொருள் பாதுகாப்பாக செயலிழப்பு

பரந்தன், முல்லைத்தீவு வீதியில் வெடிப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டு, பாதுகாப்பாக செயலிழக்கம் செய்யப்பட்டுள்ளது. பரந்தன் முல்லை வீதியில் உள்ள இராணுவ முகாம் அருகில் சந்தேகத்திற்கிடமான முறையில் பொதியொன்று காணப்படுவதாக பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்டதோடு, குறித்த பகுதியில் ...

மேலும்..

சட்டவிரோத பதாகைகள்- சுவரொட்டிகளை அகற்றும் பணி ஆரம்பம்

நடைபெறவுள்ள பொதுத்தேர்தலுடன் தொடர்புடைய சட்டவிரோத பதாகைகள் மற்றும் சுவரொட்டிகள் ஆகியவற்றை அகற்றும் நடவடிக்கைகள் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் இந்த நடவடிக்கை நடைபெறவுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்துள்ளார். நியாயமானதும் சுதந்திரமானதுமான தேர்தலை நடாத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை ...

மேலும்..

வாக்குச் சீட்டுகள் அச்சிடும் பணிகள் 50 வீதம் நிறைவு

பொதுத் தேர்தலுக்கான வாக்குச் சீட்டுகளை அச்சிடும் பணிகள் 50 வீதம் நிறைவடைந்துள்ளதாக அரச அச்சகம் தெரிவித்துள்ளது. அதற்கமைய அனுராதபுரம் மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களுக்கான வாக்குச் சீட்டுகள், அச்சிடப்பட்டு தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அரச அச்சகர் கங்கா கல்பனி லியனகே குறிப்பிட்டுள்ளார். ஏனைய மாவட்டங்களுக்கான வாக்குச் ...

மேலும்..

குத்தகை நிறுவனங்களை தடை செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்- சுரேன் ராகவன்

நாடளாவிய ரீதியாக இயங்கும், சட்டபூர்வமற்ற குத்தகை நிறுவனங்களை தடை செய்ய அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என வடக்கின் முன்னாள் ஆளுநர் சுரேன் ராகவன் கேட்டுக் கொண்டார். கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறினார். சுரேன் ராகவன் மேலும் கூறியுள்ளதாவது, ...

மேலும்..

மாணவர்களுக்கு கல்வியமைச்சு புதிய அறிவிப்பு

பாடசாலை மாணவர்களுக்கான மதிய உணவு வழங்கும் திட்டத்தின் கீழ், 12 இலட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு போசாக்கு உணவு நிறைந்த உலர் உணவு பொதியொன்றை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் என்.எச்.எம் சித்ரானந்தா தெரிவித்துள்ளார். கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள சுற்றுநிருபத்திலேயே அவர் இவ்வாறு ...

மேலும்..

நாட்டில் மேலும் 03 பேருக்கு கொரோனா தொற்று – மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று உறுதியான மேலும் 03 பேர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 1887 ஆக அதிகரித்துள்ளது. இவ்வாறு அடையாளம் காணப்பட்ட 03 பேரும் கடற்படையினர் என சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு அறிவித்துள்ளது. இதேவேளை இன்று மேலும் ...

மேலும்..

மன்னார் தள்ளாடி 54 ஆவது இராணுவ படைப்பிரிவில் இடம்பெற்ற இரத்ததான முகாம்

நாட்டிலுள்ள இரத்த வாங்கிகளில் ஏற்பட்டுள்ள இரத்த தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யும் வகையில், மன்னார் தள்ளாடி 54 ஆவது இராணுவ படைப்பிரிவின் ஏற்பாட்டில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) தள்ளாடி படை முகாமில் இரத்ததான முகாம் இடம்பெற்றது. அனுராதபுரம் போதனா வைத்தியசாலையின் கோரிக்கைக்கு அமைவாக மன்னார் தள்ளாடி ...

மேலும்..

பொதுத்தேர்தலில் அரசாங்கம் தோல்வியடைவது உறுதி- கயந்த

மக்களை ஏமாற்றியே இந்த அரசாங்கம் ஆட்சியை கைப்பற்றியது. எனவே தற்போதைய சூழ்நிலையில் எதிர்வரும் பொதுத்தேர்தலில் அரசாங்கம் நிச்சயம் தோல்வியடையுமென முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக தெரிவித்துள்ளார். நாட்டின் அரசியல் செயற்பாடுகள் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் ...

மேலும்..

ஐக்கிய தேசியக்கட்சி ஒரு மதத்தைப் போன்றது- அகிலவிராஜ் காரியவசம்

ஐக்கிய தேசியக்கட்சி ஒரு மதத்தைப் போன்றது. எனவே அதனை பாதுகாப்பதற்காக ஆதரவாளர்கள் நிச்சயம் வாக்களிப்பார்களென அக்கட்சியின் பொதுச்செயலாளர் அகிலவிராஜ் காரியவசம்  தெரிவித்துள்ளார். நாட்டில் நடைபெறவுள்ள பொதுத்தேர்தல் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும் ஐக்கிய தேசியக்கட்சியில்  திறமையானவர்கள் இருக்கின்றார்கள் எனவும் ...

மேலும்..

கொரோனாவின் தாக்கம் மீண்டும் அதிகரித்தாலும் தேர்தல் நிச்சயம் நடைபெறும் – தேர்தல்கள் ஆணையாளர்

இலங்கையில் மீண்டும் கொரோனா வைரஸின் பரவல் ஏற்பட்டாலும் பொதுத்தேர்தல் நிச்சயம் நடைபெறும் என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ரத்னநாயக்க தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் காணப்படும் பகுதிகளில் விசேட வாக்களிப்பு நிலையங்களை அமைப்பதன் மூலம் வாக்களிப்பு இடம்பெறும்  என்றும் இது குறித்து சுகாதார ...

மேலும்..

மூதூர் பிரதேச சபையின் புதிய உறுப்பினராக NFGG ன் சார்பில் அஹ்ஸன் அப்துல் லத்தீப் பதவிப் ஏற்பு

ஹஸ்பர் ஏ ஹலீம்_ 2018ம் ஆண்டு மூதூர் பிரதேச சபைக்கான தேர்தலில் ஜாயா வட்டாரத்தில் போட்டியிட்டு 762 வாக்குகளை பெற்ற நிலையில் 1 வாக்கினால் வெற்றி வாய்ப்பினை இழந்த நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் வேட்பாளர் ஏ.எல்.எம். அஹ்சன் ஆசிரியர் கடந்த (10) மூதூர் ...

மேலும்..

விஷேட தேவையுடையோர் வீட்டுத் திட்டத்தில் வசிக்கின்ற மக்களின் காலடிக்குச் சென்று ஆயுர்வேத மருத்துவ நடமாடும் சேவை இன்று ஆரம்பித்து வைப்பு.

பைஷல் இஸ்மாயில் - அட்டாளைச்சேனை - சம்புநகர் கிராமத்தில் விஷேட தேவையுடையோர் வீட்டுத் திட்டத்தில் வசிக்கின்ற மக்களின் காலடிக்குச் சென்று ஆயுர்வேத மருத்துவ சேவையை வழங்கும் நடமாடும் வைத்திய முகாம் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது. மக்கள் ஆரோக்கியத்துடன் வழவேண்டும் என்பதற்காகவே, இந்த நடமாடும் சேவை ...

மேலும்..

நாடாளுமன்றம் குற்றவாளிகளின் புகலிடமாக மாறிவிட்டது- மங்கள

நாடாளுமன்றம் தற்போது நம்பகதன்மையற்ற குற்றவாளிகளின் புகலிடமாக மாறிவிட்டதென முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். இலங்கையிலுள்ள ஆங்கில ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.  மங்கள சமரவீர மேலும் கூறியுள்ளதாவது, “எந்த அரசியல் பயணத்திலும் தோல்வி சாத்தியம். நான் எனது அரசியல் வாழ்விலும் ...

மேலும்..

சஜித்துக்கு எதிராக பாரிய கிளர்ச்சி ஆரம்பம்- மஹிந்தானந்த

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு எதிராக பாரிய கலவரம் ஆரம்பமாகியுள்ளதாக என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார். தற்போதைய அரசியல் நிலைமைகள் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும் இந்த கலவரத்தில் தலைமைத்துவத்தை பெற்றுதருவதாக ...

மேலும்..

இலங்கையில் 43 முஸ்லிம் அடிப்படைவாத அமைப்புக்கள் செயற்படுகின்றன- ஞானசார தேரர்

இலங்கையில் சுமார்  43 முஸ்லிம் அடிப்படைவாத அமைப்புக்கள் செயற்படுவதாக பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் சங்கைக்குரிய கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக விசாரணைகளை முன்னெடுக்கும் ஜனாதிபதி ஆணைக்குழுவில்  நேற்று (சனிக்கிழமை) சாட்சியமளிக்கும் போதே அவர் இவ்வாறு ...

மேலும்..

தேர்தல் நடவடிக்கை: திறைசேரியிடம் 75 கோடி ரூபாயை கோரும் தேர்தல் ஆணைக்குழு

நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கான ஆரம்பகட்டப் பணிகளை முன்னெடுப்பதற்காக 75 கோடி ரூபாயைப் பெற்றுத் தருமாறு தேர்தல் ஆணைக்குழு திறைசேரியிடம் கோரியுள்ளது. மேலும், தேர்தலுக்காக வாக்குச்சீட்டு அச்சிடும் நடவடிக்கைகளுக்காக அரச அச்சகத் திணைக்களத்துக்கு நிதி ஒதுக்கீடு செய்யவுள்ளதாகவும் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது. அத்துடன் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்காக, ...

மேலும்..

யாழில் இளைஞர் மீது தாக்குதல்

யாழ்ப்பாணம் – தென்மராட்சி, கெற்பேலி மத்திப் பகுதியில் இடம்பெற்ற தாக்குதலில் இளைஞர் ஒருவர் காயமடைந்து சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் நேற்று (சனிக்கிழமை) மாலை இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் ரவிச்சந்திரன் செந்துஜன் (20-வயது) என்பவரே காயமடைந்த நிலையில், வைத்தியாசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கெற்பேலி மத்திப் பகுதியில் ...

மேலும்..

போதைப்பொருடன் 411 பேர் கைது

மேல் மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போது ஹெரோயினுடன் 170பேர் உட்பட 411பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று (சனிக்கிழமை) காலை 6மணி முதல் இன்று காலை 5 மணி வரையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவர்களுள் கஞ்சாவுடன் 88பேரும் ...

மேலும்..

மழையுடனான காலநிலை அதிகரிக்கும் – வளிமண்டலவியல் திணைக்களம்

நாட்டில் நிலவும் மழையுடனான காலநிலை மேலும் அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தொடர்பாக தெரிவித்துள்ளது. குறிப்பாக மேல், வடமேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது ...

மேலும்..

நாட்டின் மோசமான ஆட்சியே அமைதியின்மைக்கு காரணம்- சஜித்

நாட்டில் தற்போது, மோசமான ஆட்சி நிலவுகின்றமையினால்தான் அமைதியின்மை நிலவுகின்றதென ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். நாட்டின் தற்போதைய அரசியல் நிலைமைகள் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். சஜித் மேலும் கூறியுள்ளதாவது, “ பொருளாதாரம் வீழ்ச்சி ...

மேலும்..

தனிமைப்படுத்தல் செயற்பாடுகளை நிறைவு செய்த மேலும் 16 பேர் வீடு திரும்பினர்

கேப்பாப்புலவு – பூஸ்ஸ தனிமைப்படுத்தல் நிலையத்தில், தனிமைப்படுத்தல் செயற்பாடுகளை நிறைவு செய்த மேலும் 16 பேர் அங்கிருந்து வெளியேறியுள்ளனர். அவர்கள் நேற்று (சனிக்கிழமை) அங்கிருந்து வெளியேறியுள்ள நிலையில்,  அவர்களுக்கு தனிமைப்படுத்தல் செயற்பாடுகளை முறையாக நிறைவு செய்தமைக்கான சான்றிதழ் கடற்படையினரால் வழங்கப்பட்டது. இந்நிலையில், இதுவரை பூஸ்ஸ ...

மேலும்..

கிளிநொச்சி பூநகரி வெட்டுக்காடு காட்டுப் பகுதியில் முதிரைக்குற்றிகளுடன் வாகனம் மடக்கிப் பிடிப்பு….

கிளிநொச்சி பூநகரி வெட்டுக்காடு காட்டுப் பகுதியில் முதிரைக்குற்றிகளுடன் வாகம் பிடிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி பூநகரி பிரதேச செலகத்திற்கு உட்பட்ட வெட்டுக்காட்டு பகுதியில் சட்டவிரோதமாக காடுகளை அழித்து மதிரைக்குற்றிகள் கடத்தப்படுவதாக பூநகரி பொலிஸ்நிலைய புலனாய்வுத்துறையினருக்கு கிடைத்த  தகவலுக்கமைய பூநகரி பொலீசாரும் புலனாய்வத்துறையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்த ...

மேலும்..

வரணிஆலய திருட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது

யாழ்ப்பாணம், வரணி வடக்கு – தம்பான் கும்பிட்டான்குள பிள்ளையார் ஆலய திருட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக கொடிகாமம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பாக மானிப்பாய் – சங்கானையை சேர்ந்தவரே நேற்று (சனிக்கிழமை) கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, ...

மேலும்..

கிளிநொச்சியில் பொதுமக்களை காணிக்குள் செல்லவிடாது தடுத்ததால் குழப்ப நிலை

கிளிநொச்சி – பூநகரி பகுதியில்,  மக்களுக்குரிய காணியை வனவள திணைக்களம் தமக்குரிய காணி என அடையாளப்படுத்தி பொதுமக்களை காணிக்குள் செல்லவிடாது தடுத்ததால்  மக்கள் மத்தியில் குழப்ப நிலை ஏற்பட்டதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். இதனையடுத்து,  சம்பவ இடத்திற்கு விரைந்த தமிழ் தேசிய ...

மேலும்..

பொதுத்தேர்தலில் சர்வதேச கண்காணிப்பாளர்கள் பங்கேற்பதில் சிக்கல்!

நாட்டில் நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் சர்வதேச கண்காணிப்பாளர்கள் பங்கேற்பதில் சிக்கலான நிலைமை  ஏற்பட்டுள்ளது. கட்டுநாயக்க விமான நிலையத்தின் செயற்பாடுகள் அனைத்தும் எதிர்வரும் ஓகஸ்ட் முதலாம் திகதி, ஆரம்பமாகவுள்ளதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அறிவித்துள்ளார். அதனடிப்படையில் சர்வதேச கண்காணிப்பாளர்கள் நாட்டிற்குள் வருவதற்கான சூழ்நிலைகள் காணப்படுகின்றன. ஆனாலும், வெளிநாடுகளிலிருந்து வருகை ...

மேலும்..

மீண்டும் கொரோனா அச்சுறுத்தல் ஏற்பட்டாலும் இலங்கை எதிர்க்கொள்ளும்- ரணில்

இரண்டாம் நிலை, கொரோனா அச்சுறுத்தலை எதிர்க்கொள்ள முடியும் என நம்பிக்கை உள்ளதாக இலங்கையின் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். கொழும்பில் நேற்று (சனிக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த ஊடக சந்திப்பில் அவர் மேலும் ...

மேலும்..

ஈஸ்டர் தாக்குதல்: மீண்டும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகும் ஞானசார தேரர்

ஈஸ்டர் தாக்குதல் குறித்து ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு கலகொட அத்தே ஞானசார தேரருக்கு மீண்டும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதற்கமைய அவர், நாளை (திங்கட்கிழமை) இரண்டாவது தடவையாகவும் ஆணைக்குழுவில் முன்னிலையாகவுள்ளார். இதேநேரம், காத்தான்குடி பகுதியில் கடந்த காலங்களில் இடம்பெற்ற கடும்போக்குவாத செயற்பாடுகள் குறித்து நாளை ...

மேலும்..

தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களில் இருந்து இதுவரை 4463 பேர் வீடு திரும்பினர்

இராணுவ வீரர்களால் கட்டுப்படுத்தப்படும் 44 தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களில் இருந்து இதுவரை 4463 பேர் வீடு திரும்பியுள்ளனர் என குறிப்பிடப்பட்டுள்ளது. தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்தில் இருந்து மேலும் 77 பேர் இன்று (ஞாயிற்றுக்கிழமை) வீடு திரும்பியுள்ள நிலையில், இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதேவேளை, ...

மேலும்..

இராணுவ மயமாக்கல் ஏற்பட்டால் ஒடுக்கப்பட்டுள்ள இனவாதம் மீண்டும் உயிர்த்தெழும்- இந்திய புலனாய்வு அதிகாரி

இலங்கையில் இராணுவ மயமாக்கல் மீண்டும் ஏற்பட்டால் ஒடுக்கப்பட்டுள்ள  இனவாதம் மீண்டும் உயிர்த்தெழும் என  இந்திய இராணுவத்தின் ஓய்வுநிலை புலனாய்வு நிபுணரும் தெற்காசியாவில் பயங்கரவாதம் மற்றும் கிளர்ச்சிகளுக்கு எதிரான நடவடிக்கைகளில் நீண்ட அனுபவம் வாய்ந்தவர்களுள் ஒருவருமான கேர்ணல் ஆர்.ஹரிகரன் தெரிவித்துள்ளார். தற்போது  இலங்கையில் படை ...

மேலும்..

கொழும்பு தேசிய வைத்தியசாலை கொள்ளைச் சம்பவம்- சந்தேகநபரை கைது செய்த பொலிஸ் அதிகாரி உயிரிழப்பு

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இடம்பெற்ற 79 இலட்சம் ரூபாய் கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரை கைது செய்வத அரச புலனாய்வுப் பிரிவின் பொலிஸ் அதிகாரி விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார். கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் ...

மேலும்..

சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து யாழில் தேர்தல் ஒத்திகை

யாழ். மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட வாக்காளர்களைக் கொண்டு தேர்தல் முன்னாயத்த ஒத்திகை தற்போது இடம்பெற்று வருகின்றது. சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றி எவ்வாறு எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்வது என்பதை ஆராய்வதற்காக குறித்த தேர்தல் ஒத்திகை இடம்பெறுகின்றது. அதற்கமைய யாழ்ப்பாணம், நாவாந்துறை றோமன் கத்தோலிக்க பாடசாலையில் ...

மேலும்..

இன்று நாடு திரும்பும் 111இலங்கையர்கள்

கொரோனா வைரஸ் காரணமாக வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்கள் 111பேர் இன்று (ஞாயிற்றுக்கிழமை)  நாடு திரும்பவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய சென்னையில் இருந்து 109 பேர், மாலைத்தீவில் இருந்து ஒருவர் மற்றும் டோஹாவில் இருந்து ஒருவரே இவ்வாறு வருகை தரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளை ...

மேலும்..

கடந்த கால தவறுகளை மக்கள் உணர்ந்துகொண்டால் எதிர்காலம் சுபீட்சமாகும் – டக்ளஸ்

கடந்த காலத் தவறுகள் மக்களின் மனங்களில் பதிய வைக்கப்படுவதன் மூலமே எதிர்காலத்தில் சரியான தீர்மானங்களை மேற்கொள்வதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்த முடியும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். தம்பசிட்டி சரஸ்வதி மண்டபத்தில் நேற்று (சனிக்கிழமை) நடைபெற்ற ...

மேலும்..

சிவசக்தி ஆனந்தனைப் பக்கத்தில் வைத்துக் கொண்டு ததேகூ நா.உறுப்பினர்கள் மீது சேறு வாரிப் பூசக் கூடாது!

நக்கீரன் எதிர்வரும் ஓகஸ்ட் 05 இல் நடைபெற இருக்கும் தேர்தல் செலவுக்கு மக்களிடம் பணம் கேட்டு சி.வி. விக்னேஸ்வரன் அறிக்கை விட்டுள்ளார். இது எதிர் பார்த்ததே. 2013 ஆம் ஆண்டு நடந்த மாகாண சபைத் தேர்தல் நேரத்திலும் மாதாந்தம் ஓய்வூதியாகமாகக் கிடைக்கும் ரூபா ...

மேலும்..

காரைதீவை சேர்ந்த ஐந்து பிள்ளைகளின் தந்தையை மூன்று மாதங்களாக காணவில்லை…

காரைதீவை சேர்ந்த ஐந்து பிள்ளைகளின் தந்தையான 72 வயதுடைய கணபதிப்பிள்ளை சின்னத்துரை என்பவரை காணவில்லை என அவரின் மகள் சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டினை மேற்கொண்டுள்ளார். அம்பாறை மாவட்டம் காரைதீவு 1ம் பிரிவில் வசித்து வரும் ஐந்து பிள்ளைகளின் தந்தையான கணபதிப்பிள்ளை சின்னத்துரை ...

மேலும்..