June 17, 2020 அன்று பிரசுரிக்கப்பட்டவை

மருத்துவ உபகரண கொள்வனவுக்கான நிதி குறித்து பிரதமரிடம் தமிழக முதலமைச்சர் மீண்டும் வலியுறுத்து

மருத்துவ உபகரணங்களை கொள்வனவு செய்யவும் மேம்படுத்தவும் 3,000 கோடி ரூபாய் நிதி வழங்க வேண்டுமென்று பிரதமர் நரேந்திர மோடியிடம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீண்டும் வலியுறுத்தியுள்ளார். கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில், மாநிலங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து இரண்டாவது நாளாக ...

மேலும்..

ஐ.நா. பாதுகாப்பு சபையில் உறுப்பினரானது இந்தியா

ஐ.நா. பாதுகாப்பு சபையில் ஐந்து தற்காலிக உறுப்பினர்களுக்கான தேர்தலில் இந்தியா 184 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றது. ஐ.நா. சபையின் பாதுகாப்பு சபையில் அமெரிக்கா, ரஷ்யா, பிரித்தானியா, சீனா பிரான்ஸ் ஆகிய நாடுகள் நிரந்தர உறுப்பினர்களாக உள்ளன. பிராந்திய அடிப்படையில் 10 நாடுகள் தற்காலிக ...

மேலும்..

சுகாதார பாதுகாப்பிற்கு முன்னுரிமையளித்து தேர்தல் நடத்தப்படும் – ஜனாதிபதி உறுதி

சுகாதார பாதுகாப்பிற்கு முன்னுரிமை வழங்கி தேர்தல் நடவடிக்கைகளை வெற்றிகரமாக மேற்கொள்வதற்கு அரசாங்கத்தின் முழுமையான ஒத்துழைப்பு தேர்தல் ஆணைக்குழுவிற்கு கிடைக்குமென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உறுதியளித்தார். ஜனாதிபதி அலுவலகத்தின் நேற்று (புதன்கிழமை) தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் ஜனாதிபதியைச் சந்தித்து கலந்துரையாடினர். இதன்போதே ...

மேலும்..

ஈஸ்டர் தாக்குதலுக்கு பொறுப்பேற்க முடியாது – முன்னாள் ஜனாதிபதி

ஈஸ்டர் தாக்குதலுக்கான பொறுப்பை தான் ஏற்க முடியாது என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். பி.பி.சி.யின் சிங்கள சேவைக்கு வழங்கிய நேர்காணலின்போது, ஈஸ்டர் தாக்குதல் குறித்து கேள்வியெழுப்பப்பட்டது. இதற்கு பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும் இவ்வாறான தாக்குதலொன்று நடைபெறப்போகின்றது என்பது தனக்குத் ...

மேலும்..

120 கர்ப்பிணி தாய்மார்கள் உட்பட 290 பேர் டுபாயிலிருந்து நாடு திரும்பினர்

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக டுபாய் நாட்டில் சிக்கித் தவித்த 290 இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளனர். இலங்கை விமான சேவைக்கு சொந்தமான விசேட விமானம் மூலம் இன்று (வியாழக்கிழமை) காலை 5.35 மணியளவில் அவர்கள் கட்டுநாயக்க விமானம் நிலையத்தை வந்தடைந்தனர். இதனையடுத்து, கட்டுநாயக்க விமான ...

மேலும்..

கஞ்சிபானை இம்ரானின் தந்தை மீது தாக்குதல்

மாளிகாவத்தை பகுதியில் பிரபல போதைப்பொருள் கடத்தல்காரர் கஞ்சிபானை இம்ரானின் தந்தை மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மாளிகாவத்தை ஜூம்மா பள்ளிவாசல் சந்தியில் நேற்று (புதன்கிழமை) மாலை அடையாளந்தெரியாத மூவர் கூரிய ஆயுதங்களால் குறித்த நபரை தாக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த தாக்குதலில் காயமடைந்த கஞ்சிபானை இம்ரானின் ...

மேலும்..

சி.ஐ.டி.யின் புதிய இயக்குநரை கைது செய்யவும் – லசந்தவின் மகள் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவிற்கு கடிதம்

சிரேஷ்ட ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் கொலை தொடர்பாக சி.ஐ.டி.யின் புதிய இயக்குநருக்கு எதிராக குற்றச்சாட்டுகள் உள்ளதாக லசந்த விக்ரமதுங்கவின் மகள் அகிம்சா விக்ரமதுங்க தெரிவித்துள்ளார். இந்நிலையில், அவரைக் கைது செய்து நீதிமன்றத்தில் நிறுத்துவதற்கான நடவடிக்கையினை எடுக்குமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக தேசிய ...

மேலும்..

தாயினால் மாட்டிக்கொண்ட தொலைபேசி திருடர்கள்!

பாறுக் ஷிஹான் வீதியில் சென்றவர்களின் கைத்தொலைபேசிகளை பட்டப்பகலில் பறித்து சென்ற இரு இளைஞர்களை  எதிர்வரும் ஜுலை மாதம் 1 திகதி வரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு சம்மாந்துறை நீதிவான்  நீதிமன்றுஉத்தரவிட்டது. கடந்த 15.5.2020 அன்று அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் எல்லைக்குட்பட்ட காரைதீவு ...

மேலும்..

வவுனியாவில் ஆக்கிரமிக்கப்பட்ட இரு குளக் காணிகளை மீட்ட கமநல அபிவிருத்தி திணைக்களம்

வவுனியாநிருபர் வவுனியாவில் குளத்து காணிகளை ஆக்கிரமித்து அமைக்கப்பட்ட சட்ட வேலிகள் மற்றும் கட்டடங்களை அகற்றும் நடவடிக்கையை கமநல அபிவிருத்தி திணைக்களம் முன்னெடுத்துள்ளது. அந்தவகையில் இன்று இரண்டு குளங்களின் நிலப்பகுதிகளை ஆக்கிரமித்து நிரந்தர மற்றும் தற்காலிக வேலிகளை அமைந்தவர்களுடைய வேலிகளை அகற்றும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.கமநல அபிவிருத்தி ...

மேலும்..

தனியாக வவுனியா பல்கலைக்கழக விடயங்களை கையாள உறுப்பினர் நியமனம்

யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தின் வவுனியா வளாகத்தை தனியான பல்கலைக்கழகமாக தரமுயர்த்தும் போது மேற்கொள்ள வேண்டிய நடைமுறைகள் தொடர்பில் பரிந்துரைக்க பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் உறுப்பினர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். வவுனியா வளாகம் தற்போது வரையில் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திற்குரியதாகும். இந்நிலையில் அதனை தனியான பல்கலைக்கழகமாக மாற்றும் ...

மேலும்..

தமிழரசின் சுயநலத்துக்காகவே சசிகலா பயன்படுத்தப்படுகிறார்! ஆதங்கப்படுகின்றார் அனந்மி

தமிழரசுக் கட்சியினர் தங்களின் சுயலாப அரசியலுக்கு எவ்வாறு தன்னைப் கறிவேப்பிலையாக பயன்படுத்தினார்களோ அதேபோலவே தற்போது சசிகலா ரவிராஜை பயன்படுத்துகின்றனர் என தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் யாழ். மாவட்ட வேட்பாளர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார். அத்துடன், தமிழ் மக்கள் மாற்றுத் தலைமையான தமிழ் மக்கள் ...

மேலும்..

சில தமிழரின் உணர்வற்ற செயலால் பலமடைகின்றன சிங்களக் கட்சிகள்! வேதனையுறுகின்றார் ரவிகரன்

விஜயரத்தினம் சரவணன் ஒரு சில தமிழர்கள் இன உணர்வின்றி வாக்களிப்பதால், வடக்கில் சிங்கள முஸ்லிம் கட்சிகள் தமது வாக்கு வங்கியையும் மீறிய பலத்தைப்பெறுவதாகவும். இந் நிலைமை மாற்றியமைக்கப்பட வேண்டுமென முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு - முள்ளியவளைப் பகுதியில் இடம்பெற்ற ...

மேலும்..

தமிழர் தாயகத்தை சிதைக்க கோட்டா கங்கணம்: மாவை கண்டனம்!

"வடக்கு, கிழக்கு தமிழர்களின் தாயக பூமி. தமிழர்களின் எத்தனையோ உயிர்த் தியாகங்கள் நிறைந்த இந்தப் புனித பூமியைச் சிதைக்கும் நடவடிக்கையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசும், சிங்களக் கடும்போக்காளர்களும் கங்கணம் கட்டிச் செயற்பட ஆரம்பித்துள்ளார்கள். அதற்கு நாம் ஒருபோதும் அனுமதியோம். ...

மேலும்..

ட்ரோன் கமராவின் மூலம் அடர்ந்த காட்டிற்குள் கண்டுபிடிக்கப்பட்ட கஞ்சா தோட்டம்!

ட்ரோன் கமராவின் உதவியுடன்  அடர்ந்த காட்டிற்குள் கண்டுபிடிக்கப்பட்டு கஞ்சா தோட்டம் அழிக்கப்பட்டதுடன் சந்தேகத்தின் பேரில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று (செவ்வாய்கிழமை)  அதிகாலை கிடைத்த தகவலின்   மொனராகலை மாவட்டத்தில் தனமன்வில அடர்ந்த காட்டுப்பகுதிகளான மலகாறுவ மற்றும் அமேகமுவ என்ற இடங்களில் இருக்கும் ...

மேலும்..

நிதி, குத்தகை நிறுவனங்களில் இடம்பெற்ற மோசடிகள் குறித்த விசாரணைக்கு குழு நியமனம்

நிதி, குத்தகை நிறுவனங்களில் இடம்பெற்ற மோசடிகள் குறித்த விசாரணைகளுக்காக, மத்திய வங்கி மூன்று பேர் கொண்ட குழு ஒன்றை நியமித்துள்ளது.

மேலும்..

மணல் அகழ்விற்கு தடை – பாரவூர்தி உரிமையாளர்கள் கவனயீர்ப்பு பேராட்டம்!

யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு, மணற்காட்டு பகுதியில் மணல் அகழ்வதற்கு உள்ளூர் பாரவூர்த்தி உரிமையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதை எதிர்த்து இன்று (புதன்கிழமை) காலை கவனயீர்ப்பு பேராட்டம் முன்னெடுக்கப்பட்டது. மணற்காட்டுப் பகுதியில் உள்ளூர் பாரவூர்த்தி உரிமையாளர்களுக்கு மணல் அகழ்வதற்கு அனுமதி வழங்கப்பட்ட நிலையில் 40க்கும் ...

மேலும்..

எழுதாரகை படகுச் சேவையை உரியமுறையில் முன்னெடுக்க நடவடிக்கை- அங்கஜன்

அனலைதீவு, எழுவைதீவு இரண்டிற்குமாக போக்குவரத்துச் சேவையில் ஈடுபடுத்தப்பட்ட எழுதாரகை சேவையை உரிய முறையில் முன்னெடுப்பதற்கான நடவடிக்கைகளை தாம் எடுக்கவுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார். அத்துடன், ‘எழுதாரகை’ சேவையில் ஈடுபடாமைக்கு அப்போதைய அரசாங்கமும் அதனுடன் இணைந்து செயற்பட்ட மக்கள் பிரதிநிதிகளுமே ...

மேலும்..

பொதுத் தேர்தல் கொரோனாவின் இரண்டாவது அலைக்கு வழிவகுக்குமா?

கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை அச்சுறுத்தல் இன்னும் நாட்டில் தொடர்ந்தால், அரசாங்கம் பொதுத் தேர்தலை நடத்தக்கூடாது என்று முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். கண்டியில் இன்று (புதன்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், நாட்டில் தேர்தலை நடத்த முடியும் என்று ...

மேலும்..

கதிர்காம யாத்திரைக்கு விதிக்கப்பட்ட தடையை மீள்பரிசீலனை செய்யுமாறு யோகேஸ்வரன் கோரிக்கை!

இம்முறை கிழக்கு மாகாணத்திலிருந்து காதிர்காமம் முருகன் ஆலயத்திற்கு பாதயாத்திரை செல்வதற்கு விதிக்கப்பட்ட தடையை ஜனாதிபதி மீள்பரிசீலனை செய்து நீக்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள்  நாடாளுமன்ற  உறுப்பினரும், மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளருமாகிய சீனித்தம்பி யோகேஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார். வாழைச்சேனை பகுதியிலுள்ள தனது அலுவலகத்தில் ...

மேலும்..

சட்டவிரோத கூட்டத்தைக் கூட்டியதாக யாழில் கைதுசெய்யப்பட்டவர்களில் 24 பேருக்கு விளக்கமறியல்!

யாழ்ப்பாணம், சுன்னாகம் பகுதியில் நண்பர்கள் இருவரது பிறந்தநாள் கொண்டாட்டத்தை நடத்திய போது, சட்டவிரோத கூட்டத்தைக் கூட்டிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 26 பேரில் 24 பேரை வரும் 30ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாணம் நீதிமன்றம் உத்தரவிட்டது. வழக்கில் முற்படுத்தப்பட்ட 16 வயதுக்குட்பட்ட ...

மேலும்..

சுற்றுலாப் பயணிகளுக்கு மூன்று தடவை பி.சி.ஆர் சோதனை நடத்தப்படும் – பிரசன்ன ரணதுங்க

எதிர்வரும் ஓகஸ்ட் 01 ஆம் திகதி முதல் அனைத்து சுற்றுலாப் பயணிகளும் மூன்று தடவைகள் பி.சி.ஆர் சோதனைகளுக்கு உட்படுத்தப்படுவார்கள் என சுற்றுலா மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று மேலும் பரவாமல் இருப்பதை ...

மேலும்..

இராணுவ அதிகாரிகளை விடுத்து கல்வியின் தகுதிக்கு ஏற்ப அரசாங்கம் பதவிகளை வழங்க வேண்டும்- பாரூக்

இராணுவத்தில் ஓய்வு பெற்றவர்களை அரசின் உயர் பதவிக்கு அரசாங்கம் நியமிப்பதான குற்றச்சாட்டுக்கள் படித்த மக்கள் மத்தியில் எழுந்துள்ளது என ஐக்கிய மக்கள் சக்தியின் வன்னி மாவட்ட வேட்பாளர் நாடாளுமன்ற உறுப்பினர் ஹீனைஸ் பாரூக் தெரிவித்தார். அத்துடன், இந்த செயற்பாட்டை உடனடியாக நிறுத்தி கல்வியின் ...

மேலும்..

கிரானில் உழவு இயந்திரம் தடம்புரண்டு விபத்து!

மட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிரான் பாலத்தில் சென்றுகொண்டிருந்த உழவு இயந்திரம் ஒன்று ஆற்றுக்குள் பாய்ந்து விபத்துக்குள்ளானதில் அதன் சாரதி மயிரிழையில் உயிர் தப்பியுள்ளார். நேற்று மாலை கிரான் -புலிபாய்ந்தகல் வீதியால் சென்றுகொண்டிருந்த உழவு இயந்திரமே இவ்வாறு ஆற்றினுள் பாய்ந்துள்ளது. இதன்போது அப்பகுதியில் ...

மேலும்..

5000 ரூபாய் கொடுப்பனவில் முறைகேடு – கணக்காய்வு ஆரம்பம்

ஊரடங்கு காலப்பகுதியில் வழங்கப்பட்ட 5,000 ரூபாய் கொடுப்பனவில் இடம்பெற்ற முறைகேடுகள் தொடர்பாக கணக்காய்வு ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கணக்காய்வாளர் திணைக்களம் தெரிவித்துள்ளது. 5,000 ரூபாய் கொடுப்பனவு உரிய முறையில் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்துவதற்காக இந்த கணக்காய்வு முன்னெடுக்கப்படுவதாக கணக்காய்வாளர் நாயகம் விக்ரமரத்ன தெரிவித்தார். பிரதி கணக்காய்வாளர் ...

மேலும்..

மாணவர்களை ஒன்றுதிரட்டி நடத்தப்படும் தனியார் வகுப்புக்களை இடைநிறுத்துமாறு அறிவிப்பு

திருகோணமலை மாவட்டத்தில் தற்போது பிரத்தியேக வகுப்புக்கள், தனியார் வகுப்புகள் உள்ளிட்ட மாணவர்களை ஒன்றுதிரட்டி வகுப்புக்கள் நடத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அனைத்து வகுப்புக்களையும் உடனடியாக நிறுத்துமாறு திருகோணமலை மாவட்ட சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் இன்று (புதன்கிழமை) அறிவித்தல் வழங்கியுள்ளது. குறித்து அறிவித்தலை மீறுவோருக்கு எதிராக ...

மேலும்..

இ.தொ.கா. கட்சிக்குள் குழப்பம் இல்லை: பொதுத் தேர்தலின் பின்னரே புதிய தலைவர்- கனகராஜ்

கட்சிக்குள் எவ்வித குழப்பமும் இல்லை எனவும் பொதுத்தேர்தல் முடிவடைந்த பின்னரே புதிய தலைவரை தேசிய சபை நியமிக்கும் என்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவர் கணபதி கனகராஜ் தெரிவித்துள்ளார். இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் புதிய பொதுச் செயலாளராக ஜீவன் தொண்டமான் இன்று ...

மேலும்..

உயர்தரப் பரீட்சை திகதியில் மாற்றம் – சுசில் பிரேமஜயந்த

உயர்தர பரீட்சையை நடத்த தீர்மானித்த திகதியில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார். ஆசிரியர்கள், மாணவர்களின் அபிப்பிராயத்தை கருத்திற்கொண்டே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ...

மேலும்..

மகேந்திரன், புஞ்சிஹேவாவுக்கு எதிராக பிடியாணையை அமுல்படுத்த நீதிமன்றம் உத்தரவு

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரன் மற்றும் அஜான் புஞ்சிஹேவாவுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்டுள்ள பிடியாணையை செயற்படுத்துமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். இரண்டாவது முறிகள் மோசடி தொடர்பான குற்றச்சாட்டில் இவர்களைக் கைது செய்ய குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு கோட்டை நீதிவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இரண்டாவது முறிகள் ...

மேலும்..

யாழில் பதாகைகள்- சுவரொட்டிகளை அகற்றும் பணி ஆரம்பம்!

யாழ்ப்பாணத்தில் பொது இடங்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள அரசியல்வாதிகளின் பதாகைகள்,கம்பரேலியா பாதைகளிலில் உள்ள அரசியல்வாதிகளின் படங்கள் அகற்றுவதற்கு பொலிஸார் ஊடாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார். வீதிகளில் வேட்பாளர்களின் பெயர்களை வரைவது தேர்தல் சடடத்திற்கு விரோதமான செயற்பாடு இதனை ...

மேலும்..

யாழ். பயிலுநர் செயற்றிட்ட உதவியாளர்கள் ஜனாதிபதிக்கு மகஜர்!

தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்ட பயிலுநர் செயற்றிட்ட உதவியாளர் நியமனத்தினை மீள வழங்குமாறு கோரி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு யாழ். அரச அதிபர் ஊடாக மகஜர் கையளிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பயிலுநர் செயற்றிட்ட உதவியாளர்கள் ஒன்றுகூடி ஜனாதிபதிக்கான மகஜரை இன்று (புதன்கிழமை) அரச அதிபரிடம் கையளித்தனர். குறித்த ...

மேலும்..

கொரோனா தொற்றிலிருந்து மேலும் 26 பேர் குணமடைந்தனர்!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி வைத்தியசாலைகளில் சிகிச்சைப்பெற்று வந்தவர்களில் மேலும் 26 பேர் குணமடைந்துள்ளனர். இந்நிலையில் தற்போதுவரை ஆயிரத்து 397 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும், இதுவரையில் 740 கடற்படையினர் பூரணமாக குணமடைந்து வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் இதுவரை ஆயிரத்து 915 ...

மேலும்..

தொழிலாளர் காங்கிரஸ் என்பது ஓர் குடும்பம் எங்களிடையே எந்த பிரச்சினையும் இல்லை – ரமேஷ்

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் என்பது ஓர் குடும்பம் எங்களிடையே எந்தவொரு பிரச்சினையும் இல்லை. பொதுத்தேர்தல் முடிவடைந்த பின்னரே புதிய தலைவர் நியமிக்கப்படுவார். ” – என்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் நிதிச்செயலாளரும், மத்திய மாகாணசபையின் முன்னாள் அமைச்சருமான மருதபாண்டி ரமேஷ்வரன் தெரிவித்தார். இலங்கைத் ...

மேலும்..

பளையில் இராணுவத்தினருடையது என சந்தேகிக்கப்படும் அடையாள அட்டை உள்ளிட்ட பொருட்கள் மீட்பு

கிளிநொச்சி – பளையில் இராணுவத்தினருடையது என சந்தேகிக்கப்படும் அடையாள அட்டை உள்ளிட்ட பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. பளை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட புலோப்பளை காற்றாலை அமைந்துள்ள பகுதியில் காணி சீர்திருத்த ஆணைக்குழுவால் குத்தகை அடிப்படையில் வழங்கப்பட்ட காணியினை சுத்தம் செய்யும் பணிகள் இடம்பெற்று வருகின்றன. இதன்போது, ...

மேலும்..

தமிழகத்தில் தங்கியிருந்த 53 இலங்கையர்கள் நாடு திரும்பினர்

கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக தமிழகத்தில் தங்கியிருந்த 53 இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளனர். ஶ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான விசேட விமானத்தின் மூலம் அவர்கள் இன்று (புதன்கிழமை) காலை நாட்டை வந்தடைந்துள்ளனர். சென்னையில் இருந்து வருகை தந்துள்ள குறித்த இலங்கையர்கள் 51 பேருடன் ...

மேலும்..

சமுர்த்தி கணணி உதவியாளர்களின் சம்பள பிரச்சினைக்கு தீர்வு வழங்குமாறு கோரிக்கை!

கடந்த ஏழு மாதங்களாக எதுவித கொடுப்பனவுமின்றி சேவையாற்றிவரும் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள சமுர்த்தி கணணி உதவியாளர்களின் சம்பளத்தினை பெற்றுக்கொடுக்க நடவடிக்கையெடுக்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். இன்று (புதன்கிழமை) மட்டக்களப்பு மாவட்ட செயலகத்திற்கு முன்பாக ஒன்றுகூடிய மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி கணணி உதவியாளர்கள் இந்த ...

மேலும்..

இளைஞன் கடத்தப்பட்ட சம்பவம் – ஹிருணிகாவிற்கு நீதிமன்றம் அழைப்பாணை

இளைஞன் ஒருவனை கடத்தி சிறை வைத்திருந்த சம்பவம் தொடர்பாக ஹிருணிகா பிரேமசந்திரவை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி அழைப்பாணை விடுத்துள்ளார். கடந்த 2015 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 21 ஆம் திகதி, ஹிருணிக்காவுக்கு சொந்தமானதாக கூறப்படும் வாகனம் ஒன்றில் ...

மேலும்..

வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமல் அரசாங்கம் தடுமாறுகின்றது – ரஞ்சித் மத்தும பண்டார

அனைத்து தரப்புகளையும் பகைத்துக்கொண்டு, வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமல் இந்த அரசாங்கம் பலவீனமாக செயற்பட்டு வருவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார். கொத்மலையில் இடம்பெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ...

மேலும்..

புகையிலை செய்கைக்கு பதிலாக மாற்று பயிர்ச் செய்கையில் ஈடுபட மக்கள் ஆர்வம்!

யாழ்ப்பாணம் தீவகப் பகுதியில் புகையிலைக்கு பதிலாக மாற்றுப் பயிர்கள் விவசாயத் திணைக்களத்தினால் அறிமுகப்படுத்தப்பட்டு மக்கள் அப்பயிர்ச் செய்கையையினை மேற்கொள்வதில்   அதிக ஆர்வம் காட்டி வருவதாக வடக்கு மாகாண விவசாய பணிப்பாளர் எஸ் சிவகுமார் தெரிவித்துள்ளார். யாழ்ப்பானம் தீவகத்தில் தற்போதைய விவசாய நிலைமைகள் தொடர்பில் ...

மேலும்..

பொதுச் செயலாளராக ஜீவன், உப தலைவராக அனுஷியா நியமனம்

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் புதிய பொதுச் செயலாளராக ஜீவன் தொண்டமானும் உப தலைவராக அனுஷியா சிவராஜாவும் நியமிக்கப்பட்டுள்ளனர். இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவராக இருந்த முன்னாள் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் மறைவையடுத்து கட்சியின் நிர்வாக நடவடிக்கைகளுக்காக இடைக்கால நிர்வாக சபை ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. அந்த ...

மேலும்..

தனிமைப்படுத்தலில் 4,126 பேர் தொடர்ந்தும் உள்ளனர் – இராணுவம்

நாடுமுழுவதும் உள்ள தனிமைப்படுத்தல் நிலையங்களில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த இருவர் இன்று (புதன்கிழமை) வீடுதிரும்பியுள்ளதாக இராணுவம் அறிவித்துள்ளது. இந்நிலையில் தனிமைப்படுத்தப்பட்ட நடவடிக்கைகளை வெற்றிகரமாக முடித்த 14,391 பேர் தனிமைப்படுத்தப்பட்ட மையங்களை விட்டு இதுவரை வெளியேறியுள்ளதாக இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் சந்தன விக்ரமசிங்க தெரிவித்தார். மேலும் முப்படையினரால் இயக்கப்படும் ...

மேலும்..

சலுகைகளுக்காக தேர்தலில் போட்டியிடவில்லை – மணிவண்ணன்

சலுகைகளை அனுபவிக்கவேண்டும் என்ற காரணத்துக்காக நாம் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கு வரவில்லை. பதவியால் கிடைக்கும் சலுகைகள் அனைத்தையும் மக்களிடமே வழங்குவோம் என  தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளரும் யாழ்ப்பாணம் மாவட்ட வேட்பாளருமான சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் தெரிவித்தார். தமிழ் தேசிய ...

மேலும்..

எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மனிதாபிமானமற்றவர்கள் – கெஹலிய

அரசாங்கத்தின் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ள எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மனிதாபிமானமற்றவர்கள் என முன்னாள் இராஜாங்க அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். கண்டியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், கொரோனா வைரஸை ஒழிப்பதில் கவனம் செலுத்துவதே புதிய அரசாங்கத்தின் முக்கிய திட்டம் என்றும் குறிப்பிட்டார். ஆட்சிக்குவந்து ...

மேலும்..

ஜனாதிபதியுடனான சந்திப்பின் பின்னர் மத்திய வங்கியின் முக்கிய தீர்மானம்

இலங்கை மத்திய வங்கி நியதி ஒதுக்க வீதத்தை மேலும் குறைத்துள்ளதாக அறிவித்துள்ளது. ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவுடன் நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற கலந்துரையாடலின்போது  நாணயச்சபை இந்தத் தீர்மானத்தை எடுத்ததாக மத்திய வங்கி விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையானது உரிமம்பெற்ற வர்த்தக ...

மேலும்..

மட்டு. தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தினால் நிவாரணம் வழங்கிவைப்பு!

கொரனா அச்சுறுத்தல் காரணமாக தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் சுகாதார நடைமுறைகள் காரணமாக தொழில்வாய்ப்புகளை இழந்த மக்களுக்கு தொடர்ச்சியான உதவிகள் வழங்கப்பட்டுவருகின்றன. இதன்கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லை கிராமங்களில் மிகுந்த வறுமையில் வாழும் குடும்பங்களுக்கு மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் ஊடாக நிவாரண உதவிகள் ...

மேலும்..

வேலைக்கு ஆள் தேவை

மேலும்..

யாழில் தேர்தல் சுவரொட்டிகளுடன் மூவர் கைது!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் யாழ் தேர்தல் மாவட்டத்தில் சுயேட்சைக் குழுவில் போட்டியிடும் வேட்பாளரின் தேர்தல் சுவரொட்டிகளுடன் மூவர் நெல்லியடி  பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கரவெட்டி பகுதியில் வைத்து நேற்று (செவ்வாய்க்கிழமை) சந்தேக நபர்கள் மூவரும் கைது செய்யப்பட்டனர் என்று பொலிஸார் குறிப்பிட்டனர். சந்தேக நபர்களிடமிருந்து ...

மேலும்..

முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட 17 பேர் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலை

அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பாக ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட 17 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதற்கமைய முன்னாள் அமைச்சர்களான அர்ஜூன ரணதுங்க, பாட்டலி சம்பிக்க ரணவக்க, ராஜித சேனாரத்ன மற்றும் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுர குமார ...

மேலும்..

நாடாளுமன்றத் தேர்தலுக்கான செலவை 10 பில்லியன்களுக்குள் மட்டுப்படுத்த முயற்சி – மஹிந்த தேசப்பிரிய

கொரோனா வைரஸ் தாக்கத்தின் சவால்களுக்கு மத்தியில் ஓகஸ்ட் 05 ஆம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கான செலவை 10 பில்லியன்களுக்குள் மட்டுப்படுத்த முயற்சிகளை மேற்கொள்வதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். ஆரம்பத்தில் பொதுத் தேர்தலுக்கு 7 பில்லியன் முதல் 7.5 ...

மேலும்..

அம்பாறை மாவட்டத்தில் தமிழ் பிரதிநிதித்துவம் பாதுகாக்கப்பட வேண்டும் – கலையரசன்

தமிழ் பிரதிநிதித்துவம் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்காக   அனைத்து தரப்பிலும் புத்திஜீவிகள் பொதுமக்கள் அரசியல்வாதிகள் அனைவரும் பாடுபடுகின்றனர் என கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினரும் நாவிதன்வெளி பிரதேச சபை தவிசாளருமான   தவராசா கலையரசன்  தெரிவித்துள்ளார்.]\ அம்பாறை மாவட்ட தேர்தல் நிலைமை தொடர்பில் (செவ்வாய்க்கிழமை)  ...

மேலும்..