June 18, 2020 அன்று பிரசுரிக்கப்பட்டவை

கோட்டாபயவின் செயலணிக்கு எதிராக சம்பந்தன் போர்க்கொடி தமிழ்பேசும் மக்கள் வாழுகின்ற வடக்கு, கிழக்கை சிங்களமயமாக்க வேண்டாம் எனவும் வலியுறுத்து

பௌத்த மதத்தையும், தொல்பொருள் சின்னங்களையும் பாதுகாத்தல் என்ற பெயரில் தொல்பொருள் திணைக்களத்தினால் உடமையாக்கப்படும் நிலப்பரப்பில் சிங்களவர்களைக் குடியமர்த்தி அதனூடாக கிழக்கு மாகாணத்தையும், இயலுமானவரையில் வடக்கு மாகாணத்தையும் சிங்களவர்கள் பெரும்பான்மையாக வாழும் மாகாணங்களாக மாற்றியமைத்து, இருமாகாணங்களுக்கும் இடையிலான மொழி ரீதியான தொடர்ச்சியை இல்லாமல் ...

மேலும்..

கொரோனாவால் 6 மாதங்களுக்கு தேயிலை ஏற்றுமதி வரி நிறுத்தம்!

தேயிலை ஏற்றுமதி தொடர்பில் விதிக்கப்பட்டுள்ள தேயிலை ஊக்குவிப்பு மற்றும் விற்பனை வரியை 06 மாதங்களுக்கு  தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், பெருந்தோட்ட கைத்தொழில் மற்றும் ஏற்றுமதி கமத்தொழில் அமைச்சர் ரமேஷ் பத்திரணவினால் முன்வைக்கப்பட்ட ...

மேலும்..

மத்திய வங்கி பிணைமுறி மோசடி: ரணில், மைத்திரி உட்பட நால்வரிடம் வாக்குமூலம்

மத்திய வங்கியின் பிணைமுறி மோசடி தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் வாக்குமூலம் பதிவு செய்யுமாறு பணிக்கப்பட்டுள்ளது. அத்தோடு, முன்னாள் பிரதமரின் ஆலோசகர் எஸ். பாஸ்கரலிங்கம் மற்றும் மக்கள் வங்கியின் முன்னாள் பொது முகாமையாளரிடமும் வாக்குமூலம் பதிவு ...

மேலும்..

இலங்கைவரும் சுற்றுலாப் பயணிகளுக்கு 3 கட்டங்களில் பி.சி.ஆர். பரிசோதனைகள்

எதிர்வரும் ஓகஸ்ட் முதலாம் திகதி முதல், இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகள், 03 கட்டங்களில் பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள் என்று கைத்தொழில் ஏற்றுமதி, முதலீட்டு ஊக்குவிப்பு,  சுற்றுலா மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார். நாட்டில் பரவும் ...

மேலும்..

கிளிநொச்சியில் இருந்து தம்புள்ளைக்கு வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட 20 கிலோ கஞ்சா வவுனியாவில் மீட்பு: ஒருவர் கைது….

கிளிநொச்சியில் இருந்து தம்புள்ளைக்கு சிறிய ரக சொகுசு பட்டா வாகனத்தில் சூட்சுமான முறையில் எடுத்துச் செல்லப்பட்ட 20 கிலோ கஞ்சா வவுனியா பொலிசாரால் மீட்கப்பட்டதுடன், இளைஞர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று  காலை 10 மணியளவில் இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் ...

மேலும்..

டெங்கு ஒழிப்பு சிரமதான வேலைத்திட்டம்…

(க.கிஷாந்தன்) கொத்மலை பொலிஸாரின் ஏற்பாட்டில் டெங்கு ஒழிப்பு சிரமதான வேலைத்திட்டம் இன்று (18.06.2020) கொத்மலை, நகரத்தில் முன்னெடுக்கப்பட்டது. டெங்கு நுளம்பு பரவக்கூடிய வகையில் சூழலை வைத்திருந்த ஹோட்டல்கள், வர்த்தக நிலையங்கள் உட்பட மேலும் சில நிறுவனங்களின் உரிமையாளர்களுக்கு அவற்றை உடனடியாக சுத்தப்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டதுடன், இறுதி ...

மேலும்..

கனடா புன்னகை அமைப்பினரினால் வவுனியாவில் உதவித் திட்டம்…

கனடா புன்னகை அமைப்பினரினால் வவுனியாவில் உள்ள சிதம்பர நகரில் வசிக்கும் இருபது குடும்பத்தினருக்கு சுமார் இரண்டரை இலட்சம் ரூபா பெறுமதியான தகரங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.13.06.2020 சனிக்கிழமை மாலை நான்கு மணிக்கு இந்த உதவி வழங்கும் நிகழ்வு கனடா புன்னகை அமைப்பின் வவுனியா ...

மேலும்..

மத்தியவங்கி பிணைமுறி மோசடி – மைத்திரி மற்றும் ரணிலிடம் வாக்குமூலம் பெறுமாறு உத்தரவு

மத்தியவங்கி பிணைமுறி மோசடி விவகாரம் தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் வாக்குமூலம் பெறுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பாக சட்டமா அதிபர் பதில் பொலிஸ்மா அதிபருக்கு உத்தரவிட்டுள்ளார். மேலும் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் பொருளாதார ...

மேலும்..

பணத்திற்காக 2011 உலகக் கிண்ணத்தை இந்தியாவுக்கு விற்றோம் – மஹிந்தானந்த

2011 ஆம் ஆண்டு உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இந்தியாவுடனான இறுதிப் போட்டியில், பணத்திற்காக கிண்ணத்தை தாரைவார்த்ததாக முன்னாள்   அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இந்தியாவுடனான இறுதிப் போட்டியில் ...

மேலும்..

தேர்தலில் மாற்று அணிகளை தோற்கடிக்கவேண்டும் தமிழர் – சம்பந்தன் அழைப்பு

"வடக்கு, கிழக்கில் தமிழ் மக்களின் ஏகோபித்த கட்சியாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே இருக்கின்றது. இந்தநிலையில், தமிழ் மக்களின் வாக்குகளைச் சிதறடிக்கும் நோக்குடன் மாற்று அணி, மாற்றுத் தலைமை என்ற பெயரில் பல கட்சிகளும், சுயேச்சைக் குழுக்களும் இம்முறை நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுகின்றன. ...

மேலும்..

தமிழினத்தின் கவசம் போராளிகள்! அவர்களின் ஆதரவு எமக்குப் பலம்!! கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் வரவேற்பு

"தமிழினத்தின் பாதுகாப்புக் கவசமாக அன்று எமது போராளிகள் இருந்தார்கள். அவர்களில் ஒரு பகுதியினர் இன்று ஜனநாயக வழியில் செயற்படுகின்றார்கள். அந்தவகையில் ஜனநாயகப் போராளிகள் கட்சியினர் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ஆதரவு வழங்க முன்வந்துள்ளமையை நாம் வரவேற்கின்றோம். அவர்களின் ஆதரவு ...

மேலும்..

கிழக்கை சிங்கள பகுதிகளாக மாற்றுவதே ஜனாதிபதி செயலணியின் நோக்கம் – சம்பந்தன் கடிதம்

பௌத்தத்தை ஊக்குவிக்கின்றோம், பாதுகாக்கின்றோம் பேணுகின்றோம் என்ற போர்வையில் அடையாளம் காணப்பட்ட நிலங்களில் சிங்கள குடியேற்றங்களை ஏற்படுத்துவதே கிழக்கு மாகாண தொல்பொருள் முகாமைத்துவ செயலணி ஏற்படுத்தப்பட்டதன் நோக்கம் என தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இதன் மூலம் கிழக்கு மாகாணத்தையும் முடிந்தளவிற்கு வடமாகாணத்தையும் சிங்கள ...

மேலும்..

அம்பாறை மாவட்ட தமிழ் மக்கள் ஆணை வழங்கினால் புனிதமான அரசியல் பயணத்தை மேற்கொள்வேன்.டாக்டர் தமிழ்நேசன்

தமிழ் தேசிய கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட வேட்பாளர் டாக்டர் அ.தமிழ்நேசனின் பிரச்சாரக்கூட்டம் தம்பிலுவில் கண்ணகி அம்மன் ஆலய முன்றலில் இருந்து இறை வழிபாடுகளுடன்   புதன்கிழமை(17) ஆரம்பமாகி இருந்தன. அம்பாறை மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் தமிழரசு கட்சியின் முதலாம் இலக்க வேட்பாளர் அ.தமிழ்நேசன் ...

மேலும்..