June 23, 2020 அன்று பிரசுரிக்கப்பட்டவை

ஐ.நாவின் பிடிக்குள் இலங்கை – இராணுவமயப்படுத்தலில் விளைவு என சந்திரிகா, மங்கள விசனம்

"தமிழ் மக்கள் செறிந்து வாழும் வடக்கு, கிழக்கில் இராணுவ மயப்படுத்தலால் ஐ.நாவின் பார்வைக்குள் இலங்கை சிக்குண்டுள்ளது. அதை உறுதிப்படுத்தும் வகையில் ஐ.நா. விசேட அறிக்கையாளரின் வருடாந்த அறிக்கை அமைந்துள்ளது." - இவ்வாறு முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, முன்னாள் அமைச்சர் மங்கள ...

மேலும்..

‘மொட்டு’ ஆட்சியை கவிழ்த்தே தீருவோம் – சூளுரைக்கின்றார் சஜித்

"ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச - பிரதமர் மஹிந்த ராஜபக்ச தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஆட்சியை நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி கவிழ்த்தே தீரும்." - இவ்வாறு உறுதிபடத் தெரிவித்தார் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் அக்கட்சியின் பிரதமர் வேட்பாளருமான சஜித் பிரேமதாஸ. 'தாமரை ...

மேலும்..

‘மொட்டு’வின் ஆட்சியை இருபது வருடங்களுக்கு அசைக்கவே முடியாது! – மார்தட்டுகின்றார் மஹிந்தர்

"இலங்கையில் தற்போது நடைபெறுவது ராஜபக்சக்களின் ஆட்சி அல்ல; குடும்ப ஆட்சி அல்ல. இது நாட்டு மக்கள் விரும்பிய ஜனநாயக ஆட்சி. 'தாமரை மொட்டு'வின் ஆட்சி. இந்த ஆட்சியை குறைந்தது இருபது வருடங்களுக்கு எவராலும் அசைக்கவே முடியாது." - இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ...

மேலும்..

எந்தவோர் இனமும்  கருணாவை ஏற்காது – விமல் திட்டவட்டம்

கருணா அம்மான் இராணுவத்தினரை கொன்றதாக நிகழ்த்தியிருந்த உரை மட்டமானதெனச் சாடும் அமைச்சர் விமல் வீரவன்ச, தான் செய்த கொலைகளைச் சொல்லிப் பெருமைப்படும் ஒருவர் எந்தவோர் இனத்துக்கும் அவசியமற்றவர் என்றும் குறிப்பிட்டார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்ததாவது:- "எந்தவொரு பயங்கராவத அமைப்பிலிருந்த நபருக்கும் அந்த ...

மேலும்..

சட்டவிரோதமாக மீன்பிடிக்கு பாவித்த வலையும், மீன்களையும் அழிக்க நீதவான் உத்தரவு. மன்னாரில் சம்பவம்…

மன்னார் எருக்கலம்பிட்டி ஆமைப்படுக்கை கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட மீனவர் ஒருவர் மன்னார் மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் கணேசராஜ் முன்னிலையில் ஆஐர்படுத்தப்பட்டபோது பிடிக்கப்பட்ட மீன்களையும் தடை செய்யப்பட்ட வலையையும் அழிக்க உத்தரவு பிறப்பித்துள்ளார். திங்கள் கிழமை (22.06.2020) இரவு மீனவர் ஒருவர் மன்னார் எருக்கலம்பிட்டி ஆமைப்படுக்கை என்னும் ...

மேலும்..

நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தல் தமிழ் மக்களுடைய தனித்துவத்தை நிலை நாட்ட வேண்டிய ஒரு தேர்தலாக அமைந்துள்ளது- சாள்ஸ் நிர்மலநாதன்…

ஆயுதப் போராட்டத்தின் பிற்பாடு தமிழர்களுக்கு இருக்கின்ற ஒரே ஒரு விடையமான எங்களுடைய மக்கள் இலங்கையில் கௌரவமாக வாழக்கூடிய வகையில் வகி பாகங்களை செய்யக்கூடிய வகையில் ஐ.நா.மனித உரிமைகள் பேரவையில் இருக்கின்ற தீர்மானத்தை முழுமையாக, ஒற்றுமையாக பயன்படுத்தி நாங்கள் எங்களுடைய மக்களினுடைய தீர்வை ...

மேலும்..

ஜனநாயகவாதிகளுக்கு எதிராக கொடிதூக்கும் பிற்போக்குவாதிகளை மக்கள் இனம்கண்டு வாக்களிக்க வேண்டும் – ஞா.ஶ்ரீநேசன்…

நிதானம், நியாயம் இழந்து கொந்தளிப்பான கருத்துகளை கொட்டுவதனால் தம்மைத் தாமே முற்போக்காளர்கள் என்று விலாசப்படுத்தும் அரச கட்சிகளின் முகவர்கள் தாம் யாருக்காக அரசியல் செய்யப் போகிறோம் என்பதை தேர்தலுக்கு முன்பே மக்களுக்கு அறியப்படுத்தி வருவதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேஷன் கருத்து தெரிவித்துள்ளார். தேசிய ...

மேலும்..

போதைப்பொருள் பாவனைக்கு காரணமான அரசியல் வாதிகளை மக்கள் விரட்டியடிக்க வேண்டும் என வைத்திய கலாநிதி சிவமோகன் அவர்கள் இடித்துரைப்பு…

நாட்டு மக்களாகிய நாம்  முழுமையாக மதுவிலக்கை கடைப்பிடிக்க வேண்டும். கஞ்சா கள்ளச்சாராயம் என்பனவற்றை கிராமத்தில் இருந்து  விரட்டியடிக்கப்பட வேண்டும்.முன்னர் ஊர்களில் ஒரு சிலர் கஞ்சா மற்றும் கள்ளச்சாரயம் காய்சினார்கள் இன்று அது பல மடங்காக  அதிகரித்து விட்டது  . இப்பொழுது இதை நாம் தடுக்காவிட்டால்  போதைப்பொருட்களால் இந்த சமுதாயம் அழிந்து விடும்.ஒட்டுமொத்தத்தில் கள்ளச்சாராயம் தயாரிப்பவர்கள் கஞ்சா கடத்தும் அரசியல்வாதிகளை சமூகத்திலிருந்து ஒட்டுமொத்தமாக விரட்டியடிப்போம்.தற்போது நாட்டில் கள்ளச்சாராயம் ஏற்றிவந்த அரசியல் வாதிகள் மற்றும் வேட்பாளர்கள் கூட பிடிபட்டிருக்கிறார்கள் . நீண்டகாலமாக போதைப்பொருள் கடத்திய இப்போது கடத்தல் செய்கின்ற மற்றும் வியாபாரம் செய்கின்ற அரசியல் வாதிகளை இந்த அரசியல் மேடைகளில் இருந்தே ஒட்டுமொத்தமாக வெளியேற்றப்பட இந்த மக்கள் ஒன்றுபட்டு பாடுபடவேண்டும்.என முன்னாள் வன்னி மாவட்ட பாராளுமன்ற              ...

மேலும்..

மனித உரிமை நல்லிணக்கம் தொடர்பான சமூக விழிப்பூட்டல் நிகழ்வு…

மனித உரிமை நல்லிணக்கம் தொடர்பான  சமூக விழிப்பூட்டல் நிகழ்வு இன்று(23)  சம்மாந்துறை  பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் முற்பகல் இடம்பெற்றது. இந்நிகழ்வானது முஸ்லீம் பெண்கள் ஆராய்ச்சி செயல் முன்னணியின் ஏற்பாட்டில் இடம்பெற்றதுடன் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின்  கல்முனை பிராந்திய இணைப்பாளர்  இஸ்ஸதீன் ...

மேலும்..

வரக்காப்பொல வங்கிக்கொள்ளை: சந்தேகநபருக்கு 14 நாட்கள் மறியல்…

வரக்காப்பொல நகரிலுள்ள அபிவிருத்தி வங்கியில் கொள்ளையிடப்பட்ட சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட சந்தேகநபரை  விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. எதிர்வரும் ஜூலை மாதம் முதலாம் திகதி வரை சந்தேகநபரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. சந்தேகநபர் நேற்று வரக்காப்பொல நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டபோதே இவ்விளக்கமறியல் உத்தரவு வழங்கப்பட்டுள்ளது எனப் ...

மேலும்..

கொரோனா வைரஸ் தொடருமாயின் 9ஆவது நாடாளுமன்ற அமர்வு டிஜிட்டல் தொழில்நுட்பத்தில்…

இலங்கையில் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் நீடிக்கும் பட்சத்தில் ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் குழு அமர்வுகளை டிஜிட்டல் தொழில்நுட்பத்தினூடாக முன்னெடுப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான இயலுமை மற்றும் தொழில்நுட்ப ரீதியான குறைபாடுகளைக் கண்டறிந்து கொள்வதற்கான ஒத்திகை அமர்வு நாடாளுமன்றக் குழு அறையில் நேற்று நடைபெற்றது. நாடாளுமன்ற செயலாளர் நாயகம் ...

மேலும்..

டெங்கும் எலிக்காய்ச்சலும் தீவிரமாகப் பரவும் அபாயம் – சுகாதார அமைச்சு எச்சரிக்கை…

இலங்கையின் பல பிரதேசங்களிலும் டெங்குக் காய்ச்சலும் எலிக் காய்ச்சலும் தலைதூக்கியுள்ளன என்று சுகாதார அமைச்சின் நோய் பரவுதல் தடுப்புப் பிரிவின் மருத்துவ நிபுணர் தெரிவித்தார். அந்தவகையில் இவ்வருடம் ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் நேற்று வரையான ஐந்து மாத காலப்பகுதியில் 21 ...

மேலும்..

அமெரிக்காவில் சிக்கியிருந்த 217 பேர் இலங்கை திரும்பினர்…

இலங்கைக்கு வர முடியாமல், அமெரிக்காவில் சிக்கியிருந்த இலங்கையர்கள் 217 பேரை ஏற்றிய எமிரேட்ஸ் விமான சேவையின் விசேட விமானம் இன்று அதிகாலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது. இவ்விமானப் பயணிகளுக்கு, அமெரிக்காவிலிருந்து இலங்கைக்கு வருவதற்கான நேரடி விமான சேவை வசதிகள் இல்லாமையால், ...

மேலும்..

கிங் கங்கையில் மூழ்கி 13 வயது சிறுவன் சாவு…

காலி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிங் கங்கையில் நீராடச் சென்ற 13 வயது சிறுவன் ஒருவன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளான். நேற்று மாலை இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. மீஎல்ல, ஹக்மண பகுதியைச் சேர்ந்த சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளான். ஆபத்தான நிலையில் குறித்த சிறுவன் கராப்பிட்டி வைத்தியசாலையின் அவசர ...

மேலும்..

பதிவு செய்யப்பட்ட இடங்களிலேயே சுற்றுலாப் பயணிகள் தங்க அனுமதி…

எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதியிலிருந்து இலங்கைக்கு வருகை தரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள், சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையில் பதிவு செய்யப்பட்டுள்ள ஹோட்டல்கள் மற்றும் விடுதிகளில் மாத்திரமே தங்க முடியும் என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார். சுகாதார அமைச்சின் ஆலோசனைகளுக்கு ...

மேலும்..

கொரோனா தொற்று ஏற்படாத மாவட்டங்களுக்கு தேர்தல் பிரச்சாரங்களை சுதந்திரமாக மேற்கொள்ள அனுமதி அளிக்கவேண்டும்!..

இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கம் இல்லாத மாவட்டங்களுக்கு தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்கு சுகாதார நடைமுறையில் தளர்வு நிலை வேண்டும்,சுதந்திரமாக தேர்தல் பிரசாரங்களை மேற்கொள்ள அனுமதி வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கை தமிழரசு கட்சியின் பட்டிருப்பு தொகுதி ...

மேலும்..

புஸ்ஸல்லாவையில் இரண்டு சிறுத்தைப்புலிகள் மீட்பு…

(க.கிஷாந்தன்)   புஸல்லாவை, எல்பொட தோட்டத்தில் இன்று (23.06.2020)  காலை இரண்டு சிறுத்தைப்புலிகள் மீட்கப்பட்டுள்ளன என்று வனஜீவராசி திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர். வேட்டைப் பொறியில் சிக்கியிருந்த நிலையில் மீட்கப்பட்ட  சிறுத்தைப் புலிகளுள் ஒன்று உயிரிழந்துவிட்டதாகவும், மற்றையது மேலதிக சிகிச்சைக்காக நுவரெலியாவுக்கு எடுத்துச்செல்லப்பட்டது எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர். 6 ...

மேலும்..

மலையக ரயில் சேவைகள் பாதிப்பு…

(க.கிஷாந்தன்) கொழும்பு - பதுளை பிரதான புகையிரத போக்குவரத்து பாதையில் அம்பேவெல – பட்டிப்பொல ஆகிய புகையிரத நிலையத்திற்கு இடையில், 23.06.2020 அன்று மதியம் 1.30 மணியளவில் ஏற்பட்ட புகையிரத தடம் புரள்வு காரணமாக மலையக ரயில் சேவைகள் பாதிப்படைந்துள்ளன. பதுளையிலிருந்து கொழும்பு கோட்டை புகையிரதம் நிலையம் ...

மேலும்..

உகந்தமலை முருகன் ஆலய கொடியேற்ற பக்தர்களின் வருகை தொடர்பான தீர்மானம் வெளியீடு…

கிழக்கின் தென்கோடியிலுள்ள வரலாற்று சிறப்புமிக்க உகந்தமலை முருகன் ஆலய கொடியேற்ற பக்தர்களின் வருகை தொடர்பான நிகழ்வுக்கான ஒன்றுகூடலானது அம்பாறை மாவட்ட உதவி அரசாங்க அதிபர் திரு.வி.ஜெகதீசன் அவர்களின் தலைமையில் 22/06/2020 காலை 10.00 மணியளவில் லகுகல பிரதேச செயலகத்தில் இடம் பெற்றது. இன் ...

மேலும்..

தமிழர் பாரம்பரியம் திட்டமிட்ட அழிப்பு: முறியடிக்கும் பொறுப்பு இந்தியாவுக்கு! விசனத்துடன் தெரிவிக்கிறார் மாவை

பாரம்பரியம் மிக்க தமிழர் வரலாற்றை மாற்றியமைக்கும் நோக்கில் அரசாங்கம் விசேட ஜனாதிபதி செயலணியொன்றை அமைத்துள்ளதாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். எனவே இவ்விவகாரத்தில் தலையிட்டு எமக்கு உதவவேண்டிய தார்மீகப் பொறுப்பு இந்தியாவிற்கு உள்ளது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் ...

மேலும்..

கூட்டமைப்பின் முடிவுகள் மக்களின் கருத்தை கேட்டறிந்த பின்னரே மேற்கொள்ளப்படும் – சார்ள்ஸ்

நாடாளுமன்றத் தேர்தலின் பின்னர், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முடிவுகள் மக்களின் கருத்தை கேட்டறிந்த பின்னரே மேற்கொள்ளப்படும் என அக்கட்சியின் வன்னி மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார். மன்னாரில் உள்ள தமிழரசுக் கட்சி அலுவலகத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் ...

மேலும்..

வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1548 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 22 பேர் குணமடைந்து மருத்துவமனையில் இருந்து இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியேறியுள்ளனர். இதனையடுத்து, குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தொற்று நோய் பிரிவு தெரிவித்துள்ளது. இதேவேளை, இலங்கையில் கடந்த இரு நாட்களுக்குப் பின்னர் கொரோனா வைரஸ் ...

மேலும்..

மதத் தலைவரை அவமதிப்பது வீழ்ச்சியின் ஆரம்பம்- மஹிந்த

எந்ததொரு மதத்தையோ அல்லது மதத் தலைவரையோ அவமதிப்பது  வீழச்சியின் ஆரம்பம் என பிரமதர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். குருநாகல் பகுதியில் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற  மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த மக்கள் சந்திப்பில் மஹிந்த மேலும் கூறியுள்ளதாவது, ...

மேலும்..

வடக்கு, கிழக்கு மக்களின் பிரச்சினைக்கு தீர்வை வழங்குவதற்கு தயார் – பிரதமர் மஹிந்த

நாடு பிளவுபடாமல் வடக்கு, கிழக்கு மக்களின் பிரச்சினைக்கு தீர்வை வழங்க எமது அரசாங்கம் தயாராக உள்ளது என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். குருநாகலில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சார கூட்டமொன்றில் உரையாற்றிய அவர், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வடக்கு கிழக்கில் நீண்ட காலம் ...

மேலும்..

அரசாங்கம் கணிசமான எந்த சலுகையும் மக்களுக்கு வழங்கவில்லை – பொன்சேகா

புதிய ஜனாதிபதி தேர்ந்தெடுக்கப்பட்டு பல மாதங்கள் நிறைவடைந்த போதிலும் மக்களுக்கு எந்த சலுகையும் இதுவரை கிடைக்கவில்லை என பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா குற்றம் சாட்டியுள்ளார். கடந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்து 100 நாட்களுக்குள் முக்கிய வேலைகளை செய்ததாக சுட்டிக்காட்டிய அவர் இந்த ...

மேலும்..

கடன் அட்டை மோசடி: 3 நைஜீரிய நாட்டுப் பிரஜைகளும் உகண்டாவைச் சேர்ந்த பெண்ணொருவரும் கைது

சர்வதேச கடன் அட்டை மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் மூன்று நைஜீரிய நாட்டுப் பிரஜைகளும் உகண்டாவைச் சேர்ந்த பெண்ணொருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். கல்கிசைப் பகுதியில் திடீர் சுற்றிவளைப்பினை அதிரடிப்படையினர்  முன்னெடுத்திருந்தனர் இதன்போது, கல்கிசையிலுள்ள ஒரு ஹோட்டல் ஒன்றில் வைத்தே, குறித்த சந்தேகநபர்களை அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர். இந்நிலையில் ...

மேலும்..

மட்டக்களப்பில் டெங்கு நோயாளர்கள் எண்ணிக்கை குறைவடைந்துள்ளது!

மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு நுளம்பு தாக்கம் கடந்த காலங்களை விட சற்று குறைந்து வருவதாக மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவிற்கு பொறுப்பான வைத்திய அதிகாரி வி. குணராஜசேகரம்  தெரிவித்துள்ளார். இது தொடர்பாக இன்று (செவ்வாய்க்கிழமை)  ஊடகங்களுக்கு கருத்து ...

மேலும்..

தபால் மூல வாக்களிப்பு – 47 ஆயிரத்து 430 விண்ணப்பங்கள் நிராகரிப்பு

2020 பொதுத் தேர்தலுக்கான தபால் மூலமான வாக்களிப்பில் 47 ஆயிரத்து 430 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. பொதுத் தேர்தலுக்கான தபால் மூலமான வாக்களிப்பிற்கு 7 இலட்சத்து 53 ஆயிரத்து 37 விண்ணப்பங்கள் கிடைத்தபோதும் அதில் 7 இலட்சத்து 50 ...

மேலும்..

“என்னை பதவியில் இருந்து நீக்க சிறைச்சாலை சுவர்களுக்குள் பாரிய வேலைத்திட்டம் மேற்கொள்ளப்பட்டது” – மைத்திரி

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதலின் பின்னணியில் சர்வதேச போதைப்பொருள் கடத்தல்காரர்கள் இருப்பதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஹிங்குரக்கொடையில் இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் பேசிய அவர் மேலும் போதைப்பொருள் கடத்தலுக்கு எதிராக தான் முன்னெடுத்த போராட்டத்தை தடுக்கவே இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் ...

மேலும்..

ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னாள் அமைச்சர்களிடம் விசாரணை ஆரம்பம்

முன்னாள் அமைச்சர்களான ராஜித சேனாரத்ன, அர்ஜுன ரணதுங்க, அநுர குமார திசாநாயக்க ஆகியோர் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளனர். எவன்காட் நிறுவனத்தை தன்னிச்சையான முறையில் கையகப்படுத்தியதன் காரணமாக நட்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்து, அதன் தலைவர் நிஸ்ஸங்க சேனாதிபதியால் தாக்கல் செய்யப்பட்ட மனு தொடர்பாக அரசியல் ...

மேலும்..

சஹ்ரான் இந்தியாவிற்கு தப்பிச் செல்ல ரிசாட்டின் சகோதரனே காரணம்: ஜனாதிபதி ஆணைக்குழு

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சந்தேகநபரான சஹ்ரான் ஹாசீம், படகு ஊடாக இந்தியாவிற்கு தப்பிச்செல்ல முன்னாள் அமைச்சர் ரிசாட் பதியூதீனின் சகோதரன் உதவி புரிந்தாக உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் கண்டறியப்பட்டுள்ளது. நேற்று (திங்கட்கிழமை) ஜனாதிபதி ஆணைக்குழுவில் ...

மேலும்..

இணையத்தளத்தின் ஊடாக பண மோசடி செய்த நான்கு வெளிநாட்டவர்கள் கைது!

இலங்கையில் இணையத்தளத்தின் ஊடாக பல்வேறு நபர்களிடம் பண மோசடி செய்த நான்கு வெளிநாட்டவர்கள் பொலிஸ் விஷேட அதிரடிப்படையினரால் கைது  செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் விஷேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் கல்கிஸ்ஸ நீதிமன்றத்திற்கு அருகில் வைத்து குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சீட்டிழுப்பின் மூலம் பரிசு ...

மேலும்..

உயர்தரப் பரீட்சைக்கான திகதி குறித்து பரிசீலிப்பதற்கு குழு நியமனம்!

உயர்தரப் பரீட்சையை நடத்துவதற்கான திகதி தொடர்பில் முன்வைக்கப்படும் யோசனைகளை பரிசீலிப்பதற்கு குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. கல்வி அமைச்சின் செயலாளர் M.H.M.சித்ரானந்த தமது தலைமையில் இந்தக் குழு செயற்படவுள்ளதாக தெரிவித்துள்ளார். இந்த குழுவில் கல்வி இராஜாங்க அமைச்சின் செயலாளரும் ஏனைய மேலதிக செயலாளர்கள் இருவரும் அடங்குகின்றனர். மாணவர்கள் ...

மேலும்..

ஈஸ்டர் தாக்குதல்கள்: மைத்திரி தடுக்காதமைக்கான காரணத்தை வெளியிட்டார் கிரியெல்ல

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் இடம்பெறுவது தொடர்பாக உறுதியான தகவல்கள் கிடைத்தபோதிலும் மைத்திரி எந்ததொரு நடவடிக்கையையும் முன்னெடுக்கவில்லை என முன்னாள் அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல குற்றம் சுமத்தியுள்ளார். இதற்கு காரணம், அப்போதைய அரசாங்கத்தை பழிவாங்கும் எண்ணத்தில் அவர் இருந்தமையே ஆகும் என அவர் குறிப்பிட்டுள்ளார். தெல்தெனியவில் ...

மேலும்..

யாழில்.தேர்தல் வாக்குகள் எண்ணும் ஒத்திகை

2020 பொதுத் தேர்தலுக்கான வாக்குகள் எண்ணும் ஒத்திகை யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை  நடைபெற்றது. தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் பேராசிரியர் ரட்ணஜீவன் ஹூல், கிளிநொச்சி மாவட்டச் செயலாளர், பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகள் முன்னிலையில் இந்த வாக்கு ...

மேலும்..

ஓகஸ்ட் மாதத்தில் வழங்கப்படும் விடுமுறை இரத்து – கல்வி அமைச்சு தீர்மானம்

பாடசாலை மாணவர்களுக்கு எதிர்வரும் ஓகஸ்ட் மாதத்தில் வழங்கப்படும் விடுமுறையை இரத்து செய்வதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சை செப்டம்பர் மாதம் வரையில் பிற்போடப்பட்டுள்ளது. இந்நிலையிலேயே ஓகஸ்ட் மாதத்தில் வழங்கப்படும் பாடசாலை விடுமுறையை இரத்து செய்வதற்கு தீர்மானித்ததாக அதன் செயலாளர் ...

மேலும்..

உயிர்த்த ஞாயிறுதாக்குதல்கள்: எனது மகள் துரோகமிழைத்துவிட்டார்- பெண் தற்கொலைதாரியின் தாய்

நாட்டிற்கு பாரிய துரோகத்தை எனது மகள் இழைத்து விட்டாரென தெமட்டகொட மகாவில கார்டனில் தன்னை வெடிக்கவைத்து உயிரிழந்த பெண் தற்கொலைதாரியான பாத்திமா ஜிவ்ரியின் தாயார் தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறுதாக்குதல்கள் தொடர்பாக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்ற ஜனாதிபதி ஆணைக்குழுவின் நேற்று (திங்கட்கிழமை) முன்னிலையாகி சாட்சியமளிக்கும்போதே ...

மேலும்..

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தோல்வியடைந்தால் அது தமிழர்களின் தோல்வி – ஜனா

தேர்தலில் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பும் தோல்வியடைந்தால் அது தமிழர்களின் தோல்வியாகவே கருதப்படும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளரும் முன்னாள் மாகாணசபை உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் தெரிவித்தார். மட்டக்களப்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இங்கு தொடர்ந்து கருத்து ...

மேலும்..

முன்னாள் அமைச்சர்கள் சிலர் ஜனாதிபதி ஆணையத்தில் இன்று முன்னிலை

முன்னாள் அமைச்சர்கள் ராஜித சேனரத்ன, சம்பிக்க ரணவக்க, அர்ஜுன ரனதுங்க, அநுர குமார திசாநாயக்க ஆகியோர் இன்று (செவ்வாக்கிழமை) அரசியல் பழிவாங்கல் தொடர்பாக விசாரிக்கும் ஜனாதிபதி ஆணையத்தின் முன்பாக ஆஜராக உள்ளனர். இன்று காலை 11.30 மணியளவில் ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு, இவர்களுக்கு அழைப்பு ...

மேலும்..

யாழில் விபத்து: ஒருவர் உயிரிழப்பு

யபழ்ப்பாணம்- பலாலி வீதி , பருத்தித்துறை வீதி இணையும் சிராம்பியடிச் சந்தியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற குறித்த விபத்தில் வடக்கம்பரை– பண்ணாகத்தைச் சேர்ந்த 50 வயதுடைய பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கிளிநொச்சி ...

மேலும்..

20 மாவட்டங்களுக்கான வாக்காளர் அட்டைகள் அச்சிடும் பணி நிறைவு

நடைபெறவுள்ள  பொதுத்தேர்தலை முன்னிட்டு 20 மாவட்டங்களுக்கான வாக்காளர் அட்டைகளை அச்சிடும் பணிகள் நிறைவடைந்துள்ளதாக அரச அச்சகம் தெரிவித்துள்ளது. அந்தவகையில் கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் குருநாகல் உள்ளிட்ட மாவட்டங்களுக்கான வாக்காளர் அட்டைகள் அச்சிடப்பட்டு வருவதாக அரச அச்சகர் கங்கா கல்பனி லியனகே குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் ...

மேலும்..

தேர்தலுக்கு பின்னர் வேலையற்ற பட்டதாரிகளின் பிரச்சினைக்கு தீர்வு: ஜனாதிபதி

பொதுத்தேர்தல் நிறைவடைந்ததும் முதல் கட்டமாக வேலையற்ற பட்டதாரிகள் தொழில் பிரச்சினையை தீர்ப்பதற்கு ஜனாதிபதி உறுதியளித்துள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட பொதுஜன பெரமுனவின் அமைப்பாளரும் பொதுஜன பெரமுனவின் வேட்பாளருமான ப.சந்திரகுமார் தெரிவித்தார். மட்டு.ஊடக அமையகத்தில் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே ...

மேலும்..

நாட்டில் அதிகளவான கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட வெலிசர முகாம் மீண்டும் திறப்

நாட்டில் அதிகளவான கடற்படையினர் கொரோனா தொற்றுக்கு உள்ளான வெலிசர கடற்படை முகாம் இரண்டரை மாதங்களுக்கு பின்னர் இன்று (செவ்வாய்க்கிழமை) மீண்டும் திறக்கப்படவுள்ளது. இதன்படி, குறித்த கடற்படை முகாமின் கண்காணிப்பு பணிகள் கட்டம் கட்டமாக ஆரம்பிக்கப்படவுள்ளதாக கடற்படை பேச்சாளர் லெப்டினன் கொமாண்டர் இசுறு சூரிய ...

மேலும்..

யாழில் வாள்வெட்டு: இருவர் காயம் – ஒருவர் கைது

யாழ்ப்பாணம் – இருபாலை மடத்தடி பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டுத் தாக்குதலில் இருவர் படுகாயமடைந்துள்ளனர். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர். யாழ்ப்பாணம் மடத்தடிப்பகுதியில் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற மரணச்சடங்கில், இரு தரப்புக்களுக்கு இடையில் வாய்த்தர்க்கம் ...

மேலும்..

அமெரிக்காவில் சிக்கியிருந்த 217 இலங்கையர்கள் தாயகம் திரும்பினர்

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக அமெரிக்காவில் சிக்கியிருந்த 217 இலங்கையர்கள் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். சிறப்பு விமானத்தின் மூலம் அவர்கள் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இதனையடுத்து, இவர்கள் அனைவரும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து பீ.சி.ஆர். பரிசோதனைகளுக்கு ...

மேலும்..

2 நாட்களுக்குப் பின்னர் மேலும் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று

இலங்கையில் கடந்த 2 நாட்களுக்குப் பின்னர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார். இந்நிலையில், கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானோரின் எண்ணிக்கை 1,951 ஆக அதிகரித்துள்ளது. மாலைதீவிலிருந்து வந்த ஒருவருக்கே கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை நேற்று (திங்கட்கிழமை) உறுதி செய்யப்பட்டதாக ...

மேலும்..

உள்நாட்டு உற்பத்திகளை அதிகரிக்கச் சந்தர்ப்பம் கிடைத்துள்ளது – ஜனாதிபதி

நீண்ட காலமாக மேற்கொள்ளப்பட்டுவரும் அத்தியாவசியமற்ற பொருட்கள் இறக்குமதியை மட்டுப்படுத்தியுள்ளதால், உள்நாட்டில் பல துறைகளில் உற்பத்திகளை ஆரம்பிப்பதற்கு சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளதென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார். ‘சுபீட்சத்தின் நோக்கு’ கொள்கைப் பிரகடனத்தில் குறிப்பிடப்பட்ட வகையில் மக்கள்மயப்பட்ட பொருளாதாரத்திற்கான பாதை திறக்கப்பட்டுள்ளது என்றும் உள்நாட்டு மற்றும் ...

மேலும்..