June 25, 2020 அன்று பிரசுரிக்கப்பட்டவை

அரசை பாதுகாப்பதற்கே சர்சையான கருத்தை கருணா அம்மான் வெளியிட்டுள்ளார்- ரணில்

மூவாயிரம் படையினரைக் கொன்று குவித்ததாக  கருணா அம்மான்   கூறிய கருத்தானது அரசை பாதுகாக்கவே என  ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நாட்டில் நடைபெறவுள்ள பொதுத்தேர்தல் தொடர்பாக ஐக்கிய தேசியக்கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் பலர், ரணிலை அவரது இல்லத்தில் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். இதன்போதே ...

மேலும்..

புலிகளின் மறுவடிவம் தமிழ்க் கூட்டமைப்பே! – இப்படிக் கூறுகின்றது மஹிந்த அணி

தமிழீழ விடுதலைப்புலிகளின் மறுவடிவம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே என்று மஹிந்த அணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் புதிய ஹெல உறுமயவின் தலைவருமான உதய கம்மன்பில தெரிவித்தார். "புலிகளை அழிக்க உதவிய இந்தியா, புலிகளின் மறுவடிவமான தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு உதவ முன்வரமாட்டார்கள்" எனவும் ...

மேலும்..

’19’ திருத்தத்துக்கு முடிவுகட்டவே மூன்றிலிரண்டு கோருகின்றோம் உண்மையைக் கூறியது மஹிந்த அணி

"பல்வேறு தரப்பினரால் விமர்சிக்கப்பட்டுள்ள அரசமைப்பின் 19ஆவது திருத்தத்தை நீக்கி நாட்டுக்கு பொருத்தமான  முறையில் அரசமைப்பு திருத்தத்தை உருவாக்கவே புதிய நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மைப் பலத்தைக் கோருகின்றோம். நிறைவேற்றுத்துறையைப் பலவீனப்படுத்தவே 19ஆவது திருத்தம் சூட்சமமான முறையில் கொண்டுவரப்பட்டது." - இவ்வாறு மஹிந்த அணியின் ...

மேலும்..

நவீன் ஒரு விஷமி! ஐ.தே.கவை அவரே பிளவுபடுத்தினார் என்று இராதா பகிரங்க குற்றச்சாட்டு

ஐக்கிய தேசியக் கட்சியை பிளவுப்படுத்தியது நவீன் திஸாநாயக்கதான் என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட வேட்பாளருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்தார். பூண்டுலோயா கயப்புக்கலை பகுதியில் நேற்று மாலை இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு ...

மேலும்..

கடந்த 5 ஆண்டுகால முன்னேற்றங்களையும் உள்ளடக்கியே கூட்டமைப்பின் விஞ்ஞாபனம் – அடுத்த மாதம் முற்பகுதியில் வெளிவரும்: மாவை சேனாதிராஜா

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 2020ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கை அடுத்த மாதம் முற்பகுதியில் வெளிவரும் என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை.சோ.சேனாதிராஜா தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:- "தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தேர்தல் அறிக்கையைத் தயாரிக்கும் பணியில் ...

மேலும்..

அரசியல் கைதிகளை விடுவிக்க தகவல் திரட்டுகின்றார் கோட்டா – விமல் தெரிவிப்பு

"தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் உறுப்பினர்கள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் பல வருடங்களாக  சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்களை விடுதலை செய்வதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தற்போது தகவல்களைத் திரட்டி வருகின்றார்." - இவ்வாறு தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் அமைச்சருமான விமல் வீரவன்ஸ தெரிவித்தார். சிங்கள தொலைக்காட்சியொன்றில் ...

மேலும்..

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு!

இலங்கையில், கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 2010 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான மேலும் 3 பேர் இன்று (வியாழக்கிழமை) மாலை அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இவ்வாறு தொற்றுக்குள்ளான மூவரும் கடற்படையின் தளபதிகள் எனவும் ...

மேலும்..

தமிழரின் ஒரே தெரிவு தமிழ்க் கூட்டமைப்பே! எம்மை விமர்சித்துத் திரிபவர்களுக்கு மக்கள் பாடம் புகட்டுவர் என சம்பந்தன் திட்டவட்டம்

"வடக்கு, கிழக்குத் தமிழ் மக்களின் ஒரே தெரிவு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே. அதை இந்தத் தடவையும் எமது மக்கள் நிரூபித்துக் காட்டுவார்கள். கூட்டமைப்பை விமர்சித்துக் கொண்டு நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுகின்ற ஏனைய தமிழ்க் கட்சிகளுக்கும் சுயேச்சைக் குழுக்களுக்கும் எமது மக்கள் தக்க ...

மேலும்..

மாமனிதர் ரவிராஜின் 58 ஆவது ஜனன தினம் யாழில் அனுஷ்டிப்பு

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாமனிதர் ரவிராஜின் 58 ஆவது ஜனன தினம் இன்று அனுஷ்டிக்கப்பட்டது. தென்மராட்சி பிரதேச செயலகத்திற்கு முன்பாக உள்ள அவரது சிலை வளாகத்தில் குறித்த நினைவுதினம் அனுஷ்டிப்பு இடம்பெற்றது. இந்நிகழ்வில் மறைந்த மாமனிதர் ரவிராஜின் மனைவி சசிகலா ...

மேலும்..

சர்வதேச நியமங்களின்படியே புலிகளின் போர் இருந்தது- கருணாவின் கருத்து சாதாரணமானதே- சிவமோகன்

யுத்த காலத்தில் போராளிகள், படையினர் மரணிப்பது சாதாரண விடயமே எனவும், அதனைத்தான் கருணா கூறியுள்ளார் என்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் எஸ்.சிவமோகன் தெரிவித்துள்ளார். மன்னாரில் உள்ள அவரது அலுவலகத்தில் இன்று (வியாழக்கிழமை) மாலை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே ...

மேலும்..

மாதனிதர் ரவிராஜ் கிழக்கு மாகாணத்தை நேசித்த தலைவர் – அரியநேத்திரன்

மறைந்த மாமனிதர் நடராஜா ரவிராஜ் எமது கிழக்கு மண்ணை நேசித்த ஒரு  ரைவர் அவர்தமிழ்தேசிய்கூட்டமைப்பு பாராளுமனரற உறுப்பினராக செயல்பட்ட காலத்தில் நான் அதனைபுரிந்துகொண்டேன் என கூறினார் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும்பட்டிருப்பு்தொகுதி இலங்கை தமிழரசு கட்சி தலைவருமான பா.அரியநேத்திரன். யாழ்மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அமரர் மாமனிதர் நடராஜா ரஙிராஜ் அவர்களின் பிறந்த தினத்தைமுன்னிட்டு்மேலும் கூறுபையில். கடந்த 2004,ம் ஆண்டு வடக்கு கிழக்கில் இருந்து தமிழ்தேசிய்கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களாக22,உறுப்பினர்கள் நாம் நாடாளுமன்றத்தில் செயல்பட்டோம் அந்த காலம் மிகவும் அச்சுறுத்தல் உயிர்ஆபத்துக்கள் நிறைந்த காலமாகும். விடுதலைப்புலிகளில் இருந்து கருணா என்கிற முரளிதரன் பிரிந்து சென்று இராணுவத்துடன் இணைந்துவிடுதலைப்புலிகளையும் பொதுமக்களையும் காட்டிக்கொடுத்து செயல்பட்ட காலம். அந்தவேளையில்தான் 2006,ல் திருகோணமலை மாவிலையாற்றில் இராணுவத்திற்கும் விடுதலைபுலிகளுக்கும்இடையில் போர் ஆரம்பிக்கப்பட்டு திருகோணமலை மாவட்டத்தை சேர்ந்த சம்பூர் மூதூர் பகுதிமக்கள்மட்டக்களப்பு வாகரையில் தஞ்சம் அடைந்திருந்த காலம். அன்று கடந்த 2006,நவம்பர் 8,ம் திகதி வாகரையில் அகதிமுகாம்களில் தங்கி இருந்த அப்பாவிபொதுமக்கள்மீது இராணுவம் மேற்கொண்ட எறுகணை்தாக்குதலால் 35 பொதுமக்கள் கொல்லப்பட்டும்நூற்றுக்கணக்கானவர்கள் படுகாயம் அடைந்தனர். அப்போது பாராளுமன்ற உறுப்பினர்களாக இருந்த 22,பேரும் சம்மந்தன் ஐயா தலைமையில் கொழும்பு நகரில்ஐநா செயலகத்திற்கு முன்பாக மறுநாள் 2006,நவம்பர்,9ம் திகதி ஒரு கவன ஈர்ப்புபோராட்டத்தை்நடத்தினோம். இவ்வாறான ஒரு போராட்டம் மட்டக்களப்பு வாகரையில் இடம்பெற்றஇராணுவத்தினரின் தாக்குதலை கண்டித்து  மாமனிதர் ரவிராஜ் அவர்களே ஏற்பாடு செய்திருந்தார். அந்தப்போராட்டம் இடம்பெற்றபின் மாமனிதர் ரவிராஜ் என்னிடம் கூறினார்” மச்சான் நாளை காலை எனதுவாகனத்தில் நீயும் நானும் வாகரைக்கு போய் நேரடியாக அங்கு நடந்த குண்டுத்தாக்குதலை்பார்த்துவருவோம்எவருக்கும் கூறாமல் போய் பார்த்து வருவோம்” என்றார் நானும் ஆம் என்று கூறினேன். அந்தக்காலம் தமிழ்தேசிய கூட்டமைப்பு 22, பாராளுமன்ற உறுப்பினர்களும் சொந்த மாவட்டங்களுக்கு செல்லமுடியாமல் கொழும்பில் முடக்கப்பட்டிருந்த காலம் அச்சம் உயிர் ஆபத்து நிறைந்த காலம்  அதற்கு முன்புதான்2005,டிசம்பர்,25 நத்தார் நள்ளிரவு ஆராதனையில் மட்டக்களப்பு புனித மரியார் தேவாலயத்தில் வைத்துபாராளுமன்ற உறுப்பினர் மாமனிதர் ஜோசப் பர்ராச்சிங்கம் சுட்டுக்கொல்லப்பட்டகாலம் அதனால் எந்தபாராளுமன்ற உறுப்பினர்களும் சொந்த மாவட்டங்களுக்கு செல்லமுடியாத காலம்.இவ்வாறான நிலையில்தான்வாகரைக்கு நானும் நண்பர் மாமனிதர் ரவிராஜ  அவர்களும் 2006 நவம்பர் 10, ம் திகதி காலையில் செல்வதாகஎன்னிடம் கூறினார். ஆனால் அன்று நான் மாதிவெல பாராளுமன்ற விடுதியில் அவரை எதிர்பார்த்துக்கொண்டிருந்தேன்மாமனிதர்்ரவிராஜ் அவரின் கொழும்பு இல்லத்தில் இருந்து தமது வாகனத்தில் வரும்போதுதான் அவர் அன்றுசுட்டுக்கொல்லப்பட்டார். இந்த செய்தியை என்னிடம் ஒரு ஊடகவியாளர் கூறினார் நான் எனது தொலைபேசியை நண்பர் மாமனிதர்ரவிராஜின் இலக்கத்துக்கு அழுத்தியபோது்தொடர்பு அவரின் தொலைபேசிக்கு சென்றது அவர்கதைக்கவில்லை. உடனே நானும் ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்களும் தேசிய வைத்தியசாலைக்கு சென்று பார்த்போதுஅவரின் பிரிவு எமக்கு்தாங்கமுடியாத வேதனையை தந்தது. உண்மையில் மாமனிதர் ரவிராஜ் அவர்கள் மட்டக்களப்பு வாகரைக்கு வருவதற்காக  என்னை அழைத்துசெல்வதற்கு அன்று இருக்கும் நிலையிலேயே அவரை இடைமறித்து்சுட்டுக்கொன்றனர். கொழும்பில் தமிழ்தேசிய கூட்டமைப்பினராகிய எம்மால் நடத்தப்பட்ட கவன ஈர்ப்பு போராட்டத்தைஏற்பாடு்செய்த மாமனிதர் ரவிராஜ் அவர்கள் என்பதாலும் இனிமேல் எந்த ஒருபோராட்டமும் கொழும்பில் எந்தஇடத்திலும் தமிழ்தேசிய கூட்டமைப்பு மேற்கொள்ளகூடாது என்பதற்குமான எச்சரிக்கையாகவே நண்பர்மாமனிதர் ரவிராஜ் சுட்டுக்கொல்லப்பட்டார். அவரின் பிறந்த நாள் இப்போது இடம்பெறும் வேறையில் சரியாக அவர் உயிர்தீத்து 19, வருடங்கள் கடந்துஇடம்பெறும் பொதுத்தேர்தலில் அன்னாரின் துணைவியார் யாழ்மாவட்டத்தில் தமிழ்தேசிய்கூட்டமைப்புசார்பாக வரேயொரு பெண் வேட்பாளராக களம் இறங்கியுள்ளார் மாமனிதர் ரவிராஜ் அவர்களின் சேவைகளைமுன்எடுக்க்பொருத்தமான ஒரு வேட்பாளராக மாமனிதர் ரவிராஜ் அவர்களின் துணைவியாரை யாழ்மாவட்டமக்கள் முழு ஆதரவு வழங்குவது காலத்தின் தேவை எனவும் மேலும் கூறினார்.

மேலும்..

தமிழ் மக்களுக்குரிய பாரம்பரிய அரசியல் பலம் தமிழ் தேசியக் கூட்டமைப்பு – க.இன்பராசா

தமிழ் மக்களுக்குரிய பாரம்பரிய அரசியல் பலம் தமிழ் தேசியக் கூட்டமைப்பு. இதனைப் பலப்படுத்த வேண்டும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பயணித்தால் மாத்திரமே எமது மக்களுக்குரிய அரசியல் அபிலாசைகளை வென்றெடுக்கலாம் என புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் க.இன்பராசா தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் ...

மேலும்..

20 ஆசனங்களைக் கைப்பற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு! உறுதியுடன் தலைவர் சம்பந்தன்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இம்முறை 20 ஆசனங்களைப் பெற்றுக்கொள்ளும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். திருகோணமலையில் இன்று(வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு நம்பிக்கை வெளியிட்டார். தமிழ் பேசும் மக்கள் தங்களது வாக்குகளை பிரிக்காமல் ...

மேலும்..

தமிழர்களிடம் வாக்குக் கேட்பதற்கு தேசியக் கட்சிகளுக்கு அருகதையில்லை – சி.வி.கே.சிவஞானம்

தமிழர்களின் அனைத்து விடயங்களிலும் காலை வாருகின்ற செயற்பாட்டைமுன்னெடுக்கும் தென்னிலங்கை தேசியக் கட்சிகள் வடக்கு கிழக்கில் தமிழ் மக்களிடம் வாக்குக் கேட்பதற்கு அருகதை இல்லை என வடக்கு மாகாண அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார். வடக்கு கிழக்கில் தென்னிலங்கையைச் சேர்ந்த தேசியக் கட்சிகளின் அதிக்கம் ...

மேலும்..

வருமான வரியை மீள அறவிட அமைச்சரவை அனுமதி!

வருமான வரியை மீள அறவிட அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று(வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அமைச்சரவை இணைப் பேச்சாளர் அமைச்சர் ரமேஸ் பத்திரண இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். இதற்கமைய எதிர்வரும் ஜூலை மாதம் முதல் வருமான வரியை மீள ...

மேலும்..

திருமண நிகழ்வு குறித்து சுகாதார அமைச்சின் அறிவிப்பு

திருமண வைபவமொன்றில் கலந்துகொள்பவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதற்கமைய திருமண வைபவமொன்றில் 200 பேர் வரையில் கலந்துகொள்வது தொடர்பாக ஆராய்ந்து வருவதாக அந்த அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளளது. நாட்டில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்தமையைத் தொடர்ந்து, ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டதுடன், பல கட்டுப்பாடுகளும் ...

மேலும்..

MCC ஒப்பந்தம் குறித்த அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு

மிலேனியம் சவால்கள் நிறுவனத்தின் மானியம் குறித்து ஆராயும் மீளாய்வு குழுவின் இறுதி அறிக்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்டுள்ளது. குறித்த அறிக்கை எம்.சி.சி. உடன்படிக்கை குறித்து ஆராய நியமிக்கப்பட்ட குழுவினால் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மேலும்..

உரிமைப் போராட்டத்துக்கான சூழல் உருவாகிக்கொண்டிருக்கிறது- சிவமோகன்

ஈழத் தமிழர்கள் தமது உரிமைப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்ல ஒரு தகுந்த சூழல் உருவாகிக் கொண்டிருப்பதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் எஸ்.சிவமோகன் தெரிவித்துள்ளார். அத்துடன், வன்னியில் மக்களின் வாக்குகளைச் சிதைவடையச் செய்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வெற்றியைத் தடுப்பதே சுயேட்சைக் குழுக்கள் ...

மேலும்..

வாழைச்சேனை காகித ஆலையை மீளமைக்க கடற்படை உதவி!

அரசினால் முன்னெடுக்கப்பட்டுவரும் அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்கு அமைய இலங்கை கடற்படை மட்டக்களப்பில் அமைந்துள்ள வாழைச்சேனை காகித தொழிற்சாலை நடவடிக்கைகளுக்கு தேவையான உதவிகளை வழங்கவுள்ளதாக கடற்படை ஊடக பேச்சாளர் லெப்டினன்ட் கொமண்டர் இசுறு சூரியபண்டார தெரிவித்துள்ளார். வாழைச்சேனை காகித தொழிற்சாலை நடவடிக்கைகளுக்கு தேவையான தொழிநுட்ப உதவிகளை ...

மேலும்..

க.பொ.த உயர்தரம் மற்றும் புலமைப்பரிசில் பரீட்சைகள் குறித்து அறிவிப்பு

க.பொ.த உயர்தரம் மற்றும் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைகளுக்கான திகதி மற்றும் பரீட்சைகளை நடத்துவதற்கான முறைகள் குறித்து விரைவில் அறிவிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த விடயம் தொடர்பாக உரிய துறைகளுடன் சேர்ந்தவர்களுடன் கலந்துரையாடி திகதியை தீர்மானிக்கவுள்ளதாக கல்வி அமைச்சர் அறிவித்துள்ளதாக அமைச்சர் ...

மேலும்..

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானோரின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானோரின் எண்ணிக்கை 2007 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதரா அமைச்சு தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான மேலும் 6 பேர் இன்று (வியாழக்கிழமை) நாட்டில் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. கடற்படையினர் அறுவரே இவ்வாறு கொரோனா வைரஸ் ...

மேலும்..

கிளிநொச்சியில் முகாமைத்துவப் பயிற்சிக் கட்டடம் ஆளுநரால் திறந்துவைப்பு

கிளிநொச்சியில் நிர்மாணிக்கப்பட்ட வடக்கு மாகாண முகாமைத்துவ பயிற்சி அலகுக்கான கட்டடம் திறந்துவைக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி, கனகபுரம் பகுதியில் 123 மில்லியன் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்ட இந்தக் கட்டடத்தை வடக்கு மாகாண ஆளுநர் பி.எம்.எஸ்.சார்ளஸ் இன்று (வியாழக்கிழமை) திறந்துவைத்துள்ளார். இந்த கட்டடத் திறப்பு விழாவில், மாவட்ட அரச ...

மேலும்..

இந்திய மீனவர்களின் எல்லை மீறிய செயற்பாடுகள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும் – டக்ளஸ்

இலங்கை கடற்பரப்பினுள் சட்டவிரோதமாக உள்நுழைகின்ற இந்திய மீனவர்களை கட்டுப்படுத்துவதற்கான இணைந்த பொறிமுறை ஒன்றை உருவாக்கி முன்னகர்த்துவது தொடர்பில் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேயுடன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்துரையாடினார். கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கும் இலங்கைக்கான ...

மேலும்..

11 இளைஞர்கள் கடத்தல் விவகாரம் – வழக்கு விசாரணைகளுக்கு இடைக்காலத் தடை

முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னகொடவிற்கு எதிராக மேல் நீதிமன்றத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் வழக்கு விசாரணைகளை இடைநிறுத்துமாறு உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. 11 இளைஞர்கள் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணைகளுக்கே உயர்நீதிமன்றம் இவ்வாறு இடைக்கால தடை விதித்துள்ளது. கொழும்பில் 11 ...

மேலும்..

இலங்கையில் மீண்டும் கொரோனா அச்சுறுத்தல் – அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை

இலங்கையில் மீண்டும் கொரோனா வைரஸ் பரவும் அபாயம் உள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. நாட்டில் தற்போது கொரோனா வைரஸின் தாக்கம் குறைவடைந்து வருகின்றமையினால், வெளிநாடுகளில் இருந்து வருபவர்களை உரிய முறையில் கவனிக்க வேண்டுமென அந்த சங்கத்தின் தலைவர் வைத்தியர் ...

மேலும்..

தேர்தல் நேரத்தில் திட்டமிட்டு களங்கத்தை ஏற்படுத்த முயற்சி- மனோ காட்டம்!

முன்னாள் அரச கரும மொழிகள் அமைச்சரான மனோ கணேசன் மற்றும் அவரது பிரத்தியேக செயலாளர் ஆகியோருக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில் இதுகுறித்து மனோ கணேசன் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிடம் கோரிக்கையை முன்வைத்துள்ளார். நல்லாட்சி அரசாங்கத்தில் தேசிய மொழிப் பயிற்சி நிறுவனத்தில் நடைபெற்ற ...

மேலும்..

கூட்டமைப்புடன் இணைந்தார் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் வேட்பாளர்!

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் திருகோணமலை மாவட்ட வேட்பாளர் வரதன் லக்ஸ்மன் இன்று(வியாழக்கிழமை) தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து கொண்டார். முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனின் இல்லத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது திருகோணமலையில் உள்ள கள நிலவரங்களின் ...

மேலும்..

கொரோனா காரணமாக சீசெல்ஸ் நாட்டில் சிக்கியிருந்த 254 பேர் நாடு திரும்பினர்

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக சீசெல்ஸ் நாட்டில் சிக்கித் தவித்த 254 இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளனர். அவர்கள் விசேட விமானத்தின் ஊடாக இன்று (வியாழக்கிழமை) நாட்டுக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர். அவர்களுக்கு விமான நிலையத்தில் வைத்து பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், பரிசோதனை முடிவுகள் வரும் வரையில் ...

மேலும்..

யாழ்.நயினாதீவுக்கு செல்ல பாஸ் நடைமுறை மனித உரிமை ஆனைக்குழுவில் முறைப்பாடு!

நயினாதீவு பிரதேசத்;துக்கு உள்ஞழைவதற்கோ வெளிச் செல்வத்ற்கோ பாஸ் நடைமுறை காணப்படுகின்றமைக்கு எதிராக இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவில் மங்களேஸ்வரன் கார்த்தீபன், கருணாகரன் குணாளன் ஆகியோரால் முறைப்பாடு கடந்த 22 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்டுள்ளது.   குறித்த முறைப்பாட்டில் மேலும் தெரிவிக்கப்பட்டவை வருமாறு:- நயினாதீவுப் பிரதேசம் யாழ்ப்பாண ...

மேலும்..

தென்மராட்சி சேவை நிறுவனத்தின் பொதுக்கூட்டமும் நிர்வாகத் தெரிவும்!

தென்மராட்ச்சி சேவை நிறுவனம் கனடாவின் வருடாந்த பொது சபை கூட்டமும் புதிய நிர்வாக சபை தெரிவும் எதிர்வரும் 28 ஆம் திகதி பிற்பகல் 2 மணிக்கு இடம்பெற உள்ளது. : Southern Aroma 7200 Markham Rd #14, Markham, ON L3S ...

மேலும்..

சற்றுமுன் சி.ஐ.டியில் முன்னிலையானார் கருணா!

கருணா அம்மான் எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் சற்றுமுன் சி.ஐ.டி. தலைமையகமான 4 ஆம் மாடியில் முன்னிலையாகி உள்ளார். கருணா வெளியிட்டுள்ள, சர்ச்சைக்குரிய கருத்து, அதன் உள்ளடக்கத்தின் உண்மைத் தனமை தொடர்பில் குற்றப் புலனயவுத் திணைக்களத்தின் சிறப்புக் குழு விசாரணைகளை கடந்த 3 தினக்களுக்கு ...

மேலும்..