June 28, 2020 அன்று பிரசுரிக்கப்பட்டவை

வாக்குச்சீட்டுகள் அச்சிடும் பணிகள் இன்றுடன் நிறைவு

எதிர்வரும் தேர்தலை முன்னிட்டு வாக்குச் சீட்டுகளை அச்சிடும் பணிகள் இன்றுடன் (ஞாயிற்றுக்கிழமை) நிறைவடையவுள்ளதாக அரச அச்சகம் தெரிவித்துள்ளது. 18 மாவட்டங்களுக்கான வாக்குச்சீட்டுகள் ஏற்கனவே தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில், ஏனைய மாவட்டங்களுக்கான வாக்குச்சீட்டுகள் அச்சிடும் பணிகள் இன்றுடன் நிறைவடையவுள்ளதாக அரச அச்சகர் கங்கா ...

மேலும்..

கொரோனாவால் வெளிநாட்டில் சிக்கித் தவித்த மேலும் 290 இலங்கையர்கள் நாடு திரும்பினர்

கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக பெலாரஸ் நாட்டில் தங்கியிருந்த 290 இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளனர். ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான விசேட விமானத்தின் ஊடாக அவர்கள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். இதனையடுத்து, விமான நிலையத்தில் அவர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனைகள் ...

மேலும்..

தமிழர்களின் எந்தவொரு உரிமையையும் யாருக்கும் விற்றுவிடவில்லை- சுமந்திரன்

தமிழர்களின் எந்தவொரு உரிமையையும் யாருக்கும் விற்றுவிடவில்லை என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி, வட்டக்கச்சி பொதுச்சந்தை வளாகத்தில் நேற்று (சனிக்கிழமை) நடைபெற்ற வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும், “தமிழ் மக்களுக்கான ...

மேலும்..

கொரோனா வைரஸ்: வெற்றியை அடைந்து விட்டதாக எண்ணும் நேரமல்ல- அனில் ஜாசிங்க

கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் விடயத்தில் நாம் வெற்றியை அடைந்து விட்டதாக எண்ணுகின்ற நேரமல்ல இது என  சுகாதார பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார். கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் தொடர்பாக நடத்தப்பட்ட விசேட ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த ...

மேலும்..

பாடசாலைகள் நாளை முதல் மீண்டும் திறக்கப்படுகின்றது

கொரோனா தொற்று அச்சுறுத்தல் காரணமாக மூடப்பட்டிருந்த பாடசாலைகள், 105 நாட்களுக்கு பின்னர் நாளை (திங்கட்கிழமை) மீண்டும் திறக்கப்படுகின்றது. பாடசாலைகளை நான்கு கட்டங்களாக திறப்பதற்கு கல்வி அமைச்சர் மற்றும் அமைச்சின் அதிகாரிகள் அண்மையில் தீர்மானித்து அறிவித்திருந்தனர். அதற்கமையவே நாளைய தினம் பாடசாலைகள் திறக்கப்படுகின்ற போதிலும் மாணவர்கள் ...

மேலும்..

தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி செயற்படுபவர்களை சுற்றிவளைக்கும் நடவடிக்கைகள் ஆரம்பம்

தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி செயற்படுபவர்களை சுற்றிவளைக்கும் நடவடிக்கைகள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படவுள்ளன. நாட்டில் பெரும்பாலானோர் தனிமைப்படுத்தல் சட்டத்தை  தொடர்ந்து மீறி செயற்படுவதனால் மீண்டும் கொரோனா தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர். அதனைத் தொடர்ந்தே,  தனிமைப்படுத்தல் சட்டத்தை  மீறி  ...

மேலும்..

எம்.சி.சி உடன்படிக்கை விவகாரத்தில் அரசாங்கத்திற்கு ரணில் விடுத்துள்ள கோரிக்கை

எம்.சி.சி உடன்படிக்கையை அரசாங்கம் அங்கீகரிக்க தீர்மானித்துள்ளதா அல்லது இல்லையா என்பது குறித்து தெளிவான அறிக்கையை வெளியிட வேண்டுமென ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நேற்று (ஞாயிற்றுக்கிழமை) சேதவத்த விகாரையின் மத நிகழ்வுகளில் ரணில் விக்ரமசிங்க கலந்துகொண்டார். அதனைத் தொடர்ந்து ஊடகவியலாளர்களை சந்தித்த ...

மேலும்..

சர்வதேச ஆதரவுடனே அரசுடன் இனிப் பேச்சு! கூறுகின்றார் சம்பந்தன்

தேர்தலுக்குப் பின்னர் அமையும் புதிய அரசுடன் சர்வதேச சமூகத்தின் ஆதரவுடனும் அனைவரதும் ஆலோசனைகளையும் பெற்றே பேச்சுவார்த்தையை நடத்துவோம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் கூட்டமைப்பின் திருகோணமலை மாவட்ட முதன்மை வேட்பாளருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார். தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்காகக் கொழும்பிலிருந்து சில தினங்களுக்கு ...

மேலும்..

மனோ கணேசன் வடக்கு, கிழக்கு பிரச்சினைகளில் தலையிடத் தேவையில்லை – கருணா

முன்னாள் அமைச்சர் மனோ கணேசன் வடக்கு, கிழக்கு பிரச்சினைகளில் தலையிடத் தேவையில்லை என ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதியமைச்சருமான கருணா அம்மான் என்று அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் குறிப்பிட்டார். அம்பாறையில் அவரது கட்சி அலுவலகத்தில் நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்ற விசேட ...

மேலும்..

மஸ்கெலியாவில் தீ விபத்து – இரு வீடுகள் தீக்கிரை

மஸ்கெலியா – லெங்கா தோட்டத்திலுள்ள லயன் குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் இரு வீடுகள் எரிந்து நாசமாகியுள்ளன. இந்த தீ விபத்து நேற்று (சனிக்கிழமை) இரவு இடம்பெற்றுள்ள நிலையில், ஒரு வீடு முழுமையாகவும் மற்றுமொரு வீடு பகுதியளவிலும் சேதமடைந்துள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர். இதனையடுத்து, ...

மேலும்..