July 2, 2020 அன்று பிரசுரிக்கப்பட்டவை

காணாமல் ஆக்கப்பட்டோருக்கு அரசும் இராணுவமும் பொறுப்பு! கண்கண்ட சாட்சியங்கள் இருக்கும்போது தப்பவே முடியாது என்கின்றார் சம்பந்தன்

"இறுதிப் போரில் இராணுவத்தினரிடம் சரணடைந்த மற்றும் இராணுவத்தினரால் கைதுசெய்யப்பட்ட பலர் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர். இதற்கு அரசும் இராணுவமும்தான் முழுப் பொறுப்பு." - இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார். "இராணுவத்தினரிடம் பலர் சரணடைந்தமைக்கும், அவர்களால் பலர் கைதுசெய்யப்பட்டமைக்கும் கண்கண்ட சாட்சியங்கள் உள்ளன. ...

மேலும்..

அரசியல் தீர்வு கிடைத்தாலே அபிவிருத்தியைக் காணலாம் திருமலையில் சம்பந்தன் தெரிவிப்பு 

"அரசியல் தீர்வு கிடைத்தால் மாத்திரமே அபிவிருத்தியை நோக்கிச் செல்ல முடியும்." - இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட முதன்மை வேட்பாளருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார். திருகோணமலை மின்சார நிலைய வீதியில் அமைந்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற கூட்டத்திலேயே ...

மேலும்..

தமிழீழ விடுதலைப்புலிகளை மீண்டும்  தலைதூக்கவைக்க சஜித் கடும் முயற்சி இப்படிக் குற்றம்சாட்டுகின்றது மஹிந்த அணி

"தந்தையின் வழியில் செல்வதாகப் பிரசாரம் செய்யும் சஜித் பிரேமதாஸ அதிகாரத்துக்கு வந்த பின்னர் தமிழீழ விடுதலைப்புலிகளை மீண்டும் தலைதூக்க வைக்கவே முயற்சிக்கின்றார். அதனை யாரும் அனுமதிக்கமாட்டார்கள்." - இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் கொழும்பு மாவட்ட வேட்பாளர் திலங்க சுமதிபால தெரிவித்தார். வடகொழும்பில் நேற்று ...

மேலும்..

போதையற்ற நாட்டை உருவாக்குவோம் என்ற தொனிப்பொருளில் துண்டுப்பிரசுரம் விநியோகம்

பாறுக் ஷிஹான்    போதையற்ற நாட்டை உருவாக்குவோம்  என்ற தொனிப்பொருளில்  ஜனாதிபதியின் உத்தரவுக்கு அமைய சர்வதேச போதை ஒழிப்பு வாரமாக 2020 ஜூன் 20 தொடக்கம் 2020 ஜூலை 2 ம் திகதி பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது . இது தொனிப்பொருளுக்கு அமைய இலங்கை மதுவரி திணைக்கள் ஆணையாளர் ...

மேலும்..

வடக்கு பிரதேச செயலகம் தரம் உயர்த்தி தரப்பட வேண்டும்  என்கிற குரல் மேலோங்கி ஒலிப்பதற்கு நானேதான் காரணம்- கல்முனையில் கோடீஸ்வரன் முழக்கம் 

கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தரம் உயர்த்தி தரப்பட வேண்டும் என்கிற குரல் இன்று எட்டு திசைகளிலும் ஓங்கி ஒலிப்பதற்கு காரணமாக அமைந்தார் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், இந்நாள் வேட்பாளருமான கவீந்திரன் கோடீஸ்வரன் தெரிவித்தார். கல்முனை மாநகர சபை உறுப்பினர் ...

மேலும்..

கருணா அம்மானுக்குப் பொதுமன்னிப்பு எனில் முன்னாள் போராளிகளைக் கைதுசெய்யலாமா? – மஹிந்தவின் பேச்சு நகைப்புக்கிடமானது என்கிறார் பொன்சேகா

"கருணா அம்மானுக்கு ஏற்கனவே பொதுமன்னிப்பு வழங்கப்பட்டுவிட்டதெனில் அவர் தற்போது நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டால் கைதுசெய்யமாட்டீர்களா? அப்படியெனில் முன்னாள் போராளிகளைத் தற்போது சந்தேகத்தில் கைதுசெய்வது எந்தவகையில் நியாயம்? பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் பேச்சு நகைப்புக்கிடமாக இருக்கின்றது." - இவ்வாறு ஐக்கிய ...

மேலும்..

பாராளுமன்றம் சென்று தமிழ் மக்களுக்காக குரல் கொடுப்பேன்: ஐக்கிய மக்கள் சக்தியின் வன்னி மாவட்ட பெண் வேட்பாளர் ரசிக்கா…

பாராளுமன்றம் சென்று தமிழ் மக்களுக்காக குரல் கொடுப்பேன். அதற்கான அங்கீகாரத்தை மக்கள் வழங்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் வன்னி மாவட்ட பெண் வேட்பாளர் ரசிக்கா பிரியதர்சினி தெரிவித்துள்ளார். வவுனியாவில் இன்று இடம்பெற்ற தேர்தல் பரப்புரை கூட்டத்தின் பின் ஊடகவியலாளரின் கேள்விக்கு ...

மேலும்..

S4IG இன் COVID-19 பரவலின் பின்னரான சுற்றுலாத்துறை சார் வியாபாரங்களினை மீட்பு செய்வதற்கான வியாபார ஆலோசனை நிகழ்வு…

இலங்கையின் கிழக்குப் பிராந்தியமானது, அதன் வரலாறு, கலாசார பன்முகத்தன்மை மற்றும் திறன்களினால் அதிகளவான சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் பிரதேசமாக உள்ளதுடன், சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் துறையைச் சார்ந்த நடவடிக்கைகள் இப் பிராந்தியத்தின் முக்கியமான ஜீவனோபாய மார்க்கமாகவும் காணப்படுகின்றன. அந்தவகையில், உள்ளுர் சமூகங்கள் ...

மேலும்..

போதைப்பொருள் கடத்தல்: 5 வருடங்களில் 61 பேருக்கு மரண தண்டனை விதிப்பு…

"போதைப்பொருள் கடத்திய 61 பேருக்கு கடந்த ஐந்து வருடங்களில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அதேவேளை, 160 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது." - இவ்வாறு பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன, கவும் கூறினார். அத்துடன் 582 மரண தண்டனை விதிப்பு வழக்குகள் மேல் ...

மேலும்..

பொலிஸ் குழுவினர் அதிரடி வேட்டை; 24 மணி நேரத்தில் 1,779 பேர் சிக்கினர் – துப்பாக்கிகள் உள்ளிட்ட பல்வேறு ஆயுதங்கள் மீட்பு…

நாட்டில் கடந்த 24 மணித்தியாலத்தில் பொலிஸ் குழுக்களினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளின்போது பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் 1,779 பேர் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். போதைப்பொருள், ஆயுதங்கள், வெடிபொருட்கள், சட்டவிரோத மதுபானம் வைத்திருந்த குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் இந்தச் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு ...

மேலும்..

பேரினவாதக் கட்சிகள் தமிழ் மக்களின் வாக்குகளை சிதறடிப்பதற்கு படுகுழி வெட்டியிருக்கின்றார்கள். எம்.ஞானப்பிரகாசம்…

தமிழ் மக்கள் ஒரணியில் ஒன்றிணைந்து தமிழ்தேசிய கூட்டமைப்புக்கு வாக்களிக்க வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட தமிழ்தேசிய கூட்டமைப்பு வேட்பாளர் எம்.ஞானப்பிரகாசம் தெரிவித்தார். தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர் பொறியியலாளர் ஞானபிரகாசம் அவர்களின் ஊடக சந்திப்பு மட்டு.ஊடக அமையத்தில் நடைபெற்றது. ...

மேலும்..

அபிவிருத்திகளுக்காக மட்டும் தமிழ்தேசிய கூட்டமைப்பு உருவாக்கப்படவில்லை! பா.அரியநேத்திரன்,மு.பா.உ.

தமிழ்தேசியகூட்டமைப்பு 2001,ம் ஆண்டு தேசியதலைவர் பிரபாகரனின் வழிப்படுத்தலில் உருவாக்கப்பட்டது அபிவிருத்திகளைமட்டும் செய்வதற்கல்ல தமிழ்தேசிய உறுதியுடன் வடகிழக்கு தமிழ் மக்களின் உரிமையையும் வென்றெடுப்பதற்கே என மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் பட்டிருப்பு தொகுதி இலங்கை தமிழரசு கட்சி தலைவருமான பா.அரியநேத்திரன் தெரிவித்தார். மட்டக்களப்பு ...

மேலும்..

விவசாயத்தை வளர்ப்பதற்கான தேவைகளை சரியாக அடையாளம் காண வேண்டும் – ஜனாதிபதி

தேவைகளை சரியாக அடையாளம் கண்டு விவசாயத்தை வளர்ப்பதன் மூலம் நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்த முடியும் என  ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ வலியுறுத்தி உள்ளார். பிராந்திய அபிவிருத்தி வங்கிகளின் தற்போதைய நடவடிக்கைகள் மற்றும் திட்டங்கள் தொடர்பாக ஜனாதிபதி செயலகத்தில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்தக் கலந்துரையாடலின் ...

மேலும்..

இலங்கையில் மேலும் ஆறு பேருக்கு கொரோனா தொற்று!

கட்டாரில் இருந்து வருகை தந்த மேலும் 05 பேருக்கும் மற்றும் இந்தியாவில் இருந்து வந்த ஒருவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார். அதன்படி, இந்நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 2060 ஆக ...

மேலும்..

மட்டக்களப்பில் நான்கு ஆசனத்தை பெறக்கூடிய வல்லமை கூட்டமைப்புக்கு உள்ளது – ஸ்ரீநேசன்

மட்டக்களப்பு தேர்தல் மாவட்டதில் நான்காவது ஆசனத்தை பெறக்கூடிய வல்லமை தமிழ் தேசியக் கூட்டமைப்பு மாத்திரமே உள்ளதாக முன்னாள்  நாடாளுமன்ற உறுப்பினர் ஞா. ஸ்ரீநேசன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு இருதயபுரம் பிரதேசத்தில்   இடம்பெற்ற தேர்தல் பரப்புரை கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே இவ்வாறு கருத்து ...

மேலும்..

கொழும்பு துறைமுக ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு தற்காலிகமாக இடைநிறுத்தம்!

கொழும்பு துறைமுக ஊழியர்கள் தமது பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்தை தற்காலிகமாக இடைநிறுத்த தீர்மானித்துள்ளனர். பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக துறைமுக தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது. கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை இந்தியாவிற்கு வழங்குவது தொடர்பான தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அவர்கள் ...

மேலும்..

உரிமை துறந்த அபிவிருத்தி எனது இலக்கல்ல அபிவிருத்திக்கான உரிமையே எனது இலக்கு – உதயகுமார்

உரிமை துறந்த அபிவிருத்தி எனது இலக்கல்ல அபிவிருத்திக்கான உரிமையே எனது இலக்கு இன்று பல்வேறு குழுக்கள் அபிவிருத்தியை செய்வாக கூறுகிறார்கள் இவர்கள் இருந்த காலத்திலே என்ன அபிவிருத்தியை செய்தார்கள் என்பதை மக்கள் அறிவார்கள் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு வேட்பாளரும் ...

மேலும்..

கருணா அம்மானுக்குப் பொதுமன்னிப்பு எனில் முன்னாள் போராளிகளைக் கைதுசெய்யலாமா?

கருணா அம்மானுக்குப் பொதுமன்னிப்பு எனில் முன்னாள் போராளிகளைக் கைதுசெய்யலாமா? - மஹிந்தவின் பேச்சு நகைப்புக்கிடமானது என்கிறார் பொன்சேகா  மஹிந்தவின் பேச்சு நகைப்புக்கிடமானது என்கிறார் பொன்சேகா "கருணா அம்மானுக்கு ஏற்கனவே பொதுமன்னிப்பு வழங்கப்பட்டுவிட்டதெனில் அவர் தற்போது நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டால் கைதுசெய்யமாட்டீர்களா? ...

மேலும்..

திருகோணமலை மாவட்டத்தில் சிறிய வெட்டுக்கிளி வகையைச் சேர்ந்த தும்பி இனங்கள் படையெடுப்பு…

திருகோணமலை மாவட்டத்தில் சிறிய வெட்டுக்கிளி வகையைச் சேர்ந்த தும்பி இனங்கள் படையெடுத்துள்ளதை காணக்கூடியதாகவுள்ளது. திருகோணமலை கரையோரப் பகுதிகளை அண்டிய பிரதேசங்களில் இவ் தும்பி இனங்கள் பறந்து திரிகின்றன. திருகோணமலை கடற்கரை பகுதியிலிருந்து புல்மோட்டை வரையான கடற் கரையோரங்களில் இவ் தும்பி இனங்கள் பறந்து திரிகின்றன. இலட்சக் ...

மேலும்..

2005இல் ரணில் ஜனாதிபதியாக ஆகியிருந்தால் தமிழர்களுக்கு அரசியல் தீர்வு கிடைத்திருக்கும்! – தும்பளையில் கூறினார் விஜயகலா…

"2005ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க வெற்றி பெற்றிருந்தால் தமிழ் மக்களுக்குத் தீர்வு கிடைத்திருக்கும். முள்ளிவாய்க்காலில் ஒன்றரை இலட்சம் மக்கள் இனப் படுகொலை செய்யப்பட்டிருக்க மாட்டார்கள்." - இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ்ப்பாணம் மாவட்ட முதன்மை வேட்பாளர் திருமதி விஜயகலா ...

மேலும்..

வெள்ளைக் கொடிகளுடன் எவரும் சரணடையவில்லை – மாவையின் அறிக்கைக்கு இராணுவத் தளபதி இப்படிப் பதில்…

"இறுதிப் போரில் வெள்ளைக் கொடிகளுடன் விடுதலைப்புலிகள் உறுப்பினர்கள் எவரும் இராணுவத்தினரிடம் சரணடையவில்லை. அதேவேளை, விடுதலைப்புலிகள் உறுப்பினர்கள் எவரும் அவர்களின் உறவினர்களினால் இராணுவத்தினரிடம் ஒப்படைக்கப்படவும் இல்லை. இறுதிப் போர்க்களத்தில் இராணுவத்தினரால் கைதுசெய்யப்பட்ட விடுதலைப்புலிகள் உறுப்பினர்கள் அனைவரும் புனர்வாழ்வின் பின்னர் விடுதலை செய்யப்பட்டுவிட்டார்கள்." - இவ்வாறு ...

மேலும்..

நாடாளுமன்றத் தேர்தல் பணியில் 5 ஆயிரம் கண்காணிப்பாளர்கள்…

ஆகஸ்ட் 5ஆம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தல் கண்காணிப்புக் கடமையில் 5 ஆயிரம் பேர் ஈடுபடுத்தப்படவுள்ளனர் என்று பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாராச்சி தெரிவித்தார். இவர்களில் நீண்டகால கண்காணிப்பாளர்களும் உள்ளடங்குகின்றனர் எனவும், தபால் மூல வாக்களிப்புக்கும் கண்காணிப்புக் குழுவொன்று ஈடுபடுத்தப்படும் ...

மேலும்..

91 பேருடன் நான்கு விமானங்கள் வந்திறங்கின கட்டுநாயக்கவில்…

கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவல் காரணமாக இலங்கைக்கு வர முடியாமல், மூன்று நாடுகளில் சிக்கியிருந்த இலங்கையர்கள் 91 பேரை ஏற்றிய 04 விசேட விமானங்கள் இன்று காலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தன. கட்டாரின் டோஹா நகரிலிருந்து முதல் விமானம் ...

மேலும்..

ஹெரொயின் போதைப் பொருளை வைத்திருந்த முதியவர் ஒருவர் விளக்கமறியலில்…

திருகோணமலை தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 240 மில்லிகிராம் ஹெரொயின் போதைப் பொருளை வைத்திருந்த முதியவர் ஒருவர் விளக்கமறியலில் திருகோணமலை தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 240 மில்லிகிராம் ஹெரொயின் போதைப் பொருளை வைத்திருந்த முதியவர் ஒருவரை இம்மாதம் 14 ஆம் திகதி ...

மேலும்..

முஸ்லிம் காங்கிரஸ் சாய்ந்தமருது மத்திய குழுவின் விசேட கூட்டம்…

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் சாய்ந்தமருது மத்திய செயற்குழுவின் விசேட கலந்துரையாடல் ஒன்று நேற்று புதன்கிழமை இரவு கட்சியின் தவிசாளரும் முன்னாள் வடக்கு- கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான ஏ.எல்.அப்துல் மஜீட் அவர்களின் இல்லத்தில், கட்சியின் சாய்ந்தமருது பிரதேச அமைப்பாளர் எம்.ஐ.எம்.பிர்தௌஸ் அவர்களின் ...

மேலும்..

கிழக்கு மக்களின் எதிர்பார்ப்பு சுபீட்சமான முறையில் வாழ வேண்டும் என்பது இதன் மூலம் மக்களின் வாழ்க்கை தரம் உயர வேண்டும்…

கிழக்கு மக்களின் எதிர்பார்ப்பு சுபீட்சமான முறையில் வாழ வேண்டும் என்பது இதன் மூலம் மக்களின் வாழ்க்கை தரம் உயர வேண்டும். இதற்கான பயணத்தை நாம் மக்களுக்கு ஏற்படுத்த வேண்டும் முன்னால் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவிப்பு. கிழக்கு மக்களின் எதிர்பார்ப்பு சுபீட்சமான ...

மேலும்..

‘வன்னிச் சமூகங்களை குழப்பி வாக்கு வேட்டையாட சிலர் சதி; சோரம் போகாது துணிந்து நில்லுங்கள்’ – மன்னாரில் முன்னாள் அமைச்சர் ரிஷாட்…

சிறுபான்மைச்  சமூகங்களை அச்சுறுத்தி, பிரித்தாண்டு பெரும்பான்மைச் சமூகத்தின் வாக்குகளைப் பெறத் துடிப்போரைத் தோற்கடிப்பதற்கு, தொலைபேசிச் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டுமென அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். மன்னாரில் (01) இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றிய போதே, அவர் இதனைத் ...

மேலும்..

பரீட்சைகள் தொடர்பில் இறுதி தீர்மானம் அடுத்த வாரம்!

பாடசாலை ஆரம்பிக்கப்பட்ட பின்னர் பரீட்சைகள் நடைபெறும் தினம் தொடர்பில் இறுதி தீர்மானம் அடுத்த வாரம் அறிவிக்கப்படவுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற அமைச்சரை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். நேற்றை தினம் ஜனாதிபதி, ...

மேலும்..

போதைப்பொருள் ஒழிப்பு பணியக அதிகாரிகள் 11 பேர் கைது – நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை

போதைப்பொருள் கடத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட போதைப்பொருள் ஒழிப்பு பணியகத்தில் சேவையாற்றிய 11 அதிகாரிகளையும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதற்கமைய அவர்களை கொழும்பு நீதவான் நீதிமன்றில் இன்று (வியாழக்கிழமை) முன்னிலைப்படுத்தவுள்ளதாக சட்டமா அதிபரின் ஒருங்கிணைப்பு அதிகாரி நிசாரா ஜயரத்ன தெரிவித்துள்ளார். போதைப்பொருள் ஒழிப்பு ...

மேலும்..

எம்.சி.சி. உடன்படிக்கை குறித்து அமைச்சர்களின் கருத்துக்களை கோரும் ஜனாதிபதி

அமெரிக்கா நிறுவனத்துடனான எம்.சி.சி உடன்படிக்கை குறித்து அமைச்சர்கள் அனைவரையும் தங்கள் தனிப்பட்ட கருத்தினை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி வேண்டுகோள் விடுத்துள்ளாரென அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார். அமைச்சரவை கூட்டத்தில் எம்.சி.சி விடயம் குறித்து ஆராயப்பட்டதாக தெரிவித்த அவர், எம்.சி.சி உடன்படிக்கை குறித்து மீளாய்வு குழு ...

மேலும்..

மக்களின் மின் கட்டண பழுவை குறைக்கவும் – வி.ஜனகன் அவசர கோரிக்கை!

கொவிட் 19 வைரஸ் தொற்று பாதிப்பு ஏற்பட்ட கடந்த மூன்று மாத காலப்பகுதியில் நாட்டு மக்களால் நுகரப்பட்ட அதிகரித்த மின்சார அலகுகளுக்கான கட்டணம் இன்று மக்களுக்கு ஒரு பாரிய சுமையாக மாறியுள்ளது. இந்த பிரச்சினைக்கான நிவாரணத்தை அரசாங்கம் உடனடியாக மக்களுக்கு வழங்க வேண்டும் ...

மேலும்..

கைவிடப்பட்ட காணியில் சிவில் பாதுகாப்பு படையினர் பயிர்ச்செய்கை!

ஹங்வெல்ல, வெலிகண்ண பிரதேசத்தில் கைவிடப்பட்ட நெற்செய்கை காணியில் சிவில் பாதுகாப்பு படையினர் பயிர்ச் செய்கையை ஆரம்பித்துள்ளதாக சிவில் பாதுகாப்பு படை பணிப்பாளர் நாயகம் ரியர் அட்மிரல்   ஆனந்த பீரிஸ் தெரிவித்துள்ளார். நாட்டில் கைவிடப்பட்ட பயிர்ச்செய்கை காணிகளில் மீள மேற்கொள்ளும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ...

மேலும்..

சுகாதார வைத்திய அதிகாரியின் அனுமதியின்றி திறக்கப்பட்டது கசூரினா கடற்கரை!

காரைநகர் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரியின் அறிவுறுத்தல்களை மீறி கசூரினா கடற்கரை (பீச்) பொது மக்களின் பாவனைக்காக திறக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டப்படுகின்றது. நாட்டில் கொரோனோ அச்சம் முழுமையாக நீங்காத நிலையில், காரைநகர் பிரதேச சபையினரால் கசூரினா பீச் மக்கள் பாவனைக்காக திறப்பதற்கான நடவடிக்கைகள் ...

மேலும்..

புனித அந்தோனியார் தேவாலயத்தின் புனரமைப்புப்பணிகளை விரைவில் நிறைவு செய்ய நடவடிக்கை!

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலினால் மோசமாக சேதமடைந்த கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தின் எஞ்சிய புனரமைப்புப்பணிகளை விரைவில் நிறைவு செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன உறுதியளித்துள்ளார். புனித அந்தோனியார் தேவாலயத்திற்கு நேற்று (புதன்)  விஜயம் செய்த ...

மேலும்..

மாலைதீவிலிருந்து 178 இலங்கையர்கள் நாடு திரும்பினர்

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக மாலைதீவில் சிக்கியிருந்த 178 இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளனர். ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான விசேட விமானத்தின் மூலம் இன்று (வியாழக்கிழமை) அவர்கள் மத்தளை விமான நிலையத்தை வந்தடைந்தனர். இதனையடுத்து விமான நிலையத்தில் அவர்களுக்கு பி.சி.ஆர். பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்நிலையில், பரிசோதனை ...

மேலும்..

ஒருமித்த நாட்டிற்குள் அதிகாரப்பகிர்வை மையப்படுத்திய மாகாண சபை பாதுகாக்கப்படும் – சஜித்!

ஒருமித்த நாட்டிற்குள் அதிகாரப்பகிர்வை மையப்படுத்திய மாகாண சபை தன்னால் பாதுகாக்கப்படும் என முன்னாள் அமைச்சர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்று(வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “நுண் கடனினால் ...

மேலும்..

தேர்தலில் வென்றதன் பின்னர் புதிய யுகத்தை ஏற்படுத்துவோம் – சுஜீவ சேனசிங்க

தேர்தலில் வென்றதன் பின்னர் புதிய யுகத்தை ஏற்படுத்துவோம் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்க தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ‘ஐக்கிய மக்கள் சக்தி 115 ஆசனங்களை ...

மேலும்..

வடக்கு வீதி இணைப்புத் திட்டத்தின் கடன் தொகைக்கான காலம் நீடிப்பு!

ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி உதவியுடன் மேற்கொள்ளப்பட்ட வடக்கு வீதி இணைப்புத் திட்ட நிர்மாணப் பணிகளுக்கான கடன் தொகை செல்லுபடியான காலம் நீடிக்கப்பட்டுள்ளது. இக் கடன் தொகைக்கான காலம் 2020 ஜுன் மாதம் 30 ஆம் திகதியாக இருந்த நிலையில் 2020 டிசம்பர் ...

மேலும்..

விமர்சிப்பதனை விடுத்து நீங்கள் என்ன செய்தீர்கள் என கூறுங்கள் – ப.சத்தியலிங்கம்!

எங்களுடன் போட்டிக்கு வருபவர்கள் எம்மை குறை கூறுவதை விடுத்து தாங்கள் 20 வருடங்களாக நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து மக்களுக்கு என்ன செய்தோம் என்பதனை சொல்லட்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி தேர்தல் தொகுதி வேட்பாளர் ப. சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார். வவுனியா குளவிசுட்டானில் ...

மேலும்..

கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,827ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 79 பேர் பூரண குணமடைந்து இன்று (வியாழக்கிழமை) வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ள நிலையில் இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இவர்களில் ஆறு கடற்படையினரும் ...

மேலும்..

கரவெட்டி திருமண மண்டபத்தில் நிகழ்வுகளை நடாத்த 14 நாட்கள் தடை!

சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றத் தவறியதற்காக கரவெட்டியில் உள்ள திருமண மண்டபம் ஒன்றில் விழாக்கள் நடத்த 14 நாட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. துன்னாலையில் உள்ள மணி மண்டபம் ஒன்றிற்கே இவ்வாறு கரவெட்டி சுகாதார மருத்துவ அதிகாரியால் தடை உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. குறித்த மண்டபத்தில் நேற்று(புதன்கிழமை) இடம்பெற்ற ...

மேலும்..

சந்தேக நபரின் மல வாசலிலிருந்து ஹெரோயின் மீட்பு

யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்ட சந்தேக நபர் ஒருவரின் மலவாசலில் இருந்து ஹெரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் நேற்று(புதன்கிழமை) இரவு இடம்பெற்றுள்ளதாக யாழ்ப்பாணம் சிறைச்சாலை அத்தியட்சகரால் அறிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் அரியாலைப் பகுதியில் 50 மில்லிக்கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் 25 வயதுடைய சந்தேக நபர் ...

மேலும்..

பிரித்தானிய தூதரகத்தின் பிரதித் தூதுவரை சந்தித்து பேசினார் சுரேஸ்!

பிரித்தானிய தூதரகத்தின் பிரதித் தூதுவர் நெஜில் கவனாக் மற்றும் பிராந்திய பாதுகாப்பு தொடர்பான இரண்டாவது செயலாளர் சிவோன் லெதம் ஆகியோர் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் துணைத் தலைவர்களில் ஒருவரான சுரேஷ் பிறேமச்சந்திரன் மற்றும் முன்னாள் கல்வி அமைச்சர் கலாநிதி சர்வேஸ்வரன் ...

மேலும்..

மலையகத்திற்கு பயணமாகும் ஜனாதிபதி

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தேர்தல் பிரசாரங்களில் ஈடுபட மலையகத்திற்கு விஜயம் செய்யவுள்ளார். அதற்கமைய அவர் எதிர்வரும் 13 ஆம் திகதி நுவரெலியாவுக்குச் செல்லவுள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காகவே ஜனாதிபதி இந்த விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார். நுவரெலியா ...

மேலும்..

கருணா அம்மானின் தலையீட்டினால் 13 குடும்ப நல மருத்துவ மாதுக்களுக்கு இடமாற்றம்

மத்திய மாகாணத்தில் பல்வேறு சிரமங்களுக்கு  மத்தியில் கடமையாற்றி வந்த தமிழ் பேசும் குடும்ப நல மருத்துவ மாதுக்கள் 13 பேருக்கு அவர்களின் சொந்த இடமான கிழக்கு மாகாணத்திற்கு உடனடி இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டத்தில் தமிழர் மகா சபை சார்பில் நாடாளுமன்ற  வேட்பாளராக ...

மேலும்..

தேர்தல் விதிகளை மீறினார் அங்கஜன் தேர்தல் ஆணையகத்தில் முறைப்பாடு! தமிழரசு வாலிப முன்னணி உபசெயலரால்

அராஜகத்துக்கு எதிராக இன்று யாழ் மாவட்ட தேர்தல் ஆணையக அலுவலகத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது . தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்பட்ட பின்னரும் நல்லூர் கோவில் வீதியில் அமைந்துள்ள சிறீலங்கா சுதந்திர கட்சி மாவட்ட அலுவலகத்தில் வேட்பாளர்களின் ( ராமநாதன் அங்கஜன் , மைத்திரிபால சிறிசேன ...

மேலும்..

ஒரு சிலர் செய்த அந்த தவறுக்காக ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்தையும் தண்டிக்க முடியாது: சஜித் பிரேமதாச

-வவுனியா நிருபர் - உதிர்த்த ஞாயிறு தாக்குதலும் இந்த நாட்டில் ஒரு மோசமான சம்பவம். அந்த சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். ஆனால் ஒரு சிலர் செய்த அந்த தவறுக்காக ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்தையும் தண்டிக்க முடியாது என ஐக்கிய மக்கள் சக்தியின் ...

மேலும்..

சமூகத் தலைமைகளை பலவீனப்படுத்த வாடகை வேட்பாளர்கள் இறக்குமதி; றிசாட்

வவுனியா நிருபர் வன்னி மாவட்டத்தில் மக்களின் வாக்குகளைக் கூறுபோட்டு, காலாகாலமாக பணியாற்றி வரும் சமூகத் தலைமைகளை இல்லாதொழிக்கும் சக்திகள் குறித்து, தேர்தலில் விழிப்பாக இருக்க வேண்டுமென்று மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் கோரிக்கை விடுத்துள்ளார். ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் ...

மேலும்..

சமூகத் தலைமைகளை பலவீனப்படுத்த வாடகை வேட்பாளர்கள் இறக்குமதி; றிசாட்

வவுனியா நிருபர் வன்னி மாவட்டத்தில் மக்களின் வாக்குகளைக் கூறுபோட்டு, காலாகாலமாக பணியாற்றி வரும் சமூகத் தலைமைகளை இல்லாதொழிக்கும் சக்திகள் குறித்து, தேர்தலில் விழிப்பாக இருக்க வேண்டுமென்று மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் கோரிக்கை விடுத்துள்ளார். ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் ...

மேலும்..

வவுனியாவில் 6 வருடமாக சிறப்பாக இயங்கும் கல்வி நிறுவனம்!

வன்னி மண்ணில் வவுனியா மாவட்டத்தில் வைரவபுளியங்குளம் – பண்டாரிக்குளம் பகுதியில் கடந்த 05வருடங்களாக சிறப்பாக இயங்கி வந்த லிங்கன் கல்வி (Lincoln college) தற்போது 6வது வருடத்தில் காலடி பதிக்கின்றது. கடந்த 2016ம் ஆண்டு சு.பார்த்திபன் B.A (ஆசிரியர்) அவர்களின் தனி முயற்சியில் ...

மேலும்..

வீட்டிலிருந்து இளைஞரின் சடலம் மீட்பு

வவுனியா நிருபர் - வவுனியா வேப்பங்குளம் 6ம் ஒழுங்கைக்கு அண்மித்த பகுதியிலிலுள்ள வீடோன்றிலிருந்து இன்று (02.07.2020) காலை இளைஞரின் சடலமொன்றினை வவுனியா பொலிஸார் மீட்டெடுத்துள்ளனர். வீட்டின் இரவு நித்திரைக்கு சென்ற இளைஞனை காலை தயார் எழுப்பிய சமயத்தில் இளைஞன் உயிரிழந்த நிலையில் காணப்பட்டுள்ளார். ...

மேலும்..

நீங்கள் வழங்கும் தீர்ப்பு இனப்படுகொலைக்கு நீதியை பெற்றுத் தருவதாக அமையட்டும் – சி.வி!

தேர்தலின்போது மக்களாகிய நீங்கள் வழங்கும் தீர்ப்பு இனப்படுகொலைக்கு நீதியை பெற்றுத்தருவதாக அமையட்டும் என வடக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது அங்கு ...

மேலும்..

இனவாதம் என்பது ஒரு விசக்கிருமி ஆகும் – சஜித்

இனவாதம் என்பது ஒரு விசக்கிருமி ஆகும் என முன்னாள் அமைச்சர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். மன்னாரில் நேற்று(புதன்கிழமை) இடம்பெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “கடந்த ஜனாதிபதி தேர்தலின் ...

மேலும்..

இனவாதம் என்பது ஒரு விசக்கிருமி ஆகும் – சஜித்

இனவாதம் என்பது ஒரு விசக்கிருமி ஆகும் என முன்னாள் அமைச்சர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். மன்னாரில் நேற்று(புதன்கிழமை) இடம்பெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “கடந்த ஜனாதிபதி தேர்தலின் ...

மேலும்..

சிறப்பாக இடம் பெற்றது மன்னார் மருதமடுத் திருத்தலத்தின் ஆடி மாத திருவிழா!

மன்னார் மருதமடுத் திருத்தலத்தின் ஆடி மாத திருவிழா திருப்பலி  இன்று(வியாழக்கிழமை) காலை 6.15 மணியளவில் மன்னார் மறைமாவட்ட ஆயர்  இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை தலைமையில் கூட்டுத்திருப்பலியாக ஒப்புக்கொடுக்கப்பட்டது. கடந்த ஜூன் மாதம் 23ஆம் திகதி கொடியேற்றத்தினைத் தொடர்ந்து நவ நாள் ஆராதனை திருப்பலிகள் ...

மேலும்..

யாழில் டக்ளஸ் தேவானந்தாவின் பதுகாப்பு பிரிவினரின் வாகனம் விபத்து

யாழ்ப்பாணம் – கொடிகாமம் மிருசுவில் பகுதியில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் பதுகாப்பு பிரிவினரின் வாகனம் விபத்துக்குள்ளாகியுள்ளது. கொடிகாமம் வைத்தியசாலைக்கு முன்பாக இன்று (வியாழக்கிழமை) அதிகாலை 6 மணியளவில் இந்த விபத்து நடந்துள்ளதாக கொடிகாமம் பொலிஸார் தெரிவித்தனர். கொழும்பில் நேற்று நடைபெற்ற பிரதமர் சந்திப்பில் அமைச்சர் ...

மேலும்..

கொரோனாவிலிருந்து மீண்ட கடற்படையினரின் எண்ணிக்கையில் அதிகரிப்பு!

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்த மேலும் ஆறு கடற்படையினர் குணமடைந்துள்ளனர். கடற்படை ஊடகப்பேச்சாளர் இதுகுறித்த தகவலினை வெளியிட்டுள்ளார். இதற்கமைய இதுவரையில் 848 கடற்படையினர் கொரோனாவிலிருந்து முழுமையாக குணமடைந்துள்ளனர். இலங்கையில் மொத்தமாக 904 கடற்படையினர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், 56 தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும்..

நல்லை ஆதின குருமுதல்வரை சந்தித்து ஆசி பெற்றனர் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர்!

பொது தேர்தலில் போட்டியிடும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் வேட்பாளர்கள் நல்லை ஆதின குருமுதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகளை சந்தித்து ஆசி பெற்றுள்ளனர். நல்லூரில் அமைந்துள்ள நல்லை ஞானசம்பந்தர் ஆதினத்தில் நேற்று(புதன்கிழமை) இவ்வாறு சந்தித்து ஆசி பெற்றுக்கொண்டுள்ளனர். இந்தச் சந்திப்பில் ...

மேலும்..

தன் மீதான குற்றசாட்டுக்களை மறுத்தார் இளம் சட்டத்தரணி!

யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளம் சட்டத்தரணி மது போதையில் வாகனம் செலுத்தினார் உள்ளிட்ட ஆறு குற்றச்சாட்டுக்களை பொலிஸார் முன் வைத்த நிலையில் அவற்றை குறித்த சட்டத்தரணி மறுத்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்னர் சுன்னாகம் பொலிஸார் வீதி சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போது, ஊரடங்கு ...

மேலும்..

மட்டக்களப்பு – கொக்குவில் ஸ்ரீ வீரமாகாளியம்மன் ஆலய பால்குட பவனி

மட்டக்களப்பு மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற அம்மன் ஆலயங்களில் ஒன்றாக விளங்கும் கொக்குவில் ஸ்ரீ வீரமா காளியம்மன் ஆலய வருடாந்த சடங்கு உற்சவ பெருவிழா நேற்று(புதன்கிழமை) ஆரம்பமானது. சின்ன ஊறணி ஸ்ரீ மாவடி பிள்ளையார் ஆலயத்தில் இருந்து ஆரம்பமான பால்குட பவனியானது கொக்குவில் பிரதான ...

மேலும்..

உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் ஆட்ட நிர்ணய சதி – குமார் சங்கக்கார விசாரணைக் குழுவில் முன்னிலை

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார, விளையாட்டில் இடம்பெறும் மோசடியை ஆராயும் விசாரணைக் குழுவில் தற்போது முன்னிலையாகியுள்ளார். 2011ஆம் ஆண்டு உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில், ஆட்ட நிர்ணய சதி இடம்பெற்றதாக கூறப்படும் விடயம் தொடர்பாக வாக்குமூலம் ...

மேலும்..

கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் குறித்த அறிவிப்பு வெளியானது

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் விரைவில் வெளியிடப்படவுள்ளதாக தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். 2020ம் ஆண்டு பொதுத் தேர்தல் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 5ஆம் திகதி நடைபெறவுள்ளது. இந்த நிலையில், தேர்தலில் போட்டியிடுகின்ற கட்சிகளும் சுயாதீனக்குழுக்களும் தங்களது தேர்தல் விஞ்ஞாபனத்தை ...

மேலும்..

வவுனியாவைச் சேர்ந்த பெண் மகளை கொன்றதுடன் தானும் தற்கொலைக்கு முயற்சி – பிரிட்டனில் சம்பவம்

வவுனியா –  நெடுங்கேணியைச் சேர்ந்த இளம் வயது தாய், பிரிட்டன் மிட்சம் பகுதியில் தான் பெற்ற மகளையே கத்தியால் குத்தி கொன்றதுடன் தானும் தற்கொலைக்கு முயன்றுள்ளார் இந்நிலையில், தற்கொலைக்கு முயன்ற தாயாரான சுதா என்பவர் வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதேநேரம் இந்த ...

மேலும்..

187 அடி உயரமான பழுதூக்கியின் மீது ஏறி துறைமுக ஊழியர்கள் முன்னெடுத்த போராட்டம் தொடர்கிறது

கொழும்பு துறைமுக தொழிற்சங்க ஊழியர்கள் மூவர் 187 அடி உயரமான பழுதூக்கியின் மீது ஏறி முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்பு போராட்டம் இன்றும் (வியாழக்கிழமை) தொடர்கிறது. கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தில் பொருத்துவதற்காக சீனாவிலிருந்து கொண்டுவரப்பட்ட புதிய பழுதூக்கிகளை அங்கு உடனடியாக பொருத்துமாறு கோரியே அவர்கள் ...

மேலும்..

தேர்தல் பிரசாரங்களில் எனது ஒளிப்படத்தை பயன்படுத்தக் கூடாது – ஜனாதிபதி உத்தரவு

எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்காக தனது ஒளிப்படத்தை பயன்படுத்தக்கூடாது என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அத்தோடு, பாதுகாப்பு சேவைகள், பொது நிர்வாகம், அரச சேவைகள், கூட்டுத்தாபனங்கள், சபைகள் மற்றும் நியதிச்சட்ட நிறுவனங்களில் சேவையில் ஈடுபட்டுள்ள அரச ...

மேலும்..