July 15, 2020 அன்று பிரசுரிக்கப்பட்டவை

இராஜாங்கனை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனை முடிவுகள் வெளியீடு

இராஜாங்கனை பகுதியைச் சேர்ந்த 395 பேருக்கும் கொரோனா தொற்று இல்லை என்பது பிசிஆர் பரிசோதனைகளின் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார். அதேநேரம்,  ராகமை தனியார் வைத்தியசாலையுடன் தொடர்புபட்டவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் ...

மேலும்..

இலங்கையில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

இலங்கையில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 674 ஆக அதிகரித்துள்ளது. நேற்று மாத்திரம் 9 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதற்கமைய ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து வருகை தந்த நால்வர் கட்டாரிலிருந்து நாடு ...

மேலும்..

நல்லூர் கந்தனின் திருவிழாவில் 300 பக்தர்களையேனும் அனுமதிக்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை

நல்லூர் கந்தசுவாமி கோயில் திருவிழாவில் 300 பக்தர்களையேனும் ஆலய வளாகத்துக்குள் அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வரலாற்றுப் பிரசித்திப் பெற்ற நல்லூர் கந்தசுவாமி கோயிலின் வருடாந்தப் பெருந்திருவிழா எதிர்வரும் 24 ஆம் திகதி ஆரம்பமாகிறது. வழக்கமாக பல்லாயிரக்கணக்கானவர்கள் பங்கேற்கும் இந்தத் திருவிழாவில், கொரோனா ...

மேலும்..

பொதுத் தேர்தல் – 4ஆம் நாள் தபால் மூல வாக்களிப்பு இன்று

பொதுத்தேர்தல் எதிர்வரும் 5ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில், நான்காவது நாள் தபால் மூல வாக்களிப்பு இன்று (வியாழக்கிழமை) இடம்பெறுகிறது. அதற்கமைய பொலிஸ் உத்தியோகத்தர்கள், பாதுகாப்பு படையினர், சிவில் பாதுகாப்பு திணைக்களம் மற்றும் சகல மாவட்டங்களிலும் உள்ள தேர்தல் அலுவலக அதிகாரிகள் இன்றும் நாளையும் ...

மேலும்..

யாழ். மாவட்ட வேட்பாளர் திரு. குருசுவாமி சுரேந்திரன் அவர்களோடு அறிவார்ந்த சமூகத்தை சேர்ந்தவர்களும் கல்விமான்களும் புத்திஜீவிகளும் சேர்ந்து அணி திரளத் தொடங்கியுள்ளனர்…

தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ். மாவட்ட வேட்பாளர் திரு. குருசுவாமி சுரேந்திரன் அவர்களோடு அறிவார்ந்த சமூகத்தை சேர்ந்தவர்களும் கல்விமான்களும் புத்திஜீவிகளும் சேர்ந்து அணி திரளத் தொடங்கியிருப்பதை அவதானிக்க முடிகிறது.இன்று யாழ் பல்கலைக்கழகத்தின் முன்னாள் வணிக பீடாதிபதி பேராசிரியர். தேவராசா அவர்கள் திரு. ...

மேலும்..

சாணக்கியன் ஊடகவியலாளர்கள் சந்திப்பு…

தமிழர்களின் கல்விமான்களை கொன்றொழித்த கட்சிக்கு வாக்களிக்காமல் தமிழர்களின் எதிர்காலத்திற்காக போராடும் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு வாக்களிக்கவேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளரும் இராசமாணிக்கம் மக்கள் அமைப்பின் தலைவருமான இரா.சாணக்கியன் தெரிவித்தார். மட்டு.ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை ...

மேலும்..

‘கொரோனா’ தாண்டவமாடினால் மீண்டும் ஊரடங்குச் சட்டம் அமுல் – சுகாதார சேவைகள் பணிப்பாளர் எச்சரிக்கை…

"இலங்கையில் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவினால் மீண்டும் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்க வேண்டிய நிலை ஏற்படக்கூடும்." - இவ்வாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்திய கலாநிதி அனில் ஜாசிங்க தெரிவித்தார் அவர் மேலும் தெரிவித்ததாவது:- "நாட்டின் தற்போதைய சூழ்நிலையின் பிரகாரம் ஊரடங்கு பிறப்பிக்க வேண்டிய ...

மேலும்..

ராஜபக்சக்களுக்கு அடிபணியாமல் தேர்தலை உடனே ஒத்திவையுங்கள் – ஆணைக்குழுவிடம் சஜித் மீண்டும் வலியுறுத்து…

- ஆணைக்குழுவிடம் சஜித் மீண்டும் வலியுறுத்து "கொரோனா வைரஸ் மீண்டும் சமூகத்துக்குள் ஊடுருவி விட்டது என்பதை ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட கொரோனாத் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவரான இராணுவத் தளபதியே ஒப்புக்கொண்டுவிட்டார். கந்தக்காடு போதைப்பொருள் புனர்வாழ்வு நிலையத்தில் பணியாற்றுபவர்கள் விடுமுறையில் வீடுகளுக்குச் சென்றதால் ...

மேலும்..

மன்சூர் பவுண்டேஷனின் ‘கதை சொல்லி பரிசு வெல்வோம்’ போட்டி முடிவுகள்…

சர்வதேச சிறுவர் வாசிப்பு தினம் மற்றும் உலக புத்தக தினம் என்பவற்றை முன்னிட்டு ஏ.ஆர்.மன்சூர் பவுண்டேஷன் அம்பாறை மாவட்ட சிறுவர்களிடையே நடாத்திய 'கதை சொல்லி பரிசு வெல்வோம்' எனும் போட்டியின் வெற்றியாளர்கள் தெரிவு செய்யப்பட்டு, முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. கொரோனா விடுமுறை காலத்தை புத்தகங்களின் ...

மேலும்..

தூக்கில் தொங்கிய நிலையில் சிறுமியின் சடலம் மீட்பு…

வவுனியா நிருபர் வவுனியா பூந்தோட்டத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் சிறுமியின் சடலம் மீட்பு வவுனியா பூந்தோட்டம் பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் சிறுமி ஒருவரின் சடலத்தினை  (15.07.2020) காலை பொலிஸார் மீட்டெடுத்துள்ளனர். காலை வெகு நேரமாகியும் குறித்த சிறுமியை காணவில்லை என உறவினர்களால் தேடிய சமயத்தில் ...

மேலும்..

தமிழ் முற்போக்கு கூட்டணியின் வெற்றியிலேயே மலையகத்தின் எதிர்காலம் தங்கியுள்ளது – திகாம்பரம் தெரிவிப்பு…

(க.கிஷாந்தன்) தமிழ் முற்போக்கு கூட்டணியின் வெற்றியிலேயே மலையகத்தின் எதிர்காலம் தங்கியுள்ளது. எனவே, எம்மை வெற்றிபெற வைக்கவேண்டியது மக்களின் பொறுப்பாகும் - என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட வேட்பாளருமான திகாம்பரம் தெரிவித்தார். ஐக்கிய மக்கள் சக்தியில் போட்டியிடும் ...

மேலும்..

தமிழ் அரசியல் கைதிகளை பிணையில் விடுதலை செய்யுமாறு மாவை சேனாதிராஜா ஜனாதிபதியிடம் கோரிக்கை

பயங்கரவாத தடைச் சட்டம் அல்லது அவரச காலச்சட்டத்தின் கீழ் கடந்த 10 முதல் 24 வருடகாலமாக கைது செய்யப்பட்ட தமிழ் அரசியல் கைதிகளை பிணையில் விடுதலை செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா ...

மேலும்..

தமிழ் தேசிய கூட்டமைப்பின் அதிருப்தியாளர்கள் கருணாவோடு இணைந்துள்ளனர்…

கருணாவின் வருகையை பெரிதாக கணக்கெடுக்கவில்லை எனினும்   தமிழ் தேசிய கூட்டமைப்பின் மீதுள்ள அதிருப்தியில் தான்  கருணாவோடு சிலர்  கைகோர்த்து சவால் விடுப்பதாக  தமிழ் தேசிய கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட வேட்பாளர் தாமோதரம் பிரதீவன்  தெரிவித்தார். அம்பாறை மாவட்டம் திகாமடுல்ல தேர்தல் தொகுதியில் ...

மேலும்..

மக்கள் எது தேவை என கருதுகின்றார்களோ அதுவே அரசியல்…

மக்கள் எது தேவை என கருதுகின்றார்களோ அதுவே அரசியல் என தெரிவித்தார் தமிழ் தேசிய கூட்டமைப்பின் திகாமடுல்ல மாவட்ட வேட்பாளர் இரா.சயனொளிபவன். தாண்டியடி பிரதேசத்தில்  இடம்பெற்ற  மக்கள் சந்திப்பிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். இதன் போது அப் பிரதேசத்தின் பெண்கள், பெரியோர்கள், தாய்மார்கள் மற்றும் சமூக நல சேவையாளர்கள் என பலரும் ...

மேலும்..

நிறுவனங்களில் சுகாதார அறிவுரைகளை பின்பற்றுவது பிரதானிகளின் பொறுப்பு – ஜனாதிபதி

கொவிட் 19 தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள தற்போதைய சூழ்நிலையில் வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக அரச மற்றும் தனியார் நிறுவனங்களில் சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றுவது நிறுவன பிரதானிகளின் பொறுப்பாகுமென்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார். கொவிட் 19 தொற்றை முழுமையாக கட்டுப்படுத்தும் வரை ...

மேலும்..

கொரோனா அச்சம் – பிற்போடப்படுமா பொதுத் தேர்தல்? – தேர்தல்கள் ஆணைக்குழு விளக்கம்

தேர்தலின்போது பின்பற்றவேண்டிய சுகாதார பாதுகாப்பு வழிகாட்டல் ஆலோசனைகளை வர்த்தமானி அறிவித்தலாக வெளியிடாவிட்டால் தேர்தலை நடத்துவது கடினமாகும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். நாட்டில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸின் பரவல் அதிகரித்து வரும் நிலையில், பொதுத் ...

மேலும்..

மக்களுக்கு எதுவும் செய்யாத உதயகுமார் அரசியலுக்கு வந்து என்ன சாதிக்கப்போகின்றார்? – அம்பிட்டிய தேரர் கேள்வி!

மட்டக்களப்பு முன்னாள் மாவட்ட அரசாங்க அதிபராக இருந்த மா.உதயகுமார் அரசாங்க அதிபராக  இருந்த காலத்தில்   மக்களுக்கு  எதையும் செய்யாத நிலையில் அரசியலில் வந்து எதை சாதிக்கப்போகின்றார் என மட்டக்களப்பு ஸ்ரீ மங்களராம விகாரை விகாரதிபதியும் சுயேச்சைக்குழு 22 வேட்பாளருமான அம்பிட்டிய சுமணரத்தன ...

மேலும்..

கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தின் ஊடாக மாத்திரம் இதுவரையில் 532 பேருக்கு கொரோனா!

கந்தகாடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தின் ஊடாக மாத்திரம் இதுவரையில் 532 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவர்களில் 444 கைதிகளும் 64 பணிக்குழாமினரும் உள்ளடங்குகின்றனர் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். வெலிக்கடை சிறைச்சாலையில் இனங்காணப்பட்ட ...

மேலும்..

2ஆம் கட்ட தாக்குதலுக்கு தயாராக இருந்த சாரா குறித்து அதிர்ச்சி தகவல்- குற்றத் தடுப்புப் பிரிவு

இலங்கையில் 2 ஆம் கட்டத் தாக்குதலை நடத்துவதற்கு தயாராக இருந்த மகேந்ரன் புலச்தினி ( சாரா)  என்ற பெண் இறக்கவில்லை எனவும் அவர் தப்பிச்சென்றுள்ளதாகவும் தகவல்கள் வெளிப்படுத்தகப்பட்டுள்ளன ஈஸ்டர் ஞாயிறு தின தாக்குதல்கள் தொடர்பாக விசாரணை செய்யும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவுக்கே இவ்விடயம் ...

மேலும்..

இலங்கையில் கொரோனாவின் தாக்கம் குறித்து மறைப்பதற்கு ஒன்றும் இல்லை – இராணுவத் தளபதி

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று தொடர்பான விடயங்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், மறைப்பதற்கு ஒன்றும் இல்லை என இராணுவத்தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். கொரோனா தடுப்பு மையத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். இதன்போது மேலும் தெரிவித்துள்ள அவர், “ஜனாதிபதி ...

மேலும்..

தமிழரசு கட்சியின் பிரதேசசபை உறுப்பினர் பிரசாரத்தின்போது மாரடைப்பால் மரணம்!

தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பிரதேசசபை உறுப்பினர் ஒருவர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம், ஊர்காவற்றுறை பகுதியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த இலங்கை தமிழ் அரசு கட்சியின் ஊர்காவற்றுறை பிரதேசசபை உறுப்பினரான கனகசுந்தரம் ஜெயக்குமார் என்பவரே உயிரிழந்தார். நேற்று (புதன்கிழமை) இலங்கை தமிழ் அரசுக் ...

மேலும்..

இலங்கை கடற்படையின் புதிய தளபதி நியமனம்

இலங்கை கடற்படையின் 24ஆவது கடற்படைத் தளபதியாக வயிஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் இன்று (புதன்கிழமை) இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் நிஷாந்த உலுகேதென்ன கடற்படை தலைமை நிர்வாகியாக செயற்பட்டுள்ளார். நாட்டின் 23ஆவது கடற்படைத் தளபதியாக செயற்பட்ட பியல் டி ...

மேலும்..

ஆணைக்குழுவுக்கு அழைக்கப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள்

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான ராஜித சேனாரத்ன, ரஞ்சன் ராமநாயக்க மற்றும் ரஞ்சித் மத்துமபண்டார ஆகியோர் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் இன்று (புதன்கிழமை) முன்னிலையாக உள்ளனர். குறித்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது, கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் டீ.கே.பி.தசநாயக்கவால் ஜனாதிபதி விசாரணை ...

மேலும்..

வவுனியாவில் 20 தேர்தல் முறைப்பாடுகள் பதிவாகியுள்ளது!

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தல் தொடர்பில் இதுவரை  இருபது  முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக வவுனியா மாவட்ட அரசஅதிபரும்,தெரிவத்தாட்சி அலுவலருமான சமன் பந்துலசேன தெரிவித்தார். தேர்தல் முறைப்பாடுகள் குறித்து  ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், ”தேர்தல் தொடர்பில் சிறியளவிலான ...

மேலும்..

சாரதி அனுமதிப்பத்திரங்களை தயாரிக்கும் நடவடிக்கைகளை இராணுவத்தினரிடம் வழங்க நடவடிக்கை?

சாரதி அனுமதிப்பத்திரங்களை தயாரிக்கும் நடவடிக்கைகளை இராணுவத்தினரிடம் வழங்குவது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்திவருகின்றது என தகவல்கள் வெளியாகியுள்ளன. பாதுகாப்பு செயலாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன மற்றும் இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா ஆகியோருடன் நடந்த கலந்துரையாடலின்போது, இந்த ...

மேலும்..

பேருந்துகளில் பயணிப்போருக்கான அரசாங்கத்தின் அறிவிப்பு

பேருந்துகளில் பயணிக்கும் அனைவரும் முகக்கவசம் அணிவது கட்டாயம் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது. மேலும் ஆசனங்களின் எண்ணிக்கைக்கு அமையவே பேருந்துகளில் பயணிகளை ஏற்றிச்செல்ல முடியுமெனவும் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் கொமாண்டர் நிலான் மிரென்டா தெரிவித்துள்ளார். சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றாத வகையில் செயற்படும் பேருந்து ...

மேலும்..

மன்னாரில் சட்ட விரோதமான அரச காணி அபகரிப்பு தடுத்து நிறுத்தம்!

நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட இராச மடுக் கிராமத்தில் தனியார் ஒருவரால் அரச காணி , கோவில் காணி , இந்தியாவில் உள்ள பொது மக்களின் காணிகள் என சுமார் 49 ஏக்கர் காணிகளை துப்பரவு செய்து வேலியிடும் நடவடிக்கையில் நேற்று ...

மேலும்..

கந்தகாடு விவகாரம்: அனைவருக்கும் பீ.சி.ஆர் பரிசோதனை நிறைவு- சவேந்திர சில்வா

கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்திலுள்ள கைதிகள் மற்றும் உத்தியோகத்தர்கள் ஆகியோருடன் தொடர்பினை வைத்திருந்த அனைவருக்கும் முன்னெடுக்கப்பட்டிருந்த பீ.சி.ஆர் பரிசோதனை நடடிவடிக்கைகள் தற்போது நிறைவடைந்துள்ளதாக இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார் கந்தகாடு விவகாரம் தொடர்பாக இன்று (புதன்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே ...

மேலும்..

தேர்தல் விதிமுறை மீறல் தொடர்பில் கைது செய்யும் அதிகாரம் பொலிஸாருக்கே – மஹிந்த

தேர்தல் விதிமுறை மீறல் தொடர்பில் ஒருவரை கைது செய்யும் அதிகாரம் பொலிஸாருக்கு மாத்திரமே உள்ளது. அதனை வேறு எவரும் மேற்கொள்ள முடியாது என தேர்தல் ஆணைக்குழு தலைவர் மஹிந்த தேச பிரிய தெரிவித்தார். வடக்கிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள தேர்தல் ஆணைக்குழு தலைவர் உள்ளிட்ட, ...

மேலும்..

கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை இரண்டாயிரத்தை கடந்தது

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை இரண்டாயிரத்தை கடந்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 13 பேர் குணமடைந்த நிலையில் இதுவரை குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 2,001 ஆக அதிகரித்துள்ளது. நாட்டில் தற்போது கொரோனா வைரஸ் தொற்று உறுதியானவர்களின் மொத்த ...

மேலும்..

சுதந்திரக் கட்சியின் தலைவராக மீண்டும் பிரதமர் மஹிந்த?

பொதுத் தேர்தலுக்குப் பின்னர் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையை ஏற்றுக்கொள்வார் என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். கட்சியின் தற்போதைய தலைவர், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பதவியில் இருந்து விலகுவார் என்று எதிர்பார்க்கப்பட்டுள்ள நிலையில் அமைச்சர் நேற்று ...

மேலும்..

அரசியலமைப்பினை திருத்துவதற்காக நிபந்தனைகளுக்கு அடிபணியமாட்டோம் – நாமல்

அரசியலமைப்பில் திருத்தம் மேற்கொள்வதற்காக அரசியல்வாதிகளிடம் அடிபணிய வேண்டிய அவசியம் கிடையாமென முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நாட்டின் அரசியல் நிலைமைகள் தொடர்பாக கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக நாமல் ராஜபக்ஷ மேலும் கூறியுள்ளதாவது, “நாங்கள் ஒருபோதும் தீவிரவாதம் ...

மேலும்..

கொரோனாவின் இரண்டாம் அலை ஆரம்பமாகிவிட்டது: அரசாங்கம் மறைக்கின்றது- ரணில்

நாட்டில் கொரோனாவின் இரண்டாம் அலை ஆரம்பமாகி விட்டதென ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். மேலும் கொரோனா வைரஸினால் ஏற்பட்டுள்ள உண்மையான தாக்கம் குறித்த தகவல்களை அரசாங்கம் மறைப்பதாக சந்தேகம் எழுந்துள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக ரணில் விக்ரமசிங்க, தனது ...

மேலும்..

அரசாங்கம் மக்களை வறுமையை நோக்கித் தள்ளுகிறது – சஜித் குற்றச்சாட்டு

தற்போதைய அரசாங்கம் மக்களின் வாழ்வாதாரத்தை முன்னேறுவதற்கு பதிலாக அவர்களை வறுமையை நோக்கித் தள்ள முயற்சிப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம்சாட்டியுள்ளார். ரம்புக்கன பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்துள்ள அவர், பொதுத் தேர்தலுக்கு பின்னர் மக்களுக்கான ...

மேலும்..

அநுராதபுரத்தில் மற்றுமொரு கொரோனா தொற்றாளர்: சுய தனிமைப்படுத்தலில் 100 பேர்

அநுராதபுரம்- கல்கிரியாகம, இரணவ பிரதேசத்தில் மற்றுமொரு கொரோனா தொற்றாளர்  அடையாளம் காணப்பட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து அவருடன் தொடர்பினை பேணிய 100பேரை, சுகாதார தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இரணவ பிரதேசத்தை சேர்ந்தவர்கள் மற்றும் அரச சேவையாளர்கள் சிலரையே இவ்வாறு சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்த ...

மேலும்..

மட்டக்களப்பில் சட்ட விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்ட 35 பேர் கைது!

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த நான்கு தினங்களில் மட்டக்களப்பு மாவட்ட மதுவரித்திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின்போது சட்ட விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்ட 35 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் பெருமளவு போதைப்பொருட்களும் மீட்கப்பட்டுள்ளதாக மாவட்ட மதுவரித்திணைக்களம் தெரிவித்தது. மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக மட்டக்களப்பு மாவட்ட ...

மேலும்..

சர்வதேச அமைப்புக்களிடமிருந்து கிடைக்கப் பெற்ற நிதிக்கு என்ன நடந்தது: அரசாங்கத்திடம் ரணில் கேள்வி

உலக சுகாதார ஸ்தாபனம் உள்ளிட்ட சர்வதேச அமைப்புக்களிடமிருந்து இலங்கைக்கு கிடைக்கப் பெற்ற நிதிக்கு என்ன நடந்தது என ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க கேள்வி எழுப்பியுள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டிருந்த அவர், கொரேனாவைக் கட்டுப்படுத்த அரசாங்கத்திடம் ...

மேலும்..

பெப்ரவரி மாத மின் கட்டணமே அடுத்த மூன்று மாதங்களுக்கு அறவிடப்படும் – அமைச்சு அதிரடி அறிவிப்பு

பெப்ரவரி மாத மின் பட்டியல் கட்டணமே அடுத்து வரும் மூன்று மாதங்களுக்கு அறவிடப்படும் என்று மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் மார்ச் நடுப்பகுதி முதல் நாட்டில் ஊரடங்கு உள்ளிட்ட கட்டுபாடுகளால் மார்ச், ஏப்ரல் மற்றும் ...

மேலும்..

ரணிலின் குற்றச்சாட்டுக்கு சுகாதார அமைச்சர் பதில்

ஐரோப்பிய ஒன்றியத்திடமிருந்து இலங்கைக்கு ஒரு ரூபாய் கூட பணம் கிடைக்கவில்லை என பலமுறை கூறிவிட்டோம். ஆனால் ரணில் மீண்டும் இது தொடர்பாகவே எம்மிடம் கேள்வி எழுப்புகிறார் என சுகாதார அமைச்சர் பவித்ரா  வன்னியாராச்சி தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள விசேட காணொளியிலேயே ...

மேலும்..

யாழ்.மாவட்ட வேட்பாளர் மாரடைப்பால் மரணம்

யாழ்ப்பாணத்தில் விடுதலைப்புலிகள் மக்கள் பேரவை சார்பாக பொதுத்தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர் ஒருவர், மாரடைப்பால் இன்று (புதன்கிழமை) உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவத்தில் யாழ்பாணத்தை சேர்ந்த அகஸ்தீன் மக்டொனால்ட் (வயது 58) என்பவரே உயிரிழந்துள்ளார். தேர்தலிற்கான பிரசார நடவடிக்கைகளை முன்னெடுத்துவந்த நிலையிலேயே,  இன்று காலை அவரது வீட்டில் மாரடைப்பினால்  ...

மேலும்..

மாலைத்தீவில் தங்கியிருந்த 177 இலங்கையர்கள் நாட்டை வந்தடைந்தனர்

மாலைத்தீவில் தங்கியிருந்த 177 இலங்கையர்கள், மத்தல விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர். ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான விமானத்தில், இன்று (புதன்கிழமை) பிற்பகல் 3.10 மணியளவில் அவர்கள் நாட்டை வந்தடைந்துள்ளனர். குறித்த 117 இலங்கையர்களும், மாலைத்தீவிலுள்ள  சுற்றுலா விடுதிகளில் பணியாற்றிய ஊழியர்கள என தெரிவிக்கப்படுகின்றது. குறித்த அனைவருக்கும் ...

மேலும்..

பொதுத்தேர்தலை இரண்டு வருடங்களுக்கு ஒத்திவைக்கவா சஜித் முற்படுகிறார்: உதயகம்மன்பில கேள்வி

கொரோனா வைரஸின் தாக்கம் இரண்டு வருடங்களுக்கு இருக்கும் என்று எச்சரிக்கப்பட்டுள்ள நிலையில், பொதுத்தேர்தலை இரண்டு வருடங்களுக்கு ஒத்திவைக்கவா சஜித் பிரேமதாச முற்படுகிறார் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதயகம்மன்பில கேள்வி எழுப்பியுள்ளார். கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். உதயகம்மன்பில ...

மேலும்..

வடக்கு முஸ்லிம்களின் ஆதரவு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முஸ்லிம் ஆதரவாளர் வட்டத்தினால் இன்று (15.07.2020) யாழ் ஊடக மன்றத்தில் நடாத்தப்பட்ட ஊடகவியலாளர் மாநாட்டின் போது அதன் ஒருங்கிணைப்பாளர் செல்வன் என்.எம். அப்துல்லாஹ் அவர்களின் பிரகடனத்திலே மேற்குறிப்பிட்டுள்ளவாறு குறிப்பிடப்பட்டது. அவர் அங்கு மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, 2020 பாராளுமன்றத் தேர்தலில் வடக்கு ...

மேலும்..