July 17, 2020 அன்று பிரசுரிக்கப்பட்டவை

வவுனியாவில் இளைஞனை தாக்கியது பொலீஸ் பதற்றத்தில் ஈடுபட்ட மக்களுடன் சாள்ஸ் உரையாடல்

வவுனியா ஈச்சங்குளம் பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி இளைஞர்கள் இருவரை தாக்கியதால் அப்பகுதியில் குழப்பமான நிலைமை ஏற்பட்டிருந்தது. இந்தச் சம்பவம் நேற்று (வெள்ளிக்கிழமை) மாலை ஈச்சங்குளம் பிள்ளையார் ஆலயத்திற்கு முன்பாக இடம்பெற்றது. இதுகுறித்து, பாதிக்கப்பட்ட இளைஞர்கள் தெரிவிக்கையில், “இன்று மாலை குறித்த பகுதியில் நின்றிருந்த சமயம் ...

மேலும்..

சர்வதேசப் பொறியிலிருந்து படையினரை மீட்டது ஐ.தே.க. – மஹிந்த அணிக்கு விஜேவர்தன பதிலடி

"சர்வதேச அழுத்தங்களிலிருந்து படையினரை ஐக்கிய தேசியக் கட்சி அரசே பாதுகாத்தது. எமது புலனாய்வுப் பிரிவு பலவீனப்படுத்தப்படவில்லை." - இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளரும் முன்னாள் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சருமான ருவான் விஜேவர்தன தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது:- "புலனாய்வுத் துறையினரை வேட்டையாடுவதற்கோ, புலனாய்வுக் கட்டமைப்பைப் ...

மேலும்..

கூட்டமைப்பைவிட்டு வெளியேறியோர் வென்றார்கள் என்ற சரித்திரம் இல்லை – முன்னாள் எம்.பி. சரவணபவன் தெரிவிப்பு

"தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒரு கூடு. இந்தக் கூட்டை எவராலும் உடைக்கவோ அழிக்கவோ முடியாது. அழிக்க முற்பட்டவர்கள் எல்லோரும் அழிந்துபோனமையே வரலாறு." - இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்ப்பாணம் - கிளிநொச்சி தேர்தல் மாவட்ட வேட்பாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஈஸ்வரபாதம் ...

மேலும்..

கூட்டமைப்பின் பூநகரிக் கூட்டத்தில் அலைகடலெனத் திரண்டனர் மக்கள்!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பிரசாரக் கூட்டம் இன்று பூநகரியில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பெருந்திரளான மக்கள் திரண்டிருந்தனர். மாலை 5 மணிக்கு பூநகரி பிரதேச சபையின் உறுப்பினர் ஜெயக்காந்தன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் சிறப்புரைகளை கூட்டமைப்பின் யாழ்ப்பாணம் - கிளிநொச்சி ...

மேலும்..

பொதுமன்னிப்பு வழங்கப்பட்ட மிருசுவில் படுகொலை குற்றவாளிக்கு எதிரான வழக்குகள் ஒத்திவைப்பு!

ஜனாதிபதியால் பொது மன்னிப்பு வழங்கப்பட்ட மிருசுவில் கொலை வழக்கு குற்றவாளியான சார்ஜன்ட் சுனில் ரத்னாயக்கவிற்கு எதிராகத் தொடரப்பட்ட நான்கு வழக்குகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. உயர் நீதிமன்றத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட குறித்த வழக்குகளை எதிர்வரும் செப்ரெம்பர் 24ஆம் திகதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர். குற்றவாளிக்கு பொதுமன்னிப்பளிக்கும் ...

மேலும்..

சவால்கள் அனைத்தையும் சிறந்த முறையில் வெற்றிகொள்வேன்- ஜனாதிபதி

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அதிகரித்துள்ள பல மடங்குகளான சவால்களையும் சிறந்த முறையில் வெற்றிகொள்வேன் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் அதிகரித்துள்ளமை தொடர்பாக கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக ஜனாதிபதி மேலும் கூறியுள்ளதாவது, ...

மேலும்..

தனிமைப்படுத்தலுக்கான அறிவுறுத்தலை நிராகரித்து பொதுஜன பெரமுன வேட்பாளர்கள் தேர்தல் பிரசாரம்

பொதுஜன பெரமுனவின் வேட்பாளர்களான அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன மற்றும் முன்னாள் அமைச்சர் துமிந்த திஸாநாயக்க ஆகியோரை சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்திக்கொள்ளுமாறு அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர்கள் இருவரும், ராஜாங்கன பகுதியில் இனங்காணப்பட்ட முதலாவது கொரோனா நோயாளி கலந்துகொண்ட மரணச் சடங்கு ஒன்றில் கலந்துக்கொண்டுள்ளனர். இதனால், ...

மேலும்..

யாழில் வீதிகளில் பயணிக்கும் பெண்களுக்கு பொலிஸாரின் அறிவிப்பு!

ழ்ப்பாணத்தில் வீதிகளில் பயணிக்கும் பெண்கள் தங்க நகைகளை அதிகளவில் அணிந்து செல்வதை தவிர்க்குமாறு யாழ்.  மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவு பொலிஸ் பொறுப்பதிகாரி நிகால் பிரான்சிஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். யாழ்ப்பாணத்தில் பல்வேறு கொள்ளை மற்றும் திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபரை கைது ...

மேலும்..

தமிழ் ஊடகவியலாளர் சங்கத்தினால் யாழில் கொவிட்-19 விழிப்புணர்வு!

நாட்டில் கொவிட்-19 வைரஸ் அச்சுறுத்தல் மீண்டும் ஏற்பட்டு வருகின்ற நிலையில் அதனை வடமாகாணத்தில்  கட்டுப்படுத்தும் நோக்குடன், நோய் தொடர்பான விழிப்புணர்வு செயற்றிட்டம் ஒன்று வவுனியா தமிழ் ஊடகவியலாளர் சங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. வவுனியா தமிழ் ஊடகவியலாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் “இலண்டன் என்பீல்ட் நாகபூசணி” ...

மேலும்..

ஒன்றரை வயது குழந்தை துஷ்பிரயோகம் செய்யப்பட்டு கொலை: விசேட விசாரணை முன்னெடுப்பு

நீர்கொழும்பு, பெரியமுல்ல பகுதியில் ஒன்றரை வயது பெண் குழந்தை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட கோரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. பெரியமுல்ல பகுதியில் உள்ள பாலமொன்றிற்கு அருகில் கடந்த 13ஆம் திகதி குழந்தை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். துஷ்பிரயோகம் சம்பவத்தில் குழந்தையின் தலை, பாலத்தின் ...

மேலும்..

கொரோனா அச்சம் – 30 பொலிஸார் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்!

ஹோமாகம – நுகேகொட நான்காம் பொலிஸ் பிரிவைச் சேர்ந்த 30 இற்கும் மேற்பட்ட பொலிஸார் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். குறித்த பொலிஸ் பிரிவில் பெண் சார்ஜண்ட் ஒருவருக்கு  கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்தே பொலிஸார் இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஒன்பது பொலிஸ் அதிகாரிகளும், நான்கு சிவில் பாதுகாப்பு ...

மேலும்..

பதவி விலகினார் சட்ட முதுநிலை விரிவுரையாளர் குருபரன்!

கலாநிதி. குமாரவடிவேல் குருபரன் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் சட்ட முதுநிலை விரிவுரையாளர் பதவியில் இருந்து விலகுவதற்கான இராஜினாமா கடிதத்தை இன்று (வெள்ளிக்கிழமை) பல்கலைக்கழகத்தின் தகுதிவாய்ந்த அதிகாரிக்கு, கலைப் பீடாதிபதி மற்றும் சட்டத்துறைத் தலைவர் ஊடாக அனுப்பி வைத்திருக்கிறார். தான் பதவி விலகுவதற்கான காரணமாக பல்கலைக்கழக ...

மேலும்..

சுகாதார வழிகாட்டல்களுக்கு சட்டமா அதிபர் அனுமதி!

பொதுத் தேர்தலுடன் தொடர்புடையதாக சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்ட சுகாதார வழிகாட்டல்களுக்கு சட்டமா அதிபர் அனுமதி வழங்கியுள்ளார். சட்டமா அதிபரின் ஒருங்கிணைப்பு அதிகாரி அரச சட்டத்தரணி நிஷார ஜயவர்தன இதனைத் தெரிவித்துள்ளார். சுகாதார அமைச்சின் செயலாளரால் பொதுத் தேர்தல் தொடர்பில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள சுகாதார வழிகாட்டுதல்களில் தேர்தல் ...

மேலும்..

யாழில் கொள்ளையன் கைக்குண்டுடன் கைது

யாழ்ப்பாணத்தில் பல்வேறு கொள்ளை மற்றும் திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர், ஒருவரை கொலை செய்யும் திட்டத்துடன் பயணித்த போது கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபரிடமிருந்து வெளிநாட்டு தயாரிப்பிலான கைக்குண்டு ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது. யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவினரால் இந்த கைது ...

மேலும்..

கொரோனா தொற்றிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு!

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்த மேலும் ஐவர் இன்று(வெள்ளிக்கிழமை) குணமடைந்துள்ளனர். இதற்கமைய இதுவரையில் மொத்தமாக இரண்டாயிரத்து 12 கொரோனா தொற்றாளர்கள் குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இதேவேளை, இதுவரையில் இரண்டாயிரத்து 687 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், 11 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும்..

வாக்களிப்பதற்கு விடுமுறை வழங்க மறுக்கும் நிறுவனங்கள் தொடர்பாக முறையிடுங்கள் – கஃபே

வாக்களிப்பதற்கு தனியார் நிறுவனங்களிடமிருந்து விடுமுறை பெறுவதில் ஏதேனும் பிரச்சினைகள் இருந்தால் தம்மிடம் முறைப்பாடு செய்யுமாறு மக்களிடம் கஃபே அமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது. கஃபே அமைப்பின் முறைப்பாட்டு பிரிவு, குறித்த முறைப்பாடுகளை ஏற்குமென அதன் நிறைவேற்றுப் பணிப்பாளர் அஹமட் மனாஸ் மக்கீன் இன்று (வெள்ளிக்கிழமை) அறிவித்துள்ளார். அத்தோடு, ...

மேலும்..

கொரோனா தொற்று ஒழிப்பு நடவடிக்கைகளில் இருந்து பொது சுகாதாரப் பரிசோதகர்கள் விலகல்!

கொரோனா தொற்று ஒழிப்பு தொடர்பான அனைத்து நடவடிக்கைகளில்  இருந்தும் விலகுவதாக பொது சுகாதாரப் பரிசோதகர்கள் சங்கம் அறிவித்துள்ளது. சுகாதார வழிகாட்டல் அடங்கிய வர்த்தமானி ஒன்று இன்னும் சில தினங்களில் வெளியப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்ட நிலையில் குறித்த வர்தமானில் தங்களுக்கு உரிய அதிகாரம் வழங்கப்படாமையினால் இந்த ...

மேலும்..

தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்காக ரணில் யாழிற்கு விஜயம்!

தேர்தல் பிரசார கூட்டத்தில் பங்கேற்பதற்காக ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யவுள்ளார். எதிர்வரும் 23ஆம் திகதி வியாழக்கிழமை அவர் அங்கு விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்போது அவர், யாழ்ப்பாணத்தில் ஐக்கிய தேசிய கட்சி சார்பில் போட்டியிடும் விஜயகலா மகேஸ்வரனுக்கு ...

மேலும்..

O/L மீள் திருத்த விண்ணப்பங்களை விண்ணப்பிக்கும் கால எல்லை நீடிப்பு

2019-ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் மீள் திருத்த விண்ணங்களை விண்ணப்பிக்கும் கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளது. பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் நாயகம் சனத் பூஜித இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். இதற்கமைய குறித்த விண்ணப்பங்களை எதிர்வரும் 31 ஆம் திகதி வரை ...

மேலும்..

ஜுலை, ஓகஸ்ட்டில் நடத்த தீர்மானிக்கப்பட்டிருந்த பரீட்சைகள் பிற்போடப்பட்டுள்ளதாக அறிவிப்பு!

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஜுலை மற்றும் ஓகஸ்ட் மாதங்களில் ஆரம்பித்து நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்த பரீட்சைகள் சில பிற்போடப்பட்டுள்ளன. பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் நாயகம் சனத் பூஜித இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். இதற்கமைய இலங்கை தொழில்நுட்ப சேவையின் மோட்டார் வாகன பரிசோதகர்களுக்கான தடைதாண்டல் பரீட்சை ...

மேலும்..

வடக்கிற்கான ரயில் சேவையில் பாதிப்பு!

வடக்கிற்கான ரயில் சேவை தற்காலிகமாக பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது. செனரத்கம பகுதியில் ரயில் ஒன்று தடம் புரண்டுள்ளது. இதன் காரணமாகவே இவ்வாறு வடக்கிற்கான ரயில் சேவை தற்காலிகமாக பாதிக்கப்பட்டுள்ளது

மேலும்..

பொதுஜன பெரமுனவே புதிய அரசாங்கத்தில் பலமான ஆட்சியை அமைக்கும் – ரொஷான் ரணசிங்க

பொதுஜன பெரமுனவே புதிய அரசாங்கத்தில் பலமான ஆட்சியை அமைக்கும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார். பொலநறுவையில் இடம்பெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள ...

மேலும்..

இலங்கையில் மனித உரிமைகள் விடயத்தில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது- பிரிட்டன்

இலங்கையில் மனித உரிமைகள் விடயத்தில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக பிரிட்டனின் வெளிவிவகார அமைச்சர் டொமினிக் ரப் கவலை வெளியிட்டுள்ளார். பிரிட்டனின் வெளிவிவகார அமைச்சர் டொமினிக் ரப், மனித உரிமைகள் மற்றும் ஜனநாயகம்  தொடர்பாக நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ள அறிக்கையிலேயே இலங்கையின் தற்போதைய நிலைமைகள் தொடர்பாக ...

மேலும்..

மழையுடனான வானிலை நிலவக்கூடும் என எதிர்வு கூறல்!

நாட்டின் சில பகுதிகளில் மழையுடனான வானிலை நிலவக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “மேல், சப்ரகமுவ, தென் மற்றும் மத்திய மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வடமேல் மாகாணத்தில் பல தடவைகள் ...

மேலும்..

வாக்காளர் அட்டை விநியோகம் குறித்து தபால் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு!

வாக்காளர் அட்டைகள்  பொறுப்பேற்கும் சந்தர்ப்பத்தில் கையொப்பமிடுவதற்காக பிரத்தியேக  பேனைகளை பயன்படுத்துமாறு தபால் திணைக்களம்  பொதுமக்களிடம் வேண்டு கோள்விடுத்துள்ளது. இதேவேளை சுய தனிமைப்படுத்தல் செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளவர்களின் வீடுகளுக்கு  உத்தியோகப்பூர்வ வாக்களாளர் அட்டைகளை விநியோகிக்கும் செயற்பாடு  தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது. சுகாதார ஆலோசனைகளுக்கமைய இந்த ...

மேலும்..

வெல்லாவெளியில் மர்மமான முறையில் யானை உயிரிழப்பு!

மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட விவேகானந்தபுரம் பகுதியில் உயிரிழந்துள்ளது. விவேகானந்தபுரம் தளவாய்கல் குளம் பகுதியிலேயே இன்று (வெள்ளிக்கிழமை) காலை  குறித்த யானை உயிரிழந்த நிலையில்  காணப்பட்டதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர். குறித்த பகுதியில் போரதீவுப்பற்று பிரதேசசபையின் குப்பைகொட்டும் இடமுள்ளதாகவும் அங்குவந்த யானையே இவ்வாறு ...

மேலும்..

கொழும்பின் பல பகுதிகளில் நாளை நீர் வெட்டு!

நீர் வழங்கும் குழாய்களில் மேற்கொள்ள உள்ள திருத்தப் பணிகள் காரணமாக  கொழும்பின் பல பகுதிகளில் நாளை (சனிக்கிழமை) 10 மணிநேர நீர் விநியோகத்தடை  அமுல்ப்படுத்தப்பட உள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. இதற்கமைய, நாளை 18 ஆம் திகதி இரவு ...

மேலும்..

பொதுமக்கள் மேற்கொண்ட தாக்குதலில் 8 பொலிஸார் காயம்- அங்குலானையில் சம்பவம்

அங்குலானை பகுதியிலுள்ள பொலிஸ் நிலையத்தின் மீது மக்கள் மேற்கொண்ட தாக்குதலில் 8 பொலிஸார் காயமடைந்துள்ளனர். நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்பில் 9 பெண்கள் உட்பட 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த 14 பேரையும் பொதுச்சொத்துக்கு சேதம் விளைவித்த குற்றச்சாட்டிலேயே  கைது ...

மேலும்..

கந்தகாடு கைதிகளை பார்வையிட வந்தவர்களுக்கு தொற்றில்லை!

கந்தகாடு கைதிகளை பார்வையிட வந்த உறவினர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்வில்லை என தெரிவிக்கப்படுகின்றது. இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். இதற்கமைய கந்தகாடு புனர்வாழ்வு மத்திய நிலையத்திற்கு கைதிகளை பார்வையிட வந்த அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் 114 பேர் ...

மேலும்..

வாழைச்சேனையில் கொள்ளையர்கள் மீது தாக்குதல் – ஒருவர் உயிரிழப்பு!

மட்டக்களப்பு வாழைச்சேனை பிரதேசத்தில் வீடு ஒன்றில் கொள்ளையிடச் சென்று வீட்டின் உரிமையாளரை தாக்கி கொள்ளையிட முற்பட்டபோது கொள்ளையர் மீது வீட்டு உரிமையாளர் நடத்திய தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் நேற்று (வியாழக்கிழமை)  இடம் பெற்றுள்ளதாக  வாழைச்சேனை  பொலிஸார் தெரிவித்தனர். வாழைச்சேனை  பாடசாலைவீதி மாவடிவேம்பு பிரதேசத்தைச் சேர்ந்த 48 வயதுடைய பரசுராமன் நவரட்ணம் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இந்த விடயம் ...

மேலும்..

தேர்தல் முடியும் வரை பாடசாலைகளை மூட தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தகவல்!

பொதுத் தேர்தல் நிறைவடையும் வரை பாடசாலைகளை தொடர்ந்தும் மூடிவைத்திருப்பதற்கு தீர்மானிக்கப்பட்டிருப்பதாக ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. கொரோனா வைரஸிற்கு எதிரான தற்பாதுகாப்பு நடவடிக்கையாக பாடசாலைகளை தேர்தல் முடியும்வரை மீள ஆரம்பிப்பதில்லை என தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அந்த ஊடகம் குறிப்பிட்டுள்ளது. இதற்கமைய சுகாதார அமைச்சு ஓகஸ்ட் ...

மேலும்..

நிந்தவூரில் இரண்டு கொரோனா நோயாளர் அடையாளம் காணப்பட்டதாக வெளியான தகவல் போலியானது!

கொரோனா வைரஸ் தாக்கத்தினால் இருவர் நிந்தவூர் பகுதியில் அடையாளம் காணப்பட்டதாக பரப்பப்படும் விடயம் ஒரு வதந்தி என கல்முனை பிராந்திய சுகாதார சேவை பணிமனையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஜி.சுகுணன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர், ‘அண்மைக்காலமாக நாட்டில் கொரோனா அனர்த்தத்தின் ...

மேலும்..

தமிழில் பற்று சீட்டு பெற 30 நிமிடங்கள் யாழில் காத்திருந்த இளைஞன்!

யாழ்.பிரதான  தபால் நிலையத்தில் பற்று சீட்டை தமிழ் எழுதி தர கூறி இளைஞர் ஒருவர் சுமார் 30 நிமிடங்கள் காத்திருந்து, தமிழ் எழுதி வாங்கி சென்றுள்ளார். யாழ்.பிரதான தபாலகத்தில் நேற்று முந்தினம் புதன்கிழமை நடைபெற்ற இச் சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, போக்குவரத்து குற்றம் ஒன்றுக்காக ...

மேலும்..

இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

கொரோனா வைரஸ் தொற்றினால் இதுவரை 2,687 பேர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனனர். நேற்று (வியாழக்கிழமை) மாத்திரம் 13பேர், கொரோனா வைரஸ் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதில் கந்தகாடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் கொரோனா வைரஸ்  தொற்றுக்கு உள்ளானவர்களுடன்  நெருங்கிய தொடர்பினை பேணியவர்கள் ...

மேலும்..

மண்டைதீவில் 111 கிலோ கஞ்சா மீட்பு – இருவர் கைது

யாழ்ப்பாணம் மண்டைதீவு கடற்பகுதியில் கஞ்சா போதைப்பொருளை கடத்திய குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்களிடம் இருந்து 111 கிலோ கஞ்சா போதைப் பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்தனர். இந்த சம்பவம் நேற்று(வியாழக்கிழமை) இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, மண்டைதீவு கடற்பரப்பில் சந்தேகத்திற்கிடமாக சென்ற ...

மேலும்..

பொதுத்தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பின் ஐந்தாம் நாள் இன்று

பொதுத்தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பின் ஐந்தாம் நாள் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 9 மணிக்கு ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது. இன்று நடைபெறுகின்ற தபால் மூல வாக்களிப்பில் சுகாதார சேவைகள் துறை,  அனைத்து மாவட்ட செயலக அலுவலகங்கள், பொலிஸ் நிலையங்கள், பாதுகாப்புப் படைகள், சிவில் ...

மேலும்..

கிழக்கு மாகாணத்தின் செயற்திறன் மிக்க MPயாக ஸ்ரீநேசன் தெரிவு

லங்கை நாடாளுமன்றத்தில் செயற்திறன் மிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இலங்கையின் எட்டாவது நாடாளுமன்றத்தை பிரதிநித்துவப்படுத்திவரும் பாராளுமன்ற உறுப்பினர்களின் செயற்பாடுகளை அவதானித்து அதில் பொதுமக்களுக்கு வினைத்திரனான சேவைகளை ஆற்றிய ...

மேலும்..

தமிழ் மக்களால் கட்டியெழுப்பப்பட்ட கூட்டமைப்பு சுயநலவாதக் கும்பல்களால் சிதைந்துவிடக்கூடாது – முன்னாள் எம்.பி. சரவணபவன் வலியுறுத்து

"தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எனக்கோ அல்லது தனிப்பட்ட ஒருவருக்கோ சொந்தமானது அல்ல. தியாக சிந்தையுடன் தமிழ மக்களால் கட்டியெழுப்பப்பட்ட கட்சி. இது சுயநலவாதக் கும்பல்களால் சிதைந்துவிடக் கூடாது." - இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் யாழ்ப்பாணம் - கிளிநொச்சி ...

மேலும்..

பொதுத்தேர்தல்: ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகள் குழு இன்று வருகை

பொதுத்தேர்ததலைக் கண்காணிக்கும் நடவடிக்கைகளுக்காக ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று இன்று (வெள்ளிக்கிழமை) நாட்டை வந்தடையவுள்ளது. கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக இவ்வாறு வருகைத்தரவுள்ள அனைவரும் தனிமைப்படுத்தப்படலுக்கு உட்படுத்தப்படவுள்ளனர். நாட்டில் எதிர்வரும் 5 ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத்தேர்தலை கண்காணிப்பதற்கு வருகை தரவுள்ள வெளிநாட்டு கண்காணிப்பாளர்கள் ...

மேலும்..