July 22, 2020 அன்று பிரசுரிக்கப்பட்டவை

சம்பந்தரைச் சந்தித்தனர் ஜனநாயகப் போராளிகள்!

னநாயகப் போராளிகள் கட்சியானது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு ஆதரவு வழங்குவதற்கு இணந்துள்ள தருணத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் அவர்களுடனான விசேட சந்திப்பொன்று இன்றைய தினம் திருகோணமலையிலுள்ள அவரது இல்லத்தில் இடம்பெற்றது. இச்சந்திப்பில் ஜனநாயகப் போராளிகள் கட்சியின் சார்பில் தலைவர் சி.வேந்தன், ...

மேலும்..

உரிமையை விடுத்து அபிவிருத்திக்கு என்றும் நாம் தயாரில்லை – சம்பந்தன்

உரிமையை விட்டுக் கொடுத்து அபிவிருத்தியைச் செய்வதற்கு நாங்கள் தயாராக இல்லை. அடிபணிந்து அபிவிருத்தி என்பது எம்மிடம் செல்லாது. உரிமையுடனான அபிவிருத்தி எனின் அதற்கு நாங்கள் எப்போதும் தயாராக இருக்கின்றோம் என தமிழ்த் தேசியக் கூட்டடைப்பின் தலைவரும், திருகோணமலை மாவட்ட முதன்மை வேட்பாளருமாகிய ...

மேலும்..

இறுதிக் கட்டத்தின்போதும் விடுதலைப் புலிகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தொடர்பில் எதிர்மறையான கருத்தைச் சொல்லவில்லை… (ஜனநாயகப் போராளிகள் கட்சியின் ஊடகப் பேச்சாளர் – க.துளசி

யுத்தம் மௌனிக்கின்ற தருவாயில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் விடுதலைப் புலிகள் அமைப்பானது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தொடர்பில் எதிர்மறையான செய்தியினைத் தெரிவிக்கவில்லை. ஆயுதம் மெளிக்கப்பட்டதற்குப் பின்பும் தமிழ் மக்களின் அரசியல் பலம் பெற்றிருக்க வேண்டும் என்பதே அதன் நிலைப்பாடு என ஜனநாயகப் போராளிகள் ...

மேலும்..

அரசவை கட்டடம் தகர்ப்பு – இடைக்கால அறிக்கை பிரதமரிடம் கையளிப்பு

குருநாகல் புவனேக ஹோட்டல் நடத்தப்பட்டுவந்த கட்டடம் சேதமாக்கப்பட்டமை தொடர்பான இடைக்கால அறிக்கை இன்று(புதன்கிழமை) முற்பகல் அலரி மாளிகையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்டது. பிரதமரின் ஆலோசனைகளுக்கு அமைய புத்தசாசன மற்றும் கலாசார விவகாரங்களுக்கான செயலாளரினால் இந்த குழு நியமிக்கப்பட்டது. தொல்பொருள் திணைக்கள பணிப்பாளர் நாயகம் ...

மேலும்..

தனிமைப்படுத்தலில் உள்ளவர்கள் வாக்களிக்கும் திகதி அறிவிப்பு!

கொரோனா வைரஸ் தொற்று அச்சம் காரணமாக தனிமைப்படுத்தல் நிலையங்களில் தனிமைப்படுத்தலில் உள்ளவர்கள் எதிர்வரும் ஜுலை 31ஆம் திகதி வாக்களிப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன்படி, குறித்த நிலையங்களில் உள்ளவர்கள் அந்தந்த தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருந்தே வாக்களிக்க முடியும் என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த ...

மேலும்..

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை இரண்டாயிரத்து 731ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. கந்தக்காடு புனர்வாழ்வு மையத்தில் வைரஸ் தொற்று கண்டறியப்பட்டவருடன் நெருங்கிய தொடர்பினைப் பேணிய ஒருவருக்கு இன்று தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில் இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. நுரைச்சோலையில் உள்ள தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்தில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்த ...

மேலும்..

பாலித தெவரப்பெரும மீது தாக்குதல்!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாலித தெவரப்பெரும தாக்குதலுக்கு உள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவர்மீது, மத்துகம-வெல்கந்த பகுதியில் வைத்து இனந்தெரியாதோரால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், காயமடைந்த பாலித தெவரப்பெரும நாகொட வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலும்..

வாக்காளர் அட்டைகள் விநியோகம் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது – தபால் திணைக்களம்!

பொதுத் தேர்தலுக்கான வாக்காளர் அட்டைகள் சுமார் 60 வீதம் விநியோகிக்கப்பட்டுள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் எஞ்சியுள்ள வாக்காளர் அட்டைகளை விநியோகம் செய்யும் நடவடிக்கள் எதிர்வரும் நாட்களில் நிறைவடையும் என தபால் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது. இதேவேளை, பொதுத் தேர்தல் தொடர்பில் 4 ...

மேலும்..

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனம் “என் கனவு யாழ்” வெளியீடு!

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ். தேர்தல் மாவட்டத்திற்கான தேர்தல் விஞ்ஞாபனம் “என் கனவு யாழ்” செயல்திட்ட வரைவாக இன்றைய தினம் வெளியிடப்பட்டது. குறித்த நிகழ்வு முன்னாள் விவசாய பிரதி அமைச்சரும், ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ் மாவட்ட முதன்மை வேட்பாளருமாகிய அங்கஜன் இராமநாதன் ...

மேலும்..

ஒமந்தையில் ஒரு தொகுதி வெடிபொருட்கள் மீட்பு!

வவுனியா  ஒமந்தை, குஞ்சுக்குளம் கிணறு ஒன்றில் இருந்து 14 மோட்டர் ஷெல்கள் மீட்கப்பட்டுள்ளதாக ஒமந்தை பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்று (புதன்கிழமை) மதியம் விசேட அதிரடிப் படையினர் மற்றும் ஓமந்தை பொலிசார் இணைந்து மேற்கொண்ட சோதனை நடவடிக்கையிலேயே குறித்த மோட்டர் ஷெல்கள் மீட்கப்பட்டுள்ளன. குஞ்சுக்குளம் பகுதியை ...

மேலும்..

கந்தகாடு தனிமைப்படுத்தல் மையத்தில் மோதல் – ஐவர் படுகாயம்!

கந்தகாடு தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்தில் இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் ஐவர் காயமடைந்துள்ளனர். இன்று (புதன்கிழமை) அதிகாலையி​ல் குறித்த நிலையத்தில் அனுமதிக்கப்பட்டவர்களே இவ்வாறு மோதலில் ஈடுபட்டுள்ளதாக வெலிக்கந்த பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவர்கள், கந்தகாடு, சேனபுர ஆகிய மத்திய நிலையங்களில் போதை புனர்வாழ்வு ​நிலையத்தில் கொ​ரோனா ...

மேலும்..

நாட்டில் இதுவரையான காலப்பகுதியில் ஒரு இலட்சத்து 41 ஆயிரத்து 515 PCR பரிசோதனை!

நாட்டில் இதுவரையான காலப்பகுதியில் ஒரு இலட்சத்து 41 ஆயிரத்து 515 PCR பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. நேற்று(செவ்வாய்கிழமை) மாத்திரம்  ஆயிரத்து 100  PCR பரிசோதனைகள்  மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும்..

உயர் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு சம்பிக்கவிற்கு அழைப்பாணை!

கொழும்பு உயர் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவிற்கு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது. 2016ஆம் இடம்பெற்ற விபத்து சம்பவம் தொடர்பிலேயே அவரை ஒக்டோபர் மாதம் 20 ஆம் திகதிக்கு முன்னர் நீதிமன்றில் ஆஜராகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது. சட்டமா அதிபரினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள ...

மேலும்..

க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன!

க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 31ஆம் திகதிக்கு முன்னர் விண்ணப்பங்களை அனுப்பி வைக்குமாறு பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. தனிப்பட்ட பரீட்சார்த்திகள் இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் இணையத்தளம் ஊடாக விண்ணப்பத்தினைப் பூரணப்படுத்த வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. பூரணப்படுத்தப்பட்ட விண்ணப்பங்களை பிடிஎப் ...

மேலும்..

ஆறு மாவட்டங்களை கேந்திரமாக கொண்டு விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்!

ஆறு மாவட்டங்களை கேந்திரமாக கொண்டு விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது. நாளை (செவ்வாய்கிழமை) இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் பணிப்பாளர், விசேட வைத்திய நிபுணர் அருண ஜயசேகர தெரிவித்துள்ளார். கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி, காலி மற்றும் இரத்தினபுரி ...

மேலும்..

மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள கைதிகளை விடுவிப்பது குறித்து இணக்கம்!

மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள கைதிகளை விடுவிப்பது குறித்து இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது. வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் ஊடகப்பேச்சாளர், பிரதி பொது முகாமையாளர் மங்கள ரந்தெனிய இதனைத் தெரிவித்துள்ளார். மத்திய கிழக்கு நாடுகளில் சிறை வைக்கப்பட்டுள்ள ஆயிரத்து 500 இற்கும் மேற்பட்ட கைதிகளை விடுதலை செய்வதற்கு ...

மேலும்..

விமல் வீரவன்ச தேர்தலில் போட்டியிடுவதற்கு தடை விதிக்கப்பட வேண்டும் – முஜிபுர் ரஹ்மான்!

விமல் வீரவன்ச தேர்தலில் போட்டியிடுவதற்கு தடை விதிக்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கொழும்பில் இன்று(புதன்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “வேட்பாளரோ அல்லது ...

மேலும்..

இலங்கை தமிழர் ஆசிரியர் சங்கம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ஆதரவு!

நடைபெறவுள்ள நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு தமது ஆதரவினை வழங்கவுள்ளதாக இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் அறிவித்துள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டுள்ளவர்களில் செயலாற்றல், ஆளுமை, மொழித்திறன் உள்ளவர்களைத் தெரிவு செய்யுமாறும் அச்சங்கம் மக்களைக் கேட்டக் கொண்டுள்ளது. இது தொடர்பாக ...

மேலும்..

கொரோனா தொற்றிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியிருந்த மேலும் 16 பேர் இன்று(புதன்கிழமை) குணமடைந்துள்ளனர். தேசிய தொற்றுநோய் பிரிவு இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளது. இந்நிலையில் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2064 பேராக அதிகரித்துள்ளது. இதுவரை இலங்கையில் 2,730 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளனர். அத்துடன், கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட 11 பேர் ...

மேலும்..

வடக்கு கிழக்கு தமிழ் மக்களுக்கு தமது பூர்வீகத்தைப் பாதுகாக்கும் வரலாற்றுக் கடமை உள்ளது- உதயகுமார்

வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் மக்களுக்கு தமது பூர்வீகத்தைப் பாதுகாக்கும் வரலாற்றுக் கடமை உள்ளது என கூட்டமைப்பு சார்பில் மட்டக்களப்பில் போட்டியிடும் வேட்பாளர் எம். உதயகுமார் தெரிவித்துள்ளார். தமிழ் மக்களின் இருப்பு பாதுகாக்கப்பட வேண்டுமாயின் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கரங்களை மக்கள் பலப்படுத்த ...

மேலும்..

கப்பலொன்றில் பணியாற்றுவதற்காக 28 கடற்படை ஊழியர்கள் நாட்டை வந்தடைந்தனர்!

கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டுள்ள கப்பலொன்றில் பணியாற்றுவதற்காக 28 கடற்படை ஊழியர்கள் நாட்டை வந்தடைந்துள்ளனர். கட்டாரிலிருந்து இன்று(புதன்கிழமை) அதிகாலை 1.30 அளவில் இவர்கள் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர். அத்துடன், அவர்கள் அனைவரும் கொழும்பிலுள்ள இரண்டு தனியார் வைத்தியசாலைகளில் பி.சி.ஆர் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். மேலும், ...

மேலும்..

கலாநிதி குருபரனின் பதவி விலகல் கல்வி சமுகத்திற்குப் பேரிழப்பாகும் – தமிழ் மக்கள் பேரவை

கலாநிதி குருபரன் அவர்களின்  பதவி விலகல் கல்வி சமுகத்திற்குப் பேரிழப்பாகும், பல்கலைக்கழக சமுகம், உரிய நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என  தமிழ் மக்கள் பேரவை கோரிக்கை விடுத்துள்ளது. தமிழ் மக்கள் பேரவை இன்று (புதன்கிழமை) வெளியிட்டுள்ள ஊடக அறிகையில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளது. குறித்த அறிகையில் மேலும், ...

மேலும்..

15 உள்நாட்டு நிறுவனங்களின் அனுமதிப் பத்திரங்கள் இரத்து!

15 உள்நாட்டு நிறுவனங்களின் அனுமதிப் பத்திரங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன. சூழல் பாதுகாப்பு சட்டங்களை மீறி கப்பல்களில் எரிந்த நிலையில் கழிவுகளாக எஞ்சியிருந்த எண்ணெய்யை கடலில் வீசிய குற்றச்சாட்டுக்கு அமையவே குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சமுத்திர சூழலியல் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது. கடற்படை, பொலிஸ் ...

மேலும்..

சுமந்திரனின் வாதத்தை அடுத்து விடுவிக்கப்பட்டார் கண்ணதாசன்!

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புக்கு கட்டாய ஆட்சேர்ப்பில் ஈடுபட்டார் என்ற குற்றத்துக்கு வவுனியா மேல் நீதிமன்றினால் ஆயுட்கால சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட யாழ். பல்கலைக்கழக முன்னாள் மிருதங்க விரிவுரையாளர் கண்ணதாசன், அந்தக் குற்றத்திலிருந்து விடுவிக்கப்பட்டதுடன் விடுதலை செய்யப்பட்டுள்ளார். கண்ணதாசனால் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டின் ...

மேலும்..

நாட்டில் வேலையற்றோர் வீதத்தில் அதிகரிப்பு

நாட்டில் வேலையற்றோர் வீதத்தில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. அரச புள்ளிவிபரவியல் திணைக்களம் இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளது. இதற்கமை ஆண்டின் முதலாவது காலாண்டில் இதுவரையான காலப்பகுதியில் சுமார் நான்கு இலட்சத்து 83 ஆயிரத்து 172 பேர் தொழிலை இழந்துள்ளனர். இது நூற்றுக்கு 5.7 வீதமாகும் என அரச புள்ளிவிபரவியல் ...

மேலும்..

தேர்தல் சட்டங்களை மீறுவோரின் பிரஜாவுரிமை இரத்து செய்யப்படலாம் என எச்சரிக்கை

தேர்தல் சட்டங்களை மீறுவோரின் பிரஜாவுரிமை இரத்து செய்யப்படலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய இந்த எச்சரிக்கையினை விடுத்துள்ளார். சட்ட விரோத தேர்தல் பிரசார பேரணிகள் நடத்தப்படுவதாக தகவல்கள் கிடைத்துள்ளன. குறிப்பாக பொலன்னறுவை மாவட்டத்தில் தேர்தல் அதிகாரிகளுக்கு தடை ஏற்படுத்தியமை ...

மேலும்..

யாழில் இடம்பெற்ற கொள்ளை: 17 பவுண் தங்க நகைகள் பறிபோயின!

யாழ்ப்பாணத்தில் வாள் , கோடரி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் வீடு புகுந்து கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணம், மூளாய் பகுதியில் உள்ள வீடொன்றினுள் நேற்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை புகுந்த 2 கொள்ளையர்களே இவ்வாறு நகைகளை கொள்ளையடித்து தப்பிச் சென்றுள்ளனர். இதன்போது, “வாள் , கோடரி ...

மேலும்..

அரசாங்கத்தின் சிறந்த தீர்மானத்தால் மின்சார சபையின் நஷ்டம் 2,000 கோடி ரூபாவால் குறைவு!

கடந்த சில மாதங்களில் சமகால அரசாங்கம் மேற்கொண்ட சரியான தீர்மானங்களினால் இலங்கை மின்சார சபையின் நஷ்டம் இரண்டாயிரம் கோடி ரூபாவால் குறைந்ததுள்ளதாக சபையின் தலைவர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். மின்சார சபைக்கு எரிபொருள் நிவாரணம் கிடைத்தமை, தாமதமான திட்டங்களைப் பூர்த்தி செய்ய முடிந்தமை ...

மேலும்..

முகக்கவசம் அணியாத 1406 பேருக்கு எச்சரிக்கை – 166 பேர் கைது!

முகக்கவசங்கள் அணியாது நடமாடிக்கொண்டிருந்த 1,406 நபர்களையும், தனி மனித இடைவெளி பேணாமல் இருந்த 1,115 பேரையும் எச்சரித்து விடுவித்துள்ளதாக மேல்மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அலுவலகம்தெரிவித்துள்ளது. அதேபோல, மேல் மாகாணத்தில் மேற்கொண்ட விசேட சோதனை நடவடிக்கையில் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டின் ...

மேலும்..

பொதுத்தேர்தல் தொடர்பாக இதுவரை நான்காயிரத்து 363 முறைப்பாடுகள் பதிவு!

நடைபெறவுள்ள பொதுத்தேர்தல் தொடர்பாக இதுவரை நான்காயிரத்து 363 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன. தேர்தல் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய கடந்த மாதம் 8ஆம் திகதியில் இருந்து நேற்று பிற்பகல் மாலை 4 மணியான காலப்பகுதி வரையிலேயே இந்த முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன. அத்துடன், நேற்று ...

மேலும்..

ஜனாதிபதியின் உயிருக்கு அச்சுறுத்தல் – விசாரணைகள் ஆரம்பம்!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் உயிருக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டமை குறித்து சி.ஐ.டி.யினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். பூசா சிறைச்சாலையில் உள்ள மிகவும் ஆபத்தான கைதிகள் சிலர் ஜனாதிபதியினதும் பாதுகாப்பு செயலாளரினதும் உயிருக்கு அச்சுறுத்தல் விடுத்துள்ளமை குறித்து சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் சிஐடியினரிடம் முறைப்பாடு செய்துள்ளார். பூசா சிறைச்சாலையில் ...

மேலும்..

பிறப்புச் சான்றிதழில் இனி இந்த விடயங்கள் உள்ளக்கப்படாது!

பிறப்புச் சான்றிதழில் தாய் – தந்தையின் திருமண விபரங்கள் மற்றும் இனம் தொடர்பான தகவல்களை உள்ளடக்காதிருப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. பதிவாளர் நாயகம் என்.சீ. விதானகே இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். தாய் – தந்தையரின் திருமண விபரங்கள் தொடர்பில் சமூகத்தில் சிறுவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை கருத்திற் கொண்டு ...

மேலும்..

சிறிகொத்தவை கைப்பற்றுவது மாத்திரமே சிலரது குறிக்கோளாக காணப்படுகின்றது – மஹிந்த

சிறிகொத்தவை கைப்பற்றுவது மாத்திரமே ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி ஆகியவற்றின் முக்கிய குறிக்கோளாக காணப்படுகின்றது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். நடைபெறவுள்ள தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி அதிகாரத்தை கேட்பது நாட்டில் ...

மேலும்..

PHI அதிகாரிகளுடன் இன்று விசேட கலந்துரையாடல்

தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தினருக்கும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்கவுக்கும் இடையில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது. சுகாதார அமைச்சில் இன்று (புதன்கிழமை) குறித்த விசேட கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது. இந்த கலந்துரையாடலில், சுகாதார அமைச்சின் ...

மேலும்..

புனித ஹஜ் பெருநாளை எதிர்வரும் முதலாம் திகதி கொண்டாடத் தீர்மானம்!

புனித ஹஜ் பெருநாளை எதிர்வரும் முதலாம் திகதி சனிக்கிழமை கொண்டாடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. துல்ஹஜ் மாத தலைப்பிறையை தீர்மானிக்கும் மாநாடு கொழும்பு பெரிய பள்ளிவாசலில் ​நேற்று(செவ்வாய்கிழமை) மாலை மஃரிப் தொழுகையின் பின்னர் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்தே குறித்த அறிவிப்பினை கொழும்பு பெரிய பள்ளிவாசலின் பிறைக்குழு வெளியிட்டுள்ளது.

மேலும்..

கடந்த 24 மணித்தியாலங்களில் கொரோனா தொற்றாளர்கள் பதிவாகவில்லை!

கடந்த 24 மணித்தியாலங்களில் நாட்டில் கொரோனா தொற்றுடன் எவரும் அடையாளம் காணப்படவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. தேசிய தொற்றுநோய் பிரிவு இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். இதுவரை இலங்கையில் 2,730 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளனர். அவர்களில், 07 பேர் நேற்று குணமடைந்ததை அடுத்து, குணமடைந்தோரின் எண்ணிக்கை 2,048 ஆக உயர்வடைந்துள்ளது. இதேவேளை, இலங்கையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட 11 பேர் இதுவரையில் உயிரிழந்துள்ளனர் என்பது ...

மேலும்..

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் சஜித் தரப்பிற்கும் இடையில் சில ஒற்றுமைகள் உள்ளன – மஹிந்த!

சஜித் பிரேமதாஸ நாட்டை பிளவுப்படுத்த ஒருபோதும் தயங்க மாட்டார் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கண்டி மாவட்டத்தின் உடுதும்பர பகுதியில் நேற்று(செவ்வாய்கிழமை) இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “2005ஆம் ...

மேலும்..

‘சமூகப் பிரச்சனைகளை தீர்க்காது தேர்தல் காலத்தில் வீரவசனம் பேசுவோர் நிராகரிக்கப்பட வேண்டும்’ – ரிஷாட்

அதிகாரங்கள் இருந்த போது சமூகப் பிரச்சினைகளை பிரச்சினைகளாகவே வைத்திருந்துவிட்டு, தேர்தல் காலத்தில் மட்டும் அதே பிரச்சினைகளை தீர்த்துத் தருவதாகக் கூறி வாக்குக் கேட்பவர்களை நிராகரிக்க வேண்டுமென்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில், மக்கள் ...

மேலும்..

யாழ். பல்கலைக்கழகம் தனது சுயாதீனத்தை இழந்து நிற்கிறது – மாணவர் பிரதிநிதிகள் தெரிவிப்பு

யாழ். பல்கலைக்கழகம் தனது சுயாதீனத்தை இழந்து நிற்பதனால், சட்டபீட முதுநிலை விரிவுரையாளர் கலாநிதி குமாரவடிவேல் குருபரன் அழுத்தத்தங்களால் ‘சட்ட முதுநிலை விரிவுரையாளர்’ பதவியை இராஜினாமா செய்தார் என யாழ். பல்கலைகழக மாணவர் ஒன்றியத் தலைவர் லூ.அனுஷன் தெரிவித்தார். கலாநிதி. குமாரவடிவேல் குருபரன் தனது ...

மேலும்..

தமிழர் அரசியலில் ஒற்றுமை இல்லை – மன்னார் ஆயர் கவலை

தமிழ் அரசியல் நிலைமை இன்னும் குழப்பமானதாக உள்ளது. முன்பு ஓரளவுக்கேனும் இருந்த ஒற்றுமை நிலைமை இன்று இல்லாது போய் விட்டது என மன்னார் மறைமாவட்ட ஆயர் இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை தெரிவித்துள்ளார். தமிழ் மக்களாகிய நமக்கு இன்று இருக்கக்கூடிய ஒரேயொரு ஆயுதம் நமது ...

மேலும்..