July 25, 2020 அன்று பிரசுரிக்கப்பட்டவை

பிரான்ஸில் யாழ்.இளைஞர் கொடூரமான முறையில் கொலை: பொலிஸார் தீவிர விசாரணை

பாரிஸ்- லாக்கூர்நெவ் பகுதியில் வசித்துவந்த யாழ்.இளைஞன் ஒருவர் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன. குறித்த சம்பவத்தில் யாழ்ப்பாணம்- தொண்டமானாறைச் சேர்ந்த ஜெயசுதன் தியாகராஜா (43வயது) என்பவரே கொடூரமான முறையில் கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, ...

மேலும்..

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று உறுதியான மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 2,770 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. நேற்று (சனிக்கிழமை) மாத்திரம் 9பேர், கொரோனா வைரஸ் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் ஊடக தகவல்கள் குறிப்பிடுகின்றன. மேலும் அடையாளம் காணப்பட்டவர்களில் 656பேர் ...

மேலும்..

பாடசாலைகள் நாளை முதல் மீள ஆரம்பம்!

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக விடுமுறையளிக்கப்பட்டிருந்த பாடசாலைகளை நாளை (திங்கட்கிழமை) முதல் மீள திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய, நாளைய தினம் 5ஆம் 11ஆம் தர மாணவர்கள் மற்றும் உயர்தர தரங்களில் கல்வி பயிலும் மாணவர்கள் மாத்திரமே பாடசாலைகளுக்கு ...

மேலும்..

சமஷ்டிக்கும் தமிழீழத்துக்கும் வித்தியாசம் தெரியாத மஹிந்த – சாடுகின்றார் சரவணபவன்

 "தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கையை தெற்கில் உள்ளவர்கள் திரிவுபடுத்துகின்றனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியாகிச் சில நாட்களிலேயே தெற்கில் இனவாதக் கருத்துக்கள் வலுப்பெற்றுள்ளன. நாம் மீண்டும் தமிழீழம் கேட்கின்றோம் என்று பரப்புரைப்படுத்துகின்றனர். அவர்கள் பதவியைப் பிடிப்பதற்காக எதையும் செய்யத் ...

மேலும்..

எந்தச் சக்தியாலும் ஐ.தே.கவை  ஒருபோதும் அழிக்கவே முடியாது – ரணில் திட்டவட்டம்

 "ஐக்கிய தேசியக் கட்சி அழிந்துபோய்விட்டது எனச் சிலர் கூறுகின்றனர். பண்டாரநாயக்கவும் கட்சியிலிருந்து விலகியபோது அவ்வாறுதான் கூறினார். இறுதியில் அவருடைய கட்சியினரே அவரைக் கொன்றுவிட்டார்கள். எனவே, ஐக்கிய தேசியக் கட்சி ஒருபோதும் இல்லாமல்போகாது; எந்தச் சக்தியாலும் எமது கட்சியை அழிக்க முடியாது." - இவ்வாறு ...

மேலும்..

ராஜபக்ச அரசாங்கம் பாரிய அநியாயங்களைள செய்து கொண்டு வருகின்றது என முன்னாள் அமைச்சர் ரிஷாட் தெரிவிப்பு.

எப்.முபாரக் ராஜபக்ச அரசாங்கம் பாரிய அநியாயங்களை செய்துகொண்டு முயற்சிக்கின்றார்கள் என்று மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். திருகோணமலை  மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தியில் போட்டியிடும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் வேட்பாளர் அப்துல்லா மஹ்ரூப்பை  ஆதரித்து, கிண்ணியா கிராமக் கோட்டு மைதானத்தில்  நேற்றிரவூ(25) ...

மேலும்..

வவுனியாவில் 4 பிள்ளைகளின் தாயை காணவில்லை : ஏக்கத்தில் தவிக்கும் பிள்ளைகள்

 - வவுனியா நிருபர்  - வவுனியா புதிய கற்பகபுரம் பகுதியில் வசித்து வரும் 31வயதுடைய 4பிள்ளைகளின் தாயை காணவில்லை என அவரின் கணவர் வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டினை மேற்கொண்டுள்ளார் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு செல்வதாக தெரிவித்து அவரின் கடைசி மகளுடன் (7வயது) ...

மேலும்..

பொதுஜன ஆட்சிக்கு வந்ததும் தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு! பொதுஜனபெரமுன வேட்பாளர் ஜனக நந்தகுமார்

 - வவுனியா நிருபர்  - தமிழ் மக்களது பிரச்சனைகள் தீர்க்கப்படக் கூடாது என்பதே தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு. பொதுஜன பெரமுன ஆட்சிக்கு வந்ததும் மக்களது பிரச்சனைகளை தீர்ப்பதற்கே முன்னுரிமை வழங்கப்படும் என அக் கட்சியின் வன்னி மாவட்ட வேட்பாளர் ஜனக நந்தகுமார ...

மேலும்..

வன்னிமக்களின் முன்னேற்றம் பற்றிய எண்ணம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் இல்லையாம்! பொதுஜனபெரமுன வேட்பாளர் ஜனக நந்தகுமார்

வவுனியா நிருபர்   - வன்னி மக்கள் முன்னேற வேண்டும் என்ற எண்ணமானது இங்குள்ள தமிழ்  தேசியக் கூட்டமைப்பினரிடம் இல்லை. அதனாலேயே வன்னியில் மக்கள் கஸ்ரங்களை எதிர்நோக்குவதாக பொதுஜன பெரமுன கட்சியின் வன்னி மாவட்ட வேட்பாளர் ஜனக நந்தகுமார தெரிவித்துள்ளார். வவுனியாவில் இடம்பெற்ற தேர்தல் ...

மேலும்..

தலைவர் கூட்டமைப்பை உருவாக்கியது அரசியல்வாதிகளை நம்பியல்ல- ஜனநாயக போராளிகள் கட்சி

தலைவர் கூட்டமைப்பை உருவாக்கியது அரசியல்வாதிகளை நம்பியல்ல எனவும் தமிழ் மக்களை நம்பியே என்றும் ஜனநாயக போராளிகள் கட்சி தெரிவித்துள்ளது. அத்துடன், தமிழ் தேசியத்தை சிதைப்பதற்கான அத்தனை நாசகார வேலைகளையும் முடித்துவிட்டு காத்திருக்கும் சிங்கள தேசத்திற்கு பேரதிர்ச்சியினை ஏற்படுத்தும் வகையில் தமிழர்களது வாக்குப்பலத்தினால் தமிழ் ...

மேலும்..

ஆயுதக் கட்டுப்பாடு, கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை குறித்து ட்ரம்ப்- புடின் பேச்சு!

ஆயுதக் கட்டுப்பாடு, கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை ஆகியவை குறித்து, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் ஆகிய இருவரும், தொலைபேசியில் உரையாடியுள்ளனர். சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்புக்கான பொறுப்பு, அமெரிக்கா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளுக்கு ...

மேலும்..

மனித உரிமைகள் பாதுகாக்கப்படுவதை தேர்தல் ஆணைக்குழு உறுதிசெய்ய வேண்டும்- மனித உரிமைகள் ஆணைக்குழு

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மனித உரிமைகள் பாதுகாக்கப்படுவதை உறுதிசெய்வதற்கான நடவடிக்கைகளை தேர்தல்கள் ஆணைக்குழு முன்னெடுக்க வேண்டும் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது. அத்துடன், கொரோனா நெருக்கடி காலப்பகுதியில் நியாயமானதும் சுதந்திரமானதுமான தேர்தலை நடத்துவதற்குத் தேர்தல்கள் ஆணைக்குழுவினால் முன்னெடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகளைப் பாராட்டுக்குரியது ...

மேலும்..

பொது சுகாதார பரிசோதகர்களுக்கான அறிவுறுத்தல்கள் அடங்கிய வரைவு சுற்றறிக்கை சட்டத்திற்கு முரணானது

தேர்தல் காலத்தின் போது கொரோனவை கட்டுப்படுத்த பொது சுகாதார பரிசோதகர்களுக்கான அறிவுறுத்தல்கள் அடங்கிய வரைவு சுற்றறிக்கை சட்டத்திற்கு முரணானது என சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா சுகாதார செயலாளருக்கு அறிவித்துள்ளார். எந்தவொரு தேர்தல் பிரசார கூட்டங்களிலும் வாக்குச் சாவடிகளிலும் நேரடியாக நுழைய ...

மேலும்..

நல்லாட்சி அரசாங்கத்தின் அரசியல் பழிவாங்கலை மறக்கவில்லை- மஹிந்த

நல்லாட்சி அரசாங்கக் காலத்தில் மேற்கொள்ளப்பட்ட அரசியல் பழிவாங்கலை தான் மறந்துவிட வில்லை என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஹாலிஎல பிரதேசத்தில் இடம்பெற்ற பிரசாரக் கூட்டமொன்றில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். குறித்த கூட்டத்தில் மஹிந்த ராஜபக்ஷ மேலும் கூறியுள்ளதாவது, “கடந்த 5 ...

மேலும்..

தமிழரின் உரிமைக்காகப் போராடுபவர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் மட்டுமே! மட்டு மாவட்ட வேட்பாளர் கருணாகரம்

மிழ் மக்களுக்காகப் போராடுவதற்கு, தமிழர்களுக்காகக் கதைப்பதற்கு, அவர்கள் நலன்கள் மீது அக்கறை கொள்வதற்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினைத் தவிர வேறு எவருமே இல்லை. தமிழ்; தேசியக் கூட்டமைப்பு ஒன்றுதான் இன்று தமிழ் மக்களின் உரிமைக்காகப் போராடிக் கொண்டிருக்கின்ற ஒரே ஒரு கட்சி ...

மேலும்..

தமிழ் தேசியக் கூட்டமைப்புதான் தமிழ் மக்களின் உரிமைக்காகப் போராடிக் கொண்டிருக்கின்ற ஒரே ஒரு கட்சி… (தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர் – கோ.கருணாகரம்)

தமிழ் மக்களுக்காகப் போராடுவதற்கு, தமிழர்களுக்காகக் கதைப்பதற்கு, அவர்கள் நலன்கள் மீது அக்கறை கொள்வதற்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினைத் தவிர வேறு எவருமே இல்லை. தமிழ்; தேசியக் கூட்டமைப்பு ஒன்றுதான் இன்று தமிழ் மக்களின் உரிமைக்காகப் போராடிக் கொண்டிருக்கின்ற ஒரே ஒரு கட்சி ...

மேலும்..

இனவாதிகளின் கொட்டத்தை அடக்க கூட்டமைப்பை பலப்படுத்த வேண்டும் யாழ். மாவட்ட வேட்பாளர் சரவணபவன் கோரிக்கை 

"இனவாதம் இந்த நாட்டில் இருக்கும் வரையில், இலங்கையின் நிகழ்காலத்தையும் எதிர்காலத்தையும் இனவாதிகள் தீர்மானிக்கும் வரையில் இலங்கைக்கு விமோசனமில்லை. இனவாதிகளின் கரங்களை ஒடுக்குவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை மக்கள் பலப்படுத்த வேண்டும்." - இவ்வாறு தெரிவித்தார் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ...

மேலும்..

தமிழர்கள் மீதான இனப் படுகொலைக்கு சர்வதேச விசாரணை அவசியம்- கனடா புதிய ஜனநாயக கட்சி

இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட இனப்படுகொலைக்கு சர்வதேச விசாரணை மிகவும் அவசியமென கனடாவின் புதிய ஜனநாயக கட்சியின் தலைவர் ஜக்மீட் சிங்  வலியுறுத்தியுள்ளார் கறுப்பு ஜூலை தினத்தை  முன்னிட்டு  புதிய ஜனநாய கட்சியின் தலைவர் ஜக்மீட் சிங்  வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இந்த ...

மேலும்..

பயங்கரவாதிகளுக்கு இன அல்லது மத முத்திரையை குத்தக்கூடாது – ரணில்

பயங்கரவாதிகள் எந்த இனம் அல்லது மதக் குழுவைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் அவர்கள் பயங்கரவாதிகளாகவே கருதப்பட வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர், தீவிரவாதத்தையும் ...

மேலும்..

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 9 பேர் குணமடைவு

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 9 பேர் பூரணமாக குணமடைந்து இன்று (சனிக்கிழமை)  தங்களின் வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். இதற்கமைய இலங்கையில் இதுவரை இரண்டாயிரத்து 103 பேர் தொற்றிலிருந்து மீண்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. மேலும் 650 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சைபெற்று வருவதாகவும் சுகாதார அமைச்சு மேலும் ...

மேலும்..

ஜனாதிபதியால் அமைச்சர்களை பரிந்துரைக்க முடியாது – கிரியெல்ல

பொதுத்தேர்தலில் பின்னர் அமையும் அரசாங்கத்தின் கீழ் அமைச்சர்களை நியமிக்க பரிந்துரைக்கும் அதிகாரம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு இருக்காது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷமன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். அத்தோடு குறித்த அதிகாரம் ஐக்கிய மக்கள் சக்தி தலைவர் சஜித் பிரேமதாசவிற்கு இருக்கும் என ...

மேலும்..

வேட்பாளர்களிடம் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் வேண்டுகோள்!

புதிதாக தெரிவுசெய்யப்படுகின்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் காணாமல் ஆக்கப்பட்டோர் விடயத்தில் காலம் தாழ்த்தாது நீதியை பெற்றுத்தர வேண்டும் என மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. மன்னாரில் இன்று (சனிக்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் குறித்த அமைப்பின் செயலாளர் ...

மேலும்..

ஐக்கிய தேசியக்கட்சியின் இளைஞர் மற்றும் யுவதிகளுக்கு மஹிந்த அழைப்பு

ஐக்கிய தேசியக்கட்சியின் இளைஞர் மற்றும் யுவதிகள், நாட்டை கட்டியெழுப்பக்கூடிய மொட்டு கட்சியுடன் இணைந்துக்கொள்வதே சிறந்ததென பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கொட்டாவ நகரில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த மக்கள் சந்திப்பில் மஹிந்த ராஜபக்ஷ மேலும் ...

மேலும்..

இங்கிரிய மோதல் சம்பவத்தில் ஒருவர் கொலை

இங்கிரிய- ஊருகல பகுதியில் இருவருக்கு இடையில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவத்தில் 54 வயதுடைய இங்கிரிய பிரதேசத்தை சேர்ந்தவரே உயிரிழந்துள்ளார். இவர் இரும்பு பொல்லால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் தனிப்பட்ட தகராறே இந்த தாக்குதல் சம்பவம் ...

மேலும்..

இராணுவ அதிகாரியை நாடாளுமன்ற உறுப்பினராக்கினால் எமது இருப்பு கேள்விகுறியாகும்- சார்ள்ஸ்

இராணுவ அதிகாரியொருவரை தமிழ் மக்கள் தங்கள் வாக்குகளால் நாடாளுமன்ற உறுப்பினராக்கினால் எமது இருப்பு கேள்விகுறியாகும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி தேர்தல் தொகுதி வேட்பாளர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார். வவுனியா ஈச்சங்குளத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு ...

மேலும்..