August 5, 2020 அன்று பிரசுரிக்கப்பட்டவை

ல்முனை ஆதார வைத்திய சாலையின் ஏற்பாட்டில் மருத்துவ சேவை

கல்முனை ஆதார வைத்திய சாலையின் ஏற்பாட்டில் கிழக்கிலங்கை உகந்தமலை ஸ்ரீ முருகன் ஆலயத்தின் உற்சவ காலங்களின் இறுதி இருநாட்களும் அங்கு வரும் அடியார்களுக்கு மருத்துவ வசதிகளை வழங்கியிருந்தார்கள்.

மேலும்..

காரைதீவு நிலையைத்தில் இருந்து வாக்குப் பெட்டிகள் வாக்கு என்னும் நிலையத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது…

காரைதீவு பிரதேச வாக்கு நிலையைத்தில் இருந்து வாக்குப் பெட்டிகள் வாக்கு என்னும் நிலையத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது. மேலும் நடைபெற்ற பொதுத் தேர்தலில் வாக்காளர்கள் அமைதியான முறையில் வாக்குகளை பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும்..

மீனவர்களுக்கு எச்சரிக்கை…

பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு தொடர்பாக வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதற்கமைய, காங்கேசந்துறை முதல் மன்னார், கொழும்பு மற்றும் காலி ஊடாக அம்பாந்தோட்டை வரையான கடல் பிரதேசங்களில் காற்றின் வேகம் அவ்வப்போது மணிக்கு 60 - 70 முதல் கிலோமீற்றர் ...

மேலும்..

கிளிநொச்சி மாவட்டத்தில் மொத்தமாக (5.00 மணிவரை) 71.52 வீதமான வாக்குப் பதிவு இடம்பெற்றுள்ளது

 நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் கிளிநொச்சி மாவட்டத்தில் மொத்தமாக (5.00 மணிவரை) 71.52 வீதமான வாக்குப் பதிவு இடம்பெற்றுள்ளது. மொத்தம் 65984 வாக்குகள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது

மேலும்..

நுவரெலியா மாவட்டம் 75 வீத வாக்குபதிவு…

(க.கிஷாந்தன்) இன்று காலை 7 மணி முதல் மாலை 5 மணிவரை நுவரெலியா மாவட்டத்தில் 498 வாக்களிப்பு நிலையங்களில், வாக்களிப்பு இடம்பெற்றது. நுவரெலியா மாவட்டத்தில் கடும் குளிருடன் சீரற்ற காலநிலை நிலவினாலும், மக்கள் தமது ஜனநாயக கடமையை நிறைவேற்றுவதில் ஆர்வம் காட்டியதைக் காணக்கூடியதாக இருந்தது. இடையிடையே ...

மேலும்..

வவுனியாவில் பலத்த பாதுகாப்புடன் மாவட்ட செயலகத்திற்கு எடுத்து வரப்பட்ட வாக்கு பெட்டிகள் …

வவுனியா நிருபர். வவுனியாவில் 141 வாக்களிப்பு நிலையங்களில் இன்று (05.08.2020) காலை 7.00 மணி தொடக்கம் மாலை 5.00 மணி வரை இடம்பெற்ற வாக்களிப்பின் பின் வாக்குப் பெட்டிகள் வவுனியா மாவட்ட செயலகத்திற்கு மாலை 6.00 மணி தொடக்கம் எடுத்துக்கொண்டு வரப்பட்டுக்கொண்டிருக்கின்றன. வவுனியா மாவட்ட ...

மேலும்..

அப்துல்லா மஃறூப் வாக்கினை பதிவு செய்தார்…

தி/கிண்ணியா டி.பி ஜாயா மகளிர் வித்தியாலயத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் திருகோணமலை மாவட்ட முதன்மை வேட்பாளரும் முன்னால் பிரதியமைச்சருமான   அப்துல்லா மஃறூப் அவர்கள் அவரது குடும்பத்தார் சகிதம் தங்களது வாக்குகளை இன்று (05) காலை பதிவு செய்தார்கள். இலங்கையின் ஒன்பதாவது நாடாளுமன்றத்துக்கான உறுப்பினர்களை ...

மேலும்..

பெருகும் கொரோனா தொற்று: ஆஸ்திரேலிய கடல் கடந்த தடுப்பில் உள்ள அகதிகளின் நிலை என்ன

பப்பு நியூ கினியா எனும் தீவு நாட்டில் செயல்பட்டு வரும் ஆஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்பு முகாமில் உள்ள அகதிகளின் பாதுகாப்பை ஆஸ்திரேலிய அரசு உறுதிச் செய்ய வேண்டும் என ஆஸ்திரேலிய மனித உரிமைகள் சட்ட மையம் வலியுறுத்தியுள்ளது. பப்பு நியூ கினியாவில் கொரோனா தொற்று பரவினால் அது அந்நாட்டில் உள்ள சுகாதார கட்டமைப்பை சீர்குலைக்கூடும் என பப்பு நியூ கினியாவின் பெருந்தொற்று கட்டுப்பாட்டாளர் எச்சரித்துள்ள நிலையில் அங்குள்ள அகதிகளின் நிலைக்குறித்து அச்சம் எழுந்துள்ளது. தற்போதைய நிலையில், பப்பு நியூ கினியாவில் உள்ள ஆஸ்திரேலிய முகாமில் 175 அகதிகளும் நவுருத்தீவு முகாமில் 185 அகதிகள் சிறைவைக்கப்பட்டுள்ளனர். கடந்த இரு வாரங்களாக, அகதிகள் வைக்கப்பட்டுள்ள பப்பு நியூ கினியாவின் தலைநகரான Port Moresby-ல் வேகமாக கொரோனா தொற்று பரவி வருகின்றது. முன்னதாக, கொரோனா பரவலை பப்பு நியூ கினியாவின் சுகாதார கட்டமைப்பைக் கொண்டு கையாள்வது போராட்டம் மிகுந்ததாக இருக்கும் என பப்பு நியூ கினியா பிரதமர் ஜேம்ஸ் மராபே எச்சரித்திருந்தார். பல ஆண்டுகள் தடுப்பில் கழித்த நாங்கள் கொரோனா தொற்றால் எளிதாகப் ...

மேலும்..

நல்லாட்சி அரசு உருவாகும் என்ற நம்பிக்கை எமக்கு உண்டு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாட் பதியுதீனின்…

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் வன்னி மாவட்ட முதன்மை வேட்பாளருமான ரிஷாட் பதியுதீன், மன்னார் தாராபுரம் அல் மினா மகா வித்தியாலயத்தில் குடும்பம் சகிதம்,  வாக்களித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில்.

மேலும்..

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் அவர்களின் மூத்த சகோதரி மறைவுக்கு வைகோ ஆழ்ந்த இரங்கல்…

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் அவர்களின் மூத்த சகோதரி மறைவுக்கு வைகோ ஆழ்ந்த இரங்கல் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நிறுவனத் தலைவரான தொல்.திருமாவளவன் அவர்களின் மூத்த சகோதரி திருமதி பானுமதி அம்மையார் கொரோனா நோயினால் பாதிக்கப்பட்டு, மறைந்தார்கள் என்ற செய்தி கேட்டு தாங்க முடியாத அதிர்ச்சி ...

மேலும்..

கல்குடாத் தொகுதியில் வாக்களித்த அரசியல் பிரமுகர்கள்…

பாராளுமன்றப் பொதுத் தேர்தல் 2020 இற்கான வாக்களிப்புகள் இன்று புதன்கிழமை மட்டக்களப்பு மாவட்டத்தில் கல்குடாத் தொகுதியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச் சாவடிகளில் சுமுகமாக நடைபெற்று வருகின்றது. மட்டக்களப்பு மாவட்டத்தில் ஐந்து பாராளுமன்ற உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக நான்கு இலட்சத்தி ஒன்பதாயிரத்தி 808 வாக்காளர்கள் வாக்களிக்கத் ...

மேலும்..

காரைதீவில் சுகாதார முறையில் வாக்குப்பதிவு…….

காரைதீவு மண்ணில் இன்றைய தினம் வழமைக்கு மாறாக கொரோனா தொற்று காரணமாக சுகாதார முறைப்படி அணைத்து மக்களும் அமைதியான முறையிலும் பாதுகாப்பான முறையிலும் தங்களது வாக்கு பதிவினை மேற்கொண்டனர். சுகாதார பரிசோதகரால் கண்காணிக்கப்பட்டு சமூக இடைவெளி பேணுமாறும் முகக்கவசம் அணியுமாறும் அறிவுறுத்தல் ...

மேலும்..

முன்னாள் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வைத்திய கலாநிதி கௌரவ சி.சிவமோகன் அவர்கள் காலை 7.15 மணிக்கு வாக்களித்தார்…

முன்னாள் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வைத்திய கலாநிதி கௌரவ சி.சிவமோகன் அவர்கள் காலை 7.15 மணிக்கு  வாக்களித்தார் அதேவேளை, பாதுகாப்பு பணியில் பொலிஸார் ஈடுப்பட்டுள்ளதுடன், உள்நாட்டு வெளிநாட்டு சர்வதேச கண்காணிப்பாளர்களும் தங்களது பார்வையை செலுத்தி வருகின்றனர்.

மேலும்..

வாழை பயிரிட்டோரைக் குப்புறத் தள்ளிய கொரோனா ஊரடங்கு விலை கிடைக்காது போனதற்கு இழப்பீடு ஏக்கருக்கு50,000 ரூபாய் வழங்க வேண்டும்…

வாழை பயிரிட்டோரைக் குப்புறத் தள்ளிய கொரோனா ஊரடங்கு! விலை கிடைக்காது போனதற்கு இழப்பீடு ஏக்கருக்கு 50,000 ரூபாய் வழங்க வேண்டும்; வாங்கிய கடனைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என அரசைக் கேட்டுக்கொள்கிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி! கடலூர் மாவட்டத்தில் குறிஞ்சிப்பாடி சட்ட மன்ற தொகுதிக்கு ...

மேலும்..

கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று (2020.08.05) காலை மெதமுலன டி.ஏ.ராஜபக்ஸ வித்தியாலயத்தில் வாக்களித்தார்…

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று தனது குடும்பத்துடன் சென்று வாக்குபதிவினை செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும்..

மட்டக்களப்பு மாவட்டத்தில் பாராளுமன்ற பொதுத்தேர்தலுக்கான வாக்களிப்புகள்…

மட்டக்களப்பு மாவட்டத்தில் பாராளுமன்ற பொதுத்தேர்தலுக்கான வாக்களிப்புகள் இன்று காலை முதல் அமைதியான முறையில் நடைபெற்றுவருகின்றது.காலை 07மணி தொடக்கம் ஒன்பது மணி வரையில் 11வீத வாக்குப்பதிவுகள் மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெற்றுள்ளதாக மாவட்ட தெரிவித்தாட்சி அதிகாரியும் மாவட்ட அரசாங்க அதிபருமான திருமதி கலாமதி பத்மராஜா ...

மேலும்..

கல்குடாத் தொகுதியில் அமைதியான முறையில் வாக்களிப்பு…

பாராளுமன்றப் பொதுத் தேர்தல் 2020 இற்கான வாக்களிப்புகள் இன்று புதன்கிழமை மட்டக்களப்பு மாவட்டத்தில் கல்குடாத் தொகுதியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச் சாவடிகளில் சுமுகமாக நடைபெற்று வருகின்றது. இம்மாவட்டத்தில் ஐந்து பாராளுமன்ற உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக நான்கு இலட்சத்தி ஒன்பதாயிரத்தி 808 வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி ...

மேலும்..

கூட்டமைப்பின் வெற்றி உறுதி – ரவிகரன்…

இம்முறை நாடாளுமன்றத் தேர்தலிலும் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் வெற்றி உறுதி என முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு - கள்ளப்பாடு வாக்களிப்பு நிலையத்தில், தனது வாக்கைச் செலுத்தியபின்னர் ஊடகங்களுக்குகருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில் , இத்தேர்தலில் தமிழ்த் ...

மேலும்..

மட்டக்களப்பில் வாக்களித்தார் சாணக்கியன்!..

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர் இரா.சாணக்கியன் இன்று(புதன்கிழமை) வாக்களித்துள்ளார். நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் இன்று(புதன்கிழமை) காலை 7.00 மணிக்கு  ஆரம்பமாகிய நிலையில் சுமூகமான முறையில் நடைபெற்று வருகின்றது. இந்தநிலையில் இன்று காலை மட்டக்களப்பு பட்டிருப்பு மத்திய வித்தியாலயத்தில் அமைந்துள்ள வாக்களிப்பு நிலையத்தில் இரா.சாணக்கியன் வாக்களித்துள்ளார். புதிய மாற்றத்திற்காக ...

மேலும்..

புதிய மாற்றத்திற்காக நான் வாக்களித்துவிட்டேன்…! – அங்கஜன்

இலங்கையின் ஒன்பதாவது  நாடாளுமன்ற தேர்தலில் ஸ்ரீ லங்கா சுதந்திரகட்சியில் போட்டியிடும் முதன்மை வேட்பாளர் அங்கஜன் இராமநாதன் இன்று காலை காங்கேசன்துறை தேர்தல் தொகுதி, அளவெட்டி  சீனன்கலட்டி ஞானோதய வித்தியாலயத்தில் தனது வாக்கினை சனநாயக முறைப்படி பதிவு செய்தார். வாக்கினை பதிவு செய்து ஊடகங்களுக்கு ...

மேலும்..

பொது தேர்தலுக்கான வாக்களிப்பு – நுவரெலியா மாவட்டம்…

(க.கிஷாந்தன்) பொது தேர்தலுக்கான வாக்களிப்பு இன்று காலை 7 மணிக்கு ஆரம்பமாகி தற்போது இடம்பெற்று வருகின்றது. குறிப்பாக மலையகத்தை பொருத்தவரை பெருந்தோட்ட மக்கள் உட்பட அணைவரும் வாக்களிப்பு நிலையங்களுக்கு சென்று தங்களுடைய வாக்குகளை பயன்படுத்துவதை காணக்கூடியதாக இருக்கின்றது. அதேவேளை, பாதுகாப்பு பணியில் பொலிஸார் ஈடுப்பட்டுள்ளதுடன், உள்நாட்டு ...

மேலும்..