September 11, 2020 அன்று பிரசுரிக்கப்பட்டவை

தந்தையின் உடலை பல்கலைக்கழகத்துக்கு வழங்கிய பிள்ளைகள்!

தனது இறப்புக்கு பின்னர் உடலை யாழ்,மருத்துவ பீட மாணவர்களின் கல்வி நடவடிக்கைக்கு உதவும் முகமாக மருத்துவ பீடத்திற்கு ஒப்படைக்க வேண்டும் எனும், தந்தையின் விருப்பத்துக்கு அமைய அவர் உயிரிந்த நிலையில் அவரது உடலை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீடத்துக்கு பிள்ளைகள் ஒப்படைத்தனர். பலாலி ...

மேலும்..

தெற்காசிய சாதனையை முறியடித்தார் யுபுன்!!!

இலங்கை தடகள வீரர் யுபுன் அபேகோன் ஜெர்மனியில் நடைபெற்ற 100 மீட்டர் ஓட்டப்போட்டியில் 10.16 செக்கன்களில் கடந்து, தேசிய மற்றும் தெற்காசிய சாதனையை முறியடித்துள்ளார். கடந்த வருடம் ஹிமாஷ ஏஷானால் நிலைநாட்டப்பட்ட சாதனையையே யுபுன் அபேகோன் முறியடித்துள்ளார்.

மேலும்..

கஞ்சாவுடன் குருநகரில் ஒருவர் கைது!!!

யாழ்ப்பாணம் விசேட அதிரடிப் படையினரால் குருநகர்ப் பகுதியில் நேற்று முன்தினம் புதன்கிழமை மாலை மேற் கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின்போது 500 கிராம் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் சட்ட நடவடிக்கைகளுக்காக யாழ்ப்பாணம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

மேலும்..

பதவியை இராஜினாமா செய்தார் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் கி.துரைராசசிங்கம் அவர்கள்!!!

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் கி.துரைராசசிங்கம் அவர்கள் தன் தனிப்பட்ட காரணங்களுக்காகவும், சுயவிருப்புடனும் தன் பொதுச் செயலாளர் பதவியைத் துறப்பதாக இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சோ.சேனாதிராஜா, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் ஆகியோருக்கு ...

மேலும்..

வடிகான்களை சுத்தப்படுத்தும் பணியை துரித்தப்படுத்துமாறு மாநகர முதல்வர் பணிப்பு!!!

மழையுடன் கூடிய காலநிலை நிலவுவதன் காரணத்தினால் மட்டக்களப்பு மாநகர சபைக்குட்பட்ட பிரதேசத்தில் காணப்படும் வடிகான்கள் மற்றும் நீர் தேங்கும் இடங்களை சுத்தப்படுத்தும் பணிகளை துரித்தப்படுத்துமாறு மட்டக்களப்பு மாநகர முதல்வர் பணிப்புரை விடுத்துள்ளார். மட்டக்களப்பு மாநகர சபையின் டெங்கு நோய் தடுப்பு செயலணியின் மாதாந்த ...

மேலும்..

தேசிய பட்டியல் உறுப்பினரான செல்வராஜா கஜேந்திரன் அம்பாறை மாவட்டத்திற்கு களவிஜயம்!!!

தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் தேசிய பட்டியல் உறுப்பினராக செல்வராஜா கஜேந்திரன் அம்பாறை மாவட்டத்திற்கு களவிஜயம் ஒன்றினை மேற்கொண்டுள்ளார். கடந்த 9 ஆவது பாராளுமன்ற தேர்தலில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி சார்பில் இரண்டு ஆசனங்கள் பெறப்பட்ட நிலையில் தேசிய பட்டியல் மூலம் ...

மேலும்..

2020 ஆம் ஆண்டிற்கான சப்ரிகம சிறந்த செயற்பாட்டாளர்களை கௌரவிக்கும் நிகழ்வு(video/photoes)

2020 ஆம் ஆண்டிற்கான சப்ரிகம சிறந்த செயற்பாட்டாளர்களை கௌரவிக்கும் முகமாக ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வு நாவிதன்வெளி பிரதேச செயலாளர் எஸ்.ரங்கநாதன் தலைமையில் நடைபெற்றது. இன்று(11) முற்பகல் அம்பாறை மாவட்டம்  நாவிதன்வெளி    பிரதேச செயலக கலாச்சார மத்திய நிலையத்தில் சப்ரிகம அபிவிருத்தி செயற்திட்டத்தை நடைமுறைப்படுத்திய ...

மேலும்..

ஈஸ்டர் தாக்குதல் பொறுப்பிலிருந்து மைத்திரி, ரணில் தப்பவே முடியாது – ஆணைக்குழு விசாரணையின் பின் ராஜித தெரிவிப்பு (photo)

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் பொறுப்பிலிருந்து முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் தப்பவே முடியாது." - இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்தார். உயிர்த்த ஞாயிறு ...

மேலும்..

ராஜித மீண்டும் ஈஸ்டர் தாக்குதல் விசாரணைப் பிரிவின் முன்னிலையில்!!

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன, உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பொலிஸ் பிரிவில் முன்னிலையாகியுள்ளார். குறித்த ஆணைக்குழுவின் அழைப்புக்கு அமைய, வாக்குமூலம் வழங்குவதற்காக அவர் இன்று முற்பகல்  அவ்வாணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார். முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன, ...

மேலும்..

கட்டு யானையின் தாக்குதலில் பாடசாலை மாணவன் மரணம்!!

கிராந்துருகோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பஹலரத்கிந்த பிரதேசத்தில் காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகி, பாடசாலை மாணவன் ஒருவன் உயிரிழந்துள்ளான். நேற்றிரவு இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் கிராந்துருகோட்டை பிரதேசத்தைச் சேர்ந்த 16 வயதுடைய மாணவனே உயிரிழந்துள்ளார் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

மேலும்..

மகாகவி பாரதியாரின் நினைவு 99 ஆவது நினைவு தினத்தில் முதல்வர் ஆனல்ட் பங்கேற்பு!

யாழ் இந்தியத் துணைத் தூதுவராலயத்தின் ஏற்பாட்டில் துணைத்தூதுவர் உயர்திரு எஸ். பாலச்சந்திரன் அவர்களின் தலைமையில் மகாகவி பாரதியாரின் 99 ஆவது நினைவு தினம் யாழ்ப்பாணம் நல்லூர் அரசடி வீதியில் அமைந்துள்ள அன்னாரின் திருவுருவச்சிலைக்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தலுடன் இன்று ...

மேலும்..

யாழ் மாநகர சபை முதல்வர் தலைமையில் வர்த்தக சங்கத்துடன் விசேட கலந்துரையாடல்!!

யாழ் மாநகர சபை முதல்வர் கௌரவ இம்மானுவல் ஆனல்ட் அவர்களுக்கும் யாழ் வணிகர் கழகத்திற்கும் இடையில் விசேட சந்திப்பு ஒன்று கடந்த (9) யாழ் மாநகர சபையில் நடைபெற்றது. இக் கலந்துரையாடலில் யாழ் மாநகரசபை எல்லைக்குற்பட்ட உணவகங்கள் மற்றும் வர்த்தக நிலையங்களில் பொலித்தீன் ...

மேலும்..

லிந்துலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறிக்கு தீ வைப்பு!

லிந்துலை பாமஸ்டன் பகுதியில் வீட்டிற்கு முன்பாக நிறுத்தி வைத்திருந்த லொறியை இனந்தெரியாத நபர்கள் தீயிட்டு கொளுத்திருக்கலாம் என சந்தேகிப்பதாக லொறியின் உரிமையாளர் தெரிவிக்கின்றார். இந்தச் சம்பவம் லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட லிந்துலை, பாமஸ்டன் ரட்ணகிரி கிராம பகுதியில் 11.09.2020 அன்று அதிகாலை நேரத்தில் இடம்பெற்றுள்ளதாக ...

மேலும்..

கோப் குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டார் இரா.சாணக்கியன் – ஏனைய உறுப்பினர்களின் பெயர் பட்டியலும் வெளியானது!

9 ஆவது நாடாளுமன்றின் அரச பொறுப்பு முயற்சிகள் பற்றிய (கோப்) குழுவிற்கு நியமிக்கப்பட்டுள்ள 22 உறுப்பினர்களின் பெயர் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இன்று(வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வின் போதே சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தனவால் இதுகுறித்த அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. மஹிந்த அமரவீர, மஹிந்தானந்த அளுத்கமகே, ரோஹித ...

மேலும்..

சருமப்பூச்சு கிறீம் வியாபார நிலையங்கள் பரிசோதனை – வியாபாரிகளுக்கு நுகர்வேர் அலுவல்கள் அதிகார சபை விடும் எச்சரிக்கை

வியாபாரிகளுக்கு நுகர்வேர் அலுவல்கள் அதிகார சபை விடும் எச்சரிக்கை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுகின்ற சருமப்பூச்சு கிறீம் வகைகள் தொடர்பாக வியாபாரிகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் விழிப்புணர்வு செயற்றிட்டமொன்று நாடுபூராகவும் பாவனையாளர்கள் அலுவல்கள் அதிகார சபையினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இந்தவகையில் மட்டக்களப்பு மாவட்ட பாவனையாளர்கள் ...

மேலும்..

மாற்றுத்திறனாளி பிள்ளையின் கல்விக்கான உரிமையை வழங்க கோரி பேரணி!!

கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள ஒளிமயம் மாற்றுத் திறனாளிகள் அமைப்பினால் விசேட திறன் கொண்ட மாணவர்களின் கல்வி வளர்ச்சியில் நாம் அக்கறை செலுத்துவோம் என்னும் தொனிப் பொருளிலான பேரணி வாழைச்சேனையில் இன்று இடம்பெற்றது. ஒளிமயம் மாற்றுத் திறனாளிகள் அமைப்பின் தலைவர் எஸ்.றபீக் ...

மேலும்..

ஓட்டமாவடி பிரதேச சபைக்குட்பட்ட பகுதியிலுள்ள வடிகான்களை சுத்தம் செய்யும் வேலைத்திட்டம் மற்றும் பொது சுகாதாரம் தொடர்பான கலந்துரையாடல் சபையின் கேட்போர் கூடத்தில் இன்று இடம்பெற்றது.(photos)

ஓட்டமாவடி பிரதேச சபைக்குட்பட்ட பகுதியிலுள்ள வடிகான்களை சுத்தம் செய்யும் வேலைத்திட்டம் மற்றும் பொது சுகாதாரம் தொடர்பான கலந்துரையாடல் சபையின் கேட்போர் கூடத்தில் இன்று இடம்பெற்றது. தவிசாளர் ஏம்.எம்.நௌபர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் உப தவிசாளர் யு.எல்.அஹமட், சபை உறுப்பினர்களான ஏ.ஜி.அமீர், எம்.பி.ஜெஸிமா, எம்.பி.ஜெமிலா, ...

மேலும்..

தியாகதீபம் திலீபன் நினைவாக முல்லைத்தீவில் இருந்து ஆரம்பிக்கப்படவுள்ள நடைபவணிக்கு பூரண ஆதரவு வழங்கவும் – இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் வாலிபர் முன்னணித் தலைவர் – கி.சேயோன்!!

(இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் வாலிபர் முன்னணித் தலைவர் - கி.சேயோன்) தியாகதீபம் திலிபன் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு எதிர்வரும் 21ம் திகதியிலிருந்து எமக்கான நீதியின் சாட்சியாக இருக்கின்ற முள்ளிவாய்க்கால் மண்ணில் இருந்து நடைபவணி இடம்பெறவுள்ளது. வடக்கு கிழக்கில் இருக்கின்ற இளைஞர்கள் ...

மேலும்..

மணல் அகழ்வில் ஈடுபட்ட ஐந்துசந்தேக நபர்கள் ஐந்து வாகனத்துடன் கைது!!

வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொண்டுகள்சேனை பகுதியில் சட்டவிரோதமான முறையில் மணல் அகழ்வில் ஈடுபட்ட ஐந்து சந்தேக நபர்களும், நான்கு உழவு இயந்திரங்கள் மற்றும் மணல் அகழும் இயந்திரம் என்பன வியாழக்கிழமை மாலை கைப்பற்றப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன ...

மேலும்..

கிண்ணியா-03 மத்திய பள்ளி வீதி, வசித்து வருகின்ற சராப்தீன் நஸீரா என்பவர் உயர் நீதிமன்ற நீதியரசர்கள் முன்னிலையில் சட்டத்தரணியாக சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார்.

கிண்ணியா-03 மத்திய பள்ளி வீதி, வசித்து வருகின்ற சராப்தீன் நஸீரா என்பவர் உயர் நீதிமன்றத்தின் உயர் நீதிமன்ற நீதியரசர்கள் முன்னிலையில் சட்டத்தரணியாக சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார். இலங்கை அதிபர் சேவை தரமுடைய இவர் கிண்ணியா மத்திய கல்லூரியில் பிரதி அதிபராக கடமையாற்றியதோடு ...

மேலும்..

மத்திய கிழக்கில் இருந்து நாடு திரும்பிய 472 இலங்கையர்கள்!!!

மத்திய கிழக்கின் இரு நாடுகளில் இருந்து 472 இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளனர். தொழில் நிமித்தம் ஐக்கிய அரபு இராஜ்ஜியத்திற்கு சென்றிருந்த 405 இலங்கையர்கள் டுபாயில் இருந்து எமிரேட்ஸ் விமன சேவைக்குச் சொந்தமான E.K-648 எனும் விமானம் மூலம் இன்று அதிகாலை 2.02 அளவில் ...

மேலும்..

நாடாளுமன்றில் இன்று இடம்பெறும் விவாதம்!!!

நாடாளுமன்ற முதல் அமர்வின் இறுதி நாள் விவாதம் இன்று  இடம்பெறவுள்ளது. இதற்கமைய, இன்றைய தினம் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் அமரர் ஆறுமுகன் தொண்டமான் தொடர்பான அனுதாபப் பிரேரணை விவாதம் இடம்பெறவுள்ளது. நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் இதனைத் தெரிவித்துள்ளது. நாடாளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவின் தீர்மானத்திற்கமைய ...

மேலும்..

ரிஷாத்தின் சகோதரர் ரிப்கானின் வழக்கு: உரிய முறையில் விரைவுபடுத்தப் பணிப்பு!!

முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் சகோதரரான முஹம்மட் ரிப்கான் உள்ளிட்ட இருவருக்கு எதிராக முன்னெடுக்கப்படும் விசாரணையை உரிய முறையில் விரைவாக மேற்கொண்டு, இது தொடர்பாக ஏனைய சந்தேகநபர்கள் காணப்படுவார்களாயின், அவர்களை கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு, கொழும்பு பிரதான ...

மேலும்..

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல்: தடுப்புக் காவலிலுள்ள சட்டத்தரணி ஹிஜாஸின் அறிக்கையைச் செப். 16இல் சமர்ப்பிக்க உத்தரவு!! (photo)

கைதுசெய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவின் விசாரணை குறித்த இறுதி அறிக்கையை எதிர்வரும் 16ஆம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்குமாறு கோட்டை நீதிவான் ரங்க திஸாநாயக்க, சி.ஐ.டிக்கு உத்தரவிட்டுள்ளார். உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் தொடர்பில் இடம்பெற்று வரும் விசாரணைகளுக்கு அமைய, ...

மேலும்..

இன்றைய ராசிபலன்(11/09/2020)

மேஷம் மேஷம்: உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். சொத்து பிரச்சினையில் ஒன்று தீரும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். நினைத்ததை முடிக்கும் நாள். ரிஷபம் ரிஷபம்: கடந்த இரண்டு ...

மேலும்..