September 15, 2020 அன்று பிரசுரிக்கப்பட்டவை

தமிழ் மக்கள் பிரதிநிதிகள் ஒன்றிணைய வேண்டும் – பலவீனமாகி விடுவோம் என்கிறார் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன்

தமிழ் மக்களால் தெரிவு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். கோட்டைக்கல்லாறு மக்களால் நேற்று நடாத்தப்பட்ட வரேவேற்பு நிகழ்விலே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், பாராளுமன்றத்தில் தமிழ் மக்களால் தெரிவு ...

மேலும்..

ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ரணிலின் மைத்துனரா?

ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ருவன் விஜேவர்தன தெரிவு செய்யப்பட்டுள்ளார். கட்சியின் தலைமையகத்தில் இன்று மாலை கூடிய மத்திய செயற்குழுக் கூட்டத்தில், பிரதித் தலைவர் பதவிக்கான இரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.முன்னால் அமைச்சருக்கு முன்னால் ஊடக அமைச்சர்  ருவன்விஜேவர்தனவிற்கும் ...

மேலும்..

இரண்டு பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்து – 11 பேர் காயம்!!

நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நிவ்வெளிகம பகுதியில் 15.09.2020 அன்று காலை 7.30 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் 11 பேர் படுங்காயங்களுக்குள்ளாகிய நிலையில் டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அட்டன் பொகவந்தலாவ பிரதான வீதியில் அட்டனிலிருந்து பொகவந்தலாவ நோக்கி ...

மேலும்..

இன்றைய ராசிபலன்(15/09/2020)

மேஷம் மேஷம்:  எதிர்பார்த்தவைகளில் சில தள்ளிப் போனாலும் எதிர்பாராத ஒருவேலை முடியும். தாய்வழி உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். நண்பர்கள் உதவுவார்கள். புதுவேலை கிடைக்கும். வியாபாரத்தில் புது தொடர்பு ஏற்படும். உத்தியோகத்தில்  திருப்தி உண்டாகும். பழைய நினைவுகளில் மூழ்கும் நாள். ...

மேலும்..

திலீபன் நினைவேந்தல் வளைவுகளை அகற்றிக்கொண்டு சென்றது பொலிஸ் – திருவுருவப்படங்களையும் விட்டுவைக்கவில்லை (photo)

யாழ்ப்பாணம் - நல்லூர் மற்றும் யாழ். பல்கலைக்கழக வளாகப் பகுதிகளில் தியாக தீபம் திலீபன் நினைவாக அமைக்கப்பட்டிருந்த திருவுருவப்படங்கள், நினைவு வளைவுகளைப் பொலிஸார் அகற்றிக்கொண்டு சென்றுள்ளனர். தியாக தீபம் திலீபனின் 33ஆம் ஆண்டு நினைவேந்தலின் முதல் நாள் இன்றாகும். திலீபன் நினைவேந்தலை நடத்துவதற்கு ...

மேலும்..

விஜய் தணிகாசலம், மாநிலசட்டமன்ற உறுப்பினர் | புதிய கல்வியாண்டின் தொடக்கம்.

புதிய கல்வியாண்டின் தொடக்கம் செப்டெம்பர் மாதம் புதிய கல்வியாண்டை நாம் ஆரம்பிக்கும் இவ்வேளையில், மாணவர்களும் பெற்றோர்களும் மிகவும் உற்சாகத்துடன் உள்ளதை நான் அறிவேன்.  புதிய கல்வி ஆண்டின் ஆரம்பமானது இம்முறை மிகவும் வித்தியாசமானதாக அமையவுள்ளது. மாணவர்களின் வளர்ச்சிக்கும், அவர்கள் புதியவற்றைக் கற்றுக்கொள்ளவும், அவற்றின் சிறப்புகளை எட்டவும் இந்த ஆண்டு வழிவகுக்கும். பாடசாலைகள் மீள ஆரம்பிக்கும்போது தமது குழந்தைகள் பாதுகாப்புடன்கூடிய கல்விச் சூழலில் தமது வகுப்புகளை ஆரம்பிக்கிறார்கள் என்ற மன நிறைவை பெற்றோர்கள்  அடைவர். ஒன்ராறியோவின் பள்ளிகள் மீளத் திறக்கப்படும்போது பெற்றோர்கள் தெரிந்துகொள்ள வேண்டிய 10 முதன்மையான விடயங்கள் பின்வருமாறு: அனைத்துஊழியர்களும் மாணவர்களும் ஒவ்வொரு நாளும் தாங்கள் பள்ளிக்குச் செல்லும் முன்னர் தமக்கான நோய் அறிகுறி பற்றிய சுய பரிசோதனையினை மேற்கொள்ளல் அவசியம். தமது உடல்நிலை சரியில்லை என உணர்ந்தால், அவர்கள் பள்ளிக்குச் செல்லாது வீட்டிலேயே இருத்தல் வேண்டும். கொவிட்-19நோய்த்தொற்று உள்ளதென சந்தேகிக்கப்பட்டாலோ அல்லது உறுதிப்படுத்தப்பட்டாலோ, பள்ளி நிர்வாகம் உடனடியாக அதுபற்றி அப்பகுதிக்கான பொது சுகாதார பிரிவுக்கு அறிவித்தல் வேண்டும். சந்தேகத்துக்குரிய அல்லது உறுதிப்பட்டுத்தப்பட்ட நோய்த்தொற்று அறிகுறிகளை ஒவ்வொரு நாளும் கல்விச்சபை பள்ளிச் சமுகத்துக்கும் ஒன்ராறியோ அமைச்சகத்துக்கும் அறிவித்தல் வேண்டும். நான்காம்வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் வகுப்பறைகள், நுழைவாயில் பகுதி உட்பட பாடசாலை கட்டடத்தின் அனைத்து பகுதிகளிலும் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும். மூன்றாம் வகுப்புக்குக் கீழ் உள்ள மாணவர்கள் முகக்கவசம் அணியவேண்டும் என அறிவுறுத்தப்படாவிட்டாலும்,  அவர்களும் முகக்கவசம் அணிவது சிறந்தது என ஊக்குவிக்கப்படுகிறார்கள். ஆசிரியர்களுக்கும் பள்ளி ஊழியர்களுக்கும் மருத்துவ பாதுகாப்பு கருவிகளை வழங்குவதற்கு ஒன்ராறியோ மானிலம் பள்ளி நிர்வாக உதவி நிதியை அளிக்கிறது. மாணவர்களுக்குவேண்டிய சுகாதார விதிமுறைகளைப் பயிற்றுவிப்பதுடன், கை கழுவுதல் பற்றியும் அதற்கான இடைவேளைகளையும் பாடசாலை நிர்வாகம் வழங்கும். ஆசிரியர்களும் பள்ளிப் பணியாளர்களும் மேலதிகமான சுகாதார பாதுகாப்பு பயிற்சியை பெற்றுக்கொள்வர். ஒவ்வொருமாணவரும் பள்ளியில் நாள் முழுவதும் முடிந்தவரை ஒரே குழுவில் குறிப்பிட்ட ஆசிரியருடன் பயில ஊக்குவிக்கப்படுவர். மேலதிகமான ஆசிரியர்கள் மேற்பார்வை செய்வதற்கென பணியில் அமர்த்தப்படுவர். பள்ளிகளுக்குஉடனடியாக உதவுவதற்கென 625 வரையான புதிய பொது சுகாதார ஊழியர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இவர்கள் நோய்த்தடுப்பு, நோய்ப் பரிசோதனை, நோய்த்தொற்றைக் கண்டறிந்து அதற்கான தணிப்பு உத்திகளைக் கையாள்தல் போன்ற பணிகளை மேற்கொள்வர். அனைத்துப்பாடசாலைகளும் நாள் முழுவதும் சுத்தம் செய்யப்படுவதை கவனித்துக்கொள்வதற்கென 1300 வரையான பாதுகாப்பாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளதுடன் அவர்களுக்கு வேண்டிய துப்புரவுப் பொருட்களும் வழங்கப்பட்டுள்ளது. பள்ளிப் பேருந்துகளும் தவறாமல் சுத்தம் செய்யப்பட்டு வருகின்றன. பெற்றோர்கள்உட்பட பள்ளிக்கு வருகை தருபவர்களுக்கான கட்டுப்பாடுகளை பாள்ளி நிர்வாகம் விதிக்கும். தரவுகளைப்பேணும் வகையில், மாணவர்களின் வருகைப் பதிவுகள், வகுப்பறையில் அவர்களுக்கு ஒதுக்கப்படும் இருக்கை விபரங்கள், பேருந்தில் வருகை தரும் மாணவர்களின் விபரங்கள், அனுமதி பெற்று பாடசாலைக்கு வருவோர் விபரங்கள், தற்காலிக ஆசிரியர்களின் விபரங்கள் போன்றவற்றை பள்ளி நிர்வாகம் சேகரித்து வைத்திருக்கும். பெற்றோர்களின்தெரிவுகளுக்கு மதிப்பளிக்கப்படும். 2020-2021 கல்வியாண்டின்போது  அனைத்து நிலை பாடசாலைகளிலும் நேரடியாக மாணவர்கள் வகுப்புகளுக்கு சமூகமளிப்பது அவர்களின் விருப்பத் தெரிவாக அமையும். வகுப்புகளுக்கு நேரடியாக சமூகமளிக்காது வெளியில் இருந்து கல்வி பயிலக்கூடிய பல வசதிகளை ஆண்டு முழுவதும் பள்ளிகள் ஏற்படுத்திக் கொடுக்கும். மாணவர்கள் மீண்டும் பள்ளிக்குச் செல்லும்வேளையில்,பெற்றோர்களும் ஆசிரியர்களும்  சமுகத்தில் உள்ள பள்ளிகளிலும் குழந்தை பராமரிப்பு மையங்களிலும், கொவிட்-19 தொற்றுகளை விரைவாக கையாள்வதற்கு ஏதுவான சூழ்நிலையை நாம் உறுதிப்படுத்துகிறோம்.      

மேலும்..

தியாக தீபம் திலீபனின் 33ஆவது நினைவேந்தல் – தரணியெங்கும் உணர்வெழுச்சியுடன் இன்று ஆரம்பம்.

அமைதிப் படையாகத் தாயக மண்ணில் காலடி எடுத்து வைத்து ஆக்கிரமிப்புப் படையாக ஈழத் தமிழர்களை வேரறுக்கும் படையாக மாறி, வயது, பால் வேறுபாடின்றி தேசத்து உறவுகளை வேட்டையாடி – சூறையாடி அழித்தொழித்த இந்திய இராணுவத்துக்கு எதிராக அஹிம்சை வழியில், நீராகாரமும் இல்லாது ...

மேலும்..