November 1, 2020 அன்று பிரசுரிக்கப்பட்டவை

யாழில் போதைப்பொருள் பாவனை கட்டுப்படுத்த கோப்பாய் பொலிஸாரிடம் பொதுமக்கள் கோரிக்கை!!!

யாழ்ப்பாணம் கல்வியங்காடு கோப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஜே/ 257 கிராமசேவையாளர் பிரிவில் அடங்கும் சிங்கராஜ வைரவர் கோவிலடி (சிங்கராஜ வீதி பழைய வீடு யாரும் அற்ற பற்றைக்காணி) வேளாதோப்பு வீதி ,விநாயகர்வீதி மைதானத்தடி, புதியசெம்மணிவீதி குளத்தடி, போன்ற இடங்களில் பல சிறுவயதைக்கொண்ட ...

மேலும்..

திருமலை பொது வைத்தியசாலை வைத்தியரொருவருக்கு கொரோனா.

திருகோணமலை பொது வைத்தியசாலையில் கடமையாற்றிய வைத்தியரொருவருக்கு கொரோனா தோற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக திருகோணமலை பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் டொக்டர் ஜகத் விக்ரமரத்ன தெரிவித்தார். விடுமுறை சென்று கடந்த 27 ஆம் திகதி வைத்தியசாலைக்கு வருகை தந்ததாகவும் அதனையடுத்து அவருக்கு பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாகவும் ...

மேலும்..

கோப்பாய் கல்வியியற் கல்லூரி இன்று முதல் கொரோனா சிகிச்சை நிலையமாக இயங்கும்!

யாழ்ப்பாணம் கோப்பாய் தேசிய கல்வியியற் கல்லூரி இன்று(02)திங்கட்கிழமை முதல் கொரோனா சிகிச்சை நிலையமாக இயங்கவுள்ளது என யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். கொரோனாத் தொற்று அதிகரித்து வருகின்ற நிலையில் மருதங்கேணி வைத்தியசாலை கொரோனா சிகிச்சை வைத்தியசாலையாக முதலில் ...

மேலும்..

கோட்டாவிடம் இரக்க குணம் இல்லை; மக்களைச் சாகடிக்க முயல்கிறது அரசு – ஐக்கிய மக்கள் சக்தி குற்றச்சாட்டு

கொரோனா வைரஸ் என்ற கொடிய நோய் இன்று சமூகத்துக்குள் ஊடுருவி பெரும் பாதிப்புக்களை ஏற்படுத்தி வருகின்றது. ஆனால், அரசோ நாட்டை முழுமையாக முடக்காமல் மௌனம் காக்கின்றது. இந்தநிலையில், மக்களை அமைதியாகச் சாகடிக்க அரசு முயல்கின்றதா என்ற கேள்வி எழுந்துள்ளது." - இவ்வாறு ஐக்கிய ...

மேலும்..

11 ஆயிரத்தைக் கடந்தது ‘கொரோனா’ இன்றும் 397 பேருக்குத் தொற்று உறுதி

இலங்கையில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11 ஆயிரத்தைக் கடந்துள்ளது. இன்று மாத்திரம் 397 பேருக்குக் கொரோனாத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சமூகத்தில் இருந்த 356 பேருக்கும், தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருந்த 41 பேருக்குமே இன்று தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் ...

மேலும்..

மேல் மாகாணத்தில் பிறப்பிக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் 2020/11/02 திங்கக்கிழமை நீக்கப்படமாட்டாது …

மேலும்..

கொவிட்-19 தொற்றிலிருந்து நாடும் நாட்டு மக்களும் விடுபட வேண்டி பிரதமரின் வழிகாட்டலின் கீழ் நாடளாவிய ரீதியில் இந்து ஆலயங்களில் விசேட வழிபாடு

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் பிரதமரின் வழிகாட்டுதலின் கீழ் புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் அறிவுறுத்தலுக்கு அமைவாக, இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால்,  இலங்கைத் திருநாட்டில்  வாழுகின்ற மக்கள் அனைவரும்,  கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து மீள்வதற்காக, அருளாசி ...

மேலும்..

2020 நவம்பர் மாதம் 01ம் திகதி பதிவாகியுள்ள கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை…

2020 நவம்பர் மாதம் 01ம் திகதி திவுலப்பிட்டிய மற்றும் பேலியகொடை கொத்தணியில் பதிவாகியுள்ள கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை பின்வருமாறு இதுவரையில் பதிவானோரின் எண்ணிக்கை -7185 தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்தில் உள்ளோர் -06 நெருக்கி பழகியவர்கள் பேலியகொடை மீன் சந்தை -187 மொத்தம் -7378 இன்றையதினம்-193

மேலும்..

ஏழைகளுக்கு “நாட்டினை உருவாக்கும் சௌபாக்கியத்தின் நோக்கு” எனும் ஜனாதிபதியின் திட்டத்தின் கீழ் காரைதீவில் வீடுகள் கையளிப்பு !

ஏழைகளுக்கு "நாட்டினை உருவாக்கும் சௌபாக்கியத்தின் நோக்கு" எனும் ஜனாதிபதியின் திட்டத்தின் கீழ் காரைதீவில் வீடுகள் கையளிப்பு ! அதிமேதகு ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ அவர்களின் "நாட்டினை உருவாக்கும் சௌபாக்கியத்தின் நோக்கு" எனும் கொள்கைக்கு அமைய உற்பத்தித்திறன் மிக்க ஒரு பிரஜை மற்றும் மகிழ்ச்சியுடன் ...

மேலும்..

இலங்கையில் கண்டறியப்பட்ட புதிய கொரோனா வைரஸ் மிகவும் வேகமாக பரவும் வகையைச் சேர்ந்தது – வேறு நோய் உள்ளவர்களை வெகுவாக பாதிக்கக்கூடும்

இலங்கையில் தற்போது கண்டறியப்பட்ட புதிய கொரோனா வைரஸ் மிகவும் வேகமாக பரவும் வகையைச் சேர்ந்தது என சுகாதார அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் டொக்டர் சஞ்சீவ முனசிங்க தெரிவித்தார். இந்த நுண்ணுயிர் முன்னர் பரவியதைவிட வித்தியாசமான வைரசாக உள்ளது. இது ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளதாக செயலாளர் கூறினார். இந்த வைரஸ் கந்தக்காட்டில் பரவிய வைரஸ் வகை ...

மேலும்..

மேல் மாகாணத்தில் அமுல்ப்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு எதிர்வரும் நவம்பர் மாதம் 09 ஆம் திகதி அதிகாலை 5.00 மணி வரையில் நீடிக்கப்பட்டுள்ளது!

.மேல் மாகாணத்தில் அமுல்ப்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு எதிர்வரும் நவம்பர் மாதம் 09 ஆம் திகதி அதிகாலை 5.00 மணி வரையில் நீடிக்கப்பட்டுள்ளது விசேட அறிவிப்பொன்றை மேற்கொண்டு இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரால் சவேந்திர சில்வா இன்று(01)  பிற்பகல்  இதனை தெரிவித்துள்ளார். முன்னதாக மேல் ...

மேலும்..

வெளிநாடுகளுடனான தொடர்பின் போது எங்களது நாட்டு நலன்களில் இருந்து கொண்டு அந்த முடிவுகளை எடுப்போம்- அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

வெளிநாடுகளுடனான தொடர்பின் போது எங்களது நாட்டு நலன்களில் இருந்து கொண்டு அந்த முடிவுகளை எடுப்போம் என கடற்தொழில் துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். வவுனியா, மன்னார் வீதியில் வன்னி மாவட்ட அபிவிருத்திக் குழு இணைத் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கு.திலீபன் அவர்களின் அபிவிருத்திக் குழு இணைத் தலைவர் அலுவலகத்தை திறந்து வைத்த பின் ஊடகங்களுக்கு கருத்து ...

மேலும்..

இலங்கையின் பொருளாதாரத்தை 2015 ஆம் ஆண்டுக்கு முன்பிருந்த மட்டத்திற்கு வளர்ச்சியுறச் செய்யமுடியும்.

தொழில் முயற்சியாளர்களை மீண்டும் மேம்படுத்தி, தனியார் அபிவிருத்தித் திட்டங்களை அமுலாக்குவதன் மூலம் பொருளாதாரத்தை மேம்படுத்த முடியும் என ராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார். இத்தகைய முயற்சிகள் 2015ஆம் ஆண்டுக்கு முன்னர் இருந்த ஆறரை சதவீத பொருளாதார வளர்ச்சி நோக்கி நாட்டை இட்டுச் செல்ல வழிவகுக்கும். இந்த வருடத்தின் முதல் பாதியில் பொருளாதார பின்னடைவு ஏற்பட்டிருந்தது. ...

மேலும்..

மூதூரில் மூவருக்கு கொரோனா தொற்று உறுதி- திருகோணமலை மாவட்டத்தில் 12 பேருக்கு கொரோனா பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வீ.பிரேமானந்

திருகோணமலை-மூதூர் பகுதியில் 19  பேருக்கு பீசீஆர் பரிசோதனை முன்னெடுக்கப்பட்ட நிலையில் மூன்று பேருக்கு  கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் 12 பேர் மாவட்டத்தில் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வீ.பிரேமானந்  தெரிவித்தார். திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பணியகத்தில் இன்று (01) மாலை 2.30 மணியளவில்  இடம்பெற்ற சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.  திருகோணமலை ...

மேலும்..

வவுனியா வடக்கு நெடுங்கேணியில் உள்ள வர்த்தக நிலையங்களை நாளை திறக்க அனுமதி

வவுனியா வடக்கு நெடுங்கேணி பகுதியில் வீதி அபிவிருத்தி நடவடிக்கையில் ஈடுபட்டவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதையடுத்து நெடுங்கேணி, ஒலுமடு, நைனாமடு ஆகிய பகுதிகளில் உள்ள வர்த்தக நிலையங்களை கடந்த 25 ஆம் திகதி முதல் மறு அறிவித்தல் வரை மூடுமாறு சுகாதார துறையினர் ...

மேலும்..

நாவிதன்வெளியில் உங்களுக்கு வீடு நாட்டுக்கு எதிர்காலம் நாவிதன்வெளி பிரதேசத்தில் 17 வீடுகள் உத்தியோகபூர்வமாக கையளிப்பு

ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ அவர்களின் நாட்டினை உருவாக்கும் சௌபாக்கியத்தின் நோக்கு என்ற கொள்கைக்கு அமைய பிரதமரின் வழிகாட்டுதலில்  உருவான 'உங்களுக்கு வீடு நாட்டுக்கு எதிர்காலம்' எனும் வேலைத்திட்டத்தின் கீழ் அம்பாறை மாவட்டம்  நாவிதன்வெளி பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட 20 கிராம் சேவையாளர் ...

மேலும்..

யாழில் கடல் நீர் உட்புகுந்தமை தொடர்பில் ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது, எனினும் உண்மையான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை – அரசாங்க அதிபர் க.மகேசன்

யாழில் கடல் நீர் உட்புகுந்தமை தொடர்பில் ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது, எனினும் உண்மையான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை என யாழ் அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்தார். யாழ் மாவட்டத்தில் கடல் நீர் உட்புகுந்த நிலைமை தொடர்பில் யாழ் மாவட்ட அரசாங்க அதிபரிடம் வினவியபோதே அவர் ...

மேலும்..

மட்டு மாவட்டத்தில் 1592 குடும்பங்களைசேர்ந்த 3959பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் 14 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் தங்களின் விடுகளில் தனிமைப்படுத்தல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அதற்கு மேலதிகமாக கொரோனா தொற்று என மருத்து பரிசோதனைகள் மூலம் உறுதியானவர்கள் மாவட்டத்தில் 35பேர் தற்போது வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுவருகின்றனர் இதில் கொறளைப்பற்று மத்தி பிரதேச ...

மேலும்..

உடுவில் பகுதியில்தொற்று நீக்கும் நடவடிக்கை முன்னெடுப்பு.

உடுவில் பகுதியில் கொரோனா தொற்றாளர்கள் இருவர் இனங்காணப்பட்டுள்ள நிலையில் உடுவில் பிரதேச சபையினர்,உடுவில் பொது சுகாதார பரிசோதகர்கள் , சுகாதார பிரிவுஉத்தியோகத்தர்கள் மற்றும் பொலீசார் உதவியுடன் உடுவில் கிராமத்தில் தொற்று நீக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. அப்பகுதி மக்கள் பின்பற்ற வேண்டிய சுகாதார நடைமுறைகள்,மற்றும் ...

மேலும்..

வாழைச்சேனை மத்தி சுகாதாரப் பிரிவில் மேலும் ஐவருக்கு கொரோனா தொற்று.

வாழைச்சேனை மத்தி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகப் பிரிவில் இன்று (1) ஐந்து கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவினர் அறிவித்துள்ளனர். குறித்த சுகாதார வைத்திய அதிகாரிப் பிரிவுக்குட்பட்ட வாழைச்சேனையில் மூவரும் பிறைந்துறைச்சேனையில் ஒருவரும் மாவடிச்சேனையில் ஒருவருமாக மொத்தம் ஐந்து புதிய தொற்றாளர்கள் ...

மேலும்..

யாழ்ப்பாணம் – நல்லூர் பகுதியில் கொரோனா தொற்றுக்குள்ளானவருடன் தொடர்பை பேணியவர்கள்,தனிமைப்படுத்தலில் ………

யாழ்ப்பாணம் - நல்லூர் பகுதியில் கொரோனா தொற்றுக்குள்ளானவருடன் தொடர்பை பேணியவர்கள், சுகாதாரப் பிரிவினரால் தொடர்ச்சியாக சுய தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றார்கள். அந்த வகையில் தொற்றாளர்களுடன் தொடர்பினை பேணினர் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் மறவன்புலவு மற்றும் கைதடி - நாவற்குழி தெற்கு பகுதிகளில் இரண்டு குடும்பங்கள் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. சாவகச்சேரி பிரதேச சுகாதார உத்தியோகத்தர்களால் குறித்த வீடுகளில்தனிமைப்படுத்தப்பட்டதற்கான அறிவுறுத்தல் ஸ்ரிக்கர்கள் ...

மேலும்..

கோமரங்கடவல காட்டுப்பகுதியில் வேட்டையாடச் சென்ற 8 பேர் கைது!

திருகோணமலை-கோமரங்கடவல காட்டுப்பகுதியில் உள்ளூரில் உற்பத்தி செய்யப்பட்ட துப்பாக்கியுடன் வேட்டையாடச் சென்ற எட்டு சந்தேக நபர்களை  கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.  இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் புல்மோட்டை பகுதியைச் சேர்ந்த 34, 38, 40 வயது உடையவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் நேற்றிரவு (31) ...

மேலும்..

கொரோனா அறிகுறிகளுடன் தென்பட்ட பெண்ணொருவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டதையடுத்து, தனிமையிலிருந்த அவரது மாற்றுத்திறனாளியான மகன் தற்கொலை செய்து கொண்ட சோகமான சம்பவம் !

கொரோனா அறிகுறிகளுடன் தென்பட்ட பெண்ணொருவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டதையடுத்து, தனிமையிலிருந்த அவரது மாற்றுத்திறனாளியான மகன் தற்கொலை செய்து கொண்ட சோகமான சம்பவம் பதிவாகியுள்ளது. ஹோமாகமவில் இந்த துயர சம்பவம் நடந்தது. நேற்று (31) காலை தனிமையிலிருந்த வீட்டில் இளைஞன் சடலமாக மீட்கப்பட்டார். 25 வயதான மாற்றுத்திறனாளியான ...

மேலும்..

T-20 ;1000 சிக்ஸர்கள் – கிறிஸ் கெயில் சாதனை

TT-20 போட்டிகளில் ஆயிரம் சிக்ஸர்களை விளாசிய முதலாவது வீரர் என்ற பெருமை கிறிஸ் கெயிலுக்கு கிடைத்துள்ளது.  அபுதாபியில் இடம்பெற்ற 50ஆவது ஐ.பி.எல் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக எட்டு சிக்ஸர்கள் அடங்கலாக 99 ஓட்டங்களை குவித்த வேளையில், கிறிஸ் கெயில் இந்த ...

மேலும்..

இங்கிலாந்தும் சுமார் ஒரு மாதம் லாக் டவுன் ஆகிறது ; பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவிப்பு!

இங்கிலாந்தில் நவம்பர் 5 முதல் டிசம்பர் 2 வரை முழு ஊரடங்கு அமு ல்படுத்தப்படும் என பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவித்துள்ளார். ஐரோப்பிய நாடுகளில் கொரோனா வைரசின் 2-வது அலை பரவ தொடங்கி உள்ளது. குறிப்பாக பிரான்சில் கொரோனா வைரஸ் உச்சத்தில் உள்ளது. பிரான்ஸ் நாட்டில் ...

மேலும்..

மேல் மாகாணத்தில் அமுலாகும் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் – நீக்குவது பற்றி இன்று மாலை தீர்மானம்

மேல் மாகாணத்தில் அமுலாகும் தனிமைப்படுத்தல் ஊரடங்குச்சட்டத்தை நீக்குவது குறித்து, கொவிட் தொற்றுப் பரவலை ஆராய்ந்த பின்னரே தீர்மானிக்கப்படும் என்று பொலிஸ் ஊடக பேச்சாளரும் பிரதிபொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்தார். இந்த மாகாணத்தில் கடந்த 29ம் திகதி தனிமைப்படுத்தல் ஊரடங்குச்சட்டம் அமுலானது. இதனை நாளை அதிகாலை 5.00 மணிக்கு நீக்குவதென முன்னர் தீர்மானிக்கப்பட்டிருந்தது. எனினும், கிடைக்கும் ...

மேலும்..

கண்ணியமான மனிதநேய மருத்துவ சேவை மூலம் தமிழ்,முஸ்லிம் மக்களின் மனங்களை வென்றார் டாக்டர் கிருஷ்ணகுமார்!

தமிழ் முஸ்லிம் நல்லுறவை வெகுவாக கடைப்பிடித்து கண்ணியமும் கௌரவமாகவும் மேலோங்க மருத்துவம் செய்த களுவாஞ்சிகுடி சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் கிருஷ்ணகுமார் அவர்கள் தனது முஸ்லிம் நண்பர்கள் அவர்களின் உறவினர்களிடம் கூட சிறந்த உறவையும், கௌரவத்தையும் பேணிவந்ததுடன் பிராந்தியத்தின் நன்மதிப்பை பெற்ற ...

மேலும்..

மீனவர்கள் கடன்களைச் செலுத்துவதற்கு சலுகைக் காலம்….

மீனவர்கள் கடன்களை திருப்பிச் செலுத்துவதற்கான நிவாரண காலத்தை பிரகடனப்படுத்தி மூலதன கடன் வழங்கும் திட்டமொன்றை அமுலாக்கப்போவதாக ராஜாங்க அமைச்சர் காஞ்சன விஜயசேகர தெரிவித்துள்ளார். கடற்றொழில் துறைமுகங்களில் குவிந்துள்ள மீன்களைக் கொள்வனவு செய்வதற்கு முப்பது கோடி ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. கடற்றொழில் அமைச்சின் இடையீட்டுடன் மீன்கள் கொள்வனவு ...

மேலும்..

ரோஹிங்கியா அகதிகளை கடத்தியதாக இந்தோனேசியாவில் நால்வர் கைது

மியான்மரைச் சேர்ந்த ரோஹிங்கியா முஸ்லீம் அகதிகளை இந்தோனேசியாவின் ஏசெஹ் பகுதிக்கு சட்டவிரோதமாக கடத்திய விவகாரத்தில் ஏசெஹ் பிராந்திய காவல்துறையினரால் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் கைது செய்யப்பட்ட 4 பேரில் 2 பேர் இந்தோனேசியர்கள் என்றும் 2 பேர் ரோஹிங்கியாக்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு எதிரான ஆதாரமாக இவர்கள் வசமிருந்த ஜி.பி.எஸ். கருவிகள், அலைப்பேசிகள் மற்றும் ஒரு படகினை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். இந்தோனேசியா குடிவரவுச் சட்டத்தின் கீழ் இவர்கள் மீது வழக்கு பதியப்பட்டுள்ள நிலையில், ஆட்கடத்தல் குற்றம் நிரூபிக்கப்பட்டால் இவர்களுக்கு 5 ஆண்டுகள் முதல் 15 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும். அத்துடன் இவர்களுக்கு 500 மில்லியன் இந்தோனேசிய ரூபாய் முதல் 1.5 பில்லியன் இந்தோனேசிய ...

மேலும்..

யாழில் அடையாளம்காணப்பட்ட கொரோனா தொற்றாளர்கள்!

யாழ்ப்பாணம் மாநகர சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் வசிக்கும், கொழும்பில் உணவகம் நடத்தும் உரிமையாளருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், அவருடன் பேருந்தில் பயணித்தவர்களை தமது பிரதேச சுகாதார மருத்துவ அதிகாரி அலுவலகத்துடன் உடனடியாகத் தொடர்பு கொள்ளுமாறு கோரப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் நகரில் உள்ள அழகு சாதனப் பொருள்கள் விற்பனை நிலையங்கள் சில மூடப்பட்டு முத்திரையிடப்பட்டுள்ளன. அத்தோடும் மேலும் ...

மேலும்..

ஜனாதிபதி, தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை பற்றியும் மனிதாபிமான ரீதியில் செயற்படுவார் என எதிர்பார்க்கிறேன் -மூதூர் பிரதேச சபை உப தவிசாளர் சி.துரைநாயகம்

மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள கைதிகளுக்கு பொதுமன்னிப்பளித்து விடுதலை செய்யும் ஜனாதிபதி, சந்தேகத்தின்பேரில் கைது செய்து விசாரணைகள் இன்றி தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை பற்றியும் மனிதாபிமான ரீதியில் செயற்படுவார் என தாம் எதிர்பார்ப்பதாக மூதூர் பிரதேச சபை உப ...

மேலும்..

தலை மன்னாரில் சுய தனிமைப்படுத்தலில் இருந்த வயோதிபர் உயிரிழப்பு.

தலை மன்னார் பியர் பகுதியில் சுய தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டிருந்த முதியவர் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை உயிரிழந்துள்ளதாக மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் டி.வினோதன் தெரிவித்தார். குறித்த நபர் கடந்த 23ஆம் திகதி கொழும்பு கொச்சிக்கடை பகுதியில் இருந்து மன்னாருக்கு ...

மேலும்..

24 மணிநேரத்தில் 153 பேர் கைது!

ஊரடங்குச் சட்டத்தினை மீறிய குற்றச்சாட்டில் இன்று காலை 6.00 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணிநேரத்தில் 153 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் இதன்போது 35 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும்,முகக் கவசம் அணியாத மற்றும் கோரோனாவுக்கான சுகாதார பாதுகாப்பு ஆலோசனைகளை பின்பற்றத் தவறிய குற்றச்சாட்டில் ...

மேலும்..

மதுபோதையில் கடை உரிமையாளரை தாக்கிய மொரவெவயில் இருவர் கைது

திருகோணமலை-மொரவெவ  பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சில்லறைக் கடை உரிமையாளர் ஒருவரை மது போதையில் தாக்கிய குற்றச்சாட்டின் பேரில் இரண்டு இளைஞர்களை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் திருகோணமலை-10ம் கட்டை  மற்றும் மட்கோ, மஹாமாயபுர பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய ...

மேலும்..

மரித்த விசுவாசிகளின் தின வழிபாட்டிற்காக மட்டக்களப்பு புதூர் ஆலையடிச்சோலை சேமக்காலை துப்பரவு…

எதிர்வரும் 02ம் திகதி இடம்பெறவுள்ள மரித்த விசுவாசிகளின் தின அனுஷ்டிப்பு வழிபாட்டிற்காக மட்டக்களப்பு புதூர் ஆலையடிச்சோலை சேமக்காலையை துப்பரவு செய்யும் பணிகள் இன்றைய தினம் மாநகரசபை ஊழியர்களினால் மேற்கொள்ளப்பட்டது. மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினர் அந்தோனி கிருரஜன் அவர்களின் ஏற்பாட்டில் மேற்படி சிரமதான நிகழ்வு ...

மேலும்..