November 2, 2020 அன்று பிரசுரிக்கப்பட்டவை

தனியார் வங்கி முகாமையாளருக்கு கொரோனா தொற்று ; தொற்று நீக்கி தெளிக்கப்பட்டு தொற்று நீக்கம் செய்யப்பட்டது

அட்டன் நகரில் அமைந்துள்ள தனியார் வங்கி ஒன்றுக்கு இன்று (03.11.2020) காலை தொற்று நீக்கி தெளிக்கப்பட்டு தொற்று நீக்கம் செய்யப்பட்டது.  இதற்கான நடவடிக்கை அட்டன் – டிக்கோயா நகரசபையால் முன்னெடுக்கப்பட்டது. குறித்த தனியார் வங்கியின் முகாமையாளர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது. ...

மேலும்..

விமானப்படை சிப்பாய் மாடியிலிருந்து விழுந்து மரணம்.

திருகோணமலை-சீனக்குடா விமானப் படை முகாமில் கடமையாற்றி வந்த சிப்பாய் ஒருவர் மாடியிலிருந்து விழுந்து திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதையடுத்து உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். இச்சம்பவம் இன்று (03) அதிகாலை ஒரு மணியளவில் இடம்பெற்றுள்ளது. இவ்வாறு உயிரிழந்தவர் குருநாகல்- கல்கமுவ பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய ...

மேலும்..

ஊவா, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை, முல்லைத்தீவு மற்றும் வவுனியா மாவட்டங்களிலும் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம்!

ஊவா, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை, முல்லைத்தீவு மற்றும் வவுனியா மாவட்டங்களிலும் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் இன்று காலை வெளியிட்டுள்ள ...

மேலும்..

மூதூர் பிரதேசத்தில் திருமணம் செய்த மனைவிக்கு போதை ஊட்டி கூட்டு பாலியல் வல்லுறவு இடம்பெறுவதற்கு களம் அமைத்துக் கொடுத்த கணவருக்கு 15 வருட கடூழிய சிறை தண்டனை வழங்குமாறு திருகோணமலை மேல் நீதிமன்றம் உத்தரவு.

திருகோணமலை- மூதூர் பிரதேசத்தில் திருமணம் செய்த மனைவிக்கு போதை ஊட்டி கூட்டு பாலியல் வல்லுறவு இடம்பெறுவதற்கு களம் அமைத்துக் கொடுத்த கணவருக்கு 15 வருட கடூழிய சிறை தண்டனை வழங்குமாறு திருகோணமலை மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் ...

மேலும்..

ஜனாஸா எரிப்பு விடயத்தை அரசு மீள் பரிசீலனை செய்யவேண்டும்…

கொரோனாவினால் மரணிக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை எரிப்பது குறித்து அரசு மீள் பரிசீலனை செய்ய வேண்டும் என திருகோணமலை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப்  பகிரங்க வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக ஜனாதிபதி, பிரதமர், நீதி அமைச்சர் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் ஆகியோருக்கு ...

மேலும்..

கொவிட் – 19 முன் பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பில் முதல்வர் தலைமையில் விசேட குழு யாழ் நகர் பகுதிக்கு கள விஜயம்…

அதிகரித்துவரும் கொவிட் 19 பரவலில் இருந்து பொது மக்களை பாதுகாப்பதற்காக மேற்கொள்ள வேண்டிய விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும், தற்போதைய நகர்ப்பகுதியின் நிலைமைகள் தொடர்பிலும் ஆராய்வாதற்காக யாழ் மாநகர முதல்வர் கௌரவ இம்மானுவல் ஆனல்ட் மற்றும் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலைய பிரதம ...

மேலும்..

ஊடகவியலாளர்களுக்கு எதிரான அநீதிகள்: விசாரிக்க ஜனாதிபதி ஆணைக்குழு தேவை – சுதந்திர ஊடக இயக்கம் வலியுறுத்து…

"ஊடகவியலாளர்களுக்கு எதிரான குற்றங்களுக்கு நீதி வழங்குவது ஒவ்வொரு அரசினதும் பொறுப்பாக இருந்தாலும், இலங்கையில் ஊடகவியலாளர்களுக்கு எதிரான எந்தவொரு குற்றத்துக்கும் நீதி வழங்கப்படாத வரலாறே காணப்படுகின்றது." - இவ்வாறு சுதந்திர ஊடக இயக்கம் தெரிவித்துள்ளது. நவம்பர் 2ஆம் திகதி அனுஷ்டிக்கப்படுகின்ற ஊடகவியலாளர்களுக்கு எதிரான குற்றங்களுக்கு தண்டனை ...

மேலும்..

வடக்கில் கொரோனாவுக்கு முடிவுகட்ட தீவிர நடவடிக்கை – கடற்படையினர் விசேட ரோந்து…

"வடக்கு மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களிலும் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான தீவிர நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. விசேடமாக வடக்கு மாகாணத்தினுள் கடற்பரப்பின் ஊடாக அத்துமீறி நுழைபவர்களைத் தடுப்பதற்காகக் கடற்படையினர் விசேட ரோந்துப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்." - இவ்வாறு வடக்கு மாகாண ஆளுநர் திருமதி ...

மேலும்..

இருபதை ஆதரித்ததற்காக ஏன் விமர்சிக்க வேண்டும் ? கடந்த காலங்களில் கற்றுக்கொண்ட பாடங்கள்என்ன ? மக்கள் முட்டாள்களா ?

இருபதாவது அரசியல் யாப்பு திருத்தத்துக்கு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் நிபந்தனையற்ற ஆதரவு வழங்கியதன் காரணமாக முஸ்லிம் மக்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பையும், விமர்சனத்தையும் உண்டுபண்ணியுள்ளது. காரணமில்லாமல் கண்ணை மூடிக்கொண்டு இவர்களை யாரும் விமர்சிக்கவில்லை. கடந்தகால படிப்பினையும், இவர்களின் தூரநோக்கற்ற அரசியலும், சுயனலப்போக்குமே இதற்கு ...

மேலும்..

அத்துமீறி வீடொன்றில் கொள்ளையிட்ட நபரை அடையாளம் காண பொதுமக்களின் உதவ வேண்டும்…

பாறுக் ஷிஹான்..   அத்துமீறி வீடொன்றில் வெளிநாட்டு பணம் மற்றும்  நகை ஆபரணங்களை கொள்ளையிட்ட நபர் ஒருவரை அடையாளம் காண பொதுமக்களின் உதவியை சம்மாந்துறை பொலிஸார் கோரியுள்ளனர். அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவில் உள்ள காரைதீவு-6 குறிச்சி  பகுதியில் 2020.10.18 ஞாயிற்றுக்கிழமை 11 மணியளவில் ...

மேலும்..

சஹ்ரான் ஹாசீமுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்த 12 சந்தேக நபர்களுக்கு மீண்டும் விளக்கமறியல்…

பாறுக் ஷிஹான் சஹ்ரான் ஹாசீமுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட 12  சந்தேக நபர்களை  மீண்டும் எதிர்வரும்  நவம்பர் மாதம் 16  ஆம்    திகதி வரை  விளக்கமறியலில்  வைக்குமாறு  கல்முனை நீதிமன்று உத்தரவிட்டது. குறித்த வழக்கு  திங்கட்கிழமை(02)   அன்று அம்பாறை மாவட்டம் ...

மேலும்..

எந்தவொரு அரசியல்வாதிகளும் அம்பாறை மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்படவில்லை -வைத்திய கலாநிதி ஜி.சுகுணன்

எந்தவொரு அரசியல்வாதிகளும் அம்பாறை மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்படவில்லை எனவும் எந்த ஒரு   வெளி  மாவட்டத்திலிருந்தும் அம்பாறை  மாவட்டம் கல்முனை  வருபவர்கள் அனைவரும் தம்மை சுய தனிமைப்படுத்தலிற்குட்படுத்தப்படவேண்டுமென   கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி டொக்டர் ஜீ. சுகுணன் ...

மேலும்..

வட இலங்கை சங்கீத சபையின் பரீட்சைகள் ஒத்தி வைக்கப்பட்டன

வட இலங்கை சங்கீத சபையின் பரீட்சைகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக அதன் தலைவர் எஸ்.சந்திரராஜ் தெரிவித்துள்ளார். வட இலங்கை சங்கீத சபையினால் நாடாளவிய ரீதியில் எதிர்வரும் 7 ஆம் திகதி மற்றும் 8 ஆம் திகதி சகல மட்டங்களுக்குமான எழுத்துப் பரீட்சைகள் நடைபெறும் என ...

மேலும்..

வாழைச்சேனை-உயர் மட்ட கூட்டம் !

வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலைமை தொடர்பில் வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் உயர் மட்டகூட்டம்   இன்று(02) திங்கட்கிழமை இடம் பெற்றது. வாழைச்சேனை பொலிஸ் பிரிவு முழுவதும் ஒன்பது நாட்களாக தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டு காணப்பட்டு வருகின்ற ...

மேலும்..

மலையக பெருந்தோட்டப்பகுதிகளில் உள்ள அனைத்து பிரதான வீதிகளும் காபட் பாதைகளாக மாற்றியமைக்கப்படும் – ராமேஷ்வரன் எம்.பி

மலையக பெருந்தோட்டப்பகுதிகளில் உள்ள அனைத்து பிரதான வீதிகளும் காபட் பாதைகளாக மாற்றியமைக்கப்படும்." - என்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் நிதிச்செயலாளரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மருதபாண்டி ராமேஷ்வரன் தெரிவித்தார். புரட்டொப் பாதையை புனரமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, " அமரர். ஆறுமுகன் ...

மேலும்..

22ஆவது கொரோனா மரணம்: சுகாதார அதிகாரிகள் விளக்கம்…

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 22 ஆக உயர்வடைந்துள்ளது என அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. போதைப்பொருக்கு அடிமையான 27 வயது இளைஞர் ஒருவர், நோய் அறிகுறிகளுடன் கடந்த 31ஆம் திகதி பாணந்துறை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருந்தபோது வைத்தியசாலைக்குள்ளேயே தற்கொலை செய்துகொண்டிருந்தார். இவருக்குக் கொரோனாத் தொற்று இருப்பது பிரேத பரிசோதனையின்போது உறுதி செய்யப்பட்ட நிலையில், ...

மேலும்..

சிவநேசதுறை சந்திரகாந்தன் சிறைச்சாலை அத்தியட்சகரின் அனுமதியினைப்பெற்று மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டத்தில் கலந்துகொள்ள முடியும் ………

மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டத்தில்  நாடாளுமன்ற உறுப்பினர் சிவநேசதுறை சந்திரகாந்தன் கலந்துகொள்வதற்கான அனுமதி பெறுவதற்காக வழக்கு மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில் இன்று(02) நடைபெற்றது. இதன்போது  சிவநேசதுறை சந்திரகாந்தன் பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் சிறையிலிருந்து நீதிமன்றத்திற்கு அழைத்துவரப்பட்டார். மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் ...

மேலும்..

யாழ் மாநகர அனுமதியின்றி அமைக்கப்பட்ட தனியார் காணிச் சுற்றுமதில் இடைநிறுத்தம்

மாநகரசபையின் 10 ஆம் வட்டாரம் ஆறுகால் மடம் பகுதியில் மழை நீர் வழிந்தோடும் வடிகாலை தடுத்து நிறுத்தும் வகையில் மாநகரசபையின் அனுமதி இன்றி சட்ட விரோதமாக அமைக்கப்பட்டுக் கொண்டிருந்த தனியார் காணி சுற்றுமதில் தொடர்பில் கிடைக்கப்பெற்ற ...

மேலும்..

சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் – ஜீவன் தொண்டமான்

" அட்டனில் கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்கான உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. 10 தொற்றாளர்களே அடையாளம் காணப்பட்டனர். 80 பி.சி.ஆர் பரிசோதனை முடிவுகள் 'நெகடிவ்' என வெளிவந்துள்ளன. இது மகிழ்ச்சியளிக்கின்றது. எனினும், மக்கள் தொடர்ந்தும் சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றவேண்டும்." - ...

மேலும்..

அரச ஊழியர்கள் வீடுகளிலிருந்தே பணியாற்றும் முறைமை இன்று முதல் அமுலில் ……

அரச ஊழியர்கள் வீடுகளிலிருந்தே பணியாற்றும் முறைமை இன்று (02) முதல் அமுலுக்கு வருவதாக பொதுநிர்வாக சேவை, மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கிணங்க, அந்தந்த நிறுவனங்களுக்கு தேவையான ஊழியர்களின் எண்ணிக்கையை நிர்ணயிக்கும் அதிகாரம் நிறுவன அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சின் செயலாளர் ...

மேலும்..

பாடசாலைகளை மீண்டும் திறப்பது பற்றி வார இறுதியில் முடிவு -கல்வியமைச்சர் ஜி எல். பீரிஸ்

பாடசாலைகளை மீண்டும் மூன்றாம் தவணைக் கல்வி நடவடிக்கைக்காக திறப்பது குறித்த இறுதி முடிவு இந்த வார இறுதியில் எட்டப்படும் என்று கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார் இன்று(02) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்தார் மேலும் மாணவர்களின் சுகாதார பாதுகாப்பு ...

மேலும்..

புஸ்ஸலாவ – புரொட்டப் தோட்ட வீதியை புனரமைக்க நடவடிக்கை.

நீண்ட காலமாக குன்றும் குழியுமாக காணப்பட்ட  புஸ்ஸலாவ – புரொட்டப் பிரிவு வீதியை இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் அவர்களின்  மூலம் அபிவிருத்தி  செய்வதற்காக பணிகள் இன்று (02) ஆரம்பித்து வைக்கப்பட்டது. இராஜங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானின் வேண்டுகோளுக்கமைய புஸ்ஸலாவ – புரொட்டப் பிரிவு தோட்ட சுமார் 19 ...

மேலும்..

யாழ் மாநகரத்திற்குற்பட்ட உணவகங்களில் அமர்ந்து உணவருந்துவதை முற்றாக இடைநிறுத்துங்கள். முதல்வர் ஆனல்ட் வேண்டுகோள்

நாட்டில் அதிகரித்துவரும் கொவிட் 19 தாக்கத்திலிருந்து நாம் பாதுகாப்புடன் உரிய சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றுவது மிகுந்த அவசியமாகும். அந்த வகையில் சமூக இடைவெளி, முகக் கவசம் அணித்தல் மற்றும் கைகளை அடிக்கடி தொற்றுநீக்கிகளைக் கொண்டு சுத்தம் செய்தல் போன்றவை அவசியமாக நாம் ...

மேலும்..

அனுமதி பெற்ற நடமாடும் வியாபாரிகள் மாத்திரம் ஊடரங்கு பகுதியில் விற்பனை செய்யலாம்

ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் அனுமதி பெற்ற நடமாடும் வியாபாரிகள் மாத்திரம் வியாபாரம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என்று விசேட கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் கொரோனா நோயாளர்கள் அதிகரித்து காணப்படுவதால் மக்களின் உணவு பிரச்சனைகள் தொடர்பில் ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி ...

மேலும்..

வாழைச்சேனை சுகாதார பிரிவில் இவ்வருடம் 315 பேர் டெங்கு நோயினால் பாதிப்பு.

வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் இந்த வருடம் ஜனவரி மாதம் முதல் நவம்பர் மாதம் முதலாம் திகதி வரை 315 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் தேவராஜமுதலி ஸ்டீப் சஞ்ஜீவ்; தெரிவித்தார். வாழைச்சேனை பிரதேச செயலாளர் ...

மேலும்..

நவம்பரில் அறிமுகம் செய்யப்படும் ஸ்மார்ட்போன்களின் பட்டியல் .

ஓக்டோபர் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஐபோன் 12-சீரிஸ் மற்றும் ஒன்பிளஸ் 8 டி உள்ளிட்ட ஸ்மார்ட்போன் வெளியீடுகளால் நிரம்பியிருந்தது, ஆனால் நவம்பரிலும் சந்தைக்கு வர ஒரு டன் பிற தொலைபேசிகள் தயாராக உள்ளன. இந்திய ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரான மைக்ரோமேக்ஸ் தனது புதிய 'இன்' ஸ்மார்ட்போன் தொடருடன் இந்திய ...

மேலும்..

கொரோனா வைரஸ் தொற்றினால் 22ஆவது மரணம்!

பாணத்துறை- வெகட பகுதியை சேர்ந்த 27வயது இளைஞரொருவர் உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பாக தெரிய வருவதாவது போதை பொருளுக்கு அடிமையான இளைஞன் பாணத்துறை- வெகட பகுதியில் தற்கொலை செய்துகொண்ட நிலையில்பி.சி.ஆர். பரிசோதனையில் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. எனசுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்த்தன ...

மேலும்..

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுலில் இருந்தாலும் வழமைபோல் நடைபெறுவதற்கு சகல ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுலில் இருந்தாலும் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை வழமைபோல் நடைபெறுவதற்கு சகல ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது. பரீட்சார்த்திகளுக்கான போக்குவரத்து ஒழுங்குகளும் செய்யப்பட்டுள்ளன.பரீட்சை நிலையங்களுக்குச் செல்வதில் போக்குவரத்தில் ஏதேனும் பிரச்சினைகள் காணப்பட்டால் 077 10 56 032 எனும் ...

மேலும்..

அத்தியாவசிய பொருட்களை நடமாடும் சேவையின் மூலம் வழங்க தீர்மானம்!

ஊரடங்கு காலப்பகுதியில் இதற்கு முன்னர் நடைமுறைப்படுத்தப்பட்டவாறு அத்தியாவசிய பொருட்களை நடமாடும் சேவையின் மூலம் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.ஊரடங்கு உள்ள பகுதிகளில் இது தொடர்பான திட்டத்தை இன்றைய தினத்துக்குள் தயாரித்து முடிக்க எதிர்ப்பார்ப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

மேலும்..

சிறுபான்மை மக்கள் மஹிந்த அரசை நிராகரித்தாலும் மக்களை நிராகரிக்காத மஹிந்த அரசு ; தேசிய காங்கிரசின் இளைஞர் அமைப்பாளர் பெருமிதம்

மருதமுனை மக்களின் நீண்ட நாள் கனவாக இருந்து வந்த மருதமுனை கடற்கரை வீதி தற்பொழுது கார்பட் வீதியாக மாற்றப்படுகின்றது. கடந்த சுனாமி அனர்த்தத்தின் பின்னர் சுமார் 16 வருடங்களின் பின்னர் கடற்கரை வீதி நிர்மாணம் செய்யப்படுகின்றது. இவ்வேலைத்திட்டத்தை சிறப்பாக முன்னெடுக்கும் மருதமுனையின் ...

மேலும்..

நாளைய தினம் இரண்டு மணி நேர கூடும் நாடாளுமன்றம்..!!

இலங்கையின் நாடாளுமன்றம் நாளைய தினம் இரண்டு மணி நேர கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்போது சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி மருத்துவ கட்டளைச் சட்டத்தின் கீழ் இரண்டு புதிய விதிமுறைகளை முன்வைப்பார் என்று நாடாளுமன்ற ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. நாளை 3 ஆம் திகதி ...

மேலும்..

பாடசாலை 3 ஆம் தவணை – ஆரம்பிப்பது தொடர்பான விசேட பேச்சுவார்த்தை இன்று

பாடசாலைகளில் 3 ஆம் தவணை கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிப்பது தொடர்பிலான விசேட பேச்சுவார்த்தை இன்று(02) நடைபெறவுள்ளது. அமைச்சின் பணிக்குழுவுடன் இணையவழி மூலம் இந்த பேச்சுவார்த்தை நடைபெறவிருப்பதாக அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில் பெரேரா தெரிவித்தார். 3 ஆம் தவணைக்கான பாடசாலை நடவடிக்கைகள் எதிர்வரும் திங்கட்கிழமை ...

மேலும்..

கிளிநொச்சியில் பொதுச்சுகாதார பரிசோதகர்களுக்கு மோட்டார் சைக்கிள் வழங்கப்பட்டது.

கிளிநொச்சியில் கொரோனா சூழ்நிலையில் கடமைகளை இலகுபடுத்த பொதுச்சுகாதார பரிசோதகர்களுக்கு மோட்டார் சைக்கிள் வழங்கப்பட்டது. தற்போதைய கொரோனா இக்கட்டான நிலையில் கடமைகளை இலகு படுத்துவதற்காக சுகாதார அமைச்சினால் உலக வங்கியின் நிதியில் covid 19 emergency response and health systems preparedness project ...

மேலும்..

திருகோணமலையில் இனந்தெரியாதோரால் பெட்டிக்கடை உடைத்து சேதம் !

திருகோணமலை தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இனந்தெரியாதோரால் பெட்டிக்கடையொன்று உடைத்து சேதப்படுத்தப்பட்டுள்ளது. இச்சம்பவம் இன்று(2) அதிகாலை இடம்பெற்றுள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர். திருகோணமலை சோனகர் வாடி பகுதியில் அமைந்துள்ள இப்ராகீம் முகம்மட் காசிம் என்பவரின் பெட்டிக்கடையொன்றினையே இவ்வாறு இனந்தெரியாதோரால் கடையின் கண்ணாடிகளை உடைத்து சேதப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடை ...

மேலும்..

நாட்டில் பல இடங்களில் பிற்பகல் 2.00 மணிக்கு பின்னர் மழை பெய்யக்கூடும்………

ஊவா, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை, முல்லைத்தீவு மற்றும் வவுனியா மாவட்டங்களிலும் பல இடங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுதாக வளிமண்டலவியல் திணைக்களம் இன்று(02)காலை வெளியிட்டுள்ள வானிலை ...

மேலும்..