November 5, 2020 அன்று பிரசுரிக்கப்பட்டவை

திருமண பந்தத்தில் இணைந்த தம்பதியினருக்கும் கொரோனா வைபவத்தில் கலந்துகொண்ட மேலும் எழுவருக்கும் தொற்று

மாவனல்லை பிரதேசத்தில் அண்மையில் திருமண பந்தத்தில் இணைந்த தம்பதியர் உள்ளிட்ட 9 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று மாவனல்லை பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் கெமுனு விக்கிரமசிங்க தெரிவித்தார். இதையடுத்து குறித்த திருமண வைபவத்தில் கலந்துகொண்ட 120 இற்கும் ...

மேலும்..

அங்கஜனின் பரிந்துரையில் 1000 மில்லியன் ரூபாய் செலவில் யாழில் காப்பெற் வீதி அமைக்கப்படவுள்ளது…

Jeyendra Habeeshan. நெடுஞ்சாலைகள் அமைச்சர் மாண்புமிகு ஜொன்ஸ்டன் பெர்ணான்டோ அவர்களிடம், யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழு இணைத்தலைவரும் பாராளுமன்ற குழுக்களின் பிரதி தவிசாளருமான கெளரவ அங்கஜன் இராமநாதன் யாழ் மாவட்ட வீதி அபிவிருத்திகள் தொடர்பில் முன்மொழிந்தமைக்கு அமைவா 1.60 கிலோ மீற்றர் தூரமுடைய ...

மேலும்..

இடி, மின்னல் தாக்கம்: மின் உபகரணங்கள், கட்டடங்களுக்கு சேதம் …

மட்டக்களப்பு - வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குடட்ட பகுதியில் செவ்வாய்க்கிழமை இரவு (3) திடீர் மழையுடன் இடி, மின்னல் தாக்கம் ஏற்பட்டதில் அப்பகுதியிலுள்ள மக்களின் மின்சாரப் பொருட்கள் சேதமடைந்துள்ளன. அத்துடன், குறித்த பகுதியிலுள்ள அரிசி ஆலை ஒன்றில் இடி விழுந்ததில் அங்கு பொருத்தப்பட்டிருந்த மின் ...

மேலும்..

மஸ்கெலியா நகரிலுள்ள தனியார் மருந்து சிகிச்சை நிலையமொன்றும், பாமசியும் மூடப்பட்டன

மஸ்கெலியா நகரிலுள்ள தனியார் மருத்து சிகிச்சை நிலையமொன்றும், மருந்தகமொன்றும் (பாமசி) இன்று (05.11.2020)  மூடப்பட்டன. அத்துடன், வைத்தியர் ஒருவர் உட்பட ஊழியர்கள் சிலர் சுய தனிமைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். மஸ்கெலியா பிரவுன்லோ தோட்டத்தில் உள்ள 41 வயதுடைய நபரொருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று நேற்று (4) ...

மேலும்..

உட்கட்டமைப்பு வசதிகளை வெகுவிரைவில் ஏற்படுத்திக்கொடுக்குமாறு இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் பணிப்புரை விடுப்பு

நுவரெலியா  - வலப்பனை, தியநெல்ல பகுதியில் தனிவீட்டுத் திட்டத்தில் வாழும் மக்களுக்கு தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை வெகுவிரைவில் ஏற்படுத்திக்கொடுக்குமாறு இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் பணிப்புரை விடுத்துள்ளார்.   பெருந்தோட்ட மனித வள அபிவிருத்தி நிதியத்தின் அதிகாரிகளுக்கு இராஜாங்க ...

மேலும்..

கோப்பாய் கொரோனா வைத்தியசாலை தொடர்பில் பொதுமக்கள் பீதி அடைய வேண்டாம்-யாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி

கோப்பாய் கொரோனா  வைத்தியசாலை தொடர்பில் அப்பிரதேச  மக்கள்  பீதி அடையத் தேவையில்லை என யாழ் போதனா வைத்தியசாலையில் இன்று (05) நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போது  யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி தெரிவித்தார்.. தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர் “யாழ்ப்பாண போதனா ...

மேலும்..

கண்டியில் 45 கொரோனா நோயாளர்கள்.

கண்டி மாவட்டத்தில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 45ஆக அதிகரித்துள்ளது. இதன்படி கங்கவட்ட கோரள, உடபலாத்த, பஹத்ததும்பர, உடதும்பர, தொளுவ, தெல்தோட்டை, மெததும்பர, யட்டிநுவர, துன்பனே, ஹாரிஸ்பத்துவ, மினிப்பே, அக்குரணை மற்றும் தலாத்துஓயா ஆகிய பிரதேசங்களில் இந்த தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டிருக்கின்றனர்  .

மேலும்..

ஒருநாளைக்கு எத்தனை வேகவைத்த முட்டை சாப்பிடுவது உங்கள் எடையை வேகமாக குறைக்க உதவும் தெரியுமா?

புரதம் மற்றும் ஆற்றல் அதிகமிக்க முட்டை ஒரு காலை உணவை நிரப்புவதற்கு ஒரு ஆரோக்கியமான விருப்பமாகும். முட்டைகளை மற்ற வழிகளில் எடுப்பதைக் காட்டிலும் வேகவைத்து சாப்பிடுவது அதன் ஆரோக்கியப் பலன்களை முழுவதுமாக பெற உதவும்.   முகப்பு ஆரோக்கியம் உலக நடப்புகள் அழகு..அழகு. ...

மேலும்..

நாவிதன்வெளி பிரதேச சபை முன்னெடுத்த கோரோனா தொற்று நீக்க செயற்பாடு

நாவிதன்வெளி பிரதேச  செயலகத்தின் சுற்றுச்சூழல் மற்றும் அலுவலக பிரிவுகளில்  தொற்று நீக்கும் மருந்து தெளிக்கும் செயற்பாட்டினை நாவிதன்வெளி பிரதேச சபை முன்னெடுத்துள்ளது. கொரோனா அனர்த்தம் மீள பரவ ஆரம்பித்துள்ள நிலையில் அதிலிருந்து பொதுமக்களை பாதுகாப்பதற்காக  இன்று(05) முற்பகல்    நாவிதன்வெளி பிரதேச சபை ...

மேலும்..

மண்சரிவு அனர்த்த எச்சரிக்கை……..

நாட்டின் பல மாவட்டங்களுக்கு தேசிய கட்டட ஆய்வு நிறுவனத்தினால் மண்சரிவு அனர்த்த கட்டம் ஒன்றின் கீழ் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக இரத்தினபுரி மாவட்டத்தில் இரத்தினபுரி, எஹெளியகொடை, எலபாத்த, குருவிட்ட ஆகிய பிரதேசங்களுக்கும், கேகாலை மாவட்டத்தில் ரூவான்வெல்ல பிரதேச பிரிவுக்கும் இவ்வாறு மண்சரிவு அனர்த்த ...

மேலும்..

விவசாய நிலங்களும் நீரில் மூழ்கி, வேளாண்மை பாதிக்கப்பட்டு, விவசாயிகள் நடுத்தெருவிற்கு வந்த பின்னர் தான் முகத்துவாரம் வெட்டப்படுமா?

ஆற்று மட்டம் இன்னும் உயர வேண்டும் அப்போதுதான் முகத்துவாரம் திறப்பது தொடர்பில் ஆலோசிக்க முடியும் என்றால் அனைத்து விவசாய நிலங்களும் நீரில் மூழ்கி, வேளாண்மை பாதிக்கப்பட்டு, விவசாயிகள் நடுத்தெருவிற்கு வந்த பின்னர் தான் முகத்துவாரம் வெட்டப்படுமா? என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ...

மேலும்..

நாவிதன்வெளி கலாசார மத்திய நிலையத்தின் ஏற்பாட்டில் சர்வமத ஒளி விளக்கு பூஜை

கொரோனா வைரஸ் (கொவிட் 19) தொற்றிலிருந்து நாட்டையும் நாட்டு மக்களையும் பாதுகாக்கும் பொருட்டு நாவிதன்வெளி கலாசார மத்திய நிலையத்தின் ஏற்பாட்டில் சர்வமத ஒளி விளக்கு பூஜை நேற்று(04) மாலை கலாசார மத்திய நிலையத்தில் இடம்பெற்றது. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் வழிகாட்டலின் கீழ் புத்தசாசனம் கலாசாரம் மற்றும் சமய அலுவல்கள் அமைச்சின் வேண்டுகோளுக்கமைவாக விஷேட பூஜை வழிபாடுகள் நாவிதன்வெளி ...

மேலும்..

ஏகமனதாக நிறைவு பெற்றது அக்கரைப்பற்று பிரதேச சபை வரவு செலவுத் திட்டம்

அக்கரைப்பற்று பிரதேச சபையின் தவிசாளர் எம்.எ.றாஸிக் தலைமையில் இன்று (05) காலை நடைபெற்ற வாக்கெடுப்பில் 2021 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் அனைத்து உறுப்பினர்களின் ஒத்துழைப்புடன் ஏகமனதாக நிறைவேறியது. அக்கரைப்பற்று பிரதேச சபையில் அங்கம் வகிக்கும் 08 உறுப்பினர்களும் அமர்வில் கலந்து ...

மேலும்..

கோறளைப்பற்று மத்தியில் இருவருக்கு கொரோனா; இதுவரை 395 பேருக்கு பி.சி.ஆர். பரிசோதனை

கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக இதுவரைக்கும் 395 பேருக்கு பி.சி.ஆர். பரிசோதனைகள் இடம்பெற்றுள்ளதுடன் இங்கு கொரோனா வைரஸ் அதிகாரித்து வரும் நிலையில் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களுடன் தொடர்புபட்டவர்களின் ...

மேலும்..

அமெரிக்க தேர்தலில் பிரதிநிதிகள் சபைக்கு 3வது முறை தேர்வாகியுள்ள தமிழர்!

அமெரிக்காவில் தமிழகத்தைப் பூர்வீகமாகக் கொண்ட ராஜா கிருஷ்ணமூர்த்தி இல்லினாய் தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார். இதன் மூலம் அமெரிக்க பிரதிநிதிகள் சபைக்கு 3வது முறையாக தேர்வாகியுள்ளார் இவர். அமெரிக்காவில் அதிபர் பதவிக்காக தேர்தலுக்கான வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகி ...

மேலும்..

வீதியில் தேக்கி வைப்போர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளோம் – பிரதம சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.ஜே.கே.எம். அர்சத் காரியப்பர்

பொறுப்பற்ற விதத்தில் சிலர் மக்கள் நடமாட்டம் உள்ள வீதிகள், கடற்கரை ஓரங்கள், நீர் நிலைகளில் குப்பைகளை விசுவதனால் பொதுமக்கள் மட்டுமல்ல அதை துப்பரவு செய்யும் மாநகர ஊழியர்களும் சங்கடத்திற்கு முகம் கொடுக்கின்றனர். பொதுமக்களையும் இந்த சமூகத்தையும் பற்றி சிந்திக்காதவர்கள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் ...

மேலும்..

கொழும்பு மத்திய தபால் பரிவர்த்தனை முடக்கம்

கொழும்பு மத்திய தபால் பரிவர்த்தனை நிலையம்  மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. குறித்த நிலையத்தில் ஊழியர்கள் இருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டதை தொடர்ந்து மீள் அறிவிக்கும் வரை மூடுவதற்கு இந்த தீர்மானிக்கப்பட்டுள்ளது .  

மேலும்..

வவுனியா- தனிமைப்படுத்தல் நிலையங்களில் 127 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

வவுனியாவில் உள்ள தனிமைப்படுத்தல் நிலையங்களில் தனிமைப்படுத்தப்பட்டவர்களில் இதுவரையில் 127 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து கடந்த ஒக்டோபர் மாதம் 1154 பேர் வவுனியா மம்பைமடு இராணுவமுகாம், பெரியகட்டு இராணுவமுகாம், வேலங்குளம் விமானபடைத்தளம், பூந்தோட்டம் கல்வியற்கல்லூரி ஆகிய நான்கு தனிமைப்படுத்தல் நிலையங்களில் தங்கவைக்கப்பட்டிருந்தனர். இவ்வாறு தனிமைப்படுத்தல் நிலையங்களில் தங்கவைக்கப்பட்டவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைகளில் 127 ...

மேலும்..

பதுளை மாவட்ட கொவிட் தொற்றை கட்டுப்படுத்தும் செயற்குழு கூட்டம்

பதுளை மாவட்ட கொவிட் தொற்றை கட்டுப்படுத்தும் செயற்குழுவின் கூட்டம் ஊவா மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம். முஸம்மில் அவர்களின் தலைமையில் பதுளை மாவட்டச் செயலாளர் காரியாலயத்தில் இடம்பெற்றது. இதன்போது கொவிட் தொற்று நிலைமை காரணமாக வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களுக்கு உணவுப் பொருட்களை வழங்குவது தொடர்பில் விசேட ...

மேலும்..

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கான கிரிக்கெட் தொடர் அட்டவணை வெளியானது.

ஐ.பி.எல் தொடர் முடிந்தவுடன் இந்தியா கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியா செல்லவுள்ளது. அந்த அணியுடன் 3 ஒருநாள் போட்டி, 3 டி20 மற்றும் 4 டெஸ்ட்டில் ஆடுகிறது. போட்டி திகதி இடம் விபரம் One Day முதல் ஒருநாள் போட்டி நவம்பர் 27 சிட்னி (பகலிரவு) இரண்டாவது ...

மேலும்..

மனித முக அமைப்பு கொண்ட ரோபோவை உருவாக்கி சாதனை

அமெரிக்காவில் உள்ள வால்ட் டிஸ்னி நிறுவன பொறியாளர்கள் மனித முக அமைப்பு கொண்ட ரோபோவை உருவாக்கியுள்ளனர். மனிதனைப் போன்றே செயல்படும் அனிமேட்ரோனிக் வகையைச் சேர்ந்த இந்த ரோபோ, மக்களை அடையாளம் காணும் சென்சார் மற்றும் கேமராவுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. தற்போது 19 டிகிரி வரை தலையைச் ...

மேலும்..

தென்கொரியாவில் தஞ்சம் கோரிக்கை!

இந்தாண்டு தென் கொரியாவில் 6000 வெளிநாட்டினர் தஞ்சம் கோரியிருந்த நிலையில், 164 வெளிநாட்டினரின் தஞ்சக்கோரிக்கை ஏற்கப்பட்டுள்ளது. தஞ்சக்கோரிக்கை ஏற்கப்பட்டவர்களில் முதன்மையான இடத்தில் ரஷ்யர்கள் உள்ளனர். இதற்கு அடுத்த இடங்களில் எகிப்து, கசக்கஸ்தான், மலேசியா, மற்றும் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் உள்ளனர். 1994 முதல் ஐ.நா. அகதிகள் ...

மேலும்..

கொவிட்-19 தொற்றிலிருந்து நாடும் நாட்டு மக்களும் விடுபட வேண்டி பிரதமரின் வழிகாட்டலின் கீழ் நாடளாவிய ரீதியில் இந்து ஆலயங்களில் விசேட வழிபாடு!

  இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் பிரதமரின் வழிகாட்டுதலின் கீழ் புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் அறிவுறுத்தலுக்கு அமைவாக, இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால், இலங்கைத் திருநாட்டில் வாழுகின்ற மக்கள் அனைவரும், கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து மீள்வதற்காக, அருளாசி ...

மேலும்..

மருந்துகளை வீடுகளில் வழங்கும் பணிகள் ஆரம்பம்

அரச வைத்தியசாலைகளில் க்ளினிக் - சிகிச்சை பெறும் ஒரு மாதத்திற்கு தேவையான மருந்துகள் தம்மிடம் இல்லாத நோயாளர்களுக்கு மருந்து வகைகளை வழங்குவதற்காக இலங்கை தபால் சேவையுடன் ஒன்றிணைந்த வேலைத்திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக மீண்டும்   நாடு முழுவதிலும் உள்ள அரச வைத்தியசாலைகளில் சிகிச்சைகளை பெறும் ...

மேலும்..

இளைஞர்களின் உயிரைப்பறிக்கும் ஓன்லைன் சூதாட்டத்தை தமிழக அரசு உடனடியாக தடை செய்ய வேண்டும்-மு.க. ஸ்டாலின்

இளைஞர்களின் உயிரைப்பறிக்கும் ஓன்லைன் சூதாட்டத்தை தமிழக அரசு, உடனடியாக தடை செய்ய வேண்டும் என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார். தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டம் காரணமாக 11 பேர் உயிரிழந்த சம்பவத்தை அறிக்கையொன்றில் குறிப்பிட்டுள்ள அவர், ஆன்- லைன் சூதாட்டத்தை ...

மேலும்..

அமெரிக்க அதிபர் தேர்தலில் யார் வெற்றி பெற்றாலும் அவர்களுடன் இணைந்து பணியாற்ற தயார்-இங்கிலாந்து வெளியுறவுத்துறை அமைச்சர்

அமெரிக்க அதிபர் தேர்தலில் யார் வெற்றி பெற்றாலும் அவர்களுடன் இணைந்து பணியாற்ற தயாராக இருப்பதாக இங்கிலாந்து வெளியுறவுத்துறை அமைச்சர் டொமினிக் ராப்கூறியுள்ளார். லண்டனில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அமெரிக்க அதிபர் தேர்தலில் எதிர்பார்த்ததை விட போட்டி கடுமையாக உள்ளது என்றார். அதிபர் பதவியில் அமர்வது ...

மேலும்..

கொரோனாவிலிருந்து நாட்டை பாதுகாக்க பள்ளிவாசலில் விசேட துஆ பிராத்தனை

புத்தசாசன மத விவகாரங்கள் மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சரும் பிரதமருமான மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் வழிகாட்டலுக்கு அமைய கொரோனா தொற்றிலிருந்து நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் பாதுகாப்பு வேண்டி நாடுமுழுவதும் மத அனுஷ்டானங்கள் நடைபெற்று வருகின்றது. அதன் ஒரு அங்கமாக மருதமுனை மஸ்ஜிதுல் ...

மேலும்..

பெண் நபரொருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி

அட்டன், தும்புருகிரிய பகுதியை சேர்ந்த பெண் நபரொருவருக்கு நேற்று (04.11.2020) இரவு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று அட்டன் - டிக்கோயா நகரசபையின் பொது சுகாதார பரிசோதகர் ஆர்.எஸ்.எஸ். மெதவல தெரிவித்தார். இதனையடுத்து குறித்த நபருடன் தொடர்பைபேணிய 6 குடும்பங்களைச்சேர்ந்த 18 ...

மேலும்..