November 15, 2020 அன்று பிரசுரிக்கப்பட்டவை

மின்குமிழ் பொருத்துவதற்காக 2.5 மில்லியன் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது – ரீ.எம் ஐய்யுப்.

அக்கரைப்பற்று பிரதேச சபை பிரதேசங்கள் பூராகவும் ஒட்டுமொத்தமாக மின்குமிழ் பொருத்தப்பட்டு நகரங்களுக்கு ஒத்ததான ஒரு பிராந்தியமாக இன்னும் ஒரு சில மாதங்களின் பின் அக்கரைப்பற்று பிரதேசம் ஜொலிக்கும். அதன் பின்னர் மக்களுக்கு வசந்த காலம் பிறக்கும் என அக்கரைப்பற்று பிரதேச சபை உறுப்பினர் ரீ.எம் .ஐய்யுப் தெரிவித்தார். அக்கரைப்பற்று பிரதேச சபையில் அண்மையில் நிறைவேற்றப்பட்ட வரவு செலவு ...

மேலும்..

2021 ஆண்டுக்கான பாடசாலை நாட்காட்டி..

கொரோனாத்தொற்றின் காரணமாக இவவாண்டு பாடசாலை செயற்பாடுகள் பாதிக்கப்பட்டதன்காரணமாக  2021இல் விடுமுறைககள் குறைக்கப்பட்ட பாடசாலை நாட்காட்டி கல்வியமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது. சுற்றறிக்கை இல 33/2020 இன்படி நாட்காட்டி சிங்களதமிழ் மற்றும் முஸ்ஸிம் பாடசாலைகளுக்காக வெளியிடப்பட்டுள்ளது. சிங்கள மற்றும் தமிழ் பாடசாலைகள்: முதலாம்தவணை ( முதல் கட்டம்) 2021 ஜனவரி 04 ...

மேலும்..

வடக்கு கிழக்கு மாகாணங்களில் மழை பெய்யும் !

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பல இடங்களில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் இன்று வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் ...

மேலும்..

யாழ்- மாவட்டத்தில் 600 குடும்பங்கள் தனிமைப்படுத்தலில் – அரசாங்க அதிபர்

யாழ் மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களுடன் நேரடியாக தொடர்புபட்ட, தொற்றுக்குள்ளானவர்களுடன் பயணித்த  சுமார்  600 குடும்பங்கள்சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்தார். யாழ் மாவட்டத்தில் நேற்றைய தினம்மேலும் ஒருவருக்கு  கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  அவர் ஏற்கனவே தனிமைப்படுத்தலில்  இருந்தவர் ...

மேலும்..

யாழ். போதனா வைத்தியசாலையின் இருதய சிகிச்சைக்குரிய சிகிச்சைகள் நாளை முதல் விக்ரோரியா வீதியில் அமைந்துள்ள சிகிச்சை நிலையத்தில் நடைபெறவுள்ளது………

யாழ். போதனா வைத்தியசாலையின் இருதய சிகிச்சைக்குரிய சிகிச்சைகள் நாளை முதல் விக்ரோரியா வீதியில் அமைந்துள்ள சிகிச்சை நிலையத்தில் நடைபெறவுள்ளது. என யாழ் போதனா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் சி.யமுனாநந்தா தெரிவித்துள்ளார். அத்துடன் மகப்பேற்று பெண் நோயியில் சிகிச்சைப் பிரிவும் மீண்டும் பழைய இடத்திற்கு ...

மேலும்..

கல்முனை மின் பொறியியலாளர் பிரிவில் அவசரத் திருத்த வேலை காரணமாக மின் துண்டிப்பு !

 கல்முனை மின் பொறியியலாளர் பிரிவில் , அவசரத் திருத்த வேலை காரணமாக மின் துண்டிப்பு இடம்பெறவுள்ளதாக இலங்கை மின்சார சபையின் கல்முனை பிராந்திய மின் பொறியலாளர் அறிவித்துள்ளார். காலை 08.30 முதல் மாலை 05 மணி வரை இந்த மின் துண்டிப்பு இடம்பெறுமென ...

மேலும்..

250 பேருக்கு மேல் கலந்து கொண்ட கூட்டத்தினை ஏன் தடுக்கவில்லை ;பொலிசாரிடம் சிறீதரன் எம்.பி கேள்வி!

யாழ்ப்பாணத்தில் இரண்டு நாட்கள் கொழும்பில் இருந்து வந்த அமைச்சர்களின் 250 பேருக்கு மேல் கலந்து கொண்ட கூட்டத்தினை ஏன் தடுக்கவில்லை என பொலீசாரிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கேள்வியெழுப்பினார் கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் இன்று( ...

மேலும்..

சேவையை முன்னெடுக்க அனுமதி !

கொரோனா வைரஸ் பரவலையடுத்து முடக்கப்பட்டுள்ள பகுதிகளில் அத்தியாவசிய சேவைகளை முன்னெடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக, அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதற்கமைய, முடக்க நிலையில் உள்ள மருதானை, புறக்கோட்டை, கொம்பனித்தெரு ஆகிய பகுதிகளில், நாளை(16) அதிகாலை 5.00 மணி தொடக்கம், அத்தியாவசிய சேவைகளை முன்னெடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேற்படி பகுதிகளில் உள்ள இலங்கை முதலீட்டுச் சபை மற்றும் அபிவிருத்தி சபை ...

மேலும்..

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி பூசை வழிபாடுகள்!

யாழ். நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி பூசை வழிபாடுகள் இடம்பெற்று வருகின்றது. இன்றிலிருந்து கந்த சஷ்டி விரதம் ஆரம்பமாகியுள்ள நிலையில் நாட்டில் தற்போது உள்ள கொரோனா அச்சநிலைமையின் காரணமாக ஆலயங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள சுகாதார நடைமுறைகளுக்கு ஏற்பவரலாற்று பிரசித்தி பெற்ற  யாழ்ப்பாணம் நல்லூர் ...

மேலும்..

கந்தளாய் பிரதேசத்தில் கொவிட் 19 பரவலை தடுக்கும் முகமாக விழிப்புணர்வு வேலைத்திட்டம்

திருகோணமலை -கந்தளாய் பிரதேசத்தில் கொவிட் 19 பரவலைத் தடுக்கும் முகமாக பொது மக்களை விழிப்பூட்டும் வகையில் விழிப்புணர்வு  நிகழ்வொன்றும் இடம்பெற்றது. கந்தளாய் பொலிஸாரும், கிராமிய பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்தி அமைப்பும் இணைந்து இன்று (15) வாராந்த சந்தைக்கு வரும் மக்களை விழிப்பூட்டும் ...

மேலும்..

கோறளைப்பற்று மத்தியில் டெங்கு நோயினால் 173 பேர் பாதிப்பு

கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் டெங்கு மற்றும் கொரோனா நோயை கட்டுப்படுத்தும் நோக்கில் பல்வேறு வேலைத் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அந்தவகையில் கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் டெங்கு நோய் பரவல் அதிகரித்துக் காணப்படும் நிலையில் ...

மேலும்..

நாடாளுமன்ற உறுப்பினர்களின் திருகோணமலை வருகையை அடுத்து விசாரணைகளை எதிர்கொள்ளும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பிரதிப் பொதுச் செயலாளரும் திருகோணமலை மாவட்ட முன்னாள் அமைப்பாளருமான இ.ஸ்ரீஞானேஸ்வரன் அவர்களை விசேட புலனாய்வுப்பிரிவினர் விசாரணை செய்துள்ளனர்.  அதனை உறுதிப்படுத்திய அவர் அறிக்கையொன்றைப் பெற்றுக்கொள்வதற்காக கந்தளாய் காவல்துறைக்கு வருமாறு தொலைபேசி ஊடாக அழைப்பு விடுக்கப்பட்டது எனவும் அவ்வழைப்பை ...

மேலும்..

கிழக்கு மக்கள் கருணா தொடர்பாக சாட்டப்படும் குற்றம் தொடர்பாக அரசாங்கம் விசாரிக்க வேண்டும் – இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் வலியுறுத்தல்..

  மட்டக்களப்பு மற்றும் கிழக்கு மாகாணத்தில் கருணா தொடர்பாக மக்கள் மத்தியில் இருக்கின்ற குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக அவருக்கு எதிராக அரசாங்கத்தினால் விசாரணை ஆரம்பிக்கப்பட வேண்டும் என இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்துள்ளார். முற்போக்குத் தமிழர் அமைப்பின் தலைவரும் இராஜாங்க அமைச்சருமான சதாசிவம் வியாழேந்திரனின் பிறந்த ...

மேலும்..

இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் பிறந்த தினத்தில் இரத்ததான முகாம்; 500 க்கு மேற்பட்டோர் இரத்த கொடையாளர்களாக பங்கேற்பு .

"உதிரம் கொடுத்து உயிரை காப்போம்" எனும் தொனிப்பொருளுக்கமைவாக முற்போக்குத் தமிழர் அமைப்பினால் இரத்ததான முகாமொன்று இன்று(15) ஞாயிற்றுக்கிழமை மட்டக்களப்பில் நடாத்தப்பட்டது. மட்டக்களப்பு வில்லியம் ஆல்ட் மண்டபத்தில் முற்போக்குத் தமிழர் அமைப்பின் தலைவரும் இராஜாங்க அமைச்சருமான சதாசிவம் வியாழேந்திரன் தலைையில் அவரது பிறந்த நாளான இன்றைய ...

மேலும்..

யாழ். சுழிபுரம் இரட்டைக் கொலை; 21 பேரில் 12 பேர் கைது

யாழில் இரு குடும்பங்களுக்கு இடையில் ஏற்பட்ட முரண்பாடு மோதலாக உருவெடுத்து இருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் 12 பேரை வட்டுக்கோட்டை பொலிஸார் கைது செய்துள்ளனர். வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட, சுழிபுரம் மத்தி குடாக்கனை பகுதியில் நேற்றுமுன்தினம் (13) வெள்ளிக்கிழமை மாலையளவில், மரணமடைந்த ...

மேலும்..

கவிஞர்களுக்கான களத்தை அர்த்தம் உள்ள வகையிலே விபுலர் பிறந்த காரைதீவு மண்ணில் உருவாக்கி தருவேன்-ஜெயசிறில்

பொதுவாக தமிழன் என்கிற வகையிலும் விசேடமாக முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்தர் பிறந்த காரைதீவு மண்ணின் தலைவன் என்கிற வகையிலும் மொழி, கலை, கலாசாரம், இலக்கியம் பண்பாடு, ஒழுக்க விழுமியம், நாகரிகம் ஆகியவற்றை கட்டி எழுப்புவதற்கும், பேணி பாதுகாப்பதற்கும் அர்ப்பணிப்புடன் செயற்படுவதில் பெருமையும், பெருமிதமும் அடைந்தவராக உள்ளார் என்று காரைதீவு பிரதேச சபையின் ...

மேலும்..

கொவிட் கொத்தணியின் எண்ணிக்கை..

திவுலப்பிட்டிய மற்றும் பேலியகொட கொவிட் கொத்தணியின் எண்ணிக்கை 13 ஆயிரத்து 84 ஆக அதிகரித்துள்ளது. நேற்று மேலும் மேலும் 392 கொவிட் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டிருப்பதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இவர்கள் அனைவரும் பேலியகொட மீன்சந்தையுடன் தொடர்புடைய கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்களாவர். COVID-19 ...

மேலும்..

128 பேர் நாடு திரும்பினர்

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக வெளிநாடுகளில் சிக்கித் தவித்த 128 இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளனர். அதன்படி சீனா மற்றும் மத்திய கிழக்கிலிருந்து இலங்கை தூதரக அதிகாரிகள் உட்பட மொத்தம் 128 இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளனர். அதன்படி சீனாவின் ஷாங்காயிலிருந்து ஐந்து இலங்கையர்களும் டுபாயிலிருந்து 59 ...

மேலும்..

மரத்தில் தொங்கிய நிலையில் ஆணொருவரின் சடலம் மீட்பு!

திருகோணமலை-சம்பூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் மரத்தில் தொங்கிய நிலையில் ஆண் ஒருவரின் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இச்சடலம் நேற்றிரவு (14) மீட்கப்பட்டுள்ளதாகவும் சம்பூர் பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு மீட்கப்பட்ட சடலம் மூதூர்- சம்பூர்-03 பகுதியைச் சேர்ந்த யோகைய்யா நித்தியன் (34வயது) என்பவரது சடலம் ...

மேலும்..