November 25, 2020 அன்று பிரசுரிக்கப்பட்டவை

அக்கரைப்பற்று பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் 10 பேருக்கு கொரோனோ தொற்று !

அம்பாறை ,அக்கரைப்பற்று பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் 10 பேருக்கு கொரோனோ தொற்று  உறுதி செய்யப்பட்டுள்ளது குறித்த பிரதேசத்திலுள்ள மீன் சந்தையில் வியாபாரத்தில் ஈடுபட்ட 20 பேருக்கு நேற்று புதன்கிழமை (25) எழுந்தமானமாக மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பிரிசோதனையில் 10 பேருக்கு கொரோனா தொற்று ...

மேலும்..

வரவு செலவுத்திட்ட குழுநிலை விவாதத்தின் நான்காம் நாள் இன்று

வரவு செலவுத்திட்ட குழுநிலை விவாதத்தின் நான்காம் நான் இன்று  இடம்பெறும். விவசாயம் மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சுக்களின் நிதி ஒதுக்கீடுகள் மீதான குழுநிலை விவாதமே இடம்பெறும். அத்தோடு பெருந்தெருக்கள் இராஜாங்க அமைச்சு உட்பட 6 இராஜாங்க அமைச்சுக்களுக்கான நிதி ஒதுக்கீடுகள் பற்றியும் இன்று விவாதிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும்..

ஐ.நா. தீர்மானத்தை வலுப்படுத்த முழு ஒத்துழைப்பு வழங்கும் சுவிஸ் சுமந்திரன் எம்.பிடம் அந்நாட்டுப் புதிய தூதுவர் உறுதி…

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ். மாவட்ட  நாடாளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன், இலங்கைக்கான சுவிட்சர்லாந்து புதிய தூதுவர் டொமினிக் ஃபர்க்லரை இன்று கொழும்பில் சந்தித்துக் கலந்துரையாடினர். தூதுவருடன் ஐ.நா. தீர்மானம், தமிழ் மக்கள் எதிர்நோக்கும் அடிப்படைப் பிரச்சினைகள் மற்றும் ...

மேலும்..

காரைதீவு பிரதேச மாவடிப்பள்ளி எல்லை வீதிக்கு கெங்கிரீட் இடுவதற்கான ஆரம்ப நிகழ்வு

அம்பாறை மாவட்ட காரைதீவு பிரதேச சபையின் நிர்வாகத்தின் கீழுள்ள மாவடிப்பள்ளி கிழக்கு வரவை எல்லை வீதிக்கு கொங்கிறீட் இட்டு முழுமையாக பூரணப்படுத்தும் வேலைத்திட்டம் இன்று (25) காரைதீவு பிரதேச சபை தவிசாளர் கி. ஜெயசிறில் தலைமையில் அவ்வீதிக்கான அடிக்கல் நடப்பட்டு ஆரம்பித்து ...

மேலும்..

கடும் மழையினால் பருத்தித்துறை, காரைநகர் பிரதேச செயலக பிரிவில் 17 குடும்பங்கள் பாதிப்பு

யாழில்     கடந்த 24 மணி நேரத்தில் (நேற்று மாலை வரை) கடும் மழை, காற்றின் தாக்கத்தின் காரணமாக பருத்தித்துறை மற்றும் காரைநகர் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்டப 17 குடும்பங்களைச் சேர்ந்த 53 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட அனர்த்த முகாமைத்துவ ...

மேலும்..

விமல் வீரவன்ச வாழைச்சேனை கடதாசி ஆலைக்கு விஜயம்

மிக நீண்ட காலமாக இயங்காமல் இருந்த வாழைச்சேனை கடதாசி ஆலையை இயங்க வைத்தது போன்று இப்பகுதிக்கான குடி நீர் பிரச்சினையும் தீர்த்து வைக்கப்படும் என்று அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்தார். வாழைச்சேனை கடதாசி ஆலையில் இயங்காமல் இருந்து தற்போது கடதாசி ஆலை வளாகத்திற்குள் ...

மேலும்..

சுபீட்சத்தின் நோக்கு கொள்கையின் கீழ் கலைஞர்களுக்கு விபத்து மற்றும் மருத்துவ காப்புறுதி.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் ஆலோசனைக்கமைய சுபீட்சத்தின் நோக்கு கொள்கையின் கீழ் கலைஞர்களுக்கான விபத்து மற்றும் மருத்துவ காப்புறுதியை அறிமுகப்படுத்தும் திட்டத்தின் முதல் கட்டமாக மேடை நாடகத் துறையினருக்கு காப்புறுதி பெற்றுக் கொடுக்கப்படவுள்ளது. சுபீட்சத்தின் நோக்கு கொள்கை திட்டத்தை 2020ஆம் ஆண்டிலேயே யதார்த்தமாக்கும் வகையில் ...

மேலும்..

மக்கள் உள்ளங்களில் இருக்கின்ற குமுறல்களை வெளிப்படுத்த முடியாத வகையில் அரசு தடையாக இருக்கிறது -தவராஜா கலையரசன்.

விடுதலைக்காக மரணித்த மாவீரர்களை நினைவு கூரும் இந்த மாதத்தில் மாவீரர் தினத்தை அனுஷ்டிப்பதை தடுக்கும் வகையில் அரசியல் பிரமுகர்கள், காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள், புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகளுக்கு நீதிமன்றம் தடைவிதித்துள்ள நிலையில், அம்பாறை மாவட்டத்தில் அமைந்துள்ள கஞ்சிகுடிச்சாறு மாவீரர் துயிலும் இல்லத்தில் ...

மேலும்..

நயினாதீவு குறிகாட்டுவான் படகுச்சேவை மீண்டும் ஆரம்பம்

நயினாதீவு குறிகாட்டுவானுக்கான படகுச்சேவை செவ்வாய்கிழமை (24) முதல் மீண்டும் ஆரம்பம் என "படகு உரிமையாளர் சங்கம் அறிவிதுள்ளது. நேர அட்டவணை :- நயினாதீவிலிருந்து                                ...

மேலும்..

பொது இடங்களில் மக்களை ஒன்றுக்கூட்டி நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்த முடியாது-யாழ் நீதவான் நீதிமன்றம்

மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகளை பொது இடங்களில் மக்களை ஒன்றுக்கூட்டி நடத்த  முடியாது என யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் கட்டளை வழங்கியுள்ளது. மாவீரர் நாள் நினைவேந்தலை தடை செய்யுமாறு கோரி யாழ்ப்பாணம் மற்றும் கோப்பாய் பொலிஸார் தாக்கல் செய்த விண்ணப்பத்துக்கே யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் ...

மேலும்..

திருகோணமலை -தம்பலகாமம் பிரதேச சபையின் வருடாந்த பாதீடு தோல்வியடைந்துள்ளது.

தம்பலகாமம் பிரதேச சபையின் வரவு செலவுத் திட்ட விசேட அமர்வு இன்று (25) பிரதேச சபை தவிசாளர் எச்.தாலிப் அலி தலைமையில் சபை மண்டபத்தில்  இடம் பெற்றது.  எதிராக 09 வாக்குகளும்,ஆதரவாக 05 வாக்குகளும்,நடுநிலையாக 02 வாக்குகளும் அளிக்கப்பட்டு குறித்த விசேட ...

மேலும்..

பெண்களுக்கு எதிரான வன்முறையினை இல்லாதொழிக்க விழிப்புணர்வு செயற்பாடு!

பெண்களுக்கு எதிரான பால்நிலை வன்முறையினை இல்லாதொழிக்க இன்றிலிருந்து தொடர்ச்சியாக 16 நாட்கள் விழிப்புணர்வு செயற்பாடு யாழ் சமூக செயற்பாட்டு மையத்தினால் மேற்கொள்ளப்படுகிறது.  யாழ் மாவட்ட செயலகத்தில் மேலதிக அரசாங்க அதிபர் ம. பிரதீபன், உதவி மாவட்ட செயலாளர், மாவட்ட பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர் ...

மேலும்..

கஞ்சிகுடிச்சாற்றில் 45கிலோமீற்றர் நீளமான யானைவேலி !

திருக்கோவில் பிராந்தியத்தில் யானைத்தாக்கத்தைத் தடுக்குமுகமாக எல்லைப்பகுதிகளில் 45கிலோமீற்றர் நீளமான யானைவேலி அமைக்கப்பட்டுவருகிறது. நேற்று கஞ்சிக்குடிச்சாறு பிரதேசத்தில் யானை வேலி அமைக்கும் பணி ஆரம்பித்துவைக்கப்பட்டது. அச்சமயம் திருக்கோவில் பிரதேசசெயலாளர் தங்கையா கஜேந்திரன் திருக்கோவில் பிரதேசசபைத்தவிசாளர் இ.வி.கமலராஜன் உதவி பிரதேச செயலாளர் கந்தவனம் சதிசேகரன் மாவட்ட எம். ...

மேலும்..

கல்முனை நகரில் முகக்கவசம் அணியாத, சமூக இடைவெளியை பின்பற்றாதோர் மீது நடவடிக்கை !

நாட்டில் வேகமாக பரவி வரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் நோக்கில் பல்வேறு சுகாதார பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அதன் ஒரு அங்கமாக கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் எஸ். சுகுணனின் வழிகாட்டலுடன், கல்முனை தெற்கு சுகாதார வைத்திய ...

மேலும்..

மனைவிக்கு பீங்கானால் அடித்து கொலை செய்த கணவருக்கு 10 வருட கடூழியச் சிறை தண்டனை..

திருகோணமலை-கோமரங்கடவல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் மனைவிக்கு பீங்கானால்  அடித்து கொலை செய்த கணவருக்கு 10 வருட கடூழிய சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது. திருகோணமலை மேல்நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் இக்கட்டளையை  இன்று (25) பிறப்பித்துள்ளார். இவ்வாறு  10 வருட கடூழியச் சிறைத் தண்டனை வழங்கப்பட்டவர் கோமரங்கடவல-அடம்பன ...

மேலும்..

முதன்முறையாக மட்டக்களப்பு மாநகர சபையில் இடம்பெற்ற சிறுவர் பங்களிப்புடனான பாதீட்டு வரைபு தொடர்பான கலந்துரையாடல்

சிறுவர்களின் பங்களிப்புடனான பாதீட்டு வரைபு தொடர்பான கலந்துரையாடலானது  மட்டக்களப்பு மாநகர முதல்வரும், நிதிக்குழுவின் தலைவருமான தியாகராஜா சரவணபவன் தலைமையில் நகர மண்டபத்தில் இடம்பெற்றது. மட்டக்களப்பு மாநகர சபையின் 2021 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்ட வரைபினை  தயாரிப்பதற்காக  இலங்கையில் முதன்முறையாக ...

மேலும்..

ரிஸாட் பதியூதீன் பிணையில் விடுதலை!

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஸாட் பதியூதீன் பிணையில் இன்று விடுவிக்கப்பட்டுள்ளார். கொழும்பு கோட்டை நீதிமன்ற நீதவான் பிரியந்த லியனகே முன்பாக இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது ஒரு இலட்சம் ரூபா ரொக்கம் மற்றும் 10 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணையிலும் ...

மேலும்..

72 வயதுடைய வயோதிப பெண்ணின் மாலை பறிப்பு-இருவர் கைது

வீதியால் பட்டப்பகலில் சென்ற 72 வயதுடைய வயோதிப  பெண்ணின் கழுத்தில் இருந்த 4 அரை பவுண் பெறுமதியான தங்கமாலையை வழிப்பறி செய்து மோட்டார் சைக்கிளில் தப்பி சென்ற சந்தேக நபர் உட்பட இருவர் சம்மாந்துறை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த சனிக்கிழமை(21) மாலை ...

மேலும்..

யாழ்- நல்லூரில் பெண்ணொருவருக்கு கொவிட்-19 தொற்று உறுதி

யாழ்ப்பாணம், நல்லூரில் 72 வயதுடைய பெண்ணொருவருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. யாழ்.பல்கலைக்கழக பரிசோதனைக்கூடத்தில் நேற்று மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் மூவருக்குக் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். இது தொடர்பில் ...

மேலும்..

ஷானி அபேசேகரவுக்கு கொரோனா வைரஸ் தொற்று !

சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர்  ஷானி அபேசேகர கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளாரெனத் தெரிவிக்கப்படுகிறது. அவர் மஹர சிறைச்சாலையில் விளக்கமறியல் கைதியாக தடுத்து வைக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து அவர் மஹர சிறையிலிருந்து வெலிக்கடை சிறைக்கு மாற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.  

மேலும்..

கலைமகள் ஹிதாயாவின் மறைவு சமூக, கலை, இலக்கிய உலகுக்கு பேரிழப்பு; மருதம் கலைக்கூடல் தலைவர் அஸ்வான் மௌலானா அனுதாபம்

தடாகம் கலை இலக்கிய வட்டம் அமைப்பின் ஸ்தாபகத் தலைவரும் கிழக்கின் முதுபெரும் பெண் இலக்கிய ஆளுமையான கலைமகள் ஹிதாயா றிஸ்வியின் திடீர் மறைவு சமூகத்திற்கும் இலக்கிய உலகுக்கும் பேரிழப்பாகும் என்று மருதம் கலைக்கூடல் மன்றத்தின் தலைவரும் முன்னாள் முஸ்லிம் கலாசார விவகார ...

மேலும்..

லீடர் எம்.எச்.எம். அஸ்ரப் வித்தியாலயத்தில் டெங்கு நோய் தொடர்பிலான விழிப்புணர்வு!

மழைக்காலம் ஆரம்பித்துள்ளதால் டெங்கை கட்டுப்படுத்தும் முகமாக சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயங்களில் பல்வேறு வேலைத்திட்டங்கள் நாடுமுழுவதும் நடைபெற்று வருகின்றது. அதன் ஒரு அங்கமாக சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி காரியால வைத்திய அதிகாரி ஏ.எல்.எம். அஜ்வத் அவர்களின் ஆலோசனையின் படி சாய்ந்தமருது ...

மேலும்..

கிளிநொச்சி மாவட்ட செயலகம் முன்பாக நபரொருவர் போராட்டம் !

கிளிநொச்சி மாவட்ட செயலகம் முன்பாக பாதிக்கப்பட்ட நபர் போராட்டம் ஒன்றை மேற்கொண்டிருந்தார். குறித்த போராட்டம் இன்று காலை 10 மணியளவில் மாவட்ட செயலகம் முன்பாக இடம்பெற்றது. தனது காணியின் ஊடாக கழிவு நீர் வாய்க்கால் ஒன்றை அமைக்க கரைச்சி பிரதேச சபை தவிசாளர் அ.வேளமாலிகிதன் ...

மேலும்..

அங்குணுகொலபெலஸ்ஸ- சிறைகைதிகளின் போராட்டம்…..

பல கோரிக்கைளை முன்வைத்து அங்குணகொலபெலஸ்ஸ சிறைச்சாலை கைதிகள் முன்னெடுத்து வரும் போராட்டம் 3ஆவது நாளாகவும் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படுவதாக தெரியவருகிறது . முதல் நாள் உணவுத் தவிர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்த கைதிகள், தற்போது கூரை மீதேறி போராட்டத்தை முன்னெடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த எதிர்ப்பு நடவடிக்கை காரணமாக ...

மேலும்..

சாமி வரம் கொடுத்தாலும் பூசாரி தடை போடுவது” போன்று முஸ்லிம்களின் ஜனாஸா விடயத்தில் சுகாதாரத்துறை நிபுணர்கள் குழு செயற்படுகிறது-ஹரீஸ்

முஸ்லிம்களுடைய ஜனாஸா தகனம் செய்யும் விடயத்தில் சுகாதார அமைச்சின் தொழில்நுட்பக் குழு சாமி வரம் கொடுத்தாலும் பூசாரி இடம் கொடுப்பதில்லை போன்று செயற்படுவதாக இன்று பாராளுமன்றத்தில் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும்,ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவருமான எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்து இருந்தார். உள்ளூராட்சி ...

மேலும்..