December 5, 2020 அன்று பிரசுரிக்கப்பட்டவை

(கி.மா) இறைவரித்திணைக்கள ஆணையாளராக பதவியுயர்வு பெற்ற திரு .வயிரமுத்து மகேந்திரநாதன் அவர்களை கல்முனை உவெஸ்லியன் 78-82சமூக அமைப்பினர் பாராட்டி கெளரவிப்பு…

கல்முனை உவெஸ்லியன் 78-82 சமூக அமைப்பினால் கிழக்கு மாகாண இறைவரித்திணைக்கள ஆணையாளராக பதவியுயர்வு பெற்ற திரு .வயிரமுத்து மகேந்திரநாதன் அவர்களை பாராட்டும் விழாவானது 05/12/2020 சேனைக்குடியிருப்பு தமிழ் வாணன் நினைவு மண்டபத்தில் இடம்பெற்றது. இதன் போது திரு .வயிரமுத்து மகேந்திரநாதன் அவர்களுக்கு கல்முனை ...

மேலும்..

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியெய்திய முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்களின் பிள்ளைகளுக்கு கெளரவிப்பு…

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியெய்திய  முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்களின் பிள்ளைகளை அனைத்து முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் தொழிற்  சங்கம் பாராட்டி கெளரவிப்பது வழமை, அந்த வகையில் அசாதாரண சூழ்நிலை காரணமாக கடந்த வருடங்களில் நடாத்த முடியாமல் போயிருந்த பாராட்டி ...

மேலும்..

மயிலத்தமடு மாதவணை விடயத்தில் சிங்களவர்களுக்கு ஒருசட்டமும், தமிழர்களுக்கு ஒரு சட்டமும் பயன்படுத்தப்படுகின்றது…

(ஏறாவூர்ப்பற்று, கோரளைப்பற்று தெற்கு விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள்) எமது பண்ணையாளர்களின் பாரம்பரிய மேய்ச்சற்தரை நிலமாகக் காணப்படுகின்ற மயிலத்தமடு, மாதவணை பிரதேசத்தின் பிரச்சினை தொடர்பில் சிங்கள மக்களுக்கு ஒரு சட்டமும், எமது தமிழ் மக்களுக்கு ஒரு சட்டமுமாக இரு விதமான சட்டங்கள் இருப்பதாகவே எங்களுக்குத் ...

மேலும்..

மூன்று தசாப்த காலமாக சிறையில் வாடும் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்காக நாம் தொடர்ந்தும் முன்னிற்போம் – எஸ்.வியாழேந்திரன்…

மூன்று தசாப்த காலமாக சிறைவாசம் அனுபவித்துவரும் தமிழ் அரசியல் கைதிகளில் விடுதலைக்காக நாம் தொடர்ந்தும் முன்னிற்போமென, அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் இணைந்து தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான ஒரு பொறிமுறையினை உருவாக்க வேண்டுமெனக் கோரி நீதி ...

மேலும்..

தமிழினத்தை அழிக்கவே முடியாது! – நாடாளுமன்றில் சாணக்கியன் எம்.பி. சூளுரை…

எத்தனை வருடங்களானாலும் எமது இனத்தை அழிக்க முடியாது எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், "நான் தேசியப்பட்டியல் ஊடாக நாடாளுமன்றம் வந்ததாக ...

மேலும்..

முனீஸ்வரன் வீதி புரெவி புயல் வெள்ளப்பாதிப்புக்களை நேரில் சென்று ஆராய்ந்தார் ஆனல்ட்…

புரெவி புயல் அசாதாரண நிலைமைகள் காரணமாக யாழ்ப்பாணம் முனீஸ்வரன் வீதியில் ஏற்பட்ட வெள்ளப்பாதிப்புக்களை யாழ் மாநகர முதல்வர் கௌரவ இம்மானுவல் ஆனல்ட் அவர்கள் இன்று (5) நேரடிக் கள விஜயம் மேற்கொண்டு ஆராய்ந்தார். குறித்த வீதியில் ஏற்பட்ட வெள்ளப்பாதிப்புக்கள், வடிகால் ஒழுங்கமைப்புக்கள் குறித்து ...

மேலும்..

கூட்டமைப்பை எவரும் தடை செய்ய முடியாது சரத் வீரசேகரவின் கருத்துக்கு சம்பந்தன் சாட்டையடி…

சரத் வீரசேகரவின் கருத்துக்கு சம்பந்தன் சாட்டையடி "தமிழ் மக்களின் ஏகோபித்த கட்சியே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு. அது கொண்ட கொள்கையில் - வரித்துக்கொண்ட இலட்சியத்தில் தடம்புரளாது பயணிக்கும். அதை எவரும் பிளவுபடுத்தவும் முடியாது; தடை செய்யவும் முடியாது." - இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ...

மேலும்..

வவுனியாவில் ஆறுமுக நாவலரின் நினைவு தினம் அனுஸ்டிப்பு…

ஈழத்தில் சைவத்தினை வளர்த்த பெரியாரான ஆறுமுகநாவலரின் 141 ஆவது நினைவு தினம் இன்று வவுனியா பூந்தோட்டத்தில் அமைந்துள்ள அவரது சிலையடியில் இடம்பெற்றது. காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களினால் அமைக்கப்பட்ட குறித்த சிலைக்கு இன்று காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி ...

மேலும்..

பிரதான வீதியில் மண்சரிவு…

(க.கிஷாந்தன்) நல்லதண்ணி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மஸ்கெலியா நல்லதண்ணி பிரதான வீதியில் மோகினி நீர் விழ்ச்சிக்கு அருகாமையில் இன்று (05) பாரிய கற்களுடன் மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் தடைப்பட்ட போக்குவரத்து வழமைக்கு திரும்பியுள்ளன. புரெவி புயலினை தொடர்ந்து மத்திய மலைநாட்டில் தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. ...

மேலும்..

முடக்கப்பட்டது – தண்டுகலா தோட்டம் 16 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி…

(க.கிஷாந்தன்) அட்டன், நோட்டன்பிரிட்ஜ் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தண்டுகலா தோட்டத்தின் மேல்பிரிவில் மேலும் 16 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து தண்டுகலா பகுதி முடக்கப்பட்டுள்ளது. அப்பகுதியில் இருந்து எவரும் வெளியேறமுடியாது என்பதுடன் வெளியிடங்களில் இருந்து அங்கு வருவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. அத்துடன், வட்டவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ...

மேலும்..

பாடசாலை மைதானத்தின் முன் உயரழுத்த மின்சாரத் தூண்கள் நிறுவ முற்பட்டதாக மக்கள் ஆர்ப்பாட்டம்: 3 மணிநேரம் வவுனியா – மன்னார் பிரதான வீதி போக்குவரத்து பாதிப்பு…

வவுனியா, பட்டானிச்சூர் முஸ்லிம் மகாவித்தியாலய மைதானத்தின் முன்பாக உயரழுத்த மின்சாரத் தூண்களை மின்சார சபை நிறுவ முற்பட்டதால் அப் பகுதியில் மின்சார சபைக்கு எதிராக ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. இன்று (05.12) காலை 10 மணியில் இருந்து மதியம் 1 மணிவரை குறித்த ...

மேலும்..

யாழ் மாவட்டத்திற்கு செம்மஞ்சல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது-அனர்த்த முகாமைத்து பிரிவின் உதவி பணிப்பாளர் சூரியராஜா

யாழ்ப்பாண மாவட்டத்திற்கு இன்று (5) காலை 7 மணி முதல் இரவு 7 மணிவரை செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அம்மாவட்ட அனர்த்த முகாமைத்து பிரிவின் உதவி பணிப்பாளர் ரீ.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார். மணித்தியாலத்திற்கு 70 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசும் அபாயம் இருப்பதாகவும், மக்கள் அவதானமாக ...

மேலும்..

பழைய உஹன வீதியினை புனரமைக்க பொதுமக்கள் கோரிக்கை.

வீதி அபிவிருத்தி அதிகார சபைக்குட்பட்ட பழைய உஹன வீதியினை புனரமைத்துத் தருமாறு சமூக மட்ட அமைப்புகளைச் சேர்ந்தவர்களால் சுட்டிக்காட்டப்படுகிறது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது, நீண்ட காலமாக சுமார் இருபது வருட காலத்திற்கு மேலாக புனரமைப்பற்று குண்டும் குழியுமாக சேதமடைந்த நிலையில் காணப்படுவதனால் பாதையினைப் ...

மேலும்..

கொரோனா பரவலின் மத்தியில் விவசாயிகளின் தற்கால நடைமுறை பிரச்சினைகள் தொடர்பான கலந்துரையாடல்

கொரோனா பரவலின் மத்தியில் விவசாயிகளின் தற்கால நடைமுறை பிரச்சினைகள் தொடர்பான கலந்துரையாடல் இன்று(5) கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையில் முற்பகல் நடைபெற்றது. குறித்த கலந்துரையாடல் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஜி.சுகுணன் தலைமை தாங்கியதுடன் விவசாய அதிகாரிகள் சுகாதார ...

மேலும்..

(நேர்காணல் ) தோட்டக் கட்டமைப்பை மாற்றுகின்றபோது தங்கியிருத்தலை இல்லாமல் செய்ய முடியும்; முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் -திலகராஜ்

நிறைவேற்றதிகார ஜனாதிபதியே 1000 ரூபா கொடுங்கள் என்று சொன்னாலும் கூட கொடுக்க முடியாத தொகைதான் அது. நிறைவேற்றதிகார ஜனாதிபதிக்கும் 1000 ரூபா கோரிக்கைக்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை. கோத்தபாய ராஜபக்‌ஷ நிறைவேற்றதிகார ஜனாதிபதியாக இருந்தாலும் அவரால் பெற்றுக்கொடுக்க முடியாது. 2020 ஜனவரியில் ...

மேலும்..

பாதாசாரிகள் கடவையில் இடம்பெற்ற விபத்தில் சிறுவர்கள் இருவர் பலி – கர்ப்பிணி தாய் கவலைக்கிடம்

மொரட்டுவ, எகொட உயன பாதாசாரிகள் கடவையில் இடம்பெற்ற விபத்தில் சிறுவர்கள் இருவர் உயிரிழந்துள்ளதுடன் கர்ப்பிணி தாயார் ஒருவர் கவலைக்கிடமான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவத்தில் ஒரு வயது மற்றும் 7 வயதுடைய சகோதரிகளே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். சம்பவத்தில் உயிரிழந்த சிறுவர்களின் தாயாரே இவ்வாறு கவலைக்கிடமான ...

மேலும்..

கண்டி-திகன பகுதியில் சிறியளவிலான நில அதிர்வு

கண்டி – திகன பகுதியில் இன்று (சனிக்கிழமை) அதிகாலை சிறிய அளவில் நில அதிர்வு பதிவாகியுள்ளாதாக புவிசரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது. இன்று காலை 7.30 அளவில் இந்த நிலநடுக்கம் இடம்பெற்றிருப்பதாக புவிச்சரிதவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.    

மேலும்..

யாழில் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின…

யாழ்ப்பாணத்தில் தொடர்ச்சியாக பெய்யும் கனமழை காரணமாக யாழ்ப்பாணம் பேருந்து நிலையம் மற்றும் அதனை சூழவுள்ள பகுதிகள் வெள்ளத்தால் மூழ்கியுள்ளன. இதனால் மக்கள், தங்களது அன்றாட செயற்பாடுகளை முன்னெடுப்பதில் சிரமங்களை எதிர்நோக்கி உள்ளனர். புரெவி புயல் தாக்கத்தினை தொடர்ந்து யாழ்ப்பாணத்தில் தொடர்ச்சியாக மழையுடனான காலநிலை நிலவி ...

மேலும்..

திருகோணமலை-மீனவர் மரணம் விசாரணைகள் ஆரம்பம்…

திருகோணமலையிலிருந்து மிதுல  புதா என்ற டெங்கி படகில் ஆழ் கடலுக்கு சென்ற மீனவர் உயிரிழந்த நிலையில் இன்று (05) திருகோணமலை கொட்பே  பகுதிக்குகொண்டு வந்துள்ளனர். கடந்த 11ம்மாதம் 21ம் திகதி ஐந்து பேர் கடலுக்குச் சென்றதாகவும் இம் மாதம் 2ஆம் திகதி உயிரிழந்துள்ளதாகவும் ...

மேலும்..

திருகோணமலை -மீனவர் மரணம் விசாரணைகள் ஆரம்பம்….

திருகோணமலையிலிருந்து மிதுல  புதா என்ற டெங்கி படகில் ஆழ் கடலுக்கு சென்ற மீனவர் உயிரிழந்த நிலையில் இன்று (05) திருகோணமலை கொட்பே  பகுதிக்கு கொண்டு வந்துள்ளனர். கடந்த 11ம்மாதம் 21ம் திகதி ஐந்து பேர் கடலுக்குச் சென்றதாகவும் இம் மாதம் 2ஆம் திகதி ...

மேலும்..

சரத் வீரசேகரவின் கருத்து மிக மோசமான சர்வாதிகார, இராணுவ மய சிந்தனையின் வெளிப்பாடாகும்-மாவை சேனாதிராஜா

"தமிழீழ விடுதலைப்புலிகளை அழித்ததைப் போன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும் இல்லாதொழிக்க வேண்டும் என்ற சரத் வீரசேகரவின் கருத்து மிக மோசமான சர்வாதிகார, இராணுவ மய சிந்தனையின் வெளிப்பாடாகும்." - இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ...

மேலும்..

வேலையில்லாப் பிரச்சினைக்கு விரைவில் நிரந்தர தீர்வு உறுதி! நாடாளுமன்றில் அமைச்சர் நாமல் திட்டவட்டம்

இளைஞர், யுவதிகள் எதிர்நோக்கும் வேலையில்லாப் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வைக் காண்பதற்காக விசேட வேலைத்திட்டங்களை அரசு வகுத்துள்ளது." - இவ்வாறு இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற 2021ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில் கைத்தொழில் ...

மேலும்..

காத்தான்குடி கடலில் நீராடச் சென்ற இளைஞன் நீரில் மூழ்கி காணமல் போயிருந்த நிலையில் இன்று சடலமாக மீட்பு

மட்டக்களப்பு காத்தான்குடி கடலில் நீராடச் சென்ற இளைஞன் நீரில் மூழ்கி காணமல் போயிருந்த நிலையில் பூநெச்சிமுனை கடற்கரையில் இன்று  சடலமாக மீட்கப்படடுள்ளார். காத்தான்குடிக் கடலில் நேற்று (4) மதியம் நீராடிய இளைஞன் காணாமல் போயிருந்த நிலையில் இன்று (5) சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி ...

மேலும்..

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் வானிலை மற்றும் கடல் நிலை

    . மழை நிலைமை: புத்தளத்திலிருந்து மன்னார் மற்றும் காங்கேசந்துறை ஊடாக திருகோணமலை வரையான ஆழம் கூடிய மற்றும் ஆழம் குறைந்த கடற்பரப்புகளில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேற்குறிப்பிட்ட கடற்பரப்புகளில் சில இடங்களில் மிகப் பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. ...

மேலும்..