December 6, 2020 அன்று பிரசுரிக்கப்பட்டவை

கிளிநொச்சி மாவட்டத்தில் பெய்த கனத்த மழை பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியது

கிளிநொச்சி மாவட்டத்தில் நேற்று  (06)பிற்பகல் பெய்த கனத்த மழை பல பகுதிகள் வெள்ளத்தால் சூழ்ந்துள்ளது பாரதிபுரம் பகுதியில் இவ்வாறு வெள்ளம் சூழ்ந்துள்ளது தொடர்ந்தும் மழை பெய்து வருவதால் குளங்களின் நீர்மட்டம் மேலும் அதிகரித்துள்ளது. கனகாம்பிகை குளம் வான்பாய்வதால் அதிக நீர் வெளியாகிறது. இதனால் கனகாம்பிகைக்குளம், இரத்தினபுரம், ...

மேலும்..

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மழை பெய்யும் சாத்தியம் !

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் கரையோரப் பிரதேசங்களில் குறிப்பாக காலை வேளையில் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஊவா, மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் ...

மேலும்..

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களுக்கு நிரந்தர வீடுகள் கையளிப்பு…

அப்துல்சலாம் யாசீம்) யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களுக்கு நிரந்தர வீடுகள் கையளிக்கும் நிகழ்வு  திருகோணமலை-கரடிப்பூவல் பகுதியில் இடம்பெற்றது. இந்நிகழ்வு இன்று (06)  மக்கள் சேவை மன்றத்தின் தலைவர் எம்.ரீ.ஏம்.பாரிஸ் தலைமையில் நடைபெற்றது. வன்னி போர்க் அவுஸ்திரேலியா நிறுவனத்தின் நிதி அனுசரணையுடன் திருகோணமலை மக்கள் ...

மேலும்..

புலோலியில் உயிரிழந்தவருக்கு கொரோனாத் தொற்று இல்லை…

திடீர் நெஞ்சுவலி காரணமாக வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருந்த நிலையில் இன்று உயிரிழந்த பருத்தித்துறை, புலோலி பகுதியைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ஆசிரியருக்குக் கொரோனா வைரஸ் தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது. சுய தனிமைப்படுத்தலில் இருந்த ஒருவரின் தந்தை மாரடைப்பு காரணமாக இன்று காலை உயிரிழந்த ...

மேலும்..

வீடமைப்புக்குப் பொறுப்பான அமைச்சர் என்ற வகையில் பிரதமர் தனது அமைச்சுக்கு கூடுதலான நிதியை ஒதுக்கியுள்ளார் – அமைச்சர் இந்திக அனுருத்த…

கடந்த அரசாங்கம் தனது ஆட்சிக் காலத்தின் போது மக்களுக்கு சேவை செய்வதற்குப் பதிலாக அதிகமான அரசியல் நிகழ்ச்சிகளையே நடாத்தியது என்று கிராமிய வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை மற்றும் கட்டிடப்பொருட்கள் தொழில் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் இந்திக அனுருத்த தெரிவித்தார். தற்போதைய அரசாங்கத்திற்கு தனது ...

மேலும்..

யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்ட பாடசாலைகளுக்கு நாளையும் லீவு வடக்கு மாகாண ஆளுநர் அறிவிப்பு…

யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்ட பாடசாலைகளுக்கு நாளை 7ஆம் திகதி திங்கட்கிழமையும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது என வடக்கு மாகாண ஆளுநர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அறிவித்துள்ளார். சீரற்ற காலநிலை தொடர்பாக கல்வி அதிகாரிகளுடன் நடத்தப்பட்ட கலந்துரையாடலின் பின்னர் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது எனவும் அவர் ...

மேலும்..

மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகளை மேம்படுத்தும் முகமாக துவிச்சக்கர வண்டிகள் வழங்கிவைப்பு…

கோரளைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட வாழைச்சேனை. நாசிவன்தீவு, மயிலங்கரச்சி பிரதேசங்களைச் சேர்ந்த தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் வழங்கி வைக்கும் நிகழ்வு இன்றைய தினம் கோரளைப்பற்றுப் பிரதேச சபை உறுப்பினர் க.கமலநேசன் அவர்களின் ஏற்பாட்டில் இடம்பெற்றது. மேற்படி பிரதேசங்களில் பின்தங்கியதும், வருமானம் ...

மேலும்..

மாவெல்ல நங்கூரமிடும் தளம் கட்டுமானப் பணிகள் ஆரம்பம்

மாவெல்ல நங்கூரமிடும் தளம் கட்டுமானப் பணிகள்பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் இன்று (2020.12.06) ஆரம்பிக்கப்பட்டன. உத்தேச நங்கூரமிடும் தளத்தில் 260 மீட்டர் நீளமான பிரதான 'தியகடன' இரு கரையோர ‘தியகடன’ மற்றும் கப்பல் போக்குவரத்தை இலகுவாக்கும் நோக்கில் உள்நுழையும் கால்வாயொன்றும் அமைக்கப்படவுள்ளன. வெளிப்புற ...

மேலும்..

(வீடியோ )சம்மாந்துறை பகுதியில் 5 கோரோனா தொற்றாளர்கள் அடையாளம் -கிழக்கில் 2500 அன்டீஜன் பரிசோதனைகளை இதுவரையில் மேற்கொண்டுள்ளோம்-மாகாண சுகாதார பணிப்பாளர் அழகையா லதாகரன்

  சம்மாந்துறை பகுதியில் 5 கோரோனா தொற்றாளர்கள்  அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் கிழக்கில்  இதுவரையில் 2500 அன்டீஜன் பரிசோதனை மற்றும் 7000 பிசீஆர் பரிசோதனைகளை  மேற்கொண்டுள்ளதாக கிழக்கு  மாகாண சுகாதாரப்பணிப்பாளர் டாக்டர் அழகையா லதாகரன்  தெரிவித்தார். கொவிட் 19 தொடர்பான    இன்று(6)    விசேட ...

மேலும்..

நோர்வூட் தமிழ் மகா வித்தியாலயத்திற்கு பூட்டு

ஹட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட நோர்வூட் தமிழ் மகா வித்தியாலயத்தினை நாளை (07) திகதி முதல் காலவரையறையின்றி பூட்டுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக மஸ்கெலியா பிரதேச மாவட்ட சுகாதார வைத்திய அதிகாரி டி. சந்திரராஜன் தெரிவித்தார். நோர்வூட் தமிழ் மகா வித்தியாலயத்தில் கடமையாற்றும் ஆசிரியை ஒருவருக்கும் ...

மேலும்..

நுவரெலியா மாவட்டத்தில் 208 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்-நுவரெலியா மாவட்ட சுகாதார பணிப்பாளர்

கொரோனா வைரஸ் தாக்கத்தின் 2ஆவது அலை மூலம் நுவரெலியா மாவட்டத்தில் இன்று (06) காலை இதுவரை 208 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.   இதுவரை 4 ஆயிரம் பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றும், சுமார் 311 பேர் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்றும்  ...

மேலும்..

அக்கரைப்பற்று பிராந்தியத்தில் 12ஆவது நாளாகவும் தொடரும் தனிமைப்படுத்தல்….

அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரதேசங்களில் 12ஆவது நாளாகவும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுலில் உள்ள நிலையில்   அக்கரைப்பற்று மத்திய சந்தை உள்ளிட்ட வர்த்தக நிலையங்கள் யாவும் மூடப்பட்டது . இன்று (6) இதனால் மக்கள் பொருளாதார ரீதியாக பெரிதும் கஷ்ட நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதுடன் ...

மேலும்..

(வீடியோ )அக்கரைப்பற்று பிராந்திய மக்களின் கைகளில் தனிமைப்படுத்தலை நீக்குவது தொடர்பில் முடிவு-பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை பணிப்பாளர்சுகுணன்

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைக்குட்பட்ட அக்கரைப்பற்று,அட்டாளைச்சேனை,ஆலைடியவேம்பு ஆகிய பிரதேசங்கள் 14 நாட்களின் பிற்பாடு   தனிமைப்படுத்தப்பட்டுள்ள பின்னர்  48 மணித்தியாலங்களில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் எதுவித கொவிட் 19 தொற்றாளர்கள் இனங்காணப்படாத பட்சத்தில் தனிமைப்படுத்தலை நீக்குவது தொடர்பில் கிழக்கு மாகாண ஆளுனர் ...

மேலும்..

தமிழ்மக்களுக்கு இந்நாட்டில் அச்சுறுத்தல்கள் அதிகரித்துள்ளன – இராதாகிருஷ்ணன்

தமிழ் மக்களுக்கு இந்நாட்டில் அச்சுறுத்தல்கள் அதிகரித்துள்ளன என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வீ.இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.   அத்துடன், மஹர சிறைச்சாலை சம்பவத்தின் தாக்கம் ஜெனிவா மனித உரிமைகள் மாநாட்டில் எதிரொலிக்கும் என்பதால் அரசாங்கம் ...

மேலும்..

யாழ் மாவட்டத்தில் தற்போது ஏற்பட்டுள்ள அனர்த்த நிலை தொடர்பாக ஆராயும் விசேட கூட்டம்…..

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் தற்போது ஏற்பட்டுள்ள அனர்த்த நிலை தொடர்பாக ஆராயும் விசேட கூட்டம் மாவட்ட செயலகத்தில் இன்று (06)இடம்பெற்றது. யாழ்.மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் ஏற்பாட்டில் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தலைமையில் யாழ்.மாவட்ட செயலக கேட்போர்கூடத்தில் குறித்த கூட்டம் இடம்பெற்றது. ...

மேலும்..

வாழைச்சேனையில் டெங்கினால் 415 பேர் பாதிப்பு

வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் இந்த வருடம் ஜனவரி மாதம் முதல் டிசம்பர் மாதம் ஐந்தாம் திகதி வரை 415 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் தேவராஜமுதலி ஸ்டீப் சஞ்ஜீவ்; தெரிவித்தார். வாழைச்சேனை பிரதேச செயலாளர் ...

மேலும்..

மேல் மாகாணத்தில் மேலும் சில பகுதிகள் நாளை முடக்கப்படவுள்ளன.

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக மேல் மாகாணத்தில் மேலும் புதிய பிரதேசங்கள் நாளை (7) காலை 5 மணியிலிருந்து முடக்கப்படவுள்ளன. இதற்கமைய, கொம்பனித்தெரு பொலிஸ் பிரிவின் ஹுனுப்பிட்டிய கிராம உத்தியோகத்தர் பிரிவு, கருவாத்தோட்ட பொலிஸ் பிரிவின் 60ஆம் தோட்டம், வெள்ளவத்தை- கோகிலா வீதி என்பன தனிமைப்படுத்தப்படவுள்ளன. அத்துடன் ...

மேலும்..

நாளை முதல் பேருந்து போக்குவரத்தில் மாற்றம்!

நாளை தொடக்கம் ஒவ்வொரு பேருந்து பயணங்களின் போதும் இரண்டு பேருந்துகளை ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார். விசேடமாக பாடசாலை நேரங்களில் மற்றும் அலுவலக நேரங்களில் குறித்த முறையில் இரண்டு பேருந்துகளை ஈடுபடுத்த போக்குவரத்து அதிகார சபைக்கு ...

மேலும்..

ஆயிரம் ரூபா சம்பள விடயத்தில் இந்த அரசாங்கம் தொழிலாளர்களை ஏமாற்ற வேண்டாம் – ஹட்டனில் கவனயீர்ப்பு போராட்டம்

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பள விடயத்தில் இந்த அரசாங்கம் தொழிலாளர்களை ஏமாற்ற வேண்டாம் என கோரி ஜே.வி.பியின் தொழிற்சங்கமான அகில இலங்கை தோட்ட தொழிலாளர் சங்கம் ஹட்டன் நகரில் (06)இன்று காலை கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்தது. இந்த போது, ஏமாற்ற ...

மேலும்..

200KG போதைப்பொருள்கள் மீட்பு !

ஹெரோயின் மற்றும் ஐஸ் ரக போதைப்பொருள் தொகையொன்றுடன் 4 சந்தேகநபர்கள் மதுவரித் திணைக்களத்தின் அதிகாரிகளினால் மாரவில பகுதியிலுள்ள தொடுவனவில் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன் போது100 கிலோகிராம் ஹெரோய்ன் மற்றும் 100 100 கிலோகிராம் ஐஸ் போதைப் பொருள்களை, மதுவரித் திணைக்களத்தின் கைப்பற்றியுள்னர்.

மேலும்..

தேசிய ரி-10 லீக் கிரிக்கெட் தொடரை அடுத்த வருடம் பெப்ரவரியில் நடாத்த தீர்மானம்!

தேசிய ரி-10 லீக் கிரிக்கெட் தொடரை அடுத்த வருடம் பெப்ரவரி மாதம் வெளிநாட்டு வீர்களின் பங்கேற்புடன் நடத்த இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை திட்டமிட்டுள்ளது. இதேவேளை இங்கிலாந்துக்கான இலங்கை அணியின் சுற்றுப் பயணத்தைத் தொடர்ந்து இந்தப் போட்டி இடம்பெறும். இலங்கை இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான ...

மேலும்..

கோவிட் -19பரவல் காரணமாக முடக்கப்பட்ட பிரதேசங்களின் விவரம் வெளியாகியுள்ளன.

கோவிட் -19 பரவல் காரணமாக முடக்கப்பட்ட பிரதேசங்களின் விவரம் வெளியாகியுள்ளன.

மேலும்..

வவுனியா -புதுக்குளம் நீர்த்தேக்கத்தில் தவறி விழுந்த மாணவனின் சடலம் 3 நாட்களின் பின் மீட்பு

வவுனியா புதுக்குளம் பகுதியில் அமைந்துள்ள நீர்த்தேக்கத்தினை பார்வையிடுவதற்கு சென்ற மாணவன் ஒருவன் வெள்ளிக்கிழமை மாலை நீரில் அடித்து செல்லப்பட்ட நிலையில் இன்று (06.12) சடலமாக மீட்கப்பட்டார். அண்மையில் வவுனியாவில் பெய்த கனமழையின் காரணமாக வவுனியா புதுக்குளத்தில் அமைந்துள்ள நீர்தேக்கம் நிரம்பியதுடன் மேலதிக நீர் ...

மேலும்..

இன்றைய தினமே நாடாளுமன்றத்தில் எனது கடைசி நாள் – ரஞ்சன் ராமநாயக்க

நாடாளுமன்றத்தில் எனது கடைசி நாளாக இருக்கலாம் என ஐக்கிய மக்கள் சக்தியின் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்தார்.பாராளுமன்றத்தில் நேற்று (05)சனிக்கிழமை, துறைமுகங்கள், கப்பல்துறை மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சுகள், இராஜாங்க அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீட்டு குழு நிலை விவாதம் இடம்பெற்ற வேளையில் உரையாற்ற ஆரம்பித்த ...

மேலும்..

யாழ்.மாவட்டத்தில் இதுவரை 21884 குடும்பங்களை சேர்ந்த 72410 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் -அனர்த்த முகாமைத்து பிரிவின் உதவி பணிப்பாளர் சூரியராஜா

யாழ்.மாவட்டத்தில் தற்போதுவரை 21884 குடும்பங்களை சேர்ந்த 72410 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்து பிரிவின் உதவி பணிப்பாளர் ரீ.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார். இதுவரை இரண்டு நபர்கள் உயிரிழந்துள்ள அதேவேளை 6 நபர்கள் காயமடைந்துள்ளதாக ரீ.சூரியராஜா மேலும் தெரிவித்துள்ளார். அத்தோடு யாழ்.மாவட்டத்தில் தற்போது 42 ...

மேலும்..

முல்லைத்தீவு -இலங்கை தொழிற்பயிற்சி அதிகாரசபை (VTA) : பயிற்சி நெறிகளுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

இலங்கை தொழிற்பயிற்சி அதிகாரசபை (VTA) முல்லைத்தீவினால் 2021ம் ஆண்டுக்கான பயிற்சி நெறிகளுக்குரிய பயிலுனர்களை இணைத்துக் கொள்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. QR Code இணை உங்களது Smartphoneஇல் Download செய்து கொள்ளக் கூடிய QR Scanner மூலமாக Scan செய்து விண்ணப்பத்தினை Online மூலமாக ...

மேலும்..

முன்னாள் அமைச்சர் டி.பி.ஏக்கநாயக்க காலமானார்!

முன்னாள் அமைச்சர் டி.பி.ஏக்கநாயக்க காலமானார். அவர் தனது 67 ஆவது வயதில் காலமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.குருநாகலில் உள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று வந்தநிலையிலேயே இன்று (06) காலமானார். கடந்த 2010 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு சார்பில் குருணாகலை மாவட்டத்தில் ...

மேலும்..

களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி

மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி பொலிஸ்நிலையத்தில் போக்குவரத்து பிரிவில்   பணியாற்றும் பொலிஸ் உத்தியோகத்தருக்கு   கொரோனா தொற்றுக்குள்ளாகி உள்ளார். களுவாஞ்சிக்குடி  ஆதார வைத்தியசாலையில் தங்கிருந்து   காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்றுவந்தபோதே இவருக்கான தொற்று நேற்று (5) உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து களுவாஞ்சிக்குடி பொலிஸ்நிலையத்தை தற்காலிகமாக மூடுவதற்கான நடவடிக்கைகள் ...

மேலும்..

மன்னார் காற்றாலை மின் நிலையம் எட்டாம் திகதி திறப்பு

மன்னாரில் நிர்மாணிக்கப்பட்டிருக்கும் இலங்கையின் விசாலமான காற்றாலை மின் நிலையம் எதிர்வரும் 8 ஆம் திகதி திறக்கப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்தார். பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெறவுள்ளது. மீள்புதுப்பிக்கத்தக்க வலுசக்தியின்பால் இலங்கை கவனம் செலுத்தியிருப்பது வெற்றியென இராஜாங்க அமைச்சர் ...

மேலும்..