December 15, 2020 அன்று பிரசுரிக்கப்பட்டவை

ரஷ்யாவில் முதியோர் காப்பகமொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் வயது முதிர்ந்த 11 பேர் உடல் கருகி பலி !

ரஷ்யாவில் முதியோர் காப்பகமொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் வயது முதிர்ந்த 11 பேர் உடல் கருகி பலியாகியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. பாஷ்கோர்டோஸ்தான் பிராந்தியம் இஸ்புல்டினோ கிராமத்திலுள்ள மர கட்டிடத்தில் குறித்த காப்பகம் செயற்பட்டு வந்துள்ளது. அந்நிலையில் நேற்றைய தினம் நள்ளிரவில் திடீரென ஏற்பட்ட தீ ...

மேலும்..

LPL தொடரின் இறுதிப் போட்டி இன்று

லங்கா பிரீமியர் லீக் (LPL) கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி இன்று (16)  நடைபெறவுள்ளது. Jaffna Stallions அணியும் Galle Gladiators அணியும் இன்றைய இறுதிப் போட்டியில் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ஹம்பாந்தோட்டை சூரியவெவ மைதானத்தில் நடைபெறவுள்ள போட்டி இன்றிரவு 7 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

மேலும்..

கொழும்பில் கொரோனா நோயாளி தப்பியோட்டம்….

வெளிசறை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த கொரோனா நோயாளி ஒருவர் அங்கிருந்து தப்பியோடியுள்ளார். 43 வயதுடைய குறித்த நபர் இன்று அதிகாலை மருத்துவமனையில் இருந்து தப்பிச்சென்றுள்ளார். அவர் கொழும்பு கிரான்ட்பாஸ் பகுதியை சேர்ந்தவர் என்று கூறிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.  

மேலும்..

தோட்டத்தொழிலாளர்களின் வீட்டுரிமை, காணி உரிமை, சம்பள உரிமை ஆகியன உறுதிப்படுத்தப்படவேண்டும் – ஜே.வி.பி

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஜனவரி மாதம் முதல் கட்டாயம் ஆயிரம் ரூபா வழங்கப்படவேண்டும். இம்முறையும் தோட்டத் தொழிலாளர்களை ஏமாற்றினால் ஜனவரி முதல் தொழிற்சங்க நடவடிக்கையில் இறங்குவதற்கு தோட்டத் தொழிலாளர்கள் தயாராகவே இருக்கின்றனர் - என்று மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி.) பிரச்சார செயலாளர் ...

மேலும்..

வானிலை முன்னறிவிப்பு

வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் மாத்தளை மாவட்டத்திலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில்பி.ப. 2.00 மணிக்குப் பின்னர்மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் ...

மேலும்..

கல்முனையில் ஹோட்டல்களை இரவு 8.00 மணிக்கு முன் மூடத் தீர்மானம்…

அஸ்லம் எஸ்.மௌலானா) கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகின்ற சூழ்நிலையில் பொது மக்களின் பாதுகாப்பைக் கவனத்தில் கொண்டு கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட அனைத்து ஹோட்டல்களும் தேநீர் கடைகளும் தற்காலிகமாக நாளை (16) தொடக்கம் மறுஅறிவித்தல் வரை இரவு 8.00 மணிக்கு முன்னதாக ...

மேலும்..

கொரோனாத் தொற்று இல்லாத குடும்பஸ்தரையும் சிகிச்சையில் சேர்த்த அதிகாரிகள்…

கொரோனா வைரஸ் தொற்று இல்லாத ஒருவரை கொரோனா சிகிச்சை நிலையத்தில் சேர்த்த உடுவில் சுகாதார வைத்திய அதிகாரிகளின் செயலால் குடும்பஸ்தர் ஒருவர் மனநலப் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளார். மருதனார்மடம் பொதுச்சந்தையில் வெற்றிலைக் கடை நடத்தும் குடும்பஸ்தர் ஒருவர், சுன்னாகம் பகுதியில் வசித்து வருகின்றார். அவரிடமும் ...

மேலும்..

சவூதியில் இருந்து நாடு திரும்ப 4 ஆயிரம் பேர் தயார் நிலையில்…

சவூதி அரேபியாவில் பணிபுரியும் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இலங்கையர்கள் நாட்டுக்குத் திரும்பத் தயாராக இருக்கின்றனர் என்று றியாதில் உள்ள இலங்கைத் தூதரகம் தெரிவித்துள்ளது. வெளிநாட்டு வேலைவாய்ப்புகளில் ஈடுபட்டுள்ள இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்து வரும் செயன்முறையை இலங்கை ஆரம்பித்துள்ள நிலையில், சவூதி அரேபியாவுக்கான இலங்கைத் ...

மேலும்..

தமிழ்க் கூட்டமைப்பைத் தடை செய்வது தமிழரையும் தடை செய்வதற்குச் சமம்! வாய்க்கு வந்த மாதிரி உளறாதீர்கள்; ராஜபக்ச தரப்புக்கு மங்கள பதிலடி…

"தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைத் தடை செய்வது என்பது இந்த நாட்டிலுள்ள தமிழ் மக்களையும்  தடை செய்வதற்கு ஒப்பானது." - இவ்வாறு முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர சுட்டிக்காட்டினார். தமிழீழ விடுதலைப்புலிகளை மீளுருவாக்கும் முயற்சியில் ஈடுபடும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைத் தடை செய்ய வேண்டும் என்று ...

மேலும்..

தமிழரை நேசிக்கின்றேன் தீர்வே அவர்களின் கனவு பீல்ட் மார்ஷல் பொன்சேகா அதிரடி…

"மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வைப் பகிரங்கமாக நடத்த அனுமதிக்க முடியாது என நான் வலியுறுத்திய காரணத்தால் என்னைத் தமிழ் மக்களுக்கு எதிரானவனாக வெளிக்காட்ட அரசியல்வாதிகள் சிலர் முயன்றுள்ளார்கள். ஆனால், நான் ஒருபோதும் தமிழ் மக்களுக்கு எதிரானவன் அல்லன். இன்றும் தமிழ் மக்களை ...

மேலும்..

இலங்கை அரசின் செயற்பாடுகளால் பட்டினிச்சாவு நெருக்கடிக்குள் முல்லைத்தீவு -ரவிகரன்…

இலங்கை அரசாங்கத்தினுடைய நடவடிக்கைகள், முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள அனைத்து தமிழ் மக்களையும் பட்டினிச் சாவு நெருக்கடிக்குள் தள்ளுவதாகவே அமைந்துள்ளதாக முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு மாவட்டத்தில் மகாவலி (எல்), வனஜீவராசி, வனவளத்திணைக்களம், தொல்லியல் திணைக்களம் என்பன தமிழ் மக்களின் வாழ்வாதாரக் ...

மேலும்..

அரசியல் கைதிகளை ஜனாதிபதி விடுவித்தால் எதிர்க்க மாட்டோம்! – ஞானசார தேரர் தெரிவிப்பு…

'தமிழ் அரசியல் கைதிகள்' என்ற பெயரில் சிறைச்சாலைகளில் காலத்தைக் கழிக்கின்ற தமிழ்க் கைதிகளை அரசியல் தீர்மானம் எடுத்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச விடுவித்தால் அதை நாம் எதிர்க்க மாட்டோம். - இவ்வாறு பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார். இது ...

மேலும்..

வவுனியா இளைஞர்கள் இருவர் படகு விபத்தில் பரிதாப மரணம்…

வெளிநாட்டில் வவுனியாவைச் சேர்ந்த இளைஞர்கள் இருவர் படகு விபத்தில் பலியாகியுள்ளனர். ஆபிரிக்க நாடான மொரோக்கோ பகுதியில் இருந்து ஸ்பெயினுக்கு இம்மாதம் 3ஆம் திகதி புகலிடக்கோரிக்கையாளர்களை ஏற்றிக்கொண்டு பயணித்த படகொன்று இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்துக்குள்ளான படகில் பயணித்த 9 பேர் இறந்துள்ளனர். இதில் இலங்கையை சேர்ந்த ...

மேலும்..

யாழில் மேலும் 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதி – மருதனார்மடம் கொத்தணி 52 ஆக அதிகரிப்பு…

யாழ்ப்பாணம், மருதனார்மடம் பொதுச் சந்தையில் கொரோனா வைரஸ் கொத்தணியுடன் தொடர்புடையோரிடம் கடந்த சனிக்கிழமை பெறப்பட்ட மாதிரிகளில் முன்னெடுக்கப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் மேலும் 13 பேருக்கு கொரோனாத் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. அநுராதபுரம் வைத்தியசாலை ஆய்வுகூடத்துக்கு கடந்த சனிக்கிழமை அனுப்பிவைக்கப்பட்ட 114 வியாபாரிகளின் மாதிரிகளில் ...

மேலும்..

கொரோனா தொற்று காரணமாக வட மாகாணத்தில் உள்ள 130 இடைநிலைப் பாடசாலைகளுக்கு மறு அறிவித்தல் வரை விடுமுறை !

வடக்கு மாகாணத்தில் உள்ள 130 இடைநிலைப் பாடசாலைகளுக்கு மறு அறிவித்தல் வரை விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக மாகாண கல்விப் பணிப்பாளர் எஸ்.உதயகுமார் தெரிவித்தார். கொரோனா தொற்று அதிகரிப்பினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். அதற்கமைய, வவுனியா தெற்கு கல்வி வலயத்தில் 05 பாடசாலைகளுக்கும் ...

மேலும்..

(வீடியோ)பொது மக்கள் சுகாதார நடைமுறைகளை மிகவும் இறுக்கமான முறையில் கடைபிடித்து நடக்க வேண்டும்-அக்கரைப்பற்று சுகாதார வைத்திய அதிகாரி பரூசா நக்பர்

  பொது மக்கள் சுகாதார நடைமுறைகளை மிகவும் இறுக்கமான முறையில் கடைபிடித்து நடக்க வேண்டும் என -அக்கரைப்பற்று சுகாதார வைத்திய அதிகாரி பரூசா நக்பர் மக்களிடம் கோரிக்கை விடுத்தார் இன்று(15) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனை தெரவித்தார் மேலும் அக்கரைப்பற்று சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு விரைவில் ...

மேலும்..

மருதனார்மடம் பொதுச் சந்தைக்கு சென்றவர்கள் பிரதேச சுகாதார வைத்திய பிரிவினருடன் தொடர்புகொள்ளவும் -வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர்கோரிக்கை

மருதனார்மடம் பொதுச் சந்தை கொரோனா கொத்தணியில் இதுவரையில் 39 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். இந்த நிலையில், கடந்த இரண்டு கிழமைகளுக்குள் மருதனார்மடம் பொதுச் சந்தைக்கு பொருட்கள் வாங்குவதற்கு சென்றவர்கள் ...

மேலும்..

மாகாண சபை தேர்தல் கட்சி தலைவர்களுடன் கலந்தாலோசித்து தீர்மானம்-வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல

மாகாண சபை தேர்தலை துரிதப்படுத்துவதற்கான பரிந்துரை மற்றும் கருத்துக்களை கேட்டறிவதற்காக கட்சி தலைவர்களின் கூட்டத்தை கூட்டுவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது. மாகாண சபை தேர்தலை துரிதப்படுத்துவதற்கு சம்பந்தப்பட்ட விடயதான அமைச்சர் ஜனக பண்டார தென்னகோனால் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்ட ஆவணத்திற்கு அமைவாக இந்த பரிந்துரை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ...

மேலும்..

கொழும்பு உயர் நீதிமன்ற கட்டட வளாகத்தில் தீ விபத்து!

கொழும்பில் உள்ள உயர் நீதிமன்ற கட்டட வளாகத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து குறித்த தீயினைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக கொழும்பு தீயணைப்புத் துறையினர் குறிப்பிட்டுள்ளனர். இருப்பினும் குறித்த தீ விபத்திற்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை. ...

மேலும்..

கொரோனா காரணமாக இவ்வாண்டில் வித்தியாசமாக நடந்த திருமணங்கள்!

திருமணம் என்றாலே கொண்டாட்டங்களுக்கு பஞ்சமிருக்காது. ஆனால் கொரோனா பிரச்சினையால் இந்தாண்டு மார்ச் இறுதியில் இருந்தே திருமணங்கள் கொண்டாட்டங்களைக் குறைத்து, வித்தியாசமான முறையில் தான் நடந்து வருகின்றன. இதோ அவற்றில் சிலவற்றை இங்கே பார்க்கலாம்... ஸ்பீட் போஸ்ட்டில் தாலி   2020ம் ஆண்டில் கொரோனா பிரச்சினையால், நினைத்துக்கூட பார்க்க ...

மேலும்..

தலவாக்கலை, ஸ்டேலின் தோட்டத்தில் 06 தனி வீடுளை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் வைபவம்

கொட்டகலை பிரதேச சபைக்குட்பட்ட தலவாக்கலை, ஸ்டேலின் தோட்டத்தில் 06 தனி வீடுளை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் வைபவம் இன்று (15) செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது.   இதற்கென தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சின் கீழ் 60 இலட்சம் ரூபா நிதி ...

மேலும்..

மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகரித்து வரும் டெங்கு நோயாளர்கள்….

மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு நோய் பரவல் வேகமாக அதிகரித்து வருகின்றது. கடந்த நவம்பர் 27 ஆந் திகதி தொடக்கம்; டிசம்பர் 04 ஆந் திகதி வரையும் 135 பேர் டெங்குநோய் தாக்கத்திற்குள்ளாகியுள்ளனர். இந்த வாரம் டெங்கு தாக்கத்தினால் பாதிப்புக்குள்ளான ஓட்டமாவடி சுகாதார வைத்திய ...

மேலும்..

காணாமல் போனதாக அறிவிக்கப்பட்ட இலங்கை விமானப் படையின் விமான விபத்து: ஒருவர் பலி

காணாமல் போனதாக அறிவிக்கப்பட்ட இலங்கை விமானப் படையின் PT6 வகை பயிற்சி விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கந்தளாய், ஜனரஞ்சன குளத்திற்கு அருகில் குறித்த விமானம் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக விமானப்படை அறிவித்துள்ளது. மேலும் குறித்த விமானத்தில் பயிற்சியை மேற்கொண்ட விமானியும் உயிரிழந்துள்ளதாகவும் விமானப்படை தகவல்கள் ...

மேலும்..

பயிலுநர்கள் மக்களின் தேவையறிந்து கடமையாற்ற வேண்டும் – அம்பாறை மாவட்டஅரசாங்க அதிபர்

ஒரு இலட்சம் வேலைவாய்ப்புக்கு இணைக்கப்பட்டுள்ள பயிலுநர்கள் மக்களின் தேவையறிந்து கடமையாற்ற வேண்டும் என அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் டீ.எம்.எல் பண்டாரநாயக்க தெரிவித்துள்ளார். நாடளாவிய ரீதியான ஒரு இலட்சம் வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் அம்பாறை  மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட   பயிலுநர்களுக்கான தொழில் ...

மேலும்..

அடை மழையிலும் முல்லை மீனவர்கள் போராட்டம்

இந்திய இழுவைப் படகுகளின் அத்துமீறிய நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, முல்லைத்தீவு மீனவர்கள் அடைமழையிலும் பாரிய அளவில் திரண்டு 15.12.2020 இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதேவேளை குறித்த இந்திய இழுவைப் படகுகளின் பிரச்சினைக்கு உரிய தீர்வு கிடைக்கும்வரையில் மீனவர்கள் தொடர் போராட்டம் ஒன்றினையும் முன்னெடுத்துள்ளனர். இதுதொடர்பில் ...

மேலும்..

மஹர சிறைச்சாலையில் அண்மையில் இடம்பெற்ற கலவரத்தை கண்டித்து ஐக்கிய மக்கள் சக்தியினர் ஆர்ப்பாட்டம் –

மஹர சிறைச்சாலையில் அண்மையில் இடம்பெற்ற கலவரத்தை அடக்குவதற்கு நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டினை கண்டித்து ஐக்கிய மக்கள் சக்தியினர் கடவத்தை நகரில் ஆர்ப்பாட்டமொன்றை நடத்தியுள்ளனர். கடவத்தை நகரில் இன்று முற்பகலில் எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையில் நடைபெற்ற இந்த அமைதியான ஆர்ப்பாட்டத்தில் ஐக்கிய ...

மேலும்..

கெப் ரக வாகனம் விபத்து ஒருவர் பலி – 10 பேர் உயிர் தப்பினர்

லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஊவாகலை பகுதியில் இன்று (15.12.2020) முற்பகல் 10 மணியளவில் கெப் ரக வாகனமொன்று 100 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலியாகியுள்ளார். மேலும் 10 பேர் தெய்வாதீனமாக உயிர் தப்பினர். லிந்துலை, மவுசாஎல்ல கீழ்பிரிவு பகுதியைச் சேர்ந்த ...

மேலும்..

கொரோனா தொற்றில் இறந்த ஜனாசாக்களை அடக்கம் செய்வதற்கு அனுமதியுங்கள் : காரைதீவு பிரதேசசபை உறுப்பினர் குமாரசிறி வேண்டுகோள்.

தற்போது நாட்டில் கொரோனா தொற்றுக்கள் அதிகரித்து வரும் நிலையில் அதனை  கட்டுப்படுத்துவது சம்பந்தமாக சுகாதார பிரிவினர் வழங்குகின்ற அறிவுறுத்தல்களை ஏற்று பொதுமக்கள் பொறுப்புடனும் நடந்துகொள்ள வேண்டுமென கேட்டுக்கொள்வதுடன் காரைதீவு பிரதேசசபை எல்லைக்குட்பட்ட இடங்களில் கொரோனா தொற்றாளர்கள்  அண்மை நாட்களாக தொடர்ச்சியாக  இனங்காணப்பட்டு ...

மேலும்..

மட்டக்களப்பு மாநகரசபையின் பாதீடு வெற்றி…

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆளுகைக்குட்பட்ட மட்டக்களப்பு மாநகரசபையின் 2021ம் ஆண்டுக்கான பாதீடு இன்றைய தினம் 20 உறுப்பினர்களின் ஆதரவுடன் வெற்றி பெற்றது. மட்டக்களப்பு மாநகரசபையின் 2021ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட அறிக்கை சமர்ப்பிற்கான விசேட சபை அமர்வு இன்றைய தினம் (15) ...

மேலும்..

முல்லைத்தீவு -மீனவர் போராட்டத்திற்கு பந்தல் அமைக்க போலீசார் தடை

இந்திய மீனவர்களின் அத்துமீறிய செயற்பாட்டிற்கு எதிர்ப்புத் தெரிவித்து, முல்லைத்தீவு மீனவர்களால் 15.12.2020 இன்று போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படுகின்றது. குறித்த போராட்டத்திற்காக முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு முன்பாக மீனவர்கள் தகரப் பந்தல் அமைப்பதற்கு முயற்சி எடுத்திருந்தனர். இவ்வாறு மீனவர்கள் தகரப் பந்தல் அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தபோது, ...

மேலும்..

நேற்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானங்கள் !

2020.12.14 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின்  தீர்மானங்கள் பின்வருமாறு: 01. ஜெனரல் ஸ்ரீமத் ஜோன் கொத்தலாவல தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் பட்டப்பின்படிப்பு கற்கைகள் பீடம் அமைந்துள்ள காணிக்குரிய விடுவிப்புக் கொடுப்பனவு அனுமதிப்பத்திரம் வழங்கல் ஜெனரல் ஸ்ரீமத் ஜோன் கொத்தலாவல தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் பட்டப்பின்படிப்பு ...

மேலும்..

தாயின் மரணச்சடங்கில் கலந்துகொள்ளச்சென்ற இரு பிள்ளைகள் மரணம்

தாயின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்வதற்கான சென்ற இரு பிள்ளைகள் பரிதாபமாக மரணமடைந்த சம்பவம் மீரிகம - கீனதெனிய பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் நேற்று திங்கட்கிழமை இரவு (14) இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவத்தில் 54 மற்றும் 47 வயதுடைய சகோதரர்களே உயிரிழந்துள்ளனர். தாயாரின் மரணச் சடங்கில் ...

மேலும்..

மட்டக்களப்பில் -கல்முனை பிரதான வீதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் இளைஞர் உயிரிழப்பு

மட்டக்களப்பில் -கல்முனை பிரதான வீதியில் இன்று (15)காலை இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். புதுக்குடியிருப்பு பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மோட்டார்சைக்கிளும், காரும்  மோதிக்கொண்டதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதுடன், இதன்போது மோட்டார்சைக்கிளில் பயணித்தவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார். இந்த விபத்தில் பங்குடாவெளி யை   ...

மேலும்..

வாகன இலக்க தகடுகளில் மாகாணங்களை குறிக்கும்  எழுத்துக்களை நீக்கும் யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம்……….

வாகன இலக்க தகடுகளில் மாகாணங்களை குறிக்கும் எழுத்துக்களை நீக்கும் யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்தது வாகன உரிமத் தகடுகளை வழங்கும்போது வாடிக்கையாளர்கள் மற்றும் மோட்டார் போக்குவரத்துத் துறை எதிர்கொள்ளும் பிரச்சினைகளை எளிதாக்க இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. வாகனங்களின் புகை  சோதனைகள் மற்றும் வருடாந்திர வருவாய் உரிமம் ...

மேலும்..

முன்னாள் பிரதி அமைச்சர் அப்துல்லா மஹ்ரூப் கைது

முன்னாள் பிரதி அமைச்சர் அப்துல்லா மஹ்ரூப் உட்பட இருவர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இன்று (15) கைது செய்யப்பட்டுள்ளனர். லங்கா சாதோசவின்வாகனங்களை தவறாக பயன்படுத்திய குற்றச்சாட்டில் அப்துல்லா மஹ்ரூப் கிண்ணியாவில் உள்ள அவரது வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும்..